Jayaraman Rajah Iyer (@QuGRIt) header
Jayaraman Rajah Iyer (@QuGRIt) profile picture

IBCM Technology - https://teapawt.net/t.co/UgfDjGO7TC LinkedIn: https://teapawt.net/t.co/Ygz5adr86L https://teapawt.net/t.co/Eq54gUJ7d0

Kondampatti, India
Joined September 2010
Photo by Jayaraman Rajah Iyer (@QuGRIt)Photo by Jayaraman Rajah Iyer (@QuGRIt)Photo by Jayaraman Rajah Iyer (@QuGRIt)Photo by Jayaraman Rajah Iyer (@QuGRIt)Photo by Jayaraman Rajah Iyer (@QuGRIt)Photo by Jayaraman Rajah Iyer (@QuGRIt)Photo by Jayaraman Rajah Iyer (@QuGRIt)Photo by Jayaraman Rajah Iyer (@QuGRIt)Photo by Jayaraman Rajah Iyer (@QuGRIt)Photo by Jayaraman Rajah Iyer (@QuGRIt)
Jayaraman Rajah Iyer retweeted
I’ve posted before about the remarkable traffic discipline of the people of Aizawl, their respect for lane etiquette and the city’s no-honking policy introduced in 2017. Today, I find myself reflecting on the outcome of that collective discipline, which this lady speaks of with such pride: the quietness of her city. In our bustling metropolises, quietness has become a rare luxury. As travellers, we have traditionally looked for breathtaking landscapes and magnificent monuments. But for the #SundayWanderer in me, & I bet for many others, the ‘quest for quiet’ may well become the most compelling reason to travel. (Video courtesy @RajeshwariRW)
34
106
7
647
33,822
Jayaraman Rajah Iyer retweeted
Darshanam of Jagadguru Shankaracharya Sri Shankara Vijayendra Saraswati Mahaswami ji
1
17
301
Jayaraman Rajah Iyer retweeted
#மகாபெரியவா சங்கராம்ருதம் - 1780 ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம் ஒரு பிரதோஷ நாள். தற்செயலாக கிராமத்து சிவாலயம் ஒன்றுக்குச் சென்றிருந்தார் மகாபெரியவர். அங்கே நந்திக்கும் ஈசனுக்கும் ஒரே சமயத்தில் அபிஷேகங்கள் தொடங்கின. பால், தயிர், சந்தானம், தேன், இளநீர் என்று அபிஷேகங்கள் நடந்து கொண்டிருந்தன. ஒரு ஓரமாக நின்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார், பரமாசார்யார். எல்லாம் நன்றாக நடந்து கொண்டிருந்த அந்த சமயத்தில், அர்ச்சனை செய்து கொண்டிருந்த குருக்கள், ஒரு நிமிடம் திகைத்து நின்றார். அவரது பார்வை, அபிஷேகத்துக்கான பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தையே துழாவித் துருவிப் பார்த்தது. ஏதோ ஒரு பொருளை அவர் தேடுவதும், அது அங்கே இல்லை என்பதும் அவரது செய்கையைப் பார்க்கும்போதே புரிந்தது. மகாபெரியவர் முன்னிலையில் இப்படி ஆகிவிட்டதே… என்ன செய்வது என்று புரியாமல் அவர் தவிக்க, பக்தர்களோ என்ன பிரச்னை என்று புரியாமல் பார்க்க, வதனத்தில் புன்னகை தவழ அமைதியாக நின்றிருந்தார், மகான். அந்த சமயத்தில் மிகச் சரியாக உள்ளே வந்த பக்தர் ஒருவர், மகான் இருப்பதையோ பக்தர்கள் கூட்டம் நிறைந்து இருப்பதையோ எதையும் கவனிக்காமல் வேகவேகமாக அர்ச்சகர் முன்னால் சென்று நின்றார். “மன்னிக்கணும்…பூஜையெல்லாம் தொடங்கறதுக்கு முன்னாலயே வந்து இந்த அபிஷேக திரவியத்தை தரணும்னு நினைச்சேன். வண்டி கிடைச்சு வர்றதுக்கு நேரமாகிடுச்சு….அபிஷேகமெல்லாம் முடிஞ்சிடுச்சா…இதை சேர்த்துக்க முடியுமா?” பரபரப்பாகக் கேட்டார். “என்ன அது?” என்பது போல அர்ச்சகரின் பார்வை உயர..”நெல்லிப்பொடி (காய்ந்த நெல்லிக்காய்த்தூள்) பிரதோஷ அபிஷேகத்துக்குத் தந்தால் நல்லதுன்னு சொன்னாங்க..அதனால கொண்டு வந்தேன்..!” கையில் இருந்த பொட்டலத்தை அர்ச்சகர் முன் நீட்டினார், அந்த பக்தர். நெல்லிப்பொடி என்று அவர் சொன்னதுதான் தாமதம், அர்ச்சகரின் கண்களில் ஒரு பிரகாசம் தோன்றியது. இதுதான்….இதைத்தான் தேடினேன்..என்பது போல அவசர அவசரமாக அதை வாங்கியவர், சட்டென்று பொட்டலத்தைப் பிரித்து அதில் இருந்த நெல்லிப்பொடியை சிவலிங்கத் திருமேனியில் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவினார். அப்படியே சிவலிங்கத் திருமேனி முழுவதுமாக நெல்லிப்பொடியால் நிறைந்தது. ஆர்த்தி காட்டினார் அர்ச்சகர். அபிஷேகத்துக்கான பொருட்களை எடுத்து வைத்த போது நெல்லிப் பொடியை எப்படி மறந்தேன் என்று தெரியவில்லையே..மகான் முன்னிலையில் நெல்லிப்பொடி அபிஷேகம் செய்யாமல் விட்டால் அது பெரும் குறையாகி விடுமோ என்றெல்லாம் மனதுக்குள் தவித்துக் கொண்டிருந்த அர்ச்சகர் முகத்தில் இப்போது ஒரு நிம்மதி நிறைந்திருந்தது. அபிஷேகங்கள், அலங்காரம் எல்லாம் முடிந்து, ஆர்த்தி காட்டினார், அர்ச்சகர். மகாபெரியவரிடம் பிரசாதங்களை கோயில் முறைப்படி கொடுத்தார். குறுநகை தவழ அதை ஏற்றுக்கொண்டு புறப்பட்டார் மகாபெரியவர். மகான் புறப்பட்ட கொஞ்ச நேரத்துக்குப் பிறகு ஏதோ நினைவு வந்தவராய், சரியான சமயத்தில் நெல்லிப்பொடி கொண்டு வந்த பக்தர் பெயரால் சுவாமிக்கு ஒரு அர்ச்சனை செய்ய நினைத்து, அவரைத் தேடினார், அர்ச்சகர். ஊஹூம்..எங்கேயும் காணோம். அவர் ஈசனுக்கு ஆராதனை செய்தபோது நந்திக்கு பூஜைகள் செய்து கொண்டிருந்த அர்ச்சகர், “என்ன நெல்லிப்பொடி கொண்டு வந்தவரைத் தேடறீங்களா? அவர் அப்பவே புறப்பட்டு விட்டார். நீங்க அர்ச்சனை செய்யறதுக்காக தேடினா, சந்திரசேகரன், அனுஷ நட்சத்திரம்னு சொல்லச் சொன்னார்.!” அதைக் கேட்டதும் அர்ச்சகருக்கு உடல் சிலிர்த்தது…”இது மகாபெரியவரோட பெயர், நட்சத்திரம் ஆச்சே…அப்படியானால் அதைக் கொண்டுவந்தவர்….?” அவர் மனதில் எழுந்த கேள்விக்கான விடையை சொல்லவும் வேண்டுமா என்ன? பிரதோஷ தத்துவம் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிரதோஷ காலம் சூரியன் மறையும் நேரத்தில் தொடங்குகிறது. இந்தப் பிரதோஷ நேரம் பரமேஸ்வரரை வழிபடுவதற்கு உகந்தது. அதாவது, ஈஸ்வரன் தனதாக்கிக் கொள்ளும் இந்த நேரம் மிகவும் மங்களகரமானது. இந்த நேரத்தில் உலகம் முழுவதும் ஓய்வெடுக்கிறது, மனமும் ஈஸ்வரனிடம் ஓய்வெடுக்க வேண்டும். இது பகலின் முடிவும் மாலையின் தொடக்கமும் ஆகும்; படைப்பு முடிந்து தன்னுள் ஓய்வெடுக்கும் நேரம். வில்லிலிருந்து எய்த அம்பை மந்திரத்தின் சக்தி திரும்பப் பெறுவதைப் போல, ஈஸ்வரன் இந்த நேரத்தில் தன்னால் உருவாக்கப்பட்ட அனைத்து சக்தியையும் திரும்பப் பெற்றுக் கொள்கிறார். ஈஸ்வரன் எல்லாவற்றையும் தனக்குள் உள்வாங்கிக் கொள்வதால், ஈஸ்வரனைத் தவிர வேறு எதுவும் இரண்டாவதாக இல்லாத நேரமாக இது அமைகிறது. சூரிய உதயத்தில் படைப்பும், சூரிய அஸ்தமனத்தில் அழிவும் நிகழ்கிறது. இரவின் தொடக்கம் பிரதோஷ நேரம் என்று அழைக்கப்படுகிறது. அதனால்தான் ஒவ்வொரு இரவும் அழிவின் நேரம் என்று அறியப்படுகிறது. படைப்பும் அழிவும் ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் தொடர்கிறது. இந்தப் பிரதோஷ நேரத்தில் பறவைகளும் பசுக்களும் கூட ஓய்வெடுக்கின்றன. குழந்தைகள் கூட விளையாடுவதை நிறுத்திவிட்டு வீட்டிலேயே தங்கிவிடுகிறார்கள். சூரிய ரசங்கள் மறைந்துவிடுகின்றன. மாலையின் இந்த நேரத்தில் அசுரர்களும் தீய ஆவிகளும் கூட ஓய்வெடுக்கும். இசை ஒலிக்கும் இடத்திலோ அல்லது திரையரங்கிலோ நாம் விரைந்து கூடுகிறோம். இந்த பிரதோஷ நேரத்தில் மட்டுமே, பரமேஸ்வரப் பெருமான் பரவசத்துடன் நடனமாடுகிறார். தனிமையில் தியானம் செய்வதற்கு இந்த நேரம் உகந்தது. இந்த விண்ணேற்ற நேரத்தில், பரம்பொருளான நடராஜர் நடனமாடுகிறார், அனைத்தும் அதனால் ஈர்க்கப்படுகின்றன. சுதந்திரமாக உலவும் தீய ஆவிகள் கூட அந்த நடனத்தில் மூழ்கிவிடுகின்றன, அவை யாரையும் தொந்தரவு செய்வதில்லை. இது ஒரு மாயாஜாலம் போல நிகழ்கிறது. ஆனால் அந்த மந்திரவாதி யாரையும் கண்மூடித்தனமாக்குவதில்லை, மாறாக நம்மை வேறொன்றின் (அவரது நடனத்தின்) பக்கம் ஈர்த்து, தான் விரும்புவதை அடைகிறார். சூரிய உதயத்தில் ஹரிப் பெருமானையும், சூரிய அஸ்தமனத்தில் சிவப்பெருமானையும் தியானிப்பது உகந்தது. நடராஜரின் நாமத்தை உச்சரிப்பதற்கு பிரதோஷ நேரம் உகந்தது. இவ்வாறு சிவனை வழிபடுவதற்காகக் கோயில்கள் கட்டப்படுகின்றன. எல்லா வீடுகளும் வழிபாட்டிற்கு ஏற்ற இடமாக இருக்காது. இந்த நோக்கத்திற்காகவே பிரம்மாண்டமான சிவன் கோயில்கள் கட்டப்படுகின்றன. பிரதோஷம் என்னும் மங்களகரமான நேரத்தில், பரமேஸ்வரர் உலகின் முழு சக்தியையும் தனக்குள் ஈர்த்துக் கொள்ளும்போது, நாம் அவரை வழிபட வேண்டும். அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம் ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம் சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
2
3
20
337
Jayaraman Rajah Iyer retweeted
ஸ்ரீ விநாயகர்பெருமாள் ஸ்ரீ ஸுப்ரமணிய ஸ்வாமி ஸ்ரீ பார்வதி தேவி ஸமேத ஸ்ரீ சந்திரசேகந்திர ஸ்வாமியின் அருள் பெற்று தாங்கள் வளமுடன் நலமாய் வாழ வேண்டுகிறேன் ... 💢🪔💢 இனிய காலை வணக்கங்கள் ... 🪷🕉️🕉️🕉️🪷 வாழ்க வளமுடன் ...
2
6
21
293
Jayaraman Rajah Iyer retweeted
Jagadguru Shankaracharya of Moolamnaya Sarvajna Shri Kanchi Kamakoti Peetham Sri Shankara Vijayendra Saraswati Mahaswami ji Vijaya Yatra to Gujarat. Visit to Archaeological Experience Museum Vadnagar Jaya Jaya Shankara 🙏 Hara Hara Shankara 🙏
1
19
142
1,724
Jayaraman Rajah Iyer retweeted
#MahaPeriyavaa KBR worked in TVS group of companies at Madurai. A devotee of Mahaperiyava, he would visit him whenever work permitted but all his decisions centered on the grace of Mahaperiyava. His first child, a daughter was afflicted by polio and he thought of her as a burden despite her cheerful nature as she never seem to consider her limitation as one. But those times were different. A girl child wasn’t welcomed as much as a son was and a physically limited girl child weighs on the mind of parents almost as a curse. As time flee, the girl grew up, completed her Masters. As soon as her academic result was revealed, KBR ran to Mahaperiyava and stood before him with stress running lines on his forehead and with squeezing palms. The Sage looked at him benevolently and understood the cause of his anxiety. KBR’s concern was who will ever marry his polio stuck daughter in this era when physical features were considered primary requisites for a bride? Our Saint looked at the devotee, smiled and gave away fruits as blessing. Yet the mortal he was, on return to Madurai  KBR could not totally leave his anxiety behind, started taking sleeping pills and kept praying that Guru will hail down a miracle. Within couple of months, like spring breeze blessings started manifesting. A proposal arrived from Pune as if by divine direction and as if the groom’s family knew of the bride’s limitations. Wedding was instantly fixed. Marriage was done in less than six months. The groom recently retired as Director of Finance from Videocon Industries in Aurangabad. The girl became an interior decorator and her Client included some Bollywood celebrities. Even their only son, a physician was married and they now have a grand daughter. What a happy ending...Jaya Jaya Sankara! Another instance happened in Vellore. About four decades ago this four year old child goes into a coma after an attack of meningitis and was admitted to CMC Vellore. As days passed, his condition showed no signs of improvement and neither did doctors recommend hope. Then the kid’s uncle, a devout devotee of Mahaperiyava arrived one evening. Brings out a packet of holy ash secured from Mahaperiyava from his pocket and and hands over to his parents for smearing on the child. Then he keeps a picture of Mahaperiyava under the bed. And leaves. The night passed by. In the morning, the boy’s health parameters miraculously show normalcy. There was no heaviness of the coma he had gone through neither was the memory loss that existed. He even starts to eat, regaining his memory. Obviously the doctors in the CMC would have been surprised  too. Instant healing. This boy has now grown up, is now in USA and teaches Vedanta. This man a devotee of Mahaperiyava had got into womanising since his twenties. He believed that the worldly sensual pleasures were God given as no atom moved without His consent. He would pray to his Guru even before his immoral actions and his defence was he was not forcing anyone. As he aged, he got weary of the habit and wanted to break the shackles. So he started praying to Mahaperiyava for relief from the chain that was around him. He was a gentleman otherwise, kind, compassionate and protective of the poor. But he was dismayed and disgusted with himself now. He began to pray to Mahaperiyava to get him out of the habit. He was having connects with eight ladies simultaneously when he sought help. Things moved faster than he imagined. His phone developed problems within a week and he lost some contacts. Couple of the liaisons went vanishing instantly. Someone fell seriously sick. Slowly, he realised some force beyond him was working and seven of the eight connections disappeared in a fortnight. Though he felt it was tough to get himself out of the rut, he boldly decided to act on the last contact by calling the relationship off by a direct call. It wasn’t easy as the habit that had caged him for over many decades gave him mood swings, depressions, boredoms and temptation to revert back. But by the grace of Mahaperiyava , he feels rescued now and saved. No deaddction programs were needed. Mahaperiyava can find the way, if you ask. It was all an absolute, swift miracle. Sarvam Sri Krishnarpanam🙏
7
13
95
1,192
Jayaraman Rajah Iyer retweeted
Jagadguru Shankaracharya of Moolamnaya Sarvajna Shri Kanchi Kamakoti Peetham Sri Shankara Vijayendra Saraswati Mahaswami ji
5
12
136
1,004
Jayaraman Rajah Iyer retweeted
A lesson in leadership from Mexico for the world: President Claudia Sheinbaum flew 21 hours to China in economy class, and that too the middle seat, and took an ordinary airport shuttle to the APEC summit. Mexico had earlier sold its $200 million luxury presidential aircraft, with the proceeds directed towards public priorities like hospitals. A powerful reminder that public office is a responsibility, not a licence for privilege.
184
295
30
1,653
52,567
Jayaraman Rajah Iyer retweeted
Jagadguru Shankaracharya Sri Shankara Vijayendra Saraswati Mahaswami ji fondly recollects and elucidates a beautiful shloka on Adi Shankaracharya that he had heard during the 1980s, sharing its profound meaning and significance.
1
12
104
1,038
Jayaraman Rajah Iyer retweeted
🚨🇷🇺President Putin: The more I learn about 🇮🇳India, the more interesting it becomes He praises India's multilingualism citing his recent conversation with PM Modi, says he is «simply amazed» by it: «Take, for example, the Indian civilization. An ancient civilization, & a very interesting one. The more I learn about it, the more interesting it becomes. I recently spoke with Prime Minister Modi and asked him, "How many people in the country speak the main language?" He says: "About 600 million" "And what is the total population of your country?" "One and a half billion" Only a third speak the language of the titular nation, and two thirds speak their own languages. Isn't it amazing? Simply amazing!»
10
132
6
749
29,550
Jayaraman Rajah Iyer retweeted
Jagadguru Shankaracharya Sri Satya Chandrashekharendra Saraswati Mahaswami ji कामाक्षी-करुणारूपं कामकोटि-जगद्गुरुम्। चिन्मूर्तिं कलये चित्ते शङ्कराचार्यमव्ययम् ॥ सत्यनारायणक्षेत्रात् सत्यव्रतमुपागतम्। आश्रये कामकोटीशं सत्यश्रीचन्द्रशेखरम् ॥ Jaya Jaya Shankara 🙏 Hara Hara Shankara 🙏
2
12
120
927
Jayaraman Rajah Iyer retweeted
1
15
1
112
1,256
Jayaraman Rajah Iyer retweeted
2
5
39
679
15
12
192
867
Jayaraman Rajah Iyer retweeted
Chandi havan Poornahuti performed with benign presence of Pujya Shankaracharya Swamiji at #Vadnagar, #gujarat- glimpses- 20 Nov. evening #kamakoti
1
8
69
1,002
Jayaraman Rajah Iyer retweeted
Experiences with Maha Periyava: Medicine for Kidney ailments Both the kidneys did not function. Survival was very difficult. He had spent a lot of money visiting several specialists and had taken the medicines prescribed by them, but all was in vain. The man came to Sri Maha Periyava and poured out his grief. Generally, Periyava showed kindness and compassion towards devotees who came with such problems, but on that day He spoke quite harshly. "People commit mistakes and adharma, and come here when they have a problem. They don't realise their faults at all. What can I do?" Why this sudden outburst from Periyava? No one could understand. After a while, Periyava said, "This man's ancestors had established a Trust for doing dharma activities. They had left behind land which gave a good yield. It was intended to erect water booths and carry out the dharma activities. But this man has sold the land, and gobbled up all the money". The man who came with kidney problems felt very guilty. "Henceforth, I will erect water booths and carry out the dharma activities", promised the man. Periyava at once softened. "Are you aware of vasambu (acorus calamus)? You will get it in traditional stores selling herbal medicines. Grind it and apply under your belly regularly", said Periyava. The man came again for darshan after about ten to twelve days. Even before Periyava could ask, he said, "There is no trouble now". How will there be trouble when the Sarveshwaran Himself has prescribed the medication...? Source: Maha Periyavaal Darisana Anubhavangal - Part 4 Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
11
60
1
370
6,425
Jayaraman Rajah Iyer retweeted
Sri Gurubhyo Nama: (NamaHa) ஶ்ரீ குருப்யோ நம: (நமஹா) இனிய காலை வணக்கம்...!!! Good Morning…!!!
3
1
20
147
Jayaraman Rajah Iyer retweeted
We should become worthy pātrās (recipients). We should become anugraha pātrās. There are many kinds of pātrās (vessels), such as brass, bronze, silver, and svarṇa (golden) vessels. We use them for cooking and during pūjās. All such vessels are useful for bhukti (material enjoyment) and for offering upacārā to Bhagavān. Even in the Maṭha, under Mahāperiyavā's instructions, they made a svarṇa cup to offer kṣīrānnam naivedyam. Even now, the suvāsinī bhikṣāvandanam group has offered a samarpanam of a svarṇa cup. All these pātrās are useful for upacārā and āhārā. Similarly, human beings too should be pātrās. For what purpose? We must become anugraha pātrās. In invitations and announcements, we often read statements such as, All of us join in performing this kainkaryam and pray that we may become pātrās of Pillaiyār’s anugraham. They say that they want to be pātrās to receive the anugraham. But when do we become anugraha pātrās? When we cultivate qualities such as bhakti, vinaya (humility), viveka (discrimination), viśvāsa (faith), priyam, and śraddhā (sincere dedication); act without ahaṅkāra (ego) and ostentation, and remain with unwavering bhakti, we attain the sthānam of a pātrā. What kind of pātrā? We attain the sthānam of an anugraha pātra. That is why Bhagavān says in the Bhagavad Gītā to give dāna to a worthy pātra: देशे काले च पात्रे च (deśe kāle ca pātre ca — at the right time, in the right place, and to a worthy recipient).Hara Hara Namaḥ PārvatīPataye | Hara Hara Māhādevā | #kamakoti #JagadguruVacanam
1
6
1
47
769
Jayaraman Rajah Iyer retweeted
ஹர ஹர ஶங்கர|ஜய ஜய ஶங்கர| காஞ்சி ஶங்கர|காலடி ஶங்கர| காமாக்‌ஷி ஶங்கர|காமகோடி ஶங்கர|| हर हर शंकर|जय जय शंकर| काञ्ची शंकर|कालडि शंकर| कामाक्षी शंकर|कामकोटि शंकर| काश्मीर शंकर| कारुण्य शंकर|| காஷ்மீர ஶங்கர| காருண்ய ஶங்கர|| Kashmira Shankara| Karunya Shankara|| #MahaPeriyava
15
9
1
86
523
Jayaraman Rajah Iyer retweeted
#மகாபெரியவா சங்கராம்ருதம் 1778 - பெரியவா என்னைப் பார்த்து, ‘சந்திரமௌலீஸ்வரர் பூஜைக்குத் தாமரைப்பூ கொண்டு வந்து குடுக்கறே… சர்தான்… ஆனா, ஒரு நாள்கூட பூஜைக்கு நீ இருக்கறதில்லையே..?‘னு கேட்டார். ‘வாஸ்தவம் பெரியவா… எனக்கான வேலை அப்படி. அதனால, இங்கே உக்கார்ந்து பூஜையைத் தரிசனம் பண்ண முடியலை பெரியவா. கேம்ப்புக்குள்ள நுழைஞ்சவுடனே தாமரைப்பூவைக் குடுத்துட்டு, உங்க சந்நிதானத்தை எட்டக்க இருந்து பார்த்துட்டு நமஸ்காரம் பண்ணிட்டு என் வேலையைப் பாக்க ஓடிடுவேன்‘னு சொன்னேன். லேசா புன்னகைச்ச பெரியவா, ‘இன்னிக்கு எல்லாருக்கும் உத்தியோகம்தான் பெருசா படறது‘னு சொல்லிட்டு, சிப்பந்திக்கு ஏதோ ஜாடை காமிச்சார். அவர் உடனே உள்ளே ஓடிப் போய் ருத்திராட்ச மாலை ஒண்ணு கொண்டு வந்தார். பெரியவாகிட்ட குடுத்தார். அந்த மாலையைப் பெரியவா தன் கையில எடுத்துண்டு அனுக்ரஹம் பண்ணார். அப்புறம் அந்த ருத்திராட்ச மாலையோட மத்த பிரசாதங்களையும் சேர்த்து வெச்சு எனக்குக் குடுத்தார். ருத்திராட்ச மாலையை ஸ்பெஷலா வரவழைச்சு என்கிட்ட பெரியவா கொடுத்த விதத்தைப் பார்த்ததும், அதை என் கழுத்துல போட்டுக்கச் சொல்றார்னு புரிஞ்சுது. சிப்பந்தியும் அதைக் கழுத்துல போட்டுக்கச் சொல்லி எனக்கு ஜாடை காமிச்சார். எனக்கோ தயக்கம்; பயம். ருத்திராட்சம் எவ்ளோ புனிதம்னு கேள்விப்பட்டிருக்கேன். அதுவும், நடமாடும் தெய்வம் சாட்சாத் பரமேஸ்வரன் கையால கெடைக்கிற ருத்திராட்சத்துக்கு அதிக சக்தி இருக்குமே… இதைக் கழுத்துல போட்டுண்டா ஓரளவு உண்மையோட நடந்துக்கணும். பொய் சொல்லக் கூடாதுனு புரிஞ்சுது. தயக்கத்தோட பெரியவாளைப் பார்த்தேன். ‘என்ன?‘னு ஜாடைல கேட்டார். ‘ஒங்க கையால ருத்திராட்சம் கெடைக்காதா… பாதுகை கெடைக்காதானு எத்தனையோ பேர் தவமா தவம் கெடக்கா. ஆனா, எந்தத் தகுதியும் இல்லாத எனக்கு சிவாம்சமான ருத்திராட்சம் குடுத்திருக்கேள். இதைப் போட்டுக்கற தகுதி எனக்கு இருக்கானு தெரியலை‘னு குரல் தேம்பிச் சொன்னேன். ‘ஏன் இப்படிப் பேசுறே?‘ ங்கிற மாதிரி ஜாடைல என்கிட்ட ஏதோ சொன்னார். ‘பெரியவா… நான் பாக்கறது அரசாங்க உத்தியோகம்… இந்த உத்தியோகத்துல எல்லா சந்தர்ப்பத்திலும் நேர்மையா இருக்க முடியாது. சில நேரங்கள்ல பொய் சொல்லும்படியா ஆயிடும். அது பெரிய அளவுல யாருக்கும் பாதகம் தராதுன்னாலும் பொய் பொய்தானே பெரியவா… அதனால இந்த ருத்திராட்ச மாலையைப் போட்டுக்கறதுல எனக்கு தயக்கம் இருக்கு பெரியவா‘னு சொன்னேன். அங்கிருந்த ஒரு சில பக்தாள்லாம் என்னை விசித்திரமா வேடிக்கை பார்த்தா. ஆனா, நான் எதைப் பத்தியும் கவலைப்படலை. பெரியவாகிட்ட உண்மையா இருக்கணும்னு தோணிச்சு. மனசுல பட்டதைச் சொல்லிட்டேன். ‘பரவால்லை… உங்காத்துக்கு எடுத்துண்டு போய் பூஜை ரூம்ல ஸ்வாமி படத்துல மாட்டி வெச்சுடு‘னு பெரியவா சொன்னார். அவர் சொன்ன விதத்தைப் பாத்தா, ‘இந்தக் காலத்துல ஸ்வாமி மட்டும்தான் பொய் பேசாம இருக்கார்‘ங்கிற மாதிரி எனக்குப் பட்டுது. பெரியவா சந்நிதிலேர்ந்து உத்தரவு வாங்கிண்டு வந்ததும், மொத வேலையா அந்த ருத்திராட்சத்தை ஆத்துல ஸ்வாமி படத்துக்குப் போட்டுட்டேன்” என்று பூர்த்தி செய்தார் கிருஷ்ணஸ்வாமி. இதைக் கேட்டுக் கொண்டிருந்த சுப்ரமண்யனுக்கு ரொம்பப் பெருமையாக இருந்தது. தங்கள் குடும்பத்துக்கு மகா பெரியவா எப்படி எல்லாம் அனுக்ரஹம் செய்திருக்கிறார் என்று நினைத்துப் பூரிக்கிற சுப்ரமண்யன் பெங்களூரில் வசித்து வருகிறார். அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம் ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம் சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
16
30
2
182
3,892