பா.ஏகலைவன் (@eagalaivanp) header
பா.ஏகலைவன் (@eagalaivanp) profile picture

35 ஆண்டு கால ஊடக அனுபவம்|தூக்குக் கயிற்றில் நிஜம்| சிறைவாசி நளினிlசிவராசன் டாப் சீக்ரெட்|முள்ளிவாய்க்கால் முடிவல்ல| தொகுப்பாசிரியர்|Journalist✍️|ராவணா வலையொளி

Chennai, Tamilnadu
Joined May 2020
Photo by பா.ஏகலைவன் (@eagalaivanp)Photo by பா.ஏகலைவன் (@eagalaivanp)Photo by பா.ஏகலைவன் (@eagalaivanp)Photo by பா.ஏகலைவன் (@eagalaivanp)Photo by பா.ஏகலைவன் (@eagalaivanp)Photo by பா.ஏகலைவன் (@eagalaivanp)Photo by பா.ஏகலைவன் (@eagalaivanp)Photo by பா.ஏகலைவன் (@eagalaivanp)Photo by பா.ஏகலைவன் (@eagalaivanp)Photo by பா.ஏகலைவன் (@eagalaivanp)
கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கு சீமானின் அறிக்கையை பாருங்கள். ஊழல் செய்தது திமுக. 2026 ல் பிப்ரவரி மாதத்திலேயே அந்த 300 கோடி ரூபாய் கட்டிடம் முடிக்கப்பட்டு - போலிகள் பெயரில், போலியான புத்தகங்களும் வாங்கி முடித்தது ஸ்டாலினின் அரசு. ஆனால் சீமான், விஜய்யின் வீட்டு முன்பு கம்பு சுத்துகிறார். அதாவது பிரியாணி கொண்டையை மறைக்க முடியவில்லை. இது அவதூறு அல்ல. சீமான் அறிக்கையை வாசித்து பாருங்கள். பாமரனுக்கும் புரியும். youtu.be/FFJnav1m5D4
125
111
14
309
14,271
இயக்குநர் மு. களஞ்சியமும், பாரிசாலனும் சேர்ந்து புது கட்சியை தொடங்குகிறார்கள். சரி, உங்களுக்கு ஏன் எரிகிறது? இவர்கள் பின்னே இருப்பது யார்? சீமானை யாருமே அசைக்க முடியாது. வீழ்த்த முடியாது. அவரும், அவரின் கும்பலுமே சீமானை வீழ்த்தி விடுவர். கண்டா, கண்ட இடத்தில்...... பின்னூட்டத்திற்கு வாங்க.... youtu.be/68-MGAVkBHQ
94
19
16
87
16,223
*M.K. நாராயணன் மீது செருப்பு வீசிய வழக்கில், அடி உதை சித்ரவதை, சிறை, ஜாமீன் என்றாகி ராயப்பேட்டை காவல் நிலையத்தில் தினமும் 2 வேளை கையெழுத்து போட்டுக்கொண்டிருந்த நாளில், உணவுக்கே காசு இல்லை. பசியில் நடந்து வந்தேன். வடபழனி கோயில் அருகில் வந்தபோது கருணாநிதி பிறந்தநாள் நிகழ்வு பிரியாணி போட்டுக் கொண்டிருந்தார்கள். நல்ல பசி, சாப்பிட அழைத்தார்கள். இனப்படு கொலைக்கு துணை போனவனின பிரியாணியை மானம்கெட்டு போய் சாப்பிடுவதை விட விசத்தை குடித்து செத்துப் போயிடலாம்னு வந்துட்டேன். *என் பெயரில் திரள்நிதி வந்தது. ஆனால் எனக்கு ஏதும் உதவவில்லை. யாரும் உதவுவார்கள் என்று நான் உணர்வை வெளிப்படுத்த இல்லை. *சீமானின் கும்பல், விஜய்யின் தரப்பு, இரண்டு பேர்களில் யார் 'உண்மையான தற்குறி' ? *ஏகலைவன் தமிழ் நீங்கள் சீமானுக்கு முட்டுக் கொடுத்து துரோகம் செய்தீர்கள். உங்கள் மீது அந்த கோபம் உள்ளது. ஒரு பத்திரிகையாளனாக சீமானின் துரோகத்தை தோலுரிக்காமல் தவறு செய்தீர்கள். - புதுக்கோட்டை பிரபாகரன், பத்திரிகையாளர், உதவி இயக்குநர். (இதற்கும் ஒரு எதிர்ப்பு வீடியோ போட்டு செருப்பு அடி வாங்கிக் கொள்ளுங்கள்) youtu.be/ME0ZFtq4_i0
33
27
2
102
11,468
K.N. நேரு கைதானால் பங்காளி கும்பலின் கதறல் அதிகமாக இருக்கும். ஏன்? கைதுக்கு பிறகு என்னவெல்லாம் நடக்கும் ? youtu.be/dpTZF_yI94k
62
46
7
137
6,784
ரெய்டுக்கு போன விஜிலன்ஸ் போலீஸ் டீமிடம் 'இன்னும் ஆறு மாசம்தான் இந்த ஆட்சி. அடுத்து எங்க ஆட்சி தான் பார்த்து நடந்துக்கோங்க என்று அ. மகேஸுடன் சேர்ந்து எடுத்து கொண்ட படத்தைக் காட்டி மிரட்டினராம் அந்த பெண்மணி. பிஜு தீவில் உதயநிதி + சண்முகப் பிரியா + அன்பில் மகேஷ் என்ன செய்தார்கள். சண்முகப்பிரியாவுக்கு அவ்வளவு பவரா? மேலும் பல செய்திகள்... youtu.be/zhyH7hJhw6Q
11
71
3
186
13,719
திராவிட பிரியாணிக்கு ஆசைப்படுகிறார் சீமான். இனத் துரோகிகளின் ஆதரவில் சட்டமன்றம் செல்வதற்கு ஏன் மேதகுவின் பெயரும் - படமும்? பங்காளிகள் ஈ.வெ.ரா, கருணாநிதி, MGR படங்களே போதுமே! மண்டியிடாத மானம் - என்ற முழக்கம் எதற்கு? பசிக்கு எவன் பிரியாணி கொடுத்தாலும் சாப்பிடுவேன் என்பதற்கா இத்தனை லட்சம் பிள்ளைகள் பாடுபட்டார்கள்?. youtu.be/aKPWb4wKgTY
215
271
34
779
31,666
தேனியில் சிறைக் கைதிகள் 17 பேர் தப்பி ஓட்டம். இதற்கு முன் 1990-ல் ஆட்டோ சங்கர், அவரது தம்பி ஆட்டோ மோகன் உள்ளிட்ட 5 பேர் தப்பிய கதையும் பிடிபட்ட சம்பவமும்... அதற்கடுத்து 1995 ல் சென்னை சென்ட்ரல் ஜெயிலில் (சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில்) இருந்து 9 வி டு த லைப் பு* லி கள் தப்பிய த்ரில் சம்பவமும், அதற்கான விசாரணையில் வெடித்த சிறைக்கலவரம் துப்பாக்கிச்சூடும் , அடுத்து வேலூர் கோட்டை சிறப்பு முகாமிலிருந்து 43 வி டு த லைப் பு* லி கள் சுரங்கம் தோண்டி தப்பிய' தி கிரேட் எஸ்கேப்' திகில் கதையும், நேற்றே விரிவாக பதிவிட்டிருந்தேன் youtu.be/s96V1vx4qoA
5
3
22
3,494
வெட்கம் கெட்டவர்கள் யார்? “விசிலடிக்கும் கூட்டம் தியேட்டருக்குச் செல்லலாமே தவிர, சட்டமன்றத்துக்குச் செல்லக் கூடாது’ என்ற திருமாவளவன், இன்று அதே விஜய்யுடன் சேர்ந்திருப்பது வெட்கம் கெட்ட செயல்தானே?-ஸ்டாலின் கட்சி. சரி, கருணாநிதி, ஸ்டாலினின் ‘வெட்கங் கெட்ட’ வரலாற்றையும் பார்ப்போமா? அந்த பட்டியல் நீளம்... திமுக ஆட்சியில், சமூக வலைதளங்களில் கடுமையாக எழுதியதாகச் சொல்லி, நா.த.க-வின் தம்பிகளை கைது செய்து ஜட்டியுடன் லாக்கப்பில் வைத்து, கண்களை கட்டிவிட்டு அடித்து நொறுக்கியபோது வராத ‘மனிதாபிமானம்’, கார்த்திகாவை கைது செய்ததும் ஸ்டாலினுக்கு வந்துவிட்டதே எப்படி? youtu.be/v3TuxiNsVfo
4
4
36
3,020
நாற்காலி பதவிக்காக அழுகிய பிணத்தை சுமந்தாரா ஸ்டாலின். காங்கிரஸ் அழுகிய பிணம் என்றால் திமுக என்னவாம்? அன்பில் மகேஷ் கைது விடயத்தில் திமுக மேலிடமும் - விஜய்யும் டீல் பேசுகிறார்களா? ஊழல் வாதிகளை தப்ப வைக்கிறதா Tvk அரசு ? NTK நிர்வாரிகள் கைதும் திமுக தரப்பு அறிக்கையும் சரியா? சீமான் செய்தது துரோகம் தான். எதிரியை விட துரோகி மோசமானவன் என மேதகு தலைவர் சொன்னது... மேலும் தகவல் youtu.be/pMQgIzh3H8s
26
3
3
18
4,623
NTKவினர் எப்பரப்பட்ட தேசதுரோக வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள் தெரியுமா? எத்தனை கிலோ போதை மருந்தை கடத்தியிருக்கிறார்கள் தெரியுமா? இப்படியானவர்களை இரவோடு இரவாக கைது செய்யாமல் பகலிலா கைது செய்ய முடியும்? முதல்வர் விஜயின் போலீஸ் சாதாரணப்பட்டதா என்ன? youtu.be/HF8Umz9MUBg
6
44
3
169
11,812
தவெக அரசுக்கும் முதல்வர் விஜய்க்கும், கைது செய்ய வேண்டியவர்களின் பட்டியல் நிறைய உள்ளது. போதை பொருள் கடத்தலின் பட்டியல் நீளம். சட்டம் ஒழுங்கிற்கு சவாலாக இருப்பவர்களின் பட்டியல் அதிகம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஊழலை ஒழிப்பதாக சொல்லி அதிகாரத்திற்கு வந்துவிட்டு, அந்த ஊழல் பேர்வழிகளின் பட்டியலை கையில் வைத்துக் கொண்டு இருக்கும் இயலாமை பட்டியலும் அதிகம். அரசின் மீது ஏற்பட்டு வரும் அதிருப்தியை மடை மாற்றுவதற்காக, எளியவர்களிடம் அதிகாரத்தைக் காட்டுகிறேன் என்று, நாம் தமிழர் கட்சி நிர்வாகி கோவை கார்த்திகாவைவும், அவரது கணவரையும் கைது செய்திருப்பது கடுமையான கண்டனத்திற்கு உரியது. முதல்வர் விஜய்க்கு இது மேலும் ஒரு கெட்டப் பெயர். செய்திருக்கக்கூடாத ஒன்று. அப்படி ஒன்றும் கைது செய்து தீரவேண்டிய வழக்கே இல்லை இது. அதிகார பலத்தை வலியவர்களிடம் காட்டுவதே சிறந்த நிர்வாகம். எளியவர்களிடம் காட்டுவது அல்ல. See less குறிப்பு- விசாரணைக்குப் பிறகு சொந்த ஜாமீனில் விட்டுவிட வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். மீறி சிறைக்குள் அனுப்பினால் இது மடை மாற்றும் நடவடிக்கைதான்-எளியவர்கள் மீது அதிகாரத்தை பாய்ச்சும் வேலைதான்.
43
164
10
609
20,909
திமுகவைச் சேர்ந்த அந்த ஒரு Ex அமைச்சரின் கைது நடந்து விட்டால்... இதற்கு மேல் தங்களை தற்காத்துக் கொள்ள TVKவில் இணைவதுதான் சிறந்த முடிவு என 5 Ex அமைச்சர்கள் தரப்பு பேசி வருகிறதாம். அடுத்து என்ன நடக்கும் ? TVK ஆட்சிக்கு, விலைவாசி உயர்வில் தான்' கண்டம்' என்பது உண்மையா? மேலும் பல தகவல்கள் youtu.be/0TutGQuF1HE
9
5
3
29
7,724
விஜய் அமர்ந்திருக்கும் முதல்வர் நாற்காலி, ‘இரவல்’ வாங்கியது என முரசொலி நாளேடு கிண்டலடித்துள்ளது. அதிகப் பெரும்பான்மை இல்லை. கூட்டணி சேர்ந்த கட்சிகளின் ஆதரவில்தான் விஜய்க்கு முதல்வர் நாற்காலி கிடைத்துள்ளதாக திமுக சொல்கிறது. எனில், 2006ல் திமுக மைனாரிட்டி அரசு. கலைஞர் முதல்வர் நாற்காலியில் இருந்தார். அது ‘இரவல்’ நாற்காலிதானே. 1949-ல் தொடங்கிய திமுக, 1967-ல் ஆட்சியை பிடிக்க 18 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. அதிலும் 1967-ல் ஒன்பது கட்சிகளுடன் கூட்டணி வைத்துதான் ஆட்சியில் அமர முடிந்தது. இப்போது 2026-ல் கூட 21 கட்சிகளின் கூட்டணியுடன் போட்டியிட்டுதான் 77 இடங்களை பெற முடிந்தது. ஆனால் விஜய், கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில், எந்த கட்சி கூட்டணியும் இல்லாமல், தனித்து நின்று, திமுக, அதிமுகவை விட கூடுதலாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றாரே எப்படி? முரசொலிக்கு ஏன் இந்த நக்கல் நையாண்டி? திமுக பலமுறை ’இரவல்’வாங்கிய விவரம், youtu.be/zgUW0ZZI0iQ
5
1
10
1,815
நெகிழ்ச்சியான ஒரு சந்திப்பு. தோழர் கயல் பாரதி. தமிழ்நாடு மீனவர் நல சங்கத்தின் தலைவர். சென்னை லைட் அவுஸ் அருகில் உள்ளார். எனக்கு தெரிந்து 25 ஆண்டுகாலம் மீனவ மக்களின் நலனுக்காக போராடி வருபவர். முதல்வர் விஜய் பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்போவதாக அரசாணை வெளியிட, அதையொட்டி அப்பகுதியிலுள்ள 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்களின் போராட்டம் வெடித்துள்ளது. அது விடயமாக பேச தோழர் கயல் பாரதியை அழைத்திருந்தேன். நேர்காணலுக்கு வந்திருந்தவர் பழைய புகைப்படங்களை கொண்டு வந்திருந்தார். சரியாக 23 மூன்று ஆண்டுகளுக்கு முன்பு.. இப்போது நடப்பது போலவே மீனவ மக்களுக்கு எதிராக முதல்வர் ஜெ ஒரு அறிவிப்பை செய்தார். கடற்கரை மீனவ மக்களை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில், மலேசிய அரசின் துணையோடு, ‘அழகுபடுத்தப்பட்ட கடற்கரையாக’ மாற்றும் திட்டம் அது. வெளிநாட்டு தூதரங்கள், நட்சத்திர ஓட்டல்கள், நவீன பொழுது போக்கு பூங்காக்கள் அப்பகுதியில் கொண்டு வரும் திட்டம். மீனவ மக்களின் போராட்டம் வெடித்தது. அப்போது குமுதம் ரிப்போர்ட்டரில் இருந்து நானும், புகைப்பட நிபுணர் செந்தில்நாதனும் சென்றிருந்தோம். 12 மீனவ கிராம கூட்டங்களிலும் நேரடியாக கலந்து கொண்டோம்.. அப்போதும் இதே தோழர் கயல் பாரதிதான் எங்களை அழைத்து இருந்தார். (வழி-தோழர் டி.எஸ்.எஸ். மணி) மீனவ மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்பதால் கொதிப்பான போராட்டமாக மாறியது. அது குறித்து அன்று மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ராதாகிருஷ்ணன் அவர்களையும் சந்தித்து பேசினேன். எல்லாமும் சேர்ந்து குமுதம் ரிப்போர்ட்டரில் நான்கு பக்கத்திற்கு கட்டுரை எழுதியிருந்தேன். (புகைப்படங்கள்-செந்தில்நாதன்) அதன் பிறகு பிப்ரவரி மாதவாக்கிலும் ஒரு போராட்டம். மீனவ மக்களை அப்புறப்படுத்துவதை எதிர்த்த ஆர்ப்பாட்டத்திற்கு நாடறிந்த சமூக சேவகரான மேதா பட்கர் வந்திருந்தார். கடற்கரை ஓரமிருந்த 12 மீனவ கிராமங்களுக்கும் நேரில் சென்று அந்த மக்களிடம் பேசினார். நாள் முழுதும் நாங்கள் உடனிருந்தோம். மேதா பட்கர் மீனவ மக்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது நான் ஒரு ஓராமாக நின்று கவனிக்கும் புகைப்படமும் இருந்தது. 23 ஆண்டுகளுக்கு முன்பான எமது ஊடக பயணத்தின் களப்பணி புகைப்படத்தைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டேன். உட்கார்ந்து விசாரித்துவிட்டு கட்டுரை எழுதும் பழக்கம் இல்லை. எப்படிப்பட்ட சம்பவமாக இருந்தாலும் நேரடியாக களத்திலேயே நின்று திரும்பும் காலம் அது. பிறகு அந்த மலேசிய ஒப்பந்த திட்டத்தை ஜெ அவர்கள் கைவிட்டதும் நடந்தேறியது. இப்படியாக 1996-லும் ஒரு பேராட்டம், அதே பகுதியில், அதே மீனவ மக்கள் பிரச்சனை, அடுத்து 2003, 2009, 2014-15, என எல்லாவற்றிலும் நான் அவர்களுடன் நின்றுள்ளேன்.. நன்றி தோழர் கயல் பாரதி. அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய பேட்டி youtu.be/yfH7bpXTuGk
3
7
40
2,743
மீனவர்கள் வாழும் பட்டினம்பாக்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதி மீது அரசு அதிகார மட்டத்திற்கு தொடர்ந்து ஒரு கண் உள்ளது. எதாவது ஒரு திட்டம் என்று அங்கே கை வைப்பார்கள். மக்கள் போராட்டம் வெடிக்கும். 1985-ல் எம்ஜிஆருக்கு எதிராக அப்படி ஒரு மீனவ மக்கள் போராட்டம் வெடித்தது. பிறகு பின்வாங்கியது. 2003ல் மீண்டும் ஒரு மக்கள் போராட்டம் வெடித்தது.அரசு பின்வாங்கியது. 2009-ம் ஆண்டில் ஒரு மீனவ மக்கள் போராட்டம் எழுந்தது-அரசு பின்வாங்கியது. 2015-16லும் அந்த பகுதி மீனவ மக்கள் தரப்பில் ஒரு போராட்டம் வெடித்தது. இப்போது 2026-ல் முதல்வர் விஜய் பட்டினம்பாக்கத்தில் ‘புதிய தலைமைச் செயலகம்’ என்ற திட்டத்தை முன்வைத்திருக்கிறார். இந்த மக்கள் விரோத திட்டத்தை எதிர்த்து மீனவ மக்களின் போராட்டம் தொடங்கி உள்ளது. இதன் பின்னணியில் உள்ள நீண்டகால திட்ட ரகசியம் என்ன?... youtu.be/tfCgUNmhUWY
7
3
21
2,346
அரசியலுக்கு வரவேண்டும் என ரஜினிகாந்தை எதிர்பார்த்தார். ஒரு கட்டத்தில் ரஜினி கட்சி தொடங்கவே மாட்டார் என முடிவெடுத்தார் சோ. நடிகர் அஜீத் அதிமுகவின் தலைவர். அடுத்த முதல்வராகவும் அவர்தான். அதற்கான முன்னெடுப்பு ஒன்றும் நடந்தது. செல்வி ஜெயலலிதா அவர்களின் அனுமதியோடு துக்ளக் ஆசிரியர் சோ அதற்கான முன்னெடுப்பை செய்தார். நடிகர் அஜீத்தை வரவழைத்தார். கட்சிக்குள் சேரவேண்டும். படிப்படியாக நீதான் தலைவர். அடுத்த தேர்தலில் முதல்வர் பொறுப்பும் உன்னுடையது. மேடம் விருப்பமும் அதுதான், என்று சோ பேசினார்.. அதற்கு அஜீத் சொன்ன பதில் என்ன? சாவித்திரி கண்ணன். பத்திரிகையாளர்... இதுவரை பேசப்படாத தகவல்கள்.... youtu.be/OcPl-tBYTXg
2
3
1
13
2,353
விஜய் வெளிநாட்டு பயணம் முதலீடுகளை இழுத்து வந்ததா? மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சி நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழில் நடத்தப்பட்டதா? நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறியிருக்கிறதா விஜய் அரசு? மதுராந்தகம், தராபுரம் இடைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வருகின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் தனித்து போட்டியிடுவார்களா? கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கிடேசன் எம்.பி ‘தமிழர் குடமுழுக்கு’ விடயத்தில் உண்மையை மறைக்கின்றார். அவருக்கு உறைக்காமல் போனது ஏன்? ஐயா பெ.மணியரசன் தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர். youtu.be/UFjAvaaFYf8?si=dMnD…
5
10
1
49
5,732