Valarmeyyarivaan @ Visuvaa Viswanaath (@Journalist_Vish) header
Valarmeyyarivaan @ Visuvaa Viswanaath (@Journalist_Vish) profile picture

News Editor : Tamil Oodagam Magazine & Tamil Oodagam Digital Network

Chennai
Joined August 2010
Photo by Valarmeyyarivaan @ Visuvaa Viswanaath (@Journalist_Vish)Photo by Valarmeyyarivaan @ Visuvaa Viswanaath (@Journalist_Vish)Photo by Valarmeyyarivaan @ Visuvaa Viswanaath (@Journalist_Vish)Photo by Valarmeyyarivaan @ Visuvaa Viswanaath (@Journalist_Vish)Photo by Valarmeyyarivaan @ Visuvaa Viswanaath (@Journalist_Vish)Photo by Valarmeyyarivaan @ Visuvaa Viswanaath (@Journalist_Vish)Photo by Valarmeyyarivaan @ Visuvaa Viswanaath (@Journalist_Vish)Photo by Valarmeyyarivaan @ Visuvaa Viswanaath (@Journalist_Vish)Photo by Valarmeyyarivaan @ Visuvaa Viswanaath (@Journalist_Vish)Photo by Valarmeyyarivaan @ Visuvaa Viswanaath (@Journalist_Vish)
தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம் பணிகளுக்கு நீங்களும் ஆதரவு தரலாம் வங்கிக் கணக்கு விவரம் : Tamil Oodagam Current Account Number : 1200 36 75 79 25 Canara Bank, Edayar Palayam Branch, Coimbatore. IFSC : CNRB0005634 SWIFT : CNRBINBBFD GPay, PayTM, PhonePe - 8012271745 Viswanaath T M Razorpay link in the comment box
1
1
4
1,231
தமிழ்த் தேசியத்தை வணிகமயமாக்கித் தட்டுத் தடுமாறித் தடம் மாறிய தலைவன் ! "வேலுப்பிள்ளை மகனின் தம்பி என்றார்! ஆனால் கெட்ட வார்த்தைகளில் வசைபாடும் ஒரு கூட்டத்தை உருவாக்கிவிட்டிருக்கிறார் ! இரத்தமும் சதையுமாக வந்தேன் என்றார்! ஈ*ழத் தமிழருக்கு நீதி பெற ஒரு செயலும் இல்லை ! தமிழ்நாட்டைத் தமிழர் ஆள வேண்டும் என்றார்! தான் மட்டுமே தமிழர் என்கிறார் ! இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றார்! இயற்கை வளங்களை சுரண்டி விற்றவர்கள் சுடச்சுடப் பிரியாணி கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல முடியுமா என்கிறார் ? திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்றார்! திராவிடப் பிரியாணி மட்டும் ஓகே என்கிறார் ! அன்று எந்தத் திமுக தமிழ்த் தேசியத்தை அழிக்க எண்ணியதோ இன்று அதற்கு ஆதரவு கொடுத்தால் தப்பா என்கிறார் ! "ஓட்டுப் போட்டால் போடுங்கள்; இல்லாவிட்டால் போங்கள்" என்ற மனநிலையில் தேர்தலை அணுகுவது அரசியல் தலைமைக்கான அணுகுமுறையாக இருக்க முடியாது. வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறுவதுதான் ஒரு தலைவரின் முதன்மையான கடமை." தமிழ் ஊடகம் ஆசிரியர் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் எழுதிய அரசியல் அறிவியல் கட்டுரையை விரிவாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/seeman-tami…
27
8
3
25
2,110
தமிழ்த் தேசியப் பேராசான் பெ. மணியரசன் ஐயா கால் வலிக்காக சித்தமருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து அவருடன் உரையாடிவிட்டு வந்தோம் நானும் நண்பர் சூலூர் சிவக்குமாரும். தமிழ்த் தேசியம் குறித்த தெளிவான கொள்கைகள் கொண்ட ஒரு இயக்கத்தின் தலைவர். தமிழர்களின் உரிமைக்காக சமரசம் இன்றிப் போராடும் வழிகாட்டி.. பல்லாண்டு வாழ்வாங்கு வாழ அருட்பெருஞ்சோதி ஆண்டவரை வேண்டுகிறோம். - வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்
3
9
80
2,253
தீபாவளி தமிழர் தொன்மை மரபா? பிற்காலப் பண்பாட்டுக் கலப்பா? சங்க இலக்கியங்களில் தீபாவளிக்குச் சான்று உள்ளதா? அகநானூறு பதிவு செய்யும் கார்த்திகை விளக்கீடு என்ன சொல்கிறது? ஐப்பசி அமாவாசையில் தீபாவளி கொண்டாடப்படுவதன் வானியல் பின்னணி என்ன? நரகாசுரன் கதை உண்மையிலேயே தீபாவளியின் தொடக்கத்துடன் தொடர்புடையதா? இலக்கியம், வானியல், புராணங்கள், கல்வெட்டுகள் என வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் ஒரு சுவையான ஆய்வு. வாசியுங்கள்... வரலாற்றை ஆதாரங்களுடன் அணுகுவோம்! வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/deepavali-t…
1
2
135
தமிழ் ஊடகம் குழுமத்தின் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள். எல்லாம் செயல் கூடும் என்னாணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து! --இராமலிங்க வள்ளற்பெருமான் #தீபாவளித்திருநாள் #தமிழ்ஊடகம்
1
2
162
ஜெம் வீரமணி வழக்கில் புதிய திருப்பம்! சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி புகார் அளித்துள்ளார். முழுச் செய்தியை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/gem-veerama…
2
200
🔥 பெரியார் நூலகத்தில் புத்தகக் கொள்முதல் சர்ச்சை! யார் பொறுப்பு? நாம் நாடகக் கம்பெனியாகிவிட்டதா நாம் தமிழர் கட்சி ?! தினகரன் சுரேஷ் வேதநாயகம், நக்கீரன் பிரகாஷ் வழக்கு ! அமைச்சர் உதவியாளரின் அதிர்ச்சிப் பின்னணி... தகவல் ஆணையர் நியமனத்தின் அரசியல் எதிர்வினை... இவை அனைத்தையும் அலசுகிறார் பருந்தார்! 📌 முழுமையான தகவல்களுக்கு: 🌐 தமிழ் ஊடகம் – வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/periyar-lib…
111
இதைவிட ஒரு நீதிமன்றம் கடுமையான கருத்தைத் தெரிவிக்க முடியாது ! சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் 'பதவியை' தினகரன் சுரேஷ் வேதநாயகம் இன்னமும் பிடித்துக்கொண்டிருப்பது ஏனோ !? வழிகாட்டும் குழுவினர் என்.ராம். பகவான் சிங், டி.எஸ்.கே, சாவித்திரி கண்ணன் உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளார்கள் இப்போது (மட்டும்) மவுனம் காப்பது ஏனோ ? முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறதா மன்றத்தின் 'நிர்வாகக் குழு' ?! -பத்திரிகை ஊடக சிந்தனைப் பேரவை கேள்வி ! சென்னை பத்திரிகையாளர் மன்றம் (சென்னை ப்ரெஸ் க்ளப் என்று முன்பு அழைக்கப்பட்டது) எந்த ஒரு அரசியல் கட்சியின் சார்பாகவும், ஒருபக்கமாகவும் செயல்பட்டது என்ற கெட்ட பெயர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புவரை சுமார் 25 ஆண்டுகாலமாக அதற்கு இல்லை. அந்த நிர்வாகத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சொன்ன இப்போதைய நிர்வாகிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிர்வாகத்தில் இருந்துவரும் நிலையில், முன்னாள் நிர்வாகிகள் மீது தாங்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் விதமாக எந்த ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை, அவற்றை நிரூபிக்கவும் இல்லை. மாறாக, இந்தப் புதிய நிர்வாகிகளின் 'வழிகாட்டும் குழு' சட்டவிரோதமாக (மன்றத்தின் துணை விதிகளுக்கு எதிராக) சுமார் 800 பேரைச் சேர்த்துத் தேர்தல் எனும் பெயரில் மன்றத்தை பண பலம் - அதிகார பலம் - ஆள் பலம் ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்திக் கைப்பற்றி திமுக ஆதரவுப் பத்திரிகையாளர்கள் சுரேஷ் வேதநாயகம், ஹாசிப், நெல்சன் சேவியர் போன்றவர்களிடம் ஒப்படைத்தது. வழிகாட்டும் குழுவும், புதிய நிர்வாகிகளும் செய்கின்ற தவறுகளைச் சுட்டிக்காட்டிய சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் மூத்த முதன்மை உறுப்பினர் நிலாவேந்தன் மீது பொய்ப் புகார் கொடுத்து காவல்நிலையத்தில் அமரவைத்து அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினார்கள். மன்றத்தின் மூத்த முதன்மை உறுப்பினர் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் மீது பொய்ப் புகாரின் பேரில் FIR பதிய வைத்தார்கள். நிலாவேந்தன் மீது தமிழே எழுதப் படிக்கத் தெரியாத ஜானகிராமன் எனும் மன்றத்தின் உதவியாளரிடம் கையெழுத்து வாங்கிப் பொய்ப் புகார் கொடுத்தனர். வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் மீது மன்றத்தின் பொதுச் செயலாளர் ஹாசிப் என்பவரைக் கொண்டே பொய்ப் புகார் கொடுத்து FIR பதிய வைத்தார்கள். கடந்த 23 ஆண்டுகளாக மன்றத்தின் முதன்மை உறுப்பினராக இருந்த மறைந்த நிலாவேந்தன் மற்றும் இன்றும் இருக்கும் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் மீது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு உறுப்பினராக சேர்ந்த சுரேஷ் வேதநாயகம் மற்றும் ஹாசீப் ஆகியோர் இதுபோன்ற அடாவடியான பொய்ப் புகார் கொடுத்து அச்சுறுத்தும், மிரட்டும் வேலைகளை செய்தது ஒட்டுமொத்த பத்திரிகை ஊடக உலகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது. திமுக ஆட்சி மாறிய நிலையில் தவெக ஆட்சி வந்துள்ள நிலையில், ஜெம் வீரமணியின் சிறுமிகள் மீதான பாலியல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவின்படி தீவிரமடைந்தது. அந்த வழக்கை மேற்கொண்டு விசாரணையின்றி மூடச் செய்ததாக காவல்துறை முன்னாள் ஆணையர் அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர்களின் அதிகாரம் மற்றும் பதவிகள் பறிக்கப்பட்டுக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அந்த அருண் ஐபிஎஸ் அதிகாரியின் மிக நெருங்கிய நண்பரும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தற்போதைய தலைவருமான சுரேஷ் வேதநாயகம் மற்றும் சுரேஷின் கூட்டாளி நக்கீரன் தாமோதரன் பிரகாஷ் ஆகியோர் சக பத்திரிகையாளர்கள் மீதே அவதூறு பரப்பிய புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அந்த வழக்கில் முன்பிணையும் கேட்டுப் பெற்றுள்ளனர். அந்த முன்பிணை விசாரணையின்போது சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்த கருத்துக்கள் ஒவ்வொரு பத்திரிகை ஊடகவியலாளரையும் சிந்திக்க வைக்கும் மிகப் பொறுப்பான சமூக அக்கறையுடன் கூடிய கருத்துக்கள். “பத்திரிகையாளர் சங்கங்களில் பதவி வகிப்பவர்களின் கைகளில் பத்திரிகைத்துறை இந்த நிலைக்குத் தாழ்ந்திருப்பது வருத்தமளிக்கிறது. அவர்கள் பத்திரிகைத் தொழிலில் பெற்றுள்ள அந்தஸ்து, அவர்களிடம் கட்டுப்பாட்டுடன் அணுகுவதற்கான காரணமாக இருக்கலாம்; ஆனால், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கான காரணமாக இருக்க முடியாது.” என்பதே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ரமேஷ் அவர்கள் தெரிவித்த கருத்துகள். 1/2..Cntd...
2
26
2
70
6,382
சக பத்திரிகையாளர்கள் மீது பொய்ப் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்வது, பொய்ப் புகார் கொடுத்து FIR பதிவு செய்வது, பொய்யான அவதூறுகளைப் பரப்பி மிரட்டி அச்சுறுத்துவது ஆகியவற்றை ஒரு வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் என். ராம் தலைமையிலான வழிகாட்டும் குழுவினரும், பத்திரிகையாளர் மன்றத்தின் தற்போதயை தலைவர் தினகரன் சுரேஷ் வேதநாயகம், உறுப்பினர் நக்கீரன் தாமோதரன் பிரகாஷ் உள்ளிட்டவர்களும் என்பது அவர்களின் கடந்த இரண்டு ஆண்டுச் செயல்பாடுகளில் நிரூபணம் ஆகியிருக்கிறது. ஆக, தினகரன் சுரேஷ் வேதநாயகம், நக்கீரன் பிரகாஷ் போன்றோர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பதவிகளைப் பிடிக்க முன்னாள் காவல்துறையினர் - திமுக முன்னாள் அமைச்சர்கள் - திமுக ஆதரவு வழக்கறிஞர்கள் எனப் பலரையும் தவறாகப் பயன்படுத்தி அவர்களின் ஆற்றல்மிகு பதவி, பொறுப்புகளை மடைமாற்றி அதன் மூலம் இவர்கள் இத்தகைய பொறுப்புகளுக்கு வந்ததே இப்படி மிரட்டி, அடக்கி, ஒடுக்கி, வழக்குப் பதிவு, FIR பதிவு செய்யத்தானோ எனும் ஐயம் வலுவாக எழுகிறது. மேலும், தங்களின் சமூக விரோதச் செயல்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை ஒரு பதுங்கு குழியாக, முகமூடியாகப் பயன்படுத்திக்கொள்ளவே இத்தகைய பதவிகளில் அடாவடியாக வந்து அமர்கிறார்களோ எனும் அச்சமும் ஏற்படுகிறது. சென்னை பத்திரிகையாளர் மன்றம் போன்ற பத்திரிகை ஊடகர்களின் நலன் காக்கவேண்டிய, அவர்களைப் பாதுகாக்க வேண்டிய அடிப்படை கடமைகள் உள்ள அமைப்புகளில் தலைவர், பொதுச் செயலாளர் போன்ற பொறுப்புகளில் இவர்களை போன்றவர்கள் அடாவடியாகத் வந்து அமர்ந்து கொன்டு பத்திரிகை ஊடகர்கள் மத்தியில் ஒரு தொடர் அச்சுறுத்தல் விடுத்துக்கொண்டே சமூகப் பொறுப்புள்ள பத்திரிகை ஊடகத்துறையைத் தரம் கெடுத்து வருவது அதிர்ச்சியான செயல்கள். எனவே, நீதிமன்றமே வருத்தத்துடன் தெரிவித்துள்ள கருத்தைக் கவனத்தில் கொண்டு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து தினகரன் சுரேஷ் மற்றும் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நக்கீரன் தாமோதரன் பிரகாஷ் ஆகியோரை சென்னை பத்திரிகையாளர் மன்ற செயற்குழு நீக்கவேண்டும். முடியாத நிலையில் செயற்குழுவே ஒட்டுமொத்தமாகப் பொறுப்பு விலகவேண்டும் என்று பத்திரிகை ஊடக சிந்தனைப்பேரவை கேட்டுக்கொள்கிறது. --பத்திரிகை ஊடக சிந்தனைப் பேரவை உயர்மட்டக் குழு Journalism and Media Think Tank, Coimbatore, Tamil Nadu. மின்னஞ்சல் : [email protected] 06/11/26 2/2..End
7
182
செம்மணிப் புதைகுழி குறித்த அறிக்கைக்கு கடும் எதிர்ப்பு நோயால் இறந்தவர்கள் என்பதா என அதிர்ச்சி இலங்கையில் இவ்வாரம் #LankaFiles #TNTVTamilOodagam காணொலி இணைப்பு : youtu.be/BaG-5REYGfo
1
88
+ தமிழர்கள் மீதான இலங்கை அரசின் 'கரிசனம்' - பின்னணி என்ன? + அம்பாசமுத்திரம் தொகுதி பொது வேட்பாளர் சீமான் - நகைச்சுவை பின்னணி என்ன? + நாம் தமிழர் கட்சி எனக்குக் கொடுத்த நிதி உதவி இரகசியம் என்ன? + பெரியார் மட்டும் இல்லன்னா என்று திராவிட முக மூடிகள் உருட்டுவது போல சீமான் மட்டும் இல்லன்னா என்று உருட்டும் நாம் தமிழர் சமூக ஊடகர்கள்... பத்திரிகை ஊடகவியலாளர் வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத் ராவணா ஊடகத்திற்காக மூத்த பத்திரிகை ஊடகவியலாளர் பா. ஏகலைவனுக்கு அளித்த நேர்காணல் youtu.be/SBbwSIAsJxw?si=Mz1w…
166
சக பத்திரிகையாளரை மிரட்டி அவதூறு பரப்பிய வழக்கில் தினகரன் சுரேஷ் வேதநாயகம், நக்கீரன் தமோதரன் பிரகாஷ் உள்ளிட்ட 3 பேருக்கு முன்பிணை. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொறுப்பில் அமர்ந்து கொண்டு சக பத்திரிகையாளர்கள் மீதே அவதூறு பரப்பி, மிரட்டும் அளவுக்குத் தரம் தாழ்ந்து போனது மிகவும் துரதிட்டவசமானது. -- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ரமேஷ். 04/11/26
2
18
1
47
3,486
நாம் தமிழர் கட்சி முகமூடி அணிந்து கொண்டு கட்சியின் குறைகளை சுட்டிக்கட்டுவோரை ஆபாசமாக, அருவருப்பாக எழுதுவோர் யாரும் நாம் தமிழர் கட்சி அல்ல -- மணி செந்தில் ஆமாம் ஆமாம் அவர்கள் எல்லாம் நாம் தமிழர் Fake ID பொறுக்கிப் படையினர்தானே தவிர நாம் தமிழர் கட்சிப் படை அல்ல. -- தமிழ்த் தேசிய உண்மை உணர்வாளர்கள்
1
8
12
876
"பட்டாசுக் கடைக்கு உரிமம் வழங்க இழுத்தடிக்கிறார்களாம். கட்டாயக் கையூட்டு இல்லை என்பதால் அலட்சியம் காட்டுகிறார்களாம் அதிகாரிகள். தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கக்கூடிய நிலையில் பணம் போட்டு பட்டாசுகளை வாங்கியவர்கள் திணறிக் கொண்டிருக்கிறார்களாம்." தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள் 03/11/26 #பட்டாசுக்கடை #தமிழ்ஊடகம்
2
3
208
குண்டர் தடுப்புக் காவல் உத்தரவில் தவறு! உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டார் அருண் ஐபிஎஸ்! மன்னிப்புக் கேட்பதால் தவறு சரியாகிவிடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்! குண்டர் தடுப்புக் காவல் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் முடிவில் தலையிடவில்லை! அருணின் மன்னிப்பை ஏற்று, அவருக்கு எதிராக உயர்நீதிமன்றம் தெரிவித்த சில கடுமையான கருத்துகளை நீக்கியது உச்சநீதிமன்றம்! 03/11/26 தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம் #அருண்ips #குண்டர்சட்டம்
1
117
தமது 75ஆவது பிறந்தநாள் பவளவிழாவைத் தனிமனிதக் கொண்டாட்டமாக நடத்தாமல், தமிழறிஞர்களையும் தமிழ்ச் சங்கங்களையும் ஒருங்கிணைக்கும் தமிழ் மாநாடாக நடத்திய அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவர் செ. துரைசாமி! கோவையில் நடைபெற்ற தமிழ்ப்பெருவிழா குறித்த சிறப்புச் செய்தி! வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/duraisamy-7… தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம்
97
நாம் தமிழர் சமூக ஊடகர்கள் நிலைமை நவ் ! 😁😂🤣 முக்கியக் குறிப்பு : இது முழுக்க முழுக்க நகச்சுவைக்காக சிரிக்க மட்டுமே. ஆபாசமாக, அருவருப்பாக, கெட்ட சொற்களைத் தாய் மொழி போல பேசும் பைத்தியகாரர்களுக்கு அல்ல. அவர்களின் அத்தகைய பதிவுகளும், பதிவர்களும் நீக்கப் படுவார்கள். இந்தக் காணொலி நாம் தமிழர் குறித்த நகைச்சுவைக்காக உருவாக்கப் பட்டதல்ல. இணையத்தில் உள்ள பொதுவான பகிர்வு நகைச்சுவைக்காக மாற்றி பகிரப்பட்டுள்ளது.
1
1
235
துரைமுருகனுக்கு மட்டும் 'முதலைக் கண்ணீர்' வடிக்கும் சுப.வீரபாண்டியன், ஜீவ சகாப்தன் போன்ற 'பெரியாரிய நாடக நடிகர்கள்' ஏன் கலைஞர்.கருணாநிதி, மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்ப மறுக்கிறார்கள் ?! நீ பெரியாரிஸ்ட் என்றால் உண்மையான பெரியாரிஸ்ட்டாக இரு... நீ பார்ப்பனிய ஆதரவாளன் என்றால் அதிலாவது உண்மையாக இரு ! அது என்ன அங்கொரு கால் இங்கொரு கால் ?! தமிழர் விரோதப் போக்கில் இரண்டுபேருமே வேறு வேறு அல்ல என்பதே தமிழர்களின் நிலைப்பாடு. அது ஒருபுறம் இருக்கட்டும். திமுகவின் பொதுசெயலாளர், முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் பெயர்த்தி திருமணத்தில் சமஸ்கிருத மொழியில் மந்திரம் ஓதிவிட்டார்களாம். உடனே எனக்கு நெஞ்சு வலிக்கிறது என்கிறார் சுப.வீரபாண்டியன், நாங்க எல்லாம் என்ன பைத்தியக்காரர்களா என்கிறார் ஜீவ சகாப்தன். திடீரென்று பெரியார் இராமசாமியின் நெஞ்சை நனைக்கத் தொடங்கி இருக்கிறார்கள் இவர்கள். கருணாநிதி வீட்டில் அவரை சுற்றி நின்றுகொண்டு சம்ஸ்கிருத மந்திரங்கள் முழங்க தெலுங்கு வைணவப் பார்ப்பனர்கள் வாழ்த்தியபோது வலிக்கவில்லையா... பைத்தியக்காரனாக உணரவில்லையா ?! கோயில் கோயிலாகச் சென்று பக்திப்பழமாக திருமதி.துர்கா ஸ்டாலின் அவர்கள் சுழன்றுகொண்டிருக்கிறாரே....சம்ஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்க வேள்விகள் செய்கிறார்களே...அப்போது வலிக்கவில்லையா... பைத்தியக்காரனாக உணரவில்லையா ?! எங்கள் திமுக கட்சியில் 95 விழுக்காடு இந்துக்கள்தான் என்று அறிவிக்கப்பட்டபோது...வலிக்கவில்லையா... பைத்தியக்காரனாக உணரவில்லையா ?! திமுக அரசு சார்பில் 4000 கோயில்கள் குடமுழுக்கு நடத்தினார்களே அப்போது...வலிக்கவில்லையா... பைத்தியக்காரனாக உணரவில்லையா ?! அந்த 4000 கோயில்களில் சமஸ்கிருத மந்திரங்கள் இன்றும் ஒலிக்கிறதே...வலிக்கவில்லையா... பைத்தியக்காரனாக உணரவில்லையா ?! ஆண்ட 5 ஆண்டுகளில் குடமுழுக்கு நடத்திய அந்த 4000 கோயில்களில் தமிழ் முழங்க வேண்டும் என்று திமுக அரசு உறுதியான முடிவு எடுக்காமல் தமிழிலும் வழிபாடு செய்யலாம் என்று கூறியபோது...வலிக்கவில்லையா... பைத்தியக்காரனாக உணரவில்லையா ?! வெள்ளைக்கலர் சட்டைப்பைகளில் அண்ணா, கருணாநிதி படத்தை வைத்துக்கொண்டு சுற்றிய திமுகவினர் கடவுள் படங்களை வைத்துக்கொண்டு சுற்றத் தொடங்கியபோது வலிக்கவில்லையா... பைத்தியக்காரனாக உணரவில்லையா ?! கே.என்.நேரு திருப்பதி உண்டியலில் 44 லட்சம் போட்டபோது....வலிக்கவில்லையா... பைத்தியக்காரனாக உணரவில்லையா ?! கே.என்.நேருவும், அன்பில் மகேஷும் சட்டநாதர் கோயிலுக்குச் சென்று கும்பிட்டபோது வலிக்கவில்லையா... பைத்தியக்காரனாக உணரவில்லையா ?! இப்படி கேட்டுக்கொண்டே போகலாம். அத்தனை இருக்கு. அவ்வளவு ஏன்...'திராவிட' என்பதே 'த்ரவைத்' எனும் சம்ஸ்கிருதச் சொல்தான். அதையே இயக்கங்களுக்கு பெயராக வைத்துக்கொண்டு அதனை எதித்து நாடகமாடிக்கொண்டிருக்கும்போது வலிக்கவில்லையா... பைத்தியக்காரனாக உணரவில்லையா ?! இன்னும இந்த உலகம் உங்களை நம்புதுன்னு நீங்க நம்பிட்டு இருக்கீங்க!? துரைமுருகன் மீது என்ன ஆத்திரம் தெரியுமா இந்த கீ.வீரமணியின் பக்தர்களுக்கு ?! "பெரியார் வந்தார், மணியம்மையை கூட்டிச்சென்றார் திமுக உருவானது" என்று ஒரே வரியில் திமுக வரலாற்றையே சொன்னார் துரைமுருகன். அப்போது உடனே கொந்தளித்தவர் வேறு யாருமல்ல ஆசிரியர் கீ.வீரமணி. அதற்குப் பதில் இப்படிக் கொடுத்தார் துரைமுருகன், "நான் சொன்னது வீரமணிக்கு வருத்தம் போல அதனால் அதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று. வே.ஆனைமுத்து எழுத்துக்களை வாசித்தவர்களுக்கு நன்கு புரிந்திருக்கும் துரைமுருகன் பேசியது என்னெவென்று. அந்த ஆத்திரத்தை இப்போது தீர்த்துக்கொள்கிறார்கள் போல. தமிழில் வழிபாடு, தமிழில் புதுமனை புகுவிழா, தமிழில் திருமணம் எனத் தமிழர்கள் நாங்கள் கோரி வருகிறோம். அப்படிக் கோரி இருந்தால் கூட பரவாயில்லை. மாறாக துரைமுருகன் மீது மட்டும் பொங்குவது இதனாலோ?! அப்புறம் இதே வலியை, பைத்தியக்காரனாகிய வருத்தத்தை மு.க.ஸ்டாலின் மீதும் காண்பிக்க வேண்டியதுதானே...என்னங்கயா துர்கா அம்மா இப்படி பண்றங்களே நாங்க என்ன பைத்தியகாரர்களா என்று !? கேட்டால்...அது ஸ்டாலின் அல்லவே அது அவரது மனைவிதானே என்பார்கள். அதுபோலவே இதுவும் துரைமுருகன் அல்லவே துரைமுருகன் பெயர்த்திதானே..! --தமிழன் கரிகாலன் 03/11/26
98
முதலமைச்சரை விமர்சிப்பது குற்றமல்ல! காவல்துறை ஆளுங்கட்சியின் ஏவல்துறையல்ல! கருத்துச் சுதந்திரம், அரசியல் சகிப்புத்தன்மை, காவல்துறையின் நடுநிலைமை குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ரமேஷ் முக்கியத் தீர்ப்பு! சாதாரணக் குடிமகனின் உரிமைகள் குறித்து நீதிபதி எழுப்பிய கேள்விகள் என்ன? விரிவான செய்தியை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/madras-high…
1
2
440
#BREAKING #தற்போதையசெய்தி ஜெம் வீரமணிக்கு உடந்தையாக இருந்த 'வாட்ச்மேன்' கைது! சிசிடிவி கேமராவைத் திருப்பியதாக SIT அதிரடிக் குற்றச்சாட்டு இரண்டு போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்ட சீனிவாசன் புழல் சிறையில் அடைப்பு! முழுச் செய்தியை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/gem-veerama…
2
2
337