Pinned Tweet
Thanks alot Akshaya. Now we are on our 253rd project. My heartfelt gratitude to the Print team for recognising my work❤️
35-year-old engineer Nimal Raghavan's projects are underway in J&K, Haryana, Andhra Pradesh. With crowdfunding and villagers' support, he's on his way to restore all dried-up lakes till none remains.
@Akshayanath reports
#ThePrintGroundReport
Read: bit.ly/3zHfLmC
“ஒரே இரவில் பெய்த மழையால் நிகழ்ந்த மாற்றம்”
தற்போது நாம் சீரமைத்துக் கொண்டிருக்கும் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள மோளிபள்ளி ஏரிக்கு மழை நீர் செல்லும் அழகிய காட்சி❤️
தண்ணீரின் சத்தத்தை கேளுங்கள்💫
@arunraajkg @neyamfoundation
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பதூர் வட்டம் எச்சூரில் நாம் சீரமைத்து கொண்டிருக்கும் எச்சூர் ஏரியின் வரத்து கால்வாய்💫
தற்போது நாம் சீரமைத்து கொண்டிருக்கும் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை புதுக்கோட்டை உளூர் செல்லிக்குறிச்சி ஏரியும் அதில் நாம் அமைத்துள்ள குறுங்காடும்💫
07.07.1978-ஆம் ஆண்டுக்கு பிறகு சீரமைக்கும் பணிகள் நடந்து வரும் அதிராம்பட்டினம் ஆனை விழுந்தான் குளம் சீரமைப்பதற்கு முன்னும் சீரமைத்த பிறகும் எடுத்த காட்சிகள் இவை.
40+ ஆண்டுகளாக குப்பை மேடாக இருந்த இந்த குளம் மீண்டும் பழைய நிலமைக்கு திரும்பி கொண்டிருக்கிறது.
💫
40 ஆண்டுகளுக்கு பிறகு மீட்டெடுக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் பின்னவாசல் ஊராட்சி சித்தாதிக்காடு அணிப்பள்ளம் குளம் தண்ணீருடன்❤️
அனைவரும் ஒன்றிணைந்து கீரனூர் பெரியகுளம் ஏரி சீரமைப்புப் பணிகள் தொடக்கம்!
மத நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பறைசாற்றும் வகையில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதங்களின் வழிபாடுகளுடன் கீரனூர் பெரியகுளம் ஏரி சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன.
மதங்களைக் கடந்து ஒன்றிணைவோம்,
நீர்நிலைகளை மீட்டெடுப்போம்💫
❤️
தாயாறு என அழைக்கப்படும் பாலாறு, இன்று பாழாகிப்போயிருக்கிறது!
பாழாகிப் போயிருக்கும் ஆற்றை மீட்டெடுத்து பழைய பாலாறாக மாற்றியே ஆக வேண்டும்.
தயவுசெய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்🙏🏾
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand @OfficeOfNAnand
“அண்ணா… Drone பறக்க விடுங்க!”
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இந்த ஊரில், கண்மாய் ஒன்றை சீரமைப்பதற்காக பார்வையிடச் சென்றிருந்தோம்.
அப்போது இந்தக் குட்டி பசங்க, ஆர்வமாக வந்து Drone Video எடுக்க வேண்டும் என்று கேட்டார்கள். அவர்களின் ஆசைக்காக Drone-ஐ Take-off செய்தோம்.
Drone மேலே பறந்த சில நொடிகளிலேயே மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது!
மழையையும் பொருட்படுத்தாமல், அந்தக் குட்டி பசங்களின் உற்சாகத்திற்காக Video எடுத்தோம்.
அந்த Drone Video-வை நாளை பதிவிடுகிறேன்.
ஆனால், இந்தப் பயணத்தில் இன்னும் ஒரு மகிழ்ச்சியான செய்தி இருக்கிறது,
வரும் சனிக்கிழமை, இந்தக் குட்டி பசங்க ஊரில் உள்ள கண்மாயை சீரமைக்கும் பணிகளை தொடங்க இருக்கிறோம்.
ஒரு கண்மாய் மீண்டும் உயிர் பெறுவது மட்டுமல்ல,
அந்தக் கண்மாயைச் சுற்றி வளரும் இந்தக் குழந்தைகளின் கனவுகளும் உயிர் பெற வேண்டும்.
இன்றைய Drone Video-வில் மழை வந்தது,
நாளைய கண்மாயில் தண்ணீர் வர வேண்டும்!
❤️
#BounceBackDelta #Cauvery #SaveWater
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் பின்னவாசல் ஊராட்சி சித்தாதிக்காடு கிராமத்தில் நாம் சீரமைத்த அணிப்பள்ளம் குளம் இது தான்.
40 ஆண்டுகளாக சீரமைக்க படாமல் இருந்த இந்த குளத்தினை தூர்வாரி, குளத்தை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்த சீமைக்கருவேல மரங்களையும், புதர் செடிகளையும் அகற்றி , கரைகள் அமைத்து இந்த குளத்திற்கு தண்ணீர் வர வழிவகைகள் செய்தோம்.
Gps co ordinates: 10.2738853, 79.1658913
அனைத்து முயற்சிகளையும் பின்னவாசல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான சுந்தர் அண்ணன் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!
நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
பின்குறிப்பு: மேலே இருக்கும் படம் சீரமைத்த பிறகு எடுத்தது, கீழே உள்ள படம் சீரமைத்து தண்ணீர் வந்த பிறகு எடுத்தது. முதல் comment-இல் Google map-இல் இந்த குளம் இத்தனை வருடங்களாக எப்படி இருந்தது என்பதை குறிக்கும் படம் இருக்கிறது.
#MegaFoundations #WaterCrisis #SDG
நாம் சீரமைத்து கொண்டிருக்கும் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், எச்சூர் பகுதியில் உள்ள வெண்ணேரி💫













