நம் உணர்ச்சிகள் அடையாளங்கள் அல்ல, சூழ்ச்சிமிக்க தந்திரோபாயக் கருவிகள். எதிர்ப்புகளை நிராயுதபாணியாக்கி, மோதல்களைத் தணிப்பதில்தான் அவற்றின் உண்மையான வியூக வலிமை அடங்கியிருக்கிறது. – at Saidapet, India
அவளுடைய முதலிரவைப் பற்றி யாரும் அவளுக்குச் சொல்லியிருக்கவில்லை. தன் உடலைப் பற்றியே அறியாத அவள், அவன் தன்னைப் பார்த்துக்கொள்வான் என்று நம்பினாள். ஏனெனில், அவள் உலகில் முடிவெடுப்பது ஆண்கள்; காத்திருப்பது பெண்கள். – at Saidapet, India
உங்களுக்கு அருகில் யாரும் இல்லாதபோது நீங்கள் தனியாக இருக்கவில்லை, ஆனால், உங்களுக்கு அருகில் இருப்பவர் உங்கள் இதயத்தில் இல்லாதவராக இருக்கும்போதுதான் நீங்கள் உண்மையாகத் தனியாக இருக்கிறீர்கள். – at Saidapet, India
என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு இசைக் கலைஞனாக இருக்க விரும்புகிறேன். இந்த வாழ்வை விட்டுப் பிரியும்போது, என் துயரங்களை எக்காளத்தில் ஊதிவிட்டுச் செல்லவும், அடுத்த வாழ்வைத் தொடங்கும்போது, இன்னொரு நரகத்தில் மகிழ்ச்சியுடன் என் கிட்டாரை மீட்டவும் விரும்புகிறேன்.
புகழ் ஒரு வணிகமே. ஆதிகாலம் தொட்டே மனிதர்கள் அதன் நிலையாமையிலும் நிலைத்திருக்கும் மாயையில் வேரூன்றி அதற்கு அடிமையாகி வாழ்கின்றனர். பிறரால் விரும்பப்பட வேண்டும் என்ற ஏக்கமும், மரணத்தின் மீதான அச்சமும் மனித இயல்பு. புகழ் இந்த வாழ்வில் அவர்களுக்கு ஒரு குறுகிய நித்தியத்தை அளிக்கிறது. – at Saidapet, India
காலம் பல முகங்களை அழித்துவிட்டது, ஆனால், அந்த ஒரு முகத்தை மட்டும் மறக்க முடியவில்லை. ஆயிரம் மனிதர்களைக் கடந்த பின்னும், நினைவின் இருளில் அது மட்டும் ஒளிர்கிறது. ஏன், எதற்கு. இதயத்தின் புதிர்களுக்கு விடைகள் ஏது... – at Saidapet, India
Meena Kumari with Dharmendra. It is rumored that Meena was romantically involved with Dharmendra. – at Saidapet, India
Former Chief Minister of Tamil Nadu CN Annadurai, Karunanidhi and S S Rajendran. – at Saidapet, India
அவளுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது, வெட்கம் மட்டும் அவள் வார்த்தைகளைத் தடுத்து நிற்கிறது. அந்த மௌனத்தைப் புரிந்துகொண்டு, நான் அவளை வற்புறுத்தக்கூடாது. ஆண்கள் செய்யும் மிகப் பெரிய தவறு, வெட்கத்தின் மெல்லிய மொழியைப் புரியாமல் போவதே...



















