Pinned Tweet
அன்றாட அரசியல் நிகழ்வுகள், போராட்டங்களின் செய்திகள், இயக்கங்களின் அறிவிப்புகள் என அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள சி.பி.ஐ(எம்) தமிழ்நாடு அதிகாரப்பூர்வ WhatsApp சேனலில் இணைந்திருங்கள்!
#CPIM #CPIMTamilNadu #Whatsapp whatsapp.com/channel/0029Va4…
பிரேசில் தேர்தலில் சர்வாதிகாரம் தோற்றது; இடதுசாரி வேட்பாளர் லூலா வெற்றி. - தோழர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர், #CPIM #LulaVictory #BrazilElection #Brazil More : youtu.be/Xl1dJFwDwtc
தென்னிந்தியத் தேர்வர்களுக்குத் தில்லியில் தேர்வு மையமா? ஒன்றிய கல்வி அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்
கேந்திரிய வித்யாலயா சங்கதன் (KVS) மற்றும் நவோதயா வித்யாலயா சமிதி(NVS) மூலம் நடத்தப்படும் ஜூனியர் செக்ரட்டரியட் அசிஸ்டென்ட் (JSA) பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வுகளில் வெற்றி பெற்ற தென்னிந்தியத் தேர்வர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அடுத்த கட்டமான திறன் தேர்வு (Typing Test) மற்றும்கணினி தகுதித் தேர்வு (CPT) 2026 நவம்பர் 3 அன்று நடைபெற உள்ளது. ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியத் தேர்வர்களுக்குத் தேர்வு மையங்கள் தில்லி-என்.சி.ஆர் (Delhi-NCR) பகுதியில் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. 2,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் பயணம் செய்து தேர்வு எழுதச் சொல்வதுதென்னிந்திய இளைஞர் களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.
- தோழர் @SuVe4Madurai எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM
More: shorturl.at/ID5U
சாதியத் துன்புறுத்தலால் உயிரை மாய்த்துக்கொண்ட 11-ஆம் வகுப்பு மாணவர் அகிலன் மரணத்திற்கு நீதி கேட்டு கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
#CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் க.மாரிமுத்து எம்.எல்.ஏ. மற்றும் மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய முற்போக்கு அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.
வாக்குரிமைப் பறிப்புக்கு எதிராக நாடு தழுவிய வலுவான போராட்டம் அவசியம்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) விவகாரத்தில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதால், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
‘வெளிநாட்டினர்’ எனப் பெயரிட்டு ஏழை எளிய மக்கள், சிறுபான்மையினர், தலித், பழங்குடி மக்களின் அடிப்படை வாக்குரிமை பறிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், இதற்கு எதிராக நாடு முழுவதும் வலுவான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
எஸ்.ஐ.ஆர் திருத்தத்தை ரத்து செய்யவும், ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யவும் கோரி கேரள சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது, இதேபோல் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் உடனடியாகச் சிறப்புக் கூட்டம் கூட்டி, ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்யவும் எஸ்.ஐ.ஆரை ரத்து செய்யவும் வலியுறுத்தும் தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் நிறைவேற்ற வேண்டும்.
- தோழர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர், #CPIM #India #SIR #gyaneshKumar #ResignGyaneshKumar #JantarMantar
பொதுப் பிரச்சினைகள் குறித்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதங்களுக்குப் பதிலளிக்கத் தவறுவது அரசு குறிப்பாணையில் குறிப்பிட்டுள்ள நெறிமுறை விதிமீறலாகும் (Violation of Protocol Norms).
எனது கடிதங்களுக்குப் பதிலளிக்காமல் அலட்சியம் காட்டிய தெற்கு ரயில்வே பொது மேலாளர் மீது தகுந்த உரிமை மீறல் (Breach of Privilege) நடவடிக்கை எடுக்கக் கோரி மக்களவை அவைத் தலைவரிடம் புகார் அளித்துள்ளேன்.
- தோழர் @SuVe4Madurai எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Parliament #SouthernRailway #BreachOfPrivilege #IndianRailways
"ஒரு பண்ணை அடிமையின் விடுதலைப் போராட்டம்; அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்!"
#CPIM மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் | #CPIM மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா பங்கேற்கும் விவாதம்! #eb #privatisation #tngovt #modigovt #gyaneshKumar #electioncommission #Indiandemocracy #riceprice #delhiprotest #studentprotest #SFI #Indiapolitics More: youtu.be/C8pNiKnWDuM
பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் தீவிர வலதுசாரியான ஃபிளாவியோ போல்சோனாரோவை வீழ்த்தி இடதுசாரி வேட்பாளர் லூலா வெற்றி!
லூலாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!
பிரேசில் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் வெற்றி பெற்ற லூலாவுக்கும், பிரேசில் மக்களுக்கும் வாழ்த்துகள்!
டிரம்ப்பின் ஆதரவைப் பெற்ற ஃபிளாவியோ போல்சோனாரோவின் தீவிர வலதுசாரி பிளவுபடுத்தும் அரசியலைத் தோற்கடித்து, லூலா வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை நான்காவது முறையாக பெற்றுள்ளார். இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி! தீவிர வலதுசாரிகள், வெல்ல முடியாதவர்கள் அல்ல என்பதற்கு இது ஒரு சான்று!
- சிபிஐ(எம்) மத்தியக்குழு #Lula #Brasil
சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம்; இரண்டாவது நாள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் More: shorturl.at/063jr
வழிபாட்டுரிமைப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி!
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், புத்தகரம் கிராமத்தில் பட்டியலின மக்கள் வாழும் பகுதிக்கு தேர் தடையின்றிச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நீண்டகாலமாக நடைபெற்ற போராட்டத்தின் வெற்றியாகத் தேர் அவர்களின் குடியிருப்புப் பகுதிக்குள் வந்தடைந்தது.
சாதியத் தடைகளைத் தகர்த்து, சமத்துவ வழிபாட்டு உரிமையை நிலைநாட்டிய இந்த வெற்றியில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தொடர் சட்டப் போராட்டங்களும், களத் தலையீடுகளும் முக்கியப் பங்கு வகித்துள்ளன.
இந்நிகழ்வில் DSMM அகில இந்தியத் துணைச் செயலாளர் கா.சுவாமிநாதன், ததீஒமு மாநிலப் பொதுச்செயலாளர் பா.சுகந்தி, துணைப் பொதுச்செயலாளர் இ.மோகனன், #CPIM மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார், மாவட்ட செயலாளர் கே.நேரு, ததீஒமு மாவட்டத் தலைவர்கள் இ.சங்கர், எஸ்.திருஞானம் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.
முதலாளித்துவம் வீழும்! பாட்டாளி வர்க்கம் வெல்லும்!
Episode – 7 #MarxistEducation | தோழர் என்.குணசேகரன், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #Marxism #Socialism #ClassStruggle #AntiImperialism #Revolution #Cuba - #MarxistEducation Full Video Link: youtu.be/B2G2Mu3771U
தாகமெடுத்த மனிதன் நீரூற்றைத் தேடிப் போவதுபோல நான் கம்யூனிஸ்டு கட்சியை நாடிப் போகிறேன் - தோழர் பாப்லோ பிக்காசோ, வரலாற்றின் மிகச் சிறந்த ஓவியர், பிரஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் #PabloPicasso #Communist #Socialism #SocialismIsFuture
சீனாவை அமெரிக்காவால் தடுக்க முடியாதது ஏன்? | Episode – 7 -தோழர் என்.குணசேகரன், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #MarxistEducation #Marxism #Socialism #ClassStruggle #AntiImperialism #ClimateCrisis #SaveEarth #CorporateGreed #Revolution #Cuba Full Video Link: youtu.be/B2G2Mu3771U
பூமி வெப்பமயமாதல் முதல் பாட்டாளி வர்க்கப் புரட்சி வரை | புரட்சியை யாராலும் தடுக்க முடியாது! | Episode – 7 #MarxistEducation #Marxism # Socialism #ClassStruggle #AntiImperialism #ClimateCrisis #SaveEarth #CorporateGreed #Revolution #Cuba - தோழர் என்.குணசேகரன், மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #MarxistEducation Full Video Link: youtu.be/B2G2Mu3771U
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியா?! அரசாங்கமே உடனே மேல்முறையீடு செய். | போலீஸ் அடக்குமுறையை மீறி பீனிக்ஸ் பறவைகளாக களத்தில் நிற்கும் மாணவர்கள்! ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்! தோழர் வி.மாரியப்பன், மாநிலச் செயலாளர் #AIAWU #gyaneshKumar #ResignGyaneshKumar #tamilnadu #RSS #POLICE #Rally #Government More : youtu.be/8nOyrxnpolY
மோடி அரசுக்கு ஆப்பு வைத்த Meta Algorithm? | இளைஞர்களின் எழுச்சியை முடக்க Social Media-வை வளைக்கிறதா பாஜக? தோழர் தெள.சம்சீர் அகமது, மாநிலச் செயலாளார் #SFI #MetaAlgorithm #ModiGovt #BJP #SocialMediaCensorship #SocialMediaPolitics #DigitalRights #GenZProtest
More : youtu.be/n3EEDwSPDKs
தனியார் பேருந்து ‘மொத்த விலை ஒப்பந்தத்தை’ ரத்து செய்க; அரசே மின்சாரப் பேருந்துகளை இயக்குக!
சிஐடியு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் அரசுக்குக் கோரிக்கை
மொத்த விலை ஒப்பந்தம் (GCC) என்ற பெயரில் தனியார் பேருந்துகளை இயக்கத் திமுக அரசு போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, அரசே மின்சாரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) கோரியுள்ளது. #Citu #TamilNadu #Privatebus #Transportworker #TnGovt





















