AIADMK Updates - SayYEStoWomenSafety&AIADMK retweeted
Honourable Prime Minister Thiru. @narendramodi Avl has always placed India’s sovereignty and national security above all else, and through decisive actions such as #OperationSindoor and other bold measures, has ensured the safety and security of our nation.
The remarks made by Congress President Mallikarjun Kharge about the Honourable Prime Minister of India, Thiru. Narendra Modi Avl, are strongly condemnable.
The Honourable Prime Minister stands today as a defining identity of India on the global stage. Using such language against him reflects the mindset of the Congress party.
Does Thiru. @mkstalin agree with the remarks made by his alliance partner,
Mr. Kharge? Do these statements reflect
M. K. Stalin’s own views as well?
As someone who has taken an oath under the Constitution, Thiru. Stalin has a duty to answer these questions before the people of this nation.
@kharge
AIADMK Updates - SayYEStoWomenSafety&AIADMK retweeted
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
கஞ்சா போதை,
பாலியல் வன்கொடுமை,
கொலை முயற்சி,
இது தான் திமுக ஆட்சிக்காலம்!
படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலின் மாடல்.
இந்த மாடல் தான் மீண்டும் வரவேண்டும் என்று @mkstalin துடித்துக்கொண்டு இருக்கிறார்.
நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன்-
இத்தனை நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்த ஸ்டாலின், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதை பற்றி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசினாரா?
தன் ஆட்சிக்கான Accountability இல்லாத, என்ன நடக்கிறது என்று Idea-வே இல்லாத ஒரு Dummy முதல்வர் தமிழ்நாட்டை ஆண்டது போதும்.
ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கேள்வி ஒன்று ஒன்று தான்-
தமிழகம் வாழ வேண்டுமா?
ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆகவேண்டும்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
AIADMK Updates - SayYEStoWomenSafety&AIADMK retweeted
#வேளச்சேரி, #சைதாப்பேட்டை தொகுதிகளில் கழகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டேன்.
ஆட்சிக்கு வந்தால் “சென்னையில் என்றும் தண்ணீர் தேங்காது” என்றார்
திரு. @mkstalin.
ஆனால், உண்மை என்ன?
“ஸ்டாலின் தான் வந்தாரு; நீச்சல் அடிக்க விட்டாரு” என்று ஒரு பெண்மணி சொன்னது தான் உண்மை நிலை.
இப்படிப்பட்ட ஆட்சி,
ஊழல் ஆட்சி ,
கமிஷன் ஆட்சி,
தொடர வேண்டுமா ?
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும் !
#Vote4AIADMK 🌱
@AIADMKOfficial
AIADMK Updates - SayYEStoWomenSafety&AIADMK retweeted
The decision of the Union Government under the leadership of Hon’ble Prime Minister Thiru. @narendramodi Avl to reduce excise duty on petrol and diesel by ₹10 is a timely and welcome step.
At a time when the ongoing conflict in the Middle East, Iran and Israel has severely disrupted global oil supplies and driven crude prices sharply upward, this move reflects a clear commitment to protect the Indian people from international economic shocks. 
The reduction of excise duty on petrol from ₹13 to ₹3 and the complete removal of duty on diesel demonstrates the Centre’s willingness to absorb financial burden rather than pass it on to citizens. 
@AIADMKOfficial had already urged the Union Government to take proactive measures to safeguard the Indian economy and the common people in light of the escalating geopolitical tensions in the Middle East, and we welcome this responsible action taken by the Government of India in that regard.
This decisive action shows that such concerns have been heard and acted upon in the larger national interest.
I welcome this people-centric decision and appreciate the Union Government for prioritizing economic stability and public welfare during a period of global uncertainty.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்பட்ட உற்பத்தி வரியை ₹10 அளவுக்கு குறைத்து மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசு அறிவித்திருப்பது காலத்திற்கேற்ற, வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.
இரான், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை பாதித்து, கச்சா எண்ணெய் விலையை உயர்ந்துள்ள இந்த சூழலில், மத்திய அரசின் இந்த தீர்க்கமான முடிவு இந்திய மக்களை சர்வதேச பொருளாதார சிக்கல்களில் இருந்து பாதுகாக்கும் உறுதியை வெளிப்படுத்துகிறது.
பெட்ரோலுக்கு விதிக்கப்பட்ட உற்பத்தி வரியை ₹13 இலிருந்து ₹3 ஆக குறைத்ததும், டீசலுக்கு விதிக்கப்பட்ட வரியை முழுமையாக நீக்கியதும், மக்களிடம் சுமையை ஏற்றாமல், அதை தாமே ஏற்கும் மத்திய அரசின் மனப்பாங்கை காட்டுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் உலக அரசியல் பதற்றங்களையொட்டி, இந்திய பொருளாதாரத்தையும் பொதுமக்களையும் பாதுகாக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று @AIADMKOfficial ஏற்கனவே வலியுறுத்தியிருந்த நிலையில்,
அக்கோரிக்கைக்கு இணங்க, பொருளாதார சமநிலையையும், மக்கள் நலனையும் கருத்திற்கொண்டு மத்திய அரசு எடுத்துள்ள இந்த பொறுப்பான நடவடிக்கையினை அஇஅதிமுக சார்பில் நான் மனதார வரவேற்கிறேன்.
AIADMK Updates - SayYEStoWomenSafety&AIADMK retweeted
சீட்டு பங்கீட்டை பார்த்தால் டெல்லியும் மிரட்டல..பல்லியும் மிரட்டல..
எடப்பாடி இன்னொரு ஜெயலலிதா ✍️
AIADMK Updates - SayYEStoWomenSafety&AIADMK retweeted
தமிழக மக்களுக்கு வணக்கம்.
கடந்த 5 ஆண்டுகளாக, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், திமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு சீர்கேடுகள் குறித்து நான் அறிக்கைகள், சமூக ஊடகங்கள், செய்தியாளர் சந்திப்புகள், சட்டமன்ற உரைகள் வாயிலாக தொடர்ந்து சுட்டிக்காட்டி, உரிய முறையில் ஆட்சியை நடத்த வலியுறுத்தி வந்துள்ளேன்.
ஆனால், பொம்மை முதல்வராக இருந்த
திரு.@mkstalin , அவர் நடத்திய விடியா திமுக காட்டாட்சியோ, திருந்தியதாகவும் தெரியவில்லை; எதையும் திருத்தியதாகவும் தெரியவில்லை!
எனவே தான் இம்முறை உங்களை நோக்கி இந்த பதிவினை வெளியிடுகிறேன்.
திருநெல்வேலி அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், கடந்த 6 நாட்களுக்கு முன்பு மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று காலை வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், நேற்றைய தினம் அந்த விவசாயியின் 23 வயது மகள் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இதைத் தொடர்ந்து உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட, 3 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி தமிழ்நாட்டை நிறுத்தியுள்ள இடம் இது தான்.
இங்கே குற்றங்கள் தடுக்கப்படாது,
குற்றவாளிகள் மீது நடவடிக்கை இருக்காது,
அதுவும் குற்றவாளிகளுக்கு ஆளுங்கட்சி தொடர்பு இருந்தால் சொல்லவே வேண்டாம்!
ஊருக்கே சமூகநீதி பாடமெடுக்கும் திமுக ஆட்சியில், பட்டியலின மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு வேங்கைவயல் முதல் நாங்குநேரி பெரும்பத்து வரை பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ள நிலையில், தற்போது இச்செய்தியும் சாட்சியாக உள்ளது!
விளிம்புநிலை மக்களின் குரலாக தன்னைக் காட்டிக்கொள்ளும் திரு. திருமாவளவன் போன்றோர், இதைப் பற்றி ஏன் பேசவில்லை? ஏன் குரல் கொடுக்கவில்லை? தங்கள் சீட்டுகளுக்காக திமுக-விடம் பேசுபவர்கள், இதுபோன்ற உண்மையான மக்கள் பிரச்சனைகளையும் பேசலாமே?
@thirumaofficial
இது தான் திமுக-வின் கேடுகெட்ட ஆட்சி!
இது தான் திமுக கூட்டணி கட்சிகளின் லட்சணம்!
தேர்தல் விதிகள் அமலில் வந்துவிட்டதை உணர்ந்து, திமுக அரசு காவல்துறை போலவே செயல்படாமல், தமிழக காவல்துறைக்கு இருக்கும் நற்பெயரைக் காப்பாற்றும் வகையில் செயல்பட்டு, குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
மக்களே- இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு உங்களிடம் தான் இருக்கிறது!
நான் கேட்கப்போவது,
உங்கள் பாதுகாப்பிற்கான உத்தரவாதம்.
இத்தனை ஆண்டுகள் உங்கள் மனதில் இருந்துகொண்டிருந்த அச்சத்தை உடைத்தெறிவதற்கான ஒரே வழி.
தமிழகம் வாழ வேண்டும் என்றால்,
திமுக வீழ வேண்டும்!
செய்வீர்களா?
@AIADMKOfficial
AIADMK Updates - SayYEStoWomenSafety&AIADMK retweeted
பெண்களுக்கு பாதுகாப்பான அரசு திமுக அரசு..
வெல்லும் தமிழ்ப்பெண்கள்...
பெண்களுக்கு அதிகாரம்... என மேடைக்கு மேடை முழங்கும் திமுகவின் போலி முகத்திரை இன்று ஒரு பெண் எழுத்தாளரின் கடிதத்தால் கிழிந்து தொங்குகிறது!
ஆட்சியின் அவலங்களை விமர்சித்தால்,
மாற்றுக் கருத்தை சொன்னால் ஒரு பெண்ணை 'விபச்சாரி' என்று அழைப்பதுதான் உங்களின் திராவிட மாடலா @mkstalin சார்?
மத்திய அரசை கூட தைரியமாக விமர்சிக்க முடிந்த ஒரு பெண்ணால், தமிழ்நாட்டில் திமுக அரசை மட்டும் விமர்சிக்க முடியவில்லை என்றால்,
எங்கே போனது அந்த கருத்து சுதந்திரம்?
இன்று மீனா கந்தசாமி...
நாளை நம் வீட்டுப் பெண்கள்!
அதிகார திமிரால் ஒரு பெண்ணின் மாண்பை சிதைக்கும் இந்த ஸ்டாலின் மாடல் அரசின் அராஜக கும்பலுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டாமா?
மக்களே சிந்திப்பீர்!
#Packupstalin
AIADMK Updates - SayYEStoWomenSafety&AIADMK retweeted
டெல்லியில் சென்று கூட்டணி பேசுகிறார்கள் என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.
2011 தேர்தலுக்காக, டெல்லியில் தவமாய் தவமிருந்து, காங்கிரஸ் தலைமைக்காக 6 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து, கூட்டணி பேசியவர் தானே உங்கள் தந்தை கருணாநிதியும் நீங்களும்?
உங்கள் குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்றதும், மகளுக்கு “திகார்” என்று காங்கிரஸ் சொல்ல, “பகீர்” என்று பதறிப் போய், வயதான காலத்திலும் டெல்லிக்கு பறந்து போய், தீர்ப்புக்கு சில நிமிடங்கள் முன் சோனியா காந்தியை சந்தித்தவர் தானே கருணாநிதி?
அறிவாலய மேல் மாடி ரெய்டை பார்த்து பயந்து போய் கீழ் மாடியில் 63 நாயன்மார்களை கொடுக்கிறேன் என்று கூட்டணி பேசியவர் தானே உங்கள் தந்தை?
தென் தமிழக மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது, மக்கள் எக்கேடாய் போனால் என்ன? என்று டெல்லியில் இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருந்தவர் தானே நீங்கள் ? நீங்கள் எல்லாம் அடுத்தவர்களைப் பார்த்து பேச ஏதாவது அருகதை இருக்கிறதா?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் இல்லத்திற்கு மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் நேரில் வந்து விருந்தில் பங்கேற்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியபோதெல்லாம் திரு. ஸ்டாலின் கோமாவில் இருந்தாரா என்ன ?
எங்கள் கூட்டணியை பொறுத்தவரை நாங்கள் பரஸ்பர நல்ல நட்போடு, மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
“டெல்லியின் சம்மதம் பெற்று” என்று ஸ்டாலின் சொல்வாரானால்,
“ஸ்டாலின் வீட்டிற்கு வந்த ப. சிதம்பரம், UPA ஆட்சியில் திமுக செய்த ஊழல்கள் குறித்த ஆதாரங்களை காட்டி மிரட்டியதில் பணிந்து தான் திமுக காங்கிரஸ் உடன் கூட்டணியை உறுதி செய்தது” என்று நாங்கள் சொல்லலாமா?
ஸ்டாலின் பேசுவதை எல்லாம் பார்த்தால் ஒரு கதை தான் நினைவுக்கு வருகிறது…
ஒருவன் சந்தையில் ஒரு குதிரையை வாங்கினான். குதிரையை விற்றவன் “இது அற்புதமான குதிரை. ஓடும் நீரைக் கூட வேகமாக கடந்து சென்று கரையைத் தொடும்” என்றான். அந்த வியாபாரி பேச்சை நம்பி குதிரையை வாங்கி , நீரில் விட்ட பிறகே தெரிந்தது, அது மண் குதிரை என்று. மண் குதிரை கரைந்துவிட, நல்வாய்ப்பாக நீச்சல் தெரிந்ததால் எப்படியோ தப்பித்து வந்தான். தப்பித்து வந்த கையோடு , நனைந்து கொண்டே கோபத்தின் உச்சியில் சந்தைக்கு சென்ற அவனைப் பார்த்து அந்த வியாபாரி , “இன்னொரு குதிரை வேண்டுமா?” என்று கேட்டானாம்.
அந்த வியாபாரி போல தான் @mkstalin. இவர் சொன்ன விடியல் என்ற வார்த்தையை நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றி, மண் குதிரை ஆட்சியை கொடுத்துவிட்டு, மக்களை நட்டாற்றில் தத்தளிக்க விட்டது போதாது என்று, மீண்டும் அதே குதிரையை 2.0 என கூறி கூவி கூவி விற்கப் பார்க்கிறார்.
ஐயோ… தமிழக மக்கள் பாவமில்லையா ?
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
AIADMK Updates - SayYEStoWomenSafety&AIADMK retweeted
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் உடல் நசுங்கி, 7-ம் வகுப்பு மாணவர் மோகித் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
தங்கள் நிர்வாகத் திறமையின்மையால், அலட்சியப் போக்கால், ஒரு பிஞ்சு உயிர் பறிபோய் இருப்பதற்கு என்ன பதில் வைத்துள்ளார்கள் இந்த பொம்மை முதல்வரும், அவரின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும்?
பள்ளிகளின் கட்டுமானத் தரத்தைக் கூட உறுதி செய்ய முடியாத ஒரு ஆட்சி, மாணவர்கள் உயிர் விஷயத்தில் கூட இவ்வளவு மெத்தனமாக இருப்பதை எப்படி Justify செய்வார்கள்?
#DMKFailsTN
AIADMK Updates - SayYEStoWomenSafety&AIADMK retweeted
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனத் தலைவர், அன்புச் சகோதரர் மறைந்த கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் மூத்த சகோதரியான
டாக்டர். D. விஜயலட்சுமி அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
அவரை இழந்து வாடும் தேமுதிக பொதுச்செயலாளர், அன்புச் சகோதரி திருமதி. @PremallathaDmdk அவர்கள் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு, மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@dmdkparty2005
AIADMK Updates - SayYEStoWomenSafety&AIADMK retweeted
#திருச்செந்தூர் தொகுதியில் கூடிய கூட்டம் தலையா? கடல் அலையா? என கேட்கும் அளவிற்கு மக்களின் ஆர்பரிப்பு இருந்தது.
தமிழ்நாடு விரோத திமுக-விற்கு எதிரான மக்களின் #சூரசம்ஹாரம் தான் 2026 சட்டமன்றத் தேர்தல்!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
#ByeByeStalin
@AIADMKOfficial
AIADMK Updates - SayYEStoWomenSafety&AIADMK retweeted
அதிமுக ஐ.டி.விங் ஆலோசனை கூட்டம்...
#chennai | #aiadmk | #aiadmknews | #aiadmkitwing | #meeting | #newsj | #newsjtamil
@AIADMKOfficial|@EPSTamilNadu|@SPVelumanicbe|
@PThangamanioffl|@CVShanmugamofl | @vivekanbarasan
AIADMK Updates - SayYEStoWomenSafety&AIADMK retweeted
திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் என்பது இவர்களின் அராஜகத்திற்கு இடையில் தான் நடைபெறும் என்பது நாடறிந்த உண்மை. ஆனால், அதற்காக, எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவிற்கு திமுக-வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
AIADMK Updates - SayYEStoWomenSafety&AIADMK retweeted
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் @AIADMKOfficial நிர்வாகி
திரு. முத்துபாலகிருஷ்ணன் அவர்களை, திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இக்கொலைக்கு உள்ளாட்சி தேர்தல் போட்டியும் ஒரு காரணம் என்ன செய்திகள் வருகின்றன.
இதையும் "தனிப்பட்ட கொலை" என்ற அளவோடு தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசு கடந்து செல்ல முனையுமா?
திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் என்பது இவர்களின் அராஜகத்திற்கு இடையில் தான் நடைபெறும் என்பது நாடறிந்த உண்மை. ஆனால், அதற்காக, எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவிற்கு திமுக-வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?
சட்டம் ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துவிட்டு, அதை தட்டிக் கேட்கும் இடத்தில் இருக்கும் எதிர்க்கட்சியினரின் உயிருக்கே பாதுகாப்பற்ற நிலையில், தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளியுள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
முத்துபாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புள்ள திமுக பிரமுகர் கருணாகரன் உள்ளிட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@mkstalin @CMOTamilnadu
AIADMK Updates - SayYEStoWomenSafety&AIADMK retweeted
ஆபாசத்தை ஏவி, அஇஅதிமுக-விடம் வாங்கிக் கட்டிக் கொண்டதும், அடுத்த ஆயுதமான அவதூறை கையில் எடுத்துள்ளனர் திமுக கொத்தடிமைகள்.
ஏதோ இப்போது தான் பிரசாத் நியமிக்கப்பட்டதாக சொல்லி ஒரு NARRATIVE கட்டமைக்க முயல்கிறது திமுக & Co. 2015 முதலே ஐடி விங் பொறுப்பில் இருந்து வந்த பிரசாத், குற்றச்சாட்டு எழுந்ததுமே மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டுவிட்டார். உங்களைப் போல் அனுதாபி என்றோ, தற்காலிக நீக்கம் என்றோ உருட்டுபவர்கள் அல்ல நாங்கள். தவறு செய்பவர்களுக்கு அஇஅதிமுக-வில் இடம் இல்லை!
ஆட்சி என்ற பெயரில் நாள்தோறும் மக்களை பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த விடியா ஆட்சியின் அவலங்களைக் கண்டு மக்களே முகம் சுளிப்பது பொறுக்காமல், அதனை மறைக்கவும், மடைமாற்றவும் வேண்டும் என கண்ட அவதூறுகளை பரப்பி வரும் திமுக ஐடி விங், தற்போது B-Grade பத்திரிகைகளை மிஞ்சி விட்டது.
"எதைத் தின்றால் பித்தம் தெளியும்" என்பதைப் போல, "எதைக் கோர்த்தால் அஇஅதிமுக மீது பழி விழும்" என பொய் கதைகளைப் புனைந்து கொண்டிருக்கும் கொத்தடிமைகளே.. நிரூபிக்கப்பட்ட உண்மை என்ன தெரியுமா? சர்வதேச DRUG MAFIA தலைவன், திமுக அயலக அணி நிர்வாகி ஜாபர் சாதிக்!
அந்த ஜாபர் சாதிக்குடன் முதல்வரும், வாரிசு துணையானவரும் வரிசையாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டதும் நாடறிந்த உண்மை!
உதயமானவருக்கு நெருக்கான குட்டி மன்னரான மாவட்டம் ஒருவருக்கு நெருக்கமான ஜாபர் சாதிக், குழந்தைகளுக்கான பால் டப்பா மூலம் 2000 கிலோ மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் கடத்திய Drug Mafia தலைவன் ஜாபர் சாதிக்கிற்கும், உதயமான ஒருவரின் பவுண்டேஷனுக்கும் இருந்த பணப் பரிவர்த்தனைகள் குறித்து, யூட்யூபர்கள் யாரும் சொல்லவில்லை; தேசிய மீடியாவே பேசியதே... அதற்கு என்ன பதில் வைத்துள்ளது திமுக ஐடி விங்?
போதைப்பொருள் MAFIA-வுக்கு அடைக்கலம் கொடுத்து, பொறுப்பு வழங்கிக் கொண்டே, சட்டம் ஒழுங்கு தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதாக சினிமா வசனம் பேசுகிறார் பொம்மை முதல்வர்.
#DMKFailsTN
AIADMK Updates - SayYEStoWomenSafety&AIADMK retweeted
உங்கள் அபிலாஷைகளும், நப்பாசைகளும் சேர்ந்து புனையப்பட்ட கதை போலவே, நாங்களும் 10 கதைகளை சொல்ல முடியும்.
திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகச் சொல்லியும் மறுத்ததால், துரைமுருகன் நீக்கப்படுகிறாரா? என வீடியோவை வெளியிட ரொம்ப நேரமெல்லாம் ஆகாது.
அண்ணன் திரு. @SPVelumanicbe அவர்கள் கழகத்தின் ஆணிவேர்களில் ஒருவர். அவரின் பெயரைச் சொல்லி நீங்கள் இட்டுக்கட்டும் Fairytale கதைகளை நாளை பிறக்கப்போகும் குழந்தை கூட நம்பாது!
youtu.be/jV1yqO7SUzg?si=T0Zk…
AIADMK Updates - SayYEStoWomenSafety&AIADMK retweeted
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் திராவிடத்தின் உறைவிடமாகவே திகழும்!
பெரியாரையே இழிவுபடுத்திய கருணாநிதியின் திமுக, அஇஅதிமுக-வுக்கு பாடமெடுக்க எந்த அருகதையும் இல்லை!
அவலமே உருவான ஒரு ஆட்சியை நடத்தும் ஸ்டாலினின் திமுக, அதைப்பற்றி நாங்கள் நாள்தோறும் தெரிவிக்கும் மக்களின் குரலான விமர்சனங்ககளுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், "Take Diversion" என்ற தனது வழக்கமான பாணியில், முருக பக்தர்கள் மாநாட்டை வைத்து, அஇஅதிமுக மீது அவதூறான கருத்துகளை அள்ளித் தெளித்து, மக்களின் கவனத்தை திசைதிருப்பிவிடலாம் என எண்ணுகிறது.
திமுகவின் அமைச்சர் அடிபொடிகள் வரிசையாக செய்தியாளர் சந்திப்பு கொடுக்க, அறிவாலய Gatekeeper ஆர்.எஸ்.பாரதி பெயரில் வழக்கம் போலவே அறிக்கை வாந்தியையும் கக்கியுள்ளது திமுக.
"திராவிடத்தை அழிக்க முருகா வா" என்று ஒட்டப்பட்ட போஸ்டர்களால் திராவிடம் அழிந்து விடுமா? திராவிடம் என்ற கொள்கையைத் தான் யாராவது அழித்துவிட முடியுமா?
திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலான, ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டை செலுத்திக் கொண்டிருக்கும் உயரிய கொள்கை நெறி! மக்களுக்கான ஒரு கொள்கையை யாரால் வீழ்த்த முடியும்?
திமுக-வின் இந்த விஷமப் பிரச்சாரம், நம் திராவிடக் கொள்கையையே Insecure-ஆக காட்டக் கூடிய ஒரு மோசமான Narrative. இதை செய்வதற்கு திமுக வெட்கித் தலைகுனிய வேண்டும்.
அரசியல் செய்கிறோம் என்ற பெயரில் திராவிடத்தை வலுவற்ற கொள்கை போல கட்டமைக்க முயலும் திமுக-வின் சதிச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.
பெரியார், அண்ணாவின் வாழ்வியல் உரத்தில் தழைத்தோங்கி நிற்கும் கொள்கையை, ஒரு மாநாடு சிதைத்து விடுமா என்ன? இல்லை, அப்படி நடக்க தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விட்டுவிடுமா?
திராவிடக் கொள்கை எங்கள் குருதியில் கலந்த ஒன்று. "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்ற பேரறிஞர் அண்ணாவின் நெறிப்படி வாழ்பவர்கள் நாங்கள்.
ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கடவுள் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கக் கூடிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதால் தான், கடவுள் பக்தியை பறைசாற்ற, அமைப்பு ரீதியாக நடத்தப்பட்ட மாநாட்டிற்கு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள் ஜனநாயக ரீதியாக வாழ்த்து தெரிவித்தார்கள்.
எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், தனிப்பட்ட முறையில் முருக பக்தர்கள் என்ற அடிப்படையிலேயே அந்த மாநாட்டில் கலந்துகொண்டனரே தவிர எந்தவித அரசியல் நோக்கத்திலும் அல்ல. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ, உறுதிமொழிகளையோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த யாரும் ஏற்கவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்ள விழைகிறேன்.
அதே போல், அந்த மாநாட்டில், தந்தைப் பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட வீடியோ என்பது துளியும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சர்த்தில் எங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
உண்மையில் அப்படிப்பட்ட வீடியோ வெளியிட்டதாக எங்கள் கவனத்திற்கு வரவோ, நாங்கள் யாரும் பார்க்கவோ இல்லை. மாநாடு முடித்து வந்த பிறகே இதுபற்றிய செய்திகள் வாயிலாக தான் நாங்களும் அறிந்து கொண்டோம்.
ஜாதியின் பெயரால் மக்கள் பிரிவுண்டு இருக்க, அந்த ஜாதிக்கு மூலமாக கடவுளை வைத்து சிலர் அரசியல் செய்ய, அந்த அரசியலை எதிர்க்கவே "கடவுள் மறுப்பு" கொள்கையை ஆயுதமாக ஏந்தினார் தந்தைப் பெரியார். பெரியாரின் கோபம் எப்போதும் கடவுள் மீது அல்ல; மாறாக, கடவுளின் பெயரைச் சொல்லி சிலரின் தவறான அரசியலால் ஏற்பட்ட கொடும் ஜாதிய பேதங்கள் மீது தான்!
"நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன்; பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்க மாட்டேன்" என அரசையும் மதத்தையும் தெளிவாக வேறுபடுத்தி, Secularist அரசியலை முன்னெடுத்தவர், நாங்கள் பெயரில் மட்டுமல்ல, எங்கள் நெஞ்சங்களிலும் தாங்கும் இதயதெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
பெரியார், அண்ணா ஆகியோரின் கொள்கைப் பார்வையைத் தன்னகத்தே கொண்டு, வழுவாமல் இயங்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, அவதூறும் ஆபாசமும் மட்டுமே கொள்கையாகக் கொண்ட திமுக பாடமெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதேபோல், கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி அவர்கள், தனது தொகுதிக்கு உட்பட்ட மிகவும் பழமைவாய்ந்த, மதிப்பிற்குரிய பேரூர் ஆதீனத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி அளிக்கப்பட்ட அழைப்பினை ஏற்று கலந்துகொண்டதாகவும், ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்துகொள்ளவில்லை எனவும் செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்திவிட்டார்.
AIADMK Updates - SayYEStoWomenSafety&AIADMK retweeted
கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு
மாநில, மண்டல நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், 27.06.2025, 28.06.2025 ஆகிய நாட்களில் நடைபெறும்.
-தலைமைக் கழக அறிவிப்பு
@EPSTamilNadu
@AIADMKOfficial @AIADMKITWINGOFL
AIADMK Updates - SayYEStoWomenSafety&AIADMK retweeted
காஞ்சிபுரத்தில் 11-ம் வகுப்பு மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக செய்திகள் வருகின்றன.
தனது ஆட்சியில் தொடரும் பெண்களுக்கு எதிரான கொடூரங்களுக்கு இதுவரை வாய் திறக்காத முதல்வர் @mkstalin.
பெண்கள் பாதுகாப்பை Compromise செய்துள்ள இந்த திமுக அரசு, இதற்கான தண்டனையை மக்களிடம் 2026 தேர்தல் வாயிலாக நிச்சயம் பெறும்!
#SaveOurDaughters
AIADMK Updates - SayYEStoWomenSafety&AIADMK retweeted
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
@AIADMKITWINGOFL சார்பில்,
அனைத்து கழக மாவட்டங்களிலும் நடைபெற்ற
#இரத்தத்தின்_இரத்தமே
மாபெரும் இரத்த தான முகாம்கள்
குறித்த Reports மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் மேலான பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.


























