நீலகிரி மாவட்டத்தில் அமைச்சர் வன்னி அரசு புலியை துரத்திய நிகழ்வு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நீலகிரி மாவட்டத்தில் அமைச்சர் வன்னி அரசு புலியை துரத்திய நிகழ்வு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் கந்தன் தொடர்ந்த வழக்கு
சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவை வைத்து பொத்தாம் பொதுவாக வழக்கு தொடர முடியாது - உயர்நீதிமன்றம்
விளம்பரத்திற்காக வழக்கு தொடரப்பட்டது தெரிய வந்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
நீதிபதிகள் என்.சதீஷ்குமார், ஜி. கே.முத்துக்குமார் அமர்வு
திருப்பரங்குன்றம் கோயிலில் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு
CISF பாதுகாப்பில் நடைபெற உத்தரவு
கோயிலின் நிர்வாகப் பொறுப்பை ஏற்பதற்காக, மேகாலயா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். வைத்தியநாதன் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய குழுவை நிர்வாகிகளாக (RECEIVERS) நியமித்தும் உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை அமைந்துள்ள முழு பகுதியையும் சி ஆர் பி எப் கட்டுப்பாட்டில் எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி போக்ஸோ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
1
436
நீதிமன்றம் விதித்த தீர்ப்பை கண்டிப்புடன் எதிர்க்கட்சித் தலைவர் பின்பற்றுவதாகவும் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ
சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்
முதலமைச்சர் விஜய் வழக்கு தள்ளுபடி
பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தேர்தல் வழக்கு
தேர்தல் வழக்கை நிராகரிக்க்கோரி முதலமைச்சர் விஜய் நிராகரிப்பு மனு தாக்கல்
4
220
கள்ளக்குறிச்சி வழக்கு பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைப்பு
விசாரணையின் போது சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி
ஊடகங்களுக்கு உள்ளிட்ட எவருக்கும் அனுமதி மறுப்பு
வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விசாரணை நடத்தப்படும் என நீதிபதி அறிவிப்பு
அம்பா சமுத்திரம், பெருந்துறையில் தேர்தல் நடத்தலாம்
இந்த இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்த
விதிக்கப்பட்ட தடை நீக்கம்
மற்ற மூன்றில் தேர்தல் வழக்குகள் முடிந்த பிறகுதான் தேர்தல் நடவடிக்கைகளை நடத்த வேண்டும்
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
2
469
போடிநாயக்கனூர் திமுக எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வம் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
போடிநாயக்கனூர்
தொகுதி திமுக எம்.எல்.ஏ.-வும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மிலானி என்பவர் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்கக் கோரி போடிநாயக்கனூர் திமுக எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்ப்பிச்செல்வம் தாக்கல் செய்த மனுவை ஏற்று உத்தரவு
நீதிபதி பி.பி.பாலாஜி
போடிநாயக்கனூர்
தொகுதியில் 6,805 வாக்குகள் வித்தியாசத்தில் ஓ.பன்னீர் செல்வம் வெற்றி பெற்றிருந்ததை எதிர்த்த தேர்தல் வழக்கு தள்ளுபடி
4
448
சென்னையில் உள்ள மாவட்ட நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வந்த சஞ்சய் பாபா, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உரிமையியல் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பணியாற்றி வந்த சிவகுமார், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தீப்தி அருவுநிதி அறிவிப்பு
தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பான வழக்கை சிபிஐ க்கு மாற்ற கோரி திமுக தரப்பில் மனு தாக்கல்
திமுக முன்னாள் எம்.பி.கனிமொழி சோமு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை இதுவரை இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - மனு
முதல்வரும் இந்த விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் எந்தவிதமான தகவலையும் வெளியிடாமல் இருக்கிறார் - மனு
ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் அமைதியாக இருப்பது வழக்கின் விசாரணை முறையாக நடக்குமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது - மனு
அனைத்து தகவல்களும் மின்னணு முறையில் நடந்துள்ள நிலையில் வழக்கில் தகவல் தொழில்நுட்ப சட்டம் சேர்க்கப்படாதது வழக்கை சுதந்திரமான அமைப்பு விசாரணை நடத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது - மனு
சிங்கப்பெண் அதிரடிப்படை இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை - மனு
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உளள்து
கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு
அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி
விசாரணை முடிந்து நவம்பர் 28ம் தேதி காலை 10.30 மணிக்கு மோகனை ஆஜர்ப்படுத்த நீதிபதி உத்தரவு
அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்
கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு
வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு
சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு ஆஜர்
மோகன் உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், அவரிடம் விசாரணை நடத்த போதுமான கால அவகாசம் கிடைக்கவில்லை - மனு
190
சென்னை வடபழனி பாரத்வாஜேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை துவக்கம்...
இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்
அறநிலையத்துறை விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்து வைத்து தலைமை நீதிபதி சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வு உத்தரவு
கோவில் செயல் அலுவலரிடமிருந்து அறிக்கை வந்துள்ளது. ஆக்கிரமிப்பு குறித்து விசாரிக்கப்படும் - இந்து சமய அறநிலையத்துறை
வடபழனி விவேகானந்தா காலனியில் உள்ள பாஆரத்வாஜேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 5,800 சதுர அடி நிலத்தில் ஏற்படுத்தப்பட்ட கட்டுமானங்களை அகற்றக் கோரி ஜி.தேவா என்பவர் வழக்கு
ரூ. 44.50 லட்சம் குத்தகை பாக்கி வசூலிக்கவும் கோரிக்கை
4
435
ஜெம் வீரமணி வழக்கில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர் பார்த்திபன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு எதிராக இதுவரை 9 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் பதிவு செய்த ஒரு குற்ற வழக்கில் வீரமணி மற்றும் அவரது ஓட்டுனர்களான பாபு மற்றும் பார்த்திபன் ஆகிய மூன்று பேருக்கு எதிராக, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை, சுமார் 720 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகை தாக்கல் செய்தது. இதில் 40 பேர் சாட்சிகள் வழக்கில் உள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பார்த்திபன் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் ஜாமின் மனுவை சென்னை போக்சோ நீதிமன்றம் அக்டோபர் 22 தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில் ஜாமின் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்த்திபன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த அக்டோபர் 5 தேதி கைது செய்யப்படதாகவும், தனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவே ஜாமின் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கபட்டது. ஜாமின் வழங்கினால் சாட்சிகள் கலைக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கபட்டது.
பின்னர் இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதி தீர்ப்பை தள்ளிவைத்தார்.
இந்த வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிபதி தற்போதைய நிலையில் ஜாமின் வழங்க முடியாது என தெரிவித்து பார்த்திபன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
154
Source :
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் மகள் ஸ்ரீகாந்தி ராமதாஸ் அவர்கள்
ஜனவரி மாதம் புதிய கட்சியை துவங்க இருக்கிறார் ...
@GanthiRamadoss







