Bangalore Tamil Pasanga ™ (@BTP_Offl) header
Bangalore Tamil Pasanga ™ (@BTP_Offl) profile picture

Bangalore Tamil Pasanga Tamilaga Vettri Kazhagam - Official Fan Page Of #Thalapathy Vijay From Karnataka State Upcoming Movie #JanaNayagan - 2026 🚩🏆

Bengaluru, India
Joined April 2016
Photo by Bangalore Tamil Pasanga ™ (@BTP_Offl)Photo by Bangalore Tamil Pasanga ™ (@BTP_Offl)Photo by Bangalore Tamil Pasanga ™ (@BTP_Offl)Photo by Bangalore Tamil Pasanga ™ (@BTP_Offl)
Bangalore Tamil Pasanga ™ retweeted
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! #CMJosephVijay
538
5,236
245
19,137
500,717
Bangalore Tamil Pasanga ™ retweeted
தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து காவிரி நீர் கிடைக்க வலியுறுத்தியும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்திடும் வகையில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்தை ஒன்றிய அரசு அதிகாரிகள் பார்வையிட்டது சரியல்ல எனத் தெரிவித்தும், கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி எவ்வித சட்டபூர்வ/நிர்வாக அனுமதியை வழங்கக்கூடாது என வலியுறுத்தியும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் கடிதம். #CMJosephVijay
24
448
10
1,443
56,652
Bangalore Tamil Pasanga ™ retweeted
மாணாக்கர்களின் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம் என்ற உயர்ந்த நோக்கத்தில், கல்லூரி மாணாக்கர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்த ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச் செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு. #CMJosephVijay‌
46
726
26
2,104
51,983
Bangalore Tamil Pasanga ™ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (6.11.2026) தலைமைச் செயலகத்தில், நபார்டு தலைவர் முனைவர் வி. ஷாஜி கிருஷ்ணன் அவர்கள் சந்தித்துப் பேசினார். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay was called on by Dr. V. Shaji Krishnan, Chairman of NABARD, at the Secretariat today (06.11.2026). #CMJosephVijay
25
546
2
2,564
58,351
Bangalore Tamil Pasanga ™ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (6.11.2026) தலைமைச் செயலகத்தில், விண்வெளித் துறை செயலாளரும், விண்வெளி ஆணையத்தின் தலைவரும், இஸ்ரோ தலைவருமான டாக்டர் வி. நாராயணன் அவர்கள் சந்தித்துப் பேசினார். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay was called on by Dr. V. Narayanan, Secretary, Department of Space, Chairman, Space Commission, and Chairman, ISRO, at the Secretariat today (06.11.2026). #CMJosephVijay
36
816
5
4,032
73,170
Bangalore Tamil Pasanga ™ retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது. தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா? தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது. மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள். பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
688
6,048
312
15,471
955,477
Bangalore Tamil Pasanga ™ retweeted
With @ysjagan Garu and Thiru @TVKVijayHQ at a wedding last night
229
2,675
45
19,346
348,996
Bangalore Tamil Pasanga ™ retweeted
😁
6
268
2,093
15,020
Bangalore Tamil Pasanga ™ retweeted
CM Vijay - Jagan - Adani & Shoba Amma 😊
9
350
1
2,054
20,459
Bangalore Tamil Pasanga ™ retweeted
Shoba Amma & Thalapathy 🫂🫶
18
713
5
4,593
85,128
Bangalore Tamil Pasanga ™ retweeted
Best video in internet today 🤩
8
1,014
5
5,459
59,742
Bangalore Tamil Pasanga ™ retweeted
சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று படகு என்ஜின் பழுதடைந்து ஆந்திரப் பிரதேச மாநில கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
38
401
7
1,291
56,672
Bangalore Tamil Pasanga ™ retweeted
CM Vijay & @ysjagan 🤝
138
502
46
2,543
104,980
Bangalore Tamil Pasanga ™ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (4.11.2026) தலைமைச் செயலகத்தில், கரும்பு விவசாயிகளின் நலன் காத்திடும் வகையில், சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தபடி, கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.709.50-யை விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு விடுவிப்பதைத் தொடங்கி வைக்கும் விதமாக, 3 கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகைக்கான ஆணைகளை வழங்கினார். The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (04.11.2026), handed over orders sanctioning the special incentive of Rs. 709.50 per tonne to 3 sugarcane farmers, marking the commencement of the release of the special incentive amount directly into farmers’ bank accounts, as announced under Rule 110 of the Tamil Nadu Legislative Assembly, with a view to safeguarding the welfare of sugarcane farmers. #CMJosephVijay
12
431
1
1,940
37,876
Bangalore Tamil Pasanga ™ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (4.11.2026) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் சென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 1,003 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 643 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கரூர் மாவட்டம், கொளந்தாகவுண்டனூர் திட்டப் பகுதியில் 17 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 125 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியவற்றைத் திறந்து வைத்தார். The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (04.11.2026), inaugurated 643 apartment units and commercial complexes constructed at various locations in Chennai District by the Tamil Nadu Housing Board, under the Housing and Urban Development Department, at a cost of Rs. 1,003.97 crore, and 125 apartment units constructed by the Tamil Nadu Urban Habitat Development Board in the Kolanthagoundanur Scheme Area of Karur District, at a cost of Rs. 17.56 crore. #CMJosephVijay
11
304
3
1,095
25,464
Bangalore Tamil Pasanga ™ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (4.11.2026) தலைமைச் செயலகத்தில், தருமபுரி மாவட்டம், சோகத்தூரில் 19 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தைத் திறந்து வைத்தார். The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (04.11.2026) inaugurated the Integrated Government Cocoon Market Complex, constructed with modern facilities at a cost of Rs. 19.20 crore at Sogathur in Dharmapuri District. #CMJosephVijay
8
254
3
831
23,349
Bangalore Tamil Pasanga ™ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (4.11.2026) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதி – II ல் 15 கோடியே 23 இலட்சம் ரூபாய் செலவில் 17.95 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள வேளாண்மை உற்பத்தி சார்ந்த புதிய தொழிற்பேட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டம், நாயனூரில் 5 கோடியே 67 இலட்சம் ரூபாய் செலவில் 29.44 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொழிற்பேட்டை, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநரகம் சார்பில் திருப்பூர் மாவட்டம், முதலிபாளையத்தில் 13 கோடியே 95 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கயிறு குழுமத்திற்கான பொது வசதி மையம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார். The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (04.11.2026), inaugurated a new agro-produce-based industrial estate established over 17.95 acres at Perundurai Part-II in Erode District, at a cost of Rs. 15.23 crore, and a new industrial estate established over 29.44 acres at Nayanur in Viluppuram District, at a cost of Rs. 5.67 crore, by the Tamil Nadu Small Industries Development Corporation Limited (TANSIDCO), under the Department of Micro, Small and Medium Enterprises. The Hon’ble Chief Minister also inaugurated a Common Facility Centre for the Coir Cluster established at Mudalipalayam in Tiruppur District, at a cost of Rs. 13.95 crore, by the Commissionerate of Industries and Commerce. #CMJosephVijay
8
262
3
804
10,613
Bangalore Tamil Pasanga ™ retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (4.11.2026) தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் 8 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 8 கோடியே 41 இலட்சம் ரூபாய் செலவிலும் என மொத்தம் 17 கோடியே 31 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தார். The Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru.C.Joseph Vijay, today (04.11.2026), inaugurated the newly constructed buildings for the Police Department, at a cost of Rs. 8.90 crore, and the Fire and Rescue Services Department, at a cost of Rs. 8.41 crore, built at a total cost of Rs. 17.31 crore, at the Secretariat #CMJosephVijay
11
300
1
1,041
23,653
Bangalore Tamil Pasanga ™ retweeted
கரும்பு விவசாயிகளுக்குக் கரும்பு சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.709.50-ஐ விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு விடுவிப்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் விவசாயிகளுக்கு ஆணைகளை வழங்கித் தொடங்கி வைத்தார். #CMJosephVijay
12
314
3
835
20,991
Bangalore Tamil Pasanga ™ retweeted
காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் ரூ.17.31 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார் #CMJosephVijay
2
274
1
765
20,613