Pinned Tweet
அந்த reporter விக்ரம் ன கிட்ட கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது,
ஆனால் அந்த reporter mentioned பண்ண காதநாயகர்கள் 10 முறை பிறந்துவந்தாலும் இப்படி ஒரு படத்தில் நடிக்க முடியாதுன்னு நான் சொல்லவில்லை 👇
@chiyaan ன நடிப்பு 🔥
#Thangalaan #ChiyaanVikram
Anand Appy retweeted
#CV64 – A POWERFUL COMBINATION! 🔥💥
#VishnuEdavan × @Ags_production × #Anirudh Musical! 🎶
Expectations are HIGH! 🔥🥵
#Chiyaan64 @VishnuEdavan1 @Chiyaan
Anand Appy retweeted
Proper aa Cinema Edukkaama, Field La Kooda Nikka Mudiyala Na, Kadaisila Yevanum Reception La Koopdavum Maatta, Neenga Kaanaamaleyum Poyidum, Appram Ungala Kadaisila Unga Fans Kooda Ungala Kandukkaama Poyidum. @chiyaan 😮💨👋💯
@SureshChandraa @Akracingoffl Warning For You Too.⚠️🤝
Anand Appy retweeted
அவருக்கு தாயாகவும் தாரமாகவும் இருந்திருக்க வேண்டிய நான் காலச்சூழலில் சிக்கி 30 வருடங்கள் காணாமல் போனதை நினைக்க நினைக்க நெஞ்சம் வலித்தது!
வரமாட்டார் என்று நினைத்தேன்,
ஆனால் என் மகளின் திருமணத்திற்கு வந்து போனார்,
அவர் தந்த புடவையை தான்
நான் மகளின் திருமணத்தில்
கட்டி இருந்திருந்தேன்,
அவர் முகத்தில் பழைய சந்தோஷத்தை பார்த்தேன்!
அதன் பிறகு அவரை சந்திக்கவும் இல்லை,
அவருக்கு போன் செய்யவும் இல்லை,
இரண்டு மாதங்கள் கழித்து அவரிடம் இருந்தே போன் வந்தது,
அவரோடு பணிபுரியும் விவாகரத்தான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாக சொன்னார்,
என்னால் நம்பவே முடியவில்லை,
என்ன திடீரென்று இத்தனை வருடங்கள் கழித்து என்றேன்,
அன்று நீங்கள் புடவையை வாங்கிக்கொண்டு காரில் ஏறும் போது உங்கள் முகம் சந்தோஷமாக இல்லை,
அது மட்டுமல்லாமல்
அந்த புடவையும்
நான் தனியாக வாழும் வாழ்க்கையும் உங்களை கஷ்டப்படுத்தும் என்று தோன்றியது,
அந்த கஷ்டத்தை உங்களுக்கு தரவேண்டாம் என்று தான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன் என்றார்,
என்னிடம் வார்த்தைகள் இல்லை,
என் சந்தோஷத்திற்கு அளவும் இல்லை,
விட்ட குறை தொட்ட குறை என்று எதுவுமே இல்லை,
நானே உரிமையோடு முன்னின்று
அத்தனை திருமண வேலைகளையும் பார்க்கவேண்டும் என்று ஆசையோடு இருக்கிறேன்,
அவருக்கு தாரமாக
முடியாவிட்டால் என்ன,
அவர் ஆசைப்படி
தாயாகிவிட்டு போ என்றது மனது!
மீள்பார்வை
Anand Appy retweeted
Very light blueish checked shirt,
Dark grey pant, silver color watch, pocket ல் ஒரு பேனா, brand இல்லாத leather chappal, அதே கடுகு டப்பாவில் கல் உப்பு கலந்தது போன்ற வெள்ளையும் கருப்பும் கலந்த தலைமுடி, கண்ணியமான அந்த கண்களை மறைத்திருந்த கண்ணாடி, கொஞ்சமாய் வளர்ந்திருந்த தொப்பை, அதைப்பற்றி கவலைப்படாமல் tuck in செய்திருந்தார்!
அந்தப்பக்கம் திரும்பி உட்கார்ந்து இருந்தவரை கொஞ்சம் கொஞ்சமாக கவனித்தபடி படி ஏறி சென்றேன்,
ஏனோ எனக்கு சந்தோஷமாக இருந்தது,
நெற்று வரை நான் அழுவேன் என்று தான் நினைத்தேன்,
ஏனோ எனக்கு அழுகை வரவில்லை!
அவர் முன்னால் போய் நின்றேன்,
அவர் எழுந்து நின்றார்,
என்னை பார்தததில் அவருக்குள்ளும் ஒரு சந்தோஷம் பிறந்து அது உதட்டின் வழியே
மெதுவாய் ஓடி வருகிறது,
அதன் கையை பிடித்து பாதியில் நிறுத்தி உதட்டுக்குள்ளே அனுப்பி வைக்கிறார்!
அவருக்காக நான் சமைத்து கொண்டு போன இனிப்பை கொடுத்து சாப்பிட சொன்னேன்,
தயக்கத்தோடு வாங்கிக்கொண்டார்,
Sugar, BP எதாவது இருக்கா என்றேன்,
இல்லை என்றார்,
அப்போ மிச்சம் வைக்காம சாப்பிடுங்க என்றேன்,
எனக்காக எல்லாவற்றையும் சாப்பிட்டார்,
Invitation ஐ கொடுத்தேன்,
நிச்சயம் திருமணத்திற்கு வரவேண்டும் என்று சொன்னேன்,
வரமுடியுமா தெரியல என்றார்,
நான் இப்போ உங்களோட தனலட்சுமி இல்ல,
அதுனால எந்த தயக்கமும் இல்லாம வாங்க என்றேன்,
அமைதியாக இருந்தார்.
ஏதோ பேசனும்னு சொன்னீங்களே என்றார்,
உங்களை பார்க்க சந்தோஷமா
படி ஏறி வந்த மாதிரி
சந்தோஷமாவே படி இறங்கி போயிடனும்னு நினைக்கிறேன்
என்று சொல்லும் போதே
என் கண்கள் என் பேச்சை கேட்கவில்லை,
அது கண்ணீரை நிரப்பி வைத்துக் கொண்டது,
தழுதழுத்த வார்த்தைகளோடு
ஏன் நீங்க கல்யாணம் பண்ணிக்கல என்றேன்,
எனக்கு யாரையும் புடிக்கல என்றார்,
எனக்கு மட்டும் என்ன புடிச்சா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்,
பண்ணிக்கிட்ட பின்னாடி புடிச்சது இல்லையா,
அப்படி நீங்களும் பண்ணி இருக்கலாம் இல்லையா என்றேன்,
அமைதியாக இருந்தார்,
ஒரு வேளை நீங்க மட்டும் கல்யாணம் பண்ணி இருந்து,
உங்களை நினைச்சு நான் கல்யாணமே பண்ணாம இருந்து இத்தனை வருஷம் கழிச்சு உங்களை இப்படி meet பண்ணா உங்களுக்கு எப்படி இருக்கும் என்றேன்,
அங்கும் இங்கும் பார்த்து தடுமாறினார்,
நீங்கள் கற்பனை செய்வதை விட எனக்கு அதிகமாக வலிக்கிறது,
என்னால் எப்படி இனிமேல் நிம்மதியாக இருக்க முடியும்,
காதலிக்கும் போதே என் மனதில் உயரத்தில் இருந்தீர்கள்,
இப்போது அதைவிட உயரத்தில் இருக்கிறீர்கள்,
அதனால்
எல்லாவற்றையும் விட எனக்கு அதிகமாக வலிக்கிறது,
உங்களுக்கு என்று யாராவது இருக்க வேண்டும்,
உங்களை போன்ற ஒரு நல்ல மனிதனுடன் வாழுகின்ற சந்தோஷமும் குடுப்பினையும் யாராவது ஒரு பெண்ணுக்கு கிடைக்க வேண்டும்!
இப்படியே உங்களை மியூசியத்தில் வைத்து பார்க்க எனக்கு விருப்பமில்லை,
நானே உங்களுக்கு பெண் பார்க்கட்டுமா என்றேன்,
காலம்போன காலத்தில் கல்யாணமா என்று சிரித்தார்,
உண்மையில் அந்த சிரிப்பை பார்த்து குற்றவுணர்ச்சியில் செத்துப்போனது என் மனம்!
இப்பவும் அழகா தான் இருக்கீங்க கொஞ்சம் டை அடிச்சிட்டா போதும் என்று நானும் கொஞ்சம் சிரித்தேன்.
இருபத்தைந்து நிமிடங்கள் இப்படியே பேசிக்கொண்டு இருந்துவிட்டு,
ஆஞ்சநேயரை வணங்கி
செந்தூரம் வைத்துக் கொண்டு,
அங்கிருந்து படியிறங்கி வந்தோம்,
அவருடைய bag ல் இருந்து
ஒரு பையை எடுத்து
அதை திறந்து ஒரு புடவையை எடுத்து என்னிடம் கொடுத்தார்,
என்ன இது என்றேன்,
தப்பா நினைக்க வேணாம்,
உங்களுக்காக அப்போ நான் எடுத்து வச்சிருந்த பட்டு புடவை இது,
நாம பிரிஞ்சிட்டதால
இதை என்ன பண்றதுன்னு
எனக்கு தெரியல,
யாருக்கும் கொடுக்கவும் மனசு வரல,
தப்பா நினைக்காம வாங்கிக்க முடியுமா என்று தயங்கி தயங்கி என்னிடம் நீட்டினார்,
இப்போ திடீர்னு எப்படி கொண்டு வந்தீங்க என்றேன்,
இது எப்பவும் என்னோட
ஆபீஸ் பேக்லயே இருக்கும்,
யாருக்கும் தெரியாது,
ஒரு சிலர் பார்த்துட்டு என்னன்னு கேட்கும் போது அம்மாவோட புடவைன்னு சொல்லி இருக்கேன்,
அம்மாவும் இல்ல,
நீங்களும் இல்லன்றதுனால
இது இருக்கும் போது நீங்க ரெண்டு பேரும் கூட இருக்கிற மாதிரி நினைச்சிப்பேன் என்றார்,
அழுகையை கடந்து அதிக பாரமாக இருந்தது எனக்கு,
எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல்,
இப்போ என்கிட்ட குடுத்துட்டு
என்ன பண்ணுவீங்க என்றேன்,
இப்போ என் மனசுல
எந்த கஷ்டமும் இல்ல,
என்னவோ ரொம்ப ரிலாக்ஸ் ஆன மாதிரி இருக்கு..!
இதை வாங்கிக்க முடியுமா என்றார்,
வாங்கிக் கொண்டேன்,
உணர்வுகளற்ற புன்னகையோடு அவரிடம் இருந்து விடைபெற்று காரில் ஏறி கிளம்பினேன்!
அந்த புடவையும் அதன் பின்னால் இருந்த கதையும் என்னை தூங்கவிடாத அளவுக்கான துயரத்தை கொடுத்தது!
Anand Appy retweeted
காதலித்தவரை கரம்பிடிக்க முடியாமல் போனாலும்,
கட்டிக்கொண்டவர் எந்த குறையும் வைக்கவில்லை எனக்கு,
முப்பது வருட திருமண வாழ்க்கையில் மூன்று பிள்ளைகள்,
மூன்றாவது பெண்பிள்ளைக்கான திருமண பத்திரிகையை வைக்கப்போன இடத்தில்
இத்தனை வருடங்கள் கழித்து
அவரை இப்படி பார்ப்பேன் என்று நினைக்கவில்லை..!
வீடு திரும்பும் வரை
நான் நானாக இல்லை,
வீட்டுக்கு வந்தபின்பும்
நான் நானாக இல்லை. .!
எவ்வளவோ பேர் காதலிக்கிறார்கள்,
எல்லா காதலும் கல்யாணத்தில் சேர்வது இல்லை,
அவரவர்கென்று விதிக்கப்பட்ட வாழ்க்கையில்
அவரவர் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு போய்விடுகிறார்கள்,
இப்படி என்றாவது ஒரு நாள் சந்திக்கும் போது,
என்னை நினைத்து அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை என்று கேள்விப்பட நேர்ந்தால்
அந்த வலி எவ்வளவு வலிக்கும் என்பது சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மட்டுமே தெரியும்..!
அப்படி சம்மந்தப்பட்ட பெண்ணாக நானிருப்பதால் அந்த வலியின் வலியை என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் அவருக்கே போன் செய்து பேசிவிடலாமா என்று படபடக்கிறது மனம்!
இன்னொவர் மனைவியாக இருந்துகொண்டு முன்னாள் காதலருக்கு போன் செய்வதை நினைத்தால் தப்பாகவும் தெரிகிறது,
ஏன் இப்படி திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தீர்கள் என்று கேட்காமல் மனதில் வைத்து புழுங்கவும் முடியவில்லை!
அலுவலக நண்பர்களிடம் கேட்டு அவருடைய நம்பரை வாங்கிக்கொண்டேன்,
இரவு 9.45க்கு ஆறுமுறை போன் செய்து ஆறுமுறையும் ரிங் போவதற்குள் கட் பண்ணிவிட்டேன்!
ஏழாவது முறை போன் செய்வதற்குள் அவரிடம் இருந்தே போன் வந்தது!
எப்போது வெளியே வந்து விழுந்துவிடுமோ இதயம் என்கிற படபடப்போடு நீண்ட நேரம் ரிங் போன பிறகு போனை எடுத்து காதில் வைத்தேன்,
வணக்கங்க. .
ரெண்டு முறை இந்த நம்பர்ல இருந்து மிஸ் கால் வந்தது
யாருன்னு கேட்கலான்னு தான் போன் பண்ணேன் என்றார்,
முப்பது வருடங்கள் கழித்து அந்த கண்ணியவானின் குரலை கொஞ்சம் கரகரப்போடு கேட்டேன்,
நான் தனலட்சுமி பேசறேன் என்றேன்!
சில வினாடி இடைவெளிக்கு பிறகு எந்த தனலட்சுமி என்று கேட்டார்,
தனலட்சுமி என்றேன்..
அவருக்கு புரிந்துவிட்டது. .
அந்தப்பக்க மௌனம்
இந்தப் பக்கத்தில் இருந்தே
சத்தமாக கேட்டது!
எப்படி இருக்கீங்க தனலட்சுமி,
நல்லா இருக்கீங்களா என்றார்,
இந்தப்பக்க மௌனம் இப்போது அந்தப்பக்கமும் பலமாக கேட்டிருக்கும் என நினைக்கிறேன்!
மௌனத்தை உடைத்து,
இப்போ நல்லா இருக்கேன்னு பொய் சொல்ல விரும்பல,
நேத்து உங்களை பார்க்கிற வரைக்கும் நல்லா தான் இருந்தேன்,
நீங்க கல்யாணம் பண்ணிக்கலன்னு தெரிஞ்சதில இருந்து அந்த சந்தோஷம் போயிடுச்சி என்றேன்!
கொஞ்ச நேர அமைதிக்கு பிறகு,
எனக்கு சரியா அமையல
அதுனால பண்ணிக்கல வேற எதுவும் காரணம் இல்லை என்றார்,
சின்னதா ஒரு பொய் சொன்னா கூட காலேஜில அப்படி கத்துவீங்க
இப்ப உங்களுக்கே பழகிடுச்சா என்றேன்,
கொஞ்சம் இடைவெளி விட்டு
நான் உண்மையை தான் சொல்றேன் என்றார்,
அந்த ஆஞ்சநேயர் கோயில்ல சத்தியம் பண்றீங்களா என்றேன்,
அமைதியாக இருந்தார்,
நான் உங்களுக்கு Invitation வைக்கனும் நாளைக்கு வரட்டுமா என்றேன்,
நான் ஓசூர் கிளம்பிட்டேன்
இன்னும் அரைமணி நேரத்தில்
பஸ் எடுத்துடுவாங்க என்றார்,
எனக்காக ஒரு நாள் தள்ளி போட முடியாதா என்றேன்,
இல்ல நீங்க வெங்கடேசன் கிட்ட கொடுத்துடுங்க நான் வாங்கிக்கிறேன் என்றார்,
உங்க கிட்ட நேர்ல சில கேள்விகள் கேட்கனும்,
அதுனால தான் நேர்ல பார்க்கனும்னு கேட்கிறேன் என்றேன்,
நாம இப்படி சந்திக்கிறது கரெக்ட் இல்ல, ஏதாவது கேட்கனும்னா போன்லயே கேளுங்க சொல்றேன் என்று கொஞ்சம் உறுதியாக சொன்னார்,
எனக்கு இப்போ இருபது வயசும் இல்ல,
நான் உங்களுக்கு காதலியும் இல்ல,
எனக்கும் எல்லாம் தெரியும்,
ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும் பார்க்கனும் அவ்வளவு தான் என்றேன்!
சரி நான் ஆபிஸ்ல பேசிட்டு உங்களுக்கு போன் பண்றேன் என்றார்,
ஐந்து நிமிடம் கழித்து போன் செய்தார்,
நாளைக்கு ஒரு நாள் லீவு சொல்லி இருக்கேன் எங்க வரணும் என்றார்,
நான் உங்களை கடைசியா சந்திச்ச அந்த ஆஞ்சநேயர் கோயிலுக்கு வர முடியுமா என்றேன்,
அஞ்சு நிமிஷம் பேசறதுக்கு அவ்வளவு தூரம் போகனுமா என்றார்,
எனக்கு அந்த ஊர்ல கொஞ்சம் வேலையும் இருக்கு,
நீங்க அவ்வளவு தூரம்
வர முடியுமா என்றேன்,
கொஞ்சம் யோசித்து சரி என்றார்!
அடுத்த நாள் டிரைவரை அழைத்துக்கொண்டு கொஞ்சம் Invitation களை எடுத்துக் கொண்டு தனியாக கிளம்பினேன்!
சிறிய மலையில் இருந்த அழகான ஆஞ்சநேயர் கோயில் அது,
எங்கள் வாழ்க்கையை போல அதுவும் நிறைய மாறி இருந்தது,
எனக்கு முன்பே அவர் காத்திருந்தார்,
பதவியில் இருந்துகொண்டே இந்தியாவில் எந்த முதல்வரும் இதற்குமுன்பு இப்படி தோளில் சுமந்தது நான் பார்த்ததில்லை
Recepct sir 🫡
#VSBabu #CMVijay
இறுதி ஊர்வலத்தில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடலை சுமந்து சென்ற முதலமைச்சர் விஜய்.!
#Chennai | #TVK | #TVKMLA | #Kolathur | #VSBabu | #RIPVSBabu | #CMVijay | #PolimerNews
1
96
Anand Appy retweeted
X la iruka neriya pasanga chiyaan ah meet pannathu ila.
Romba asai ah irukanga. Yaar yaaro meet pandranga, ivangaluku la oru time meet panna vainga @Kalaiazhagan15 @sooriaruna please
This quoted post is unavailable.
Anand Appy retweeted
Naalai mudhal.
Let’s get this rollin’ y’all. 🎬🫰🏽
#Jackie
இவர் தான் முரட்டு "@Chiyaan kanni" 🔥
அவருடைய பையன் பொரகர்துக்கு முன்னயே "Dhruv ன்னு" பெயர் வைக்கணும்னு முடிவு பண்ணிருக்காரு. 😃😍
அந்த குழந்தையும் புத்திசாலி குழந்தையா வளர்ந்துட்டு வருது. இப்படி ஒரு சின்ன வயசுலயே அமைச்சர் @imrajmohan ரால பாராட்ட படுது. ❤️👌🏻
@proyuvraaj

















