Pinned Tweet
whatsapp.com/channel/0029VbD…
WhatsApp Channel
Follow செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
Anitha R Radhakrishnan retweeted
மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்போடு #WorldFisheriesDay வாழ்த்துகள்!
தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு.
அத்தகைய மீனவ மக்களுக்காக நமது #DravidianModel ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, புதிய மீன்பிடித் துறைமுகங்கள், தூண்டில் வளைவுகள், எரிபொருள் மானியம் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
ஆனால், தற்போதைய த.வெ.க. அரசோ ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது. திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதலமைச்சருக்கு மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் பற்றித் தெரியவில்லை.
மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய மீன்பிடி உரிமை, மீனவக் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காகத் தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்! அவர்களின் போராட்டத்தில் உடன் நிற்கும்!
அலைகளோடு போராடி, தமது உயிரைப் பணயம் வைத்து உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம்!
Anitha R Radhakrishnan retweeted
பொதுப்புத்தி மனப்பான்மையில் இருந்தோ சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ கண்மூடித்தனமான கருத்துருவாக்கம் செய்ய முயல்வது அல்ல பத்திரிகையாளரின் பணி!
சமூகத்தின் சிந்தனைப் போக்கே சீரழியும் நிலையிலும் அதனைச் செதுக்கி, பக்குவப்படுத்தும் பெரும் பணிதான் ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடகத்துறையின் பணி.
அதனாலேயே, மற்ற மூன்று தூண்களைவிடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஊடகங்களின் பணி கருதப்படுகிறது.
நேர்மையும், அஞ்சாமையும், உண்மையைக் கண்டறியும் ஆர்வமும் உழைப்பும் பொறுமையும் கொண்டு கடமையாற்றிடும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் #NationalPressDay வாழ்த்துகள்!
Anitha R Radhakrishnan retweeted
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
Anitha R Radhakrishnan retweeted
கழக ஆட்சிக்காலத்தில் குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்கியதை முறைகேடு என்று சொல்லி டென்டரை ரத்து செய்த இந்த Circus அரசு, இன்றைக்கு 1 Unit மின்சாரத்தை மிக மிக அதிக விலைக்கு ரூ.35 கொடுத்து வாங்க இருக்கிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இப்படி அதிக விலைக்கு மின்சாரம் வாங்குகிறது என்றால், அந்த அளவிற்கு நிர்வாகத்திறனில் inefficient ஆக இருக்கிறார் இந்த Dummy முதலமைச்சர்.
இப்படி கொள்ளை அடிக்கத்தான், ‘காற்று அடிக்கவில்லை - மழை வரவில்லை - பஞ்சாப்ல கூட இதே மாதிரி ஒரு சம்பவம் நடந்துச்சு’ என்றெல்லாம் கட்டுக்கதைகளைச் சொல்லி இத்தனை நாட்களாக இந்த ஆட்சியாளர்கள் செயற்கை மின் தட்டுப்பாட்டை உருவாக்கினார்களா?
இந்த ஊழல் deal முடிக்கத்தான் பக்கத்து மாநிலத்துக்கு பறந்து இருக்கிறாரா பஞ்ச் டயலாக் சி.எம்?
ஏற்கனவே மின் கட்டணம் என்கிற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை அடிக்கும் இந்த வெட்கங்கெட்ட சர்க்கார், அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்து அதையும் பொதுமக்கள் தலையில் கட்டப் போவதை ஒரு போதும் ஏற்க முடியாது.
விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு போய் நிறுத்தியுள்ள இந்தக் கோமாளிக்கூட்டம், இன்னும் எத்தனை தூரம் மக்களை வதைக்கவிருக்கிறது.
மாற்றம் மாற்றம் என்று சொல்லி, நாட்டின் நம்பர் 1 டுபாக்கூராக மாறி நிற்கும் இந்த முதலமைச்சருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
#Collectionகுமாரு
Anitha R Radhakrishnan retweeted
தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுப் பிரச்சனையைத் தீர்க்க முடியாமல், காற்று இல்லை, மழை இல்லை, என தினமும் கதையடித்துவிட்டுக் கொண்டிருந்தவர்கள், உண்மைகளை மறைக்க முடியாமல் இன்றைக்குத் தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத அளவில் யூனிட் ஒன்றுக்கு ரூ.35 கொடுத்து வாங்க இருக்கிறார்கள்.
திராவிட மாடல் ஆட்சியில் ரூ.10-க்குக் குறைவாக மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த அரசின் மெத்தனத்தால் இன்றைக்கு ரூ.35-க்கு வாங்கும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருக்கிறது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொன்னால் கஜானா காலி என கையை விரிப்பவர்கள், இன்று கொள்ளை விலையில் கொள்முதல் செய்து தமிழ்நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரிக்க உள்ளனர். இதுதான் தவெக அரசின் “மாற்ற” அரசியலா?
Anitha R Radhakrishnan retweeted
Solidarity with @AshutoshRanka and @SauravDassss!
The DMK stands ready to provide them with all necessary legal representation and support. ✊🏽
#CJP #GyaneshKumarMustGo
Anitha R Radhakrishnan retweeted
த.வெ.க. ஆட்சி அமைந்த நான்கே மாதங்களில் தமிழ்நாடு முதலிடம்! எதில் தெரியுமா? பணவீக்கத்திலும் விலைவாசி உயர்விலும்!
இவர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத்துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யைக் கேட்டுத்தான் ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள்.
மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம். அப்போதே சுதாரித்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
மின்துறை அமைச்சர் பஞ்சாபைக் காட்ட, முதலமைச்சரோ இலண்டன் பறந்துவிட்டார். இப்போது, கடைசி நிமிடத்தில் கதவைத் தட்டி, யூனிட்டுக்கு 35 ரூபாய் கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கப் போகிறார்களாம். கழக ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்கிய ஒப்பந்தங்களை இரத்து செய்துவிட்டு, இந்தியாவிலேயே இதுவரை எந்த மாநிலமும் வாங்காத அதிக விலைக்கு வாங்குவதுதான் இவர்கள் கொண்டு வந்துள்ள மாற்றமா?
இது யார் வீட்டுக் காசு சார்? அ.தி.மு.க.வில் இருந்து மேலும் 15 பேரை purchase செய்யப் போகிறோம் என்று வேறு வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே? அதற்குப் பணம் போதாமல்தான் மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என மக்கள் மனதிலும் கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.
குறுவை பொய்த்த நிலையில், டெல்டா விவசாயிகளின் பேச்சைக் கேட்காமல், ஜோசியரின் பேச்சைக் கேட்டு மேட்டூர் அணையையும் தவறான தேதியில் திறந்து வைத்தார்கள். 5 கோடி ரூபாய் செலவில் சாலையோரத் தடுப்புகள் அமைத்து CM ரீல்ஸ் எடுத்ததைத் தவிர அதனால் விளைந்த பயன் என்ன? இப்போது சம்பா சாகுபடியும் சாத்தியமாகுமா எனத் தெரியாமல் கடைமடை விவசாயிகள் நீரின்றிப் பரிதவிக்கிறார்கள்.
இப்படி, முன்யோசனையும் இல்லாத மூளையும் இல்லாத ஒரு மூடர் கூட்டத்திடம் சிக்கி, நம் கண்முன்னே தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. வாலில் தீப்பற்றிய குரங்குக் கூட்டம் வனமெல்லாம் தாவி, கொளுத்தி விடுவதைப் போலத்தான் த.வெ.க. அரசின் அமைச்சரவை அமைந்திருக்கிறது.
இவர்களை வழிநடத்த வேண்டிய முதலமைச்சரோ, உடுப்பி, இலண்டன், விஜயவாடா என மாதம் ஒரு ஊருக்குச் சென்று விழாவைச் சிறப்பிப்பதிலேயே குறியாக இருக்கிறார்.
மொத்தத்தில், ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை கூட அறியாத இந்த அறிவிலிகளின் அலட்சியத்தாலும் அழிச்சாட்டியத்தாலும் எதிர்வரும் மாதங்களைத் தமிழ்நாட்டு மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற அச்சம்தான் மேலோங்குகிறது.
#Collectionகுமாரு
Anitha R Radhakrishnan retweeted
பேரறிஞர் அண்ணா எனும் ஜனநாயக பெருவெளிச்சம் பிறந்த நாள் இன்று!
கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற முழக்கத்தோடு தி.மு.கழகத்தை தொடங்கி, தமிழ்நாட்டிற்கு பாதுகாப்பு வளையமிட்டவர் - அண்ணா!
தமிழ்நாடு என்று பெயர் சூட்டி - சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் தந்து - இருமொழி கொள்கையை உறுதி செய்த பேரறிஞர் அண்ணா தான், அன்றைக்கும் - இன்றைக்கும் - என்றைக்கும் தமிழ்நாட்டை ஆள்கிறார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் - தமிழ்மொழியின் ஏற்றத்துக்கும் - மாநில சுயாட்சிக்காகவும் குரல் கொடுத்த அண்ணா என்றும் நம்மை வழிநடத்துவார்.
வாழ்க அண்ணாவின் புகழ்!
#PerarignarAnna
Anitha R Radhakrishnan retweeted
தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம்!
தலைநிமிர்ந்த தமிழர்! தலைநிமிர்ந்த தமிழ்நாடு! என்ற இலட்சியத்தை நனவாக்கத் தமிழன்னையின் தனயனாகப் பிறந்து தாய்க்குப் பெயரிட்ட மாபெரும் தமிழ்க் கனவு அவர்!
பேரறிஞர் அண்ணா சுயமரியாதையில் - சமூகநீதியில் - மாநில உரிமையில் - தமிழ்ப்பற்றில் என்றென்றும் வாழ்வார்!
#RememberingAnna #CNAisOurDNA
முற்போக்கு சிந்தனையாளர்
தமிழறிஞர் கல்வியாளர்
பட்டிமன்ற நடுவர்ப் பெருமகனார்
பத்மஸ்ரீ கலைமாமணி
பேராசிரியர் திரு. சாலமன் பாப்பையா அவர்களுக்கு
எங்களது இதய அஞ்சலி...
அவரை இழந்து வாடும் குடும்பத்தார்
தமிழ் ஆர்வலர்கள், உறவினர்கள்
நண்பர்கள் அனைவருக்கும் எங்களது
ஆறுதலை உரித்தாக்குகிறோம்.
திராவிட முன்னேற்றக் கழகம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
நாள்: 09.09.2026, புதன்கிழமை.
நேரம்: மாலை 04:00 மணி.
இடம்: மாவட்ட கழக அலுவலகம்.
நம்பியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி புதிய வெள்ளநீர் கால்வாய் அமைக்க ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சருக்கு கோரிக்கை.
கழக தலைவர் திரு. @mkstalin அவர்கள், கழக இளைஞரணி செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் பல கபாடி வீரர்களை உருவாக்கிய கிறிஸ்டோபார் ராஜன் அவர்கள் நினைவாக திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி மெஞ்ஞானபுரத்தில் தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபாடி கழகம் மற்றும் ஜாண் தாமஸ் கபாடி கழகம் இணைந்து நடத்தும் அகில இந்திய ‘ஏ” கிரேடு ஆண்களுக்கான மின்னொளி கபாடி போட்டியை துவங்கி வைக்கும் நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள்ளுடன் கலந்து கொண்டோம்.
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டோம்.
ஆறுமுகநேரி மற்றும் வீரபாண்டியன்பட்டினத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க ஒன்றிய சாலை போக்குவரத்து - நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கு கோரிக்கை.
ஆகஸ்ட் 7 முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவு நாளில் அவரது திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்துவீர்.
Anitha R Radhakrishnan retweeted
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது: ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்!
#தொடைநடுங்கி_அரசு




























