🚩🔥 நவம்பர் 27 – மாவீரர் நாள் 🔥🚩
மண்ணுக்காக விதையானவர்கள்…
மக்களின் மனங்களில் என்றும் வாழ்பவர்கள்!
தாய்மண்ணின் விடுதலைக்காகவும், தங்கள் இனத்தின் உரிமைக்காகவும் உயிரை அர்ப்பணித்த மாவீரர்களின் நினைவை நெஞ்சில் ஏந்தி தலைவணங்குகிறோம்.
1
86
கார்த்திகை மண்ணில் கால் பதித்த நாள்,
கனவுகளுக்கு உயிர் கொடுத்த நாள்.
உரிமைக் குரலாய் ஒலித்த இதயம்,
உலகத் தமிழரின் நெஞ்சில் நிற்கும்.
எமது தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
#HBDPRABHAKARAN
1
117
❤️ அன்பை வைத்து ஏமாற வேண்டாம்! வாழ்க்கையின் எதார்த்தத்தைப் புரிந்துகொள்வோம்…
இந்த உலகத்தில் எல்லோரிடமும் அளவுகடந்த அன்பு வைப்பது தவறல்ல. ஆனால் அந்த அன்பை பலவீனமாக நினைத்து உங்களை ஏமாற்ற அனுமதிக்காதீர்கள்.
உண்மையான அன்புக்கு விலை கிடையாது.
39
🚩 தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்! 🚩
தமிழ்நாட்டின் வரலாறு, மொழி, பண்பாடு, இன அடையாளம் மற்றும் மாநில உரிமைகளைப் போற்றும் இந்த நன்னாளில், தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. ஜோசப் விஜய் அவர்களிடம் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.
📌 எனது கோரிக்கைகள்:
1️⃣ தமிழ்நாட்டின் தனித்துவத்தையும் தமிழர்களின் அடையாளத்தையும் உலகிற்குப் பறைசாற்றும் வகையில், தமிழ்நாட்டிற்கெனத் தனிக்கொடியை உருவாக்கி அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும்.
2️⃣ ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 1-ஆம் தேதி கொண்டாடப்படும் தமிழ்நாடு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் அரசு பொது விடுமுறை அறிவிக்க வேண்டும்.
ஒரு மாநிலத்தின் அடையாளம் என்பது அதன் மொழி, பண்பாடு, வரலாறு, உரிமைகள் ஆகியவற்றின் வெளிப்பாடு.
தமிழ்நாட்டிற்கெனத் தனிக்கொடி வேண்டும் என்பது வெறும் கொடிக்கான கோரிக்கை அல்ல; அது நமது தனித்துவமான வரலாற்று அடையாளத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் உரிமைக்கான குரல்!
தமிழ்நாடு நாள் என்பது வெறும் கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல், தமிழர்களின் வரலாற்றுப் பெருமையையும் மாநில உரிமைகளையும் நிலைநாட்டும் நாளாக அமைய வேண்டும்.
🚩 தனிக்கொடி உயரட்டும்!
🚩 தமிழ்நாடு நாள் அரசு விடுமுறையாகட்டும்!
🚩 தமிழர் அடையாளமும் மாநில உரிமைகளும் காக்கப்படட்டும்!
கரு.பிரபாகரன்
தமிழ்த்தேசியப் பற்றாளர்
#தமிழ்நாடு_நாள் #தமிழ்நாடு #தனிக்கொடி #தமிழர்_உரிமை #தமிழ்த்தேசியம் #தமிழர்_அடையாளம் #TamilNaduDay #TamilIdentity #StateFlag
55
🚩 உழைத்த தொண்டனுக்கு துரோகம்! பேரம் பேசும் தலைவர்களுக்கு வெட்கமில்லையா? 🚩
களத்தில் போராடியவர்கள் நாங்கள்! சிறைக்குச் சென்றவர்கள் நாங்கள்! கட்சியை வளர்த்தவர்களும் நாங்களே!
அந்தந்த மாவட்டங்களில் ஒரு சிறிய குழாய் பிரச்சினை, தெருவிளக்குப் பிரச்சினை என மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கி, பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் நாசகாரப் பெருநிறுவனங்களுக்கு எதிராகக் களமிறங்கி, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடி, திராவிடக் கட்சிகளை எதிர்த்து வீதியில் நின்று, காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று, எத்தனையோ தியாகங்களைச் செய்து ஒரு கட்சியை வளர்த்தவர்கள் எங்களைப் போன்ற அடிமட்டத் தொண்டர்கள்தான்!
2016-ல் வெறும் 500 வாக்குகள் பெற்ற இடங்களில் இருந்து, 2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் தொகுதிக்கு 20,000-க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெறும் அளவுக்குக் கட்சியை வளர்க்க எத்தனை ஆண்டுகள் உழைத்தோம்! எத்தனை அவமானங்களைச் சந்தித்தோம்! எத்தனை வழக்குகளை எதிர்கொண்டோம்!
ஆனால், இன்று அதே கட்சி ஆயிரம், இரண்டாயிரம் வாக்குகள் வாங்குவதற்குக்கூட திணறும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்றால், இதற்குக் காரணம் என்ன? களத்தில் உழைத்த தொண்டர்களின் உழைப்பா? அல்லது தொண்டர்களின் தியாகத்தைத் தங்களுடைய அரசியல் பேரத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளும் தலைவர்களின் சுயநலமா?
❓ திராவிடக் கட்சிகளின் துண்டு எலும்புக்காகத் தொண்டர்களின் உழைப்பை விற்பதுதான் அரசியலா?
75 ஆண்டுகால திராவிட அரசியல் ஆதிக்கத்தை எதிர்கொள்ள வேண்டியவர்கள், இன்று அதே அரசியல் சக்திகளின் சலுகைகளுக்கும் பேரங்களுக்கும் ஆசைப்படுவது ஏன்?
இரண்டே ஆண்டுகளில் கட்சியைத் தொடங்கி, மக்களின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வளர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தையும், அதன் தலைவர் விஜய்யையும் ஆதரித்துப் பேச மனமில்லாதவர்கள், ஒரு வருடம்கூட நிறைவடையாத தவெகவைப் பார்த்து ஏன் இவ்வளவு வயிற்றெரிச்சல் அடைகிறார்கள்?
மக்களின் ஆதரவைப் புரிந்துகொள்ள முடியவில்லையா? அல்லது தங்களுடைய அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சமா?
🔥 தொண்டன் சிறைக்குச் செல்ல வேண்டும்; தலைவர் பின்னால் பேரம் பேச வேண்டுமா?
போனோமா, போராடினோமா, சிறைக்குச் சென்றோமா என்று இல்லாமல், தொண்டர்களின் தியாகத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பின்னால் அரசியல் பேரம் பேசும் தலைவர்கள் இருக்கும் வரை இதுதான் தொடரும்!
களத்தில் நிற்பது தொண்டன்; வழக்குகளைச் சந்திப்பது தொண்டன்; சிறைக்குச் செல்வது தொண்டன்; ஆனால் அரசியல் ஆதாயத்தையும் சலுகைகளையும் அனுபவிப்பது தலைவர்களா?
தொண்டனின் வியர்வைக்கும் தியாகத்திற்கும் மதிப்பில்லாத அரசியல் எதற்காக?
🚩 எங்களின் கேள்வி ஒன்றுதான்!
கட்சியை வளர்த்த தொண்டர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை; அவர்களின் உழைப்பை மறந்துவிடாதீர்கள்! கொள்கைக்காகப் போராடியவர்களைப் பலிகடாவாக்கிவிட்டு, அதிகாரத்திற்காகவும் ஆதாயத்திற்காகவும் பின்னணியில் பேரம் பேசாதீர்கள்!
மக்களின் தீர்ப்பை மதியுங்கள்! புதிய அரசியல் சக்திகளின் வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமைப்படுவதைவிட, மக்கள் ஏன் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதைச் சிந்தியுங்கள்!
⚠️ தொண்டர்களைச் சிறைக்கு அனுப்பிவிட்டு, பின்னால் பேரம் பேசும் சுயநல அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை, உழைத்த தொண்டர்கள் ஏமாற்றப்படுவதும், அரசியல் பிணம் தின்னும் கழுகுகள் கொள்கை என்ற பெயரில் பிழைப்பதும் தொடரத்தான் செய்யும்!
நாங்கள் அரசியலுக்கு வந்தது பதவிக்காக அல்ல; மக்களுக்காக!
நாங்கள் போராடியது சலுகைகளுக்காக அல்ல; உரிமைகளுக்காக!
நாங்கள் சிறைக்குச் சென்றது பேரம் பேசுவதற்காக அல்ல; கொள்கைக்காக!
உழைத்த தொண்டனை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்! அவன்தான் ஒரு கட்சியின் உண்மையான பலம்; அவனே அந்தக் கட்சியின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் சாட்சி!
🚩 தொண்டனின் தியாகம் விற்பனைக்கல்ல! கொள்கை பேரத்திற்கல்ல! மக்கள் ஆதரவு யாருடைய தனிச்சொத்தும் அல்ல! 🚩
#தொண்டனின்தியாகம்
#அரசியல்பேரம்
#தமிழகஅரசியல்
#தமிழகவெற்றிக்கழகம்
#TVK
#மக்கள்அரசியல்
#அடிமட்டத்தொண்டன்
#அரசியல்உண்மைகள்
ஐம்பது வருடங்களாக
திமுக,அதிமுக இரண்டு கட்சியும் தமிழ்நாட்டை சிங்கப்பூரா மாற்றிவச்சிட்டு போயிட்டாங்க விஜய் வந்து நாசம்பன்னிட்டாரா போங்கடா வயிற்றெரிச்சல் தம்பிகளே...
வெகுஜன மக்களிடையே கேளுங்கள் டா
அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளிடம் இருந்து எவ்வளவு நிம்மதியாக உள்ளார்கள் என்று
ஆங்காங்கே மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்ன செய்வது....
77
மலர்களால் அலங்கரிக்க வேண்டிய வயதில்,
வரலாற்றின் கண்ணீரால்
உன் பெயர் எழுதப்பட்டது!
தொட்டிலில் தாலாட்டு கேட்க வேண்டியவன் நீ…
துப்பாக்கிச் சத்தத்தை
உலகத்தின் கொடூர முகமாகக் கண்டாய்!
பொம்மைகளோடு விளையாட வேண்டிய கைகள்…
போரின் நிழலில்
வரலாற்றின் சாட்சியாகிப் போனது!
பாலச்சந்திரா…
உன் பிஞ்சு முகம்
இன்றும் ஆயிரம் கேள்விகளை எழுப்புகிறது;
உன் கண்கள்
இன்றும் நீதியைத் தேடுகின்றன!
ஒரு குழந்தையின் மார்பில் பாய்ந்த குண்டுகள்
அந்த உடலை மட்டும் சிதைக்கவில்லை…
மனிதநேயத்தின் மனசாட்சியையே
துளைத்துச் சென்றன!
உன் புகைப்படம் ஒரு புகைப்படமல்ல…
காலத்தின் மீது பதிக்கப்பட்ட
அழிக்க முடியாத சாட்சியம்!
நீ இன்று இருந்திருந்தால்…
29 ஆண்டுகளை கடந்திருப்பாய்.
ஆனால் உன் வாழ்க்கை
12 ஆண்டுகளிலேயே நிறுத்தப்பட்டது.
ஆண்டுகள் கடந்தாலும்
நினைவுகள் முதுமையடைவதில்லை…
பாலச்சந்திரன் என்ற பெயர்
ஒரு பிஞ்சின் பெயராக மட்டும் அல்ல;
போரின் விலையை நினைவூட்டும்
வரலாற்றின் ஒரு குரலாகவும் நிற்கிறது!
உன் பிறந்த நாளில்
வாழ்த்துகளைச் சொல்ல முடியவில்லை…
அதற்குப் பதிலாக
உன் நினைவுக்கு வணக்கம் செலுத்துகிறோம்!
நீ மறைந்துவிட்டாய் என்று
வரலாறு சொல்லலாம்…
ஆனால்
உன் நினைவு மறைந்துவிடவில்லை!
உன் பெயர் ஒலிக்கும் வரை
கேள்விகள் உயிரோடு இருக்கும்…
நீதி கிடைக்கும் வரை
நினைவு உயிரோடு இருக்கும்!!
பாலச்சந்திரா…
பிஞ்சாக வந்தாய்,
வரலாறாக நின்றாய்!
உன் பிறந்த நாள் —
உன் நினைவுகளை மீண்டும் எழுப்பும் நாள்!
வீர வணக்கம் பாலச்சந்திரன்! 🕯️
கரு.பிரபாகரன்
❤️ என் அன்பு மகன்களே… ❤️
என் வாழ்க்கையில் எனக்கு இருக்கும்
ஒரே மகிழ்ச்சி நீங்கள் இருவர்தான்…
என் வாழ்க்கையை வாழ வேண்டுமென்று எனக்கு உணர்த்தும் உயிர்கள் நீங்கள். ❤️
என் உலகத்தின் அழகும்,
என் இதயத்தின் மகிழ்ச்சியும்,
என் வாழ்வின் அர்த்தமும் — ஆதன் &ஆதித்யா. 👑❤️
உங்கள் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், வெற்றி, அன்பு நிறைந்திருக்க இறைவனை வேண்டுகிறேன். 🙏✨
🎂ஆதன் & ஆதித்யா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 🎉🎈
என்றும் உங்கள் மீது அளவற்ற அன்புடன்… ❤️
108
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்,
அண்ணன் இயக்குநர் வெற்றிமாறன்!
🎬 திரைப்படப் புரட்சி இயக்குநர் திரை அசுரன் அண்ணன் திரு. வெற்றிமாறன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 🎉
உங்கள் படைப்புகள் சமூகத்தின் குரலாகவும், தமிழ்ச் சினிமாவின் பெருமையாகவும் என்றும் விளங்கட்டும். மேலும் பல உலகத் தரமான படைப்புகளை உருவாக்கி உயரங்களைத் தொட வாழ்த்துகள்.
வாழ்க கலை! வளர்க தமிழ் சினிமா! 🌹
#வெற்றிமாறன் #திரைஅசுரன் #Vetrimaaran #TamilCinema #HappyBirthdayVetrimaaran
2
112
சமூகநீதியின் காவலர்!
வாழும் அம்பேத்கர்!
எனது ஆருயிர் அண்ணன்
திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 💐🔥
சமூகநீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமத்துவத்திற்காகவும் தன் வாழ்நாளையே அர்ப்பணித்து போராடி வரும் புரட்சியாளர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள், மேலும் மேலும் வலிமையுடன் மக்கள் குரலாகப் பயணிக்க என் இதயப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் அவர்களின் பிறந்தநாளில் நடைபெற்ற இந்த மாபெரும் மாநாடு வெறும் ஒரு நிகழ்வாக அல்லாமல், ஆதிக்கம், அதிகாரம் மற்றும் அநீதிக்கு எதிராக எழுந்த மக்கள் பேரெழுச்சியின் குரலாகவும், புதிய அரசியல் வரலாற்றை எழுதும் புரட்சிக் குரலாகவும் மாறியுள்ளது.
இந்த மாபெரும் மாநாடு சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்து போராடும் அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும் புதிய உத்வேகத்தையும் அளித்துள்ளது.
ஆதிக்க சக்திகள் அஞ்சும் குரல்!
அநீதிக்கு எதிராக ஒலிக்கும் குரல்!
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக முழங்கும் குரல்!
அந்தக் குரல் — அண்ணன் தொல். திருமாவளவன்! 🔥
அண்ணன் அவர்களின் பிறந்தநாள், சமூகநீதிக்கான புதிய பயணத்தின் தொடக்கமாக அமையட்டும்!
புரட்சி தொடரட்டும்!
சமூகநீதி வெல்லட்டும்!
சமத்துவம் மலரட்டும்!
மக்கள் அதிகாரம் நிலைபெறட்டும்! ✊🔥
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
எனது ஆருயிர் அண்ணன்
திரு. தொல். திருமாவளவன் அவர்கள்! 💐❤️
வாழ்த்துகளுடன்,
கரு. பிரபாகரன்
தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்
117
தமிழ்த்தேசியப் போராளி… தமிழினத்திற்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர்! ❤️🌾
எந்தவொரு தமிழ்த்தேசிய ஆளுமையாக இருந்தாலும், அவர் குடிசையில் வாழ்ந்தாலும் கூட, தனது சொந்த பொருளாதாரத்தையும் உழைப்பையும் பயன்படுத்தி, தன் முகத்தை முன்னிறுத்தாமல் பல தலைவர்களை உருவாக்கியவர் எனது ஆருயிர் அண்ணன் திரு. புகழேந்திமாறன் அவர்கள்.
தமிழ் மக்களுக்காகவும், தமிழ்த்தேசிய அரசியலுக்காகவும் தன்னலமின்றி பயணித்த அண்ணன் அவர்கள் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள செய்தி அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அவரது புதிய அரசியல் பயணம் வெற்றியடையவும், தமிழ் மக்களின் நலனுக்காக அவரது பணி மேலும் சிறக்கவும் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றி பெறுக அண்ணன் புகழேந்திமாறன் அவர்களின் அரசியல் பயணம்! 💐
தமிழ் வாழ்க!
தமிழ்த்தேசியம் வெல்க! ❤️🌾
@pugazhendhimar1
1
157
திமுகவின் துணையோடு
ஈழத்தில் லட்சக்கணக்கான மக்களை பாஸ்பரஸ் குண்டுகள் மூலமாகவும்,துப்பாக்கி முனையிலும் கொன்று குவித்தார்கள். அவர்கள் மீது வராத கோபம்...
75 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் மாறி மாறி திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, தமிழ் மண்ணையும் தமிழ் இனத்தையும் மது, மத போதைக்கு அடிமையாக்கி, சாதி சண்டை உருவாக்கி, ஊழல் பெருகி இந்த மண்ணை மலடாக்கிய திராவிடக் கட்சிகள் மீது வராத கோபம்...
50 நாட்கள் கூட கடக்காத தமிழக வெற்றிக் கழகத்தின் மீது உங்களுக்கு வருவது கோபம் இல்லை.
அது ஏதுமில்லாத ஏழை, எளிய பிள்ளைகள், இளைஞர்கள்; அதுவும் நீங்கள் "மாற்றம்" என்று இத்தனை ஆண்டுகளாக பேசிய தமிழர் தலைமையில்தான் இந்த ஆட்சி அமைந்துள்ளது. அதன் அதிகாரம் உங்களுக்கு கிடைக்கவில்லையே என்று வைத்து, எரிச்சல் தாங்க முடியாமலே த.வெ.க.வை எதிர்த்து ஒட்டுமொத்த கட்சிகளும் களத்தில் நிற்கிறது.
இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் கூட, திமுக–அதிமுக கூட்டணியில் யார் இருந்திருந்தாலும் எந்த ஒரு அமைச்சர் பதவியும் கிடைக்காமல், அங்கீகாரம் கிடைக்காமல்தான் சுற்றி இருப்பார்கள்.
இன்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சொல்வதைப் போல, தன் மக்களுக்கு, தன் சமூகத்திற்கு வருடத்திற்கு 5000 கோடி தனது கையால் வழங்க இருக்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த அமைச்சர் வன்னியரசு அவர்கள்.
இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமல், "ஆறு மாதம் அமைதியாக இருக்கிறோம்" என்று சொல்லிவிட்டு, அரை மாதம் கூட உங்களால் அமைதியாக இருக்க முடியவில்லை.
உங்களின் பதவி போதை, வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு....
😂🌧️ காவிரி அரசியல் vs இயற்கை! 🌧️😂
கர்நாடகா–தமிழ்நாடு காவிரியை வைத்து அரசியல் ஆட்டம் ஆரம்பிக்கலாம்னு நினைச்சாங்க...
தமிழக முதல்வர் பெங்களூரு போறாரு...
அதுக்கு முன்பே ஆர்ப்பாட்டம்...
போராட்டம்...
கோஷம்...
எல்லாமே ரெடி...! 😎
ஆனா... 😄
🌧️ இயற்கை மட்டும் சிரிச்சுக்கிட்டு வேலை பார்த்துடுச்சு!
கர்நாடகாவில் பலத்த மழை கொட்டித் தீருது... ☔
அரசியல்வாதிகள் நினைத்தாலும் தடுக்க முடியாது...
ஆர்ப்பாட்டக்காரர்கள் நினைத்தாலும் தடுக்க முடியாது...
இயற்கை முடிவு செய்தால், அதை யாராலும் மாற்ற முடியாது! 😄
"மழை பெய்வதையும், காவிரி பாய்வதையும் அவர்களே நினைத்தாலும் தடுக்க முடியாது!" 🌊🌧️😂
1
119
ஐந்து வருடம் ஆட்சியில் இருந்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட்டை ஒழிப்போம்
திமுக
தேசத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் அதிகாரத்தில் இருக்கும் பழம்பெரும் கட்சி காங்கிரஸ்
செய்யாத ஒன்றை சோசியல் மீடியாவில் விளையாட்டுக்கு ஆரம்பித்த
கருப்பன் பூச்சி கட்சி செய்து காட்டியது
இதை தனதாக்கிக்கொள்ள துடிப்பது எவ்வளவு கேவலமான செயல்..
அதுவும் அரசியல் பின்புலம் இல்லாமல்
ஆட்சி வந்து இரண்டு மாத
தவெக வை எதிர்த்து போராட்டம் நடத்துவது அதை விட கேவலமானது....
#NEET #TamilNaduPolitics #PoliticalAccountability
#EducationPolicy #StudentRights
93
தலைநகரில் நடைபெற்று வரும் NEET தேர்வு எதிர்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் Cockroach Janata Party-யின் இளைஞர்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளின் உயிர்களை காவு வாங்கியதாக பலர் கருதும் NEET தேர்வு முறை ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு எனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வி என்பது அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் உரிமையாக இருக்க வேண்டும்; அது எந்த மாணவரின் கனவையும் பறிக்கும் தடையாக மாறக் கூடாது.
#BanNEET #StudentsRights #EducationForAll #NEET
98
இந்திய அரசியலில் இதுவரை யாரும் செய்யாத சாதனைகளைச் செய்தால், சிலருக்கு வயிற்றெரிச்சல் வருவது இயல்புதான்.
விமர்சனங்கள் அதிகரிக்கலாம்...
வதந்திகள் பரவலாம்...
ஆனால் மக்கள் மனதில் இடம்பிடித்த பயணத்தை யாராலும் தடுக்க முடியாது.
ஜோசப் விஜயின் அரசியல் என்பது வெறும் விவாதம் அல்ல; அது பலரின் எதிர்பார்ப்பாகவும், மாற்றத்தை நோக்கிய அரசியல் பயணமாகவும் பார்க்கப்படுகிறது.
#JosephVijay #VijayPolitics #TamilNaduPolitics #TVK #PoliticalVibes #Tamil
Chief Minister of Tamil Nadu
💥💥💥💥💥💥💥💥💥💥💥
104
🤣🤣
திமுக, அதிமுக இரண்டு பேரும் சேர்ந்து ஆதரவு தந்தாலும்... டொனால்ட் ட்ரம்ப் வந்து பிரச்சாரம் செய்தாலும்...
"சீமான் ஜெயிக்க மாட்டார்!" 😄
ஏன்னா...
அவரோட கட்டம் அப்படி இல்லைங்க... 😜
ஆனா ஒரு விஷயம் மட்டும் உண்மை...
பயிற்சி எடுப்பதில் அவர் உலக சாம்பியன்! 💪
சின்ன வயசுல கபடி போட்டியில் வாங்கிய கப் எல்லாம் இப்போவும் ஷோகேஸ்ல பளபளன்னு நிக்குதாம்! 🏆😂
#சும்மா_காமெடி 😄
#சிரிச்சுட்டு_போங்க
"பல ஆண்டுகளாக நாங்கள் எழுப்பிய குரல் இன்று அரசின் செவிகளை எட்டியுள்ளது. டாடா தொழிற்சாலை தொடர்பான எங்களின் கோரிக்கைகளும் போராட்டங்களும் நியாயமானவை என்பதை காலம் நிரூபித்துள்ளது." ✊🏻🔥
41
"நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டு, பசியும் வறுமையும் சுமந்து வாழ்ந்த மக்களின் உரிமைகளுக்காக, சட்டை அணிய அனுமதி மறுக்கப்பட்ட காலம் முதல் செருப்பு அணிய உரிமை மறுக்கப்பட்ட காலம் வரை எண்ணற்ற அவமானங்களையும் எதிர்ப்புகளையும் கடந்து, தன் மக்களின் முன்னேற்றத்திற்காக 35 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாது போராடியவர் அண்ணன் வன்னியரசு அவர்கள்.
அரசியல் ரீதியாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தன் சமூக மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி மற்றும் அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்ற உயரிய இலக்குடன் அவர் மேற்கொண்ட தொடர் போராட்டம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் ஆதரவுடனும், மக்களின் ஒற்றுமையான குரலுடனும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் தன் மக்களுக்கான தீராத பற்றுடனும், தனது வாழ்நாளையே இயக்கப் பணிக்காக அர்ப்பணித்த அண்ணன் வன்னியரசு அவர்கள் தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நீண்டகால போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான அங்கீகாரமாகும்.
தன் மக்களுக்கு என்ன செய்யவேண்டுமென்பதை அறிந்து சுழன்று பணி செய்துக்கொண்டிருக்கிறார்
இந்த வரலாற்றுச் சாதனைக்காக அண்ணன் வன்னியரசு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இந்த வெற்றிக்கு துணைநின்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கும் எங்கள் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்."
வாழ்த்துகளுடன்,
கரு.பிரபாகரன்
தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்
64
















