J Kamatchi (@Kamatchitvk) header
J Kamatchi (@Kamatchitvk) profile picture

Kamatchi Jayakrishnan | MLA - Pallavaram Constituency | Chengalpattu North District Secretary, Tamilaga Vettri Kazhagam | @TVKVijayHQ

Chennai, India
Joined April 2026
Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)Photo by J Kamatchi (@Kamatchitvk)
பல்லாவரம் 26-வது வார்டில் பழுதடைந்த தெருவிளக்கு உடனடியாகச் சரிசெய்யப்பட்டது! பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 26-வது வார்டு மேற்குப் பகுதியில் உள்ள நாயுடு ஷாப் ரோட்டில் (Naidu Shop Road) கடந்த மூன்று நாட்களாகத் தெருவிளக்கு எரியாமல் இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இது குறித்துத் தகவல் அறிந்த பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்கள், பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்து உடனடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுத்ததன் பேரில், பழுதடைந்த தெருவிளக்கு சரிசெய்யப்பட்டு மீண்டும் ஒளிரச் செய்யப்பட்டது. மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தருவதே எங்களின் தலையாய கடமை! திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் #PallavaramMLA #NammaPallavaramUpdates #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #Pallavaram #ChengalpattuNorth
5
11
286
திரிசூலம் ஏரி தூர்வாரிச் சுத்தம் செய்யப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டன! திரிசூலம் ஏரியைத் தூர்வாரிச் சுத்தம் செய்து கரைகளைப் பலப்படுத்தும் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. மழைக்காலங்களில் நீர்நிலைகளைப் பாதுகாத்து, அப்பகுதி மக்களின் நலனை உறுதி செய்யும் வகையில் இப்பணிகள் உடனடியாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் நலனுக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் என்றும் எங்கள் பணி தொடரும்! திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் #PallavaramMLA #Thirusulam #LakeRestoration #WaterConservation #NammaPallavaramUpdates #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #Pallavaram #ChengalpattuNorth
2
37
1
100
1,338
பல்லாவரம் 21-வது வார்டு பெருமாள் நகரில் பாதாளச் சாக்கடை அடைப்பு சரிசெய்யப்பட்டது! பல்லாவரம் பகுதி, 21-வது வார்டுக்கு உட்பட்ட பெருமாள் நகரில் கடந்த இரண்டு வாரங்களாகப் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சீராக வெளியேறாததால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பொதுமக்களின் சிரமத்தை உணர்ந்த பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைத் தொடர்புகொண்டு உடனடி நடவடிக்கை எடுத்ததன் பேரில், பாதாளச் சாக்கடை அடைப்பு சரிசெய்யப்பட்டுக் கழிவுநீர் தடையின்றி வெளியேற வழிவகை செய்யப்பட்டது. இதன் மூலம் அப்பகுதி மக்களின் நீண்டநாள் சிரமத்திற்குத் தீர்வு காணப்பட்டு, சுகாதாரமான சூழல் ஏற்படுத்தப்பட்டது. மக்களின் அடிப்படைத் தேவைகளையும், சுகாதாரமான சூழலையும் உடனுக்குடன் உறுதி செய்வதே எங்களின் தலையாய கடமை! திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் #PallavaramMLA #NammaPallavaramUpdates #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #Pallavaram #ChengalpattuNorth
5
14
271
பழைய பல்லாவரம் 21-வது வார்டு அருள் முருகன் நகர் மெயின் ரோட்டில் பாதாளச் சாக்கடை அடைப்பு சரிசெய்யப்பட்டது! பழைய பல்லாவரம், 21-வது வார்டு, அருள் முருகன் நகர் மெயின் ரோட்டில் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் தேங்கி நின்றதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடு மற்றும் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவியது. பொதுமக்களின் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் கருத்தில் கொண்டு பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்கள், உடனடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுத்ததன் பேரில், பாதாளச் சாக்கடை அடைப்பு அகற்றப்பட்டு, தேங்கியிருந்த கழிவுநீர் வெளியேற்றப்பட்டுச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் கழிவுநீர் தேக்கப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமமின்றிச் சென்று வர வழிவகை செய்யப்பட்டது. மக்களின் பாதுகாப்பையும் அடிப்படைத் தேவைகளையும் உடனுக்குடன் உறுதி செய்வதே எங்களின் தலையாய கடமை! திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். #PallavaramMLA #NammaPallavaramUpdates #OldPallavaram #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #Pallavaram #ChengalpattuNorth
4
18
293
அஸ்தினாபுரம் 22-வது வார்டு பஜனை கோவில் தெருவில் பழுதடைந்த தெருவிளக்கு சரிசெய்யப்பட்டது! பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 22-வது வார்டு, அஸ்தினாபுரம் பகுதி, பஜனை கோவில் தெருவில் தெருவிளக்கு பழுதடைந்து எரியாமல் இருந்ததால், அப்பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் போதிய வெளிச்சமின்மை காரணமாகப் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விபத்துகள் ஏற்படும் அபாயமும் நிலவியது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்கள், உடனடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுத்ததன் பேரில், பழுதடைந்திருந்த தெருவிளக்கு சீரமைக்கப்பட்டு மீண்டும் ஒளிரச் செய்யப்பட்டது. இதன் மூலம் அப்பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் சென்று வர வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பையும் அடிப்படைத் தேவைகளையும் உடனுக்குடன் உறுதி செய்வதே எங்களின் தலையாய கடமை! திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். #PallavaramMLA #NammaPallavaramUpdates #Hasthinapuram #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #Pallavaram #ChengalpattuNorth
3
9
264
மக்கள் தலைவர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தலைவரின் பயணத்தையும் அவரைப் பற்றிய பதிவுகளையும் கொண்ட இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு, நூல் சிறப்பாக வெளிவர வாழ்த்துகளைத் தெரிவித்தேன். நூல்கள் அறிவை வளர்க்கட்டும்! வாசிப்பு சிந்தனையைச் செழுமைப்படுத்தட்டும்! #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #ChengalpattuNorth
1
6
22
363
இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பர் 26ஆம் நாளில், அதன் உயரிய நோக்கங்களையும் மாண்புகளையும் நினைவுகூர்வோம். நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அடிப்படை விழுமியங்களைப் போற்றி, நமது உரிமைகளையும் கடமைகளையும் உணர்ந்து, ஜனநாயகத்தின் வலிமையைப் பாதுகாப்போம். அனைவருக்கும் இனிய இந்திய அரசியலமைப்பு நாள் நல்வாழ்த்துகள்! #ConstitutionDay #SamvidhanDiwas #PallavaramKamatchi #PallavaramTVK #TVK
3
21
312
பல்லாவரத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 6 முக்கியக் கோரிக்கைகள்! பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சியையும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளையும் முன்னிறுத்தி, ஆறு முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாண்புமிகு அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களிடம் நேரில் வழங்கினேன். இதில், 1. மூவரசம்பேட்டை சாலை விரிவாக்கம். 2. திருநீர்மலையில் ரயில்வே மேம்பாலம் அமைத்தல். 3. பல்லாவரம் – குன்றத்தூர் சாலை விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்துதல். 4. பொழிச்சலூர் – கவுல் பஜாரில் வடிகால் வசதிகள். 5. நாகல்கேணி – திருநீர்மலை சாலை விரிவாக்கம். 6. பல்லாவரத்தில் விளையாட்டு அகாடமி அமைத்தல். மேலும், தொகுதியின் போக்குவரத்து, அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்குத் தேவையான கூடுதல் திட்டங்களையும் எடுத்துரைத்து, அவற்றை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தேன். பல்லாவரத்தின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்! #Pallavaram #PallavaramMLA #InfrastructureDevelopment #PublicService #ChengalpattuNorth #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing
1
17
86
891
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக அமைச்சரிடம் கோரிக்கை! தமிழக வெற்றிக் கழகத்தின் மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களை, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்கள் நேரில் சந்தித்து, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியத் திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை வழங்கி அவற்றை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தார். அவர் முன்வைத்த முக்கிய வளர்ச்சித் திட்டக் கோரிக்கைகள்: ▪️ மூவரசம்பேட்டை சாலை விரிவாக்கம். ▪️ திருசூலத்தில் ரயில்வே கேட்டை கடப்பதற்காக ரயில்வே மேம்பாலம் அமைத்தல். ▪️ பல்லாவரம் – குன்றத்தூர் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து தொடருதல். ▪️ பொழிச்சலூர் – கவுல் பஜார் பகுதிகளில் வடிகால் (Drainage) திட்டப் பணிகள். ▪️ நாகல்கேணி – திருநீர்மலை சாலை விரிவாக்கம். ▪️ பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் விளையாட்டு அகாடமி (Sports Academy) அமைத்தல். மேலும், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியின் போக்குவரத்து, அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்குத் தேவையான கூடுதல் திட்டங்கள் குறித்தும் அமைச்சரிடம் எடுத்துரைத்து, தொகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிக்கை வைத்தார். பல்லாவரம் தொகுதியின் வளர்ச்சி… மக்களின் நலன்… எங்கள் இலக்கு! #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #Pallavaram #ChengalpattuNorth #Pammal
7
51
362
4,710
அக இருளை நீக்கி, அன்பும் அமைதியும் நிறைக்கும் ஒளித் திருநாள்! 🪔✨ இல்லங்கள் தோறும் தீப ஒளி பரவட்டும்… இதயங்கள் தோறும் மகிழ்ச்சி மலரட்டும்… அனைவரின் வாழ்விலும் நம்பிக்கையும் நலமும் பெருகட்டும்! அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்! 🪔🙏 – திருமதி. J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் #KarthigaiDeepam #கார்த்திகைதீபம் #KarthigaiDeepamWishes #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #ChengalpattuNorth
5
26
345
மாணவர்களின் உயர்கல்விக் கனவுகளுக்கு நிதி ஒரு தடையாக இருக்கக் கூடாது! செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய மாபெரும் கல்விக் கடன் முகாமில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து சிறக்கட்டும்! #PallavaramKamatchi #PallavaramTVK #ChengalpattuNorth #TVK #TVKITWing
1
3
15
301
போலியோ இல்லாத உலகை உருவாக்குவோம்! இளம்பிள்ளைகளைப் போலியோ பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் நேரில் பங்கேற்று, குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமைத் தொடங்கி வைத்தேன். ஒவ்வொரு குழந்தைக்கும் போலியோ சொட்டு மருந்து கிடைப்பதை உறுதி செய்வது நம் அனைவரின் பொறுப்பு. பெற்றோர்கள் தவறாமல் தங்கள் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்கிடக் கேட்டுக்கொள்கிறேன். போலியோ இல்லா தலைமுறை – நம் பொறுப்பு! ❤️ திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் #PallavaramKamatchi #PallavaramMLA #PolioDrops #PulsePolio #ChildHealth #PallavaramConstituency #PublicHealth #PublicService
3
11
190
அனகாபுத்தூர் - பம்மல் பொதுநலச் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்பு! பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பம்மல் பகுதியில் அமைந்துள்ள அனகாபுத்தூர் - பம்மல் பொதுநலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பொதுநலச் சங்கங்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்வு காணும் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்கள் நேரில் கலந்துகொண்டு, பொதுநலச் சங்க நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து, மனுக்களைப் பெற்றுக்கொண்டார். மேலும் அப்பகுதியின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்துச் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். இந்நிகழ்வில் பொதுநலச் சங்க நிர்வாகிகள், குடியிருப்போர் நலச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர், பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். #PallavaramMLA #Anakaputhur #Pammal #ResidentsWelfareAssociation #PublicGrievance
4
18
408
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாம்! இளம்பிள்ளை வாதத்தை ஒழிக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாமைப் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்கள் நேரில் பார்வையிட்டு, குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கித் தொடங்கி வைத்தார். தொடர்ந்து முகாமில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்து, 5 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் போலியோ சொட்டு மருந்து வழங்குமாறு பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் சுகாதாரத் துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் #PallavaramMLA #PolioDrops #PulsePolio #ChildHealth #PallavaramConstituency
3
26
400
🗳️ வாக்காளர் சிறப்பு முகாம் – உங்கள் வாக்குரிமையை உறுதி செய்திடுங்கள்! வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களைச் சேர்த்தல், பெயர் மற்றும் விவரங்களைத் திருத்துதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம் நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. எந்தப் படிவம் எதற்காக? Form 6: புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல். Form 7: பெயர் நீக்கம் தொடர்பான விண்ணப்பம். Form 8: வாக்காளர் விவரங்கள் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம். 📅 முகாம் நாட்கள்: 21.11.2026 – சனிக்கிழமை 22.11.2026 – ஞாயிற்றுக்கிழமை 📍 இடம்: அவரவர் வாக்குச்சாவடிகள். தேவையான அடையாளச் சான்று, வயதுச் சான்று, முகவரிச் சான்று ஆகியவற்றின் தலா ஒரு நகல் மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேரில் சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் மற்றும் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்த்து, தேவையான திருத்தங்களை உரிய காலத்தில் மேற்கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன். வாக்குரிமை நமது உரிமை! விழிப்புணர்வுடன் செயல்படுவோம்! 🗳️ திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் #VoterSpecialCamp #VoterRegistration #Form6 #Form7 #Form8 #ElectionAwareness #VoterID #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #ChengalpattuNorth
2
12
379
கடலின் கரம் பிடித்து, நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் பங்காற்றும் மீனவப் பெருமக்களுக்கு உலக மீனவர்கள் தின நல்வாழ்த்துகள்! 🌊🐟 மீனவர்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் நலன் என்றும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். மீனவச் சகோதர, சகோதரிகளின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் மதிப்போம்! ❤️ – திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் #WorldFisheriesDay #மீனவர்கள்தினம் #FishermenWelfare #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing
1
8
306
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 9-வது வட்டத்தில் நீண்ட நாட்களாகச் சாலை வசதி சரிவர இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இதுதொடர்பாக இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகள் சார்பில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA அவர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரைத் தொடர்ந்து, உடனடியாக நேரில் சென்று சாலையின் நிலைமையை ஆய்வு செய்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், சாலைப் பணிகளை விரைந்து மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சாலை அமைக்கும் பணிகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இஸ்லாமிய ஜமாத் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி இஸ்லாமியப் பெருமக்கள் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்களை நேரில் சந்தித்து, தங்களது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர். மக்களின் கோரிக்கைகளைக் களத்தில் நேரில் ஆய்வு செய்து, தீர்வு காண்பதே மக்கள் பணி! களத்தில் என்றும்… மக்களுக்காக, மக்களுடன்!
5
41
112
3,753
ஆழ்ந்த இரங்கல் 🙏🖤 கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அன்பிற்கினிய அண்ணனுமான திரு. வி.எஸ். பாபு அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மக்கள் பணிக்காக அர்ப்பணித்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரது குடும்பத்தினருக்கும் கழகத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 🙏 – ஜெ. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்.
2
12
360
ஆழ்ந்த இரங்கல் 🙏 🖤 கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அன்பிற்கினிய அண்ணனுமான திரு. வி.எஸ். பாபு அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மக்கள் பணிக்காக அர்ப்பணித்த அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரது குடும்பத்தினருக்கும் கழகத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 🙏 – ஜெ. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
3
8
234
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனக்கெனத் தனி இடம்பிடித்த கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில், தாய்நாட்டின் விடுதலைக்காக அவர் ஆற்றிய தியாகத்தையும் துணிச்சலையும் போற்றுவோம். 🙏 சுதேசி உணர்வும் தன்னம்பிக்கையும் என்றும் நமக்கு வழிகாட்டட்டும்! – திருமதி J. காமாட்சி ஜெயகிருஷ்ணன், MLA செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் #VOCChidambaranar #வஉசிதம்பரனார் #கப்பலோட்டியதமிழன் #PallavaramKamatchi #PallavaramTVK #TVK #TVKITWing #ChengalpattuNorth
1
1
22
510