Sigma Thoughts retweeted
Dummy CM-ன் விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள். விவசாயிகள் துயர் துடைக்க உடனே வறட்சி நிவாரணம் அறிவிக்க வேண்டும்!
இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்காமல் விட்டதால் குறுவை பொய்த்தது.
சம்பா சாகுபடிக்கு சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசாயிகள் - தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பேச்சை கேட்காமல், இந்த Dummy CM, Reels வெறியோடு முன்கூட்டியே செப்டம்பர் 1 அன்று தண்ணீர் திறந்துவிட்டார்.
அதனால், இப்போது தண்ணீரின்றி டெல்டாவில் பயிர்கள் கருகுகின்றன.
இந்த நிலை ஏற்படக்கூடும் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை என்று கடந்த மாதமும் - அதற்கு முன்பும் இரண்டு முறை இந்த Circus அரசை எச்சரித்தோம்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை ஏற்கவோ, காது கொடுத்து கேட்கவோ கூடாது எனும் இந்த கோமாளி ஆட்சியாளர்களின் வெட்டி Ego-வால், விவசாயிகள் இன்று துயரில் நிற்கிறார்கள்.
ஏற்கனவே, முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றியது போல், இப்போதும் ஏமாற்றாமல், பயிர்ச்சேதம் தொடர்பாக வெளிப்படையான கள ஆய்வை இந்த அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளின் கவலையில் Content தேறுமா என்று பார்க்காமல், அவர்களின் கண்ணீர் துடைக்கும் வகையில் தாமதமின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்!
Sigma Thoughts retweeted
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
Sigma Thoughts retweeted
Dummy CM காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி எரிந்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் காவல் நிலையத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார்.
புகாரளித்த பாலகிருஷ்ணனை சட்டத்துக்குப் புறம்பாக இரவில் விசாரணைக்கு அழைத்தது ஏன்? விசாரணைக்குச் சென்றவர், காவல் நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அந்த அளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது?
பாலகிருஷ்ணனின் உடலைக்கூட காட்டாமல் அவசர அவசரமாக Post - Mortem செய்ய அனுப்பியதாக அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இந்த அவசரத்திற்கு என்ன காரணம்? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்றார்களா?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் டம்மி முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, முறையாக விசாரித்து, இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.
இதே போல, 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என்று கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் புகாரளிக்க சென்ற பெண் ஒருவர், காவல் நிலையத்திலேயே தீக்குளித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பெண்ணின் உறவினர்கள் போராடி வருகின்றனர்.
தன் துறையில் நடக்கும் அவலங்களுக்குப் பொறுப்பேற்கவோ - நடவடிக்கை எடுக்கவோ வக்கின்றி, Punch Dialog பேசி ஆட்சி நடத்தும் இந்த Dummy முதலமைச்சர், Rotten stage-ல் சட்டம் ஒழுங்கை எப்போது காப்பாற்றுவார்?
Sigma Thoughts retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்?
கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ?
Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை.
ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார்.
ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?
மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
Sigma Thoughts retweeted
தமிழ் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இன்று தவெக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதையொட்டி கீழ்கண்ட தலைப்புகளை செய்திகளுக்கு பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
எரிமலையாய் வெடித்த முதல்வர் விஜய்..
ஆக்ஷன் மோடில் முதலமைச்சர் விஜய்..
MLA'களுக்கு அதிர்ச்சி கொடுத்த முதல்வர்!
கோபத்தில் கொந்தளித்த முதல்வர்!
முதல்வர் விஜய் ஆட்டம் ஆரம்பம்!
முதல்வர் விஜய் எடுத்த பயங்கர முடிவு!
சரவெடியாய் வெடித்த முதல்வர் விஜய்..
அதிரவிட்ட முதல்வர் விஜய்!
மேலும் இந்த தலைப்புகளோடு சேர்த்து 'என தகவல்', 'கூறப்படுகிறது', 'சொல்லப்படுகிறது' ஆகியவற்றை தங்களின் வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
நன்றி.
@NewsTamilTV24x7 @polimernews @ThanthiTV @PttvNewsX @news7tamil @News18TamilNadu @indiatodaytamil @galattadotcom @behindwoods
Sigma Thoughts retweeted
பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ்… தேசிய ஊடகங்களில் கப்பல் ஏறுகிறது தமிழ் நாட்டின் மானம்…. ஒரு ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேசியதற்கு அய்யகோ எனக் கொந்தளித்தோர் பலரும் இப்போது எங்கு பதுங்கி உள்ளனர் எனத் தெரியவில்லை… எதிர்க்கட்சியை ஆபாச நதி என்றார் விஜய்… தவெக ஆபாசக் கடலாக மாறி நிற்கிறது… கேட்பார் இல்லை….
Sigma Thoughts retweeted
அமைச்சர் பவுடர் நுணுக்கினார்
பெண் அமைச்சர் கொன்னுடுவேன்னு மிரட்டினார்
எம் எல் ஏ வின் ஆதரவாளர்கள் பாலியல் வல்லுறவு செய்தார்கள்
துணை சபாநாயகர் கேள்வி கேட்ட ஒருவரை அடித்து உதைக்கிறார்
இன்னொரு எம் எல் ஏ , பெண் கலெக்டருக்கே ஆபாச மெசேஜ் அனுப்பியதாக குற்றச்சாட்டு
பட்டியல் இன்னும் நீளம்….
இதை விட எல்லாம் மிகப்பெரும் கொடுமை என்ன தெரியுமா ?
இத்தனைக்குப் பிறகும் கான்பிடெண்டா தூயசக்தினு சொல்றதும் அதை தமிழ் நாடு நம்புறதும்தான் இது எல்லாவறையும் விட கொடுமை…
வாக்களித்தோர் சிந்திக்க வேண்டும்
Sigma Thoughts retweeted
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM?
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள்.
குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் - அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு.
நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை.
குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary-ஏ போடலாம்.
தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று Dummy CM-ம், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என்று CM-ன் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர்.
மிரட்டல் - அடிதடி - கட்டப்பஞ்சாயத்து - கமிஷன் - பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானியர் முதல் பெண் IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள்.
இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Sigma Thoughts retweeted
சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்!
😳 ஒரே நாளில் 17 கொலைகள்!
😔 குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு!
😖 பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு!
இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில்,
குற்றவாளிகளுக்குப் பயமில்லை!
காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை!
த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை!
மொத்தத்தில்,
🎯 Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை!
#LawAndOrder #TVKfails
#WATCH | “பேசப் பேச மாட்டுவீங்க..” -எச்சரித்த திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்
#SunNews | #DMK | #TVKVijay
Sigma Thoughts retweeted
இதோ வந்துவிட்டது உண்மை.,
இவரை மிரட்டி பொய் சொல்ல வைத்ததற்கு
துணை சபாநாயகர் மற்றும் காவல் ஆய்வாளர் மேல் பாரபட்சம்யின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
Sigma Thoughts retweeted
ஷபீர் நேர்மையான பத்திரிகையாளர்.. தவெக விடம் பணம் பெற்றுக்கொண்டு தவெக விற்கு சொம்படிக்கக்கூடியவர் அல்ல. எனவே இந்த வீடியோவையும் அவர் தன்னுடைய பக்கத்தில் பதிவிடுவார் என நம்புகிறேன்..
Video of TN Deputy Speaker slapping man goes viral
thenewsminute.com/tamil-nadu…
Sigma Thoughts retweeted
மாநில உரிமைகள் என்றாலே தமிழ்நாடு என்று இந்திய அளவில் நமக்கு இருக்கும் பெருமையை அற்ப அரசியலுக்காகச் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு!
இந்தியா முழுவதிலும் இருந்து அறிவார்ந்த ஆன்றோர்கள் தெரிவித்து வரும் கண்டனங்களே த.வெ.க.வின் இழிவான அரசியலை அம்பலப்படுத்திவிட்டன.
நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களும், திரு. அஷோக் வர்தன் ஷெட்டி அவர்களும், பேரா. மு. நாகநாதன் அவர்களும் மேற்கொண்ட பணியில் யாரும் குறைகாணவும் முடியாது, அதனை வேறு எவரைக் கொண்டும் நிறைவுசெய்யவும் முடியாது.
இத்தகைய சிறப்பான பெருமக்கள் கொண்ட குழுவை அமைத்த பெருமை எனக்கு எப்போதும் இருக்கும், இதனைப் பாதியில் கலைத்த சிறுமைதான் த.வெ.க. அரசின் மேல் காலத்துக்கும் நிலைக்கும்!
The TVK government has damaged Tamil Nadu’s proud reputation as India’s leading voice for State rights, all for petty politics!
The condemnation from eminent voices across India has exposed the TVK government’s disgraceful politics.
No one can find fault with the remarkable work of Justice Kurian Joseph, Thiru. Ashok Vardhan Shetty and Prof. M. Naganathan. Nor can anyone else replace them and complete the work they began.
I will always be proud of having constituted such a distinguished Committee. The TVK government will forever bear the shame of having disbanded it midway!
#StateRights #Federalism
Sigma Thoughts retweeted
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன்.
Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள்.
இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை.
கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம்.
ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?
தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
Sigma Thoughts retweeted
அறம் பாடும் பாணர் பரம்பரையில் வந்த கடைசி பாணர் வெங்கடேசன் அவர்களுக்கு யாரை டேக் செய்ய வேண்டும் என்று தெரியவில்லை அதனால் நாம் செய்வோம் @CMOTamilnadu @CTR_Nirmalkumar
நன்றி வணக்கம்
ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகள் தொடர்பாக ஆராய கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவைத் த.வெ.க. அரசு கலைத்துள்ளது. இதற்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
பா.ஜ.க. வால் நமது அரசியல் சாசனத்தின் மீதும், கூட்டாட்சி தத்துவத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு எதிராக உருவாக்கப்படும் பெரும் கருத்தாயுதம் ஒன்றை நாம் இழக்கிறோம்.
இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, கடந்த 75 ஆண்டுகாள அனுபவத்திலிருந்து இந்திய குடியரசை மேலும் மேன்மையுடையதாகவும், அதிகார சமத்துவமுடையதாகவும் மாற்ற நினைக்கும் இந்தியர்கள் அனைவருக்குமான பேரிழப்பு.
கடந்த மார்ச் மாதம் தொகுதி மறுவரையரை மசோதா சம்பந்தமான விவாதத்தின் போது இக்குழுவின் அறிக்கையை மக்களவையில் சமர்பித்துப் பேசினேன். இது இந்தியாவுக்கு வழிகாட்டும் முன்மொழிவுகளைக் கொண்டது.
இக்குழுவில் இடம் பெற்ற அறிஞர்களின் பேருழைப்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், கூடவே மன்னிப்பையும்.
#மாநிலசுயாட்சி
Sigma Thoughts retweeted
State Rights❌
Theatre Rights✅
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்தது தவெக அரசு.
#SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
Sigma Thoughts retweeted
பெரியார் அறிவுலகத்தில் போலி புத்தகங்கள்!
டம்மி தவெக அரசு இந்த 7 கேள்விகளுக்கு பதில் சொல்லுமா.?
#WhoIsWriterTrishaVijay
Sigma Thoughts retweeted
இடைத்தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முடிவுக்கு (அக்டோபர் 9) பிறகு தவெக தலைவர், டம்மி முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து வந்திருக்கும் பதிவு ‘அடடே இந்த பொம்மை பேசுமா?’ என ஆச்சரியமளிக்கிறது.
விலைவாசி உயர்வு குறித்து பதிவு இல்லை..கொலைகள் குறித்து கவலையில்லை…காணாமல் போன சிறுமி குறித்து விசாரிப்புகள் இல்லை…மின்வெட்டு, மின் கட்டணம் குறித்தெல்லாம் எந்த வாக்குறுதியும் இல்லை..அவ்வளவு ஏன் அரசின் அசமஞ்சத்தால் கடலில் இறந்து மிதந்த மீனவர்கள் குறித்து கூட பதிவு இல்லை.
ஆனால் திமுக தலைவர் கோவை பெரியார் அறிவுலகம் சென்றதும் அவருக்கு கிடைத்த பாராட்டும் பேசு பொருளானதும், புத்தக கொள்முதலில் ஊழல் என்று ஓடி வந்திருக்கிறார் தவெக தலைவர்.
பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் தோழர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த தேதி கூட dummy CMன் பிறந்தநாள் தான்.
அதே பெரியார் அறிவுலகத்தில் உள்ள வால்காவிலிருந்து கங்கை வரை போன்ற புகழ்பெற்ற மற்ற பதிப்பக நூல்கள் திமுக ஆட்சியின் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன. அப்படியென்றால் போலி பதிப்பக புத்தகங்கள் எப்பொழுது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது?
கடந்த ஆட்சியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையான முறையில் புத்தகங்களை கொள்முதல் செய்யப்பட்டது என்பதை பதிப்பாளர்களே அறிவர்.
திமுக ஆட்சியில் புத்தகத் தேர்வுக்குழுவில் இருந்த எழுத்தாளர் ஒருவர் தவெக ஆட்சியமைந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயர்களையும், திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்தன், சுமேகா விஜய் என்ற ‘எழுத்தாளர்களின்’ பெயர்களையும் பார்த்து பதறிய பிறகுதான் அரசுக்குத் தெரிந்ததா?
அல்லது எந்த விவரமும் தெரியாமல் தான் dummy cm அறிக்கை விட்டு இருக்கிறாரா?
Sigma Thoughts retweeted
ஒரு தலைமுறைக்கான மிகச் சிறந்த பரிசு – சிந்திக்கும் சுதந்திரமும் கற்கும் வாய்ப்பும்!
அதனால்தான், கழக ஆட்சியில்,
📚 தலைநகரில் அண்ணா நூற்றாண்டு நூலகம்!
📚 தூங்காநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்!
📚 தொழில்நகரில் பெரியார் அறிவுலகம்!
திருச்சி, நெல்லை, கடலூர், சேலம் ஆகிய நகரங்களில் நாம் தொடங்கிய நூலகப் பணிகளும் விரைவில் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும்!
“பூங்கொத்துகள், பொன்னாடைகள் வேண்டாம்; புத்தகங்கள் தாருங்கள்!” என்ற எனது வேண்டுகோளை ஏற்று நீங்கள் அன்பளிப்பாக வழங்கிய நூல்களில், இதுவரை 7 இலட்சத்து 10 ஆயிரம் நூல்களை நூலகங்களுக்கும் படிப்பகங்களுக்கும் வழங்கியுள்ளோம்.
அதன் தொடர்ச்சியாக இன்று,
📖 பாளையங்கோட்டை தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி நூலகத்திற்கு 5,000 நூல்கள்,
📖 வாசுதேவநல்லூர் ரஹ்மானியா கல்விக்கூடம் வாட்பயிற்சி மையத்திற்கு 3,000 நூல்கள்,
📖 செங்கம் வட்ட அரசு கலைக் கல்லூரி நூலகத்திற்கு 2,000 நூல்கள்
என மொத்தம் 10,000 நூல்களை வழங்கியதில் மகிழ்ச்சி!
நூல்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்களும் நூலகங்களும் அண்ணா அறிவாலயத்திற்குக் கடிதம் எழுதலாம். இருப்புக்கேற்ப வழங்குவோம்!
புத்தகங்கள் கைமாறட்டும்! தலைமுறைகள் தாண்டி அறிவு பரவட்டும்!



































