
MLA-Kamaraj Nagar,Puducherry President-Latchiya Jananayaka Katchi @ljk_puducherry|@ljktamilnadu_ Let’s build a glorious TN & Puducherry!
Chennai
Joined July 2009
- Tweets5K
- Following842
- Followers5.6K
- Likes417
சென்னை - மாதவரத்தில் லட்சிய ஜனநாயக கட்சியின் மனித உரிமைகள் அணியின் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டேன். வழிநெடுகிலும் வாகனத்தில் தொண்டர்கள் புடை சூழ, தாரை தப்பட்டை முழங்க, பட்டாசுகளை வெடித்து பிரமாண்ட வரவேற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் LJK தமிழ்நாடு பொதுச்செயலாளர் திரு.நெல்லை ஜீவா அவர்கள், மனித உரிமைகள் அணியின் மாநிலச்செயலாளர் டாக்டர் ஆர்.ராஜ்குமார் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
#jcm #ljk #tamilnadu #humanrights #publicwelfare
சென்னையை அடுத்த ஆவடி பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி பிரதிக்ஷா, தவறான சிகிச்சை காரணமாக வலது கால் பாதம் இழந்து வேதனைப்படுவதாக, அவரது தந்தை கோதண்டபாணி சமூக வலைத்தளங்களில் உருக்கமாக உதவி கோரியிருந்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செயற்கைக் கால் பாதம் பொருத்துவதற்கு, மார்டின் அறக்கட்டளை சார்பில் ரூபாய். 2 லட்சத்திற்கான காசோலையை நேரில் அழைத்து வழங்கினேன். மாணவி இப்பிரச்னையில் இருந்து மீண்டு கல்வியைத் தொடர்ந்து, வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
#jcm #ljk #puducherry #martinfoundation #supportstudents
மக்களின் குரலாக ஓராண்டாக பிரதிபலித்து வரும் SS செய்தி நிறுவனத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியில் நடைபெற்றது. இதில் எனது மனைவி திருமதி. சிந்துஸ்ரீ அவர்களுடன் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தேன்.
SS NEWS தனது ஓராண்டு நிறைவை எட்டி, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் கொண்டாடும் விதமாக, செய்தி நிறுவனத்தின் குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி மகிழ்ந்தேன்.
இந்நிகழ்வில், எனது பாசமிகு தாயார் டாக்டர் லீமா ரோஸ் மார்டின் MLA, எனது மாமனார் திரு. கமலக்கண்ணன் மற்றும் SS NEWS குழுவினர் கலந்துகொண்டனர்.
#jcm #ljk #tamilnadu #ssnews #mediainauguration
புதுச்சேரியின் தாழ்வான நிலப்பகுதியான காமராஜ் நகர் தொகுதியில், மழைநீர் தேங்கிய அண்ணாமலை நகர், சுதந்திரப்பொன் விழா நகர், மொட்டைத்தோப்பு, ஆர்.வி.நகர், பிருந்தாவனம் வாய்க்கால், சித்தன்குடி வாய்க்கால், ரெயின்போ நகர், உப்பனாறு கால்வாய், ECR சாலை பம்ப் ஹவுஸ், ஆரெஞ்சு ஹோட்டல் பின்புறம் மற்றும் கிருஷ்ணா நகர் 12-வது தெரு நீட்டிப்புப் பகுதிகளில் இன்று இருசக்கர வாகனத்தில் சென்று ஆய்வுசெய்தேன். உடன் நிர்வாகப் பொதுச்செயலாளர் திரு.ராம் குமார், பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திரு. பிரபாகரன், தொகுதித்தலைவர் திரு.கோகுல கண்ணன்; தொகுதி செயலாளர் திரு.சுரேஷ் மற்றும் LJK வார்டு தலைவர்கள், பூத் தலைவர்கள் உடன் இருந்தனர்.
#jcm #ljk #puducherry #GroundInspection #floodprevention
புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் திரு. குலோத்துங்கன் அவர்களிடம் 5 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளேன். அதில், மழைநீர் வடிகால் பாதையை ஆக்கிரமித்துள்ள 14 ஆக்கிரமிப்பாளர்களை அகற்றவும்; கிருஷ்ணா நகர் ECR பகுதியில் விடுபட்டுள்ள கால்வாய் கட்டுமானத்தை நிறைவேற்றவும்; முக்கியச்சந்திப்புகளில் யூடர்ன் முறையை அமைக்கவும்; சாரம் பள்ளி அருகே போக்குவரத்துக் காவலர்களை நியமிக்கவும்; கனமழையால் பாதிக்கப்பட்ட ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், கிருஷ்ணா நகர், கவிக்குயில் நகர் போன்ற தாழ்வான பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் வெள்ளப்பெருக்கைத் தடுக்கக்கோரியும் அவசர கால நிவாரணப்பொருட்களை வழங்கக்கோரியும் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினேன். உடன் LJK நிர்வாகப்பொதுச்செயலாளர் திரு.ராம் குமார், பொதுச்செயலாளர் டாக்டர் திரு. துரைசாமி மற்றும் LJK முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.
#jcm #ljk #puducherry #publicsafety #PublicSafety #DistrictCollector
புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியில் டி-மார்ட் (DMart) கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு குறித்து, நான் மாவட்ட ஆட்சியர் திரு.குலோத்துங்கனிடம் ஆலோசனை நடத்தினேன். கட்டுமானப் பணிகளின்போது அப்பகுதி மக்களுக்கு எந்தவித இடையூறோ, பாதிப்போ ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.மேலும், அப்பகுதியைச் சேர்ந்த தொழில்நுட்ப அறிவு கொண்ட குடியிருப்பாளர் ஒருவரை இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வைத்து கட்டுமானப் பணியில் ஏற்படக்கூடிய தொழில்நுட்பக் குறைபாடுகள் மற்றும் கவலைக்குரிய அம்சங்களைச் சுட்டிக்காட்டினோம். அவரும் பரிசீலிப்பதாக உறுதி கூறியிருக்கிறார். உடன் LJK நிர்வாகப்பொதுச்செயலாளர் திரு.ராம் குமார், பொதுச்செயலாளர் டாக்டர் திரு. துரைசாமி மற்றும் LJK முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.
#jcm #ljk #puducherry #publicsafety #communitywelfare #DistrictCollector
புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியில், வரும் காலங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக, எனது சொந்த செலவில் Stone Hands Consultancy என்னும் வெள்ளத்தடுப்பு மற்றும் நிலத்தடி நீர் மேலாண்மை நிறுவனத்தினரை வரவழைத்து, மூன்று கட்டங்களாக சர்வே செய்யப்பட்டது. அதுதொடர்பாக துறைசார் வல்லுநர்களுடன் கலந்துரையாடல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் Stone Hands நிறுவனத்தின் மேலாளர் முனைவர் திரு.சக்திவேல் மற்றும் குழுவினர், LJK பொதுச்செயலாளர்களான டாக்டர் துரைசாமி, வழக்கறிஞர் பிரபாகரன் மற்றும் காமராஜ் நகர் தொகுதியின் குடியிருப்புவாசிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
#jcm #ljk #puducherry #floodprevention #watermanagement
புதுச்சேரியின் தாழ்வான நிலப்பகுதியான காமராஜ் நகர் தொகுதியில், மழைநீர் தேங்கிய ECR சாலை பம்ப் ஹவுஸ், ஆரெஞ்சு ஹோட்டல் பின்புறம் மற்றும் கிருஷ்ணா நகர் 12-வது தெரு நீட்டிப்புப் பகுதிகளில் ஆய்வுசெய்தேன். அடுத்த முறை நீர் தேங்காமல் இருக்க செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளைக் கேட்டறிந்தேன். உடன் நிர்வாகப் பொதுச்செயலாளர் திரு.ராம் குமார், பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திரு. பிரபாகரன், தொகுதித்தலைவர் திரு.கோகுல கண்ணன்; தொகுதி செயலாளர் திரு.சுரேஷ் மற்றும் LJK வார்டு தலைவர்கள், பூத் தலைவர்கள் உடன் இருந்தனர்.
#jcm #ljk #puducherry #GroundInspection #floodprevention
புதுச்சேரியின் தாழ்வான பகுதியான காமராஜ் நகர் தொகுதிக்கு, மழைநீரை அதிகம் கொண்டு வந்து சேதத்தை உண்டாக்கும் உப்பனாறு கால்வாய் பகுதிகளை ஆய்வுசெய்தேன். உடன் நிர்வாகப் பொதுச்செயலாளர் திரு.ராம் குமார், பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திரு. பிரபாகரன், தொகுதித்தலைவர் திரு.கோகுல கண்ணன்; தொகுதி செயலாளர் திரு.சுரேஷ் மற்றும் LJK வார்டு தலைவர்கள், பூத் தலைவர்கள் உடன் இருந்தனர்.
#jcm #ljk #puducherry #GroundInspection #floodprevention
புதுச்சேரியின் தாழ்வான பகுதியான காமராஜ் நகர் தொகுதியில், ரெயின்போ நகர் பகுதிகளில் மழைநீர் புகுந்த வீடுகளுக்குள் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தேன். இதைத்தடுக்க அவர்கள் வழங்கிய ஆலோசனைகளையும் கேட்டுக்கொண்டேன். உடன் நிர்வாகப் பொதுச்செயலாளர் திரு.ராம் குமார், பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திரு. பிரபாகரன், தொகுதித்தலைவர் திரு.கோகுல கண்ணன்; தொகுதி செயலாளர் திரு.சுரேஷ் மற்றும் LJK வார்டு தலைவர்கள், பூத் தலைவர்கள் உடன் இருந்தனர்.
#jcm #ljk #puducherry #GroundInspection #WaterloggingPrevention
புதுச்சேரியின் தாழ்வான பகுதியான காமராஜ் நகர் தொகுதியில், பிருந்தாவனம் வாய்க்கால், சித்தன்குடி வாய்க்கால் பகுதிகளை இரு சக்கர வாகனத்தில் சென்று ஆய்வுசெய்தேன். மழைக்கு முன்னர், கிட்டத்தட்ட 60 டன்னுக்கும் அதிகமான அளவிலான மண் இந்த வாய்க்கால்களில் இருந்து, தூர்வாரப்பட்டு அப்புறப்படுத்தியும், ஒவ்வொரு மழைக்காலங்களிலும் கூடுதலான நீர் எங்கிருந்து வருகிறது என அப்பகுதியினரிடம் உரையாடி கள ஆய்வு செய்தேன். அதைத்தடுக்க அவர்கள் வழங்கிய ஆலோசனைகளையும் கேட்டுக்கொண்டேன். உடன் நிர்வாகப் பொதுச்செயலாளர் திரு.ராம் குமார், பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திரு. பிரபாகரன், தொகுதித்தலைவர் திரு.கோகுல கண்ணன்; தொகுதி செயலாளர் திரு.சுரேஷ் மற்றும் LJK வார்டு தலைவர்கள், பூத் தலைவர்கள் உடன் இருந்தனர்.
#jcm #ljk #puducherry #GroundInspection #WaterloggingPrevention
புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியில் D-Mart கட்டப்படும் இடத்தில் நிரம்பி இருந்த நீரும், அண்ணாமலை நகர் மற்றும் சுதந்திரப்பொன்விழா நகரில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் புகுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். அதனடிப்படையில், D-Mart கட்டும் இடத்தை ஆய்வுசெய்து, கட்டுமானப்பகுதியில் உபயோகப்படுத்தப்படும் நீர் வெளியில் செல்லக்கூடாது என அறிவுறுத்தினேன். மேலும், இருசக்கர வாகனத்தில் சென்று மொட்டைத்தோப்பு, ஆர்வி நகர் பகுதியில் ஆய்வு செய்தேன். உடன் நிர்வாகப் பொதுச்செயலாளர் திரு.ராம் குமார், பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திரு. பிரபாகரன், தொகுதித்தலைவர் திரு.கோகுல கண்ணன்; தொகுதி செயலாளர் சுரேஷ் மற்றும் LJK வார்டு தலைவர்கள், பூத் தலைவர்கள் உடன் இருந்தனர்.
#jcm #ljk #puducherry #drainageissues #GroundInspection























































