Viduthalai Chiruthaigal Katchi retweeted
தமிழர் எழுச்சி நாள் விழாவில் பாடிய "கானா இசைவாணி" இசைக்குழுவிற்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினேன்.
Viduthalai Chiruthaigal Katchi retweeted
தமிழர் எழுச்சி நாள் விழா கவியரங்கில் "கவிமாமணி முனைவர் அப்துல் காதர்".
Viduthalai Chiruthaigal Katchi retweeted
எழுச்சித்தமிழரின் 62-வது அகவை நாள் விழா கவியரங்கில் தோழர் வன்னிஅரசு அவர்களின் வரவேற்புரை.
Viduthalai Chiruthaigal Katchi retweeted
தமிழர் எழுச்சி நாள் விழா கவியரங்கில் "கவிஞர் தனிக்கொடி ஜீவா".
Viduthalai Chiruthaigal Katchi retweeted
மரக்காணம்... கள்ளக்குறிச்சி...
தொடரும் நச்சு சாராயச் சாவுகள்...
தமிழ்நாடு அரசே முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்து!
டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடு!
என்னும் கோரிக்கையை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எனது தலைமையில் இன்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரை...
#தமிழகஅரசே_மதுக்கடைகளை_இழுத்துமூடு
Viduthalai Chiruthaigal Katchi retweeted
நாடாளுமன்ற வளாகத்துக்குள் தேசத் தந்தை காந்தியடிகள், அரசமைப்புச் சட்டத் தந்தை அம்பேத்கர் சிலைகளை முன்பு இருந்த இடத்திலேயே நிறுவ வேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
------------------------------------------
நாடாளுமன்ற வளாகத்துக்குள் காந்தியடிகள், அம்பேத்கர் உள்ளிட்ட தேசத் தலைவர்கள் சிலரின் உருவச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அந்தச் சிலைகள் எல்லாவற்றையும் பாஜக அரசு அகற்றியுள்ளது. அவற்றை ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து காட்சிப் பொருளாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த எதேச்சதிகார நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டிக்கிறோம். அவற்றை பழைய இடங்களிலேயே நிறுவ வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
நாடாளுமன்ற வளாகத்துக்குள் இருக்கும் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலை 1967 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர்
எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 3.66 மீட்டர் உயரம் உள்ள அந்த வெண்கலச் சிலை புகழ் பெற்ற சிற்பி வி.வி.பாக் என்பவரால் வடிவமைக்கப்பட்டு ‘டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மெமோரியல் கமிட்டியினால்’ நன்கொடையாக வழங்கப்பட்டது.
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 4.9 மீட்டர் உயரம் கொண்ட வெண்கலச் சிலை சிற்பி ராம்
வி. சுதார் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்த இரண்டு சிலைகளும் இந்த தலைவர்களின் உருவச் சிலைகளாக மட்டுமின்றி அவர்களது கொள்கைகளின் குறியீடுகளாகவும் விளங்குகின்றன. நாடாளுமன்றத்துக்குள் ஜனநாயக முறையிலான எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும், போராடுவதற்கும் அந்தச் சிலைகளின் முன்னால் கூடுவதையே அரசியல் கட்சியினர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளிலும், நினைவு நாளிலும் பல்லாயிரக் கணக்கானவர்கள் நாடாளுமன்றத்துக்குள் இருக்கும் அவரது உருவச்சிலைக்கு மரியாதை செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தை அழகு படுத்துவதாக சொல்லிக் கொண்டு இந்த சிலைகளையெல்லாம் எவருக்கும் தெரியாமல் அவசர அவசரமாக மோடி அரசு அகற்றியுள்ளது. புதிய உறுப்பினர்கள் பதிவு செய்து கொள்வதற்காகப் போகும்போதுதான் இந்த உண்மை வெளியே தெரிய வந்துள்ளது.
புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்துக்குள் குடியரசுத் தலைவரும், பிரதமரும் நுழைவதற்குத் தனி வாயில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்குப் போகும் வழியில் தான் இந்த சிலைகள் உள்ளன. அவர்களது வாகனங்கள் வளைந்து செல்ல வேண்டி இருக்கிறது என்பதுதான் இந்த சிலைகள் அகற்றப்படுவதற்கு உண்மையான காரணமாகும். அதுமட்டுமின்றி தேசத் தந்தை காந்தியின் கொள்கைகளும், அரசியலமைப்புச் சட்டத் தந்தை அம்பேத்கரின் கொள்கைகளும் பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் தடைக் கற்களாக உள்ளன. எனவே, அவர்களது உருவச் சிலைகளைப் பார்ப்பது பிரதமர் மோடிக்குப் பிடிக்காத ஒன்றாகத்தான் இருக்கும். அங்கே ஒவ்வொரு சிலையும் நிறுவப்பட்டதன் பின்னே சிறப்பான ஒரு வரலாறு உள்ளது. அந்த வரலாற்று நினைவுகளை அழிக்க வேண்டும் என்பதும் பாஜகவின் நோக்கமாகும்.
தலைவர்களின் சிலைகள் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் நாடாளுமன்ற செயலகத்திலிருந்து விளக்கம் ஒன்று தரப்பட்டிருக்கிறது. “நாடாளுமன்றத்தை சுற்றிப் பார்க்க வரும் பார்வையாளர்கள் அங்கே இருக்கும் சிலைகள் வெவ்வேறு இடங்களில் இருப்பதால் அவற்றை வசதியாகப் பார்க்க முடியவில்லை. எனவே, அந்தச் சிலைகளையெல்லாம் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி பார்வையர்கள் எளிதாக பார்ப்பதற்கு வசதி செய்து தருவதற்காகத்தான் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. இவ்வாறு சிலைகளை மாற்றி அமைப்பது சபாநாயகர் எடுத்த முடிவு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தின் நிர்வாகம் சபாநாயகர் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும், இந்த சிலைகளை அகற்றுகிற முடிவை தன்னிச்சையாக அவர் எடுத்தது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. அதுமட்டுமின்றித் தேர்தல் நடந்துகொண்டிருந்த நேரத்தில் எவருக்கும் தெரியாமல் ரகசியமாக, அவசர அவசரமாக சிலைகளை அகற்றியிருப்பது அவர்களின் உள்நோக்கத்தைத்தான் காட்டுகிறது. புதிய சபாநாயகர் இன்னும் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், பழைய சபாநாயகர் இத்தகைய முடிவை எடுப்பதற்கு அதிகாரம் உண்டா என்பது கேள்விக்குரியதாகும். தேர்தலில் பெரும்பான்மையைத் தராமல் சரியான பாடத்தைப் புகட்டினாலும் பாஜகவினர் தம்முடைய பாசிச நடவடிக்கையை நிறுத்தவில்லை என்பதையே இது காட்டுகிறது.
காந்தியடிகளையும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையும் அவமதிக்கிற இந்த நடவடிக்கையை திரு.சந்திரபாபு நாயுடு அவர்களும், திரு.நிதிஷ் குமார் அவர்களும் ஆதரிக்கிறார்களா என்பதை அவர்கள் விளக்கவேண்டும்.
கோடிக்கணக்கான மக்களின் வணக்கத்துக்குரிய தலைவர்களுடைய உருவச் சிலைகளை அவமதிப்பதை நாடாளுமன்ற செயலகம் உடனே நிறுத்த வேண்டும். தேசத் தந்தை காந்தியடிகளின் சிலையும், அரசியலமைப்புச் சட்டத் தந்தை புரட்சியாளர் அம்பேத்கரின் சிலையும் முன்பு இருந்த அதே இடங்களில் மீண்டும் நிறுவப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
Viduthalai Chiruthaigal Katchi retweeted
3 தொகுதியில் உறுதியாக இருந்த திருமா..திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன..?
#VCK | #DMK |#Thirumavalavan | #MKStalin | #Election2024 | #NewsTamil24x7
Viduthalai Chiruthaigal Katchi retweeted
#கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஸ்காட் கிறித்தவ கல்லூரியின் 131வது ஆண்டு விழாவில் இன்று பங்கேற்று உரையாற்றினேன்.
Viduthalai Chiruthaigal Katchi retweeted
#இந்திய_அரசமைப்புச்_சட்டம் நடைமுறைக்கு வந்து 75ஆண்டுகளானதை முன்னிட்டு #கர்நாடக_அரசின் சார்பில் 'அரசமைப்புச் சட்டமும் இந்திய ஒற்றுமையும்' என்னும் தலைப்பில் பெங்களூரில் இன்று நடைபெறும் மாநாட்டில் பங்கேற்பதற்கு மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா @siddaramaiah அவர்கள் அழைத்திருந்தார்.
நேற்றும் இன்றும் நடைபெறும் இம்மாநாட்டில்
சமூக பொருளாதாரம், அரசியல், பண்பாடு,சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நீதி உள்ளிட்ட தலைப்புகளில் கருத்துரைகள் வழங்கப்படுகிறது.
இம்மாநாட்டில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பங்கேற்று கருத்துரையாற்றுகிறேன்.
Viduthalai Chiruthaigal Katchi retweeted
சனவரி 26, குடியரசு நாளில் #திருச்சியில் நடைபெற்ற #வெல்லும்_சனநாயகம் மாநாட்டுத் திடலுக்கு (சுதந்திரச் சுடர், சமத்துவச் சுடர், சகோதரத்துவச் சுடர்) சுடரேந்தி வந்த தோழர்களைப் பாராட்டி சான்று வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
சுதந்திரச் சுடர் மதுரையிலிருந்தும்,
சமத்துவச் சுடர் சென்னையிலிருந்தும்,
சகோதரத்துவச் சுடர் நாகப்பட்டினத்திலிருந்தும் தோழர்களால் எடுத்து வரப்பட்டது.
உரை: பகுதி- 1
Viduthalai Chiruthaigal Katchi retweeted
சனவரி 26, குடியரசு நாளில் #திருச்சியில் நடைபெற்ற #வெல்லும்_சனநாயகம் மாநாட்டுத் திடலுக்கு (சுதந்திரச் சுடர், சமத்துவச் சுடர், சகோதரத்துவச் சுடர்) சுடரேந்தி வந்த தோழர்களைப் பாராட்டி இன்று அம்பேத்கர் திடலில் நடைபெற்ற விழாவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
Viduthalai Chiruthaigal Katchi retweeted
சனவரி 26, குடியரசு நாளில் #திருச்சியில் நடைபெற்ற #வெல்லும்_சனநாயகம் மாநாட்டுத் திடலுக்கு (சுதந்திரச் சுடர், சமத்துவச் சுடர், சகோதரத்துவச் சுடர்) சுடரேந்தி வந்த தோழர்களைப் பாராட்டி சான்று வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன். சுதந்திரச் சுடர் மதுரையிலிருந்தும், சமத்துவச் சுடர் சென்னையிலிருந்தும், சகோதரத்துவச் சுடர் நாகப்பட்டினத்திலிருந்தும் தோழர்களால் எடுத்து வரப்பட்டது.
உரை: பகுதி- 2
Viduthalai Chiruthaigal Katchi retweeted
எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தும் அரசமைப்புச் சட்டம் 16(4A) பிரிவை நடைமுறைப்படுத்திட கோரி இன்று சென்னையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
Viduthalai Chiruthaigal Katchi retweeted
#சிறுத்தைகளின்_மாநாடு:
ஃபாசிச பாஜக'வின் வெகுமக்கள் விரோத 'கும்பலாட்சியைத்' தூக்கி எறிந்திட சூளுரைத்த மாநாடு!
மாநாட்டை வெற்றிபெற வைத்த சிறுத்தைகளுக்கும்; பங்கேற்றுச் சிறப்பித்த தலைவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
எழுச்சித் தமிழர்
தொல். திருமாவளவன் அறிக்கை!
------------------------------------
"வெல்லும் சனநாயக மாநாடு" திட்டமிட்டவாறு வெற்றிகரமாக நடந்தேறியது. நல்லோர் பலரும் மெச்சும் வகையில் ; நாட்டின் கவனத்தை ஈர்க்கும் வகையில்; நாசகாரக் கொள்கைப்பகை நடுங்கும் வகையில்; சிறுத்தைகளின் அடுத்தப் பாய்ச்சல் சிறப்புற அரங்கேறியது.
பல இலட்சம் பேரா? பத்து இலட்சம் பேரா? அதனை விடவும் மேலா? என சிறுகனூரில் குவிந்த சிறுத்தைகளின் எண்ணிக்கை குறித்து பலரும் வியந்து பலவகையிலும் புகழ்ந்து பல்வேறு யூகங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் பரபரப்பூட்டும் ஒரு மாபெரும் உரையாடலை உருவாக்கி அரசியல் அரங்கை அதிரவைத்துள்ளது இம்மாநாடு!
இந்த மாபெரும் மக்கள் திரட்சி எப்படி நிகழ்ந்தது? இவர்கள் இத்தனைக் காலமும் எங்கே இருந்தார்கள்? எதற்காக இப்படி அணி அணியாய்த் திரண்டார்கள்?
இது என்ன ஒரு கட்சி நடத்திய அரசியல் மாநாடா? அல்லது கடைகோடி மாந்தர்களும் கட்டுச் சோற்றுடன் வந்து களிப்புற பங்கேற்றக் கலாச்சாரக் கொண்டாட்டமா?
வைகை நதியில் வந்து கலக்கும் மக்கள் நதியென்னும் மதுரை கள்ளழகர் பெருவிழாவா? திருவண்ணாமலை நகரையே திணற வைக்கும் தீபமென்னும் திருச்சுடர் ஒளிரும் திருவிழாவா? காவிரி நதியின் கரையோரத்தில் மக்கள் கோலாகலமாய்க் கூடிமகிழும் ஆடிப்பெருக்கின் அணிவகுப்பா?
இவ்வாறு சிறுத்தைகளின் சீரார்ந்த பேரெழுச்சியைக் கண்ட பெரியோர் பலரும் அதனை உவப்பூட்டும் பெருவிழா ஒன்றுடன் ஒப்பீடு செய்யும் அளவுக்கு மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் மாநாடு!
இது, அவரவர் செலவில் குடும்பம் குடும்பமாய் ஆர்த்தெழுந்த கோட்பாட்டுப் படையெடுப்பு! ஊரெங்கிலும், நாடெங்கிலும் திரும்பும் திசையெல்லாம் சிறுத்தைகளின் மாநாட்டு விளம்பரம். முகாம் ஒன்றுக்குக் குறைந்தது மூன்று வண்டிகள். ஒவ்வொரு வண்டியிலும் ஊரிலேயே சமைத்த எளிய உணவு மற்றும் குடிநீர் என தமிழக அரசியலில் இதுவரை இல்லாத புதிய வரலாறு படைத்த சிறுத்தைகளின் பேருழைப்பு.
என் வேண்டுகோளையேற்று இரவு பகலென பெரும்பாடுபட்டு இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய என் உயிரின் உயிரான விடுதலைச்சிறுத்தைகளுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? எவ்வாறு நன்றி செலுத்தப் போகிறேன்? செய்வதறியாது உள்ளம் நெகிழ்ந்தும் உணர்ச்சிகளால் உறைந்தும் கிடக்கிறேன்.
காலம் காலமாய்ச் சிதறடிக்கப்பட்ட மக்கள் இன்று கருத்தியல் அடிப்படையில் அரசியல் படுத்தப்பட்டிருப்பதையும்; அவர்கள் அமைப்பாக்கப் பட்டிருப்பதையும்; ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக எழுச்சிப் பெற்றிருப்பதையும் இம்மாநாடு உணர்த்துகிறது.
இம்மாநாட்டில், இலட்சம் இலட்சமென அலை அலையாய் திரண்டாலும்; எண்பது விழுக்காடு அளவில், முப்பது வயதுக்குட்பட்ட புதிய இளந் தலைமுறையினர் ஒரே இடத்தில் குழுமியிருந்தாலும்; ஓங்கி உரத்துப் போர்க்குரல் எழுப்பினாலும்; மாநாட்டில் என்னே இராணுவக் கட்டுப்பாடு? என்னே எழுச்சிமிகு பேரொழுங்கு?
நண்பகலில் வந்து நள்ளிரவு வரையில் பத்துமணி நேரம் தொடர்ந்து படைவீரரன்ன மிகுந்த கட்டுப்பாடாய்க் காத்திருந்து மாநாட்டின் செழுமைமிகு நோக்கங்களைச் சிறப்புறச் செய்த கருஞ்சிறுத்தைகளின் கருத்தியல் முதிர்ச்சியை என்னென்பது? எங்ஙனம் விவரிப்பது?
இது, சாதி வெறியூட்டி; மத வெறியூட்டி; பிற சாதி- மதங்களுக்கு எதிரான வெறுப்பினையூட்டி, மாய்மால அரசியல் வித்தைகளின் மூலம் மயக்கமூட்டி, உழைத்துப் பிழைக்கும் ஏழை எளிய மக்களை ஏய்க்கும் நோக்கில் அள்ளிவரப் பெற்ற அப்பாவிக் கூட்டமல்ல!
புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகிய மாமனிதர்களின் மகத்தான கொள்கை - கோட்பாடுகளை விதைத்ததன்மூலம், கடந்த முப்பதாண்டுகளில் முற்போக்கு சக்திகளாய் முதிர்ச்சியடைந்து, அரசியல் தெளிவுடன் ஆர்ப்பரிக்கும் ஆவேச சிறுத்தைகள்!
இது, தேர்தல் பேரத்திற்காகத் திரட்டப்பட்டதல்ல; தேசத்தைப் பாதுகாப்பதற்காக தாமே வெகுண்டெழுந்த மாபெரும் மக்கள் எழுச்சி! கொள்கைப் பகையெதிர்த்து குமுறி வெடித்தெழுந்த விடுதலைச் சிறுத்தைகளின் சனநாயகப் புரட்சி!
இந்தியாவைச் சூழ்ந்துள்ள சங்பரிவார்களின் சனாதனக் கொள்கைப் பேரிடரிலிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும், மக்களுக்கான நாடாளுமன்ற சனநாயகக் கோட்பாடுகளையும் பாதுகாத்திடும் வகையில் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்த மாபெரும் அறப்போர் தான் சிறுத்தைகளின் இந்த "வெல்லும் சனநாயகம் மாநாடு" !
ஒருபுறம் வலதுசாரி - பிற்போக்கு சங்பரிவார்களின் 'சனாதனம்'! இன்னொருபுறம் இடதுசாரி - முற்போக்கு சக்திகளின் 'சனநாயகம்'!
இவ்விரு கோட்பாடுகளுக்குமிடையே தொடர்ந்து நடைபெறும் நீண்டதொரு போரின் இறுதியில் "சனநாயகமே வெல்லும்" என்பதை, ஊருக்கு- உலகுக்கு உரத்தும் சொல்லும் சிறுத்தைகளின் அரசியல் அறச் சீற்றம்தான் இம்மாநாடு!
இதில் சாதிப் பெருமை கூச்சல் இல்லை! ஆண்டப் பரம்பரைப் பிதற்றல் இல்லை! மதம் மற்றும் கடவுளின் பெயரால் மக்களை ஏய்க்கும் மாயாவாத முழக்கங்கள் இல்லை!
"ஒரே நாடு- ஒரே மதம்- ஒரே மொழி- ஒரே கலாச்சாரம் - ஒரே கட்சி- ஒரே ஆட்சி" என அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளுள் ஒன்றான
'பன்மைத்துவத்துக்கு' நேரெதிரான ஃபாசிசத்தைப் பரப்பும் பசப்புரைகள் இல்லை!
வெல்லும் சனநாயகம்!
வெல்லும் இந்தியா! - என்னும் வெற்றி முழக்கமே வீரியமாய் ஒலித்தது! ஃபாசிச பாஜக அரசின் வெகுமக்கள் விரோதக் கொள்கைகளான
- சனாதனமயமாதல்;
- கார்ப்பரேட்மயமாதல்,
- ஃபாசிசமயமாதல்
ஆகிய 'சங்கத்துவ அரசியலை வீழ்த்துவோம்' என்கிற சனநாயக முழக்கங்களே விண்ணதிர ஒலித்தன!
புரட்சியாளர் அம்பேத்கர் வரையறுத்த அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் அறப்போருக்கான அறைகூவலே அனைத்துக்கட்சித் தலைவர்களின் உரைகளிலும் அனலாய் தெறித்தது. தந்தை பெரியார், மாமேதை மார்க்ஸ் ஆகியோரின் மக்கள் விடுதலைக்கான அரசியல் சிந்தனைகள்தாம் மாநாடு முழுவதும் ஆக்கிரமிப்பு செய்தது.
இம்மாநாடு, 'மோடி - அதானி'யின் 'சனாதன - கார்ப்பரேட்' அரசுக்கு முற்றிலும் எதிரானது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்தது. ஃபாசிச பாஜக'வின் வெகுமக்கள் விரோத 'கும்பலாட்சியைத்' தூக்கி எறிந்திட கொள்கை சார்ந்து சூளுரைத்தது. எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் 'இந்தியா கூட்டணியை' வெற்றிபெற செய்திட உறுதியேற்றது.
இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சிறுத்தைகளின் புரட்சிகர மாநாட்டை வெற்றிபெற செய்த என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும்; மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றி எமக்குப் பெருமை சேர்த்த தமிழ்நாடு முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் தலைவர் பெருமக்கள் யாவருக்கும்; பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்தல் என முழுமையான ஒத்துழைப்பை நல்கிய காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நெகிழ்வுடன் உரித்தாக்குகிறேன்.
மேலும், மாநாட்டை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் வழியில் விருத்தாசலம் அருகே விபத்திலே சிக்கி உயிரிழந்த கடலூர் மாவட்டத் தம்பிகள் வில்லியநல்லூர் உத்திரக்குமார், அன்புச்செல்வன், யுவராஜ் ஆகிய மூவருக்கும் செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துவதோடு, அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர், விசிக.
Viduthalai Chiruthaigal Katchi retweeted
சனவரி 26 வெல்லும் சனநாயகம் மாநாடு திருச்சிராப்பள்ளியில் நடைபெறுகிறது.
சமத்துவ சுடர் ஓட்டத்தை இன்று சென்னை அம்பேத்கர் திடலில் தொடங்கி வைத்தேன். நாளை மதுரை மேலவளவு முருகேசன் நினைவகமான விடுதலை களத்திலிருந்து சுதந்திரச் சுடர் ஒட்டம் தொடங்குகிறது, நாளை மறுநாள் தஞ்சாவூரிலிருந்து சகோதரத்துவச் சுடர் ஒட்டம் தொடங்குகிறது.
மூன்று திசைகளிலிருந்து தொடங்கும்
சமத்துவச் சுடர் ஓட்டம்
சுதந்திரச் சுடர் ஓட்டம் சகோதரத்துவச் சுடர் ஓட்டம்
வெல்லும் சனநாயகம் மாநாட்டு திடலுக்கு சனவரி 26 அன்று வந்தடையும்.
#வெல்லும்_சனநாயகம்_மாநாடு
#சமத்துவச்சுடர்
Viduthalai Chiruthaigal Katchi retweeted
அயோத்தியில் வரலாற்றுத் திரிபு வாதம், பெரும்பான்மை ஆதிக்க வாதத்தால் வென்றுள்ளது. இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல், இராமரின் பெயரால் வெற்றிவாகை சூடியுள்ளது.
இராமர் என்கிற சத்திரிய அடையாளத்தை ஆயுதமாக ஏந்தி, மோடி என்கிற வைஸ்யரைக் கொண்டு அப்பாவி சூத்திர இந்துக்களை ஏய்த்து அவர்களை வீழ்த்திய பிராமண சனாதனிகளின் அரசியல் சூதாட்ட வெற்றி விழாதான் அயோத்தியில் நடந்தேறியுள்ளது.
இந்துத்துவா என்னும் பெயரில் சைவம் உள்ளிட்ட பிற இந்து அடையாளங்கள் யாவற்றையும் பார்ப்பனிய வைணவமயமாக்கும் சூழ்ச்சி அரங்கேறியுள்ளது.
இது இசுலாமியர், கிறித்தவர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டு மொத்த தேசத்திற்கும், அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கும் எதிரானது.
#JaiDemocracy #VellumJananayagam @PMOIndia #AyodhyaRamTemple #BabriMasjid




























