கில்மா (@FunGilma) header
கில்மா (@FunGilma) profile picture

In a world full of temporary things.

அன்பு இருக்கும் இடமெல்லாம்.
Joined April 2016
Photo by கில்மா (@FunGilma)Photo by கில்மா (@FunGilma)Photo by கில்மா (@FunGilma)Photo by கில்மா (@FunGilma)Photo by கில்மா (@FunGilma)Photo by கில்மா (@FunGilma)Photo by கில்மா (@FunGilma)Photo by கில்மா (@FunGilma)Photo by கில்மா (@FunGilma)Photo by கில்மா (@FunGilma)
குளித்து துவட்டிவிட்டு வரும் போது தொப்புளில் இருக்கும் ஒரு துளி நீரை நுனி நாக்கினால் நக்கி விடும் துணை பெற்றவர்கள் லக்கி. Retweet if accept
334
419
39
2,443
அண்ணாவை எல்லோருக்கும் பிடிப்பதற்கு முதன்மையான காரணம் இதுதான்
1
197
இவங்க யாருன்னு தெரியுதா சமீபத்துல தனிஷ்க் நகை கடையில் திருட்டு போச்சுல அதுல சம்பந்தப்பட்ட இவர்கள் தான் புதுசா வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம் போட்டு இருக்காங்க அதுக்குள்ள நீங்க முடிச்சு விட்டுட்டீங்க இது உங்களுக்கே நல்லா இருக்கா?
1
287
குழந்தைகளுக்கு கொடுத்த கேக்கோட விலை ஐந்து ரூபாய் அந்த அட்டை படத்தில் அதன் விளம்பரச் செலவு ரூ.10 நல்லா இருக்குடா உங்களுடைய அரசியல் மாற்றம் பெருத்த ஏமாற்றம்
1
477
உண்மையான காதல் என்பது அழகைப் பார்ப்பதல்ல... அன்பை உணர்வது! ஒரு இளைஞன் பேரழகான பெண் ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டான். திருமணத்திற்குப் பிறகு அவர்களுடைய வாழ்க்கை அன்பாலும், பாசத்தாலும், மகிழ்ச்சியாலும் நிறைந்திருந்தது. அவன் தன் மனைவியை உயிருக்கு உயிராக நேசித்தான். அவளுடைய அழகை ஒவ்வொரு நாளும் ரசித்துப் பாராட்டினான். அவளைப் பார்த்துப் பார்த்து அவனுக்குச் சலிப்பே ஏற்பட்டதில்லை. ஆனால், அவர்களுடைய மகிழ்ச்சியான வாழ்க்கையில் விதி ஒரு விளையாட்டைத் தொடங்கியது. சில மாதங்களுக்குப் பிறகு, அந்தப் பெண்ணுக்குத் தோல் நோய் ஒன்று ஏற்பட்டது. நாட்கள் செல்லச் செல்ல அந்த நோய் தீவிரமடைந்து, அவளுடைய அழகு கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. கண்ணாடியில் தன்னுடைய முகத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவளுடைய மனம் உடைந்தது. ஒருகாலத்தில் தன்னுடைய அழகைக் கண்டு வியந்து, தன்னை உயிராக நேசித்த கணவன், நாளடைவில் தன்னுடைய அழகு மறைந்துவிட்டால் தன்னை வெறுத்துவிடுவானோ என்று அஞ்சினாள். அவனுடைய அன்பையும் இழந்துவிட்டால், அந்த வேதனையைத் தன்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது என்று நினைத்துக் கலங்கினாள். அந்த நேரத்தில் ஒருநாள், வேலை நிமித்தமாக அவளுடைய கணவன் வெளியூருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் சிக்கினான். அந்த விபத்தில் அவன் தன்னுடைய இரண்டு கண்களையும் இழந்துவிட்டான். அவன் பார்வையற்றவனாக மாறினான். இருந்தாலும், அவர்களுடைய வாழ்க்கை தொடர்ந்து சென்றது. நாட்கள் கடந்தன. தோல் நோயின் பாதிப்பு அதிகரித்து, அந்தப் பெண் தன்னுடைய அழகை முழுமையாக இழந்தாள். அவளுடைய முகத்தோற்றமே மாறிப்போனது. ஆனால், பார்வையற்ற கணவனுக்கு அவளுடைய தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றம் தெரியவில்லை. அதனால், அவளுடைய அழகு மறைந்தாலும் அவர்களுடைய இல்லற வாழ்க்கையில் எந்த விரிசலும் ஏற்படவில்லை. அவன் முன்பு எப்படி அவளை நேசித்தானோ, அதே அளவு அன்போடும் காதலோடும் அவளைத் தொடர்ந்து நேசித்தான். அவளுடைய தோற்றம் மாறியிருந்தாலும் அவனுடைய காதல் மட்டும் ஒருபோதும் மாறவில்லை. இப்படியே பல ஆண்டுகள் கடந்தன. ஒருநாள், எதிர்பாராத விதமாக அந்த மனைவி இறந்துபோனாள். அவளுடைய மரணம் கணவனை நிலைகுலையச் செய்தது. இத்தனை ஆண்டுகளாகத் தன்னுடன் வாழ்ந்த துணையை இழந்த அவன், உலகத்திலேயே தனிமையான மனிதனாக உணர்ந்தான். அவளுடைய நினைவுகளுடன் இனி அந்த ஊரில் வாழ முடியாது என்று முடிவு செய்து, அந்த ஊரைவிட்டுச் செல்லத் தீர்மானித்தான். மனைவிக்குச் செய்ய வேண்டிய அனைத்து இறுதிச் சடங்குகளையும் முடித்துவிட்டு, கையில் கைத்தடியுடன் அந்த ஊரைவிட்டுப் புறப்படத் தொடங்கினான். அப்போது பின்னாலிருந்து ஒரு மனிதர் அவனை அழைத்தார். அருகில் வந்து, "இத்தனை ஆண்டுகளாக உனக்குத் துணையாக இருந்து, உனக்கு உதவியாக வாழ்ந்த உன் மனைவி இப்போது இல்லை. இனி நீ எப்படி தனியாக நடந்து செல்வாய்? உன்னை இத்தனை ஆண்டுகளாகக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டவள் அவள்தானே!" என்று கேட்டார். அதற்கு அந்தக் கணவன் அமைதியாகப் பதிலளித்தான்: "நண்பரே... நான் உண்மையில் பார்வையற்றவன் அல்ல!" அந்த மனிதர் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தார். கணவன் தொடர்ந்து பேசினான்: "விபத்தில் நான் என் கண்களை இழக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாக நான் பார்வையற்றவனைப் போல நடித்துக்கொண்டிருந்தேன். என் மனைவி தன்னுடைய அழகை இழந்துவிட்டதை நினைத்து ஏற்கெனவே மிகுந்த வேதனையில் இருந்தாள். ஒருவேளை அவளுடைய தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்களை நான் பார்க்கிறேன் என்பதை அவள் அறிந்திருந்தால், அது அவளுடைய நோயைவிடவும் அதிகமான மனவேதனையை அவளுக்குக் கொடுத்திருக்கும். தன்னுடைய அழகு மறைந்துவிட்டது என்பதற்காகத் தன் கணவன் தன்னை வெறுக்கிறான் என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றிவிடக் கூடாது என்று நினைத்தேன். அவள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இத்தனை ஆண்டுகளாகப் பார்வையற்றவனைப் போல வாழ்ந்தேன். அவள் அழகாக இருந்தபோதும் நான் அவளைக் காதலித்தேன். அவள் அழகை இழந்தபோதும் அதே அளவு காதலித்தேன். ஏனென்றால், நான் காதலித்தது அவளுடைய முகத்தை அல்ல... அவளைத்தான்! அவள் எனக்கு ஒரு நல்ல மனைவியாக மட்டுமல்ல, என் வாழ்க்கையின் மிகப்பெரிய வரமாகவும் இருந்தாள். அவளுடைய கடைசி நாள் வரை அவள் மனதில் எந்தக் குறையும் ஏற்படக்கூடாது என்பதுதான் என் ஒரே ஆசை!" அந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த மனிதரால் எதுவும் பேச முடியவில்லை. அந்தக் கணவனின் அன்பையும் தியாகத்தையும் நினைத்து மௌனமாக நின்றார். இந்தக் கதையின் நீதி: உண்மையான அன்பு என்பது ஒருவருடைய நிறைகளையும் அழகையும் மட்டும் ரசிப்பதல்ல. அவர்களுடைய குறைகளையும் பலவீனங்களையும் ஏற்றுக்கொண்டு, அவர்களுடைய மனம் காயப்படாமல் பார்த்துக்கொள்வதுதான் உண்மையான அன்பு.
1
395
இப்போது இருக்கும் இளம் தலைமுறைக்கு உழைத்து முன்னேறுவதை விட எப்படி குறுக்கு வழியில் முன்னேறுவது என்பதை மிக அழகாக தெரிந்து வைத்திருக்கின்றனர் ஆனால் அது ஒருபோதும் வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லாது என்பது அவர்களுக்கு புரிவதில்லை
2
412
நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள் தனது நெடுநாள் காதலரை திருமணம் செய்து கொண்டார் இந்த திருமணம் மிக எளிமையாக அவருக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களோடு மட்டும் எடுக்கப்பட்டது. யாருக்கெல்லாம் நடிகை பிரியா பவானி சங்கர் அவர்களை பிடிக்கும் என்று கூறுங்கள்.
2
500
படத்தில் தலவர் லவ்வரோட அம்மாவான ஜட்ஜ்ஜை சைட் அ^டிச்^சி லிப்ஸ்டிக் அதிகமாக இருக்கு கொஞ்சம் குறைச்சுக்கோங்க என்பான். அதை போல கலெக்டருக்கு ரூட் உட்டுருக்கான் போல. உண்மையை சொல்லனும்னா மிகவும் அதிகாரம் வாய்ந்த பதவியில் இருக்கும் பெண்களுக்கே இங்கே பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அப்படி என்றால் நீங்கள் ஒரு சாதாரண பெண்களை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் இவர்கள் மத்தியில் வாழ்வது மிகவும் கஷ்டம்தான் ஆனால் அதற்கும் முட்டுக் கொடுக்கும் சில தேவதைகளின் மகன்களை நினைத்தால் தான் மிகவும் பதட்டமாக இருக்கிறது
1
517
நிறைய பேர் சம்மதித்த நிலையில் வேறு சில பேர் முரண்டு பிடிப்பதாக தகவல் வந்திருக்கிறது.
2
490
I think Hip Hop Aadhi done his job very well. What do you think?
1
470
வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் மற்றும் உண்மையான காதல் இருந்தால் பணம் ஒரு பொருட்டல்ல என்பது இந்த திருமணத்திலிருந்து தெளிவாக தெரிகிறது. ஏனென்றால் காவியா மாறனின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 20000 கோடி அளவிற்கு இருக்கிறது மேலும் அனிருத் அவர்களின் சொத்து மதிப்பு வெறும் 100 கோடி தான் ஏணி வைத்தாலும் எட்டாத இந்த பொருளாதார நிலையை காதல் மட்டுமே இன்று சரிசமம் செய்து இருக்கிறது
1
419
நான் ஒரு தனியார் நிறுவனத்தில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கிறேன் எனக்கு குழந்தை பிறந்து இப்போது ஒரு வருடம் தான் ஆகிறது. வீட்டு சூழ்நிலையின் காரணமாக நான் வேலைக்கு சென்றே ஆக வேண்டும் என்று கட்டாயத்தில் இருக்கிறேன். அதனால் நான் என்னுடைய குழந்தையை என்னிடம் அம்மாவிடமோ அல்லது என்னுடைய மாமியாரிடமோ விட்டுவிட்டு தான் நான் வேலைக்கு செல்கிறேன். இங்கே இந்த அமைச்சர் மாதம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேலே சம்பளம் வாங்கிக் கொண்டு அதுவும் தினமும் வேலை கிடையாது என்றைக்காவது ஒரு நாள் தான் வேலை இருக்கிறது அந்த வேலைக்கு செல்லும் போதும் இவர் எனது கைக்குழந்தையுடன் வருகிறார். இவரால் அங்கே எல்லாத்தையும் சரியாக கவனித்து மக்களுக்கு சேவை செய்ய முடியுமா? ஏன் இந்த தலைமை இவ்வளவு கீழ்த்தரமானதாக இருக்கிறது மேலும் எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை இந்த மு^ட்^டாள் மக்கள் இவளை எப்படி தேர்ந்தெடுத்தார்கள்? இப்போது ஒரு அனுதாபத்தை உருவாக்குவதற்காக தனது கை குழந்தையுடன் எல்லா இடங்களுக்கும் சென்று கொண்டிருக்கிறார் இதே போல தமிழகத்தில் குழந்தையை வைத்துக்கொண்டு வேலை பார்க்கும் எல்லா பெண்களுக்கும் அவர்களுடைய வேலை பார்க்கும் நிறுவனத்தில் குழந்தைகளை எடுத்துவர அனுமதி இருக்கிறதா இதையெல்லாம் மக்களாகிய நாம் யாரும் ஏன் கேட்க மாட்டேங்கிறோம்.
1
491
உண்மையிலேயே ராஜி மோகன் அவர்கள் ஒரு மேடைப் பேச்சாளர் மற்றும் அதிக அழகான வார்த்தைகளை பயன்படுத்துவார் என்று கடந்த பத்திரிகையாளர் பேட்டியில் மிக நன்றாக தெரிந்திருக்கிறது. நீங்கள் பேட்டி கொடுத்ததை வைத்து என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே
546
33 வயது பெண் – எனக்கு உங்களிடம் இருந்து ஒரு நேர்மையான ஆலோசனை தேவை. நான் BE பட்டதாரி. ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன். அப்போது எனது மாதச் சம்பளம் வெறும் ₹15,000 மட்டுமே. திடீரென எனது தந்தை இறந்துவிட்டதால், குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலையை விட்டுவிட்டேன். அதற்கடுத்த ஓர் ஆண்டிற்குள், முழுக்க முழுக்க பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தத் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவில்லை. எனது முன்னாள் கணவர், அவரது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்காகவே என்னைத் திருமணம் செய்துகொண்டார். இறுதியில், அந்த உறவும் விவாகரத்தில் முடிந்துவிட்டது. சமீபத்தில், எனது குடும்பத்தினர் எனக்காக இன்னொரு திருமண வரன் பார்த்திருக்கிறார்கள். அவருக்கு எனது வயதைவிட இரண்டு வயது குறைவு. பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்திருக்கிறார். தற்போது ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு ஏறக்குறைய ₹30 லட்சம் வீட்டுக் கடன் இருக்கிறது. அதற்கான மாதத் தவணை (EMI) ₹30,000. எனது குழந்தைப் பருவம் அவ்வளவு மகிழ்ச்சியானதாக இருக்கவில்லை. அதனால், மற்றவர்களிடம் விலையுயர்ந்த ஆடைகளையோ, ஆடம்பரப் பொருட்களையோ நான் ஒருபோதும் எதிர்பார்த்ததில்லை. நான் சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு, எனக்குத் தேவையான பொருட்களை எனது சொந்தப் பணத்திலேயே வாங்கிக்கொண்டேன். எனக்கு ஆடம்பர வாழ்க்கையில் பெரிய ஆர்வம் கிடையாது. குறைவான பொருட்களை வைத்துக்கொண்டு, உண்மையிலேயே எனக்குப் பிடித்தமானவற்றுடன் எளிமையாக வாழ்வதையே விரும்புகிறேன். ஆனால், எனது முந்தைய திருமண வாழ்க்கையில், நான் ஆடம்பரத்தை விரும்புபவள் என்றும், தேவையில்லாமல் அதிகமாகச் செலவு செய்பவள் என்றும் தொடர்ந்து குறை கூறப்பட்டேன். அந்த வார்த்தைகள் என்னை மனதளவில் மிகவும் காயப்படுத்தின. எனக்கு எப்போதுமே ஒரு கனவு இருந்திருக்கிறது. ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டும், அன்பும் பாசமும் நிறைந்த ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு. ஆனால், முந்தைய திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்குப் பிறகு, மீண்டும் ஒரு திருமண முடிவை எடுப்பதற்கே எனக்குப் பயமாக இருக்கிறது. எனக்கு ஏற்கெனவே 33 வயதாகிவிட்டது என்பதால், எனது குடும்பத்தினர் திருமணம் செய்துகொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல், எனக்கு ஒரு மூத்த சகோதரரும் இருக்கிறார். அவருக்கும் திருமணம் செய்ய வேண்டியிருப்பதால், எங்கள் இருவருக்கும் திருமணம் முடித்துவிட வேண்டும் என்ற குடும்ப அழுத்தமும் இருக்கிறது. எனவே, அனுபவம் வாய்ந்தவர்களிடம் சில நேர்மையான ஆலோசனைகளைக் கேட்க விரும்புகிறேன். 1. கல்வித் தகுதி மற்றும் தொழில் ரீதியாக எங்களுக்குள் இவ்வளவு வித்தியாசம் இருக்கும்போது, இந்தத் திருமண வரனை நான் பரிசீலிக்கலாமா? 2. ₹30 லட்சம் வீட்டுக் கடனும், மாதம் ₹30,000 EMI-யும் இருப்பது மிகப்பெரிய பொருளாதாரச் சுமையா? 3. பொதுவாக, இந்தக் கடனை முழுமையாக அடைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்? 4. எனது வயதையும் குடும்பத்தினரின் வற்புறுத்தலையும் கருத்தில் கொண்டு நான் சில விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள வேண்டுமா? அல்லது எனக்குப் பொருத்தமான, என்னைப் புரிந்துகொள்ளக்கூடிய ஒருவருக்காகக் காத்திருக்க வேண்டுமா? எனக்கு ஆடம்பரமான வாழ்க்கை வேண்டுமென்ற எதிர்பார்ப்பு துளியும் இல்லை. என்னை உண்மையாக நேசிக்கக்கூடிய, என் உணர்வுகளைப் புரிந்துகொள்ளக்கூடிய, பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளக்கூடிய ஒரு வாழ்க்கைத் துணை மட்டுமே வேண்டும். என்னை மதித்து, என்னுடன் இணைந்து ஒரு நிம்மதியான குடும்ப வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. தயவுசெய்து என்னைத் தவறாக எடைபோடாமல், உங்கள் மனதில் தோன்றும் உண்மையான கருத்துகளையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள். தோல்வியடைந்த எனது கடந்தகால வாழ்க்கைக்குப் பிறகு, மகிழ்ச்சியான ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க எனக்கும் இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் பதிவை எழுதுகிறேன்.
1
2
722
ஆன்லைனில் ஆர்டர் போட்டு சிவகாசியில் இருந்து வாங்கிய பட்டாசுகள் அனைத்தும் ஏமாற்று ஒழுங்காகவே வெடிக்க வில்லை. இவர்கள் குறைந்த விலை என்று கூறி மிகவும் ஏமாற்றுகின்றனர் போலி பட்டாசுகளை தந்து. என்னை போல் ஏமாந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா?
1
1
776
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
1
6
660
தீபாவளி தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பேருந்து கட்டணங்களில் தாறுமாறாக தோராயமாக கிட்டத்தட்ட 4000 ரூபாய் வருகிறது இதைப்பற்றி ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த பிறகு அந்த நண்பர் சொல்கிறார். நீ எதற்கு தனியார் பேருந்தில் பயணம் செய்ய ஆசைப்படுகிறாய் உன்னிடம் பணம் இல்லை என்றால் நீ அரசு பேருந்தில் பயணம் செய்ய வேண்டியது தானே ஏனென்றால் இந்த தனியார் பேருந்துகள் உரிமையாளர்கள் எல்லாருமே இந்த மாதிரி விடுமுறையை எதிர்பார்த்துதான் நோக்கியிருக்கிறார்கள் மேலும் இது இப்போது சீசனல் பிசினஸ் ஆக மாறிவிட்டது. அவர்கள் மற்ற நாட்களில் சந்திக்கும் நஷ்டத்தை இந்த மாதிரி நேரத்தில் கட்டண விலையை ஏற்றி வைத்து தான் அவர்களால் சமாளிக்க முடியும் மேலும் இதற்கு நமது முதல்வர் விஜய் அண்ணாவின் அரசு எதையும் செய்ய முடியாது ஏனென்றால் அவர் தனியார் பேருந்து உரிமையாளர்களின் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும் அல்லவா! உன்னால் அந்த அளவிற்கு கட்டணம் கொடுக்க போக்கு இல்லை என்றால் நீ வேறு அரசு பேருந்தில் பயணம் செய் இல்லை என்றால் இந்த தீபாவளி விடுமுறைக்கு பயணம் செய்யாமல் மற்ற ஏதாவது நாட்களில் சாதாரண விலை இருக்கும் போது பயணம் செய் என்று மிக அருமையாக முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதே தாய் வழி தேவதை மகன்தான் போன ஆட்சியின் போது இந்த ஆட்சி சரியே இல்லை தனியார் பேருந்து உரிமையாளர்கள் எல்லாரும் ஏழை எளிய மக்களிடம் கட்டணத்தை ஏற்றி முடிந்த அளவிற்கு பணத்தை பிடுங்குகின்றனர் என்று சமூக வலைதளத்தில் பொங்கல் வைத்திருந்தார்.
594
நடிகைகளின் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் தனுஷின் மகன் அதுவும் முதல் வரிசையில். இவன் அவ்ளோ பெரிய ஆளா? இல்லை இந்த படத்தினுடைய தயாரிப்பாளர் தனுஷ் உடைய மகனா
1
561
உலகிலேயே மிகப்பெரிய பணக்காரரான ஆனந் அம்பாணி பார்க்கும்போது உங்களுக்கே தெரியும் முடி அவ்வளவு அடர்த்தியாக இருக்காது. ஏனென்றால் பரம்பரையின் காரணமாக இவரது தலைமுடியின் அடர்த்தி மிக குறைவாக இருக்கும் ஆனால் இங்கே எங்களது ப்ராடக்ட்டை நீங்கள் உபயோகித்தால் உங்கள் தலையில் 10 நாட்களில் முடி வளரும் மேலும் அடர்த்தியாக வளரும் ஏன் நீங்கள் எங்களது ப்ராடக்ட்டை அப்ளை செய்தவுடன் உங்களது கையை கழுகிவிட வேண்டும் இல்லை என்றால் உங்கள் கைகளில் முடி வளர்வதற்கான சாத்திய கூறுகள் நிறைய இருக்கின்றன என்று மக்களிடம் தேவையில்லாத மாடல்களை வைத்து கவர்ச்சியான விளம்பரங்களை செய்து மக்களின் பாக்கெட்டில் இருந்து பணங்களை பிடுங்கும் போலி நிறுவனங்களே உங்களுக்கு நான் நேரடியாக ஒரு சவால் விடுகிறேன். உங்களால் முடிந்தால் ஆனந்த் அம்பானியின் தலையில் முடியின் அடர்த்தியை கூட்டி காட்டுங்கள் அதன் பிறகு நான் ஏற்றுக்கொள்கிறேன் உங்களது பொருட்கள் தரமானது தான் என்று . நீங்கள் ஏமாற்றுவது யார் என்று தெரியுமா? மிகவும் ஏழ்மையில் இருக்கும் மிகவும் நடுத்தரமான மக்களின் பர்சுகளை குறிவைத்து நீங்கள் காலி செய்து நீங்கள் பணத்தில் கொழுத்து கிடக்கிறீர்கள் எப்பவுமே சொல்கிறேன் முடி வளர வைப்பது என்பது இயலாத காரியம்.
772
இதுவரை எந்த தமிழக முதல்வரும் செய்துவிடாத செயல் முதல்வர் விஜய் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் அளவிற்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறார். புதுக்கோட்டை மிகச் சிறிய மாவட்டம் ஆகும் அதில் உள்ள மக்கள் மிகுந்த குறைந்த வருமானத்தில் தான் வாழ்ந்து வருகின்றனர் ஆனால் தற்போது நமது தளபதி அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மிகச் சிறப்பாக நிறைய உதவிகள் வழங்கி அந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு மிகுந்த சிரத்தை எடுத்து இருக்கிறார்.
758
எனக்கு 28 வயதுடைய ஓர் ஆண் நண்பர் இருக்கிறார். அவர் தனது தாயுடன் கொல்கத்தாவில் வசித்து வருகிறார். அவரது தந்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். அவருடைய தங்கை திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது எனது நண்பர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மின்சாரப் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய ஆண்டு வருமானம் 6.5 லட்சம் ரூபாய் (6.5 LPA). கடந்த ஆண்டு, தனது சொந்த உழைப்பிலும் சம்பாத்தியத்திலும் தவணை முறையில் ஒரு வீட்டை வாங்கினார். தனது தாயின் எதிர்காலப் பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு, அந்த வீட்டைத் தனது பெயரிலும் தாயின் பெயரிலும் கூட்டாகப் பதிவு செய்தார். ஒரு மகனாகத் தனது தாய்க்கு எதிர்காலத்தில் எந்தவிதமான பாதுகாப்பற்ற சூழ்நிலையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தான் அவர் அப்படிச் செய்தார். ஆனால், இப்போது பிரச்சினை தொடங்கியிருக்கிறது. அந்த வீட்டில் தனக்குச் சொந்தமான பங்கையும் தனது மகளான எனது நண்பரின் தங்கைக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று அவரது தாய் வற்புறுத்துகிறார். ஆனால், இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது அவரது தந்தை விட்டுச் சென்ற பரம்பரைச் சொத்து அல்ல. தனது கடின உழைப்பால், சொந்தமாகச் சம்பாதித்த பணத்தில் அவர் வாங்கிய சொத்து. இன்றுவரை அந்த வீட்டிற்கான மாதத் தவணைகளையும் அவரே தொடர்ந்து செலுத்தி வருகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தனது தாயின் விருப்பத்திற்கு அவர் உடன்படவில்லை. அதில் என்ன தவறு இருக்கிறது? ஆனால், தனது விருப்பத்திற்கு மகன் இணங்கவில்லை என்பதற்காக, அவரது தாய் அவரை மனதளவில் துன்புறுத்தத் தொடங்கிவிட்டார். சமீபத்தில், தனது மகனுக்கு எதிராகப் பொய்யான புகார் அளிப்பதற்காகக் காவல் நிலையத்திற்கும் சென்றிருக்கிறார். ஆனால், காவல்துறையினர் அந்தப் புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும், அவரது தாய் பல்வேறு வழிகளில் தொடர்ந்து அவருக்கு மனரீதியான தொல்லைகளைக் கொடுத்து வருகிறார். இப்போது எனது நண்பர் மிகுந்த அச்சத்திலும் மன உளைச்சலிலும் இருக்கிறார். தனது சொந்த உழைப்பால் வாங்கிய வீட்டில்கூட நிம்மதியாக வாழ முடியாத ஒரு துரதிர்ஷ்டவசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். மேலும், அவரது தங்கை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவரது கணவரும் நல்ல வருமானம் ஈட்டுகிறார். அவர்களுக்குச் சொந்தமாக நிலங்களும் இருக்கின்றன. அதாவது, அவரது தங்கையின் குடும்பம் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில்தான் இருக்கிறது. அப்படியிருக்கும்போது, தனது வாழ்நாள் உழைப்பில் வாங்கிய வீட்டின் பங்கையும் தங்கைக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று ஒரு மகனை வற்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்? ஒரு மகனாகத் தனது தாயின் பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு வீட்டில் அவருக்கும் பங்கு கொடுத்தவர் இன்று அதே முடிவினால் மனவேதனை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து இந்தப் பிரச்சினையிலிருந்து எனது நண்பர் எவ்வாறு மீண்டு வர முடியும் என்பதைப் பற்றி ஆலோசனை வழங்குங்கள். அவருக்குச் சட்டரீதியாக என்னென்ன வழிகள் இருக்கின்றன? தனது தாயின் மனரீதியான துன்புறுத்தலிலிருந்து எப்படிப் பாதுகாத்துக்கொள்ள முடியும்? அவரது சொத்துரிமையையும் எதிர்காலத்தையும் எவ்வாறு பாதுகாக்க முடியும்?
3
834