ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan) header
ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan) profile picture

நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினர். 😍 💪 நாம் தமிழர் 💪 வீழ்ந்துவிடாத வீரம், மண்டியிடாத மானம்.#BelongsToTamilianStock

Harur, tn. India
Joined April 2015
Photo by ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan)Photo by ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan)Photo by ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan)Photo by ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan)Photo by ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan)Photo by ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan)Photo by ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan)Photo by ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan)Photo by ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan)Photo by ஜெ.லோகநாதன்🎙️ (@4Loganathan)
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரே புகார் அளிக்காத நிலையில், உதயநிதியின் பேச்சுக்கு யார் புகார் அளித்தார்கள் என ஆயிரக்கணக்கான காவலர்களைக் கொண்டு அதிகாலையில் கைது செய்தது ஏன்? தலைமைச் செயலாளரிடம் கடிதம் கொடுத்து நடவடிக்கை எடுக்கத் தயங்குபவரும், தோல்வியைத் தாங்கும் துணிவில்லாதவரும் எப்படி வீரனாக இருக்க முடியும்; தகுதிநீக்கம் செய்துவிட்டு மீண்டும் தேர்தலைச் சந்திக்கத் தயாரா? - தலைவர் பிறந்த நாள் விழாவில் அண்ணன் செந்தமிழன் சீமான்
29
251
6
657
24,029
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
தாய்மாமன் சீர் ஆன் தி வே !
105
826
27
3,773
66,161
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
போரில் பதிக்கப்பட்ட ஈழ பெண்களை குணப்படுகொலை செய்யும் சிங்கள agent பாரி சாலன் #SinhalaAgentPaariSaalan
4
33
3
57
2,938
உதயநிதிக்கு அண்ணன் ராமரின் நகைச்சுவையைப் பதிலா சொல்லிட்டீங்க..! ஒரு IAS அதிகாரிக்கே இந்த நிலைமையான்னு தமிழ்நாட்டு மக்களும், தாய்மார்களும் காரித் துப்புராங்களே, அதுக்கு என்னப் பதில் வச்சுக்கிருக்கீங்க திருவாளர்.கோமாளி அவர்களே! @TVKVijayHQ
152
222
11
908
25,273
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
நினைவில் நிறைந்த தாயகக் கனவு! நீதிக்காகத் தொடரும் தமிழினத்தின் பயணம்! மாவீரர் நாள் – 27.11.2026 உலகப் பெருநிலமெங்கும் பரந்து வாழ்கின்ற என்னுயிர்த் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்! இன்று மாவீரர் நாள்! தாய் மண்ணைக் காக்க தன்னுயிர் தந்த குல சாமிகளைப் போற்றுகின்ற புனித நாள். மண்ணின் விடுதலைக்காக வீர சமர் புரிந்து விண்ணில் ஏறிய வீரர்களின் நினைவு நாள். காரிருள் சூழ்ந்த போதும், கடும் புகை மூண்ட போதும், மரணம் விழிகளுக்கு முன்னால் நிழலாடிய போதும் ஒருபோதும் அசராமல் களமாடி நின்ற மாவீரர்களின் மகத்தான நாள். இந்த கார்த்திகை மாதத்தில் காந்தள் மலர் சூட்டி மக்களைக் காக்க மண்ணை மீட்க இன்முகத்துடன் இன்னுயிர் ஈந்த நம் உடன் பிறந்தாரை உள்ளம் முழுக்க நிறைந்த வலியோடு கண்ணீர் திரை மறைக்க நெகிழ்வுடன் நினைவு கூர்கிறோம். யார் மாவீரர்கள்..? நம்மைப் போல ரத்தமும் சதையும் கொண்டு கனவுகளும் ஆசைகளும் நிறைந்து வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் பிறந்து மண்ணின் விடுதலை என்று வந்தபோது துளியும் தயங்காமல் உயிரை தந்த பெருமக்கள். தன்னிகரற்ற தலைவனின் விழி அசைந்த திசையில் பகை முடிக்க வெடித்து சிதறி உடலெங்கும் வெந்தணல் பூசிக் கொண்ட உத்தமர்கள். இந்த பூமிப் பந்தில் இறுதித் தமிழன் இருக்கும் வரை கால நதியின் ஓட்டத்தில் சளைக்காமல் தழைத்தோங்கும் தமிழின் இறுதி மூச்சு உள்ளவரை ‌மாவீரர்களின் வீரமும் புகழும் உச்சரிக்கப்பட்டு கொண்டே இருக்கும். மனித குல வரலாற்றில் எத்தனையோ இனங்கள் தோன்றியிருக்கின்றன. காலத்தின் ஓட்டத்தில் காணாமல் போயிருக்கின்றன. ஆனாலும் சில தேசிய இனங்கள் மட்டும் இது நாள் வரை உயிர்ப்புடன் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அதன் தனித்துவமான செம்மொழி. அப்படிப்பட்ட செம்மொழி தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டு ஒரு தேசிய இனமாக மலர்ந்து உலகத்திற்கு நாகரீகம் பண்பாடு கலை இலக்கியம் வீரம் அறம் கொடை அறிவியல் என பல பங்களிப்புகளை செய்த தமிழர் என்ற தேசிய இனத்திற்கு இறையாண்மை மிக்க நிலமோ அரசோ இல்லை என்பது தான் இத்தனை ஆண்டு காலம் வரலாறு செய்த வஞ்சகம். தமிழன் வாழாத நாடில்லை ஆனால் அவனுக்கென்று உள்ளங்கை அளவிற்கு நாடில்லை என்பது காலம் காலமாய் தமிழர் மீது எழுதப்பட்ட அநீதி. இந்தக் களங்கத்திலிருந்து மீண்டு வர வேண்டும், அடிமைத்தளையில் இருந்து அன்னைத் தமிழினம் விடுதலை அடைய வேண்டும் என்கின்ற புனித லட்சியத்திற்காக தலையே விலை ஆனாலும் தந்து விட்டுப் பார்ப்போமே என்று களத்தில் புகுந்தான் கரிகாலன் என்ற எங்கள் தலைவர் பிரபாகரன். அவர் வழியில் லட்சக்கணக்கான இளைஞர்களும் இளம் பெண்களும் ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக காலாட் படையாக, கடற்படையாக, வான் படையாக முப்படையாக தொடங்கி ஆறுபடையாக விரிந்து விண்ணையும் வீரத்தால் முத்தமிட்ட வரலாறு இந்த மண் காணாத மகத்துவம். அப்படிப்பட்ட தலைவனையும் வீரம் செறிந்த ஒரு தலைமுறையையும் நினைவு கூறுகின்ற இந்த கார்த்திகை மாதம் பிறக்கின்றபோதெல்லாம் உலகத் தமிழர்களின் உள்ளங்களில் சொல்லிவிட முடியாத பெருந்துயரும், காலத்தால் கரைத்துவிட முடியாத நினைவுகளும் சூழ்ந்துகொள்கின்றன. கடல் கடந்து வாழ்ந்தாலும், கண்டங்கள் கடந்து வாழ்ந்தாலும், தலைமுறைகள் கடந்து வாழ்ந்தாலும் தாய்மண்ணின் நினைவுகளைத் தங்கள் நெஞ்சங்களில் சுமந்து வாழ்கிற தமிழர்களுக்கு இந்த நாள் வெறும் நாட்காட்டியின் ஒரு நாள் அல்ல; நம் இனத்தின் வரலாற்றையும், துயரத்தையும், தாயகக் கனவையும் நினைவுகூர்கின்ற உணர்வுப்பூர்வமான நாள். பிழைப்புக்காக குடியேறிய சிங்களன் நமது வரலாறு மறைத்து தாய்மண் பறித்து மொழியை மறைத்து அதிகாரத்தைக் கொண்டு மக்களை அழித்த காட்சியினை உலகம் மரத்துப் போன மனதோடு வேடிக்கை பார்த்தது. எல்லோராலும் கைவிடப்பட்ட ஒரு தேசிய இனமாக தமிழர் என்ற தேசிய இனம் தலை குனிந்து நிற்கும் போது முப்பாட்டன் முருகன் தூக்கிய வீரத்தோடு, கடல் கடந்து சோழன் ஆண்ட தீரத்தோடு, தன் சொந்த மக்களையே படையாகக் கட்டி நிமிர்ந்து நின்றார் நம் தலைவர் பிரபாகரன். அவர் கனவு கண்ட நாட்டை உலக வல்லாதிக்கங்கள் ஒன்று சேர சூழ்ந்து வேட்டையாடி அழித்து தடை செய்யப்பட்ட ஆயுதங்களை கொத்து குண்டுகளை வீசி இனப்படுகொலையை சிங்கள வல்லாதிக்கம் கருணை இல்லாமல் செய்தபோது, எட்டு கோடி தமிழர்கள் வாக்கு செலுத்தி வரி செலுத்தி வாழவைத்த இந்திய பெருந்தேசமும் துணை நின்றது தான் கொடுமையிலும் கொடுமை. தாயகத்தை இழந்த இனமாக ஈழத் தமிழினம் உலகம் முழுக்க அலைந்து ஓடி திரிகையில் உடன் பிறந்தார் என்ற முறையில் நம்மால் உதவ முடியாமல் அதிகாரம் அற்ற அடிமை இனமாக திரைப்பட மோகத்திலும் மது மயக்கத்திலும் தாயகத் தமிழகத்தில் வீழ்ந்து கிடப்பது இனப்படுகொலைக்கு நிகரான பேரழிவு. காலம் எத்தனையோ காயங்களை ஆற்றிவிடலாம். ஆனால், ஒரு தேசிய இனத்தின் நெஞ்சில் பதிந்துவிட்ட தாயக இழப்பின் வலியை எந்தக் காலத்தாலும் ஆற்றிவிட முடியாது. பெற்ற பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயின் கண்ணீரையும், தந்தையைத் தேடி வளர்ந்த பிள்ளையின் ஏக்கத்தையும், உடன்பிறந்த உறவுகளை இழந்து தவிக்கின்றவர்களின் துயரத்தையும் எந்தச் சொற்களாலும் முழுமையாக விவரித்துவிட முடியாது. தமிழீழ மண்ணில் போர் முடிவுற்றுப் பதினேழு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், எம் மக்களின் துயரம் முடிவுக்கு வந்துவிட்டதா? பறிக்கப்பட்ட நிலங்கள் முழுமையாகத் திரும்பக் கிடைத்துவிட்டதா? காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் குறித்த உண்மை வெளிப்பட்டுவிட்டதா? போர்க்காலக் கொடுமைகளுக்கான நீதி கிடைத்துவிட்டதா? தமிழர்கள் தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கின்ற உரிமையைப் பெற்றுவிட்டார்களா? இல்லையே ..! போர் முடியட்டும் ! தீர்வுகளை நாங்கள் தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்த உலகத் தலைவர்கள் இன்று தங்களது மௌனத்தால் இனப்படுகொலையை அங்கீகரிக்கின்ற அட்டூழியம் இவ்வுலகில் தானே நடக்கிறது..?? போர்ச்சூழலில் காணாமல் அடிக்கப்பட்டவர்களும் வெள்ளை வேனில் வைத்து கடத்தப்பட்டவர்களும் எங்கே எங்கே என இதுவரை எங்களது தாய்மார்களும் சகோதரிகளும் கதறும் கதறல்கள் இதுநாள் வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழர்களின் தாயக நிலத்தில் சிங்கள குடியேற்றங்களும் பண்பாடு கலாச்சார ஊடுருவல்களும் நிகழ்ந்து தமிழீழ மண்ணின் தனித்துவம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இருந்து மீளுவதற்கு தமிழர்கள் இதுவரை கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். மாறிவருகின்ற உலக அரசியல் சூழலில் நமது சிந்தனைகளும் செயல்திட்டங்களும் காலத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டிய தேவையிருக்கிறது. கடந்தகால வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு, நிகழ்கால அரசியல் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, எதிர்காலத் தலைமுறைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உருவாக்கிட வேண்டும். உலகத்தின் ஒழுங்கு மாறிவிட்டது. அரசியல் போக்குகள் அதன் திசைவழிகள் முற்றிலுமாக திசை திரும்பி இருக்கின்றன. உலகம் முழுக்க சர்வாதிகாரங்களுக்கு எதிரான சத்திய குரல்கள் எழும்பத் தொடங்கி இருக்கின்றன. இலங்கையிலேயே வெகுமக்கள் புரட்சி நடந்து மனித கொடுங்கோலன் ராஜபக்சே குடும்பம் கூட்டமாக விரட்டியடிக்கப்பட்ட காட்சிகளை நாம் பார்த்தோம். இந்த சூழ்நிலையை தமிழர் தேசிய இனம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் குறித்த உண்மைகள் முழுமையாக வெளிக்கொண்டுவர போராட்ட ஆயத்தங்களுக்கு முன் வர வேண்டும். மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருப்பது வெறும் மனித எலும்புக்கூடுகள் அல்ல; விடை தெரியாத ஆயிரக்கணக்கான கேள்விகள்! நீதி மறுக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வியல் சாட்சியங்கள்! அவற்றை முறையாக ஆராய்ந்து உண்மைகளை வெளிக்கொண்டுவரவும், போர்க்கால மனித உரிமை மீறல்களுக்கும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கும் பன்னாட்டு நீதிப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யவும் உலக நாடுகளும் ஐக்கிய நாடுகள் மன்றமும் முன்வர தமிழர் தங்கள் ஓர்மையை, தமிழ்த் தேசிய அரசியலின் வலிமையை உறுதிப்படுத்த வேண்டும். தமிழீழத் தாயகம் என்பது தமிழர்களுக்கு வெறும் நிலப்பரப்பு அல்ல. அது எம் முன்னோர்களின் வாழ்விடம்; எம் மொழியின் வேர்கள் பதிந்திருக்கும் மண்; எம் பண்பாட்டின் தொடர்ச்சி; எம் எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வுரிமையோடு பின்னிப்பிணைந்த நிலம். ஈழத்தமிழர்களின் பூர்வீக நிலங்கள் பாதுகாக்கப்படுவதற்கும், இராணுவமயமாக்கல் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதற்கும், பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்படாமல் இருப்பதற்கும், தமிழர்கள் சமத்துவத்தோடும் கண்ணியத்தோடும் வாழ்வதற்குமான அரசியல் சூழல் உருவாக்கப்பட வேண்டும். தாயகத் தமிழகத்திலும் ஏற்பட்டிருக்கிற இந்த அரசியல் பேரிடரில் இருந்து மீண்டெழுவதற்கான பாய்ச்சலில் தமிழ்த் தேசிய இளையோர் அணியமாகி வருகின்றனர். தளராத நம்பிக்கையோடு ஓயாத அலைகளாய் சத்திய தலைவனின் பிள்ளைகள் மீண்டு வருவார்கள். தமிழீழ சோசலிச குடியரசு மலர்வதற்கான ஏதுவான அரசியல் மாற்றங்கள் தெற்காசிய பிராந்தியத்தில் நிகழ வேண்டுமானால் இந்திய பேரரசின் வெளியுறவு கொள்கைகள் மாற வேண்டும். அதற்கு தமிழகத்தில் இருந்து தமிழ்த் தேசிய அரசு ஒன்று உருவாகி அழுத்தங்களை தர வேண்டும். அதற்கான காலத்தை உருவாக்கத்தான் தளராமல் களத்திலே தமிழின இளையோர் நாம் தமிழர் என அணிவகுத்து நிற்கிறோம். உலகெங்கும் பரவி வாழ்கின்ற தமிழர்களிடம் அறிவாற்றல் இருக்கிறது; பொருளாதார வலிமை இருக்கிறது; தொழில்நுட்பத் திறன் இருக்கிறது; பன்னாட்டு அரசியல் தளங்களில் செயலாற்றக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, அறவழியிலும் சனநாயக வழியிலும் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காகச் செயலாற்ற வேண்டிய காலமிது. தனித்தனி அமைப்புகளாகப் பிரிந்து நிற்பதும், தன்முனைப்புகளுக்கு முதன்மையளிப்பதும், ஒருவரையொருவர் குறைகூறிக் கொள்வதும் நம் இனத்தின் அரசியல் வலிமையைச் சிதைத்துவிடும். எட்டு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்ற இந்திய ஒன்றியத்திற்கும் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பிருக்கிறது. இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பும், அவர்களது அரசியல் எதிர்காலமும் உரிய முதன்மையைப் பெற வேண்டும். ஈழத்தமிழர்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்க ஏதுவாக, பன்னாட்டுக் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை உலக அரங்கில் தொடர்ந்து முன்வைக்க வேண்டும். அதற்கான ஆதரவை உலக நாடுகளிடமும் பன்னாட்டு அமைப்புகளிடமும் சனநாயக வழியில் திரட்டிட வேண்டும். தாயகத் தமிழகமும், ஈழத்தமிழர்களும், புலம்பெயர்ந்து வாழ்கின்ற உலகத் தமிழர்களும் அறிவாலும், அன்பாலும், ஒற்றுமையாலும் இணைந்து நிற்க வேண்டிய வரலாற்றுத் தேவையை இந்த நாள் நமக்கு உணர்த்துகிறது. மாவீரர்கள் எந்தக் கனவிற்காக தங்கள் உள்ளங்கையில் தாய் மண்ணைப் பிடித்துக் கொண்டு தன்னுயிரை தந்தார்களோ அந்தக் கனவை நிறைவேற்ற தமிழராய் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளே உறுதியேற்று நிமிருவோம். நமது உள்ளத்து உறுதியிலும், நம் ஒவ்வொரு அசைவிலும் மாவீரர் தெய்வங்கள் நமக்கு வழிகாட்டடும் ! தாயகக் கனவினில் சாவினை தழுவிய மாவீரர்களுக்கு... வீர வணக்கம்! வீர வணக்கம்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
20
212
4
402
10,018
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
வழக்கு பாயுமா முதல்வரே ? தலைமை செயலாளரும் இதற்க்கு உடந்தை ? | Saattai | Full Video : youtu.be/H2EaQgJ3fy4 #TVKVijayFails #Kallakurichi #KallakurichiMLA
2
33
66
1,163
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
"அம்பாசமுத்திரத்தில் நாம் ஜெயிக்கிறோம்...என்னுடைய வெற்றியை தள்ளிப் போடலாமே தவிர..தடுக்க முடியாது..நான் யாரிடமும் மண்டியிட மாட்டேன்.." சவால் விட்ட சீமான் #seeman | #ntk | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
46
78
5
231
11,923
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
தமிழ் மொழியின் தொன்மை, இலக்கியச் சிறப்பு மற்றும் தாய்மொழியைப் போற்றுவதன் அவசியம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். பிற மொழிகளைக் கற்பது திறமை என்றாலும், தாய்மொழி தமிழைப் போற்றுவதே நமது கடமை! - தமிழினியா
1
72
1
153
1,690
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
பணமும் அதிகாரமும் மொத்த வலிமையையும் கொண்டு உள்ளே வரவிடாமல் தடுக்கப் பார்த்தாலும், மக்களின் மனதை வென்று அம்பாசமுத்திரத் தொகுதியில் நாம் நிச்சயம் வெல்வோம்; என் சொந்த மண்ணில், என் மக்களுக்காகவும் ஸ்டெர்லைட், அணு உலை போன்ற உரிமைப் போராட்டங்களுக்காகவும் களத்தில் நின்றவன் நான். இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றி ஆட்சி செய்து காட்டுவதே நமது கனவு. - தலைவர் பிறந்த நாள் விழாவில் அண்ணன் செந்தமிழன் சீமான்
13
137
296
7,426
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
இன்று அறிவு அரசியலாக இல்லாமல் அபிமானமும் அவதூறுமே அரசியலாக மாறியிருக்கிறது; இந்த ஆபத்தான போக்கை பிரபாகரனின் பிள்ளைகளால் மட்டுமே சரிசெய்ய முடியும். ஐந்து பேருடன் ஒரு இத்துப்போன துப்பாக்கியை ஏந்திக் காட்டுக்குள் சென்ற மாவீரன் பிரபாகரன், சேர, சோழ, பாண்டியர் முதல் வேலுநாச்சியார் வரையிலான நம் முன்னோர்களின் மொத்த வீரத்தையும் ஒற்றை உருவமாகத் தாங்கி நின்று 50,000 மாவீரர்களைக் களத்தில் கண்டார்; 'தமிழன் என்றால் மலிவான கூலி' என்று அகராதியில் எழுதி வைத்திருந்த உலகத்தை, 'தமிழன் என்றால் புலி' என மாற்றி எழுத வைத்ததே என் தலைவனின் தன்னிகரற்ற வீரம் ! - தலைவர் பிறந்த நாள் விழாவில் அண்ணன் செந்தமிழன் சீமான்
2
134
261
4,160
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
ஒருபக்கம் வட இந்தியர்கள் வரிசையாக வேலைக்குச் செல்ல, மறுபக்கம் நம் தமிழர்கள் டாஸ்மாக்கில் வரிசையில் நிற்பதைப் பார்க்கும்போது நெஞ்சே வலிக்கிறது; இந்த அவலத்தை மாற்ற நம் கையில் அரசியல் அதிகாரம் வர வேண்டும். அதிகாரம் வந்தவுடன் ஊடகம், திரைப்படம், உணவக விலைப்பட்டியல் முதல் வணிகப் பெயர்ப்பலகைகள் வரை அனைத்திலும் தூய தமிழைக் கொண்டு வருவோம்; அண்ணல் அம்பேத்கர் கூறியது போல் வலிமையான அந்த அதிகாரத்தை அடைந்துவிட்டால், நம் மொழியையும் இனத்தையும் மீட்டெடுப்பது மிக எளிமையானதாகிவிடும்! - தலைவர் பிறந்த நாள் விழாவில் அண்ணன் செந்தமிழன் சீமான்
1
89
182
2,814
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
உலகிலேயே விலை தீர்மானிக்க முடியாத இருவர் என் தலைவன் பிரபாகரனும், அவன் மகன் சீமானும் மட்டுமே; பதவி ஆசையோ பணத்தாசையோ இருந்திருந்தால் எப்போதோ கூட்டணி வைத்துப் போயிருப்பேன். தோற்போம் என்று தெரிந்தாலும் துணிந்து களத்தில் நிற்பவனே உண்மையான வீரன்; திரைக் கவர்ச்சி, சாதி, மதம், பணம் ஆகியவற்றைத் தாண்டி எங்களை நம்பி வாக்களித்த 20 லட்சம் மானமறவர்களுக்காகவே நான் களத்தில் நிற்கிறேன். 20 லட்சம் இரண்டு கோடியாக மாற அதிக நேரம் ஆகாது; வென்றவர்கள் என்ன சாதித்தார்கள் என்பது போகப்போகத்தான் மக்களுக்குத் தெரியும்! - தலைவர் பிறந்த நாள் விழாவில் அண்ணன் செந்தமிழன் சீமான்
11
95
1
189
2,382
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
திமுக ஆட்சியில் இருக்கும்போதே எதிர்த்து நின்று ஒரே நாளில் 100 வழக்குகளைச் சந்தித்த எனக்கு, நம் இனத்தை அழித்த காங்கிரஸோடு கூட்டணி வைத்தவர்கள் திமுக எதிர்ப்பைப் பற்றிப் பாடம் எடுக்கத் தேவையில்லை. எத்தனை எண்களைப் போட்டாலும் பக்கத்தில் பூஜ்ஜியம் இருந்தால்தான் மதிப்பு என்பதைப் போல, என்னைத் 'தோற்றவன், பூஜ்ஜியம்' என்று விமர்சிப்பவர்களுக்கு என்னைப் பேசாமல் அரசியலே இல்லை; உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவுமே நான் நெஞ்சு வெடிக்கக் கத்திக்கொண்டிருக்கிறேன்! - தலைவர் பிறந்த நாள் விழாவில் அண்ணன் செந்தமிழன் சீமான்
9
160
2
348
6,476
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த இனமான தமிழர் எனும் தேசிய இனத்தின், உயிராகவும், உணர்வாகவும், அறிவாகவும், ஆற்றலாகவும், முகமாகவும், முகவரியாகவும் திகழும் நம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 72ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளை உலகெங்கும் பரந்து வாழும் எனது உயிருக்கினிய தாய்த்தமிழ்ச் சொந்தங்களோடு பேரன்பும் பெருமிதமும் பொங்கப் பகிர்ந்துகொள்கிறேன். மனித இனத்தின் நாகரீகம் என்பது நதிக்கரைகளில் தோன்றியது என்பார்கள். ஆனால் மனித இனத்தின் வளர்ச்சி சில தனி மனிதர்களின் உள்ள ஊக்கத்திலிருந்துதான் பிறந்திருக்கிறது. அந்த தனி மனிதர்கள் தான் உலகத்தை இயக்கும் உந்து சக்திகளாக திகழ்ந்து உலகத்தை தன்னம்பிக்கையால் சுழல வைத்திருக்கிறார்கள். இந்த பூமி பந்தில் ஆதிக்கங்களும் அடிமைத்தனமும் எப்போதெல்லாம் அதிகாரத்தின் பேரில் உருவாகிறதோ அப்போதெல்லாம் வரலாற்றின் கதாநாயகர்கள் தோன்றி பூமியின் சமநிலையை காப்பாற்றி இருக்கிறார்கள். தமிழரின் நீண்ட நெடிய வரலாற்றில் எத்தனையோ வீர பெருமக்கள் தோன்றி மண்ணைக் காக்க மொழியை மீட்க தங்கள் வாழ்க்கையே அர்ப்பணித்து நின்று இருக்கிறார்கள். அப்படி தோன்றிய பெருமக்களில் உயரிய இடத்தில் மங்கா புகழோடு ஒளி வீசி நம் இதயங்களில் நிறைந்து வாழ்பவர் தான் என் உயிர் அண்ணன்‌ தமிழ் தேசியத்தின் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள். உலகத்தில் அனைவராலும் கைவிடப்பட்ட தேசிய இனமான தமிழர் என்ற இனத்திற்கு‌ இறுதியாக கிடைத்த ஒற்றை நம்பிக்கை நம் தேசிய தலைவர் அவர்கள். புராணங்களிலும் இதிகாசங்களிலும் காப்பியங்களிலும் வரலாற்றின் தொடர்ச்சியான பாதைகளிலும் வஞ்சிக்கப்பட்ட இனமான தமிழ் இனத்திற்கு வாராது வந்த மாமணிப்போல் வந்துதித்து அடிமை இருளை விரட்ட செங்கதிர் சூரியன் போல் சுடர் விட்டு ஒளிந்தவர் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள். நூலகங்களிலும் வரலாற்றின் காப்பகங்களிலும் உறைந்திருக்கின்ற இறந்த காலத்தின் ரத்தம் தோய்ந்த ஏடுகளில் மட்டுமே காணப்படும் சாகச வீரர்கள் உரு கொண்டு நிஜ வாழ்வில் எழுந்து வந்தது போல் அன்னை தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க ஆயிரமாயிரம் மாவீரர்கள் எழுந்து வந்தார்கள். அவர்களுக்கெல்லாம் உள்ள சக்தியாய், உயிர் ஒளியாய் , தெளிவூட்டும் அறிவாய், வழிநடத்திய ஆற்றலாய், திகழ்ந்தவர் நம் உயிர் தலைவர். மானுட வரலாறு தோன்றிய காலத்தில் இருந்து ஆயிரமாயிரம் கவிஞர்களும் ஏடெடுத்து எழுதிய எழுத்தாளர்களும் கனவு கண்ட ஒரு லட்சிய நாடு ஒரு தனி மனிதனால் சமகாலத்தில் உருவாகி தழைத்து நின்றது. தனித் தமிழீழ சோசலிச குடியரசு என்கின்ற அந்தப் பெரும் கனவு நாட்டை ‌ பார்த்துப் பார்த்து செதுக்கி இப்படியும் ஒரு நாடு உலகத்தில் உண்டா என்று எல்லோரும் வியக்கும் வகையில் உருவாக்கி எழுப்பிக் காட்டியவர் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள். தாய் மண் விடுதலைக்காக சொந்த மக்களையே ராணுவமாக கட்டி அறுபடை வீடு கொண்ட முருகன் இனத்தில் பிறந்த மக்கள் ஆறு படை கட்டி நிமிர்ந்த வரலாறு. நள்ளிரவு நேரத்தில் கூட இளம் பெண் ஒருவர் கழுத்து நிறைய நகைகளோடு பாதுகாப்பாக சென்று வீடு திரும்புகிற காந்தி கனவு கண்ட தேசம். அறம் சார்ந்த வாழ்வியல். பனை மரம் சார்ந்த பொருளாதாரம், திரும்பிய திசையெல்லாம் வளம் செழிக்கும் அறிவார்ந்த திட்டங்கள், வெற்றி ஒன்றே இலக்கு என்று துவக்கு ஏந்தி பாய்ந்த புலிகள் என கனவு நாட்டை கட்டி எழுப்பினார் நம் தலைவர். அகதி என்றும் அடிமை என்றும் ஓடி ஓடி உலகம் முழுக்க வாழ்கின்ற ஒரு இனத்திற்கு உள்ளங்கை அளவிற்கு நாடாக இருந்தாலும் அது வல்லரசு நாடுகளை விட வலிமையாக கட்டப்பட வேண்டும் என்பதில் கணக்கு பார்த்து கட்டி எழுப்பி சாதித்துக் காட்டிய சாதனைத் தலைவர் நம் உயிர் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள். அந்தக் கனவு நாட்டை தான் உலகத்தின் வல்லாதிக்க நாடுகள் அனைத்தும் சேர்ந்து கொண்டு சூறையாட நின்ற போது தாய் பருந்து எப்படி தன் குஞ்சுகளை காப்பாற்ற தவித்து நிற்குமோ அதேபோல களத்தில் இறுதிவரை நின்று தன் மண்ணின் விடுதலைக்காக இறுதிவரை போராடி நின்றார் எம் தலைவர். அதிகாரத்தால் விலை பேசப்பட்ட போதும், ஆயுதங்களால் மிரட்டப்பட்ட போதும், ஆசை வாக்குறுதிகளால் உள்ளத்தை அசைத்துப் பார்த்த போதும் துளியும் சமரசம் இல்லாமல் கொண்ட கொள்கைக்கு நேர்மையாக நின்று உயிரே போனாலும் உள்ளத்தில் நிலைத்த லட்சியத்திற்கு ஒருபோதும் துரோகம் செய்யாமல் உறுதியாய் நின்று இறுதியாய் சான்றானவர் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள். "உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன் ஆனால் அந்த உயிரினும் விட உன்னதமானது எமது உரிமை எமது விடுதலை எமது கௌரவம்" என முழங்கிய சொற்களுக்கு அவரே சாட்சியாக நம் கண் முன்னால் நின்றது தான் வியப்பினால் அசையா நம் விழிகளில் உறைந்து போன வியப்பான உண்மை. ஒரு இனத்தின் கண்ணீர் என்பது தனி மனிதனின் துயரமல்ல; அது தலைமுறைகளின் வலி. ஒரு இனத்தின் உரிமை பறிக்கப்படுவது என்பது அதன் நிலம் மட்டுமல்ல, அதன் மொழி, பண்பாடு, வரலாறு, எதிர்காலம் என அனைத்தும் அச்சுறுத்தப்படுவதற்குச் சமம். அந்த உண்மையைத் தனது வாழ்வின் வழியாக உணர்த்தியவராகத் தமிழர்களின் தேசிய உணர்வில் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் நிலைத்திருக்கிறார். எப்படியும் வாழலாம் என்ற எண்ணத்திற்கும், எதற்காக வாழ வேண்டும் என்ற இலட்சியத்திற்கும் இடையிலான வேறுபாட்டை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது. ஒரு மனிதனின் வாழ்வு அவன் அடைந்த வெற்றிகளால் மட்டுமே அளவிடப்படுவதில்லை; அவன் எதற்காக வாழ்ந்தான், எவற்றைத் தனது வாழ்வின் உயர்ந்த நோக்கமாகக் கொண்டான், தனது காலத்தின் துயரங்களுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றினான் என்பவற்றாலும் அளவிடப்படுகிறது. அந்த வகையில், தனது வாழ்வையே தமிழர் தேசிய உரிமை, தாயக உணர்வு, மொழி, இன அடையாளம் ஆகியவற்றோடு பின்னிப் பிணைத்துக்கொண்ட தலைவராக நம் உயிர் தலைவர் மேதகு வே பிரபாகரன் விளங்குகிறார். இனத்தின் துயரங்களுக்கு மத்தியில், தமிழர்களின் அரசியல் உரிமைகள், மொழி, கல்வி, சமூக சமத்துவம், பெண்களின் பங்கு, தன்னிறைவு போன்ற கனவுகளை முன்னிறுத்தி தமிழ் தேசிய கனவு தேசத்தை கட்டி எழுப்பினார்.. தமிழ்நாடு என பெயர் வைத்து இது தமிங்கில நாடாக தரங்கெட்டு போய் இருக்கும் நிலை கண்டு வருந்தி வாடி நிற்கையில் பொருளாதாரத் தடைகளும், போர்ச்சூழலும், நெருக்கடிகளும் சூழ்ந்திருந்த ஒரு நிலத்தில் அடிப்படை கல்வி முதல் உயர்கல்வி வரை தாய்மொழியில் கல்வி, வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தனித்தமிழ் பெயர்கள், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்கின்ற உயரிய நிலை என நிலை நிறுத்தி தமிழன் தலை நிமிர்த்தினார் நம் தலைவர். சாதியற்ற சமூகத்தை உருவாக்கி மாவீரர் துயிலுமிடங்களில் விதைத்த வீரத்திற்கே முதலிடம் என உருவாக்கி சாதியை சவக்குழியில் புதைத்து வீரத்தை புவியிலே நட்டவர் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன். வீட்டிற்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைக்கவிழுந்தார் என்கின்ற பாட்டன் பாரதியின் பாடல் வரிகளை நினைவாக்கி ஆணுக்கு பெண் சமம் அல்ல ஆணும் பெண்ணும் சமம் என்பதை சரித்திரத்தில் நிலைநாட்டி ஆண்களுக்கு நிகராக பெண்களையும் ஆயுதமேந்தி மண்ணின் விடுதலைக்காக போரிட வைத்த மகத்தான புரட்சியாளன் நம் தலைவன். என்னை நோக்கி வரும் எத்தனையோ அவதூறுகளுக்கு மத்தியில் இதயத்தில் பாயும் விமர்சன அம்புகளால் காயப்படும் காயங்களுக்கு நடுவில் இன்னும் நான் உறுதியோடு நிற்க ஒரே காரணம் அப்பழுக்கற்ற அந்த வீர மனிதனின் வீரமிக்க அந்த விழிகள் தான். தளர்வுகள் என்னைச் சூழும்போது, தடைகள் என் பாதையை மறைக்கும்போது, நம்பிக்கையின் ஒளி மங்கத் தொடங்கும்போது, என் மனத்தின் ஆழத்தில் எழும் அவரது நினைவே மீண்டும் என்னை எழுந்து நிற்கச் செய்கிறது. அவரே எனக்கு அண்ணனாக எம் இனத்தின் மன்னனாக இருந்து என்னை வழிநடத்துகிறார். நான் திரும்பும் திசையெல்லாம் திருஉருவாக நின்று என்னை கைப்பிடித்து அழைத்து செல்கிறார். தோல்விகளாலும் காயங்களாலும் அவதூறுகளும் நான் துவளும் நேரங்களில் எல்லாம் என் உள்ளுக்குள் ஊற்றெடுத்து என்னை ஆற்றுப்படுத்தும் என் வாழ்வியல் துணை என் உயிர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் அவர்கள். என் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் அவரே நிறைந்திருக்கிறார். அசைக்க முடியா உறுதி கொண்ட எங்களது நிலைப்பாடுகளில் அவரே சத்தியமாய் உண்மையுமாய் மறைந்திருக்கிறார். எங்கோ பிறந்த என்னை, என் இனத்தின் மீதான பற்றும், மொழியின் மீதான காதலும், தேசிய உணர்வும் ஒரு பெரும் இலட்சியப் பாதையில் அழைத்துச் சென்றிருக்கின்றன. எண்ணற்ற இன்னல்களையும், துயரங்களையும், அடக்குமுறைகளையும் எதிர்கொண்டபோதும், என் மனத்தின் உறுதியைச் சிதைக்காமல் என்னைத் தொடர்ந்து இயங்கச் செய்கிற அந்த உணர்வின் மையத்தில் என் தலைவர் என்னுயிர் அண்ணன் மேதகு வே பிரபாகரன் மட்டுமே இருக்கிறார். தமிழ்த் தேசிய இனத்தின் வரலாறு எழுதப்படும் போதெல்லாம் மேதகு வே பிரபாகரன் என்ற பெயர் மட்டும் தங்க எழுத்துக்களால் வைரப் பக்கங்களில் எழுதப்படும். அவர் இன்றி நமக்கு இறந்த காலமோ எதிர்காலமோ நிகழ்காலமோ இல்லை என்பதுதான் நிதர்சனம். அவரே நமக்கு தத்துவமாக வழிகாட்டியாக வழியாக மாறி நிற்கிறார். அவர் காட்டிய பாதையில் தமிழர் என்ற தேசிய இனம் தனக்கான இறையாண்மையை, விடுதலையை ஒரு நாள் வென்றெடுத்தே தீரும். என் உயிரோடு கலந்த அன்புத் தலைவர், என்னுயிர் அண்ணன், நம் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்களை‌ உலகம் முழுக்க பரந்து வாழும் என் தாய் தமிழ் உறவுகளோடு மகிழ்ந்து பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்த்தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
28
707
26
1,385
14,656
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
"காசு கொடுத்து ஓட்டு வாங்குற தேர்தலில்தான் தோற்றேன்; லட்சியத்தில் உறுதிகொண்டவர்களை வீழ்த்த முடியாது" அம்பாசமுத்திரம் பொதுக்கூட்டத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு #Seeman #NTK #Ambasamudram #News18Tamilnadu | News18Tamil.com
88
332
10
1,153
127,076
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவையத் தலைவர் பெருமதிப்புக்கும், பேரன்புக்கும் உரிய பெருந்தமிழர் அப்பா தரங்கை பன்னீர்செல்வம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். அப்பாவை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும், இனமானத் தமிழர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். பன்னெடுங்காலமாக தமிழ்ச்சமூகத்தின் விடுதலைக்காகப் போராடிய அப்பா தரங்கை பன்னீர்செல்வம் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் ஆன்றோர் அவையத் தலைவராக இருந்து, கட்சியின் வளர்ச்சிக்கும், செழுமைக்கும் தன்னுடைய அறிவையும், ஆற்றலையும் பயன்படுத்திய பெருந்தகையாவார். தரங்கையார் என எல்லோராலும் பேரன்போடு விளிக்கப்பட்ட அப்பா தரங்கை பன்னீர்செல்வம் அவர்கள், தன்னைவிட இளையவர்களையும் மதித்துப் போற்றிய மாண்பாளர். அப்பா தரங்கையார் அவர்கள் தமிழறிஞராக மட்டுமல்லாது, இனமான உணர்வுகொண்டு களத்தில் இயங்கிய தமிழ்த்தேசியப் போராளியாகவும் திகழ்ந்தார். நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி மீது மிகுந்த அக்கறை கொண்டு, என் மீது பேரன்பு காட்டிய அப்பாவின் இழப்பு என்னை நிலைகுலையச் செய்கிறது. அவரது மறைவு நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமல்லாது, தமிழ்த்தேசிய இனத்திற்கு ஏற்பட்டப் பேரிழப்பாகும். அப்பா தரங்கையார் அவர்களுக்கு என்னுடைய புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
6
85
1
194
4,875
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
"கடைசியாக ஆறு பந்து தான் இருக்கு..நாம அடித்து தான் ஆட வேண்டும்...நான் எத்தனை முறை தோற்றாலும் சரி..யாரிடமும் ஆதரவு கேட்க மாட்டேன்"..பொது வேட்பாளர் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த சீமான் #seeman | #nellai | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
49
367
10
1,263
42,068
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
#JustNow || நான் பொதுவேட்பாளரா? யார் சொன்னது?.. கடைசி 6 பந்துகள் தான் இருக்கின்றன; அனைத்து பந்துகளையும் சிக்சர்களாக விளாசி வெற்றி பெற வேண்டும் - சீமான் #Seeman | #ByElection | #NTK | #PolimerNews
34
118
15
419
43,023
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
உலகத்தமிழர்களின் ஒற்றைத்தலைவர் , தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் புகழ் போற்றுவோம் ! #தேசியத்தலைவர்72 #Hbd_Tamil_National_leader
34
313
6
1,115
11,922
ஜெ.லோகநாதன்🎙️ retweeted
கள்ளக்குறிச்சி வழக்கில் திருப்பம் | உண்மையை உடைத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி | கடுமையாக எச்சரித்த நீதிபதி | youtu.be/H2EaQgJ3fy4
12
78
283
6,595