
President, Tamilnadu Congress Committee.@incTamilnadu MP for Virudhunagar (3rd term)
Virudhunagar -Madurai
Joined September 2009
- Tweets61.5K
- Following520
- Followers83.6K
- Likes24.9K
தென்காசி இசக்கி மஹாலில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் இயக்க மறுசீரமைப்பு மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்கான (5 மாவட்டங்கள்) திறன்மேம்பாட்டு பயிற்சி முகாமில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் திரு. @GAMIR_INC மாண்புமிகு அமைச்சர் @RajeshKumarSMLA முன்னாள் தலைவர்கள் திரு. சு. திருநாவுக்கரசர், திரு. K.V. தங்கபாலு, முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஆர். தனுஷ்கோடி ஆதித்தன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் திரு. நிவேதித் ஆல்வா, திரு. ஜங்கா கௌதம் ஆகிய மூத்த தலைவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. விஜய் வசந்த், திரு. சி. ராபர்ட் புரூஸ், மண்டலப் பொறுப்பாளர்கள் திரு. V.R. சிவராமன், திரு. நெடுஞ்செழியன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ரவி அருணன், திரு. AMG. அசோகன், திரு. சுடலையாண்டி, டாக்டர் அமீர்கான் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
#TNCC #Congress #Tenkasi #TNCongress
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை.
அதிகாரத்தில் இருப்பவர்களே தவறு செய்தாலும், தயக்கமின்றி நடவடிக்கை எடுக்கும் அரசின் இந்த அணுகுமுறை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்துகிறது.
பாதிக்கப்பட்ட அதிகாரிக்கு உரிய நீதி கிடைக்கவும், இவ்வழக்கு எவ்வித சமரசமுமின்றி நேர்மையாக நடைபெறவும் அரசு துணை நிற்க வேண்டும். சகோதரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே நமது முதல் கடமை.
#TNCongress
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweeted
At a lovely program organised by @INCTamilNadu under the leadership of @manickamtagore, we pledged to fight to protect & preserve the Constitution, the basis for our very existence as a nation & a citizen
@manickamtagore அவர்களின் தலைமையில், @INCTamilNadu சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், ஒரு தேசமாகவும் குடிமக்களாகவும் நமது இருப்பிற்கே அடிப்படையாக விளங்கும் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கவும், பேணவும் தொடர்ந்து போராடுவோம் என உறுதியேற்றோம்
தமிழ்நாடு காங்கிரஸ் இயக்க மறுசீரமைப்பின் இரண்டாம் கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மண்டல ஒருங்கிணைப்பாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் (26.11.2026) நடைபெற்றது. இதில் 13 மாவட்ட காங்கிரஸ் ஒருங்கிணைந்து பங்கேற்றன.
இன்று தென்காசி வந்த சேர்த்தோம்
#TNCongress #ChennaiZone #SSA2
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweeted
4 நாட்கள் அவகாசத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்டி ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் பாஜக அரசு: மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ஆகவே நிலைநிறுத்தவும், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை மேலும் 25 ஆண்டுகளுக்குத் தள்ளிவைக்கவும் அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும்! - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தல்.
மழைக்காலக் கூட்டத்தொடரை முறைப்படி முடிக்காமல் 100 நாட்களுக்கும் மேலாகக் கிடப்பில் போட்டுவிட்டு, அரசியலமைப்புச் சட்ட தினமான நவம்பர் 26 அன்று வெறும் 4 நாட்கள் அவகாசத்தில் (நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை) நாடாளுமன்றத்தை அவசர அவசரமாகக் கூட்டியிருக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக விரோதப் போக்கிற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். வழக்கமாகப் புதிய கூட்டத்தொடரைக் கூட்ட 15 நாட்கள் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட வேண்டும்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் கேட்க 14 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். ஆனால், மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்ற மோடி அரசு, கேள்வி நேரத்தையும், பூஜ்ஜிய நேரத்தையும், தனிநபர் மசோதாக்களையும் ரத்து செய்துவிட்டு, மக்களவைத் தொகுதிகளை 850 ஆக உயர்த்தும் 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவை மட்டும் குறுக்கு வழியில் நிறைவேற்றத் துடிக்கிறது.
மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில், சமீபத்திய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்து, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, வட மாநில ஆதிக்கத்தை நிலைநாட்டப் பாஜக சதிவலை பின்னுகிறது. கடந்த ஏப்ரல் 16-ம் தேதி நாடாளுமன்றத்தில் 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் வெறும் 298 வாக்குகள் மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்த பாஜக, இப்போது தங்களுக்கு இருக்கும் 322 வாக்குகளுடன், சில கட்சிகளின் மறைமுக ஆதரவுடனும் 360 என்ற மாய எண்ணைத் தொட முயற்சிக்கிறது.
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதாக நேற்றைய தினம் வரை வீரவசனம் பேசியவர்களின் திடீர் நிலைப்பாடு மாற்றம் வியப்பளிக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் இதே மசோதாவை எதிர்த்து வாக்களித்துவிட்டு, வீதிக்கு வீதி மசோதா நகல்களைத் தீயிட்டுக் கொளுத்தியவர்கள், இப்போது 30 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு "மசோதா வாசகத்தைப் பார்த்துவிட்டு முடிவெடுப்போம்" என்று தயங்குவதும், வாக்கெடுப்பைப் புறக்கணித்து பாஜகவுக்கு மறைமுகமாகத் துணைபோக முயல்வதும் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைக்கும் செயலாகும்.
இப்பிரச்சினையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிலைப்பாடு மிகத் தெளிவானது. முதலாவதாக, தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையான 543 என்பதை எக்காரணம் கொண்டும் உயர்த்தக் கூடாது; அந்த எண்ணிக்கையை அப்படியே பராமரிக்க வேண்டும். இரண்டாவதாக, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக் கூடாது; தற்போதைய நிலையையே மேலும் 25 ஆண்டுகளுக்கு அப்படியே முடக்கி வைக்க அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பதே எமது உறுதியான கோரிக்கையாகும்.
நமது தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் குறிப்பிட்டது போல, "நாடாளுமன்றத் தொகுதிகளைத் திருத்தி அமைக்க பாஜக கொண்டு வரத் திட்டமிட்டிருக்கும் சட்டத்தை ஆதரிக்கும் எவரும் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்கிறார்கள்; அவர்களை 21-ஆம் நூற்றாண்டு எட்டப்பர்கள் என்றே வரலாறு பதிவு செய்யும்!"எனவே, ஜனநாயக விரோதமான இந்த தொகுதி மறுவரையறை மசோதாவைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாகக் கண்டிக்கிறது; நமது உரிமைகளைக் காக்கத் தமிழக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
தலைவர் மாணிக்கம் தாகூர் ப
#TNCongress #TNCCStatement
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweeted
जम्मू-कश्मीर प्रदेश कांग्रेस कमेटी के पूर्व अध्यक्ष, पूर्व मंत्री और अनंतनाग के लोकप्रिय विधायक पीरज़ादा मोहम्मद सईद साहब के निधन का समाचार अत्यंत दुखद है।
इस दुख की घड़ी में उनके परिजनों, मित्रों और समर्थकों के प्रति अपनी गहरी संवेदनाएँ व्यक्त करता हूं।
पार्टी के प्रति उनकी निष्ठा और जनसेवा में उनका योगदान सदैव स्मरणीय रहेगा।
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை நீதிமன்றம் வரை கொண்டு சென்றதோடு, 300 ஆண்டுகளாகப் பக்தியுடன் ஏற்றப்பட்டு வரும் திருக்கார்த்திகை தீபத்தையும் இடம் மாற்ற முயற்சி செய்தார்கள்.
இப்போது, மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் @AshwiniVaishnaw "ரயில்வே ஸ்டேஷன் மீது தீபம் ஏற்றுவோம்" என்று பக்தர்களின் நம்பிக்கையைக் கேலி செய்யும் விதமாகப் பேசுகிறார். அதைப் பலரும் கைதட்டி ரசிப்பது வேதனையளிக்கிறது.
தங்களின் அரசியலுக்காகத் தொடர்ந்து உண்மையான முருக பக்தர்களின் மனதைப் புண்படுத்தி வரும் பாஜகவினரையும், மத்திய அமைச்சரையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நீங்கள் கேலி பேசுவதும், விளையாடுவதும் எங்கள் இறைவன் முருகனிடம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
மழைக்காலக் கூட்டத்தொடரை முறைப்படி முடிக்காமல் 100 நாட்களுக்கும் மேலாகக் கிடப்பில் போட்டுவிட்டு, அரசியலமைப்புச் சட்ட தினமான நவம்பர் 26 அன்று வெறும் 4 நாட்கள் அவகாசத்தில் (நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 வரை) நாடாளுமன்றத்தை அவசர அவசரமாகக் கூட்டியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. வழக்கமாகப் புதிய கூட்டத்தொடரைக் கூட்ட 15 நாட்கள் முன்கூட்டியே அறிவிப்பு வெளியிட வேண்டும்; எம்.பி.க்கள் கேள்விகள் கேட்க 14 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். ஆனால், மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்ற மோடி அரசு, கேள்வி நேரத்தையும், பூஜ்ஜிய நேரத்தையும், தனிநபர் மசோதாக்களையும் ரத்து செய்துவிட்டு, எம்.பி.க்களின் அரசியலமைப்பு உரிமையையே பறித்துள்ளது. நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் பற்றியோ, மக்களின் வாழ்வாதாரம் பற்றியோ விவாதிக்காமல், மக்களவைத் தொகுதிகளை 550-லிருந்து 850 ஆக உயர்த்தும் 131-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவை மட்டும் குறுக்கு வழியில் நிறைவேற்றவே பாஜக துடிக்கிறது.
மகளிர் இடஒதுக்கீடு என்ற போர்வையில், சமீபத்திய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்து, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, வட மாநில ஆதிக்கத்தை நிலைநாட்டி, "ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்" என்ற சர்வாதிகாரத்தைத் திணிக்கத் துடிக்கிறது பாஜக. கடந்த ஏப்ரல் 16-ம் தேதி நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தபோது, 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் வெறும் 298 வாக்குகள் மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்து மூக்குடைபட்ட பாஜக, இப்போது தங்களுக்கு இருக்கும் 322 வாக்குகளுடன், எதிர்க்கட்சிகளை உடைத்தும், சில கட்சிகளின் மறைமுக ஆதரவுடனும் 360 என்ற மாய எண்ணைத் தொடச் சதிவலை பின்னுகிறது.
பாஜகவின் இந்தச் சூழ்ச்சி ஒருபுறம் என்றால், தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதாக வீரவசனம் பேசியவர்களின் திடீர் 'அந்தர் பல்டி' தான், பாகுபலி ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்துவிட்டு, இப்போது பதுங்கி ஓடும் காமெடி சீனாக மாறியிருக்கிறது! கைப்புள்ள 'நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்'னு கோடெல்லாம் கிழிச்சு சவுண்டு விட்டுட்டு, கடைசியில அடிவாங்க பயந்து பம்முற மாதிரி, நேத்து வரைக்கும் 'டெல்லிக்குப் பயப்பட மாட்டோம்'னு வீரவசனம் பேசிட்டு, இன்னைக்கு 'மசோதா வாசகத்தைப் பார்த்துட்டு ஆதரிக்கலாமா வேண்டாமானு யோசிக்கிறோம்'னு பதுங்குறீங்களே என்று தமிழ்நாட்டு மக்களே சிரிக்கிறார்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் எதிர்த்து வாக்களித்துவிட்டு, தெருவுக்குத் தெரு தொகுதி மறுவரையறை மசோதா நகல்களைத் தீயிட்டுக் கொளுத்தியதும், "கடந்த ஒரு வருடமாக எதிர்க்கிறோம், நிலைப்பாட்டை மாற்ற மாட்டோம்" என்று சவால் விட்டதும் என்ன ஆச்சு? இப்போது மக்களவையில் 22 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 8 எம்.பி.க்கள் என 30 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு, "எழுத்துப்பூர்வ உத்தரவாதம் கொடுத்தால் ஆதரிப்போம்" என்று பம்முவதும், வாக்கெடுப்பைப் புறக்கணித்து பாஜகவுக்கு மறைமுகமாக வாக்குகள் கிடைக்க உதவப் பார்ப்பதும் ஏன்?
"இது வெறும் ட்ரெய்லர்தான், மெயின் பிக்சரைப் பார்க்கணும்னு டெல்லி ஆசைப்படக் கூடாது" என்று முழங்கினார்கள். ஆனால், நவம்பர் 30-ம் தேதி நாடாளுமன்றத்தில் 'மெயின் பிக்சர்' ரிலீஸ் ஆகும்போது, தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்துவிட்டு பாஜகவிடம் சரணடைவதும், டெல்லிக்கு அடிபணிவதும்தான் இவர்களின் 'மெயின் பிக்சராக' இருக்கப் போகிறது என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்வார்கள்!
நமது தலைவர் ராகுல் காந்தி அவர்கள் குறிப்பிட்டது போல, "நாடாளுமன்றத் தொகுதிகளைத் திருத்தி அமைக்க பாஜக கொண்டு வரத் திட்டமிட்டிருக்கும் சட்டத்தை ஆதரிக்கும் எவரும் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்கிறார்கள். அவர்களை 21-ஆம் நூற்றாண்டு எட்டப்பர்கள் என்றே வரலாறு பதிவு செய்யும்!"
#TNCongress #DelimitationBill
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweeted
A Leader Loved by Millions...Rahul Gandhi... ❤️
#RahulGandhi #TNCongress
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweeted
They are Vote Chors. They are Seat Chors.
There is no doubt that their Delimitation Bill will be nothing more than an exercise in Sansad Chori.
To orchestrate this murder of the Constitution on Constitution Day shows how badly they want to mock our precious democratic system.
We will not allow this to pass. Bring it on.
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweeted
मुंबई में 26/11 को हुए दुस्साहसी आतंकी हमले में शहीद वीर जवानों और निर्दोष नागरिकों को मेरी विनम्र श्रद्धांजलि।
उनका अदम्य साहस और सर्वोच्च बलिदान देश कभी नहीं भूलेगा।
எட்டப்பர்கள் ரெடியா?
The Government has requested Hon’ble Speaker, Lok Sabha and Hon’ble Chairman, Rajya Sabha to reconvene Lok Sabha on Monday, 30th November, 2026 and Rajya Sabha on Wednesday, 2nd December, 2026 respectively to transact essential Government Business. Subject to exigencies of the Business, the sitting of both Houses may conclude on 3rd December, 2026.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார்களின் அகராதியில் 'சாத்தான்' என்றால் சமூக நீதிக்காகப் போராடுபவர், பாசிசத்தை எதிர்ப்பவர் என்று அர்த்தம்!
ஆனால், இந்தப் பட்டியலில் திமுகவைக் காணோமே... உதயநிதி வழி பாஜக வழியாக மாறியதால், அந்தப் பெருமையை திமுக இழந்துவிட்டது போல!
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப retweeted
இந்திய அரசியலமைப்பு தின விழிப்புணர்வுப் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்றல் நிகழ்வு இன்று (26.11.2026) சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு. ப. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், தமிழகப் பொறுப்பாளருமான திரு. குலாம் அகமது மிர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு. கே.வி. தங்கபாலு, திரு. சு. திருநாவுக்கரசர், தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள் மாண்புமிகு திரு. செ. ராஜேஷ்குமார், மாண்புமிகு திரு. பெ. விஸ்வநாதன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழகப் பொறுப்புச் செயலாளர்கள் திரு. நிவேதித் ஆல்வா, திரு. ஜங்கா கவுதம், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு. செந்தமிழ் அரசு, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு. பிரவீன் சக்கரவர்த்தி, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திரு. சசிகாந்த் செந்தில், இயக்க மறுசீரமைப்பு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிப் பொருளாளர் திரு. ரூபி மனோகரன், மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#ConstitutionDay
#TNCongress
@pravchak @s_kanth @nivedithalva
அரசியலமைப்பு நமது பெருமை; அதை பாதுகாப்பது நமது கடமை.
அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு பொறுப்பாளருமான திரு. @GAMIR_INC அவர்களின் வழிகாட்டுதலிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. @manickamtagore அவர்களின் தலைமையிலும், ‘அரசியல்சாசன பாதுகாப்பு பேரணி’ நடைபெற்றது.
அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நமது ஒற்றுமையையும் உறுதியையும் பறைசாற்றும் வலுவான செய்தியாக இந்தப் பேரணி அமைந்தது.
📍 சென்னை, தமிழ்நாடு



































