உலகத்தமிழர் பதிப்பகம் (@ulagapathippu) header
உலகத்தமிழர் பதிப்பகம் (@ulagapathippu) profile picture

தமிழ், தமிழர், தமிழீழ வரலாறு பதிப்பித்தல் மற்றும் பரப்புரை

worldwide
Joined July 2026
Photo by உலகத்தமிழர் பதிப்பகம் (@ulagapathippu)Photo by உலகத்தமிழர் பதிப்பகம் (@ulagapathippu)Photo by உலகத்தமிழர் பதிப்பகம் (@ulagapathippu)Photo by உலகத்தமிழர் பதிப்பகம் (@ulagapathippu)Photo by உலகத்தமிழர் பதிப்பகம் (@ulagapathippu)Photo by உலகத்தமிழர் பதிப்பகம் (@ulagapathippu)Photo by உலகத்தமிழர் பதிப்பகம் (@ulagapathippu)Photo by உலகத்தமிழர் பதிப்பகம் (@ulagapathippu)Photo by உலகத்தமிழர் பதிப்பகம் (@ulagapathippu)Photo by உலகத்தமிழர் பதிப்பகம் (@ulagapathippu)
"புலிப்பண்பாடு" சிறப்பு நூல் வெளியீடு
அன்பு உறவுகளுக்கு வணக்கம். தமிழர் சேனையான தவிபு களின் 50 வது ஆண்டு (பொன்விழா) நிகழ்வும், "புலிப்பண்பாடு" சிறப்பு நூல் வெளியீடும் 22.11.2026 அன்று யேர்மனியின் Soest நகரில் நடைபெற்றதாக அறிந்தேன். இதே Soest நகரில் தான் 2020 ஆம் ஆண்டு, தேசியத்தலைவரைத் தத்துவப்படுத்திய "பிரபாகரன் சட்டகம்" வெளியிடப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது அதே நகரத்தில், அதே மண்டபத்தில் புலிப்பண்பாடு நூலும் வெளியிடப்பட்டது. உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பு நடாத்தும் வெளியீட்டு நிகழ்வுகள் எப்போதும் மறுக்கவியலாத இனிய நிகழ்வாக அமைந்திருப்பது வழமையென எமது உறவுகள் கூறுவதுண்டு. அவ்வாறே Soest நகரில் நடைபெற்ற நிகழ்வும் அமைந்திருந்ததாக அறிகிறேன். நூல்வெளியீடு மற்றும் நிகழ்வு என்பதற்கு அப்பால், Soest மக்கள் உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பிற்குத் தருகின்ற ஒத்துழைப்பும் உதவிகளும் எண்ணிலடங்காதவை என்பதை ஏற்கனவே அறிந்திருக்கிறோம் . எங்களது எந்த நிகழ்விலும், நாம் ஒருபோதும் சிற்றுண்டிச்சாலை என்ற பெயரில் உணவு, தேநீர் என்பவற்றை எமது உறவுகளுக்கு விற்பனை செய்வதில்லை. நிகழ்விற்கு வருகின்ற உறவுகளை உபசரித்தே அனுப்பிவைப்பது வழமை. இம்முறை Soest வாழ் தமிழீழ மக்களின் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒவ்வொரு சிற்றுண்டி மற்றும் ஏனைய உணவுகளையும் அவர்களே அணியப்படுத்தி, நிகழ்வுக்கு வந்த உறவுகளுக்கு வழங்கியிருந்ததை எண்ணி மிகவும் பெருமையுற்றோம். பலவகையான உணவுப்பொருட்களை தயாரித்து எடுத்துவந்து மட்டுமன்றி, நிகழ்வுக்கு வந்திருந்த உறவுகள் அமர்ந்திருந்த இடத்திற்கே அவற்றை எடுத்துச்சென்று பரிமாறும் சேவையையும் செய்து , நிகழ்விற்கு முதல் நாட்தொடங்கி மண்டப ஒழுங்கு, சோடனைகள், உட்பட மேடை நிகழ்வுகளையும் ஒழுங்குசெய்து பேருதவி ஆற்றியிருந்தனர். குடும்பம் குடும்பமாக இணைந்து, நிகழ்வின் இறுதிவரை Soest உறவுகள் ஆற்றிய உதவியை என்றென்றும் நன்றியுடன் நினைவிற்கொள்கிறோம். இவை அனைத்திற்கும் பொறுப்பாக நின்று, நிகழ்வுகளை ஒழுங்குசெய்து , அனைத்தையும் ஒவ்வொன்றாகவும் மிக நேர்த்தியாகவும் ஒருங்கிணைத்த பாபு அண்ணையின் பணி மிகப்பெரிது. 2009 வரை தாயக விடுதலைக்காக அவர் ஆற்றிய பணிகளோடு ஒப்பிடுகையில் இது எள்ளளவே என்றாலும், உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் முன்னின்று உழைக்கும் அவருக்கும், அவரோடு தோள்நின்று உழைக்கும் soest மக்களுக்கும் நாம் நன்றி கூறி அந்நியப்படுத்தி விரும்பவில்லை . உலகத்தமிழர் உரிமைக்குரல் என்ற குடும்பத்தின் இனிய உறவுகளாக நீடித்திருக்கவே வேண்டுகிறோம். எமது அமைப்பு உருவாகிய மிகவும் குறுகிய காலப்பகுதிக்குள், நாம் எமது செயற்பாட்டு இலக்குகளை வெகுவாக எட்டுவதற்கு, இவர்களைப்போன்ற உறவுகளே முதற்காரணம் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறோம். எமது அமைப்பின் யேர்மனிய செயற்பாட்டாளர்களுடன் நல்லுறவைப் பேணி, மென்மேலும் எம்மோடு தோள்நின்று பயணிக்க வேண்டுகிறேன். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் திரு.ஜெயந்தன் அனைத்துலக ஒருங்கிணைப்பாளர் @ulagapathippu @30sec2remember
3
24
எங்களது இரண்டாவது வெளியீடு 📚 பிரபா*கரன் சட்டகம் 🖋️ கலாநிதி சேதுராமலிங்கம் Voice - உலகத்தமிழர் உரிமைக்குரல் @VoiceCounts1 அமைப்பால் 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரண்டாவது நூல் … ❤️💛 6 வருடங்களில் 10,000 பிரதிகள் தாண்டி உலகெங்கும் சென்றடைந்த நூல்! #voicepublishers #book
4
1
9
233
எங்கள் முதலாவது வெளியீடு #நந்திக்கடல்பேசுகிறது தொகுப்பு: ஜெரா @VoiceCounts1 அமைப்பால் 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் நூல் … 2020 அதிகம் விரும்பி வாசிக்கப்பட்ட 5 ஈழத்துப்படைப்புகளில் ஒன்று ! #voicepublishers #book #நந்திக்கடல் #நந்திக்கடல்பேசுகிறது
3
1
6
161
1) 2009 தமிழின அழிப்பின் பின்னதான போர்க்காலத்தை எழுத்தாவணமாகக் கொண்ட "நந்திக்கடல் பேசுகிறது" நூல் வெளியீடு, 13.10.2009 காலை 10.30 மணிக்கு யாழ், கலைத்தூது கலையகத்தில் இடம்பெற்றது. காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் முதலில் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
1
3
24
2)அதனைத் தொடர்ந்து மாவீரர் 'மேஜர் சோதியா' அவர்களின் தாயார் நிகழ்வின் பொதுச் சுடரை ஏற்றி வைத்ததுடன், நூலின் முதல் பிரதியையும் அவர் பெற்றுக் கொண்டார். நிகழ்வில் விருந்தினர்களாக கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை விரிவுரையாளர் சி.ரகுராம், முன்னாள் மாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன்
1
21
3), மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர் வி.நவநீதன் ஆகியோர் காரண உரைகளை நிகழ்த்தினர். மேலும் அருட்தந்தை இ.ரவிச்சந்திரன் அடிகளார் வெளியீட்டுரை ஆற்றினார்.
5
1) முள்ளிவாய்க்கால் இறுதிக்கண அனுபவங்களில் ஆரம்பித்து கடந்த பத்தாண்டுகளில் (2009 -2019)ஈழத்தமிழர் சந்தித்துவரும் சவால்கள் தொடர்பான நாற்பது கட்டுரைகளை நந்திக்கடல் பேசுகிறது எனும் நூலில் தொகுத்துள்ளார் வன்னியைச் சேர்ந்த விவரணவியலாளர் ஜெரா. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு
1
5
37
2)உருவாக்கப்பட்டது என்பதை அந்தக் கூட்டமைப்பினருக்கே நினைவுபடுத்தும் இந்நூலை உலகத்தமிழர் உரிமைக்குரல் மற்றும் ஊறுகாய் ஆகியன இணைந்து வெளியிட்டுள்ளன. போராட்டத்தின் அறத்தைப் பேசுகிறது இந்நூல் என்கிறார் ஊடகத்துறைக் கலாநிதி ரகுராம். #nanthikkadalpesukirathu #yaappu #worldwide
20
இனப்படுகொலைப் போருக்குப் பிந்திய காலத்தை எழுத்தாவணமாக கொண்டமைந்த, 'நந்திகடல் பேசுகிறது' எனும் நூல் யாழில் வெளியீடு. தலைமையுரை : பேராசிரியர் திரு.ரகுராம். #நந்திக்கடல்பேசுகிறது #ulagapathippu @VoiceCounts1 #oorukai
2
17
திருகோணமலையில் நந்திக்கடல் பேசுகிறது
2
15
சுட்டெரித்த சர்வதேச சக்திகளின் நெற்றிக்கண்களை நோக்கி; சிந்தனையாற்றல் கொண்ட ஈழத்தமிழ் நக்கீரர்கள் கேள்வி எழுப்பத் தயாராகட்டும். அப்போது தான் மீண்டும் ஒரு மெய்நடப்பு நிலை உருவாகும். விளைவாக விடுதலைக் கதவுகள் நிச்சயம் திறக்கும். - #நந்திக்கடல்பேசுகிறது.
9
43
லண்டனில் நந்திக்கடல் பேசுகிறது நூல் அறிமுக நிகழ்வு....
9
28
உலகில் புரட்சி மெளனிப்புக்குப் பின் இனங்கள் தமது கடந்த காலத்தை இலக்கிய வடிவங்களாகப் பதிவுசெய்திருக்கின்றன. சிந்தையுணர்ந்து, காலக்கிரமப்படி ஒழுங்குசெய்வது மிகப்பெரிய காலக்கடமையெனக் கருதினோம். அதற்காக நாம் மேற்கொண்ட முயற்சி #நந்திக்கடல்பேசுகிறது” 13.10.2019 அன்று .
8
25
யாழ்ப்பாணத்தில் வெளியீட்டுக்கு தயாரான நிலையில் " நந்திக்கடல் பேசுகிறது " #oorukai #நந்திக்கடல்பேசுகிறது 7:04 AM · Oct 13, 2019
6
26
முதல் வெளியீட்டு : நந்திக்கடல் பேசுகிறது - தொகுப்பு : ஜெரா வெளியீடு :Voice - உலகத்தமிழர் உரிமைக்குரல் & ஊறுகாய்
4
23
(1) உலகத்தமிழர் பதிப்பகம் உருவாக்குவதற்கு முன்பாக, வெளியிடப்பட்ட நூல்கள் அனைத்தும் எமது தாய் அமைப்பான உலகத்தமிழர் உரிமைக்குரல் @ அமைப்பினால் உலகெங்கும் வெளியிடப்பட்டது. ஈழத்தமிழர்களதும், உலகத்தமிழர்களதும் வரலாறும், பண்பாடும் , மொழியின் தொன்மையும் உலகெங்கும் பரப்பப்பட்ட
1
1
20
(2) வேண்டுமென்ற அடிப்படையில், எமது படைப்புகளை மட்டுமன்றி, சிறப்பான படைப்புகளைப் பெற்று அதனை உலகெங்கும் பரப்பும் நோக்கிலேயே "உலகத்தமிழர் பதிப்பகம்" உருவானது. பதிவுசெய்யப்பட்ட ஒரு வெளியீட்டகமாக இயற்கையின் துணையுடனும், உலகத்தமிழர்களது ஆதரவுடனும் உலகத்தமிழர் பதிப்பகம் செயலாற்றும்.
1
16