பாட்டாளி நவீன் குமார் (@pattali32) header
பாட்டாளி நவீன் குமார் (@pattali32) profile picture

முதலில் பாட்டாளி, பின்பு சமையல்காரன்

India
Joined February 2022
Photo by பாட்டாளி நவீன் குமார் (@pattali32)Photo by பாட்டாளி நவீன் குமார் (@pattali32)Photo by பாட்டாளி நவீன் குமார் (@pattali32)Photo by பாட்டாளி நவீன் குமார் (@pattali32)Photo by பாட்டாளி நவீன் குமார் (@pattali32)Photo by பாட்டாளி நவீன் குமார் (@pattali32)Photo by பாட்டாளி நவீன் குமார் (@pattali32)Photo by பாட்டாளி நவீன் குமார் (@pattali32)Photo by பாட்டாளி நவீன் குமார் (@pattali32)Photo by பாட்டாளி நவீன் குமார் (@pattali32)
பாட்டாளி நவீன் குமார் retweeted
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான Guidance TN முகமையில் நடப்பது என்ன? 15 பனியாளர்கள் நீக்கம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்! தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான Guidance TN முகமையில் பணியாற்றி வந்த 15 பேர் முதலீட்டாளர்கள் குறித்த தகவல்களை பிற மாநிலங்களுக்கு கசிய விட்டதாகவும், அதனால் அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழகத்தின் முதலீடு ஈர்ப்பு கட்டமைப்பையே நிலைகுலையச் செய்யும் இந்த விவகாரம் குறித்து யூக செய்திகள் மட்டுமே வெளிவரும் நிலையில், அரசு எந்த விளக்கமும் அளிக்காமல் அமைதி காப்பது கவலையளிக்கிறது. தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்காக பேச்சு நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் குறித்த விவரங்களை Guidance TN அமைப்பில் பணியாற்றியவர்கள் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக வழங்க்கியதாகவும், அது கண்டுபிடிக்கப்பட்டதால் தான் 15 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் மூவர் ஆந்திர அரசின் தொழில் துறைக்கு முதலீடுகளை ஈர்த்துத் தரும் பணியில் சேர்ந்ததாக வெளியான செய்திகள் இந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்தன. ஆனால், பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் பணியாளர்களோ, ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழகத்தில் பணி செய்யும் சூழல் இல்லை என்றும், அதனால் புதிய அரசு பதவியேற்ற ஒரு மாதத்தில் பதவி விலகி விட்டதாக கூறியுள்ளனர். Guidance TN அமைப்பின் பணிச் சூழல் மோசமடைந்திருப்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இவற்றில் எது உண்மை என்பதை அறிந்து கொள்ளும் உரிமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. அண்மைக்காலங்களில் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 3 தென் கொரிய நிறுவனங்களின் ரூ.1614 கோடி முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றன. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் என்ஃபீல்டு, Haier Electronics போன்ற நிறுவனங்களும் தமிழகத்தின் போட்டி மாநிலமான ஆந்திராவில் தொழில் முதலீடுகளை செய்ய தீர்மானித்துள்ளன. இத்தகைய சூழலில் தொழில் முதலீடுகள் தொடர்பான ரகசிய தகவல்கள் Guidance TN அமைப்பிலிருந்து கசியவிடப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் முக்கியத்தும் பெறுகின்றன. தமிழகத்தில் செய்யப்படவிருந்த தொழில் முதலீடுகள் குறித்த தகவல்கள் கசியவிடப்பட்டிருந்தால் அது துரோகமாக கருதப்பட்டு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது சட்டப்படி கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதையும், அவர்களில் மூவர் ஆந்திர அரசு பணியில் சேருவதையும் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்தது ஏன்? மோசமான பணிச்சூழல் காரணமாக அவர்கள் பதவி விலகியிருந்தால் அதுவும் தமிழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடியது தான். தமிழகத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை தீர்மானிப்பதில் தொழில் முதலீடுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதில் துரோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சர்ச்சை செய்திகள் குறித்து அரசு அமைதி காக்கக் கூடாது. இந்த சர்ச்சை தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். @CMOTamilnadu
2
74
1
216
12,655
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது . முனைவர் சௌமியா அன்புமணி வரவேற்பு.. #PMK | #SowmiyaAnbumani | #Thiruparankundram | #Deepam |
3
43
212
2,092
பாட்டாளி நவீன் குமார் retweeted
திருப்பரங்குன்றம் மலையில் இந்த ஆண்டு நிச்சயம் தமிழக அரசு தீபம் ஏற்ற வேண்டும்..
70
303
8
1,609
27,287
பாட்டாளி நவீன் குமார் retweeted
பெங்களூரு - கர்நாடக சட்டமன்ற வளாகம், விதான சௌதாவில் நடைபெற்ற காமன்வெல்த் பெண்கள் நாடாளுமன்ற வாதிகளுக்கான இந்திய மண்டல மாநாடு இரண்டாம் நாளில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிப்பு, சைபர் குற்றங்கள் சம்பந்தமாக உரையாற்றி, கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் குருபதகவுடா சங்கனகவுடா பாட்டீல் மற்றும் கர்நாடக சட்ட மேலவை துணைத்தலைவர் திருமதி உமாஶ்ரீ ஆகியோர் அளித்த இரவு விருந்தில் பங்கேற்ற போது.! #bangalore | #vidhanasoudha | #TNAssembly
1
28
66
1,144
பாட்டாளி நவீன் குமார் retweeted
பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாத்தார் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்... அவர் தலையிடாமல் இருந்திருந்தால் சதுப்புநிலத்தை அதிகாரிகளும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்களும் அழித்திருப்பார்கள்... #SavePallikaranaiWetland #pallikaranai #AnbumaniRamadoss
59
149
2,049
பாட்டாளி நவீன் குமார் retweeted
கனிமக் கடத்தலை தடுப்பதற்கான ஆணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது துரதிருஷ்டம்: உச்சநீதிமன்றத்தில் வலிமையாக வாதிடுங்கள்! @CMOTamilnadu
2
45
136
4,495
பாட்டாளி நவீன் குமார் retweeted
பெங்களூருவில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ் மக்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிய போது.! #Bangalore | #Tamilpeople
17
79
1,269
பாட்டாளி நவீன் குமார் retweeted
Arrest TVK Functionaries Who Opened the Sothuparai Dam: Are Even Dams No Longer Safe? TVK functionaries from the locality illegally entered the Sothuparai Dam near Periyakulam in Theni district and opened its sluice gates without the knowledge of officials. They also recorded the act and circulated it as a social media reel. It is condemnable that ruling party members are illegally entering dams, which must be maintained under strict security, and indulging in such activities. Dams are vital public infrastructure, and the water stored in them must be released judiciously, depending on prevailing conditions. Releasing water from dams, particularly when they hold excess water, without proper assessment can lead to disastrous consequences. Such incidents could result in floods, as witnessed in Chennai in 2015 following the release of water from the Chembarambakkam Dam, and in the districts of Villupuram and Cuddalore in 2025 following the release of water from the Sathanur Dam. Several questions arise over how TVK functionaries were allowed to open the dam without any concern for the possible consequences. What were the officials doing while these individuals were opening the dam? The Tamil Nadu Government must answer these questions. From conducting midnight inspections at police stations and hospitals to chasing tigers and opening dams, ministers and party workers alike appear to be acting as they please. This demonstrates that no place in Tamil Nadu is safe. It is particularly regrettable that no action has so far been taken against anyone for such violations. A case must be registered against the TVK functionaries who illegally entered the Sothuparai Dam and released water, and they must be arrested. The Tamil Nadu Government must take steps to prevent such incidents from recurring in the future. @CMOTamilnadu
9
132
1
499
20,166
இதனால் தான் பிரதமர் மோடி அவர்களை ஒட்டு மொத்த இந்திய தேசத்து மக்களும் போற்றி வணங்குகிறார்கள். இந்திய தேசத்தின் மீதான அவருடைய பற்றுதல் இந்த தேசத்தின் மீதான அவருடைய உயர்ந்த மரியாதை அவரை மேலும் சிறந்த தலைவராக போற்றப்படுகிறது
2
86
சட்டம் அனைவருக்கும் சமம்.. செய்தியாளர் கேள்விக்கு கட்சிதமாக பதில் கூறிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி.. 🔥
5
26
444
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரம் முதலமைச்சர் தலையிட்டு விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்... பாமக தலைவர் அன்புமணி 🔥
6
29
411
பாட்டாளி நவீன் குமார் retweeted
துருக்கியில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் பசுமைத் தாயகம் சார்பில் பங்கேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது.! #COP31 #COP31Antalya #PasumaiThayagam
3
67
1
180
4,373
பாட்டாளி நவீன் குமார் retweeted
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் பேட்டி!
8
23
315
பாட்டாளி நவீன் குமார் retweeted
"அவர் 6 மாசமா இதை தான் சொல்லிட்டு இருக்காரு".. விரைவில் தி.மு.கவின் ஆட்சி உதயமாகத்தான் போகிறது எனக் கூறிய மு.க ஸ்டாலின் - சிரித்தபடி அன்புமணி சொன்ன பதில் #TVK | #PMK | #AnbumaniRamadoss | #MKStalin | #PolimerNews
2
25
2
144
13,907
பாட்டாளி நவீன் குமார் retweeted
"நெப்போலியன் அண்ணா எப்படி இருக்கீங்க" திருமண நிகழ்வில் நடந்த சந்திப்பு!..
1
45
592
48,451
பாட்டாளி நவீன் குமார் retweeted
“உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கரணை சதுப்புநிலம்: படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோ என்று போவான்!” பள்ளிக்கரணை சதுப்புநிலம் தொடர்பாக வரும் புதன்கிழமை (11.11.2026) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சதுப்புநிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்கான உறுதியான உத்தரவினை இந்திய உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. அதே நேரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள கட்டுமான நிறுவனங்கள் பள்ளிக்கரணை சதுப்புநில பாதுகாப்புக்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைத்துள்ளன. கட்டுமான நிறுவனங்களின் அதே கருத்தினை தமிழ்நாடு அரசும் வழிமொழிந்துள்ளது. அதாவது, தமிழ்நாடு அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்களும், தமிழ்நாடு அரசும் ஒரே கருத்தை உயர்நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளன. ஒரு வழக்கில் வாதாடும் இரு தரப்பும் சதுப்புநில பாதுகாப்புக்கு எதிரான ஒரே நிலைப்பாட்டை முன்வைத்தால் – நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை எல்லோரும் எளிதாக யூகிக்க முடியும். (எனினும், சதுப்புநிலங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் கடுமையான தீர்ப்புகளும் கவனத்தில் கொள்ளப்படலாம் என சூழலியல் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கிறனர்!) சென்னையின் உயிர்நாடியான பள்ளிக்கரணை சதுப்புநிலம், கண் முன்னே அழிக்கப்படும் இந்த விவகாரத்தில், சென்னை மக்கள் அக்கறை கொள்ளவில்லை. தமிழ்நாடு அரசும் மக்கள் நலனுக்கு ஆதரவாக நிற்கவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க நிலை ஆகும். ------------- “பள்ளிக்கரணை zone of influence: பின்னணியில் உள்ள சதிவலை!” பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் தாக்கப்பகுதிகளில் மிகப்பெரிய கட்டடங்களை கட்ட திட்டமிட்டுள்ள கட்டுமான நிறுவனங்கள் – பள்ளிக்கரணைக்கு நீர்வரும் வழிகளை மறித்து நீரை தடுத்து கட்டடங்களை கட்ட விரும்புகின்றன. இப்போதே பல பெரிய கட்டுமான நிறுவனங்கள், கட்டடங்களுக்கு கீழே நீர் ஓடும் வகையில் கால்வாய்களுக்கு வழி விட்டு, அவற்றின் மேலே கட்டடங்களை கட்டியுள்ளன. இவை இயற்கைக்கும் சட்டத்துக்கும் எதிரானதாகும். நீர் ஓடும் கால்வாய்கள், வாய்க்கால்கள் மீது கட்டடம் கட்ட CMDA அனுமதி அளித்ததே மிகப்பெரிய சட்டவிரோத செயல் ஆகும். மேலும், ராம்சார் சதுப்புநிலமாக வரையறை செய்யப்பட்ட 1248 எக்டேர் நிலப்பரப்புக்கு உள்ளேயும் கூட பெரிய கட்டுமான நிறுவனங்கள் குடியிருப்பு வளாகங்களை கட்டியுள்ளனர். இதற்கு பிறகும் கூட, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் நீர்வடிநிலத்தில் உள்ள 65 நீர்நிலைகளை சுற்றியுள்ள பகுதிகளையும், அவற்றிலிருந்து நீர் வரும் வழிகளையும் ஆக்கிரமித்து அவற்றின் இயற்கை தன்மையை அழித்து கட்டடம் கட்ட பெரிய கட்டுமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன என பொதுவாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், பெரிய கட்டுமான நிறுவனங்கள் வாங்கி வைத்துள்ள பகுதிகள் எதுவும் zone of influence பகுதிக்குள் வரக்கூடாது என்பதில் ‘வலிமையான’ சிலர் உறுதியாக இருக்கின்றனர் என தகவல்கள் கூறுகின்றன. எனவே, கட்டுமான நிறுவனங்களுக்கு எந்த சிறு கட்டுப்பாடும் இல்லாத வகையில், அவர்களது அனைத்து நிலப்பகுதிகளையும் நீக்கிவிட்டு, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மட்டுமே zone of influence பகுதி என்கிற ஒரு வரையறையை கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள் என கூறப்படுகிறது! பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் நீர்வடிநிலத்தில் உள்ள 65 நீர்நிலைகளை zone of influence பகுதி சேர்க்கவும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது! ------------- “பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசுக்கு விருப்பம் இல்லை!” பள்ளிக்கரணை சதுப்புநிலம் 08.04.2022-ஆம் நாள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டது (Wetlands of International Importance under the Ramsar Convention). இந்திய அரசின் சதுப்புநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகள் 2017 பிரிவு 3 (a)இன் கீழ் ராம்சார் தளங்கள் தானாகவே வந்துவிடுகின்றன. எனவே, இதன் அடிப்படையில் 2024ஆம் ஆண்டிற்குள் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சட்டப்படி அறிவிக்கை செய்திருக்க வேண்டும். அதனை அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு செய்யவில்லை. தற்போது ஆட்சியில் இருக்கும் தவெக அரசும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சட்டப்படி அறிவிக்கை செய்வோம் என அறிவிக்கவில்லை. “பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் 90% பகுதியை ஏற்கெனவே அழித்துவிட்டோம். மீதம் 10% மட்டுமே எஞ்சியுள்ளது. இந்நிலையில் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை 2017 விதிகளின் கீழ் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அரசு கூறுகிறது. இதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தினை (Integrated Management Plan - IMP) அரசு தயாரித்து வருவதாக அரசு கூறுகிறது. எனவே, சட்டபூர்வமான இந்தப் பணிகள் முடியும் வரை பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சுற்றிலும் கட்டுமான அனுமதி வழங்கக் கூடாது” என 24.09.2025 அன்று பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. சதுப்புநிலத்தை பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை 6 முதல் 12 மாதங்களுக்குள் உருவாக்கிவிடலாம் என இந்திய அரசின் National Plan for Conservation of Aquatic Ecosystems (NPCA) guidelines தெளிவாக கூறியுள்ளது. (‘In most cases, a time frame of 6 months – 1 year is expected’, Page No. 26, NPCA guidelines 2024) இதற்கு முன்பாக, தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு சதுப்புநிலங்கள் ஆணையம் 29.08.2025 அன்று சமர்ப்பித்த அறிக்கையில், இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழான National Centre for Sustainable Coastal Management (NCSCM) நிறுவனம் பள்ளிக்கரணை சதுப்புநிலத்துக்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை 2022ஆம் ஆண்டிலிருந்தே உருவாக்கி வருவதாகவும், ஏற்கெனவே உள்ள IMP மறு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது. அதாவது, கடந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் நாளுக்கு முன்பே ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை (IMP) உருவாக்குவதற்கான பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதாக கூறிய தமிழ்நாடு அரசு, இன்னமும் கூட அதனை வெளியிடவில்லை. இவ்வாறு பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாப்பதற்கான ஒரு IMP திட்ட ஆவணம் உருவாக்கப்பட்டிருந்தால், பசுமைத் தீர்ப்பாயம் விதித்த கட்டுமானத் தடை தானாகவே இந்நேரம் விலக்கப்பட்டிருக்கும். ------------- “தவறான நோக்கத்தில் ஒரு கட்டுக்கதை வழக்கு!” ‘பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் தாக்கப்பகுதியாக (zone of influence) வரையறை செய்யப்படும் பகுதிகளில் கட்டுமானங்களுக்கு தடை விதிக்கப்படும். அதனால், ஒரு லட்சம் பட்டாதாரர்கள் பாதிக்கப்படுவார்கள்’ என்று ஒரு அப்பட்டமான பொய்யை கட்டுமான நிறுவனங்கள் பரப்பியுள்ளன. அதில் உண்மை இல்லை. மாறாக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் தாக்கப்பகுதிகளை வரையறை செய்து, ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை (Integrated Management Plan - IMP) உருவாக்கி செயல்படுத்தினால் பள்ளிக்கரணையை சுற்றியுள்ள மக்களும், தென் சென்னை மக்களும் மிகப்பெரிய பலன்களை பெறுவார்கள் என்பது தான் உண்மை ஆகும். சதுப்புநிலம் (Wetland) என்பதும், சதுப்புநிலத்தின் தாக்கப்பகுதி (zone of influence) என்பதும் சமமானவை அல்ல. 2017 சதுப்புநில விதிகளை செயல்படுத்தினால், ஏற்கெனவே உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லைக்கு உள்ளே தான் நிரந்தர கட்டுமானங்களுக்கு தடை விதிக்கப்படும். சதுப்புநிலத்துக்கு வெளியே உள்ள தாக்கப்பகுதியில் (zone of influence) அத்தகைய தடைகள் விதிக்கப்படாது என்பதுதான் சட்டமாகும். சதுப்புநிலத்தின் தாக்கப்பகுதியில் நீர் வழிந்தோடும் கால்வாய்களில் தடுப்புகளை ஏற்படுத்தக் கூடாது; கட்டட கழிவுகளையோ குப்பைகளையோ கொட்டக்கூடாது; சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை விடக்கூடாது; ஆபத்தான மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை அமைக்கக் கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் தான் விதிக்கப்படும். மாறாக, நிரந்தரமான கட்டுமானத்தடையோ, தொழில்களுக்கு தடையோ, அல்லது வளர்ச்சிப் பணிகளுக்கான தடையோ விதிக்கப்படாது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இந்திய அரசின் 2017 விதிகளின் கீழ் அறிவிக்கை (Notification) செய்யப்பட்டால் - தென் சென்னை மக்களுக்கு மிகப்பெரிய பலன்கள் கிடக்கும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கு அகற்றப்படும். குப்பைக் கொட்டுவது நிறுத்தப்படும். அங்கு எழும் துர்நாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். பள்ளிக்கரணையில் சுத்திரிகரிக்கப்படாத கழிவுநீரை சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் (CMWSSB) கலப்பது தடை செய்யப்படும். இவற்றால், தென் சென்னையின் சுற்றுச்சூழல் தூயமையானதாக மாறும். பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் தாக்கப்பகுதிகளை அறிவியல்பூர்வமாக வரையறை செய்யும் போது, பள்ளிக்கரணை வடிநிலத்தில் உள்ள நீர்நிலைகள், குளங்கள், கால்வாய்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும். இதனால், தென் சென்னையின் வெள்ள சேதம் பெருமளவு குறைக்கப்படும். தென் சென்னையின் நிலத்தடி நீர்வளம் மேம்படும். கோடை காலங்களின் வெப்ப அலை தாக்கம் குறைக்கப்படும். வலசை பறவைகள் வருகை அதிகமாவதால் பள்ளிக்கரணை இயற்கை எழில்மிக்கதாக மாறும். மொத்தத்தில், பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை இந்திய அரசின் 2017 விதிகளின் கீழ் அறிவிக்கை செய்து, ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தினால், தென் சென்னை மக்களின் வாழ்க்கை சூழல் மிகவும் மேம்பட்டதாக மாறும். ஒட்டுமொத்த சென்னை பகுதியின் சுற்றுச்சூழலிலும் இது நல்ல மாற்றத்தை நிகழ்த்தும். ------------- “தேவையில்லாத வழக்கும், அநீதிக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும்!” பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாப்பதற்கான பணிகளை முடித்துவிட்டுதான் கட்டுமான தடையை நீக்க வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் கூறவில்லை. மாறாக, அதற்கான ஒருங்கிணைந்த மேலாண்மைத் திட்டத்தை (IMP) உருவாக்கும் வரை, சதுப்புநிலத்தை பாதிக்க வாய்ப்புள்ள கட்டுமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் (‘Until the preparation of the IMP is completed, the authorities shall not grant any approvals, sanctions, or permissions that may alter the character of the marshland’) என்றுதான் தென் மண்டலப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதாவது, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை, இந்திய அரசின் 2017 விதிகளின் கீழ் தமிழ்நாடு அரசு எவ்வாறு பாதுகாக்கப் போகிறது என்பதை விளக்கும் வகையிலான ஒரு IMP செயல்திட்டத்தை வெறும் காகிதத்தில் ஒரு அறிக்கையாக அளித்தாலே போதுமானது. இவ்வாறான சூழலில் அந்த IMP திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனுக்குடன் வெளியிட்டு எளிதாக பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க முடியும். கட்டுமான தடையும் விலக்கப்பட்டிருக்கும். பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் மீதமிருக்கும் பகுதிகளையாவது காப்பாற்றவும் வழி பிறந்திருக்கும். இந்த நல்ல வழி இருக்கும் போது, கட்டுமான நிறுவனங்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து கட்டுமானத் தடையை மட்டும் நீக்க கோரியுள்ளன. அதற்கு தமிழ்நாடு அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. ------------- “கேள்விக்குறியாகும் சென்னையின் எதிர்காலம்” வழக்கில் வாதாடும் இரு தரப்பும் சதுப்புநில பாதுகாப்புக்கு எதிரான ஒரே நிலைப்பாட்டை முன்வைத்தால் – நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை எல்லோரும் எளிதாக யூகிக்க முடியும். சென்னையின் உயிர்நாடி பள்ளிக்கரணை சதுப்புநிலம். ஆனாலும், சென்னை மக்கள் இந்த விவகாரத்தில் அக்கறை கொள்ளவில்லை. தமிழ்நாடு அரசும் மக்கள் நலனுக்கு ஆதரவாக நிற்கவில்லை என்பது வருந்தத்தக்க நிலை ஆகும். “படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான்; ஐயோ என்று போவான்” – மகாகவி பாரதியார்! #SavePallikaranaiWetland #Pallikkaranai #MadrasHighCourt
1
38
2
56
6,747
MBC மக்களின் எதிர்ப்பை சமாளிக்க தயாராக இருங்க முதலமைச்சர் @CMOTamilnadu தங்கள் தவெக ஆட்சி அமைந்த ஆறு மாதத்தில் கள்ளக்குறிச்சியில் மட்டும் 71 போலீ பிசிஆர் வழக்கு காரணம் தங்கள் அமைச்சரவையில் இடபெற்றுள்ள விசிக வன்னியரசின் அதிகார துஷ்பிரயோகம் இதற்கு தீர்வு காண்பது தவெகக்கு நல்லது
3
71
5
169
11,869
பாட்டாளி நவீன் குமார் retweeted
தீபாவளி அன்று காவலர் உள்பட 10 பேர் படுகொலை : சட்டம் - ஒழுங்கை காப்பதில் சமரசமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி அவர்கள்..!!
1
16
52
595
நேற்று இரவு திண்டிவனத்தில் வன்னிய இளைஞர் ஒருவரை அறிவாளால் தாக்கிய விசிகாவின் குண்டார்கள் மீதும், அதற்கு உடந்தையாக செயல்பட்ட இரு காவலர்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை வேண்டும் .. @CMOTamilnadu @PoliceTamilnadu @draramadoss
1
12
1
24
307
பாட்டாளி நவீன் குமார் retweeted
மேகதாது அணை கட்ட கர்நாடகத்திற்கு உரிமையும் இல்லை, தகுதியும் இல்லை: உச்சநீதிமன்றத் தீர்ப்பை திரிக்கக் கூடாது! #காவிரிகாப்போம் #மேகதாதுஅணைதடுப்போம் #CauveryKappom #MekedatuAnaiThaduppom #CauveryRights #Tamilnadu @CMOTamilnadu @CMofKarnataka
1
60
143
3,879