
எல்லாருக்கும் வாழ வழியுண்டு. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை 🥰🥰🥰🥰 #ஒன்றியஉயிரினங்கள் #Love_for_all #Hatred_for_none #humanity_first
Joined June 2021
- Tweets35.4K
- Following13.4K
- Followers17.4K
- Likes13K
தட்டான் பூச்சி retweeted
துணை சபாநாயகர் மீதான புகாரை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும்!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது மனுவில் கோரியுள்ளவை:
✅ துணை சபாநாயகர் மீதான புகாரை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும்
✅ வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்
✅ புகார் அளித்த பெண் அதிகாரிக்குப் பாதுகாப்பும், பணியிடப் பாலியல் தொல்லை தடுப்புச் சட்ட (POSH) விதிகளின்படி நடவடிக்கையும் உறுதி செய்யப்பட வேண்டும்
✅ இதைத் "தனிப்பட்ட விவகாரம்" என அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்தது கண்டிக்கத்தக்கது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
⚖️ நியாயமான, சுதந்திரமான விசாரணையே நீதிக்கான முதல் படி!
#உதயநிதிஸ்டாலின் #முரசொலி #நீதிவேண்டும் #CBCID #CBI #பெண்கள்பாதுகாப்பு
#Dravida_Senai
நான் பார்த்த மரண பிரஸ் மீட் இதுவா தான் இருக்கும் 😂😂
நீ என்ன ஒழுங்கான்னு திருப்பி கேட்டா 🔥🔥🔥🔥🔥
இது மாறி பிரஸ் மீட் சந்திக்க விஜய்க்கு தைரியம் இருக்கா?
20 வயசுல ஒருத்தன் வெளிநாடு வந்தான். நல்லா சம்பாரிக்க கத்துக்கிட்டான்.
தேவைக்கு மேல சொத்தும் சேர்த்துட்டான்.
அப்புறமும் பணம் பணம்னு கிடந்தான்.
இன்னைக்கு அவன் பாடி தான் ஊர் போய் சேர போகுது 😓😓
வயசு 45 தான் ஆகுது
மனைவி பிள்ளைகளை விட்டுட்டு நீண்ட வருடம் வாழ்ந்து என்ன பிரயோசம்?
🤧
தட்டான் பூச்சி retweeted
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா?
தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?
போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா?
கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும்.
மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்.
'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.
நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
#TVKFails #Arrest_ArulVignesh
தட்டான் பூச்சி retweeted
தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் பெயருக்குக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்துவிட்டு, ஜோசியக்காரரை உண்மையான கொள்கைத் தலைவராகக் கொண்டு செயல்படுகிறது ஆளும் த.வெ.க.!
“ஆறு மாசம், எல்லாமே நாசம்” எனத் தமிழ்நாட்டைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கும் த.வெ.க., அரசியல் பிணி மட்டுமல்ல; அதுவொரு சமூகப் பிணி!
எனவே,
“தமிழா! விழிப்புணர்வு கொள்!”
“தமிழா! இனஉணர்வு கொள்!”
“மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!”
என்ற தந்தை பெரியாரின் முழக்கங்களை மீண்டும் மக்களிடம் எடுத்துச் செல்வது காலத்தின் கட்டாயத் தேவை!
@tpdk2020 @kuratpdk
சில பொருட்களின் விலை குறைவாக இருக்கும். அதுவும் பழைய பொருளாக இருக்கும்.
யாரிடம் பெறப்பட்டது என்பதிலேயே அதன் மதிப்பு கூடி இருக்கும்!!!
பிரஸ் மீடியாவை இப்படி ஹேண்டில் பண்ணுறதை பார்க்கிறப்ப ரொம்ப ஆனந்தமா இருக்கு 😂
ஏன்னா இவனுங்க தான் பிரஸ் மீடியா பேர்ல என்ன வேலை பார்த்தாங்னு எல்லாத்துக்கும் தெரியுமே 🤣😂🤣😂🤣😂
தட்டான் பூச்சி retweeted
இப்போதெல்லாம் என்னென்னவோ வித்தியாசமான செய்திகளைக் கடந்து போக வேண்டியிருக்கிறது!
சில மாதங்களுக்கு முன்பு, சென்னையில் (ரெட் ஹில்ஸ் சாலை) நடுரோட்டில் போதையில் இருந்ததாகக் கூறப்பட்ட இரண்டு சிறுமிகள், அங்கிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்ட வீடியோ ஒன்று வைரலானது ஞாபகம் இருக்கிறதா? அந்த வீடியோ இன்றுவரை சமூக வலைதளங்களில் ஒரு Troll Material ஆகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தச் செய்தியைக்கூட சுலபமாகக் கடந்துவிடலாம். ஆனால், அந்தச் சிறுமி தொடர்பாக இப்போது வெளியாகியிருக்கும் செய்திதான் தலைசுற்ற வைக்கிறது...
இந்தச் சம்பவத்தில் இரண்டு விதமான மோசடிகள் அரங்கேறியுள்ளது..
முதல் சம்பவம்:
40 வயதான சுரேஷ் கண்ணன் என்பவர், தனது வயதை மறைத்து, புகைப்படத்தை எடிட் செய்து, 25 வயது இளைஞராகத் தன்னைத் திருமணத் தகவல் இணையதளத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அதன் மூலம் நெய்வேலியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இரு வீட்டாரும் திருமணம் குறித்துப் பேசும் அளவுக்கு விஷயம் சென்றிருக்கிறது. நிச்சயதார்த்தத்துக்குப் புடவை எடுக்க அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்குக்கு ஒரு லட்சம் ரூபாயைக்கூட அனுப்பியிருக்கிறார்.
ஒருகட்டத்தில், மாப்பிள்ளையை நேரில் பார்க்க வேண்டும் என்று அந்தப் பெண் சொல்லியிருக்கிறார். நேரில் வந்தவரைப் பார்த்த பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டிருப்பது அந்தப் பெண்ணுக்குத் தெரியவந்திருக்கிறது.
திருமணத்தை நிறுத்தியதோடு, அந்த ஒரு லட்சம் ரூபாயையும் பெண் வீட்டார் திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள்.
ஆனால், அந்தப் பெண்ணை விடாமல் தொடர்ந்து தொல்லை கொடுத்திருக்கிறார் சுரேஷ் கண்ணன். தனது அக்காவுக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்தும்படியும், இல்லையென்றால் போலீஸில் புகார் கொடுப்பதாகவும் எச்சரித்திருக்கிறார் அவரது தம்பி ஸ்ரீராம்.
இரண்டாவது சம்பவம்:
இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் கண்ணன், அந்தப் பெண்ணைப் பழிவாங்குவதற்காக அவரது தம்பியை(ஶ்ரீராம்) போக்சோ வழக்கில் சிக்க வைக்கத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
அதுவும் ஒரு காவலரின் உதவியோடு!
இதற்காக 17 வயது சிறுமி (நடுரோட்டில் போதையில் தகராறு செய்து வைரலான அந்த சிறுமி தான் அது) ஒருவரிடம் ரூ.6 லட்சம் தருவதாகப் பேரம் பேசியிருக்கிறார்கள். இன்ஸ்டாகிராம் மூலமாக ஸ்ரீராமிடம் அறிமுகமாகி, மூன்று மாதங்கள் பழகிய அந்தச் சிறுமி, கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி சென்னையில் உள்ள ஒரு மாலுக்கு அவரை வரவழைத்திருக்கிறார்.
பின்னர், ஸ்ரீராம் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அவர் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்காகக் காவல்துறையினருக்கு ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
ஆனால், ஸ்ரீராமைக் கைது செய்வதற்கு முன்பாக, அந்தச் சிறுமி சாலையில் போதையில் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வீடியோ வைரலாகியிருக்கிறது. இதையடுத்து, அவரைக் கைது செய்யும் நடவடிக்கையை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் போலீஸார்.
இப்போது திருமண மோசடி வழக்கில் சுரேஷ் கண்ணனைக் கைது செய்து விசாரித்தபோதுதான் இந்தச் சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இதையடுத்து, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, காவலர் வசந்தராஜா ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்...
அன்று அந்த வீடியோ வெளியாகாமல் இருந்திருந்தால்? இந்தச் சதித்திட்டம் வெளிச்சத்துக்கு வராமல் போயிருந்தால்? எந்தத் தவறும் செய்யாத இளைஞர், போக்சோ வழக்கில் இன்று சிறையில் இருந்திருக்கக்கூடும் அல்லவா?
குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒரு சட்டத்தை, தனிப்பட்ட பழிவாங்கலுக்காகப் பயன்படுத்த முயன்றிருக்கிறார்கள். அதற்காக ஒரு 17 வயது சிறுமியையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்தச் சதிக்கு காவல்துறையினரே உடந்தையாக இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இந்த மாதிரியெல்லாம் நடக்குமா? பணம் கொடுத்தால் ஒருவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அழித்துவிட முடியுமா?
நியாயம் கிடைக்கும் என்று நம்பி யாரிடம் போகிறோமோ, அவர்களே பணத்துக்காக அநியாயத்துக்குத் துணைபோனால், பிறகு யாரைத்தான் நம்புவது?
தட்டான் பூச்சி retweeted
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
நான் வச்சிருக்கிற ஒரு டுபாக்கர் mobile லையே இப்படி எடுக்க முடியுதுன்னா
சீக்கிரம் ஒரு நல்ல mobile வாங்கனும்!!
Good morning friends 💐💐
தட்டான் பூச்சி retweeted
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு?
உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?
இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது.
மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது?
இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்?
#DravidianModel அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே!
@TOIChennai
Delay in disbursal of scholarship funds by TN govt leaves SC/ST students struggling abroad
timesofindia.indiatimes.com/…
Download the TOI app now:
timesofindia.sng.link/Cqhd4/…
தட்டான் பூச்சி retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்?
கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ?
Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை.
ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார்.
ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?
மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
தட்டான் பூச்சி retweeted
"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள்.
முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்?
பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் 'Strict officer' செய்தது என்ன?
இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.
இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை!
Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை!
#TVKfails












