
Fan account of @actorvijay launched on 19th June 2011 | https://teapawt.net/t.co/FFqswtlxuA | #தமிழகவெற்றிக்கழகம் சமூக ஊடக அணி | @tvkvijayhq @cmotamilnadu
Joined June 2011
- Tweets66.4K
- Following4
- Followers289K
- Likes3.9K
VTL Team retweeted
மானங்கெட்ட, துப்புகெட்ட,வெட்கம் கெட்ட, அறிவுகெட்ட தனமாகக் கட்சி நடத்துகிறவர்கள் ஒவ்வொரு துறையிலும் மாபெரும் ஊழல் செய்துவிட்டு இப்போது ஓவர் லாஜிக் பேசுவதுபோல ஊளையிடுகின்றனர். தீயசக்தியின் ஆட்சியில் வெளியிட்ட ஆணையை வெளியிட்டும் அதை நாங்கள்தான் ஆணையாகப் பிறப்பித்தோம் என்று ஒப்புக்கொள்ள துப்பில்லை ; வக்கில்லை. ஆனால், பரந்தாமன்களை வைத்து ஆத்திரத்தை மட்டுமே கொட்டி வருகிறது.
குடவாசல் என்பதைக்கூட கொடவாசல் என்று குளறுபடியாக இருந்தது குடைசாய்ந்த ஆட்சியின் துப்புகெட்ட அறிவுகெட்ட மானம்கெட்ட உஷார்தனத்தின் உடைசல்தான் அது. கேவலமான அரசியல் செய்யவில்லை என்று கூறிக்கொண்டே அப்படிப்பட்ட அரசியலைத்தான் செய்து வருகின்றனர்.
தங்களது தத்தி அரசாங்கம், முட்டாள் கவர்மெண்ட்தான் அனைத்து ஆணைகளையும் வெளியிட்டது. அதனடிப்படையில்தான் குழுக்கள் அமைக்கப்பட்டும் வெளியிடப்பட்டது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியதுதானே?. வெட்கம் கெட்ட வேலை வெட்டி அற்ற முதலமைச்சர் தலைமையில் நடந்த தீயசக்தி ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுக்கள் யாருடைய அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட்டது?.
நாங்கள் அமைத்த குழு நாங்கள் அமைத்த குழு என்று வார்த்தைக்கு வார்த்தைக்கு வாய்கிழியப் பேசும் தங்கள் பிரதிநிதி வாயிலாகவே தங்கள் குழு பரிந்துரைத்த, தேர்வு செய்த பதிப்பகங்கள் மற்றும் நூல்களின் பட்டியலை வெளியிட வேண்டியதுதானே?.
திமுக அறிவுடைய இயக்கம் என்று தனக்குத்தானே கூவிக்கொள்பவர்கள், தங்களின் தீயசக்தி திமுக ஆட்சியில் இருந்தது வரை தேர்வுச்பெய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியலை வெளியிட்டு,, தவெக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டிருந்தால் அதையும் நிரூபிக்கும் வகையில் பட்டியலை ஆதாரத்துடன் வெளியிட வேண்டியதுதானே?. அதைச் செய்யாமல், வழவழா கொழகொழா கேள்விகளை வக்கற்ற, வகையற்ற ஆட்களை வைத்து கேட்பது ஏன்?.
திமுக குறிப்பிடும் பெயர்களில் புத்தகங்கள் தெரிவு செய்ய 2025 நவம்பரிலோ அல்லது 2026 பிப்ரவரியிலோ யாருடைய ஆட்சி நடந்தது?. இதை துப்புகெட்ட,அறிவுகெட்ட,
கூறுகெட்ட வாதாடியை வைத்தே வாதிடலாமே?. அதை ஏன் திமுக செய்யவில்லை?. இல்லாத முகவரியில் ஆணை வெளியிட்டது துப்புகெட்ட,மானம்கெட்ட திமுக ஆட்சியில்தான் என்பதை ஒப்புக்கொள்ள தெம்பு இருக்கிறதா?. திராணி இருக்கிறதா?.
இல்லாத பதிப்பகங்களையும் இல்லாத எழுத்தாளர்களையும் வைத்து கொள்முதல் செய்து ஊழல் செய்துவிட்டு சீல் வைக்கப்பட்ட தேதியை வைத்து, அன்றுதான் கொள்முதல் செய்ததாகக் கூறும் கூமுட்டை அரைவேக்காட்டு ஆளை வைத்து பேசிப்பேசி திமுகவே மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு கேவலப்பட்டு நிற்கிறது.
VTL Team retweeted
“பெரியார் நூலக ஊழல்” விவகாரத்திலிருந்து திசைதிருப்ப ஏதாவது ஒரு விஷயத்தை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Better luck next time @mkstalin sir..
ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான குழு குறித்து:
ஒன்றிய – மாநில உறவுகளை நிர்வகிப்பதற்காக முந்தைய அரசால் அமைக்கப்பட்ட குழுவில் 3 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். அதில் ஒருவர் 04.05.2026 அன்று ராஜினாமா செய்தார்.
அண்ணன் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, புதிய சட்ட ஆணையத்தை (Law Commission) அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது .
இதுதொடர்பாக நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டறிந்ததுடன், ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான பணிகளை மேலும் திறம்படச் செயல்படுத்தும் நோக்கிலும், 07.08.2026 அன்று புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.(அரசாணை எண். 202, சட்டம் (LC) துறையின் பத்தி 3(c)-ஐப் பார்க்கவும்.)
புதிய சட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் முழுநேர உறுப்பினர்கள்:
தலைவர்:
மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர் டி. கிருஷ்ணகுமார்.
முழுநேர உறுப்பினர்கள்:
சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மாண்புமிகு நீதியரசர் டீக்கா ராமன்.
திரு. டி.கே. ராமச்சந்திரன், ஐ.ஏ.எஸ்.,
(அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர்.)
திரு. ஏ. அருணகிரி, சட்டத்துறையின் முன்னாள் அரசுச் செயலாளர்.
பகுதிநேர உறுப்பினர்கள்:
திரு. பி. மோகன்தாஸ், (முன்னாள் மாவட்ட நீதிபதி.)
திரு. ஆர். கோவிந்தராஜன், (முன்னாள் மாவட்ட நீதிபதி.)
இவ்வாறு புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
VTL Team retweeted
தமிழை வைத்து 70 வருடமாக சுரண்டிய திமுக,
தற்பொழுது பெரியாரை வைத்து கொள்ளை..
ஆமா இந்த அகல்விளக்கு கமிஷன் யாருக்கு சென்றது @mkstalin , @arivalayam ?
VTL Team retweeted
2023-ம் ஆண்டு முதலே குறிப்பிட்ட பதிப்பகத்தில் இருந்து புத்தகங்கள் அனுப்பியது அம்பலம்.. நியூஸ் தமிழ் நடத்திய கள ஆய்வில் அதிர்ச்சி
Periyar Library | Agalvilakku | Fake Books | Book Scam | Publishers
#NewsTamil24x7 #PeriyarArivulagam
VTL Team retweeted
Three publishers
Akal Vilakku Pathippagam,
Sigma Publishing Services & Phoenix Publications ,
operating from the same address. Since 2023, all have secured government orders and public library purchases.
Who owns them?
How were the contracts awarded?
VTL Team retweeted
கோவை பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டினேன். பெரியார் அறிவுலகம் சம்பந்தமான யாவற்றையும் 99.9 சதவீதம் நானே முடித்துவிட்டேன் என்று
கூறிய அரசியல் மூர்த்தி இப்போது எங்கே போனார்?.
இந்த கோவை பெரியார் அறிவுலகம் ஊழல் உலகமாக மாறியதைத்தான்
எல்லாவற்றையும் நாங்களே முடித்து விட்டோம் என்று அரசியல் மூர்த்தி சொன்னாரா?
ஊழல் சம்பந்தமாக எங்கள் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எழுப்பும் எந்தக் கேள்விக்கும் இதுவரை பதில் சொல்லாமல் சம்பந்தமில்லாத அவதூறாகப் பேசும் அரசியல் மூர்த்தியும் அவரின் வாரிசு ரீபோஸ்ட்நிதியும் அறிவுலகம் ஊழல் உலகமாக மாறியதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?.
ஸ்டாலின் படிக்கச் சொன்னார்.
விஜய் படம் பார்க்கச் சொல்கிறார் என்று சொன்ன திமுகவின் அண்டா குண்டாக்கள் எல்லாம் பம்மிப் பதுங்குவது ஏன்?.
யூட்யூபில் வால்ட்யூப் வாய்களுடன் பேசும் திமுகவின் தண்ணீர் குடிக்கும் பாத்திரங்களும்
அரசியல் விமர்சகர் என்ற பெயரில் திமுகவின் கூஜாக்களாக இருப்போரும்
பத்திரிகையாளர் என்ற பெயரில் திமுகவின் உறுப்பினர் என்பதை மறைத்து அன்றாடம் டிவி விவாதங்களில் மன்றாடும் ஆத்மாக்கள் எங்கே இருக்கின்றனர்?.
ஆப்பசைத்த வானரம்போல தாங்கள் பிளந்த மரத்தின் இடைவெளியில் தங்கள் வாலே சிக்கிக் கொண்டதால், எல்லாவற்றிற்கும் விஜய்தான் காரணம் என்று அவதூறு பேசி அலறப் போகின்றனரா?.
அரசியல் மூர்த்தியின் கூடாரமே ஆழ்ந்த அமைதியில் உறைந்து போய் உள்ளதால், இந்த ஊழலால் தி.மு.க. ஆடிப்போய் உள்ளது மட்டும் உறுதியாகி உள்ளது.
VTL Team retweeted
#Breaking
TN Govt appoints 3 special public prosecutors for Gem Granites Veeramani POCSO case.
VTL Team retweeted
புதிய நூலகங்களுக்கான நூல் / மின்நூல் தேர்வுக் குழு (Selection Committee) - 2025
நூலகத்தில் இடம்பெறக் கூடிய தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிப்பிக்கப்பட்ட நூல்கள் மற்றும் மின்நூல்களை ஐந்து வகை
பிரிவுகளில் தேர்ந்தெடுப்பதற்கு மொத்தம் 13 உறுப்பினர்களைக் கொண்ட நூல் தேர்வுக் குழு அமைக்கப்பட்டது.
1. முனைவர், ஜெ. ஜெயரஞ்சன், பேராசிரியர் (பொருளாதாரம்) - மாநில திட்டக்குழு துணைத் தலைவர்
2. முனைவர். சுல்தான் அஹமத் இஸ்மாயில் - மாநில திட்டக்குழு உறுப்பினர்
3. முனைவர். கு. அரசேந்திரன் - முதன்மை ஆசிரியர்
4. முனைவர் ராமு மணிவண்ணன் - பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர்
5. முனைவர். கே. ராஜன் - கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆலோசகர்
6. முனைவர். E. முருகன் FRSC, FASCh, - ஆராய்ச்சித் துறை முதல்வர், பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர்
7. முனைவர். B. சந்திர மோகன் - பேராசிரியர்
8. திரு. S.பாலபாரதி - எழுத்தாளர் & பாலபுரஸ்கார் விருதாளர்
9. முனைவர். விஜய பாஸ்கர்
10. தலைவர்/இயக்குநர்/பேராசிரியர், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி
11. முனைவர். A.R. வெங்கடாசலபதி, பேராசிரியர்|
12. திரு. R சுதன், IAS (Retd), உறுப்பினர் செயலாளர், மாதிரி பள்ளிகள், கல்வித் துறை.
13. திரு. M.P.விஜயகுமார், தலைவர், தமிழ்நாடு உயர்கல்வி மன்றம்.
அரசாணை (நிலை) எண். 250, 05.11.2025-ன்படி கோயம்புத்தூரில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் ரூ.50 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இணைய வழியில் நூல் பரிந்துரைக் குழுவில் 112 உறுப்பினர்கள் கலந்து கொண்டு கொள்முதல் செய்வதற்கான நூல்கள் பரிந்துரை செய்யப்பட்டனர்.
09.01.2026 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 112 நூல் பரிந்துரைக்குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை நூல் தேர்வுக் குழு உறுப்பினர்களால் கொள்முதல் செய்வதற்கான நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
நூல் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, 24.01.2026 அன்று நூல் விலை பேச்சு வார்த்தை குழு வழியாக 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை நூல்களுக்கான விலை குறைப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நூல்களுக்கு ஆணை வழங்க 05.02.2026 அன்று நடைபெற்ற உயர்நிலை குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 06.02.2026 அன்று சிறப்பு நூலகங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் குழுவினரால் நூல் கொள்முதல் ஆணை வழங்க நூல் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டு, ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பெரியார் அறிவுலகத்திற்கு ரூ.19.19 கோடி மதிப்பில் 60,266 நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
VTL Team retweeted
அரசாணை (நிலை) எண். 250, 05.11.2025-ன்படி கோயம்புத்தூரில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் ரூ.50 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இணைய வழியில் நூல் பரிந்துரைக் குழுவில் 112 உறுப்பினர்கள் கலந்து கொண்டு கொள்முதல் செய்வதற்கான நூல்கள் பரிந்துரை செய்யப்பட்டனர்.
09.01.2026 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 112 நூல் பரிந்துரைக்குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை நூல் தேர்வுக் குழு உறுப்பினர்களால் கொள்முதல் செய்வதற்கான நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
நூல் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, 24.01.2026 அன்று நூல் விலை பேச்சு வார்த்தை குழு வழியாக 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை நூல்களுக்கான விலை குறைப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதனடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நூல்களுக்கு ஆணை வழங்க 05.02.2026 அன்று நடைபெற்ற உயர்நிலை குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, 06.02.2026 அன்று சிறப்பு நூலகங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் குழுவினரால் நூல் கொள்முதல் ஆணை வழங்க நூல் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டு, ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பெரியார் அறிவுலகத்திற்கு ரூ.19.19 கோடி மதிப்பில் 60,266 நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
VTL Team retweeted
பெரியார் அறிவுலகத்தில் ரூ.50 கோடி ஊழல் செய்த திமுக!
பெரியார் அறிவுலகத்தில் சின்னச் சின்ன விஷயங்களைக்கூடப் பார்த்துப் பார்த்து வடிவமைத்தேன் என்று தம்பட்டமடித்த Senior Generational Abuser-ஏ!
புத்தகக் கொள்முதலில் ரூ.50 கோடிக்கு ஊழல் அரங்கேறியிருப்பதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்? "கடல்லையே இல்லையாம்" என்பதைப் போல, தமிழ்நாட்டிலேயே இல்லாத அகல்விளக்குப் பதிப்பகம் மற்றும் பீனிக்ஸ் பதிப்பகம் போன்ற பதிப்பகங்களிலிருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
அந்தப் பதிப்பகங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் தரம் என்னவென்று அறிவீரா, Dummy Daddy? முன்னூறு பக்கங்கள் மட்டுமே கொண்ட புத்தகத்தின் விலை ரூ.1,000-க்கும் மேல்!
அரிய தகவல்களை உள்ளடக்கிய புத்தகமாக இருக்குமோ என்று ஒரு புத்தகத்தை எடுத்து 'தமிழ்நாட்டு முதல்வர்களின் வரலாறு' என்ற தலைப்பின் கீழ் வருபவற்றைப் படித்துப் பார்த்தால்,
"இந்த நிலையில் 1969-1976 மற்றும் 1989-1991 இடையே திரு. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு சீரான பல்வேறு திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன."
என்று இருக்கிறது.
அடடே! என்னே ஒரு எழுத்து நடை! என்னே ஒரு இலக்கிய நயம்! தமிழ் இலக்கணம் இயற்றிய தொல்காப்பியரையே மிஞ்சும் இலக்கணம் இந்த வரிகளில் இருக்கிறதல்லவா, Senior Generational Abuser? ஆமாம், நீங்கள் 1989-இல் முதலமைச்சராக இருந்தீரா, சித்தரஞ்சன் சாலை மூர்த்தி?
பாரதியார் பற்றிய புத்தகங்கள் இதைவிடப் படிக்கக் கொடுமையாக இருக்கின்றன. இரண்டு பதிப்பகங்களின் புத்தகங்களே இந்த இலட்சணத்தில் இருக்கின்றன. இன்னும் பிரிக்கப்படாமல் இருக்கும் பல பெட்டிகளில் என்னென்ன பூதங்கள் காத்திருக்கின்றனவோ? இன்னும் பிரித்து அடுக்கப்படாத ஆங்கிலப் புத்தகங்களின் தரத்தை நினைத்தாலே இப்போதே பக்கென்று இருக்கிறது!
அறிவுத் திருக்கோவில்களில் இருக்க வேண்டிய புத்தகங்களா இவை?
பெரியார் அறிவுலகத்தில் அனைத்தும் தனது தனிப்பட்ட கண்காணிப்பில்தான் நடைபெற்றன என்று தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக்கொண்ட சித்தரஞ்சன் சாலை மூர்த்திக்குத் தெரிந்துதான் இந்தப் புத்தகக் கொள்முதல் ஊழல் நடந்ததா?
பதில் சொல்லத் துப்பிருக்கிறதா, Senior Generational Abuser?
#420Model
VTL Team retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (6.11.2026) தலைமைச் செயலகத்தில், விண்வெளித் துறை செயலாளரும், விண்வெளி ஆணையத்தின் தலைவரும், இஸ்ரோ தலைவருமான டாக்டர் வி. நாராயணன் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay was called on by Dr. V. Narayanan, Secretary, Department of Space, Chairman, Space Commission, and Chairman, ISRO, at the Secretariat today (06.11.2026).
#CMJosephVijay
VTL Team retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (6.11.2026) தலைமைச் செயலகத்தில், நபார்டு தலைவர் முனைவர் வி. ஷாஜி கிருஷ்ணன் அவர்கள் சந்தித்துப் பேசினார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay was called on by Dr. V. Shaji Krishnan, Chairman of NABARD, at the Secretariat today (06.11.2026).
#CMJosephVijay
VTL Team retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
VTL Team retweeted
வெங்காயம் கொள்முதல் ஆணை ரத்து ஏன் ?
நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் பொதுமக்களுக்கு மானிய விலையில் வெங்காயம் வழங்குவதற்காக NAFED (இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு) நிறுவனத்திடமிருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TNCCF) ஆணை வழங்கியிருந்தது.
மகாராஷ்டிராவில் உள்ள நாசிக்கிற்கு கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்ற போது, தமிழ்நாட்டிற்கு வெங்காயம் ஒரு நாள் முன்பே அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது. உடனே அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த வெங்காயத்தை ஆய்வு செய்த போது, 'A' தர வெங்காயத்துடன் அழுகிய மற்றும் நிராகரிப்புத் தர வெங்காயம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கொருக்குப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வெங்காய மூட்டைகளை, 31.10.2026 அன்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்தது. அப்பொழுது மூட்டைகளில் 50.2 சதவீத வெங்காயம் நிர்ணயிக்கப்பட்ட 45 மி.மீ அளவைவிட குறைவாகவும், 20 முதல் 26 சதவீதம் வரை அழுகியதோடு, முளைத்த மற்றும் பூஞ்சை பாதித்த வெங்காயங்கள் கழிவாக இருந்தது தெரியவந்தது.
பொருளின் தரம் சரியாக இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். வெங்காயத்தின் தரம் குறைவாக இருந்ததால் பொதுமக்களின் நலன் கருதி கொள்முதல் ஆணை ரத்து செய்யப்பட்டது. முன்பணம் எதுவும் வழங்கப்படாத நிலையில், கொள்முதல் ஆணை 31.10.2026 அன்று ரத்து செய்யப்பட்டதால் அரசுக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை.
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
VTL Team retweeted
ஆந்திராவுக்கு சென்றதா தமிழ்நாடு முதலீடுகள்; உண்மை என்ன ?
Hyundai நிறுவனத்தின் உதிரிபாகங்கள் மற்றும் வாகன உற்பத்தி சார்ந்த சப்ளையர் நிறுவனங்களில் பெரும்பாலானவை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக, தமிழ்நாட்டில் Seoyon E-Hwa மற்றும் Hwashin போன்ற கொரிய நிறுவனங்கள், தமிழ்நாட்டில் அமைந்துள்ள Hyundai நிறுவனத்திற்கு சப்ளை செய்து வருகின்றன.
ஆந்திராவில் Kia நிறுவனம் அமைக்கப்பட்டதை தொடர்ந்து, Seoyon E-Hwa நிறுவனம் 2017ஆம் ஆண்டிலேயே ஆந்திராவிலுள்ள அனந்தபூரில் தனது உற்பத்தி மையத்தைத் தொடங்கியது.
தற்போது Kia நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்தைக் கருத்தில் கொண்டு சில சப்ளையர் நிறுவனங்கள், ஆந்திரப் பிரதேசத்தில் தங்களது உற்பத்தியை விரிவுப்படுத்தி வருகின்றன. ஏற்கனவே தமிழ்நாட்டில் அமைந்துள்ள Hyundai நிறுவனத்தின் சப்ளையர்கள், தொடர்ந்து தமிழ்நாட்டிலேயே முதலீடுகளை விரிவுப்படுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, மேலும் தமிழ்நாட்டில் அமைந்துள்ள Hyundai நிறுவனத்தின் சப்ளையர் நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கான (EV) உதிரிபாகங்கள் மற்றும் உயர்தர வாகன மின்னணுவியல் (Automotive Electronics) உற்பத்தியிலும் தங்களை விரிவுப்படுத்தி வருகின்றன.
இத்தகைய முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியும், வேலை வாய்ப்பும் அதிகளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இந்நிறுவனங்கள் EV உதிரிபாக உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி, மேம்பாட்டு மையங்களை (R&D Centres) தமிழ்நாட்டில் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு உதாரணமாக, மற்றொரு கொரிய நிறுவனமான Inzi Controls, தனது புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை புனேவில் அமைப்பதற்கு பதிலாக சென்னையைத் தேர்வு செய்துள்ளது.
அடுத்தகட்டமாக Hyundai நிறுவனம் மற்றும் அதன் சப்ளையர் நிறுவனங்களுக்கான முதலீடு திட்டங்களை அறியவதற்கும், தேவையான உதவிகளை புரிவதற்கும், விரைவில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னெடுப்புகளை Guidance Tamil Nadu மேற்கொண்டு வருகிறது.
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
VTL Team retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று 26,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தொழில்முனைவோருக்கான ரூ 3000 கோடி வங்கி நிதி இணைப்பு வழங்கும் விழாவில் பங்கேற்கும் முன்பு ,மகளிர் சுயஉதவிக் குழுவினரால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கண்காட்சியில் பார்வையிட்டதுடன்,
அவர்கள் தயாரித்த பொருட்களையும் ஆர்வமாக பார்த்து பணம் கொடுத்து அதனை வாங்கினார். தேநீர் குடித்துவிட்டு, அதற்கான பணத்தையும் அவர்களிடம் வழங்கினார் வெற்றித் தலைவர் அவர்கள் .
VTL Team retweeted
After watching the report aired on @PttvNewsX yesterday, @CMOTamilnadu directed officials to take immediate action. Following his instructions, the driver has finally got the transfer he wanted.
“எனக்கு பணம் காசுலாம் வேணாம்... Transfer மட்டும் கொடுங்க போதும்”
தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட தன் மாற்றுத்திறனாளி மகனை கவனிக்க அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிமாற்றம் கோரி கண்ணீருடன் கோரிக்கை வைத்த பெற்றோர்; "முதலமைச்சர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை" என வேதனை
#TNTransport | #cmvijay | #handicap | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
@CMOTamilnadu | @TamilanParthib1 | @Farvace_Offl




































