இவருடைய youtube சேனலிலே இவர் தன்னையே சுவாமி என்று சொல்லி அவருடைய அனுஷ்டானம் என்று சொல்லி பதிவிட்டு கொள்வதை பார்க்க நேரிட்டது.
இப்பொழுது இவர் தன்னைத் தானே தனக்குத் தானே "சுவாமி" என்று சொல்லிக்கொண்டு "சுவாமியின் அனுஷ்டானம்" என்று சொல்கிறார். அந்த அனுஷ்டானத்தின் அழகை பார்ப்போம்.
சந்தியாவந்தனம் செய்யும் பொழுது பிராணாயம் செய்யும் பொழுது சொல்லக்கூடிய மந்திரம் குறைந்தபட்சம் 15 வினாடிகள் ஆகும்.
அரை வினாடி கூட இல்லாமல் ஒரு பிராணாயாமம் செய்கிறார். (முதல் காணொளி)
அதேபோல ஆசமனம் செய்வதற்கு சொல்லக்கூடிய மந்திரங்களை சொல்ல குறைந்தபட்சம் 20-25 வினாடிகள் ஆகும்.
இவர் அதை முக்கால் வினாடியில் முடித்துக் கொள்கிறார். (இரண்டாவது காணொளி)
இதே போலத்தான் 99% தான் அனுஷ்டானம் செய்கிறேன் பேர்வழி என்று சொல்லி செய்கின்றனர்.
இப்படி அவதி அவதியாக வீடியோவுக்காக அனுட்டானம் செய்வதற்கு அனுஷ்டானம் என்று பெயர் கிடையாது.
ஒரு முப்பது வினாடி கூடவா இவர்களுக்கு பொறுக்க முடியவில்லை. இப்படிப்பட்டவர்கள் தான் எனக்கு பொறுமை இல்லை என்று சொல்கிறார்கள்.
இதற்கு அனுஸ்தானம் என்று பெயர் கிடையாது. விளம்பரம் என்று பெயர்.
விளம்பரத்துக்காக சந்தியாவந்தனம் செய்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
யார் இவர் என்று கேட்கிறீர்களா? இவர் பெயர் @SarathyThotatri.
இவர்களைப் போன்றவர்கள் "இன்று சாஸ்திர சம்பிரதாயம் இந்த மாதிரி ஆகிவிட்டது" என்று காணொளி போட்டு புலம்புவது பேஷன் ஆகிவிட்டது.
அப்படி ஆக்கியவர்களே இவர்கள் தான் என்பது இவர்களுக்கே நன்றாக தெரியும்.
ஜெய் ஸ்ரீ ராம்!
இவனையெல்லாம் ஒரு ஊடகக்காரர்கள் என்று மக்கள் சொல்கிறார்களே! எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை!!!!
வெளிப்படையாக தான் ஒரு பினாமியாக இருக்க ஆசைப்படுவதாக சொல்லிக் கொள்கிற இந்த 10 சீட்டு @RangarajPandeyR இதுவரை எத்தனை பேருக்கு பினாமியாக இருப்பார் என்று சந்தேகம் எழும்புகிறதா இல்லையா!
முன்பே நான் சொன்னது போல ஒருமுறை ஸ்ரீரங்கத்திற்கு என் வீட்டிற்கு வந்த பொழுது இவர் காரில் நான் சென்று கொண்டிருந்த பொழுது ஒருவர் என்னை அழைத்து உங்களுக்கு பண உதவி செய்கிறேன் என்று சொன்னதை நான் மறுத்ததை கேட்டு, இந்த ரங்கராஜ் பாண்டே "உங்களுக்கு பிழைக்க தெரியவில்லை! அவர்களை என்னிடம் அழைக்கச் சொல்லுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சொன்னவர் தான்.
ஊடகம் என்கிற பெயரிலே வேறு ஒரு தொழிலை செய்வதற்கு பதிலாக பிச்சை எடுக்கலாம்!
ஜெய் ஸ்ரீ ராம்!
இந்த முட்டாபைய தான் தன் பிள்ளையையே மச்சான் என்று அழைப்பான்.
இப்பல்லாம் தராதரமே இல்லை.
மைக் கிடைத்தது என்றால் எதை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பேசலாம் என்று ஆகிவிடும். கூடவே பணம் புகழ் இருந்தால் போதும். அவர்கள் ஆத்திகவாதிகளாக ஆகி ஊருக்கு உபதேசம் செய்யத் துவங்கி விடுவார்கள்.
இதுதான் இன்றைய இந்துக்களின் நிலை.
இவனைத் தொடர்பு அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளை மச்சான் என்று அழையுங்கள்!
அப்படியே சிகரெட் சாமியார் போன்றவர்களையும் பார்த்து உங்கள் பிள்ளைகளையும் குடிக்கச் சொல்லுங்கள்.
தலையெழுத்து
ஜெய் ஸ்ரீ ராம்!
Yes! Totally agree with Chika! I know a lot of youngsters who have taken a great deal of interest in our Itihasa Puranas after listening to my dear friend Vid @dushyanthsridar.
If you want to bring cultural awareness in the next gen,tell them in a language they understand!
சும்மா போர் அடித்தது. இந்த காமெடி பீஸ் @SaalanPaari பார்க்கலாம் என்று பார்த்ததில் .....
நினைப்பு பிழைப்பை கெடுக்கும் தினேசு.
ஜெய் ஶ்ரீ ராம்!
Why is that people want to put thumbnails as is the are really angry?!! There protecting them is fine but protecting those like Ranganji as someone who is angry particularly at no point in the interview he was angry at all is sick.
And people call me angry fellow even they like those who claim to be angry. The reality is no one has seen my anger yet.
Jai Shri Ram!
இந்த ராமாயண திரைப்பட்டதை பற்றி கதறிக்கொண்டிருக்கும் சங்கிகளூக்கும், போலி சநாதனிகளுக்கும்!!
அப்படி உங்களுக்கு இதெல்லாம் தப்பும் தவறுமாக எடுத்திருக்கின்றனர், நடிகர் நடிகைகள் தப்பு, இயக்கம் தப்பு, இசை தப்பு, அது தப்பு இது தப்பு என்று கதறும் கிறுக்கர்கள், அடுத்தவர்கள் என்ன செய்யவில்லையோ அதை இவர்கள் செய்ய வேண்டியதுதானே!!
உன் வீட்டை நீ பார்த்துக் கொள்ளாமல், நாயை உள்ளே விட்டுவிட்டு நாயை குறை சொல்வதில் என்ன லாபம்!
வக்கிருந்தால், ஒரு படம் எடு. இல்லையா, ஸ்ரீ ராமாயணத்தை ஒழுங்காக படித்து, சினிமா பைத்தியங்கள் 2 பேருக்கு நல்லது சொல்லிக் கொடு.
ஸ்ரீ ராமாயணம் என்பது கிடைத்தற்கறிய பொக்கிஷம். அனைவருக்கும் கிடைத்துவிட்டால் அது எப்படி பொக்கிஷமாகும்!!
கிறுக்கர்கள் சிதிக்க!
ஜெய் ஸ்ரீ ராம்!
ஒரு வாரமாக ஒரே அலப்பறை!! எதற்கு என்று தெரியவில்லை. சில அரசியல் சநாதனிகளின் அழுகை தாங்கவில்லை!!
ஏதோ ஒரு திரைப்படம் வந்துவிட்டதாம். அதில் ஏதோ ராவணன் "எல்லோரும் சமம்" என்று பேசுவது போல காட்சிப் படுத்திவிட்டார்களாம்!
அதனால் சநாதன தர்மத்தையே திரித்து குழப்ப ஏறடுத்தப்பட்ட ஒன்று என்று அந்த சினிமாவை பார்ப்பவர்கள் கவனிக்காத ஒன்றைக் இவர்கள் ஊதி பெரிதாக்குவது எதற்கு என்று தெரியவில்லை!!
இந்த கும்பலில் இப்ப @APNSWAMY என்று ஒரு அரசியல் ஆன்மீகவாதி!!
ஏனோ இவர்களுக்கு இந்த வேலை!! சேனல் சேனலாக போய் இவர்கள் பேசுவதை "விளம்பரத்திற்கு" என்று சொன்னால் இவர்கள் விசிரிகள் கொதித்து எழுவார்கள்!
சநாதன தர்மம் என்ன அவ்வளவு வலுவற்று போய்விட்டதா என்ன? ஒரு திரைப்படம் வால்மீகி வாக்கை விட அதிக சக்தி வந்துவிட்டது என்று இவர்கள் கருதுகிறார்களா என்ன?!
@ChanakyaaTv-இல் ஸ்ரீ ரங்கன்ஜீ அவர்களை பத்து சீட்டு @RangarajPandeyR நேர்காணல் எடுத்ததில் அவர் பேசிய அளவு பேசி இருந்தால் போதாதா!! சொல்லப்போனால், ரங்கன்ஜீ இந்த படத்தை பார்ப்பதற்கு காரணமே இப்படிப்பட்ட விமர்சனங்கள்தான் என்று அவரே சொல்கிறார். அதுதான் கொடுமை!! அவரையும் நேரத்தை வீணடிக்க வைத்தார்கள்!!
இப்படி பேசிக் கொண்டிருப்பவர்களில் எத்தனை பேர் சநாதனதர்மத்தில் சொன்னபடி வாழ்கிறார்கள்!???
தர்மரக்ஷணம் என்பது முதலில் அந்த தர்மத்தை அநுஷ்டானம் செய்வதில் இருக்கிறதே ஒழிய, அதை நம்பாதவன் சொல்லை எதிர்ப்பதில் இல்லை!
அநந்தபத்மனாபன் மற்றும் ரங்கன்ஜீ-யை தவிற இதை பற்றி பேசியவர்களில் எவரும் 3 வேளை சந்தியாவந்தனம் கூட செய்யாதவர்கள் என்பதை நான் அறுதியிட்டு கூற முடியும்.
அதிலும் ரங்கன்ஜீ-யை தவிற பல ராமாயண புத்தகங்களை படித்தவர்கள் இருக்க முடியாது என்பது என் கருத்து.
என் வருத்தமெல்லாம், எவர்கள் ஸ்ரீராமபிரானை பற்றிய விஷயங்களை உலகிற்குச் சொல்லி, "கர்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ!" என்று உலகை விழிப்படைய செய்வதை விட்டு, அவர்களும் இந்த கும்பலோடு கூக்குறலிடுவது மிகவும் வேதனையாக இருக்கிறது!!
இப்படி உலகத்தாருக்கு முன் தன்னை "அறிவுஜீவி" என்று காட்டிக் கொள்வதால் இவர்கள் என்ன அடைய போகின்றனரோ!!
என்றும் ஸ்ரீ ராமாயணம் போற்றப்பட்டுக் கொண்டிருக்கும். என்று ஸ்ரீ வால்மீகியும் போற்றப்படுவார். என்றும் ஸ்ரீ விபீஷணாழ்வான், ஸ்ரீ பரதாழ்வான், ஸ்ரீ ஜடாயு மஹாராஜா, ஸ்ரீ குகப்பெருமான், ஸ்ரீ சத்ருக்னாழ்வான் ஆகிய எல்லோரும் போற்றப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்!!
ஒரு குழந்தைகள் கிளம்பும். இளைஞர்கள் படத்தைத்தானே பார்க்கின்றனர் என்று.
அவர்கள் மேல் பழி போடும் பெற்றோர்கள் முதலில் இப்படிப்பட்ட திரைப்படங்களை தானும் பார்க்காமல், தங்கள் குழந்தைகளையும் அழைத்துச் செல்லாமல் இருக்க வேண்டும்!!
அதை செய்துவிட்டு, ஸ்ரீ ராமாயணத்தை வால்மீகி எழுதியதை படித்து அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அதை செய்யாமல் கத்திக் கொண்டு நாராசமாக இருக்கிறது
ஜெய் ஸ்ரீ ராம்!
திரைப்படங்கள் சநாதன தர்மத்தின் எதிரியா, அல்லது உபந்யாசகர்கள் எதிரியா?!
ஒரு திரைப்படத்தில் ஏதோ ராவணனை நல்லவனாக காட்டிவிட்டார்கள் என்று, அதை எடுத்தவரை வசைபாடி தீர்க்கும் கும்பல், ஏனோ, உபந்யாசகர்கள் என்கிற பெயரில், ஸ்ரீ ராமபிரான் 60 வயது கூட வாழவில்லை என்றும், ஆஞ்சநேயர் மனிதன் என்றும், ஸ்ரீ ராமபிரான் மனுஷ்யன் என்றும், இவை எல்லாம் சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன் தான் நடந்தது என்றும், புராணங்கள் கட்டுக்கதைகள் என்றும், இப்படி பட்ட விஷயங்களை குழந்தைகள் நம்ப மாட்டார்கள் என்று சொல்லி, அதற்காக அறிவியல் ஆராய்ச்சி என்றும் செய்து ஆங்கில புத்தகத்தில் பெமினிசம் சாயலில் வால்மீகியை காட்டுவது குறித்து பாதகமே இல்லை என்று கண்ணை மூடிக் கொள்கிறதே!!
காலத்தின் கொடுமை!!
ஜெய் ஸ்ரீ ராம்!
I agree. I cant comment there because the "democratic" @bseshadri had blocked me and so I am writing here. @sansbarrier. Unfortunatley I get a feeling that court cases are getting decided like you have described. I am not sure where this is going to lead the society to.
Courts must rely on evidence. If they are going to rely on tom dick and harry's "opinions" (I am not saying they did, but if they do) then as well we can scrap the Bharatiya Sakshya Adhiniyam (Evidence Act) completely and of course we can also get rid of CrPC, IPC whatever you see!!
Pleadings are important in a writ. Now-a-days I see that orders are passed with words which are not in pleadings.
Jai Shri Ram
Replying to @bseshadri
“ they would not have done such a thing “ - a legal case is not addressed on the basis of propositions and suppositions. This is to say an educated man would not steal.
ஆஸ்தான அபித் தான் வரவில்லை போலிருக்கிறது.
அல்லது உணர்ந்துவிட்டாரா என்பது கூட தெரியவில்லை.
உலகம் பூராவும் ஆசான் வித்வானை வைத்து எதிர்மறை சென்சேஷனல் என்டர்டெயின்மென்ட் விமர்சனங்களை அள்ளி விளாசிக் கொண்டிருக்கும் பொழுது, ஸ்ரீ ராமாயணத்தை கற்ற ஒருவரிடம் 10 சீட்டு @RangarajPandeyR பேட்டி எடுத்தது வரவேற்கக் கூடியது.
ஆனால் வருத்தம் என்னவென்றால், இந்த உலகத்திலே எல்லோரும் திரைப்படத்தை சுற்றிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிற இடத்திலேயே ஶ்ரீ ரங்கன்ஜி அவர்களையும் எல்லோரும் அழைத்துச் சென்று விட்டார்களே!
காலத்தின் கொடுமை
ஜெய் ஸ்ரீ ராம்!
2024-ல் ராமாயணத்தின் காலக்கணிப்பு குறித்த சர்ச்சை எழுந்தபோது, @OurTemples சுவாமியை அழைத்து விவாதிக்கும் துணிச்சல் @RangarajPandeyR க்கு இருக்கவில்லை.
ஸ்ரீ ராமாயணத்தில், ஸ்ரீ ராமபிரானின் 16 கல்யாண குணங்கள் சொல்லப்பட்டுள்ளன.
இதை வால்மீகி ராமாயணத்தில் இந்த ஸ்லோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
को न्वस्मिन् साम्प्रतं लोके गुणवान् कश्च वीर्यवान् ।
धर्मज्ञश्च कृतज्ञश्च सत्यवाक्यो दृढव्रतः ॥ 2 ॥ [1]
चारित्रेण च को युक्तस्सर्वभूतेषु को हितः ।
विद्वान्कः कस्समर्थश्च कश्चैकप्रियदर्शनः ||3||
आत्मवान्को जितक्रोधो द्युतिमान्कोऽनसूयकः ।
कस्य बिभ्यति देवाश्च जातरोषस्य संयुगे ॥4॥
கோ ந்வஸ்மின் ஸாம்ப்ரதம் லோகே குணவான் கஶ்ச வீர்யவான் |
தர்மஜ்ஞஶ்ச க்ருதஜ்ஞஶ்ச ஸத்யவாக்யோ த்ருடவ்ரதஃ ||
சாரித்ரேண ச கோ யுக்தஸ்ஸர்வபூதேஷு கோ ஹித: |
வித்வான்க: கஸ்ஸமர்தஸ கஷ்செகப்ரியதர்ஷன: ||3||
ஆத்மவான்கோ ஜிதக்ரோதோ த்யுதிமான்கோன் ஆநசூயக: |
கஸ்ய பிப்யதி தேவாஷ ஜடரொஷஸ்ய ஸம்யுகே ||4||
சிறிய விளக்கம்
1) குணவான் - உயர்ந்த நல்லொழுக்கமும் நற்பண்புகளும் உடையவர்
2) வீர்யவான் - இணையற்ற வலிமையும் பராக்கிரமும் உடையவர்
3) தர்மக்ஞன் - தர்மத்தை முழுமையாக அறிந்து அதை கடைபிடிப்பவர்
4) க்ருதக்ஞன் - செய்நன்றி மறவாத்aவர்
5) சத்ய வாக்யன் - எப்பொழுதும் உண்மையை பேசுபவர்
6) த்ருட வ்ரதன் - தன் காரியங்களில் உறுதியான நம்பிக்கை உடையவர்.
7) சாரித்ரேணன் - நல்லொழுக்கம், வேத நெறிதவராத நடத்தை உடையவர்
8) ஸர்வபூத ஹிதன் - எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்பவர்
9) வித்வான் - கற்க வேண்டியவற்றை கற்றுணர்ந்தவர்
10) ஸமர்த்தன் - எவ்வித செயலையும் திறம்பட செய்து முடிக்ககூடிய ஆற்றல் படைத்தவர்
11) ப்ரிய தர்சனன் - காண்பவர் மனம் கவரும் பேரழகு உடையவர்
12) ஆத்மவான் - மனதை ஒருமுகப்படுத்தி, தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளும் உறுதி உடையவர்
13) ஜித க்ரோதன் - கோபத்தை வென்றவர்
14) த்யுதிமான் - தேஜஸ் உடையவர். பிரகாசமானவர்
15) அநசூயன் - பிறரை பார்த்து பொறாமை கொள்ளாதவர்
16) பிப்யதி தேவாஶ்ச - தேவர்களாலும் அஞ்சப்படுபவர்.
இவ்வொவொரு குணத்தைப் பற்றியும் பல காலங்கள் பேசலாம்.
இந்த 16 மட்டும்தானா என்பதில்லை. இதை பேசவே இவ்வாயுள் போதுமா என்ன?
ஜெய் ஸ்ரீ ராம்!
நான் சிறுவனாக இருந்த போது என் பெற்றோர், தாத்தா பாட்டி, சித்தி மாமா மற்றும் உற்றார் உறவினர்கள், ஒழுக்கமில்லாத ஒருவருடன் நான் பேசுவதாக சந்தேகித்தாலே, "அவர்களுடன் நமக்கு எந்த உறவும் கூடாது. அது சரியில்லை" என்று கண்டிப்பார்கள்!!
ஆனால், இன்றோ, ஒழுக்கஹீனர்களாக இருக்கும் சில யுட்யூப் பிரபலங்கள், பணத்திற்காக தன் பெற்றோர் தனிமையில் இருப்பதை பற்றி பகிரங்கமாக பேசிய இழி பிறவிகள், அவர்களை நாடே காறி துப்பிய பிறகும் கூட, தன்னையே ஏதோ சாஸ்திர வித்வான் என்றும், வேத வித்து என்றும், பெரியவர்களிடம் படித்தவர் என்றும் சொல்லிக் கொள்பவர்களும், சமூகத்தில் பெண்களுக்கு குரல் கொடுக்கிறேன் என்று தனக்கு தானே ஒரு பட்டத்தை எடுத்டுக் கொண்டு, தனக்கு பிடிக்காதவர்கள் மீது, சமூக வலைத்தள ப்ரசாரங்களை மேற்கொள்பவர்களும், இன்னும் பல பிரபலங்களும் எப்படி பகிரங்கமாக உறவு வைத்துக் கொள்கின்றனர்?!
ஒரு வேளை, அவர்கள் கொடுக்கும் 5-10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு போகின்றனரா?! அல்லது உண்மையிலேயே இவர்களுக்கு அப்படிப்பட்ட இழிபிறவிகள் வேண்டப்பட்டவர்களா, அல்லது என்ன காரணமாக இருக்கக் கூடும்?!
சமூகத்தின் இந்த அவல நிலை வேதனையை அளிக்கிறது!!
ஜெய் ஸ்ரீ ராம்!
I dont understand. People want to call Ravana a "molestor and a pervert". Agreed.
But how come people have relationship with this pervert?!!! Why would I sit across the table with such a filthy fellow who commented so bad on one's parents?
So, does optics is all that matter?!
Jai Shri Ram!
ஆனால் ஒன்று. இத்தனை நாள் ஸ்ரீ ராமாயணம் என்கிற இதிகாசத்தை கற்பனை கதை என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இன்று ஸ்ரீ ராமனத்தை மட்டும் ஏற்காமல் அதில் பல ஆராய்ச்சிகளை செய்து ராவணன் பிராமணன் தான் பிராமணன் இல்லை என்பதற்கான விவாதங்களிலே ஈடுபட்டு, அந்த ராவணன் சீதையை அபகரித்ததை ஏற்று, அதனால் அவன் ஸ்ரீ ராமபிரானின் கைகளால் கொல்லப்பட்டதை ஒத்துக் கொள்கின்றார்கள் என்கிற வரையிலே எனக்கு மிகுந்த சந்தோஷம்.
ஒரு படி ஏறி இருக்கிறார்கள்.
இன்னும் சில ஜென்மாக்களிலே அவர்கள் ஸ்ரீ ராம பக்தனாக நிச்சயம் ஆவார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.
ஏதோ கீழ் நிலையில் இருக்கும் ராவண ஆதரவாளர்கள் ஒரு படி மேலே வந்தார்கள் என்று சந்தோசப்படாமல் தேவையில்லாமல் அவர்களுடன் விவாதம் செய்து கொண்டிருப்பது வீண்.
ஜெய் ஸ்ரீ ராம்!
எனக்கு ஒன்று புரியவில்லை.
ஒரு சிலர் ராவணனை கொண்டாடினால் மற்றவர்களுக்கு ஏன் அது ஆத்திரத்தை அளிக்கிறது?
ஸ்ரீ ராமபிரானை கொண்டாடுபவர்கள் வாழ்க்கையில் ஒரு மனிதன் மனிதனாக வாழக்கூடிய பண்புகளை ஸ்ரீ ராமபிரானிடம் இருந்து கற்பதிலே ஆர்வம் காட்டுவார்கள்.
ஸ்ரீ ராக பிராணனுக்கு நேர் எதிராக இருக்கக்கூடிய ராவணனின் இழி செயல்களை பழித்து அப்படிச் செய்பவர்களை ஒதுக்கி அவர்களை புறம் தள்ளுவார்கள்.
அப்படி இருக்க, ராவணனை கொண்டாடுபவர்களை புறந்தள்ளி அவர்களை இழிவாகப் பார்த்து அப்படிப்பட்ட தரம் தாழ்ந்தவர்களை ஒழுக்கமற்றவர்களை பிறர் மனைவி விருப்பப்படுபவரை கொண்டாடுபவர்களை ஒரு பொருட்டாக கருதி இத்தனை நாள் கல்லா எதற்கு கட்டுகிறார்கள்?!
ஜெய் ஸ்ரீ ராம்!
திரைப்பட ராமாயணமும், நவீன புத்தகங்களும்: ஒரு இரட்டை நிலைப்பாடு
சினிமாக்காரர்கள் தங்களுக்குத் தேவையான நவீன அரசியலைத் திணிக்கிறார்கள் என்று மேடைகளில் கிழித்துத் தொங்கவிடுபவர்கள், தங்களை "புராணக் காவலர்களாகக்" காட்டிக் கொள்ளும் அதே ஆன்மீகப் புனைகதை எழுத்தாளர்களும் அதே நாணயத்தின் மறுபக்கம் தான் என்பதை அம்பலப்படுத்த வேண்டிய நேரம் இது!
ராவணனை 'சோசலிசவாதி' ஆக்கும் சினிமா ஒருபக்கம் என்றால், வால்மீகியை 'லிபரல் ஃபெமினிஸ்ட்' ஆக்கி ஸ்ரீராமரை ஒரு சாதாரண 'ஒடுக்குமுறையாளராக' (Oppressor) சித்தரிக்கும் ஆன்மீக எழுத்தாளர்கள் மறுபக்கம். இவர்கள் இருவருக்குமே காவியத்தின் மீதோ, தர்மத்தின் மீதோ எந்தப் பற்றும் இல்லை; எல்லாம் சுயநலம் மற்றும் வியாபாரம் மட்டுமே!
திரைப்பட இயக்குநர்கள் தங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூலுக்காகவும், குறிப்பிட்ட அரசியல் கூட்டத்தை திருப்திப்படுத்தவும் ராவணனின் வில்லத்தனத்தை 'சோசலிச' பூச்சு பூசி மறைக்கிறார்கள். இது அப்பட்டமான வியாபாரத் திணிப்பு!
ஆனால், அதை விடக் கொடுமை—தங்களை மேதைகளாகக் காட்டிக் கொள்ளும் சில ஆன்மீக எழுத்தாளர்கள், நவீன வாசகர்களைக் கவரவும், தங்களின் புத்தகங்களை விற்கவும் மூல நூலான வால்மீகி ராமாயணத்தின் ஆன்மாவையே சிதைப்பது தான். 21-ஆம் நூற்றாண்டின் பெண்ணியக் கருத்துக்களை வால்மீகியின் வாயிலாகப் பேச வைப்பது என்ன மாதிரியான அயோக்கியத்தனம்?
ராஜ தர்மத்தின் உச்சக்கட்ட தியாகத்தையும், ஸ்ரீராமரின் உள்மனப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி, அதை வெறும் "ஆண் ஆதிக்க ஒடுக்குமுறை" என்று சுருக்குவது இவர்களின் அறியாமையையும் சுயநலத்தையுமே காட்டுகிறது. சினிமாக்காரர்களை விட இந்த "ஆன்மீக போலி வியாபாரிகள்" ஆபத்தானவர்கள்!
காவியங்களை தங்களின் சுயலாபத்திற்கும், புகழுக்கும் தகுந்தாற்போல் வளைப்பதில் இருதரப்புமே ஒன்றுதான்! புராணங்களை அதன் தூய்மையோடு அணுகாமல், தங்களின் சுயநல அரசியலைத் திணிக்கும் இந்த இரட்டை நிலைப்பாட்டை வாசகர்களும் பொதுமக்களும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்!!
ஆனால் இன்றைய சூழலோ, மின்னுவதெல்லாம் பொன் என்று நினைக்கும் மனோபாவம். தன்னை விமர்சனம் செய்வதை ஏற்காதவர்கள் அடுத்தவர்களை விமர்சனம் செய்ய துணிவது 3ஆம் தர செயல்பாடு.
சினிமாகாரன் சினிமாகாரன். ஆனால் ஆன்மீகவாதி, வேத விற்பன்னர் என்று சொல்லிக் கொண்டு ஸ்ரீராமபிரானை இழித்தும் பழித்தும் அவனை அடக்கி ஆள்பவன் என்று சித்தரிப்பவனை என்னவென்று சொல்ல?!
ஜெய் ஸ்ரீ ராம்!
#Ramayana #Hypocrisy #Valmiki #SriRama #Mythology #BookReview #DoubleStandard #Frauds
மேலும் ஒன்று. இப்பொழுது வெளிவந்த ராமாயணம் என்பது முதல் பாகம் என்று அறிகிறேன்!! இன்று விமர்சனம் செய்யும் வாய்கள் இரண்டாவது பாகம் வந்ததும் என்ன சொல்ல போகின்றன் என்பதை இப்பொழுதே என்னால் ஊகிக்க முடிகிறது.
ஸ்ரீ ராமபிரான் குணங்களில் ஒன்றை பற்றி இந்த காலங்களில் பேசி இருந்தால் பலன் இருந்திருக்கும். அதை விடுத்து, சினிமா பைத்தியங்கள்....
ஜெய் ஸ்ரீ ராம்!







