Sk.விஜய் லக்ஸ்மன்னன் (@lakshmann1982) header
Sk.விஜய் லக்ஸ்மன்னன் (@lakshmann1982) profile picture

உதவி இயக்குனர் ( நந்தன் & மெய்யழகன் Ad) தமிழ் சினிமா

Thanjavur, India
Joined October 2009
Photo by Sk.விஜய் லக்ஸ்மன்னன் (@lakshmann1982)Photo by Sk.விஜய் லக்ஸ்மன்னன் (@lakshmann1982)Photo by Sk.விஜய் லக்ஸ்மன்னன் (@lakshmann1982)Photo by Sk.விஜய் லக்ஸ்மன்னன் (@lakshmann1982)Photo by Sk.விஜய் லக்ஸ்மன்னன் (@lakshmann1982)Photo by Sk.விஜய் லக்ஸ்மன்னன் (@lakshmann1982)Photo by Sk.விஜய் லக்ஸ்மன்னன் (@lakshmann1982)Photo by Sk.விஜய் லக்ஸ்மன்னன் (@lakshmann1982)Photo by Sk.விஜய் லக்ஸ்மன்னன் (@lakshmann1982)Photo by Sk.விஜய் லக்ஸ்மன்னன் (@lakshmann1982)
Sk.விஜய் லக்ஸ்மன்னன் retweeted
7
13
6
53
32,651
Sk.விஜய் லக்ஸ்மன்னன் retweeted
தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.விஜய் சரவணன் ரசிகர் மன்றத் தலைவராக இருந்தபோது எனக்கு நல்ல பழக்கம். தயக்கமற்ற அவருடைய பேச்சும், மன்ற மனநிலையைத் தாண்டிய மக்கள் நல ஆர்வமும் அப்போதே பிடிக்கும். அதனால் அவ்வப்போது ஜூனியர் விகடனில் தஞ்சாவூர் குறித்த கட்டுரைகளை எழுதுகிறபோது விஜய் சரவணனிடமும் கருத்து கேட்டு வெளியிடுவேன். கால ஓட்டத்தில் நான் சினிமா பக்கம் வந்துவிட்டேன். பல கட்சிகள் அழைத்தபோதும் எந்தப் பக்கமும் போகாமல் விஜய் சரவணன் விஜய் பக்கமே உறுதியாக நின்றார். த.வெ.க அரசியல் கட்சியாகத் தீவிரமானபோதே நான் விஜய் சரவணனின் பங்களிப்பைத் தேடினேன். காரணம், கூட்டத்தை ஒருங்கிணைப்பதிலும் உரியவர்கள் வரும்வரை எல்லோரையும் கட்டிப் போடும் விதமாய்ப் பேசுவதிலும் விஜய் சரவணன் வல்லவர். விஜய் சாரின் அரசியல் சுற்றுப் பயணத்தில் விஜய் சரவணன் செய்திருக்க வேண்டிய ரோல் அண்ணன் ராஜ்மோகன் வசம் போயிருந்தது. பின்னர் தேர்தல் விஜய் சரவணனுக்கு தஞ்சாவூரில் சீட் கிடைத்தது. பலரிடமும் அவருடைய வெற்றி குறித்து விசாரித்துக்கொண்டே இருந்தேன். ஒருமித்த டெல்டா மாவட்டங்களில் த.வெ.க.வுக்கு பெரிய செல்வாக்கு இல்லாமல் போன நிலையிலும், தஞ்சையில் 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் விஜய் சரவணன். ‘நிச்சயம் அமைச்சர்’ என அத்தனை பேரும் ஆருடம் சொன்ன நிலையில், திடீரென அவர் சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி எல்லோர் கணிப்பையும் தவிடு பொடியாக்கியது. அமைச்சரவை பட்டியலில் விஜய் சரவணன் பெயர் இல்லை. சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஒருநாள் விஜய் சரவணன் நெஞ்சுயர்த்திப் பேசிய போதுதான் பலரும் அவரை வியந்து பார்த்தார்கள். அவருடைய சமீபத்திய பேட்டியும் பிரமிக்க வைத்தது. தஞ்சாவூர் மாமன்னன் ராசராசனின் 1041வது சதய விழாவின் அழைப்பிதழைக் கொடுப்பதற்காக குழுத் தலைவர் என்.எஸ்.சரவணனுடன் நம் அலுவலகம் வந்தார் விஜய் சரவணன். இயக்குநர் இரா.சரவணனை பார்க்க வந்தவர், என்னைக் கண்டதும் ஷாக்கானார். ஜூ.வி.யில் பணியாற்றிய காலத்தில் பழகிய நாங்கள் அதன் பிறகு பேசிக்கொள்ளவில்லை. பழைய நினைவுகளைக் கடகடத்தோம். “நான் உங்களோட ‘உடன்பிறப்பே’ படத்துக்கு அடிமை. எனக்கு நாலு அக்காக்கள்… அதனாலேயே அந்தப் படத்தைப் பார்க்கிறப்ப எல்லாம் கண் கலங்கிடும். அதை டைரக்ட் பண்ணியவரே நீங்கதான்னு இப்போதான் தெரியுது” என்றார். மன்ற நிர்வாகியாய் இருந்தவரைச் சட்டமன்ற உறுப்பினராய் நான் பார்த்ததும், ஒரு பத்திரிகையாளராய் இருந்தவரை இயக்குநராய் அவர் பார்த்ததும் ‘அடடா’ என்றிருந்தது. அடுத்த நிமிடத்தின் ஆச்சர்யம் என்னவென்று ஒளித்து வைப்பதில்தானே உலகின் சுவாரஸ்யம் இருக்கிறது!
24
63
11
635
123,212
Sk.விஜய் லக்ஸ்மன்னன் retweeted
‘நந்தன்’ பயணம் இன்னும் முடியவில்லை… #2YearsOfNandhan @SasikumarDir @erasaravanan @thondankani @EraEntertainment
3
38
23
179
52,827
Sk.விஜய் லக்ஸ்மன்னன் retweeted
‘நந்தன்’ ரிலீஸாகி 2 வருசம் ஆச்சு… அடுத்த படம் என்ன சார்? 👇
23
47
5
523
19,628
Sk.விஜய் லக்ஸ்மன்னன் retweeted
தந்தையை இழந்தவர்களுக்குத் தந்தை நிகர் மாமனார் கிடைப்பது வரம். என் மாமனார் எனக்கு அந்த வகைக் கொடுப்பினை. “யப்பா…” என அவர் என்னை அழைக்கும்போது உயிர் உருகும். என் மனைவிக்கும் எனக்கும் பிரச்னை வந்தால் எப்போதுமே என் பக்கம்தான் நிற்பார். எல்லோர் மீதும் பேரன்பு காட்டுகிற மனிதர். சில வருடங்களுக்கு முன் காலில் ஒரு பாதிப்பு ஏற்பட்டு கேன்சராக மாறி முழங்காலுக்குக் கீழ் எடுக்க வேண்டிய சூழல். நிலைமையை மருத்துவர்கள் எங்களுக்குச் சொல்ல, மாமாவிடம் எப்படி அதனைச் சொல்வது எனத் தத்தளித்தோம். ஒருகட்டத்தில் அவருக்கே தெரியவர, அத்தனை காலம் தன்னைத் தூக்கிச் சுமந்த காலை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டார். விரல்களுக்குச் சொடக்கு எடுத்தார். இனி இந்தக் கால் நம் உடம்பில் இருக்காது என்பதை யார் மனம்தான் ஏற்கும்? “கவலைப்படாதீங்க மாமா… செயற்கைக் கால் வைச்சுக்கலாம்” என்றேன். நிமிர்ந்தவர், லேசாகச் சிரித்தார். “கால் போனா என்ன கை போனா என்ன? நீங்க இருக்கிறப்ப எனக்கென்னப்பா கவலை…” என்றார். அறுவை சிகிச்சை முடிந்து செயற்கைக் கால் மாட்டியதும் பழைய உற்சாகத்திற்குச் சட்டென மாறிக் கொண்டார். எதையும் இழப்பெனக் கருதாத அந்த மனநிலை என்னை எப்போதுமே வியக்க வைக்கும். வயது முதிர்வால் அவ்வப்போது மருத்துவமனை அல்லாட்டாங்கள்… ஆனாலும் எதையும் அவஸ்தையாகக் காட்டிக் கொள்ளாமல், அத்தையை மட்டுமே அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் போய் வருவார். யாரையும் சிரமப்படுத்திவிடக் கூடாது என்பதில் இருவருமே அவ்வளவு கவனமானவர்கள். அத்தை, என் அப்பாவின் உடன்பிறந்த தங்கை. மரியாதை நிமித்தம் இன்று வரை அத்தையும் நானும் பேசிக் கொண்டதில்லை. நிமிர்ந்துகூடப் பார்த்ததில்லை. “தம்பி பொறந்தப்ப மொத ஆளா நாந்தான் கைநீட்டி வாங்கினேன். ஆம்பளை புள்ளைன்னு தெரிஞ்ச உடனே பரவசத்துல நர்ஸ் கையில் அம்பது ரூபா காசு கொடுத்தேன். தம்பியே எனக்கு மருமகனா வரும்னு நினைச்சதே இல்ல…” என அவ்வப்போது நெகிழ்வார் அத்தை. தீவிர வாசிப்பாளர். எப்போதும் ஏதாவது ஒரு புத்தகம் கையில் இருக்கும். இவருடைய வாசிப்புப் பழக்கம்தான் வம்சாவழியாய் எனக்கும் வந்திருக்குமோ என்னவோ… தாய் நிகர் அத்தைக்கும் தந்தை நிகர் மாமாவுக்கும் நேற்று திருமண நாள். மிக எளிமையாகக் கொண்டாடி வாழ்த்து பெற்றோம். எளிய புன்னகையில் நிறைந்திருக்கிறது 49 வருட இணை வாழ்வு!
35
38
3
488
9,980
Sk.விஜய் லக்ஸ்மன்னன் retweeted
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் தீப ஆராதனை தரிசிப்போம் இந்நாள் பொன்னாளாகட்டும்🙏
14
485
4
4,507
54,124
Sk.விஜய் லக்ஸ்மன்னன் retweeted
“3 Days before release,#Suhas and @MythriOfficial Naveen team watched #Mandadi After Movie, for 1.5hrs they spoke about the movie. Next day morning Suhas called and said me MOVIE IS BLOCKBUSTER,Naveen sir told. I went infront of the miror and KISSED MY WOUNDS” -@sooriofficial
1
90
1,703
62,999
Sk.விஜய் லக்ஸ்மன்னன் retweeted
Superstar Rajinikanth Sir watched and loved our #Mandaadi. His heartfelt call means the world to me and our entire team. This picture captured the priceless moment of hearing his voice on the other end! ❤️🙏 @rajinikanth sir 🙏🙏🙏 அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்! @rsinfotainment @elredkumar
🤖 Made with AI
134
2,443
59
18,692
306,024
Sk.விஜய் லக்ஸ்மன்னன் retweeted
This is such a sweet gesture from dear @SilambarasanTR_ ❤️❤️❤️ Films like #ModhaRathiri deserves this kinda support! So happy for @iam_rishikanth and the entire team! Glad the film is gaining momentum among the audience!
Watched #ModhaRathri and really enjoyed it. We often discover small, beautiful films from other languages and celebrate them so much. When a Tamil film attempts something fresh with a new team, I feel we should give it the same love and support. A story unfolding over a single night, set around a village wedding, with so many characters and little moments that felt so real. The writing, the humour, the way people react to each other, and the characters were all handled really well. Really happy to see a new director and team make something so rooted and interesting. My appreciation to director #RajaKaruppasamy, the entire cast and crew and everyone who backed this film. 👏 A small request to our producers too… films like these need that extra push to reach the audience. Good content deserves to be discovered. And to all my fans and everyone who loves cinema, do watch #ModhaRathri in theatres and support the team. ❤️ Wishing the entire team lots of success. Keep making good cinema! 🙏🏻 @iam_rishikanth #AnishmaAnilkumar @MythriOfficial
2
29
1
195
99,957
Sk.விஜய் லக்ஸ்மன்னன் retweeted
2D நிறுவனத்தின் ராஜசேகர் பாண்டியன் தமிழ் சினிமாவின் தரமான தங்கமான தயாரிப்பாளர். நடிகர் சூர்யா சாரின் இடம், வலம்! “யாரும் எதுவும் கேட்டு விடுவார்களோ?” எனத் தயங்கித் தயங்கி போன் எடுக்கும் பெரிய இடத்து ஆட்களுக்கு மத்தியில், போனை எடுத்த உடனேயே, “என்ன வேணும்?” எனக் கேட்கிற தன்மையாளர். எதுவும் கேட்காமலே குரலின் வாட்டம் அறிந்து தீர்வு கொடுக்கும் பேரன்பர். ‘உடன்பிறப்பே’ ரிலீஸாகி ஒரு வருடம் கடந்திருக்கும். ஓர் அலுவலாகச் சிவகங்கை போயிருந்தேன். யார் தகவல் சொன்னார்களோ… ராஜா சாரிடமிருந்து போன் வந்தது. “எங்க ஊர்ப் பக்கம் போயிருக்கீங்க… எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லக்கூடாதா சரவணன்?” என்றார். நான் சொன்ன எந்தச் சமாளிப்பு வார்த்தைகளையும் ஏற்காமல், “இன்னிக்கு எங்க வீட்லதான் சாப்பாடு. அம்மா அப்பா ரெண்டு பேர்கிட்டயும் சொல்லிட்டேன். நேரா இப்போ உங்க கார் அங்கே போகனும்” என உத்தரவாகச் சொன்னார். வீட்டிற்குப் போனால் தலைவாழை விருந்து… ராஜா சாரின் அப்பா கற்பூரசுந்தர பாண்டியன் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி. அவரும் அம்மாவும் பார்த்துப் பார்த்து உபசரித்தார்கள்; பரிசு கொடுத்தார்கள். அன்பும் அணுகுமுறையும் கொடுத்துச் சிலிர்க்கும் குணமும் ராஜா சாருக்கு வம்சாவழியாகத்தான் வந்திருக்கிறது. உறங்கி எழுகிற ஒவ்வொரு நாளுமே பிறந்த நாள்தான் என்பதுபோல் புன்னகையும் பேரன்புமாய் முகம் மலர்பவர் ராஜா சார். இன்று அவருக்கு நிஜமான பிறந்த நாள். பாரம்பரியப் பெருமகனாய் எந்நாளும் சிறக்கட்டும் @rajsekarpandian சார்… வென்றவர்களைக் கொண்டாட இங்கே பெரும் கூட்டமே இருக்கிறது. தேங்கி நின்றவர்களையும் அரவணைக்க ராஜா சார் மாதிரியான ஒரு சிலர்தான் இருக்கிறார்கள்!
6
66
2
481
28,157
Sk.விஜய் லக்ஸ்மன்னன் retweeted
“ ‘அன்பே டயானா’ படத்தில் உன் பெயர் எப்படி?” - சொல்லி வைத்ததுபோல் எல்லோரும் கேட்கிறார்கள். இதையேதான் தம்பி ‘மில்லியன் டாலர்’ யுவராஜ் கணேசனிடம் நானும் கேட்டேன். அவரின் கோடியளவு உழைப்பில் கொஞ்சநஞ்ச நேரம் உடன் நின்றதைத் தவிர, நான் வேறேதும் செய்ததில்லை. பெருகியோடிய அன்பில் எங்களின் Era Entertainment நிறுவனத்திற்குப் பெருமை சேர்க்கும் விதமாய் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்கிற தகுதியை எனக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் யுவராஜ். அவர் திட்டமிடலில் ‘அன்பே டயானா’ படத்திற்கு ஆதரவு பெருகுகிறது. விநியோகஸ்தர் மத்தியில் மகத்தான வரவேற்பைப் பெற்றிருக்கும் படம், ஓடிடி உள்ளிட்ட வணிகத்திலும் சாதித்திருக்கிறது. ஒரு படத்தை எல்லோருக்கும் பிடிக்கும் வண்ணம் எப்படி முன்னிறுத்துவது என்பதில் யுவராஜை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. தேநீர்க் கோப்பை தொடங்கி பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட அத்தனையிலும் ‘அன்பே டயானா’ டிசைன்ஸ் பிரதிபலிக்கின்றன. மழைக்கால அடைக்கோழியைப் போல் படத்தைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து நிலை நிறுத்த யுவராஜ் படுகிற பாட்டை, திரைத்துறை நோக்கி வருபவர்களுக்குப் பாடமாகவே வைக்கலாம். அப்பேர்ப்பட்ட உழைப்பு! ‘மில்லியன் டாலர்’ நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கே உரிய ஈர்ப்பும் இதயத் துடிப்பும் ‘அன்பே டயானா’வில் இன்னமும் அதிகம். ‘ஜமா’ பாரி இளவழகன் எழுத்து, இயக்கம், நடிப்பு என முப்பரிமாணத்தில் கலக்க, கதாநாயகி ரம்யா ரங்கநாதன் கண்களில் ஒத்திக்கொள்கிற அளவுக்கு நெஞ்சம் ஈர்க்கிறார். ட்யூப் லைட் வெளிச்சத்தில் படபடக்கும் தட்டானைப்போல் அவர் கண்கள் கடகடவெனப் பேசுகின்றன. ஹாக்கி ஸ்டிக்குடன் அவர் கிளம்பிப்போகிற வேகமும், கண்ணாடிக்குள் விரல் விட்டு போங்கு காட்டுகிற இவர் சேட்டையும் செம. பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது இந்தப் பெண்ணுக்கு! ரோஜா மேடம்தான் படத்தின் தூண். மிரட்டி இருக்கிறார். சேத்தன் சாரும் ‘பரிதாபங்கள்’ கோபியும் படம் முழுக்க சிக்ஸர் அடிக்கிறார்கள். ‘சிரஞ்சீவி’ பாத்திரத்தில் தம்பி சுதர்சன் பெரிய பெயர் வாங்கி இருக்கிறார். இஸ்மத் பானுவும் அவர் மகள் பாத்திரமும் தனித்த சிறப்பு! இசையும் பாடலும் வரிகளும் குரலும் கோடி தகும். எல்லா வகையிலும் ‘அன்பே டயானா’ உங்கள் உள்ளத்தை அப்படியே அள்ளிக் கொள்ளும். ‘மில்லியன் டாலர்’ நிறுவனத்தின் தயாரிப்பில் உடன் நின்ற பெருமை, எனக்கும் எங்கள் நிறுவனத்திற்கும் வாழ்நாளுக்கும் நிலைத்திருக்கும்! @PariElavazaghan @RamyaRanganathn @Chetan_k_a @RojaSelvamaniRK @AravindhrajaG Written & Directed by @PariElavazaghan 🎬 A @bharathsankar12 Musical 🎶 @CalistShelley @Editor_Partha @Lyricist_Mohan @soorajslive @muthamilrms @sudharsangandhy @nikhila_sankar_ @Ismathbanu1 @udaykumar_mix @MillionOffl @Neo_Castle_ @erasaravanan @Yuvrajganesan @narentnb @Vivek_5790 @shajankafka @divomusicindia @proyuvraaj
6
21
1
79
19,685
Sk.விஜய் லக்ஸ்மன்னன் retweeted
“ஒரு நல்ல ஒளிப்பதிவாளர் காட்சிகளை மட்டும் உருவாக்குவதில்லை; உணர்வுகளுக்கும் உயிர் கொடுப்பார். அந்தக் கலையை வாழ்நாள் முழுவதும் காத்த செழியன் சார் அவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அஞ்சலி #RIPChezhian
6
35
1
385
19,989
Sk.விஜய் லக்ஸ்மன்னன் retweeted
என் மனைவி கலாவுக்கு கை வலி. அது தோளுக்கும் பரவ, மருத்துவர் @drkrvcvijay உடன் ஆலோசித்தேன். ஆரம்பகட்ட பரிசோதனைகள் முடிந்து கொஞ்சம் சந்தேகம் வந்த நிலையில், கீழ்ப்பாக்கம் குமரன் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தார். அங்கு எமர்ஜென்ஸி வார்டில் சேர்த்தார்கள். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகளை முடித்தவர்கள், வெளியே இருந்த மருத்துவரிடம் போனில் பேசினார்கள். அதுவரை எனக்கு எவ்விதக் கலக்கமும் இல்லை. இரவு 2 மணிவாக்கில், “ஆஞ்சியோ பண்ணிடலாம்” என்றார்கள். தயங்கி நின்றேன். “ஆஞ்சியோங்கிறது ஒரு பரிசோதனைதான். கால் மணி நேரத்தில் பண்ணிடுவாங்க” என்றார்கள். எப்போதும் கூட்டமாகவே நிற்கிற வழக்கம்கொண்ட நான், முதன் முறையாகத் தனியாக நின்றேன். அந்த நேரத்தில் எவரையும் அழைக்க முடியாது. கலாவும் தைரியமாகத்தான் இருந்தார். காலை 3.30 மணிவாக்கில் கலாவை உடை மாற்றச் சொல்லி செயின், தோடு, மூக்குத்தியைக் கழற்றிக் கொடுக்கச் சொன்னபோதுதான் எனக்குத் தடதடக்கத் தொடங்கியது. பிரத்யேக அறைக்குக் கலாவை அழைத்துச் செல்லச் செவிலியர்கள் வந்தார்கள். “புள்ளைங்க பத்திரம்க…” என்றபடி கலா என் கைகளைப் பிடிக்க, கண்ணணை உடைந்து கண்ணீர் கொட்டத் தொடங்கியது. என் அக்கா மகன் மணி ஓடிவர, கொஞ்சம் தைரியத்துடன் கலாவை உள்ளே அனுப்பி வைத்தேன். ஒரு மணி நேரம் ஆகியும் கலா வெளியே வரவில்லை. கொஞ்ச நேரத்துக்குள் இந்த மனம் எப்படியெல்லாம் அஞ்சி விடுகிறது. “மாமா…” என மணி என் தோளை அழுத்த, “அவளுக்குன்னு நான் இன்னும் ஒண்ணுமே பண்ணலடா. வாழ்க்கை முழுக்க போராட்டத்தை மட்டுமே கொடுத்திருக்கேன்…” எனக் குலுங்கினேன். மருத்துவர் விஜய்க்கு மறுபடி மறுபடி போன் பண்ணிப் பினாத்தினேன். காலை 5 மணிவாக்கில் மகன் சஞ்சயிடமிருந்து போன். “அம்மா எங்கப்பா?” என்றான். இன்னும் உடைந்து நொறுங்கினேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு கலா மயக்க நிலையில் வெளியே அழைத்து வரப்பட்டார். ஓடோடிப்போய் அவர் கையைப் பிடித்து நெஞ்சில் வைத்துக் கொண்டேன். “இரண்டு இடங்களில் லேசான அடைப்பு. இப்போதைக்கு ஸ்டெண்ட் வைக்க அவசியமில்லை. மருந்து மாத்திரைகளே போதும்” என்றார் மருத்துவர் சித்தார்த். மகத்தானவர். கைக்கூப்பினேன். காலத்திற்கும் கலாவை திட்டாமல், குறை சொல்லாமல், படுத்தி எடுக்காமல், எந்த வேலையும் செய்யவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளத் திட்டமானேன். பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்தேன். வீட்டு வேலைகளைச் செய்தேன். கோயிலுக்கு அழைத்துப் போனேன். நிறைய நேரம் கலா பேச்சுக்குக் காது கொடுத்தேன். நான்கைந்து நாட்களில் என் வேலைகள் துரத்த ஓடினேன். வேறொரு விஷயமாய் கலா பேச, போனிலேயே காச் மூச்செனக் கத்தினேன். அடுத்த சில நிமிடங்களிலேயே ஓடோடி வீடு வந்து மன்னிப்பு கேட்டுச் சமாதானப்படுத்தி விட்டாலும், கலாவை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள நினைத்த மனநிலையை எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் தொலைத்தோம் என முட்டிக்கொண்டேன். அடுத்த சில நாட்களில் வேலைகள், பயணங்கள், சந்திப்புகள் என வழக்கமான வாழ்க்கையிலேயே ஓடத் தொடங்கினேன். மருத்துவமனை சிரமங்கள் மறைந்து முழுதாக ஒரு மாதம்கூட கழியவில்லை. நேற்றிரவு தாமதமாக வீடு போனேன். நல்ல தூக்கத்தில் இருந்த கலா எழுந்தார். உணவு எடுத்து வைத்தார். காபி கொடுத்தபோது மணி 11.40. நான் படுத்துவிட்டேன். அதன் பிறகும் அடுக்களையில் பாத்திரம் கழுவும் சத்தம். காலையில் 5:30 மணிக்கு எழுந்து கலா லைட் போட்டபோது, லேசாகக் கண் விழித்துப் புரண்டு படுத்தேன். 7:45க்கு நான் எழுந்தபோது வாசல் கூட்டிக்கொண்டிருந்தார் கலா. அரக்கப் பறக்கத் துணி காய வைத்தார். அடுப்பில் உணவு கொதித்துக் கொண்டிருந்தது. “ஐயோ கூட்டுக்கு…?” என்றபடி நைட்டியோடு எதிர்க்கடைக்கு ஓடி வாழைக்காய் வாங்கிக்கொண்டு வந்தார். சில எஸ்.எம்.எஸ்.களுக்கு நான் பதில் அனுப்புவதற்குள் எப்படித்தான் சமைத்து, குளித்து, உடை மாற்றினாரோ… “சாப்பிட்றீங்களாப்பா..?” எனக் கேட்டார். ‘வேணாம்’ என்பதுபோல் தலையாட்டியவன், புதுச் சேலையில் கிளம்பி நின்ற கலாவின் கைகளைக் குலுக்கி, “இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்பா…” என்றேன். “தாங்க்ஸ்ப்பா…” என்றபடியே லஞ்ச் பாக்ஸ் எடுத்துக்கொண்டு ஓடிப்போய் பைக் ஸ்டார்ட் செய்தார். “புள்ளைங்களுக்குத் தனியா பாக்ஸ்ல வெச்சுட்டேன். உங்களுக்கு டைனிங் டேபிள்ல இருக்கு. மறந்துடாம சாப்பிட்ருங்க. கவனம்…” என்றபடியே பைக்கில் பறக்கப் போனவர் முன்னால் நின்று மறித்தேன். “பிறந்த நாளை பெரிசா கொண்டாட நினைச்சேன். ஸாரிப்பா…” என்றேன். “நீங்க வாழ்த்துச் சொன்னதே பெருசுப்பா” எனச் சிரித்தார் கலா. கொஞ்சமும் கூச்சமின்றி பதிலுக்குச் சிரித்தான் சரவணன் என்கிற மகத்தான சல்லிப்பயல்!
59
72
11
812
63,135
Sk.விஜய் லக்ஸ்மன்னன் retweeted
கதைத் தேர்வில் எப்போதுமே ‘மில்லியன் டாலர்’ யுவராஜ் கதாநாயகன். ‘அன்பே டயானா’ கதை முடிவானபோது தம்பி பாரியை என் அலுவலகம் அனுப்பி வைத்திருந்தார். ‘ஜமா’ படத்திலேயே ஜமாய்த்திருந்த பாரி ‘அன்பே டயானா’ கதையைச் சொல்லி முடித்தபோது மழை பெய்து ஓய்ந்தது போலிருந்தது. பாரியே எழுதி இயக்கி நடிப்பதால் அவர் சொன்னதைவிடச் சிறப்பாகப் படம் வரும் என்று அப்போதே தெரிந்தது. என் ஆச்சர்யமெல்லாம்… தம்பி யுவராஜ்தான்! வேறு எந்தத் தயாரிப்பாளராக இருந்திருந்தாலும் இந்தத் தங்கமான கதையை ஓகே பண்ணி இன்று டாப்பில் இருக்கும் ஹீரோ யாரையாவது கமிட் பண்ணி நடிக்க வைத்திருப்பார்கள். யுவராஜ் ஒரு தரமான தயாரிப்பாளராக பாரியின் விருப்பத்திற்குக் கூடுதல் மதிப்பும் நம்பிக்கையும் கொடுத்து டாப் ஹீரோக்கள் பட்டியலில் இடம்பிடிக்க வைக்கும் விதமாய் அவரையே களமிறங்க வைத்திருக்கிறார். எப்போதாவது ஷூட்டிங் பக்கம் போவேன். யூனிட் பேயாய் இயங்கிக் கொண்டிருக்கும். யுவராஜ் பித்துப் பிடித்த கணக்காகத் திரிவார். அவ்வப்போது அலுவலகம் வந்து படத்தின் முன்னேற்றம் குறித்துச் சொல்வார். சமீபத்தில் ஒருநாள், “படம் ரெடி சார்… பார்க்குறீங்களா?” என்றார். வானம் தூறல் போடத் துவங்கி சூழலை அவ்வளவு ரம்யமாக மாற்றிக் கொடுத்தது. கொண்டாட்டமான படம். வயிறு குலுங்கச் சிரித்து, ரோஜாவின் குடும்பத்தில் நாமும் ஒருவராகக் கலந்து, நெகிழ்ந்து, திக்குமுக்காடி கடைசி 20 நிமிட அலப்பறையில் எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரித்தேன். ஏற்கெனவே நான் கேட்டிருந்த கதைதான்… ஆனாலும், அடுத்து அடுத்து எனப் படம் பரபரக்க வைத்துவிட்டது. எழுத்தாக இயக்கமாகப் பட்டையைக் கிளப்பியிருக்கும் பாரி இளவழகன் ‘அன்பே டயானா’விற்குப் பிறகு முன்னணி ஹீரோவாக நிச்சயம் வலம் வருவார். ரோஜா மேடமும் சேத்தன் சாரும் திருவிழா நடத்தி இருக்கிறார்கள். நிச்சயம் அத்தனை கதாபாத்திரங்களும் நெஞ்சில் நிற்கும். பாடல்கள் மயக்குகின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், சென்னை பாஷை எனப் படம் முழுக்கப் பலவிதமான மொழிகளின் கலவை இதுவரை தமிழ் சினிமா காணாத கதம்பக் கச்சேரி! முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியைத் தன்னுடைய களமாக ஏன் தேர்ந்தெடுத்தார் என்று இந்தப் படத்தைப் பார்த்து முடித்தபோதுதான் புரிந்தது. பெரம்பூர் மண்ணின் காலத்திற்குமான பதிவு இந்தப் படம். எல்லாவற்றையும் தாண்டி சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் அவலத்தைச் சொல்ல புரட்சிகரமான திரைக்கதை பாதையைத் தேர்ந்தெடுக்காமல், கொண்டாட்டமும் கும்மாளமுமாய்ச் சொல்லியிருக்கும் விதம் மகத்தானது. பட்டாம்பூச்சியை மையப்படுத்திய கதை என்பதாலோ என்னவோ, மனம் முழுக்கப் பறந்து சிலிர்க்கிறது. தம்பி யுவராஜை கட்டி அணைத்துக் கொண்டேன். சினிமாவைக் கடலளவு நேசிக்கிற தம்பி இன்னும் இன்னுமாய்ப் பெருவெற்றி பெற வேண்டும். ‘மில்லியன் டாலர்’ நிறுவனத்தின் தரமான வெற்றிகளில் ‘அன்பே டயானா’ தங்கக் கீற்றாக நிச்சயம் ஜொலிக்கும்! நிற்க, இந்தப் படத்தின் மூலமாக யுவராஜின் ‘மில்லியன் டாலர்’ நிறுவனத்துடன் நம் ‘Era Entertainment’ நிறுவனமும் கைகோக்கிறது. “உங்க படம்கிறதாலதான் இந்தளவுக்குப் புகழ்ந்து எழுதினாயா?” என நீங்கள் கேட்கலாம். ‘அன்பே டயானா’ நம் அத்தனை பேரின் படம்! ❤️ Starring @PariElavazaghan @RamyaRanganathn @Chetan_k_a @RojaSelvamaniRK @AravindhrajaG Written & Directed by @PariElavazaghan 🎬 A @bharathsankar12 Musical 🎶 @CalistShelley @Editor_Partha @Lyricist_Mohan @soorajslive @muthamilrms @sudharsangandhy @nikhila_sankar_ @Ismathbanu1 @udaykumar_mix @MillionOffl @Neo_Castle_ @erasaravanan @Yuvrajganesan @narentnb @Vivek_5790 @shajankafka @divomusicindia @proyuvraaj
4
14
3
102
19,434
Sk.விஜய் லக்ஸ்மன்னன் retweeted
அவர் என்னை சந்தித்ததில்லை. அவருக்கு என் பெயர் தெரியாது. ஆனால் என் மகிழ்ச்சியிலும் இருந்தார். என் காதலிலும் இருந்தார். என் தோல்வியிலும் இருந்தார். என் தனிமையிலும் இருந்தார்… ராஜா சாருக்கு இதைவிட அற்புதமான பிறந்த நாள் வாழ்த்து வேறென்ன இருக்க முடியும்?
இளையராஜா பற்றி எழுதும்போது எப்போதும் ஒரு சிக்கல் இருக்கிறது. அவரை இசையமைப்பாளர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால்… என் வாழ்க்கையின் மிக மோசமான சில நாட்களில், அவர் ஒரு இசையமைப்பாளராக இல்லை. ஒரு தோழனாக இருந்தார். ஒரு கட்டத்தில் நான் மிகவும் சோர்ந்து போயிருந்தேன். வெளியே சிரித்துக்கொண்டிருந்தேன். வேலை செய்துகொண்டிருந்தேன். மனிதர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால் உள்ளுக்குள்… ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்துகொண்டிருந்தேன். இரவு வந்தாலே பயமாக இருந்த காலம் அது தூங்க முடியாது யோசனைகளை நிறுத்த முடியாது தனிமை மட்டும் சத்தமாக பேசிக்கொண்டே இருக்கும். ஒரு இரவு… எல்லாமே போதும் என்று தோன்றிய ஒரு இரவு வாழ்க்கை என்னை விட முன்னாடி ஓடிக்கொண்டிருப்பது போலவும், நான் மட்டும் எங்கோ பின்னால் நின்றுவிட்டது போலவும் தோன்றிய ஒரு இரவு. அப்போது யாரையும் அழைக்கவில்லை. யாரிடமும் உதவி கேட்கவில்லை. ஒரு இளையராஜா பாடலை மட்டும் போட்டேன். பிறகு இன்னொன்று. பிறகு இன்னொன்று. அந்த இரவில் அந்த பாடல்கள் எனக்கு அறிவுரை சொல்லவில்லை. பிரச்சனைகளை தீர்க்கவில்லை. காயங்களை குணப்படுத்தவில்லை. ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் செய்தது. அடுத்த ஐந்து நிமிடத்தை கடக்க வைத்தது. பிறகு அடுத்த ஐந்து நிமிடத்தை. அப்படியே அந்த இரவையே. சில நேரங்களில் வாழ்க்கை முழுவதையும் காப்பாற்ற பெரிய அதிசயங்கள் தேவையில்லை அடுத்த ஐந்து நிமிடத்தை கடக்க ஒரு காரணம் போதும். எனக்கு அந்த காரணமாக இருந்தது ராஜாவின் இசை. வாழ்க்கையில் நிறைய பேர் வந்தார்கள். சிலர் “எப்போதும் இருப்பேன்” என்றார்கள். சிலர் “எதுவானாலும் நான் இருக்கிறேன்” என்றார்கள். பிறகு அவர்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் போய்விட்டார்கள் அது யாருடைய தவறும் இல்லை. அதுதான் வாழ்க்கை. ஆனால் நான் மாணவனாக இருந்த நாளிலிருந்து இன்று வரை… ஒரு மனிதர் மட்டும் என்னை விட்டு போகவில்லை. அவர் என்னை சந்தித்ததில்லை. அவருக்கு என் பெயர் தெரியாது. ஆனால் என் மகிழ்ச்சியிலும் இருந்தார். என் காதலிலும் இருந்தார். என் தோல்வியிலும் இருந்தார். என் தனிமையிலும் இருந்தார். நான் என்னையே இழந்துவிட்டேன் என்று நினைத்த இரவுகளிலும் இருந்தார். அதனால்தான் இன்று அவருடைய பிறந்தநாளில் வாழ்த்துகள் சொல்ல மனசு வரவில்லை. ஒரு நன்றி மட்டும் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. ராஜா… என் வாழ்க்கையில் எல்லோரும் ஒருநாள் வெளியேறிய பிறகும், உங்கள் இசை மட்டும் இன்னும் என்னோடு அமர்ந்திருக்கிறது. அதற்காக… நன்றி. Happy birthday Ilaiyaraaja 🎶 ❤️
2
10
43
2,441
Sk.விஜய் லக்ஸ்மன்னன் retweeted
கள்ளழகர் வைகை ஆற்றில் கால வைக்கும் நல்ல நாளில்.. #MaduraiAlagar #MaduraichithiraiFestival #Madurai #Azhagar 🙏🏻
22
499
6
8,762
124,607
Sk.விஜய் லக்ஸ்மன்னன் retweeted
Thank you 😊 We will keep backing fresh talents for sure 🙌😊
1
2
11
577
Sk.விஜய் லக்ஸ்மன்னன் retweeted
“சசிகுமார் அவ்வளவுதான்” எனப் பலரும் முடிவு கட்டிவிட்ட நேரத்தில், பீனிக்ஸ் பறவையைப்போல் அவரை எழ வைத்த படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. படம் ரிலீஸாகி இன்றோடு ஒரு வருடம்… படப்பிடிப்பு போய்க்கொண்டிருந்த ஒரு நாளில் சசி சார் போன் பண்ணினார். “நல்லா ஷூட் பண்றாங்க. படம் அருமையா வந்துட்டு இருக்கு. ஆனா, பட்ஜெட் மட்டும் ஜாஸ்தியாகும் போல… யுவராஜ்கிட்ட பேசி கொஞ்சம் சிக்கனமா பண்ணச் சொல்லுங்க. நம்மளை நம்பி முதல் போடுறாங்க. நாளைக்கு அவங்க சங்கடப்பட்டு நின்னுடக் கூடாது” என்றார் சசிகுமார் சார். தம்பி யுவராஜுக்கு போன் பண்ணி பல விஷயங்களைப் பேசிவிட்டு இறுதியாக, “படத்தைக் கொஞ்சம் சிக்கனமா பண்ணுங்க தம்பி…” என்றேன். எதிர்முனையில் பதில் இல்லை. “இப்பெல்லாம் சசி சாருக்கு பெரிய பிசினஸ் இல்லப்பா.. அகலக்கால் வைக்காதீங்க” என்றேன் வெளிப்படையாய். “சார், தயவுபண்ணி சசி சாரை குறைச்சு மதிப்பிடாதீங்க. அவர் 100 கோடி பிசினஸ்க்கு வொர்த்தான ஹீரோ. இந்தப் படம் நிச்சயம் ஒரு மேஜிக் பண்ணும். நீங்க பட்ஜெட் பற்றியெல்லாம் யோசிக்காதீங்க சார்” என்றார் யுவராஜ். அவர் சொன்னது போலவே 100 கோடிக்கான வசூல் பட்டியலில் இணைந்து வாகை சூடியது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம்! “சசி சார் அவ்வளவுதான்” எனச் சொன்னவர்களே அவருடைய தேதிக்காக இன்றைக்கு க்யூவில் நிற்கிறார்கள். பந்தயக் குதிரையாக மறுபடியும் பாய்ச்சல் காட்டத் தொடங்கிவிட்டார் @SasikumarDir படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட அத்தனை பேரும் கோடி நன்றிக்குரியவர்கள். “இங்கே யாரும் அகதி இல்லை” என ஓங்கி உரைத்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ நிச்சயம் காலம் கடந்தும் பேர் சொல்லும் காவியமாக நிலைத்திருக்கும்! One year of #TouristFamily
11
53
8
688
66,418
Sk.விஜய் லக்ஸ்மன்னன் retweeted
KARA - FROM TODAY OM NAMASHIVAAYA 🙏🙏
239
1,903
95
14,260
313,804