செந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி | Senthamizhan Seeman | Chief Coordinator of @NaamTamilarOrg

தமிழ்நாடு
Joined June 2023
நாம் தமிழர் கட்சி - திருவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி, கூமாப்பட்டி நகரச் செயலாளர் அன்புத்தம்பி மு.வீமன் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த தம்பி மு.வீமன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது. ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன். தம்பி மு.வீமன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
7
49
2
148
5,331
சமையல் கலையில் தனக்கெனத் தனித்துவமான முத்திரையைப் பதித்து, தனது திறமையாலும், உழைப்பாலும், எளிமையான அணுகுமுறையாலும் மக்களின் அன்பைப் பெற்ற சமையல் கலைஞர் மதிப்பிற்குரிய ஐயா தாமு அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயரமும், அதிர்ச்சியும் அடைந்தேன். சமையல் கலையில் முனைவர் பட்டம் பெற்று, சமையல் கலையை வெறும் தொழிலாக மட்டுமல்லாமல், ஓர் உயரிய கல்வியாகவும், கலையாகவும் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவருடைய பங்களிப்பு போற்றுதலுக்குரியது. தனது தனித்திறமையால் சமையல் துறையில் தனி அடையாளத்தை உருவாக்கிய அவரது மறைவு, சமையல் கலை உலகிற்குப் பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமையல் கலைத் துறையைச் சார்ந்த அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். ஐயா தாமு அவர்களுக்கு என் புகழ் வணக்கம்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
15
404
10
1,905
25,112
அரிசி வாங்கவே மக்கள் அல்லல்படும்போது தவெக அரசு வானூர்தி எரிபொருளுக்கு வரிச்சலுகை அளிப்பது ஏன்? இந்த ஆட்சியும், அதிகாரமும் மக்களுக்கானதா? அல்லது தனியார் முதலாளிகளுக்கானதா? @CMOTamilnadu @TVKVijayHQ அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், வானூர்தி எரிபொருள் மீதான வரியைக் குறைப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தவெக அரசு ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில், மிக மோசமான நிர்வாகத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து தமிழ்நாட்டு மக்கள் கடுமையான நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக அரிசி விலை மட்டும் மூட்டைக்கு 500 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. பருப்பு முதல் எண்ணெய் பொருட்கள் வரை அனைத்தின விலையும் கடுமையாக உயர்ந்து மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். அதையெல்லாம் சரி செய்ய திறனற்ற தவெக அரசு, சென்னை வானூர்தி நிலையத்தில் வானூர்தி எரிபொருள் மீதான வரியை 29 விழுக்காட்டிலிருந்து 16 விழுக்காடாகவும், பிற வானூர்தி நிலையங்களில் குறிப்பிட்ட வானூர்தி சேவைகளுக்கான வரியை 29 விழுக்காட்டிலிருந்து ஒரு விழுக்காடாகவும் குறைத்திருக்கிறது. வானூர்தி நிறுவனங்களின் செலவைக் குறைக்க இவ்வளவு வேகம் காட்டும் முதல்வர் விஜய் அவர்கள், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுவதாக தவெக அறிவித்தது. ஆனால், குறைந்த விலை என்றுகூறி சிறிதும் தரமற்ற அரிசியை தருவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உழைக்கும் மக்கள் வாங்கும் விலையில் தரமான அரிசி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டிய அரசு, அவர்களின் உணவுத் தேவையை நிறைவுசெய்வதில் அலட்சியமாய் இருப்பது ஏன்? முதலமைச்சரின் கோட் சூட் உடை மாற்றத்தை தவிர தவெக அரசால் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள மாற்றம்தான் என்ன? அரிசி வாங்குவதற்கே மக்கள் அல்லல்படும் அவலநிலைக்கு ஆளானதா? அல்லது தவெக நிர்வாகிகளே பாலியல் வன்கொடுமை செய்வதும், போதைப்பொருள் விற்பதும்தான் மாற்றமா? அரிசி, பருப்பு, எண்ணெய் வாங்க முடியாமல் மக்கள் தவிக்கும்போது, வானூர்தி பயணச் செலவைக் குறைப்பதுதான் அரசின் முதன்மையான பணியா? அப்படியென்றால் இந்த அரசு யாருக்கானது? இந்த ஆட்சி யாருக்கானது? அன்றாடம் உழைத்து வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கானதா? பல்லாயிரம் கோடி முதலீட்டில் வானூர்தி நிறுவனங்களை நடத்தும் தனியார் முதலாளிகளுக்கானதா? வானூர்தி போக்குவரத்தை மேம்படுத்துவதாகக் கூறும் அரசு, மக்களின் அடிப்படை உணவுத் தேவையை நிறைவுசெய்வதற்கும் அதே அக்கறையைக் காட்ட வேண்டாமா? பொருளாதார வளர்ச்சி என்பது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை வானூர்திகள் பறக்கிறது என்பதில் இல்லை; தமிழ்நாட்டில் எத்தனை குடும்பங்கள் கடன் வாங்காமல் ஒரு நாளைக்கு மூன்று வேளையும் நல்ல உணவருந்த முடிகிறது? என்பதில்தான் உள்ளது. மக்களின் வயிற்றுப்பசியைவிட வானூர்தி நிறுவனங்களின் வரிச்சுமை பெரிதாகிவிட்டதா தவெக அரசுக்கு? மக்களுக்கு வழங்கப்படும் உணவு மானியத்தைச் செலவாகவும், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையை வளர்ச்சிக்கான முதலீடாகவும் அரசு பார்ப்பது வெட்கக்கேடானது. மக்களின் பசியைப் போக்குவதும், அவர்களின் வாங்கும் திறனைப் பாதுகாப்பதும்தான் அரசின் முதற்கடமை. ஆகவே, தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களை காக்க, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். வானில் பறப்பவர்களின் பயணச் செலவைக் குறைப்பதில் காட்டும் அக்கறையை, மண்ணில் உழைப்பவர்களின் உணவுச் செலவைக் குறைப்பதிலும் காட்டுங்கள்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
114
781
30
1,339
53,001
சட்டப் போராட்டத்தில் வெற்றி! பாஜக மாடல் தவெக அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும்! தில்லியின் பாஜக அரசுபோல் தமிழக அரசால் பொய் வழக்கு புனையப்பட்டு அநீதியாகக் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தங்கை கார்த்திகா, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தம்பி இசை மதிவாணன் உள்ளிட்ட பன்னிரண்டு உறவுகளின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றிகரமாகச் சாதித்துக் காட்டிய நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையைச் சேர்ந்த உறவுகள், அன்புத் தம்பி கரூர் நன்மாறன் அவர்களுக்கும், அவருடன் களத்தில் இணைந்து நின்ற தம்பிகள் கோவை வழக்கறிஞர் சூர்யா, தாராபுரம் முகம்மது உசேன், ஈரோடு வழக்கறிஞர் கார்த்தி, அவினாசி வழக்கறிஞர் பகவத், தாராபுரம் வழக்கறிஞர் முருகானந்தம், கரூர் வழக்கறிஞர்கள் பார்த்திபன், இளமாறன், திண்டுக்கல் வழக்கறிஞர் மாதவன், திருப்பூர் வழக்கறிஞர்கள் சரவணன், சிராஜுதீன், நத்தம் சிவசங்கரன் ஆகியோருக்கு எனது உளமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சட்டப் போராட்டத்தில் உடனிருந்து உறுதுணையாக நின்ற திருப்பூர் வழக்கறிஞரும் எனது அன்பு இளவலுமான தம்பி உமர்கயான் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் உரித்தாக்குகிறேன். இந்தப் பணிகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தம்பி மணிசெந்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமையகச் செயலாளர் வழக்கறிஞர் தம்பி செந்தில்குமார் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் புரட்சிகர வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சட்டப் போராட்டத்தில் தோளோடு தோள் நின்ற அனைத்து அமைப்புகளின் வழக்கறிஞர்களுக்கும், ஜனநாயகத்தின் மீதும் நீதியின் மீதும் நம்பிக்கை கொண்டு ஆதரவளித்த அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து பாஜக மாடல் தவெக அரசிற்கு எதிரான உரிமைப் போராட்டங்கள் வெல்லட்டும் ! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
172
739
43
1,552
47,711
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பழந்தமிழர் வரலாறு என்பது கற்பனை சித்திரங்களால் கட்டப்பட்ட காகிதக்கோட்டை அல்ல. அஃது வீரமும், அறமும் செழித்தோங்கிய தொல் மரபினத்தின் வாழ்வியலையும், பண்பாட்டு நகர்வுகளையும், வரலாற்றுத் தடங்களையும் பெருமிதத்தோடு பொன் எழுத்துகளால் எழுதப்பட்டது. அதில் தன் ஆளுமைத்திறனால், பல்லாயிரம் யானைகள் ஏற்றும் அளவிற்கு மரக்கலங்கள் பல கட்டி கடலைக் கடந்து, தன் வீர மறத்தால் உலகை புலிக்கொடியின் கீழ் ஆண்ட ஒப்பற்ற தமிழ்ப்பேரரசன் எங்கள் பாட்டன் அருண்மொழிச்சோழன் பிறந்த ஐப்பசி திருநாள் இன்று! கடற்படை கட்டி அலைகடல் மீது படைபல நடத்தி, பாயும் புலிக்கொடி பட்டொளி வீசி பறந்திட, தென் கிழக்காசியா முழுமையும் சோழப்பேரரசின் வெண்கொற்றக்குடையின்கீழ் கொண்டுவந்து, உலகின் மூன்றாம் பெரும் வல்லரசை நிறுவிய மாமன்னன்! காலவெள்ளத்தால் அழியாத வண்ணம், வானை முட்டும் கோபுரத்தோடு தஞ்சை பெருவுடையார் கோவிலை எழுப்பி, வான்புகழ் கொண்ட தமிழ்ப்பெரும்பாட்டன் அரசர்க்கரசர் அருண்மொழி சோழன் வீரப்பெரும்புகழைப் போற்றுவோம்! நாம் தமிழர்!
19
360
2
816
11,674
தமிழ்நாடு காவல்துறையின் கொடி நாள் வில்லையில் தமிழைப் புறக்கணித்து இந்தியைத் திணிப்பதா? இதுதான் இந்தி திணிப்பையும், ஒன்றிய அரசின் ஆதிக்கத்தையும் தவெக அரசு எதிர்க்கும் முறையா? @CMOTamilnadu @TVKVijayHQ காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழ்நாடு காவல்துறையினர் தங்களது சீருடையில் அணியும் கொடி நாள் வில்லையில் தமிழ்மொழி முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு, இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டின் ஆட்சிமொழியான தமிழுக்கே தமிழ்நாடு காவல்துறையில் இடமில்லாத நிலையை தவெக அரசு ஏற்படுத்தியிருப்பது வெட்கக்கேடானது. கடந்த 29.09.2026 அன்று இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து, 04.10.2026 அன்று தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சுற்றறிக்கை வெளியிட்டு, இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இடம்பெற்றுள்ள வில்லையை அணிய அறிவுறுத்தியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழைத் தவிர்த்துவிட்டு இந்தியை மட்டும் இடம்பெறச் செய்ய வேண்டுமென்ற ஒன்றிய அரசின் முடிவை தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டது ஏன்? இதுதான் இந்தி திணிப்பையும், ஒன்றிய அரசின் ஆதிக்கத்தையும் தவெக அரசு எதிர்க்கும் முறையா? இந்தியும் ஆங்கிலமும்தான் தவெக ஆட்சியின் இருமொழிகொள்கையா? தமிழ்நாட்டின் காவல்துறையினர் அணியும் ஒரு சிறிய வில்லையில்கூடத் தமிழுக்கு இடமளிக்க முடியாதென்றால், தவெக அரசுக்கு தமிழ் உணர்வு என்ற ஒன்று அணுவளவாவது இருக்கிறதா? தமிழ்நாட்டில் தமிழ்மொழியைப் பாதுகாக்கப் பல தலைமுறைகளாக நம் முன்னோர்கள் போராடி உயிர் ஈகம் செய்துள்ளனர். மொழிப்போர் ஈகியர்களின் ஈகத்தால் காக்கப்பட்ட தமிழ்மொழியை, ஒன்றிய அரசின் ஒரு கடிதத்திற்காகப் புறக்கணிப்பது அப்போராளிகளின் ஈகத்திற்குச் செய்யும் பெருந்துரோகமாகும். தமிழ்நாட்டில் தமிழுக்கு இடமளிப்பதற்குக்கூட ஒன்றிய அரசிடம் அனுமதி பெற வேண்டுமா? தமிழர்களின் வரிப்பணத்தில் இயங்கும் தமிழ்நாடு காவல்துறையின் சீருடையில் தமிழ் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு ஒன்றிய அரசுக்கு என்ன உரிமையிருக்கிறது? தமிழ்நாடு காவல்துறை என்பது தமிழ்நாடு அரசின் அதிகாரத்திற்குட்பட்ட, முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள முதன்மையானத் துறையாகும். அத்துறையில்கூடத் தமிழ்மொழியின் உரிமையை நிலைநாட்ட முடியாமல், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு முதலமைச்சர் விஜய் அடிபணிந்துள்ளது தமிழ்நாட்டிற்கு நிகழ்ந்துள்ள மிகப்பெரிய தலைகுனிவும், அவமானமுமாகும். தமிழ்நாடு காவல்துறையின் கொடி நாள் வில்லையில் அன்னைத் தமிழ்மொழியைப் புறக்கணித்துள்ள வரலாற்றுப் பிழைக்கு தவெக அரசு தமிழ்நாட்டு மக்களிடம் உடனடியாக மன்னிப்புகோர வேண்டும். ஆகவே, இருமொழிகொள்கையின்படி, கடந்த திமுக ஆட்சி வரை உறுதியாக கடைபிடிக்கப்பட்டுவந்த, தமிழ்நாடு காவல்துறையின் கொடி நாள் வில்லையில் தமிழ், ஆங்கிலம் மொழிகள் மட்டுமே இடம்பெற வேண்டும். தமிழ் இடம்பெறாத வில்லையை அணிய அறிவுறுத்தும் சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற்று, தமிழ்மொழிக்கு முதன்மையளிக்கும் வகையில் புதிய வில்லையை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
155
551
45
1,038
91,557
தனித்துவமான குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிறைந்த பின்னணிப் பாடகர் ஐயா ஆர்.கிருஷ்ணராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து, மிகுந்த மனவேதனை அடைந்தேன். பொற்காலம் படத்தில் ஐயா கிருஷ்ணராஜ் அவர்கள் பாடிய ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடல் சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் ஐயா செல்லப்பன் ராமநாதன் (எஸ்.ஆர்.நாதன்) அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இளைப்பாறுதலைத் தந்து, அவர் மறைவின்போது அந்நாட்டின் சார்பாக இசைக்கப்படும் அளவிற்கு பெருமை பெற்றது. அந்த அளவிற்கு தமிழ் மண்ணின் வாழ்வியலையும், எளிய மக்களின் உணர்வுகளையும் தனது இனிய குரலில் உயிரோட்டமிக்க பாடல்களாக தந்த ஆகச்சிறந்த பாடகர் ஐயா கிருஷ்ணராஜ் அவர்கள். என்னுடைய இயக்கத்தில் வெளிவந்த 'இனியவளே' திரைப்படத்தில், நான் எழுதிய 'கண்ணீருக்கு காசு' பாடலையும், 'அன்னக்கிளி வண்ணக்கிளி' பாடலையும் பாடிச் சிறப்பித்தவர். அவரோடு இணைந்து பணியாற்றிய நாட்களும், அவரது குரலில் உயிர்பெற்ற பாடல்களும் என்றும் என் நினைவுகளில் நிலைத்திருக்கும். ஐயா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், இசைக்கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன். ஐயா கிருஷ்ணராஜ் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
6
142
492
6,306
தமிழ் ஊடகப் பரப்பில் புதியதொரு பயணமாக, ABP குழுமம் எண்மத் (Digital) தொழில்நுட்பம் (Smart TV மற்றும் App) மூலம் 24 மணிநேர நேரடிச் செய்தி ஒளிபரப்பை தமிழில் தொடங்கியிருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது. மக்களாட்சியின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்கள், வெறுமனே செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு நின்றுவிடாமல், எளிய மக்களின் உரிமைகளுக்காக வலிமையாக ஒலிக்க வேண்டியது காலத்தின் பெருங்கடமையாகும். அதிகாரத்தின் குரலாக அல்லாமல், மக்களின் குரலாக உண்மையை உரக்கச் சொல்வதும், அறத்தின் பக்கம் உறுதியாக நிற்பதுமே ஊடகத்தின் உயரிய மாண்பாகும். அந்த வகையில், தமிழ்நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார நிகழ்வுகளை நடுநிலையோடும், நேர்மையோடும் மக்களிடம் கொண்டு சேர்த்து, தமிழினத்தின் மொழி, நிலம், வளம், பண்பாடு, வரலாறு, வாழ்வியல் மற்றும் உரிமைகள் சார்ந்த செய்திகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளித்து, ஊடக அறத்தைக் காத்து, மக்கள் நலனை முன்னிறுத்தி, சிறப்பான ஊடகப் பணியாற்றிட நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் ஊடக உலகில் புதிய பயணத்தைத் தொடங்கியிருக்கும் @abpnadu செய்தித் தொலைக்காட்சிக்கும், அதன் நிர்வாகிகள், செய்தியாளர்கள், ஊடகப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
7
129
5
472
8,642
அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு பொய் வழக்குப் புனைந்து, தாராபுரம் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட்ட அன்புத்தங்கை கார்த்திகா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைது செய்துள்ள தவெக அரசின் எதேச்சதிகாரப்போக்கைக் கண்டித்து ஆதரவுக்குரல் எழுப்பிய, திமுகவின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மதிப்பிற்குரிய ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அதிமுகவின்  பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான மதிப்பிற்குரிய ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பேராசான் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும், திராவிடர் கழகத்தின் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா கி.வீரமணி அவர்களுக்கும், திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான அன்புத்தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், பாஜகவின் மாநிலத்தலைவர் அன்பு மாமா நயினார் நாகேந்திரன் அவர்களுக்கும், பாமகவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா அன்புமணி இராமதாசு அவர்களுக்கும், தேமுதிகவின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய அண்ணி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும்,   அமமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய ஐயா டிடிவி.தினகரன் அவர்களுக்கும்,  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் மதிப்பிற்குரிய ஐயா மு.வீரபாண்டியன் அவர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவருமான என் அன்பு இரத்தம் த.வேல்முருகன் அவர்களுக்கும்,   திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய அம்மையார் கனிமொழி ராஜாத்தி கருணாநிதி அவர்களுக்கும், முன்னாள் ஆளுநரும், பாஜகவின் முன்னாள் மாநிலத்தலைவருமான மதிப்பிற்குரிய அம்மா தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களுக்கும், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா  மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்களுக்கும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்பு அண்ணன் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அன்புத்தம்பி தமிமுன் அன்சாரி அவர்களுக்கும், 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அன்புத்தம்பி அண்ணாமலை அவர்களுக்கும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலப் பொறுப்புத் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா அச.உமர் பாரூக் அவர்களுக்கும், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் அன்பிற்கினிய அண்ணன் தடா ரஹீம் அவர்களுக்கும், கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் அன்புத்தம்பி தனியரசு அவர்களுக்கும், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பெருமதிப்பிற்குரிய அண்ணி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கும், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் மதிப்பிற்குரிய சகோதரர் இன்பதுரை அவர்களுக்கும், காங்கிரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புத்தங்கை ஜோதிமணி சென்னிமலை அவர்களுக்கும், சமூகச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி எவிடென்ஸ் கதிர் அவர்களுக்கும், தமிழர் தேசம் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி கே.கே.செல்வக்குமார் அவர்களுக்கும், பாஜகவின் மாநிலப் பொருளாளர் அன்புச்சகோதரர் எஸ்.ஆர். சேகர் அவர்களுக்கும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்புத்தம்பி பனையூர் பாபு அவர்களுக்கும், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் அன்பு அண்ணன் அ.வினோத் அவர்களுக்கும், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின்  நிறுவனத்தலைவர் அன்புத்தம்பி திருமாறன் ஜி அவர்களுக்கும், புரட்சித் தமிழகம் கட்சியின் நிறுவனர் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்களுக்கும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டளர் அண்ணன் அ.வியனரசு அவர்களுக்கும், கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சி.ஆறுமுகம் அவர்களுக்கும், வீரகுல அமரன் இயக்கத்தின் தலைவர் சகோதரர் கி. இரா.முருகன் அவர்களுக்கும், உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சனநாயக இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பும் நன்றியும்! தவறான ஒரு செயல் நடக்கும் பொழுது அதை எல்லோரும் கட்சிகளை எல்லாம் கடந்து ஒன்றாக முன்னின்று கண்டித்து குரல் எழுப்புவது சனநாயகம் இன்னும் சாகவில்லை என்ற நம்பிக்கையைத் தருகிறது. மக்களாட்சியின் மாண்புகளைத் காலில் போட்டு மிதித்து, அதிகார மமதையுடன் அடக்குமுறைகளை ஏவும் ஆளும் தவெக அரசின் அரசியல் பழிவாங்கலுக்கு எதிராக சனநாயக ஆற்றல்களின் உரத்த குரல் ஒன்றுபட்டு ஓங்கி ஒலிக்கட்டும்! அடக்குமுறை வீழட்டும்! சனநாயகம் வெல்லட்டும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
393
1,027
92
2,635
245,970
மக்களைக் காக்கும் காவலர்களின் உயிரையும் உரிமைகளையும் காப்பதே அவர்களது ஈகத்திற்குச் செலுத்தும் உண்மையான வீரவணக்கம்! மக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்கும் உயரிய கடமையில் ஈடுபட்டு, இன்னுயிரை ஈந்த காவலர்கள் அனைவருக்கும் அக்டோபர் 21 - காவலர் வீரவணக்க நாளில் எனது நெஞ்சார்ந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது அன்பையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் நிம்மதியாக உறங்குவதற்காகத் தங்கள் உறக்கத்தைத் துறப்பவர்கள் காவலர்கள். நாம் குடும்பத்தோடு விழாக்களைக் கொண்டாடும்போது, தங்கள் குடும்பத்தினரைப் பிரிந்து வீதிகளில் காவல் நிற்பவர்கள் அவர்கள். கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பேரிடரிலும், பெருந்தொற்றிலும் மக்களுக்காகக் களத்தில் நிற்கும் காவலர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அளப்பரியவை. ஆனால், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் காவலர்களின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டிய அரசுகள், அவர்களது அடிப்படைத் தேவைகளில் போதிய அக்கறை காட்டுகின்றனவா என்ற கேள்வியை இந்நாளில் எழுப்ப வேண்டியுள்ளது. இராணுவத்தில் பணியாற்றுவோர் தொடங்கி அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றுவோர் வரை அனைவருக்கும் ஓய்வும் விடுப்பும் இன்றியமையாத உரிமைகளாக இருக்கும்போது, காவலர்களுக்கு மட்டும் அவற்றை நடைமுறையில் பெறுவது ஏன் இவ்வளவு கடினமாக இருக்க வேண்டும்? வார விடுமுறையைக்கூட உறுதியாகத் திட்டமிட முடியாமலும், குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க முடியாமலும் காவலர்கள் தவிக்கும் நிலை தொடரலாமா? நீதி வழங்கும் நீதிமன்றகளுக்கே திட்டமிடப்பட்ட விடுமுறைகள் இருக்கும் பொழுது அதை கட்டிக்காக்கும் காவலர்களுக்கும் அது தேவை தானே? காவலர்களும் மனிதர்கள்தானே! அவர்களுக்கும் குடும்பம், உறவுகள், உடல்நலம், மனநலம் இல்லையா? சீருடை அணிந்துவிட்டால் ஓய்வே தேவையில்லை என்று அரசு கருதுகிறதா? காவல்துறை இடையறாது இயங்க வேண்டிய துறை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதற்காக ஒவ்வொரு காவலரும் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என்பது எவ்விதத்தில் நியாயம்? போதிய எண்ணிக்கையில் காவலர்களை நியமித்து, முறையான சுழற்சிப் பணியை ஏற்படுத்தி, அனைவருக்கும் வார ஓய்வும் உரிய விடுப்பும் கிடைக்கச் செய்வது அரசின் கடமையாகும். எனவே, காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி, வரையறுக்கப்பட்ட பணிநேரத்தையும் கட்டாய வார ஓய்வையும் உறுதிசெய்ய வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் விடுமுறை நாளில் பணியாற்ற நேரிட்டால், மாற்று ஓய்வு வழங்கப்பட வேண்டும். குடும்ப அவசரங்கள் மற்றும் மருத்துவத் தேவைகளுக்கான விடுப்பைத் தாமதமின்றி வழங்குவதோடு, மனநல ஆலோசனை, மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட நலத்திட்டங்களையும் வலுப்படுத்த வேண்டும். பணியின்போது உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு உரிய நிதியுதவி, குழந்தைகளின் கல்விப் பாதுகாப்பு, தகுதியுள்ள குடும்ப உறுப்பினருக்கான வேலைவாய்ப்பு ஆகியவை காலதாமதமின்றிக் கிடைப்பதையும் அரசு உறுதிசெய்ய வேண்டும். மக்களின் உரிமைகளைக் காக்கும் பொறுப்பிலுள்ள காவல்துறை, சட்டத்திற்கும் மனிதநேயத்திற்கும் உட்பட்டு, அரசியல் தலையீடின்றிச் செயல்படுவதற்கான சூழலையும் உருவாக்க வேண்டும். காவலர்களின் நலனும் மக்களின் உரிமைகளும் ஒருசேரப் பாதுகாக்கப்படுவதே நல்லாட்சிக்கு அடையாளமாகும். உயிர்நீத்த காவலர்களுக்கு மலர்வளையம் வைப்பதோடு அரசின் கடமை முடிந்துவிடுவதில்லை. உயிரோடு பணியாற்றும் காவலர்களின் கண்ணியமான வாழ்வை உறுதிசெய்வதே அந்தத் ஈகத்திற்குச் செலுத்தும் உண்மையான மரியாதையாகும். கடமையின் பாதையில் இன்னுயிரை ஈந்த காவல் வீரர்களுக்கு வீரவணக்கம்! மக்களைக் காக்கும் காவலர்களின் உழைப்புக்கும் ஈகத்திற்கும் தலைவணங்குகிறேன்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
10
181
2
375
15,164
நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதி, ஊரக்குடி கிராமத்தைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர்கள் அன்புத்தம்பி ஆ.சரவணன் ஆ.சந்திரசேகரன் அவர்களின் தாயார் அம்மா ஆ.இந்திரா அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன். அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அம்மா ஆ.இந்திரா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
7
43
1
120
6,395
நாம் தமிழர் கட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்றத் தொகுதி, அஞ்செட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன். மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, களப்பணியாற்றி வந்த தம்பி ஸ்ரீகாந்த் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது. ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் தம்பியின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன். தம்பி ஸ்ரீகாந்த் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
8
74
2
218
6,562
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்குப் புனைந்து தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைதுசெய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்! அதிகாரம் நிலையானதல்ல எந்த ஆட்சியும் நிரந்தரமானதல்ல! இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை! @CMOTamilnadu @TVKVijayHQ தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தங்கை கார்த்திகாவையும், அவரது கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட 7 நாம் தமிழர் உறவுகளை பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைதுசெய்திருக்கும் தவெக அரசின் செயலை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் கால வழக்குக்குக் கைது நடவடிக்கை மேற்கொண்டு சிறைப்படுத்துவது பாசிசத்தின் உச்சம். தாராபுரம் இடைத்தேர்தலின் கடைசிநாள் பரப்புரைக்கு நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதனால் விஜய் சாலைவலம் சென்ற வழியில், தங்கை கார்த்திகா நாம் தமிழர் உறவுகளோடு போராட்டம் நடத்தினார் என்கிற காரணத்திற்காகக் குறிவைத்து, இப்போது கைதுசெய்து பழிவாங்கத் துடிப்பது கீழ்த்தரமான அரசியல் இல்லையா? இந்த இழிவான அரசியலைச் செய்வதற்குத்தான் தூய சக்தி என மேடைதோறும் சுயதம்பட்டம் அடித்தீர்களா முதல்வர் விஜய் அவர்களே? மாநிலம் முழுமைக்கும் சட்டம் ஒழுங்கும், பொது அமைதியும் மொத்தமாகச் சீர்குலைந்துப் போயிருக்கும் தற்காலச் சூழலில், அவற்றைச் சரிசெய்ய காவல்துறையைப் பயன்படுத்தத் துப்பில்லாத முதல்வர் விஜய், அரசியல் பழிவாங்கலுக்காகப் பொய்யாக வழக்கைப் புனைந்து தங்கை கார்த்திகாவைக் கைதுசெய்வதெல்லாம் மிகக் கேவலமான அரசியல் இல்லையா? நாகையில் சொந்தக்கட்சி நிர்வாகி 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் போருளைக் கடத்த முற்பட்டபோது, அதனை முன்கூட்டியே கண்டறிந்து கைதுசெய்ய வக்கில்லாத தவெக அரசின் காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல் படையாகச் செயல்பட்டு அரசியல் பழிவாங்கலுக்குத் துணைநிற்குமென்றால், இதுதான் மாற்று அரசியலா? கட்சியின் பெண் நிர்வாகியிடம் பாலியல் தொந்தரவு செய்த இராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது பாயாத கைதுநடவடிக்கை, செய்தியாளர்களைத் தாக்கிய சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில் மீது பாயாத கைது நடவடிக்கை, திருவைகுண்டத்தில் பெண்ணைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்வதற்குச் சூத்திரதாரியாகச் செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது பாயாத கைதுநடவடிக்கை, அறவழியில் போராடிய தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் ஏழு பேர் மீது பாயுமென்றால், நடப்பது மக்களுக்கான ஆட்சியா? திராவிடக்கட்சிகள் முந்தைய ஆட்சிக்காலங்களில் செய்த அதே தவறுகளைத்தான் தவெக அரசும் செய்யுமென்றால், இது நல்லாட்சியா? கேடுகெட்ட காட்டாட்சி! அதிகாரத்திமிரிலும், பதவி தரும் மமதையிலும், புகழ்போதையிலும் முதல்வர் விஜய் இன்றைக்கு மனம்போன போக்கில் ஆட்டம் போடுவாரென்றால், இதேபோல ஆட்டம்போட்ட ஆட்சியாளர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? எனக் கொஞ்சம் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளட்டும். ‘நிரந்தர முதல்வரே!’ என உங்கள் கட்சியினர் புகழ்கிறார்கள் என்பதற்காக, இந்த ஆட்சியும், அதிகாரமும் நிலையானது எனும் முடிவுக்கு வந்துவிட்டீர்களா முதல்வர் விஜய் அவர்களே! உங்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் என்னுடைய தம்பி, தங்கைகள் பயந்து ஒதுங்கிவிடுவார்கள் என நினைத்தீர்களா? ஐயா கருணாநிதிக்கும், அம்மையார் ஜெயலலிதாவுக்கும் நீங்கள் பயந்து நடுங்கிய காலத்திலேயே எதிர்த்து நின்று அரசியல் செய்து, சண்டையிட்டவர்கள் நாங்கள். வழக்கு இல்லையென்றால், விடியாது கிழக்கு என்று சொல்லித்தான் என்னுடைய பிள்ளைகளை நாளும் வளர்த்திருக்கிறேன். கரூர் பேரவலத்தின்போது ஒரு மாத காலம் வழக்குக்கும், கைதுக்கும் பயந்துகொண்டு நீங்களும், உங்கள் கட்சியின் மொத்த நிர்வாகிகளும் ஓடி ஒளிந்து கொண்டீர்களே, அப்படி எந்நாளும் என்னுடைய தம்பி, தங்கைகள் ஓடி ஒளிந்தது இல்லை. உங்கள் அடக்குமுறைகளால் எங்கள் மனவலிமையை அணுவளவுகூட அசைத்துப் பார்த்திட முடியாது. ஐந்து மாதகால ஆட்சியிலேயே ஆயிரத்தெட்டு நிர்வாகச்சீர்கேடுகளும், குளறுபடிகளும், குழப்பங்களும் தலைவிரித்தாடி, ஆட்சி நிர்வாகம் தறிகெட்டுப்போய், சகித்துக் கொள்ள இயலாது மக்கள் வீதிக்கு வந்துப் போராடுகையில், அவற்றைச் சரிசெய்ய முயற்சி எடுக்காத தரங்கெட்ட தவெக அரசு, அரசியல் பழிவாங்கலுக்காகத் தன்னுடைய கவனத்தைச் செலுத்துமென்றால், இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை. பொய் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள தங்கை கார்த்திகா, அவருடைய கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், அதற்கான எதிர்விளைவுகளை உறுதியாகச் சந்திக்க நேரிடுமென எச்சரிக்கிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
634
1,736
147
3,628
191,927
அனைவருக்கும் 'கல்வித்திருநாள்' கலைமகள் விழா வாழ்த்துகள்! கல்வியைப் போற்றுவோம்! அறிவை வளர்ப்போம்! புத்தகங்களைத் தொழுது படிப்போம்! “அறிவொன்றே தெய்வமென்று ஓதி அறியீரோ?” என்று அறிவின் உயர்வைப் போற்றிப் பாடினார் பாட்டன் பெரும்பாவலர் பாரதி. “தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை” என்று கல்வியின் இன்றியமையாமையை வலியுறுத்தினார் புரட்சிக்கவிஞர் தாத்தா பாரதிதாசன். மனிதனை மனிதனாகச் செதுக்குவதும், அறியாமை இருளை அகற்றி அறிவொளி ஏற்றுவதும் கல்வியே! தனிமனிதனின் முன்னேற்றத்திற்கு மட்டுமின்றி, ஒரு இனத்தின் எழுச்சிக்கும், ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைவது கல்வியும், அறிவுமே ஆகும். ஒவ்வொரு புத்தகமும் ஒரு விதைநெல்லுக்குச் சமமானது. விதைநெல்லை எவ்வாறு அடுத்த தலைமுறையின் விளைச்சலுக்காகப் பாதுகாக்கின்றோமோ, அவ்வாறே புத்தகங்களையும் அவை தாங்கியிருக்கும் அறிவுச் செல்வத்தையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்காகப் பாதுகாத்து வழங்க வேண்டும். போர்க்களத்தில் ஏந்தப்படும் ஆயுதங்களைவிடவும் வலிமைமிக்கவை புத்தகங்கள். ஆயுதங்கள் மனிதர்களை வீழ்த்தக்கூடும்; ஆனால், புத்தகங்களால் மனித மனங்களை வெல்ல முடியும். ஆயுதங்கள் அழிவை ஏற்படுத்தக்கூடும்; புத்தகங்களோ அறிவையும் ஆக்கத்தையும் உருவாக்கும். சிந்திக்கவும், கேள்வி எழுப்பவும், உண்மையைத் தேடவும், உரிமைக்காகப் போராடவும் மனிதனைத் தயார்ப்படுத்தும் பேராற்றல் புத்தகங்களுக்கே உண்டு. “கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்று அறிவுறுத்துகிறார் அறிவு மூதாட்டி ஔவை. ஒரு நாட்டை ஆளுகின்ற மன்னனுக்கும் அவனது அமைச்சர்களுக்கும் அந்த நாட்டின் எல்லைக்குள்தான் அதிகாரமும் செல்வாக்கும் இருக்கும். ஆனால், கல்வி கற்ற அறிஞனுக்கு உலகெங்கும் மதிப்பும் சிறப்பும் இருக்கும் என்பதை காலம்கடந்து நிற்கும் அவ்வரிகள் மூலம் நமக்கு உணர்த்துகிறார். பாட்டன் அதிவீரராம பாண்டியர் தமது வெற்றிவேற்கை நூலில், “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே!” என்று கல்வியின் உயர்வை எடுத்துரைக்கிறார். அதுபோலவே, நம்முடைய பெரும்பாட்டன் திருவள்ளுவப் பெருமானார், “தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.” என்றும், கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். என்றும் அறிவுச் செல்வத்தின் அளப்பரிய சிறப்பை கல்வி, கேள்வி, கல்லாமை உள்ளிட்ட அதிகாரங்கள் மூலம் நமக்கு தெள்ளத்தெளிவாக விளக்குகிறார். மணற்கேணியைத் தோண்டத் தோண்ட நீர் சுரப்பதைப்போல, கற்கக் கற்க அறிவும் பெருகிக்கொண்டே இருக்கும். ஆகவே, மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் கற்பதைத் தொடர வேண்டும். உலகில் மனிதன் ஈட்டக்கூடிய செல்வங்களிலேயே ஆகச் சிறந்தது கல்விச் செல்வமும் அறிவுச் செல்வமும்தான். பிற செல்வங்களைப் பிறர் பறித்துக்கொள்ள முடியும்; ஆனால், கற்ற கல்வியையும் பெற்ற அறிவையும் எவராலும் பறித்துக்கொள்ள முடியாது. அத்தகைய அறிவுச் செல்வத்தை வளர்க்கின்ற ஆகப்பெரிய கருவிகளாக விளங்கும் புத்தகங்களை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும். “நூலகம் இல்லாத வீடு, இதயம் இல்லாத வெறும் கூடு” என்று நூலகத்தின் இன்றியமையாமையை அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர். ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுவதற்கான வாய்ப்பு உருவாகிறது என்ற கருத்து, புத்தகங்களின் சமூக மாற்ற ஆற்றலை உணர்த்துகிறது. எனவே, நூலகங்களை வெறும் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடங்களாகக் கருதாமல், அறிவுத் திருக்கோயில்களாகப் போற்றி வளர்க்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் நூலகங்கள் பெருக வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் புத்தகங்கள் நிறைய வேண்டும். ஒவ்வொரு குழந்தையின் கைகளிலும் நல்ல நூல்கள் தவழ வேண்டும். நம்முடைய பாட்டன் பெரும்பாவலன் பாரதி, “அமிழ்தில் இனியதடி பாப்பா – நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!” என்று பாடியதோடு, “சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத் தொழுது படித்திடடி பாப்பா!” என்றும் அறிவுறுத்துகிறார். தமிழ்மொழியைத் தொழுது படிக்க வேண்டும் என்று வலியுறுத்திய பாரதியின் வழியில், நாமும் நமது தாய்மொழியையும் அறிவை வளர்க்கும் புத்தகங்களையும் தொழுது போற்றிக் கற்க வேண்டும். கலைமகள் விழாவாக வழிபடும் இந்நன்னாளில், கல்விக்கும், கலைக்கும், அறிவுக்கும் அடிப்படையாக விளங்கும் நூல்களை வணங்கிப் போற்றுவதே இவ்விழாவின் உயர்ந்த நோக்கமாக அமையும்! புத்தகங்களை வணங்குவது மட்டுமல்ல; அவற்றைப் படிப்பதும், படித்தவற்றைச் சிந்திப்பதும், பெற்ற அறிவை வாழ்வில் கடைப்பிடிப்பதும், அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதுமே உண்மையான கல்வி வழிபாடாகும். ஆகவே, கலைமகள் விழாவைக் கல்வித் திருநாளாக அனைவரும் கொண்டாடுவோம்! (1/2)
12
260
3
606
9,605
அறிவை வளர்ப்போம்! அறியாமையை அகற்றுவோம்! நூல்களைப் போற்றுவோம்! நூலகங்களைப் பெருக்குவோம்! கல்வியால் நம் இனத்தையும் நாட்டையும் உயர்த்துவோம்! உங்கள்அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான 'கல்வித்திருநாள்' கலைமகள் விழா நல்வாழ்த்துகள்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி (2/2)
1
86
197
3,074
நாம் தமிழர் கட்சி - தலைமை அலுவலக ஊடகப் பிரிவு ஒளிப்பதிவாளர் அன்புத்தம்பி ச.த.தாயன்பன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா சு.சம்பத் குமார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். தந்தையை இழந்து வாடும் தம்பி ச.த.தாயன்பன் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். ஐயா சு.சம்பத் குமார் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!
9
57
4
169
6,491
ஆயுத வழிபாட்டுத் திருநாள் வாழ்த்துகள்! "பொய் அகல, நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்? வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றி மூத்த குடி!" என்று சங்க இலக்கியமான புறப்பொருள் வெண்பாமாலை பாடுவதுபோல, தொல்தமிழ்ப்பேரினத்தின் மக்களாகிய நாம் நம் உடலோடு இணைந்த கையையும், காலையும் போல, கையில் வாளையும், வேலையும் கொண்டு வளர்ந்து, வாழ்ந்த வீரமிக்க பண்பாட்டுச் செழுமைக்குரியவர்கள். 150 கோடி மக்கள் வாழும் நாடு பாதுகாப்பாக உள்ளது என்றால் நாட்டின் எல்லையில் 15 இலட்சம் வீரர்கள் ஆயுதம்தாங்கி எல்லை காத்து நிற்பதுதான் காரணம்! ஒவ்வோரு நாளும் இரவு பகல் பாராமல், பசி தூக்கம் இன்றி ஆயுதம் ஏந்தி நம்முடைய காவலர்கள் காப்பதுதான் மக்களின் உயிரும், உடைமையும் பாதுகாக்கப்படுகிறது. "ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!" என்று ஆயுதம் செய்து தருவதும் தமிழர் வாழ்வியலில் முதன்மையான கடமையாக இருந்துள்ளதை புறநானூற்றின் 312 வது பாடலில் பாடுகிறார் அறிவுப்பெருமகள் பொன்முடியார். வலியதுதான் வாழும் எனும் இயற்கை கோட்பாட்டிற்கிணங்க உலக முழுமைக்கும் வீரமிக்க தலைமுறையை தந்த இனங்கள்தான் மண்ணில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நீடித்து வாழ்கிறது. வரலாறு என்பது வீர்ர்களுக்கானதே தவிர கோழைகளுக்கானது அல்ல; மனித இனத்திற்கு அறிவின் கூர்மை எப்படி இன்றியமையாததோ அதைப்போலவே உடல் வலிமையும் மிக அவசியமானது. அதனால்தான் தமிழர்கள் ஐயனார், கருப்பண்ணசாமி, சுடலைமாடன் உள்ளிட்ட தங்கள் வழிபாட்டுத் தெய்வங்களை ஆயுதம் ஏந்தி நிற்கும் காவல் தெய்வங்களாக வழிபட்டனர். அந்தப் பண்பாட்டின் நீட்சிதான் நமது வீரப்பெரும்பாட்டன்கள் பூலித்தேவன், மருது சகோதார்கள், தீரன் சின்னமலை, அழகுமுத்துகோன், சுந்தரலிங்கம், வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் உள்ளிட்ட நம்முடைய இன முன்னோர்களின் சிலைகளையும் வாள் வேலோடு நாம் இன்றும் போற்றுகிறோம். போருக்குச் செல்லும் முன் ஆயுதஙகளை வழிபடும் தொன்று தொட்ட நம் வழக்கத்தின் தொடர்ச்சியே 'ஆயுத பூசை' விழாவாக இன்றும் தொடர்கிறது. எனவேதான் “ஏரும் போரும் எமக்குத் தொழில்” என்ற எம் முன்னோர்களின் வாழ்வியல் நெறியைப் போற்றி, உழைப்புக் கருவிகளையும், தற்காப்பின் அடையாளங்களையும் மதிக்கும் நாளாக ஆயுத வழிபாட்டு நாளை நாம் தமிழர் கட்சி கொண்டாடுகிறது. ஏர் என்பது உணவளிக்கும் உழைப்பின் அடையாளம்; போர் என்பது உயிரையும் உடைமையையும் மண்ணையும் மானத்தையும் காக்கும் மறத்தின் அடையாளம். நிலத்தை உழுது உயிர்களை வாழவைத்ததும், அந்த நிலத்திற்கும் மக்களுக்கும் கேடு வந்தபோது எதிர்த்துநின்று காத்ததும் எம் முன்னோர்களின் வாழ்வியல் அறம். பிறர் நிலத்தைப் பறிப்பதற்காக அல்ல; தம் நிலத்தைப் பாதுகாப்பதற்காக எழுந்த வீரத்தையும், பசியைப் போக்குவதற்காக நிலத்தில் சிந்திய வியர்வையையும் ஒருசேர நினைவுகூர்வதே இந்நாளின் சிறப்பு. உழவரின் ஏரும், தச்சரின் உளியும், கொல்லரின் சுத்தியலும், நெசவாளரின் தறியும் வெறும் கருவிகளல்ல; மனித வாழ்வை உருவாக்கிய உழைப்பின் சான்றுகள். உலகிற்கு உணவிடும் உழவு செய்ய பயன்படும் கடப்பாரை, கோடாரி, மண்வெட்டி உள்ளிட்ட ஒவ்வொன்றும் நம் ஆயுதங்கள்தான். ஆயுதம் அழிவுக்கருவியல்ல; உலகை ஆக்குவதற்கும், காப்பதற்கும் பயன்படுவதுதான் ஆயுதங்கள்! அறிவியல் வளர்ச்சியால் இன்று கருவிகளின் வடிவங்கள் மாறியிருக்கலாம்; ஆனால், அவற்றை இயக்கும் மனித உழைப்பின் மதிப்பு என்றும் மாறுவதில்லை. எழுதுகோல் முதல் கணினி வரை, எந்திரம் முதல் படப்பிடிப்புக் கருவி வரை, நம் அறிவையும் ஆற்றலையும் படைப்பாக மாற்றும் ஒவ்வொரு கருவியும் போற்றுதலுக்குரியதே! கருவிகளைப் போற்றும் இந்நாளில், அவற்றைக் கையாளும் உழைக்கும் மக்களின் வாழ்வையும் உயர்த்த உறுதியேற்போம். கருவிகளுக்குச் செய்யும் சிறப்போடு, தொழிலாளர்களுக்குரிய மதிப்பையும் வழங்குவோம். உழைப்புக்கேற்ற ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல், ஓய்வு, சம உரிமை ஆகியவை ஒவ்வொரு உழைப்பாளருக்கும் கிடைக்க வேண்டும். எந்தத் தொழிலையும் தாழ்வாகக் கருதாமல், பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்காமல், உழைப்பின் மாண்பைப் போற்றும் சமத்துவச் சமூகத்தைப் படைப்போம். நிலத்தை உழும் ஏரைப் போற்றுவதோடு, விளைநிலங்களையும் காப்போம்! தொழிற்கருவிகளைப் போற்றுவதோடு, நம் மரபுத் தொழில்களையும் மீட்டெடுப்போம்! உற்பத்தியைப் பெருக்குவதோடு, மண்ணும் நீரும் காற்றும் மாசுபடாமல் பாதுகாப்போம்! நமது தேவைகளை நாமே நிறைவு செய்யும் தற்சார்பு வாழ்வை நோக்கி முன்னேறுவோம்! அறிவை வளர்க்கவும், ஆற்றலைப் பெருக்கவும், அநீதியை எதிர்க்கவும், எளியவர்களைக் காக்கவும் நமது திறன்களைப் பயன்படுத்துவோம். உழைப்பில் செழிப்பையும், ஒற்றுமையில் வலிமையையும், உரிமை காப்பதில் உறுதியையும் பெறுவோம்! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு நிறைந்த ஆயுத வழிபாட்டுத் திருநாள் நல்வாழ்த்துகள்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
4
330
4
535
6,092
ஆயுத வழிபாட்டுத் திருநாள் வாழ்த்துகள்! "பொய் அகல, நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்? வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றி மூத்த குடி!" என்று சங்க இலக்கியமான புறப்பொருள் வெண்பாமாலை பாடுவதுபோல, தொல்தமிழ்ப்பேரினத்தின் மக்களாகிய நாம் நம் உடலோடு இணைந்த கையையும், காலையும் போல, கையில் வாளையும், வேலையும் கொண்டு வளர்ந்து, வாழ்ந்த வீரமிக்க பண்பாட்டுச் செழுமைக்குரியவர்கள். 150 கோடி மக்கள் வாழும் நாடு பாதுகாப்பாக உள்ளது என்றால் நாட்டின் எல்லையில் 15 இலட்சம் வீரர்கள் ஆயுதம்தாங்கி எல்லை காத்து நிற்பதுதான் காரணம்! ஒவ்வோரு நாளும் இரவு பகல் பாராமல், பசி தூக்கம் இன்றி ஆயுதம் ஏந்தி நம்முடைய காவலர்கள் காப்பதுதான் மக்களின் உயிரும், உடைமையும் பாதுகாக்கப்படுகிறது. "ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!" என்று ஆயுதம் செய்து தருவதும் தமிழர் வாழ்வியலில் முதன்மையான கடமையாக இருந்துள்ளதை புறநானூற்றின் 312 வது பாடலில் பாடுகிறார் அறிவுப்பெருமகள் பொன்முடியார். வலியதுதான் வாழும் எனும் இயற்கை கோட்பாட்டிற்கிணங்க உலக முழுமைக்கும் வீரமிக்க தலைமுறையை தந்த இனங்கள்தான் மண்ணில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நீடித்து வாழ்கிறது. வரலாறு என்பது வீர்ர்களுக்கானதே தவிர கோழைகளுக்கானது அல்ல; மனித இனத்திற்கு அறிவின் கூர்மை எப்படி இன்றியமையாததோ அதைப்போலவே உடல் வலிமையும் மிக அவசியமானது. அதனால்தான் தமிழர்கள் ஐயனார், கருப்பண்ணசாமி, சுடலைமாடன் உள்ளிட்ட தங்கள் வழிபாட்டுத் தெய்வங்களை ஆயுதம் ஏந்தி நிற்கும் காவல் தெய்வங்களாக வழிபட்டனர். அந்தப் பண்பாட்டின் நீட்சிதான் நமது வீரப்பெரும்பாட்டன்கள் பூலித்தேவன், மருது சகோதார்கள், தீரன் சின்னமலை, அழகுமுத்துகோன், சுந்தரலிங்கம், வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் உள்ளிட்ட நம்முடைய இன முன்னோர்களின் சிலைகளையும் வாள் வேலோடு நாம் இன்றும் போற்றுகிறோம். போருக்குச் செல்லும் முன் ஆயுதஙகளை வழிபடும் தொன்று தொட்ட நம் வழக்கத்தின் தொடர்ச்சியே 'ஆயுத பூசை' விழாவாக இன்றும் தொடர்கிறது. எனவேதான் “ஏரும் போரும் எமக்குத் தொழில்” என்ற எம் முன்னோர்களின் வாழ்வியல் நெறியைப் போற்றி, உழைப்புக் கருவிகளையும், தற்காப்பின் அடையாளங்களையும் மதிக்கும் நாளாக ஆயுத வழிபாட்டு நாளை நாம் தமிழர் கட்சி கொண்டாடுகிறது. ஏர் என்பது உணவளிக்கும் உழைப்பின் அடையாளம்; போர் என்பது உயிரையும் உடைமையையும் மண்ணையும் மானத்தையும் காக்கும் மறத்தின் அடையாளம். நிலத்தை உழுது உயிர்களை வாழவைத்ததும், அந்த நிலத்திற்கும் மக்களுக்கும் கேடு வந்தபோது எதிர்த்துநின்று காத்ததும் எம் முன்னோர்களின் வாழ்வியல் அறம். பிறர் நிலத்தைப் பறிப்பதற்காக அல்ல; தம் நிலத்தைப் பாதுகாப்பதற்காக எழுந்த வீரத்தையும், பசியைப் போக்குவதற்காக நிலத்தில் சிந்திய வியர்வையையும் ஒருசேர நினைவுகூர்வதே இந்நாளின் சிறப்பு. உழவரின் ஏரும், தச்சரின் உளியும், கொல்லரின் சுத்தியலும், நெசவாளரின் தறியும் வெறும் கருவிகளல்ல; மனித வாழ்வை உருவாக்கிய உழைப்பின் சான்றுகள். உலகிற்கு உணவிடும் உழவு செய்ய பயன்படும் கடப்பாரை, கோடாரி, மண்வெட்டி உள்ளிட்ட ஒவ்வொன்றும் நம் ஆயுதங்கள்தான். ஆயுதம் அழிவுக்கருவியல்ல; உலகை ஆக்குவதற்கும், காப்பதற்கும் பயன்படுவதுதான் ஆயுதங்கள்! அறிவியல் வளர்ச்சியால் இன்று கருவிகளின் வடிவங்கள் மாறியிருக்கலாம்; ஆனால், அவற்றை இயக்கும் மனித உழைப்பின் மதிப்பு என்றும் மாறுவதில்லை. எழுதுகோல் முதல் கணினி வரை, எந்திரம் முதல் படப்பிடிப்புக் கருவி வரை, நம் அறிவையும் ஆற்றலையும் படைப்பாக மாற்றும் ஒவ்வொரு கருவியும் போற்றுதலுக்குரியதே! கருவிகளைப் போற்றும் இந்நாளில், அவற்றைக் கையாளும் உழைக்கும் மக்களின் வாழ்வையும் உயர்த்த உறுதியேற்போம். கருவிகளுக்குச் செய்யும் சிறப்போடு, தொழிலாளர்களுக்குரிய மதிப்பையும் வழங்குவோம். உழைப்புக்கேற்ற ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல், ஓய்வு, சம உரிமை ஆகியவை ஒவ்வொரு உழைப்பாளருக்கும் கிடைக்க வேண்டும். எந்தத் தொழிலையும் தாழ்வாகக் கருதாமல், பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்காமல், உழைப்பின் மாண்பைப் போற்றும் சமத்துவச் சமூகத்தைப் படைப்போம். நிலத்தை உழும் ஏரைப் போற்றுவதோடு, விளைநிலங்களையும் காப்போம்! தொழிற்கருவிகளைப் போற்றுவதோடு, நம் மரபுத் தொழில்களையும் மீட்டெடுப்போம்! உற்பத்தியைப் பெருக்குவதோடு, மண்ணும் நீரும் காற்றும் மாசுபடாமல் பாதுகாப்போம்! நமது தேவைகளை நாமே நிறைவு செய்யும் தற்சார்பு வாழ்வை நோக்கி முன்னேறுவோம்! அறிவை வளர்க்கவும், ஆற்றலைப் பெருக்கவும், அநீதியை எதிர்க்கவும், எளியவர்களைக் காக்கவும் நமது திறன்களைப் பயன்படுத்துவோம். உழைப்பில் செழிப்பையும், ஒற்றுமையில் வலிமையையும், உரிமை காப்பதில் உறுதியையும் பெறுவோம்! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு நிறைந்த ஆயுத வழிபாட்டுத் திருநாள் நல்வாழ்த்துகள்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
16
267
4
756
7,299