கேரளத்தைப் பற்றிய இந்தச் செய்தியில் நமக்கொரு பாடம் இருக்கிறது.
த.வெ.க. ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய், 37 ரூபாய், 41.50 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி மின்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் இதே காலத்தில் கேரள அரசு ஒரு யூனிட்டை 14.50, 12.50 ரூபாய்க்கு வாங்கியிருப்பதே அதிக விலை என சர்ச்சையாகியுள்ளது.
அதைவிடவும் முக்கியமானது, ஒரு தனியார் நிறுவனம் தினமும் 500 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் 8.645 ரூபாய்க்கு வழங்குவதற்கு கேரள அரசை அணுகியும், அதைப் புறக்கணித்த சர்ச்சையில் கேரள மின்வாரியத் தலைவர் அப்பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
நமக்கென்ன கேள்வியென்றால், 8.645 / 12.50/ 14.50 ரூபாய்களில் கேரளாவுக்கு மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க. அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது?
இதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது, யார் யார் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும்.
மின்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் DVAC அமைப்பும் இருப்பதால் அவர்கள் இதை விசாரித்தால் உண்மை வெளிவராது. சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை கொண்ட ஆணையம் விசாரிக்க வேண்டும்.
newindianexpress.com/amp/sto…
#KSEB #PowerCut #Keralam
தஞ்சை மண்ணில் கழகத்தின் தூணாக விளங்கிய எம். இராமச்சந்திரன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
எம்.ஆர். என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.இராமச்சந்திரன் அவர்கள், களப்பணியில் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர். புல்லட் வண்டியில் சென்று, வயல்வெளிகளில் நின்று மக்களின் குறைகளைக் கேட்டவர்; அவற்றுக்குத் தீர்வுகாணச் சட்டமன்றத்தில் வாதாடியவர். 1989 மற்றும் 1996-ஆம் ஆண்டு தேர்தல்களில் திருவோணம் தொகுதியிலும், 2016-ஆம் ஆண்டு தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியிலும் வென்று சட்டமன்ற உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றியவர். 2016-2021 காலகட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான், அவரது சட்டமன்றப் பேச்சுகளை ஆழ்ந்து கவனித்து வியந்திருக்கிறேன்.
கள்ளங்கபடமற்ற பேச்சுக்குச் சொந்தக்காரரான அவர், தேர்ந்த வழக்கறிஞராகவும் இருந்து, எளிய மக்களுக்குத் தேவையான சட்ட உதவிகளையும் செய்து வந்தவர்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர் என்னை வந்து சந்தித்துபோது வருந்திய அவருக்கு நம்பிக்கையளித்து வழியனுப்பி வைத்தேன். இனி அந்த அன்பு முகத்தைக் காண முடியாதே என்கிற ஏக்கமும், அவர் நம்மைவிட்டுப் பிரிந்த துயரமும் ஒருசேர வாட்டுகின்றன.
செயல்வீரராக இருந்து தஞ்சை மண்ணில் கழகத்தை வளப்படுத்திய எம்.இராமச்சந்திரன் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், கழக உடன்பிறப்புகள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்:
1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.
2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.
எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார்.
Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government.
#TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து.
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன்.
It is concerning that Tamil Nadu, once among India’s leading states in economic growth, continues to witness a decline under the TVK government.
In October’s GST revenue, neighbouring states recorded double digit growth, with Kerala at 23%, Andhra Pradesh at 24%, Karnataka at 18%, and Telangana at 14%, while Tamil Nadu lagged behind with just 3% growth.
Although taxes collected on certain key goods imported into Tamil Nadu have contributed to a modest increase in the state’s overall tax revenue, revenue generated from our own production continues to decline. I wish to point out to the TVK government that this must be viewed as an indicator of the broader economic stagnation prevailing in the state.
I therefore urge the TVK government to take immediate steps to increase domestic production and expand sales to other states and overseas markets, instead of relying solely on revenue from imported goods. This is essential to strengthen Tamil Nadu’s overall economy and create more employment opportunities for our young people.
மாணவப் பருவத்திலேயே கிளைக் கழகம் நிறுவி, தன் உழைப்பால் கழகப் பொதுச் செயலாளராக உயர்ந்து, 70 ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரராகத் திகழும் அண்ணன் துரைமுருகன் – சாந்தகுமாரி இணையரின் பெயர்த்தியும், தம்பி கதிர் ஆனந்த் எம்.பி. – சங்கீதா இணையரின் மகளுமான செந்தாமரை – தீபக் ரவி ஆகியோரின் திருமண விழாவில் பங்கேற்று, மணமக்களை மனதார வாழ்த்தினேன்!
@katpadidmk @dmkathiranand
இன்று நாம் காணும் தமிழ்நாட்டின் நிலப்பரப்பை நமக்குப் பெற்றுத் தந்த எல்லைப் போராட்டத் தியாகிகள் நினைவு நாளில் அவர்களுக்கு என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
"மாலவன் குன்றம் (திருப்பதி) போனால் என்ன, வேலவன் குன்றமாவது (திருத்தணி) எங்களுக்கு வேண்டும்" என முழக்கமிட்டுப் போராடியதால்தான் திருத்தணி, ஓசூர், கன்னியாகுமரி, செங்கோட்டை முதலிய பல ஊர்கள் இன்று நம்மிடம் உள்ளன.
சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், மார்ஷல் நேசமணி, மங்கலங்கிழார், தாணுலிங்க நாடார், பொன்னப்ப நாடார், அப்துல் ரசாக் என எத்தனையோ தீரர்கள் முன்னின்று நடத்திய இப்போராட்டங்களில் தங்கள் இன்னுயிரையும் இழந்தவர்கள் பலர்.
எல்லைப் போராட்டத்தில் பங்கெடுத்துச் சிறையேகி, இப்போது வாழ்ந்து வரும் 110 தியாகிகளுக்கு 2021-ஆம் ஆண்டு நமது #DravidianModel ஆட்சியில்தான் ஒரு இலட்சம் ரூபாய் பொற்கிழியும் நினைவுப்பரிசும் வழங்கிப் போற்றினோம்.
தமிழ்நிலம் காத்த தியாகிகளுக்குத் தலைவணங்கி நன்றி செலுத்துவோம்!
கேள்விகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது நல்லாட்சியல்ல; கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிர்வாகத்தை உருவாக்குவதுதான் நல்லாட்சி!
விமர்சனங்களை உள்வாங்கித் தமது தவறுகளைத் திருத்திக்கொள்வதுதான் ஜனநாயகத்தின் மாண்பு! விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியது கருத்துகளால்; காவல்துறை நடவடிக்கைகளால் அல்ல!
Fake ID-யின் Comment-ஐக் காரணமாகச் சொல்லி, அதிகாலையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேராசிரியர் கலையரசன் அவர்கள், தமக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி வெளிவந்திருப்பதற்கு எனது வாழ்த்துகள்!
சதியில் ஈடுபட்ட விர்ச்சுவல் விஷமிகளைக் கண்டறிவதோடு, அத்துமீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதும் அவசியம் என்பதை அரசுக்கு நினைவூட்டுகிறேன்.
மீண்டும் மீண்டுமா??
#TVKFails
#BreakingNews | கைதி தப்பியோட்டம்
சென்னை கொளத்தூரில் போலீஸார் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பியோட்டம்; புழலில் 8 வயது சிறுமிக்கு பா*யல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பியோட்டம்
Accused Escape | TN Police | 31 October 2026
#Chennai #Kolathur #NewsTamil24x7
தமிழ்நாடெங்கும் இன்று @DMKWomensWing நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி சார்பற்ற மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தங்கள் வீடுகளின் EB Bill-ஐயும் மளிகை Bill-ஐயும் பார்த்து, இந்த ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை மக்கள் விக்கித்து நிற்கிறார்கள்.
போதாக் குறைக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தங்கள் வீட்டுப் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே விளையாட விடவே அச்சப்படும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதையும் அவர்கள் செய்திகளில் தினம்தினம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
விமர்சனம் செய்வோரை வேட்டையாடுவதிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் Show காட்டுவதிலும் முதலமைச்சருக்கு இருக்கும் கவனம் ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியைத் தமிழ்நாட்டுப் பெண்கள் அடித்துவிட்டனர்.
அவர்களின் #WakeUpCall-க்குச் செவிசாய்ப்பது அரசின் கடமை!
#TVKFails #PriceRise #LawAndOrder
வரலாறாய் வாழ்ந்து, வீரத்துக்கும் தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாக நிலைத்து நிற்கும் பசும்பொன் திருமகனாரைப் போற்றுகிறேன்!
🔷 விடுதலைப் போரில் நேதாஜியுடன் இணைந்து செயலாற்றிய தீரர்!
🔷 குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காகப் போராடிய போராளி!
🔷 உழவர்களின் நலனுக்காகவும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் சங்கங்களை நிறுவியவர்; போராடிச் சிறை சென்ற தியாகி!
🔷 சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் மக்களுக்காகக் குரல் கொடுத்த மாண்பாளர்!
“பத்தரை மாற்றுத் தங்கம்! பசும்பொன் சிங்கம்!” என்று மக்களால் போற்றப்பட்ட பசும்பொன் திருமகனாரின் புகழ் வாழ்க!
சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு!
நாளை @DMKWomensWing நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான Wake-up call!
முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்!
#TVKfails
பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாருமே பாதுகாப்பாக இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றிவிட்ட முதலமைச்சர், மக்களின் கவனத்தையும் - ஊடகங்களின் Breaking News-ஐயும் திசைதிருப்ப Roadshow நடத்தலாமா? Raidshow நடத்தலாமா? எனச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்.
ஊழல் பெருச்சாளிகளை எல்லாம் பேரக் குதிரைகளாக மாற்றி தன் கட்சியில் இணைத்துக் கொண்டிருக்கும் த.வெ.க. எனும் “TN Branch Washing Machine”, தி.மு.க. ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களை மட்டும் குறிவைத்து நடத்திக் கொண்டிருக்கும் “Vettri Vendetta Politics” திட்டம், வழக்கம் போல் சட்டத்தின் முன் தோற்று, மக்கள் முன் தலைகுனிந்து நிற்கும்!
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்கான ரீல்ஸ் விடியோக்களைத் தயாரிக்கவும் - முதலமைச்சர் மேடையில் punch dialogue என்ற பெயரில் பல modulation-இல் காட்டுக்கத்து கத்தவும் நடத்தப்படும் இந்த ரெய்டுகளைக் கண்டு தி.மு.க.வின் கடைக்கோடிக் தொண்டரின் கால் நகம் கூட அஞ்சாது!
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, துருப்பிடித்துவிட்ட நிர்வாகம், வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு என மக்களை பாதித்துக் கொண்டிருக்கும் இந்த த.வெ.க. ஆட்சியைக் கண்டு, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது.
இதை எல்லாம் மறைக்க, தி.மு.க.வினருக்கு வாய்ப்பூட்டு போடலாம் என்று நினைக்கிறீர்கள். இனி இன்னும் இன்னும் வேகமாகத் த.வெ.க. அரசின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுவோம்!
த.வெ.க. ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக #DravidianModel ஆசிரியர் கலையரசன் அவர்கள் சட்டவிரோதமாகக் கைது: த.வெ.க. அரசின் உச்சகட்ட பாசிசம்!
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியராக உள்ள முனைவர் கலையரசன் அவர்களை நேற்று அதிகாலை, சீருடை அணியாத காவலர்கள் சட்டவிரோதமாகக் கைது செய்து, வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். கைது செய்யப்பட்டவர் சாதாரண நபரோ, குற்றப் பின்னணி கொண்டவரோ இல்லை.
திரு. கலையரசன் அவர்கள் தமிழ்நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர். இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான JNU-வில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பதிப்பித்த "The Dravidian Model" நூலின் ஆசிரியர்களில் ஒருவர். ஒன்றிய அரசின் திட்டக்குழுவில் பொறுப்பு வகித்தவர். தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையைத் தயார் செய்வதில் பங்களித்தவர். எல்லாவற்றுக்கும் மேல், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவராக இருக்கும் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இப்போதும் இருப்பவர்.
அப்படிப்பட்டவரைத் தெரியாமல் கைது செய்துவிட்டோம் என்று கூறுவது நம்பும்படி இல்லை. செய்யாத குற்றத்திற்காக, அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து, அவரது செல்போனைப் பறித்து, கைது செய்து அலைக்கழித்ததைச் சாதாரணச் செயலாக எவரும் கடந்துபோக முடியாது. குற்றவாளிகளை எல்லாம் கூத்தடிக்க விட்டுவிட்டு, கல்வியாளர்களை அச்சுறுத்திப் பார்ப்பது எவ்வளவு பெரிய அசிங்கம்?
திரு. கலையரசன் அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்? Dravidian Model என்ற பதத்தை முன்வைத்து, திராவிட ஆட்சியால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை உலகம் முழுவதும் பறைசாற்றியதற்காகவா? த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகுதான், தமிழ்நாடு இதுவரை சந்தித்திராத விலைவாசி உயர்வைச் சந்தித்துள்ளது என்ற உண்மையைச் சொன்னதற்காகவா?
முட்டாள்களால் நிறைந்த த.வெ.க.வுக்கும் கல்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், கல்வியாளர்களைக் கைது செய்து மிரட்டும் அளவுக்கு அறிவின் மீது ஒவ்வாமை கொண்டவர்களாக இவர்கள் நடந்துகொள்வார்கள் என நிச்சயமாக நினைக்கவில்லை. பாசிசத்தில் பா.ஜ.க.வையும் மிஞ்சிவிடுவார்கள் என்பதைத்தான் இந்தக் கைது காட்டுகிறது. முதலமைச்சரின் ஒப்புதலோடும் உயரதிகாரிகளின் அனுமதியோடும்தான் இந்த அத்துமீறல் நடக்கிறதா?
முனைவர் கலையரசன் அவர்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. கடந்த ஆட்சிக்காலத்திலும், அவர் சுதந்திரமாகத் தன்னுடைய விமர்சனக் கருத்துகளை முன்வைத்திருக்கிறார். ஆனால், இந்தத் தரங்கெட்ட த.வெ.க. ஆட்சியோ, எங்கள் ஆட்சியைப் பற்றியோ நிர்வாகத் தோல்விகளைப் பற்றியோ ஊடகங்களில் உண்மையைப் பேசினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டும் ரவுடி அரசாகச் செயல்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அரசிற்கு ஆதரவு அளித்துக் கொண்டு இருக்கும் கட்சிகள், இந்த அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? இதுதான் இவர்கள் பாசிசத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் அரசியலா?
புகழ்பெற்ற பேராசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டைப் புனைந்து, அவரை அலைக்கழித்து, துன்புறுத்திய த.வெ.க. அரசின் பாசிச செயல் கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு காவல்துறையும், அதற்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்களும் முனைவர் கலையரசன் அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்!
தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா எனும் பெண்மணி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்
தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்!
இதற்கு என்ன விநோத விளக்கத்தை மாவட்டக் காவல்துறையினர் வெளியிடப் போகின்றனர்?
வெளியில்தான் பாதுகாப்பில்லை, நிம்மதியாக யாரும் நடமாட முடியவில்லை என்று பார்த்தால், வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலைக்கு மக்களைத் தள்ளியதுதான் த.வெ.க.வின் சாதனையா?
#LawAndOrder #Thoothukudi
News Tamil Breaking || கொ*ல நகரமாகிறதா தூத்துக்குடி மாவட்டம்?
Thoothukudi | Police Investigation | 28 Oct 2026
#NewsTamil24x7 #CrimeNews
❓ 97 இலட்சம் வாக்காளர்கள் பட்டியலில் ஏன் இல்லை?
❓ வாக்காளர் நீக்கங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றியதா?
❓ தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை எங்கே?
இவை வெறும் கேள்விகளல்ல; ஜனநாயகத்தின் அடித்தளத்தையே உலுக்கும் குற்றச்சாட்டுகள்!
🔷 ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை
🔷 SIR ரத்து
🔷 மீண்டும் வாக்குச்சீட்டு முறை
உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளேன்.
வாக்குரிமை என்பது சலுகையல்ல; அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை!
ஒவ்வொரு வாக்கும் கணக்கில் வர வேண்டும். ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் காக்கப்பட வேண்டும்.
நமது கேள்விகளுக்குப் பதில் வேண்டும்! ஜனநாயகத்திற்கு நீதி வேண்டும்!
#SaveDemocracy #StopSIR
#WATCH | மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக, பழையபடி வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்!
மக்களுக்குத் தேர்தல்களின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், தேர்தல் முடிவுகள் நியாயமாக அமைந்திடவும் வாக்குச்சீட்டு முறை வேண்டும்!
அனைத்து மாநிலங்களிலும் தேர்தலுக்கு முன்பாக அவசரகதியில் நடத்தப்பட்ட S.I.R. முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும்!
- டி.ஆர்.பாலு எம்.பி, திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்!
#TRBalu | #Trichysiva | #Kalaignarseithigal
சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை!
இதைப் பற்றி எல்லாம் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை. குற்றவாளிகளுக்கு பயமில்லை.
த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை!
#LawAndOrder #TVKFails
#JustNow || சென்னை அடையாறில் பட்டப்பகலில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கொண்ட கும்பல் தப்பிச்சென்ற காட்சி
#Chennai | #Adyar | #PolimerNews | #PolimerNews
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது!
ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன்.
சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.
புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.
ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள்.
மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்!
தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.
அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!
பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள்
🚨 சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது.
🚨 மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான்.
🚨 காணாமல் போன செஞ்சி சிறுமி எங்கே என்பது இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது.
🚨 வீடியோ கேம்கள், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன.
🚨 த.வெ.க. ஆட்சியில் Free Run கிடைத்தது போல குற்றவாளிகள் அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள்.
🚨 தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.
🚨 சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல, முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார்? சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?
🚨 சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து, வரும் சனிக்கிழமை (அக்டோபர் 31) தமிழ்நாடு முழுவதும் @DMKWomensWing சார்பில் போராட்டம் நடத்தப்படும்!
#LawAndOrder
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..!
கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா?
'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர்.
கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்?
முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை.
தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும்.
கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.



























