May17Movement (@May17Movement) header
May17Movement (@May17Movement) profile picture

Retired as account withheld in India | Follow @may17iyakkam

Joined November 2012
Photo by May17Movement (@May17Movement)Photo by May17Movement (@May17Movement)Photo by May17Movement (@May17Movement)Photo by May17Movement (@May17Movement)Photo by May17Movement (@May17Movement)Photo by May17Movement (@May17Movement)Photo by May17Movement (@May17Movement)Photo by May17Movement (@May17Movement)Photo by May17Movement (@May17Movement)Photo by May17Movement (@May17Movement)
தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களை மலேசியத் தமிழ் வரலாற்று ஆய்வு மாநாட்டில் பங்கேற்க அனுமதி மறுப்பதா? கீழடி குறித்த அறிவியல்பூர்வ ஆய்வு முடிவுகளை வெளியுலகம் அறிவதை தடுக்கும் முயற்சி! ஆய்வாளர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் தமிழர் வரலாற்று ஆய்வுகளையும் முடக்கும் ஒன்றிய மோடி அரசின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்! - மே பதினேழு இயக்கம் கீழடி அகழாய்வை மேற்கொண்டு, தமிழர் நாகரிகத்தின் தொன்மையை வெளிக்கொண்டு வந்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள், மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெறவுள்ள சர்வதேசத் தமிழ் வரலாற்று ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க ஒன்றிய அரசின் இந்தியத் தொல்லியல் துறை (ASI) அனுமதி மறுத்திருக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் இந்த தமிழின விரோத நடவடிக்கையை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. மலேசிய மாநாட்டில் பங்கேற்பதற்குத் தேவையான தடையில்லாச் சான்றிதழை (NOC) வழங்குவதற்கு, அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களிடம் முன் நிபந்தனைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. மாநாட்டில் அவர் ஆற்றும் உரையின் எழுத்து மற்றும் காணொளிப் பதிவுகளை இந்தியா திரும்பியதும் சமர்ப்பிக்க வேண்டும்; ASI அல்லது ஒன்றிய மோடி அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு மற்றும் கொள்கைகளுக்கு முரணான கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது; ASI அல்லது ஒன்றிய மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சனக் கருத்துகளை முன்வைக்கக் கூடாது என்பவையே அந்த நிபந்தனைகள். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளித்தால் மட்டுமே NOC வழங்கப்படும் என்று இந்தியத் தொல்லியல் துறை கூறியுள்ளது. இதேபோன்று, கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழர் நாகரிகத்தின் தொன்மையை பறைசாற்றும் கீழடி அகழாய்வின் தொடக்ககாலத்தை கி.மு. 8ஆம் நூற்றாண்டு வரை கொண்டு செல்லும் அறிவியல்பூர்வ ஆய்வு முடிவுகளை அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் முன்வைத்துள்ளார். இந்தக் காலக்கணிப்பை ஏற்க மறுத்த இந்தியத் தொல்லியல் துறை, அவரது ஆய்வறிக்கையில் திருத்தங்களைச் செய்ய வலியுறுத்தி வந்தது. ஆனால், தனது ஆய்வின் முடிவுகளுக்கு மாறாகத் திருத்தங்களைச் செய்ய அவர் மறுத்துள்ளார். இது அவரது தொழில்முறை நேர்மைக்கும் ஆய்வறத்திற்கும் இது சான்றாகும். அதேவேளை, தனது ஆய்வு முடிவுகள் அறிவியல்பூர்வமானது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். தமிழர் நாகரிகத்தின் தொன்மை நிறுவப்படுவது, இந்திய வரலாற்றை வேதங்களையும் புராணங்களையும் மையமாகக் கொண்டு கட்டமைக்கும் இந்துத்துவப் பார்வைக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. ஆரியப் பண்பாட்டையும் சமஸ்கிருதத்தையும் இந்திய நாகரிகத்தின் தொடக்கமாக முன்னிறுத்தும் வரலாற்றுப் புனைவுகளுக்கு, கீழடி போன்ற தொல்லியல் ஆய்வுகள் சவாலாக அமைகின்றன. இதனால்தான் தமிழர் வரலாற்றின் தொன்மையை வெளிப்படுத்தும் ஆய்வுகளைத் திருத்தவும், ஆய்வாளர்களைக் கட்டுப்படுத்தவும் ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கின்றன என்று மே பதினேழு இயக்கம் கருதுகிறது. இதன் பின்னணியிலேயே அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் மலேசியா மாநாட்டில் பங்கேற்பதை தடுக்க அவரது வெளிநாட்டுப் பயண அனுமதி மறுக்கப்படுவதை காண முடியும். ஒரு தொல்லியல் ஆய்வாளர் தனது ஆய்வின் முடிவுகளை உலகளாவிய ஆய்வரங்கில் முன்வைப்பதற்குக்கூட ஒன்றிய மோடி அரசின் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஏற்ப உறுதிமொழி அளிக்க வேண்டுமா? ஓர் ஆய்வு மாநாட்டில் அவர் முன்வைக்கும் கருத்துகள் மோடி அரசின் அரசியல் கொள்கைகளோடு ஒத்துப்போக வேண்டும் என்று கட்டுப்படுத்துவது எத்தகைய ஜனநாயக அணுகுமுறை? மோடி அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கக் கூடாது என்ற நிபந்தனை, ஆய்வாளரின் கருத்துச் சுதந்திரத்தையும் அறிவியல் ஆய்வின் சுதந்திரத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. ஆய்வின் முடிவுகளைத் தரவுகளின் அடிப்படையில் விவாதிப்பதற்குப் பதிலாக, ஆய்வாளரின் உரையையும் கருத்துகளையும் முன்கூட்டியே கட்டுப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒன்றிய பாஜக அரசின் விருப்பத்திற்கேற்ப ஆய்வு முடிவுகளை மாற்றி எழுதுமாறு ஓர் ஆய்வாளருக்கு நிபந்தனை விதிப்பது அறிவியல் ஆய்வின் அடிப்படைக்கே எதிரானது. ஆய்வறிக்கையில் மாற்றம் செய்ய மறுத்ததற்காக வெளிநாட்டுப் பயணத்தைத் தடுத்து நிறுத்துவது எத்தகைய பழிவாங்கும் நடவடிக்கை? இந்தியத் தொல்லியல் துறை என்பது அறிவியல் ஆய்வுகளுக்கான அமைப்பா அல்லது இந்துத்துவ அரசியலின் வரலாற்றுப் பார்வையைப் பாதுகாக்கும் அமைப்பா என்ற கேள்வி எழுகிறது. கீழடி அகழாய்வு என்பது ஒரு குறிப்பிட்ட ஆய்வாளரின் தனிப்பட்ட ஆய்வு மட்டுமல்ல. அது தமிழர் வரலாறு, பண்பாடு, நாகரிகம் குறித்த புரிதல்களை விரிவுபடுத்தும் முக்கியமான ஆய்வுப் பணி. கீழடியில் கிடைத்த தொல்லியல் சான்றுகளும் அவற்றின் அறிவியல் காலக்கணிப்புகளும் இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கே முக்கியத்துவம் வாய்ந்தவை. இத்தகைய ஆய்வுகள் திறந்த மனதுடன் விவாதிக்கப்பட வேண்டும். ஆய்வாளர்களுக்கு அச்சுறுத்தல் அல்லது நிர்வாகத் தடைகள் ஏற்படுத்துவதன் மூலம் வரலாற்று உண்மைகளை மறைக்கவோ, ஆய்வின் போக்கைக் கட்டுப்படுத்தவோ முடியாது. தமிழர் வரலாற்றைச் சிதைக்கவும், தமிழர் நாகரிகத்தின் தொன்மையை மறைக்கவும் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகளைத் தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். கீழடி ஆய்வுகள் வெளிப்படுத்தும் வரலாற்றுச் சான்றுகளை மறைப்பதன் மூலமோ, ஆய்வாளர்களை அச்சுறுத்துவதன் மூலமோ தமிழர் வரலாற்றை அழித்துவிட முடியாது. அமர்நாத் ராமகிருஷ்ணா போன்ற நேர்மையான ஆய்வாளர்களின் ஆய்வுப் பணிகளுக்கு ஆதரவாகத் தமிழர்கள் அனைவரும் உடன் நிற்பார்கள். எனவே, தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களின் வெளிநாட்டுப் பயண அனுமதி மறுப்பை உடனடியாக விலக்கி, மலேசியாவில் நடைபெறும் தமிழ் வரலாற்று ஆராய்ச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கத் தேவையான அனுமதியை எவ்வித நிபந்தனையுமின்றி வழங்க வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மேலும், தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் எவ்வித அரசியல் தலையீடுகளும் அச்சுறுத்தல்களும் இன்றி சுதந்திரமாக ஆய்வு மேற்கொள்ளவும், தங்கள் ஆய்வு முடிவுகளை உலகளாவிய ஆய்வரங்குகளில் முன்வைக்கவும் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் கோருகிறது. கீழடி ஆய்வறிக்கையை மாற்றும் முயற்சிகளை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டும். தமிழர் வரலாற்றை மறைக்க நினைக்கும் இந்துத்துவப் பார்ப்பனியத்தின் எந்தவொரு முயற்சிக்கும் எதிராகவும் மே பதினேழு இயக்கம் தொடர்ந்து போராடும். மே பதினேழு இயக்கம் 19/11/2026
2
11
20
196
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்.
5
4
69
*அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கையை நிறைவேற்றுக! UGC பரிந்துரைத்த ஊதியத்தை வழங்குக! 12 மாதங்களுக்கும் ஊதியம் வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடுக! - மே பதினேழு இயக்கம்* தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 6 கல்வியியல் கல்லூரிகள் என மொத்தம் 187 அரசு கல்லூரிகளில் சுமார் 8,741 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் முனைவர் பட்டம் (Ph.D), NET, SET/SLET போன்ற கல்வித் தகுதிகளைப் பெற்றவர்கள். பலர் 10 முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக் கல்லூரிகளில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், இத்தகைய கல்வித் தகுதியும் நீண்டகாலப் பணியனுபவமும் கொண்ட ஆசிரியர்களுக்கு இன்றுவரை பணிநிரந்தரமோ, உரிய ஊதியமோ, பணிப் பாதுகாப்போ வழங்கப்படவில்லை. அரசுக் கல்லூரிகளின் கல்விப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஆசிரியர்களைத் தற்காலிகப் பணியாளர்களாகவே வைத்திருப்பது மிகப்பெரிய சமூக அநீதி என மே பதினேழு இயக்கம் கருதுகிறது. 2006ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் கௌரவ விரிவுரையாளர்களைப் பணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு போராட்டங்களைத் தொடர்ந்து சிறப்புத் தேர்வு மூலம் பணி வழங்குவதாக அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு அதிமுக அரசும் நீண்டகாலமாகப் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்குச் சிறப்புத் தேர்வு நடத்தி பணிவரன்முறை செய்வதாக அறிவித்தது. இதற்காக 2020ஆம் ஆண்டு அரசாணை எண் 56 வெளியிடப்பட்டது. 2021ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையிலும் பத்தாண்டுகளுக்கு மேலாகத் தற்காலிகப் பணியில் உள்ளவர்களைப் பணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிகள் மாறினாலும் கௌரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை. கௌரவ விரிவுரையாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட 1,146 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்புவதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், 2024 ஏப்ரல் 2ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம், அரசாணை எண் 56-ன் அடிப்படையில் ஏற்கெனவே தொடங்கப்பட்ட பணிவரன்முறை நடவடிக்கையைத் தொடர்ந்து முடிக்க உத்தரவிட்டது. 2025 ஜூன் 26ஆம் தேதியும் மேல்முறையீட்டு வழக்கில் அந்த 1,146 பணியிடங்களைக் காலியாக வைத்திருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், கௌரவ விரிவுரையாளர்களின் பணிநிரந்தரப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அரசின் நிர்வாகக் குழப்பங்களுக்கும் கொள்கை மாற்றங்களுக்கும் ஆசிரியர்களின் எதிர்காலத்தைப் பலிகொடுக்கக் கூடாது. 2019 ஜனவரி 28ஆம் தேதி பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கௌரவ விரிவுரையாளர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்திப் பரிந்துரைத்தது. ஆனால், தமிழ்நாட்டில் தற்போது மாதம் ரூ.30,000 மட்டுமே வழங்கப்படுகிறது. 2026 ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மாத ஊதியம் ரூ.35,000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு செப்டம்பர் 1 முதல் வழங்கப்படும் என்று மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் உறுதியளித்திருந்தார். ஆனால், நவம்பர் முதல் மாத ஊதியத்தை ரூ.35,000 ஆக உயர்த்தி 12-11-2026 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் திருத்தம் செய்து, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையையும் வழங்கும் வகையில் திருத்தப்பட்ட அரசாணை வெளியிடப்பட வேண்டுமென்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மேலும், இந்த ரூ.5,000 உயர்வு போதுமானதல்ல. குறைந்தபட்சம் UGC பரிந்துரைத்த ரூ.50,000 ஊதியத்தை வழங்க வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மேலும், ஆண்டுக்கு 12 மாதங்களும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. பல்கலைக்கழகத் தேர்வுப் பணிகள், விடைத்தாள் மதிப்பீடு, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை மறுப்பது அநீதியாகும். பிற மாநிலங்களில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.40,000 முதல் ரூ.57,700 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் குறைவான ஊதியம் வழங்கப்படுவது ஏன் என மே பதினேழு இயக்கம் கேள்வி எழுப்புகிறது. நீண்டகாலமாகப் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களின் பணியை வரன்முறைப்படுத்தி, தகுதி மற்றும் பணியனுபவத்தின் அடிப்படையில் நிரந்தரப் பணியிடங்களில் நியமிக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. UGC பரிந்துரைத்த மாதம் ரூ.50,000 ஊதியத்தை ஆண்டின் 12 மாதங்களுக்கும் வழங்க வேண்டுமெனவும், பணிநிரந்தரம் செய்யப்படும் வரை மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியப் பயன்கள் உள்ளிட்ட அடிப்படைப் பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மேலும், கௌரவ விரிவுரையாளர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை உடனடியாக அறிவிக்க வேண்டும். கௌரவ விரிவுரையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தமிழ்நாடு தவெக அரசு விரைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். அரசுக் கல்லூரிகளின் கல்விப் பணியைத் தங்களது வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டு மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியமும் பணிப் பாதுகாப்பும் வழங்க மறுப்பது கல்விக்கும் சமூக நீதிக்கும் எதிரானதாகும். கௌரவ விரிவுரையாளர்கள் சலுகைகளைக் கோரவில்லை; தங்களது உழைப்பிற்கான உரிமையையும், கல்வித் தகுதிக்கும் பணியனுபவத்திற்கும் உரிய ஊதியத்தையும், எதிர்காலத்திற்கான பாதுகாப்பையுமே கோருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. மே பதினேழு இயக்கம் 17/11/2026
4
5
102
தமிழீழ மண்ணின் விடுதலைக்காக அயராது போராடிய பெருவீரராய் களம் கண்ட ஐயா.சிவாஜிலிங்கம் அவர்கள் இயற்கையெய்தினார் எனும் செய்தியை நம்பவோ, ஏற்கவோ இயலாத அதிர்ச்சியாக வந்தடைந்துள்ளது. தனது சிறுவயது முதலாக தமிழீழ மக்களின் அடிமைத்தளையை உடைத்து சிங்களத்தின் பிடியிலிருந்து வெளியேறி தனித்தேசம் படைக்க களம் கண்ட வீரராய் நாம் அவரை அறிந்துள்ளோம். மேதகு பிரபாகரனின் உற்ற தோழனாய், மாறுபட்ட கருத்துக்கொண்டவராய் வேறு அமைப்புகளில் பயணித்த காலத்திலும் தணியாத விடுதலை தாகம் கொண்டவர். வி.பு உருவாக்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் மிகமுக்கிய பங்கு வகித்தவர். 2009 பேரழிவின் போது பலரது உயிர்களைக் காத்தவர். மேதகுவின் இணையர் மதிவதனி அவர்களின் பெற்றோர்களை இலங்கையிலிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடம் கொண்டு சேர்த்த விடயத்தை அவர் சொல்ல நேரில் கேட்டுள்ளேன். ஐ.நா மனித உரிமை அவையில் சமரசமின்றியும், குழப்பமின்றியும் எழும் குரல் அவருடையது. எவ்வித வசதிகளையும் பற்றி அக்கறைகொள்ளாமல் தனக்கு கிடைத்த இடங்களில் தங்கியிருந்து தாயகப்பணியாற்றிய பெருமகனார். உடல்நலம் குன்றிய காலத்திலும் இடைவிடாது உழைத்தவர். தமிழர்களின் உரிமைக்காக உலகெங்கும் பயணித்தவர். தமிழீழ நிலப்பரப்பில் வந்திறங்கும் சர்வதேச கண்காணிப்பாளர்களிடத்தில் இடைவிடாது தமிழர் உரிமைக்காக முழங்கியவர். தமிழின அழிப்பில் பங்கெடுத்த கயவர்களை நோக்கி போர்க்குணத்தோடு எதிர்த்து நின்று போராடியவர். 2009 இன அழிப்பிற்கு பின்பு அங்கு எழுந்த சனநாயக வெகுமக்கள் எழுச்சிக்கு அவரால் இயன்ற பங்களிப்பை செய்தவர். சில மாதங்களுக்கு முன்பாக அவரிடம் பேசிய உரையாடல் நினைவிலாடுகிறது. அவரது குரலை இனி என்றென்றும் கேட்க இயலாது எனும் துயரம் வாட்டுகிறது. தமிழீழப் போராட்டத்தில் சாதியொழிப்பு எவ்வாறு நடைபெற்றது என்பதைக்குறித்து ஆவணப்பூர்வமாக விரிவாக ஐநாவின் பயணத்தின் பொழுது என்னிடம் எடுத்துரைத்ததை மறக்க இயலாது. புலம்பெயர் தேசத்தில் போருக்கு பின்பான காலகட்டத்தில் வசித்த போராளிகளைத் தேடித்தேடி சந்தித்து நட்பு பாராட்டியவர். பண்பானவர், தோழமை உணர்வு கொண்டவர், நகைச்சுவையோடு தன் இன்னல்களை எடுத்துரைக்கும் மனத்துணிச்சல் பெற்றவர் என அவரைப்பற்றி பேச ஏராளம் உண்டு. அவரது இழப்பு ஈடு செய்ய இயலாது. மாபெரும் தோழரை இழந்துள்ளது தமிழினம். தமிழீழ விடுதலைப்போராளி ஐயா.சிவாஜிலிங்கம் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் புரட்சிகர வீரவணக்கம் செலுத்துகிறோம். உங்கள் கனவு ஒரு நாள் வெல்லும், தமிழீழம் மலரும். திருமுருகன் காந்தி மே 17 இயக்கம்
1
3
6
113
ஒன்றிய-மாநில உறவு குறித்து ஆராயும் நீதிபதி குரியன் ஜோசப் குழு கலைக்கப்பட்டது மாநில சுயாட்சிக்கான முயற்சியை பின்னுக்குத் தள்ளும்! தவெக அரசின் முடிவை வன்மையாக கண்டிக்கிறோம்! கலைக்கப்பட்ட முடிவை திரும்பப் பெற்று குழு சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்! - மே பதினேழு இயக்கம் ஒன்றிய-மாநில உறவுகள் குறித்து ஆராய கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்டக் குழு கலைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு தவெக அரசின் இந்த முடிவு அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றிய அரசு அதிகாரங்களை தன்னிடம் குவித்து வரும் சூழலில், இந்த முடிவு கூட்டாட்சி மற்றும் மாநில சுயாட்சியை நோக்கிய முயற்சியில் பெரும் பின்னடைவை உண்டாக்கும் என மே பதினேழு இயக்கம் கருதுகிறது. நீதிபதி குரியன் ஜோசப் குழுவை கலைத்த தமிழ்நாடு தவெக அரசினை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது! ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே நிதிப் பகிர்மானம், அதிகாரங்கள் பகிர்வு, மாநில உரிமைகள், ஆளுநரின் அதிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு உறவுகள் குறித்து தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைகள் வழங்க ஓய்வுபெற்ற உச்சமன்ற நீதிபதி குரியன் ஜோசப் அவர்கள் தலைமையிலான ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்படுவதாக கடந்த 2025 ஏப்ரல் மாதம் அன்றைய திமுக அரசின் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்தார். ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி அவர்களும் தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் மு.நாகநாதன் அவர்களும் நீதிபதி குரியன் ஜோசப் குழுவில் இடம்பெற்றிருந்தனர். இக்குழு கடந்த 2026 பிப்ரவரி மாதம் தன் முதல் தொகுதி அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் வழங்கியது. அறிக்கையின் முதல் தொகுதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஆளுநர் நியமனத்தில் மாநில அரசின் பங்கு, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது, நீட் தேர்வை இரத்து செய்வது, மாநிலங்களின் மக்களவை எண்ணிக்கையை மாற்றக்கூடாது என கூட்டாட்சி நோக்கில் மாநில சுயாட்சியை முன்னிறுத்தும் வகையில் அறிக்கை அமைந்திருந்தது. குரியன் ஜோசப் குழு அமைக்கப்பட்ட போதும், அதன் முதல் தொகுதி அறிக்கை வெளியான போதும் மே பதினேழு இயக்கம் வரவேற்றது. ஆனால் ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டம் கடுமையாக எதிர்த்தது. தற்போது குரியன் ஜோசப் குழு கலைக்கப்பட்டதும் ஆர்எஸ்எஸ்-பாஜக வரவேற்கிறது. எனில், குரியன் ஜோசப் குழுவின் அமைக்கப்பட்டதன் நோக்கமும் அதன் பரிந்துரைகளும் ஒன்றிய பாஜக அரசின் எதிர்கால திட்டத்திற்கு அச்சுறுத்தலாக இருந்திருப்பதை அறிய முடிகிறது. தமிழ்நாடு தவெக அரசினால் இதனை கவனிக்க முடியவில்லையா? இல்லை, ஒன்றிய பாஜக அரசிற்கு இசைந்து போகும் முடிவை எடுத்துள்ளதா என்ற கேள்வியை மே பதினேழு இயக்கம் முன்வைக்கிறது. கூட்டாட்சி நோக்கில் தான் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கி இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் மாநிலங்களின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதும், அதிக அதிகாரங்களை தன்னகத்தே குவிப்பதுமாக ஒன்றிய அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன. குறிப்பாக, ஒன்றிய பாஜக அரசு ஆட்சியில் மாநிலங்களின் அதிகாரங்களை முற்றிலும் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதில் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மையாக உள்ளது. மாநிலங்கள் ஒப்புதலின்றி அரசமைப்புச் சட்டத்திருந்தங்கள் மேற்கொள்வது, பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரங்களில் மாநிலத்தில் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் வகையில் சட்டமியற்றுவது, மாநிலங்கள் இயற்றும் சட்டங்களை ஏற்க மறுப்பது, பாரபட்ச நிதிப் பகிர்மானம், நிபந்தனைகளோடு நிதிப் பகிர்வு, மாநிலங்களின் தனித்தன்மையை ஏற்காது, பன்முகத் தன்மைக்கு எதிராக நாடு முழுவதும் ஒற்றைத்தன்மையை உருவாக்க முயல்வது... இப்படியாக கூட்டாட்சி சமநிலையை குலைத்து, மாநில சுயாட்சிக் கனவினை நசுக்கும் செயலில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபடுகிறது. இந்தச் சூழலில் குரியன் ஜோசப் குழு அமைக்கப்பட்டது முக்கிய கவனம் பெற்றது. 1969ல் ராஜமன்னார் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு 1971ல் அளித்த அளித்த அறிக்கை அப்போது நாட்டையே குலுக்கியது. ராஜமன்னார் அறிக்கையின் பரிந்துரைகளை 1974ல் சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய-மாநில உறவுகள் குறித்து ஆராய ஒன்றிய அரசு சர்க்காரிய கமிசனையும், பிற்பாடு பூஞ்ச் ஆணையத்தையும் அமைத்தது. ஆக, ராஜமன்னார் குழு வழியொட்டி அமைக்கப்பட்ட குரியன் ஜோசப் குழு எவ்விதத்திலும் தவறானதல்ல. அரசியலமைப்புக்கு விரோதமானதல்ல. ஒன்றிய அரசுக்கு எதிரானதுமல்ல. குரியன் ஜோசப் அறிக்கையினால் தவெக அரசு நெருக்கடிக்குள்ளாக்கப்படுவோமோ என்று அச்சப்படுவதில் அர்த்தமேயில்லை. தமிழ்நாட்டின் உரிமைகளை காக்க வேண்டிய கடமை தவெக அரசிற்கு உள்ளது. ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டின் உரிமைகளை நசுக்கும் போது ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாக ஒன்றிய பஜாக அரசை எதிர்த்து போராட வேண்டிய முதன்மைப் பணி தவெக அரசுக்கு உள்ளது. அந்த நம்பிக்கையில் தான் தவெக அரசை தமிழர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள். மாறாக, ஒன்றிய பாஜக அரசுடன் இணக்கமாக செல்ல தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுப்பதை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. மாறாக, ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து போராட தைரியமற்ற கோழை அரசாகவே தவெக அரசை தமிழ்நாட்டு மக்கள் கருதுவார்கள். தமிழ்நாட்டை அரசாள்வது வெறும் நிர்வாகப் பணி மட்டுமல்ல என்பதை தவெக அரசு புரிந்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய திட்டமிடல்கள் அரசின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும். முந்தைய ஆட்சியாளர்கள் அமைத்துவிட்டார்கள் என்பதற்காக குரியன் ஜோசப் குழுவை கலைத்தது தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கான கட்டுமானத்தை தகர்க்கக் கூடிய செயலாக மே பதினேழு இயக்கம் கருதுகிறது. கொள்கை சார்ந்த முடிவுகள் எடுப்பதும் அதன்மீது உறுதியாக இருப்பதும் இன்றியமையாததாகும். திராவிடம்-தமிழ்த்தேசியம் எனபதை கொள்கையாகக் கொண்ட தவெக அரசு, அதன் அடித்தளத்தை தகர்க்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசின் அதிகாரக் குவிப்பிற்கு சாதகமாக குரியன் ஜோசப் குழுவை கலைத்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் தனித்தன்மையை தவெக அரசு பலியிட்டுள்ளதாக மே பதினேழு இயக்கம் கருதுகிறது. குரியன் ஜோசப் குழு கலைக்கப்பட்டதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்ட ஆணையமே அப்பணியை செய்யும் என்பது ஏமாற்று வேலை. சட்ட ஆணையத்தின் சமீபகால செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளன. போதாக்குறைக்கு தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக தமிழ் எழுதப் படிக்க தெரியாத கன்னடரான திரைப்பட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டு உள்ளார். இப்படியாக தவெக அரசின் செயல்பாடுகள் ஒன்றிய பாஜக அரசிடமிருந்து தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கும் என்பதில் நம்பிக்கையளிக்கவில்லை. மாண்புமிகு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் தவறான வரலாற்றுப் பக்கத்தில் இடம்பெற வேண்டாம். தமிழ்நாடு தவெக அரசு குரியன் ஜோசப் குழு கலைக்கும் அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. அதே குழு சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, அதன் முழு அறிக்கையை பெற வேண்டும். அறிக்கையின் பரிந்துரைகளை மக்கள் மன்றத்தில் வைத்து, விவாதித்து அதன் மீது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது தவெக அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் மீட்டெடுக்கும். மே பதினேழு இயக்கம் 07/11/2026
4
20
43
536
கொண்டாடுவோம் நவம்பர்-1 தமிழ்நாடு நாளை. இந்நாளில் தமிழ்நாட்டை எல்லை காக்க போராடியவர்களையும், தமிழ்நாட்டின் இறையாண்மையை காக்கவும், உரிமைகளை மீட்டெடுக்கவும் போராடிய, ஈகம் செய்த ஒவ்வொருவரையும் போற்றி நினைவுகூர்வோம்.
2
8
13
167
திருவாரூரில் நவ. 1, தமிழ்நாடு நாள் விழா பொதுக்கூட்டம்! தமிழ் மொழி காக்க தற்போது திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நடைபயணத்தின் நிறைவாக திருவாரூரில், 'நவம்பர் 1 தமிழ்நாடு நாள் மற்றும் தமிழ் காப்பு நடைபயணம் நிறைவு விழா' பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. நேரம்: நவம்பர் 1, 2026 ஞாயிறு மாலை 6:30 மணி இடம்: சகாரா சூப்பர் மார்க்கெட் எதிரில், திருவாரூர் சிறப்புரை: தோழர் திருமுருகன் காந்தி அனைவரும் வருக. மே பதினேழு இயக்கம் 9884864010
1
2
1
7
227
'அவுட்சோர்ஸ்' செய்யப்படும் தமிழ்நாடு அரசுப் பணியிடங்கள்! இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் சமூகநீதிக்கு எதிரான த.வெ.க. அரசின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம் @CMOTamilnadu @TVKVijayHQ @AadhavArjuna @BussyAnand தமிழ்நாட்டில் சாமானிய மக்களின் அரசுப் பணி கனவைச் சிதைக்கும் வகையில், அரசு வேலைவாய்ப்புகளை வெளிமுகமை (Outsourcing) மூலம் நிரப்பும் நடைமுறையை நிறுவனமயமாக்கும் முயற்சியில் த.வெ.க. அரசு இறங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அரசின் இந்த நடைமுறை அரசுப் பணியிடங்களுக்கான இட ஒதுக்கீட்டை மறைமுகமாக ஒழித்துக்கட்டக்கூடும். சமூகநீதிக்கு எதிரான இந்த நடைமுறையை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதித்துறை, 21-10-2026 அன்று வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பின்படி, அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசின் பிற அமைப்புகளுக்குத் தேவையான பணியாளர்களை வெளிமுகமை மூலம் வழங்கும் முகமையாக ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (OMCL) நியமிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசு வேலைவாய்ப்புகளை நேரடியாக அரசே நிரப்புவதற்குப் பதிலாக, ஓர் இடைநிலை நிறுவனம் வழியாக தனியார் நிறுவனங்களிடமிருந்து ஆட்களைப் பெற்று, பணியாளர்களைத் தேர்வு செய்து பணியமர்த்தும் நடைமுறைக்கு அரசு அதிகாரபூர்வ அங்கீகாரம் வழங்கியுள்ளது. அயல்நாட்டில் வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் அரசு நிறுவனமாக செயல்பட்டு வந்த OMCL நிறுவனம், 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் சில உள்நாட்டு பணியிடங்களை நிரப்ப பயன்படுத்தப்பட்டது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அதிகாரபூர்வ அவுட்சோர்சிங் நிறுவனமாக மாற்றப்பட்டது. கடந்த காலங்களில் குறிப்பிட்ட அளவில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த வெளிமுகமைப் பணியமர்த்தல் முறையை நிறுத்துவதற்குப் பதிலாக, அதனை மேலும் விரிவுபடுத்தி, ஒரே அரசு நிறுவனத்தின் கீழ் ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்த த.வெ.க. அரசு முடிவெடுத்திருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது. குறிப்பாக, தூய்மைப் பணியாளர்கள் (Sweeper), சுகாதார ஊழியர்கள், ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட தொடக்கநிலைப் பணியிடங்கள், சாமானிய மற்றும் உழைக்கும் மக்களின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அரசுப் பணிக்குள் நுழைவதற்கான முக்கியமான வாயில்களாக உள்ளன. இத்தகைய பணியிடங்கள் நேர்மையான, வெளிப்படையான அரசுப் பணியாளர் தேர்வு நடைமுறைகளின் கீழோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமோ நிரப்பப்பட வேண்டும். ஆனால், வெளிமுகமை முறையின் மூலம் இப்பணியிடங்களை நிரப்புவது, நிரந்தர வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளைக் குறைப்பதோடு, பணம் படைத்தவர்களும் தகுதியற்றவர்களும் பணியமர்த்தப்படும் சூழலை உருவாக்கும். தனியார் நிறுவனங்கள் மூலம் பணியாளர்களை பெறுவது ஊழலுக்கு வழிவகுப்பதோடு, இட ஒதுக்கீடு முறையை பயனற்றதாக்கிவிடும். அது நாளடைவில் இட ஒதுக்கீட்டு முறையை ஒழித்துக்கட்டும். மேலும், தமிழ்நாட்டு அரசுப் பணி தமிழர்களுக்கே என்பதை கேள்விக்குறியாகிவிடும். சமூகநீதியை நிலைநாட்டும் அரசு என கூறிக்கொள்ளும் த.வெ.க. அரசு, தனியார் நிறுவனங்களின் தலையீட்டை அனுமதிப்பதன் மூலம் சமூகநீதிக்கு எதிராகச் செயல்படுகிறது. ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படாமலும், புதிய பணியிடங்கள் உருவாக்கப்படாமலும், தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் பணி நிரந்தரம் குறித்த சிக்கல் தீர்க்கப்படாமலும் அரசு நிர்வாகம் சீர்குலைந்து போயுள்ள நிலையில், தனியார் நிறுவனகள் மூலம் பணியிடங்கள் நிரப்புவது என்ற முடிவு ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் நிலைகுலையச் செய்துவிடும். மேலும், அரசு ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு, ஊதியம் முறைப்படுத்தல், சமூகப் பாதுகாப்பு மற்றும் இடஒதுக்கீடு ஆகியவற்றின் நடைமுறைச் செயல்பாடு குறித்தும் இந்த அரசிற்கு எந்த கவலையும் அக்கறையம் இல்லையோ என்கிற கேள்வியை எழுப்புகிறது. அரசே உழைப்புச் சுரண்டலில் ஈடுபடுவது தவறான முன்னுதாணரத்தை உருவாக்கும். திமுக, அதிமுக ஆட்சிகளில் தனியார் நிறுவனங்கள் வழியாக அரசு அலுவலகங்களுக்குப் பணியாளர்கள் வழங்கப்பட்டபோது, அந்த ஒப்பந்தங்களின் பின்னணியில் அரசியல் கட்சிகளுக்கும் அமைச்சர்களுக்கும் ஆதாயம் இருப்பதாகத் த.வெ.க. தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அப்படியான நடைமுறைகளை எதிர்ப்பதாகக் கூறிய த.வெ.க., இன்று அதே வெளிமுகமை முறையை ஒழிப்பதற்குப் பதிலாக, அதை ஒரே அரசு நிறுவனத்தின் கீழ் கொண்டுவந்து நிறுவனமயமாக்குவது ஏன்? தனியார் நிறுவனங்கள் வழியாக நடந்த வெளிமுகமைப் பணியமர்த்தலை ஓர் அரசு நிறுவனத்தின் வழியாகச் செயல்படுத்துவதால் மட்டுமே அந்த நடைமுறை வெளிப்படையானதாகவோ, ஊழலற்றதாகவோ, சமூகநீதிக்கு உகந்ததாகவோ மாறிவிடுமா? பணியாளர் தேர்வு, ஒப்பந்தங்கள், ஊதிய நிர்ணயம், நிர்வாகச் செலவுகள், இடஒதுக்கீட்டின் செயல்பாடு மற்றும் ஒப்பந்ததாரர்களின் பொறுப்புடைமை ஆகியவற்றில் முழுமையான வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்படாவிட்டால், இந்த நடைமுறை நிச்சயமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஊழலுக்கும் அதிகாரக் குவிப்புக்கும் வழிவகுக்கும் அபாயம் உள்ளது. மாற்று அரசியல் என்று சொல்லிக்கொண்டு, முந்தைய ஆட்சிகள் பின்பற்றிய மக்கள் விரோதக் கொள்கைகளையே புதிய வடிவில் தொடர்வது மாற்றமல்ல. அது பழைய முறையின் மறுவடிவமாகவே பார்க்கபடும்! ஆகவே, வெளிமுகமை மூலம் அரசுப் பணியிடங்களை நிரப்பும் இந்த முடிவை த.வெ.க. அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசு நிறுவனங்கள் வழியாகவோ தனியார் நிறுவனங்கள் வழியாகவோ இடைநிலை அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும் பணியமர்த்தல் முறைக்குப் பதிலாக, அரசுப் பணியிடங்களை உரிய தேர்வு அமைப்புகள் மூலம் நிரப்புவதை உறுதிப்படுத்த வேண்டும். அரசுப் பணிகள் என்பது மக்கள் சொத்து. அதை அரசின் நிர்வாகத் தேவையை நிறைவேற்றுவதற்கான ஒன்றாக பார்க்கும் அதிகாரிகளின் பேச்சை த.வெ.க அரசு தவிர்க்க வேண்டும். அவை சமூகநீதியையும், சமவாய்ப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய பொதுச் சொத்து. அவற்றை வெளிமுகமை ஒப்பந்தங்களின் வழியாகக் கட்டுப்படுத்தும் போக்கை அனுமதிக்க முடியாது. த.வெ.க. அரசின் இம்முடிவை மே பதினேழு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இம்முடிவை உடனே திரும்பப்பெற வலியுறுத்துகிறது. மே பதினேழு இயக்கம் 30/10/2026 9884864010
2
3
95
தமிழ் மொழி காக்க திருவாரூர் மாவட்டத்தில் நடைபயணம்! அக்டோபர் 30 வெள்ளி காலை 7:30 மணிக்கு மன்னார்குடி பெரியார் சிலை அருகில் தொடங்கி திருவாரூர் நோக்கி, கொரடாச்சேரி, நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல், நன்னிலம் வழியாக கிராமங்கள் தோறும் 3 நாட்கள் நடைபயணம் நடைபெறுகிறது. நடைபயணத்தின் இறுதியாக, நவம்பர் 1 ஞாயிறு மாலை 6:30 மணிக்கு, திருவாரூர் பனகல் சாலை சஹாரா சூப்பர் மார்க்கெட் எதிரில் நவ-1 தமிழ்நாடு நாள் விழா மற்றும் தமிழ் காப்பு பயணம் நிறைவு நாள் பொதுக்கூட்டம்! இன்பத் தமிழ் காக்க அழைக்கிறது மே பதினேழு இயக்கம்! நடைபயணத்தில், பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வாரீர்! தமிழா இன உணர்வு கொள்! தாய்த் தமிழை நினைவில் கொள்! மே பதினேழு இயக்கம் 9884864010
1
9
1
10
239
முல்லைப் பெரியாறு மீட்பு முதல் நியூட்ரினோ எதிர்ப்பு என சூழலியலை காக்கும் போராட்டத்தின் முன்னணி செயல்வீரர், சிந்தனையாளர் 'தமிழ் கனலி' ஐயா கம்பம் அப்பாஸ் அவர்கள் இன்று (26-10-2026) மறைவுற்றார்! அவரது மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது! தேனி மாவட்டத்தில் ஜான் பென்னிகுயிக் அவர்களால் கட்டி எழுப்பப்பட்ட முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து வந்தபோது அதற்கு எதிராக அப்பகுதி மக்களை திரட்டியதில் பெரும் பங்காற்றியவர் ஐயா கம்பம் அப்பாஸ் அவர்கள். முல்லைப் பெரியாறு மற்றும் வைகை பாசன பகுதிகளின் ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்து போராட்டங்களை வழிநடத்திய கம்பம் அப்பாஸ் அவர்கள் சட்ட ரீதியாக முல்லை பெரியாறு வழக்கை சரியான போக்கில் கொண்டு செல்வதற்கு பெருந்துணையாக நின்றார். மலைவாழ் மக்களின் வாழ்விட பாதுகாப்பு, மங்களதேவி கண்ணகி கோவில் மட்பு போராட்டம், நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டம் என்று தொடர்ந்து தமிழக உரிமை சார்ந்த போராட்டங்களில் பங்கெடுத்தவர். தமிழகத்தின் சூழலியல் சிக்கல் குறித்து எழுதியும் இயங்கியும் வந்த மனிதநேய பண்பாளர் ஐயா கம்பம் அப்பாஸ் அவர்கள். புகழ்பெற்ற சமூக சுற்றுச்சூழல் பேராசிரியரான அமிதா பவிஸ்கர் அவர்களின் வாட்டர் லைன்ஸ் என்ற புத்தகத்தில் இந்தியாவின் முக்கியமான நீர் ஆராய்ச்சி வல்லுநர்களில் ஐயா கம்பம் அப்பாஸ் அவர்களும் ஒருவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். ஐயா கம்பம் அப்பாஸ் அவர்களுக்கு கடந்த 2024ம் ஆண்டு மே 17 இயக்கத்தின் சிறந்த செயற்பாட்டாளர்களுக்கான 'தமிழ் கனலி' விருது வழங்கி பெருமகிழ்ச்சி அடைந்தோம்! அவரது இழப்பு தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம்; துயரில் பங்கெடுக்கின்றோம். 'தமிழ் கனலி' ஐயா கம்பம் அப்பாஸ் அவர்களுக்கு மே 17 இயக்கத்தின் புகழ்வணக்கம்!
4
4
143
மாணவர் அகிலன் மரணத்திற்கு காரணமான கோவை கே.கே.நாயுடு பள்ளி ஆசிரியர் விஜயகுமார் மற்றும் தலைமையாசிரியர் அருண்குமார் உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, மே 17 இயக்கம் சார்பாக இன்று (26-10-2026 திங்கள்கிழமை) மாலை 4:00 மணிக்கு சென்னை அண்ணா சாலை தாராபூர் டவர்ஸ் அருகில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. பல்வேறு முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் பங்கேற்கும் இந்த போராட்டத்திற்கு சமூகத்தின் மீது அக்கறை கொண்டு அனைத்து தோழர்களையும் பங்கேற்க வருமாறு அழைக்கின்றோம்.
1
90
சிதம்பரம் நகரில் மாணவன் அகிலனுக்கு நீதிகேட்கும் போராட்டம் இன்று மாலை நடந்தது. மிகக்குறுகிய காலத்திற்குள்ளாக மே17 இயக்கத்தோழர்களும் சனநாயக அமைப்புகளும் ஒன்றுதிரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. மே17 இயக்கத்தின் தோழர்கள் அகிலனுக்கான நீதிவெல்லும் போராட்டத்தை தமிழ்நாடெங்கும் கொண்டு செல்வார்கள். கோவையின் சாதிய கும்பலும் , அதிகாரிகளும் காப்பற்ற முனையும் குற்றவாளிகளை தமிழ்நாடெங்கும் அம்பலப்பத்துவோம். இனிமேலும் கோவையின் சாதிய வன்முறைகளை கோவை மாவட்டத்திற்குள்ளாக ஒருகாலும் முடக்க இயலாது.. தோழர் திருமுருகன் காந்தி மே பதினேழு இயக்கம் 25-10-26
4
5
133
கோவை கே.கே.நாயுடு பள்ளி மாணவன் அகிலன் மரணத்தின் பின்னணி! என்ன நடந்தது, காவல்துறை என்ன செய்கிறது.. விளக்குகிறார் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி.
2
20
1
20
311
தவெக அரசு, ரூ 35.00க்கும் அதிக விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்வது குறித்தும், கடந்த 2011முதலாக மின்சார கொள்முதல் தொடர்பாக எழுப்பி வரும் கோரிக்கைகளை, நடத்திய போராட்டங்களை முன்வைத்து, மின்சார வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையம், உயர்மட்ட அதிகாரிகள், மின்கட்ட உயர்வு, தனியார்மயமாக்கல், ஸ்மார்ட் மீட்டர், மின்சார கொள்முதல், மின்சாரதுறை அமைச்சர் என விரிவான ஊடக சந்திப்பை மே 17 இயக்கம் அக்டோபர் 13 அன்று நடத்தியது. அதில் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஊடகவியலாளர்களிடையே உரையாடிய காணொளி! யூடியூப் இணைப்பு: youtube.com/watch?v=UQ1cHK4I… மே பதினேழு இயக்கம் 9884864010
1
18
25
238
தமிழ்நாட்டுக்கு வருகை தரும் தமிழர் விரோத மோடிக்கு எதிரான மே பதினேழு இயக்கத்தின் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்! #GoBackModi #May17Movement #ThirumuruganGandhi #BlackFlagProtest
2
6
12
327
தமிழர் விரோத மோடி தமிழ்நாட்டிற்கு வருகின்ற ஒவ்வொரு முறையும் மே 17 இயக்கம் கருப்பு கொடி காட்டி தமிழ்நாட்டின் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய உரிய நிதியை வழங்காமல் இருப்பது, தமிழ்நாட்டில் இந்தியை திணித்து தமிழ் மொழியை அழிக்க முயற்சிப்பது, தமிழ் மொழிக்கான வளர்ச்சி நிதியை தடுத்து தமிழின் சிறப்பை மட்டுப்பட்டுத்த முயல்வது, தமிழரின் பெருமையை பறைசாற்றும் கீழடி அகழாய்வு அறிக்கையை ஏற்க மறுப்பது என தமிழ்நாடு-தமிழர்-தமிழ் விரோதமாக செயல்படும் மோடி, தமிழ்நாட்டுக்கு வருவதை தமிழர்கள் அனுமதிக்கப்போவதில்லை. கோவை-மதுரைக்கு மெட்ரோ ரயில் அனுமதியை மறுத்துவிட்டு, சென்னை மெட்ரோ திட்டத்திற்கான உரிய நிதியை வழங்காமல் இருந்துவிட்டு, தற்போது பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் வழித்தடத்தை திறந்து வைக்க வந்துள்ளார் மோடி. விழாவில் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசி தமிழர்களை இழிவுபடுத்துகின்றனர். இப்படியான தமிழர் விரோத மோடியே தமிழ்நாட்டுக்கு நுழையாதே, திரும்பி போ என்ற முழக்கத்தோடு இன்று (11-10-2026 ஞாயிறு) காலை சென்னை தி.நகர் பேருந்து நிலையம் அருகில் மே 17 இயக்கம் சார்பாக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் உட்பட 50-க்கும் மேற்பட்ட மே 17 இயக்கத் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தி.நகர் பெரியார் சிலை அருகில் கருப்பு கொடிகளுடன் ஒன்றுகூடிய தோழர்கள், மோடி அரசின் தமிழின விரோத செயல்பாடுகளை பட்டியலிடும் பதாகைகளை கையில் ஏந்தி, மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். இறுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தோழர்களையும் காவல்துறை கைது செய்தனர். #GoBackModi #BlackFlagProtest #May17Movement #ThirumuruganGandhi
1
5
8
118
'மோடிக்கு கருப்பு கொடி' தேர்தல் முறைகேடு, நீட் தேர்வு-இந்தி திணிப்பு, மதுரை-கோவை மெட்ரோ மறுப்பு ஆகியவற்றை கண்டித்து, ஆர்ப்பாட்டம். அக்-11. சனி காலை 10:00. பெரியார் சிலை, தி.நகர், சென்னை. #GoBackModi
1
4
6
129
பொள்ளாச்சி ஆனைமலை அருகே அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் மீது நடைபெற்ற கொடூர சாதியத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்! தாக்குதல் நடத்திய குடும்பத்தினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! - மே பதினேழு இயக்கம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை வட்டம், ஒடையகுளம் பேரூராட்சிக்குட்பட்ட புது அரிஜன காலனியில் வசித்து வரும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த முருகன் என்பவரை அருகில் வசிக்கும் மாற்றுச் சமூகத்தை சேர்ந்த ஆறுச்சாமி என்பவர் சாதிய அடிப்படையில் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனால் முருகன் தனது கையை இழந்துள்ளார். ஒடுக்கப்பட்ட சமூகத்தவர் மீது நடத்தப்பட்ட இந்தக் கொடூர சாதியத் தாக்குதலை மே பதினேழு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான முருகன் குடும்பத்தினரை மே பதினேழு இயக்கத் தோழர்கள் மருத்துவமனையில் வைத்து நேரில் சந்தித்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். தாக்குதலுக்குள்ளான, சுமார் 52 வயதுடைய முருகன் கட்டிடத் தொழிலாளராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி விஜயவாணி, ஒடையகுளம் பேரூராட்சியின் 13-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்கு பிரியங்கா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். முருகன்-விஜயவாணி வீட்டிற்கு அருகில் தான் தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தை சேர்ந்த ஆறுச்சாமி-சிவகாமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஆறு மாதங்களுக்கு முன்பு ஒடையகுளம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவியதையடுத்து, பேரூராட்சி சார்பில் வீடுகள் தோறும் சென்று கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பணியின் ஒரு பகுதியாக, சிவகாமி-ஆறுச்சாமி வீட்டிலும் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் கொசு ஒழிப்பு மருந்து தெளித்துள்ளனர். மருந்து தெளித்த பணியாளர்கள் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காரணமாகக் கொண்டு, அவர்களது சாதியைக் குறிப்பிட்டு சிவகாமி இழிவாகப் பேசியதோடு, இதுகுறித்து விஜயவாணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர். அதன் பின்னரும் சுமார் ஆறு மாதங்களாக சிவகாமி தொடர்ந்து சாதியைக் குறிப்பிட்டு அவமதிக்கும் வகையில் பேசி வந்ததாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதன் தொடர்ச்சியாக, பத்து நாட்களுக்கு முன்பு சிவகாமியின் தூண்டுதலின் பேரில் அவரது கணவர் ஆறுச்சாமி, விஜயவாணியின் கணவர் முருகனை அவரது வீட்டின் அருகே வந்து மிரட்டியுள்ளார். மேலும் ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ள விஜயவாணியின் மூத்த மகள் பிரியங்காவையும் மிரட்டும் வகையில் பேசியுள்ளார். இதனால் அவர் பதற்றத்திற்குள்ளாகி உடல்நலக்குறைவு ஏற்பட்டது மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். இந்நிலையில், 23.09.2026 அன்று அதிகாலை முதல் முருகனை கொலை செய்வதற்காக ஆறுச்சாமி அரிவாளுடன் பின்தொடர்ந்துள்ளார். அன்று மதியம் சுமார் 3 மணியளவில், முதியோர் ஓய்வூதியம் தொடர்பான பணிக்காக விஏஓ அலுவலகம் அருகே முருகன் மற்றும் அவருடன் வந்திருந்த மாற்றுத்திறனாளியான செந்தில்குமார் ஆகியோர் நின்றுகொண்டிருந்தபோது, பின்தொடர்ந்து வந்த ஆறுச்சாமி திடீரென அரிவாளால் முருகனைத் தாக்கியுள்ளார். தாக்குதலில் முருகன் கீழே விழுந்த நிலையில், அவரது வலது கையை தோள்பட்டைக்குக் கீழ் பகுதியில் பலமுறை வெட்டியதில் கை துண்டிக்கப்பட்டது. பொதுமக்கள் அங்கு திரண்ட நிலையில், மேலும் தாக்குதல் நடத்த முடியாமல் ஆறுச்சாமி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளர். பின்னர், ஆறுச்சாமி ஆனைமலை காவல் நிலையத்தில் சரணடைந்து, தமக்கும் முருகனுக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்ததாகவும், தனது மனைவியை முருகன் அவதூறாகப் பேசியதால் கோபத்தில் அரிவாளால் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். காவல்துறையும் நிலப்பிரச்சனையில் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து ஆறுச்சாமியை சிறையிலடைத்தது. உயிருக்கு போராடிய முருகனை பொதுமக்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார். துண்டிக்கப்பட்ட கையையும் பாதுகாத்து, ஐஸ் நிரப்பப்பட்ட பையில் எடுத்துக்கொண்டு, விஜயவாணி தனது கணவருடன் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். துண்டிக்கப்பட்ட கையை இணைப்பதற்கான அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. முருகன் கடுமையான வலியால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்தபோது, விஜயவாணி தனது கணவர் பல ஆண்டுகளாக திமுகவில் பணியாற்றி வருவதாகவும், வார்டு செயலாளராகவும் இருந்து பொதுமக்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து பணியாற்றி வந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் தனது கணவரின் கை துண்டிக்கப்பட்ட நிலையில், தானும் தனது கணவரும் மட்டுமே மருத்துவமனைக்கு வந்ததாகவும், தங்களுக்கு உரிய ஆதரவு கிடைக்கவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார். மேலும், சாதியைச் சொல்லி என் கணவரின் கையை வெட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனி அந்தப் பகுதியில் யாருக்கும் இதுபோன்ற சம்பவம் நடக்கக் கூடாது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நிலப்பிரச்சினை காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் சம்பவத்தின் பின்னணியில் சாதிய அவமதிப்பு மற்றும் சாதி அடிப்படையிலான பகைமை இருந்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும், தற்போது வரை இந்த வழக்கில் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. சம்பவத்தின் முழுப் பின்னணி, முன்வந்த மிரட்டல்கள், சாதியைக் குறிப்பிட்டு இழிவுபடுத்தியதாகக் கூறப்படும் பேச்சுகள், தாக்குதலின் தன்மை மற்றும் காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட புகாரின் விவரங்கள் ஆகியவை முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த தரவுகளின் அடிப்படையில் மே பதினேழு இயக்கம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது: * முருகன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து முழுமையான, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். * சம்பவத்தின் பின்னணியில் சாதிய அடிப்படையிலான வன்கொடுமை இருப்பதால், பொருந்தும் எஸ்சி/எஸ்டி (வன்கொடுமைத் தடுப்பு) சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். * பாதிக்கப்பட்ட முருகனுக்கு உயர்தரமான இலவச மருத்துவ சிகிச்சையும், செயற்கை உறுப்பு/மறுவாழ்வு உள்ளிட்ட தேவையான மருத்துவ மற்றும் நிதி உதவிகளும் வழங்கப்பட வேண்டும். * சாதியை அடிப்படையாகக் கொண்டு யாரையும் இழிவுபடுத்துவது, அச்சுறுத்துவது அல்லது வன்முறைக்கு உட்படுத்துவது போன்ற செயல்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். * சாதிய வன்கொடுமை செய்த குற்றவாளிகள் ஆறுச்சாமி மற்றும் காரணமாக இருந்த அவரது மனைவி சிவகாமி மீதும் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டு கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட வேண்டும். * பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து வாழும் ஒடையகுளம் போன்ற பகுதிகளில், சாதிய வெறுப்பு மற்றும் வன்முறைக்கு இடமளிக்காத வகையில் அரசு மற்றும் காவல்துறை உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். * பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். சாதியம் தமிழ்ச் சமூகத்தில் நிலவும் கொடூர மனநோய். தமிழ்நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும் சாதியம் முற்றிலும் வேரறுக்கப்பட வேண்டும். முருகன் போன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள் மீது நடத்தப்படும் சாதியத் தாக்குதல்கள் முழுமையாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சாதியம் குறித்த பெருமிதத்தை வளர்த்தெடுக்கும் காரணிகளை ஒழிப்பதோடு, சாதியம் இழிதன்மை உடையது எனும் கருத்தாக்கம் சமூகத்தில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதற்கான சமூக விழிப்புணர்வையும், கடுமையான சட்ட நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும். அதுவே சமூகநீதியாகும். மே பதினேழு இயக்கம் 9884864010 செப். 29, 2026
1
15
36
436
தந்தை பெரியாரின் 148வது பிறந்த நாளையொட்டி மே பதினேழு சார்பாக செப்டம்பர் 26 அன்று மாலை சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட்டில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அனைவரையும் அழைக்கிறோம்.
9
9
139
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் விடிவிற்காக வாழ்வின் இறுதி வரை போராடிய திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளில் (செப்.18) அவருக்கு மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.
1
78