Pinned Tweet
அன்றாட அரசியல் நிகழ்வுகள், போராட்டங்களின் செய்திகள், இயக்கங்களின் அறிவிப்புகள் என அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள சி.பி.ஐ(எம்) தமிழ்நாடு அதிகாரப்பூர்வ WhatsApp சேனலில் இணைந்திருங்கள்!
#CPIM #CPIMTamilNadu #Whatsapp whatsapp.com/channel/0029Va4…
கேரள கடலோரப் பகுதியை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்க யுடிஎப் (காங்கிரஸ் கூட்டணி) அரசு முயல்கிறது.
இது மீனவர்களுக்குச் செய்யப்படும் கொடூரமாகும். யுடிஎப் அரசு ஆட்சிக்கு வந்தது முதல் நவதாராளமயமாக்கல் நடவடிக்கைகளையும் தனியார்மயமாக்கலையும் திணித்து, மாநிலத்தின் தனித்துவத்தைச் சீரழிக்க முயல்கிறது - தோழர் பினராயி விஜயன், கேரள எதிர்கட்சித் தலைவர் #UDF #Kerala #corporates
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தலைப்பிலான நிகழ்வுகளை ரத்து செய்ய வேண்டும்! ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல் #OneNationOneElection
மைக்ரோசாப்ட் பணிநீக்கம்: AI வளர்ச்சியா? உழைப்புச் சுரண்டலா? இளைஞர்களே வீதிக்கு வாருங்கள்! #AI #Microsoft #labor #TAMILNADU
MORE : youtube.com/shorts/efZ_e0FVr…
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (AIKS) மகாராஷ்டிரா மாநிலக் கிளை கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி முதல் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட பயணத்தை மேற்கொண்டது.
அகோல் முதல் மும்பை வரை நடைபெற்ற இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணத்தில் பனிரெண்டாயிரம் விவசாயிகள் கலந்து கொண்டனர். நிறைவில் முதலமைச்சர் உட்பட கலந்துகொண்டு அரசுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 56 லட்சம் விவசாயிகளுக்கு 36,200 கோடி ரூபாய் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய ஏற்று அமல்படுத்திக் கொண்டுள்ளனர். இது #AIKS போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
கடனை திருப்பி செலுத்திய விவசாயிகளுக்கு ரூபாய் 50,000 மட்டும் ஊக்கத்தொகை என்று அறிவித்துள்ளது. அரசுக்கு கடனை முறையாக திருப்பி செலுத்திய விவசாயிகளுக்கு 1.5 லட்சம் நஷ்டம். அரசின் இந்த முடிவை #AIKS ஏற்கவில்லை. விவசாயிகளும் கடனை திருப்பி செலுத்தியது குற்றமா என்று கேள்வி எழுப்பிக் கொண்டுள்ளனர் - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், #CPIM #Farmers #AIKS # Maharashtra
பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிர மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ‘லாட்கி பாஹின் யோஜனா’ (மகளிர் நிதியுதவி) திட்டத்தின் மாதாந்திர நிதியுதவியை மீண்டும் வழங்க வலியுறுத்தி, அத்திட்டத்தின் தகுதியான பெண் பயனாளிகளை ஒருங்கிணைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாபெரும் போராட்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் மாதர் சங்கத்தின் மூத்த தலைவர் பிருந்தா காரத், துணைத் தலைவர் மரியம்தாவ்லே உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.
The All India Democratic Women's Association (AIDWA) organized a Mahamorcha of eligible women beneficiaries of the Ladki Bahin Yojana in Maharashtra to demand the resumption of monthly financial assistance to them, which has been halted by the state government. AIDWA Vice President Mariam Dhawale and senior leader Brinda Karat were among those who addressed the rally in Azad Maidan, Mumbai.
பண்டிகை காலத்தில் விமான கட்டணம் 700% உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 'கட்டணம் அதிகமென்றால் விமானத்தில் ஏன் போகிறீர்கள் என கேள்வி எழுப்பி வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
அரிசி விலை அதிகமானால் ஏன் சோறு சாப்பிடுகிறீர்கள் என்பது தானே உங்கள் அடுத்த தீர்ப்பு யுவர் ஹானர்..!! - தோழர் ஆர்.பத்ரி, மாநிலக்குழு உறுப்பினர், #CPIM #YourHonor #festivalseason #SupremeCourt
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவையாறு ஒன்றியக்குழு மற்றும் பொதுமக்கள் சார்பில் நேற்று தென்பெரம்பூர் சட்ரஸ் அருகே புதிய பாலம் கட்டி தர கோரி தொட்டில் கட்டி சட்ரஸ் பாலத்தை கடந்து செல்லும் திருவையாறு ஒன்றிய செயலாளர் ஏ. ராஜா, தலைமையில் நூதன போராட்டம் நடைபெற்றது.
தஞ்சை ஒன்றியச் செயலர் தோழர் எஸ். கோவிந்தராசு, வெள்ளாம் பெரம்பூர் விவசாயிகள் சங்க நிர்வாகி தோழர் துரை, ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் என்.வி கண்ணன் போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் என். சரவணன் போராட்டத்தை முடித்து வைத்து உரையாற்றினார்.
அரிசி, பருப்பு, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பு #CPIM சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் #CPIM நகரச் செயலாளர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மூர்த்தி கண்டன உரையாற்றினார்.
அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி #CPIM சார்பில் பெரம்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் #CPIM வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் ஆ.விஜயகுமார், மாவட்ட குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #CPIM #TamilNadu #Perambur
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று இந்தியா அணியின் சார்பில் டெல்லியில் பிரம்மாண்டமான பேரணி நேற்று நடைபெற்றது. இந்த பேரணியில் #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
"பிரேசில் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் வெற்றி; வெற்றி இலக்குகளை அடையும் வரை நீங்கள் முன்னேறிக்கொண்டே இருக்கலாம்!"
#CPIM மாநில செயற்குழு உறுப்பினர் @cpmkanagaraj | #CPIM மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா பங்கேற்கும் விவாதம்! #JusticeForAkilan #CasteDiscrimination #Inflation #CostOfLiving #SIR #Brazil #Lula More: youtu.be/y9rvWWhqajY
இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவிக்கு எவரோ ஐந்து கோடி கொடுக்க முன்வந்ததாக அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
யார் அவர் என்பதையும், ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் அமைச்சர் அவர்கள் வெளிப்படுத்த வேண்டும். அமைச்சர்கள் பொறுப்புணர்ந்து பேசுவது அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.
தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #TamilNadu
அரசு ஊழியர்களுக்கு மரபு ஆடை அணிவது குறித்த தமிழ்நாடு அரசின் ஆலோசனையை கைவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
More : shorturl.at/rIWMK
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி தில்லி ராம்லீலா மைதானம் நோக்கி பேரணி! #CPIM #SFI #DYFI #INDIABlocRally #RamlilaMaidan More : youtube.com/shorts/RADG2sEe5…
ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாசலில் பஞ்சநதிக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த பஞ்சநதி கோட்டை கருக்காக்கோட்டைகாசநாடு தெற்கூர் தெற்கு நத்தம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த நான்கு மாத சம்பள பாக்கி வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. செந்தில் குமார் ஒன்றிய செயலாளர் எஸ். கோவிந்தராஜ் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.வாசு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஏ.வெங்கடேசன் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சங்கர், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் துரைராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மலர் கொடி மாதவன் மற்றும் செந்தில்குமார் பால்ராஜ் வசந்தகுமார் உள்ளிட்டு 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.#CPIM More : youtube.com/shorts/vdf1FpHl1…
பாசிச தந்திரங்கள் இனி எடுபடாது..!
இன்றைய இந்தியா அணியின் பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டது, வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக மக்களிடம் இருக்கும் கடும் கோபத்தைக் காட்டுகிறது.
பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். மோடியும் அமித்ஷாவும் கையாளும் பாசிச தந்திரங்கள் இனி எடுபடாது என்ற கடுமையான எச்சரிக்கையை அவர்களுக்கு நீங்கள் வழங்கியுள்ளீர்கள்.
ஞானேஷ் குமார் போன்ற அடிவருடிகளை பயன்படுத்தி ஜனநாயக நிறுவனங்களை அபகரித்தால் தண்டனையின்றி தப்பிக்க முடியாது என்பதை நீங்கள் உரக்கச் சொல்லியுள்ளீர்கள்.
மக்கள் எழுச்சியடையும் போது தடுப்பு வேலிகள் வீழும். வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாப்பதற்கும் நமது ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கும் ஆன இயக்கம் இனி மேலும் வலுவடையும் - தோழர் எம்.ஏ.பேபி, பொதுச்செயலாளர், #CPIM #SaveDemocracy #GyaneshKumarMustGo #GyaneshItsDoneBro #VoteChorGaddiChor #GyaneshKumarResign #CPIM #SFI #DYFI #INDIABlocRally #RamlilaMaidan
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி தில்லி ராம்லீலா மைதானம் நோக்கி பேரணி! #CPIM #SFI #DYFI #INDIABlocRally #RamlilaMaidan More : youtube.com/shorts/8i4UJjZIS…
ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி ராம்லீலா மைதானத்தில் இந்தியா அணி சார்பில் போராட்டம்!
இந்திய அரசியல் வரலாற்றில்
ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தியாயம்! - தோழர் ஜான் பிரிட்டாஸ். எம்.பி., மத்தியக்குழு உறுப்பினர், #CPIM #SaveDemocracy #GyaneshKumarMustGo #GyaneshItsDoneBro #VoteChorGaddiChor #GyaneshKumarResign
ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாசலில் பஞ்சநதிக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த பஞ்சநதி கோட்டை கருக்காக்கோட்டைகாசநாடு தெற்கூர் தெற்கு நத்தம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த நான்கு மாத சம்பள பாக்கி வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. செந்தில் குமார் ஒன்றிய செயலாளர் எஸ். கோவிந்தராஜ் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆர் வாசு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஏ.வெங்கடேசன் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சங்கர், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் துரைராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மலர் கொடி மாதவன் மற்றும் செந்தில்குமார் பால்ராஜ் வசந்தகுமார் உள்ளிட்டு 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
































