Thalapathy❤️💛❤️ retweeted
Kalaypare 😂
பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த த.வெ.க-வின் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை, பல்வேறு தரப்பிலிருந்து ஏற்பட்ட நெருக்கடியால் புகார் கொடுத்து 119 நாட்கள் கழித்து இன்று கைது செய்திருக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு.
முதலில் இந்த சம்பவம் நடக்கவேயில்லை என்று பொய் சொன்னார்கள். பிறகு புகார் வரவில்லை என்று புளுகினார்கள். எம்.எல்.ஏ பாவம் என்று வாடகை வாய்கள் மூலம் இஷ்டத்திற்கு அடித்து விட்டார்கள்.
விஷயம் பெரிதாகி நாடே இந்த ஆட்சியை காரி துப்பிய பிறகும், கூச்சமே இல்லாமல், Victim-ற்கு எதிராக Online Abusers ஆபாச சேற்றை வாரி இறைத்தார்கள்.
இத்தனைக்கும் பிறகு, பாதிக்கப்பட்ட அதிகாரியின் மன உறுதி - எதிர்க்கட்சிகளின் போராட்டங்கள் – நீதிமன்றத்தின் தொடர் குட்டு ஆகியவற்றால் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இத்துடன் எதுவும் முடிந்துவிடவில்லை. பாதிக்கப்பட்ட அதிகாரி அளித்த புகாரை தலைமைச் செயலாளர் மறைத்தாரா? முதலமைச்சரிடம் தெரிவித்தாரா?
உளவுத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் டம்மி முதல்வரை மட்டும் தான் உளவு பார்க்கிறார்களா?
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சங்கி அமைச்சர் ஏன் பொய் சொன்னார்?
இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல் இந்த டம்மி முதலமைச்சரும் - அவரின் சர்க்கஸ் அரசும் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
Thalapathy❤️💛❤️ retweeted
தீபம் ஏத்த விடாதப்ப வாழபழத்தை வாய்ல வச்ச மாதிரி பேசாம இருந்திட்டு இப்ப மட்டும் கத்துதா இந்த பல்லி..
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.
’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு.
திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு.
இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு.
அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர்.
முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை.
அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது.
இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்.
நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
Thalapathy❤️💛❤️ retweeted
Limitation இல்லாத Double stand on Delimitation
அரசியல் மூர்த்தியின்
பூனை மேல் மதில் நிலைப்பாடு
Thalapathy❤️💛❤️ retweeted
- Shathiga & Mukesh irukkumbothu, full backbiting about TTF, Dhanya & LP.
- TTF ku against ah red card planning.
- Dhanya kitte flirt panran Prithivi friend nu vayiru erinjathu.
Ithellam nadakave ille. Namakellam jamaivu 🤡
#BiggBossTamil10
Thalapathy❤️💛❤️ retweeted
Aiyyaaaa BB! Nethu #TTFVasan𓃵 family kitta pesumbodhu unga voice-la appadi oru verappu! 🥵🥵🥵
Ungala oruthan seruppa kalatti, unga veettu adi, enga veettu adi illaama ulaga maga adi adichirukkaan! 🤣🤣🤣
Aana innikku enna BB, voice romba menmaiya irukkey! 🤭🤭🤭
@vijaytelevision @JioHotstarTamil @VijaySethuOffl
#BiggBossTamil10 #BiggBossTamil
Thalapathy❤️💛❤️ retweeted
சமீப காலமாக, துயில் எழுந்து காமெடியாகக் கதறி, பெண்களின் பாதுகாவலனே தான்தான்(?) என்பதுபோல ரீல் விட்டுக்கொண்டு சுற்றி வருகிறார் ரீபோஸ்ட்நிதி.
Who are you என்று பவரில் இருந்தபோது பஞ்ச் டயலாக் பேசிவிட்டு, இப்போது பஞ்சரானதும், பம்மிப் பதுங்கி, மண்ணோடு மண்ணாகத் தவழ்ந்து சென்று மனுகொடுத்து மன்றாடியும் வருகிறார். மண்டையை ஆட்டி ஆட்டிப் பேட்டிக் கொடுத்தும் பீலாவிட்டுப் பிதற்றி வருகிறார். மக்கள் அவருடைய பேட்டியை ‘நாங்கள் சினிமா செய்திகளே பார்ப்பதில்லை’ என்ற ரீதியில் சுண்டுவிரலால் டச் ஸ்க்ரீனில் தள்ளிவிட்டுத் தவிர்த்து வருகின்றனர்.
டம்மி வாரிசான டகால்ட்டிநிதியின் ‘பெண்கள் பாதுகாவலன் வேடம்’ தாறுமாறாகக் கிழியும் வகையில் திமுக எம்.எல்.ஏ. ஒருவரே செயல்பட்டு உள்ளார். அந்த எம்.எல்.ஏ. வேறு யாருமல்ல. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. திரு.வசந்தம் கார்த்திகேயனே. அதாவது, பெண்கள் முன்னிலையிலேயே ஆபாசமாகப் பேசி அலறவிடும் டம்மி டாடியின் ஆபாசக் கொள்கைப் படையில் அணிவகுப்பவர் என்று சொன்னால், அவர் யாரென்று இன்னும் ஆழமாகப் புரியும்.
தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் பெண் அதிகாரி திருமிகு. அ.லலிதா அவர்களை வசந்தம் கார்த்திகேயன் தகாத வார்த்தைகளில் மரியாதைக் குறைவாகப் பேசி இருக்கிறார்.‘தான் யார் என்று தெரியுமா?’ என்று கேட்டுத் தன் அதிகாரத் திமிரைக் காட்டி மிரட்டி இருக்கிறார். இது குறித்து, அந்தப் பெண் அதிகாரி கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமும் புகார் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, புகாரின் அடிப்படையில், அதிகாரத் திமிரோடு பெண் அதிகாரியை மிரட்டிய தி.மு.க. எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீது தியாகதுருக்கம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் திருமிகு.லலிதா அவர்களும் பெண் அதிகாரிதான் என்பது, பெண்களுக்காக வாதாடுவதுபோல வேடம் போடும் வக்கற்ற வாரிசான வக்கிரநிதிக்குத் தெரியும்தானே?. பெண் அதிகாரி ஒருவரை, திமுகவின் ரத்தத்தில் ஊறிப்போன பண்ணையார்த்தன அதிகாரத் திமிருடன், தகாத முறையில் பேசி மிரட்டித் துன்புறுத்தியதற்காகத் தங்கள் எம்.எல்.ஏ.வை உச்சிமேல் வைத்து மெச்சப் போகிறாரா இந்த ஒப்பாரிநிதி?.
வகையற்ற வாரிசான உதறல்நிதி இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?. துப்புக்கெட்ட வாரிசான டுமீல்நிதி இதுபற்றித் துப்பறியுமாறு எந்தத் தபால்காரரைப் பார்க்க, தன் அடிப்பொடிகள் அணிவகுக்கத் தரையில் உருண்டு போகப் போகிறார் இந்தப் புலம்பல்நிதி?.
மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் இந்த எடுபடாத வாரிசான இயலாமைநிதி, பெண் அதிகாரி ஒருவரைத் துன்புறுத்தியதற்காக தங்கள் கட்சி எம்.எல்.ஏ.வைத் தாமாக முன்வந்து அழைத்துக்கொண்டுபோய் நீதிமன்றத்தில் நிறுத்துவாரா?. இல்லையெனில், துப்பட்டாவைத் தலையில் கட்டிக்கொண்டுத் தும்மி விட்டு, அடுத்தவர் மீது அவதூறு பரப்பி, தங்கள் எம்.எல்.ஏ.வை ‘என் அன்பிற்கினிய அதிகாரத் துஷ்பிரயோகத் திலகம் வாழ்க’ என்று போற்றிப் புகழப் போகிறாரா?. அல்லது வழக்கம்போல தி.மு.க. என்றாலே வக்கிரமும் வன்மமும் நிறைந்த ஆபாசக் கூட்டம்தான் என்று எண்ணி மகிழ்ந்து, குப்புறப்படுத்துக் கொண்டு கும்பகர்ணத் தூக்கத்தை தொடரப் போகிறாரா?.
என்னதான் செய்யப் போகிறார் இந்த எடுபடாதநிதி?. வழக்கம்போல முன்பே தயார் செய்த கேள்வி-பதில் நாடகத்தை நடத்திவிட்டு, அந்நாடகத்தையும் தொடர முடியாமல் மரத்தின் பின்னால் சென்று மறைந்துகொள்ளப் போகிறாரா இந்த மழுப்பல்நிதி?.
எது எப்படி இருந்தாலும், பெண்களைத் துச்சமாக மதிப்பதுதான் திமுகவின் மரபணு என்பதை மக்கள் மனதில் இருந்து அகற்றவே இயலாது. இதை வக்கற்ற, வகையற்ற, துப்புக்கெட்ட, தூங்குமூஞ்சியான டம்மி வாரிசு டப்பாநிதி டபராசெட்நிதி உணர்ந்தால் சரி.
Thalapathy❤️💛❤️ retweeted
Full picture podunga bro🙏🏻 @dmk_youthwing
Thalapathy❤️💛❤️ retweeted
A case has been registered against a DMK MLA for harassing and threatening a woman government officer.
Thalapathy❤️💛❤️ retweeted
திருவள்ளூர் மாவட்டம், வாணியஞ்சத்திரம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேலன், வீரேந்தர், ஆல்பர்ட் ஆகிய மூவர் மின்சாரக் கம்பி உரசியதில் வேலன், வீரேந்தர் ஆகிய இருவர் உயிரிழந்தனர். ஆல்பர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒருசிலரது இருப்பை காட்டுவதற்காக விலைமதிக்க முடியாத இரண்டு உயிரைகளை இழந்துள்ளோம்.
உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
Thalapathy❤️💛❤️ retweeted
உங்கள் மகிழ்ச்சிக்காக இரண்டு குடும்பங்கள் சோகத்தில் மூழ்க வேண்டுமா?.ஆபாசநிதி”
வாணியஞ்சத்திரத்தில் உங்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகப் பேனர் அமைக்கும்போது இரண்டு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். இன்னொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த இரண்டு குடும்பங்களின் கதறல் உங்கள் காதுகளுக்குக் கேட்கவில்லையா? இரண்டு குடும்பங்களின் வீட்டில் மரண ஓலம்.
உங்கள் பிறந்தநாள் பேனருக்காக இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன. ஒரு குடும்பத்தின் எதிர்காலமே இருண்டுவிட்டது.
கொண்டாட்டத்தை விட மனித உயிர் பெரிது. இந்த மரணங்களுக்கு யார் பொறுப்பேற்பார்கள்?
RT @sansbarrier: உதவாநிதி பொறந்த நாள் பேனர் கட்டப்போன இரண்டு பேர் மின்சாரம் பாய்ந்து மரணம் , ஏன்டா கொத்தடிமைகளா , அவன் பொறந்த நாள் கொண்டாட…
Thalapathy❤️💛❤️ retweeted
திருப்பரங்குன்றம் பிரச்சனைய அரநொடியில் முடித்திருப்பேன் - சீமான்..
விஜய்லட்சுமி:- நான் கொடுத்த கேஸயே முடிக்க முடியாம மண்ணிப்பு கேட்டு காலுல விழுந்தான் இவன் அரநொடியில முடிக்க போறானாம்..























