கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட காவுவிளை - செந்தறை சாலை பகுதியில் பட்டணம் கால்வாய் தூர்வாரும் பணி சரியான முறையில் நடைபெறவில்லை என்கிற குற்றச்சாட்டு வந்ததையடுத்து சம்மந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று அதிகாரிகளிடம் அதுகுறித்து பேசினேன். சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களிடமும் அலைபேசியில் இதுகுறித்தும் பேசினேன்.மேலும்,நேர்த்தியான முறையில் பணி தொடராவிட்டால் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
-ஹிம்லர்
கிள்ளியூர் தொகுதி வேட்பாளர்
நாம் தமிழர் கட்சி
Himlar retweeted
முதலாம் மொழிப்போரை முன்னின்று நடத்தி சிறை சென்ற முதன்மைப் போராளி..!
ஐயா ஈ.வே.ரா புகுத்திய திராவிட திரிபுவாதத்திற்கு எதிராக தமிழ்த்தேசிய அரசியல் காக்க ‘தமிழர் கழகம்’ கண்ட தன்மானத்தமிழர்..!
‘தமிழர் நாடு’ இதழ் நடத்தி தமிழ் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பெருந்தகை..!
தமிழர் மரபு திருமண இயக்கம் நடத்தி ஐயாயிரம் சாதி வேறுபாடற்ற தமிழ்த் திருமணங்களை நடத்தி வைத்த சமூகச் சீர்திருத்தவாதி..!
ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தி திருவானைக்காவல், மாயவரம் கோயில்களில் ஆதித்தமிழ்க்குடி மக்களை வழிபடச் செய்த பெருந்தமிழர்..!
தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைந்திட அடிகோலிய தகைமையாளர்..!
தமிழகப் புலவர் குழுவினை நிறுவி அறிஞர் பலரை ஒருங்கிணைத்து தமிழ் வளர்த்த செம்மல்..!
35 க்கும் மேற்பட்ட அருந்தமிழ் நூல்கள் பல இயற்றி தமிழன்னைக்கு அணி சேர்த்த தமிழறிஞர்..!
தம்முடைய எழுத்து, சொல், செயல் யாவற்றையும் தமிழுக்கும், தமிழர் நலனுக்கும் ஒப்புவித்து, வாழ்வின் இறுதிநாள் வரை தமிழ்த்தேசியராகவே வாழ்ந்து மறைந்த, நம்முடைய தாத்தா முத்தமிழ் காவலர்
கி.ஆ. பெ. விசுவநாதம் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!
தேர்தல் வாக்குறுதியில் இலவசங்கள் கவர்ச்சிக்கா? வளர்ச்சிக்கா? தந்தி டிவி மக்கள் மன்றம் நிகழ்ச்சி.
நன்றி @ThanthiTV
youtu.be/PawNLjG_bV4?si=Nw4B…
கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முள்ளூர்துறை பகுதியில் ஏவிஎம் கால்வாய் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டு பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருப்பதாக வந்த அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று அப்பகுதி மக்களை நேரடியாக சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்று அவர்களுக்கு தேவையாக அத்தனை உதவிகளையும் செய்து மக்களின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தி தருவேன் என்கிற உறுதியளித்தேன்.உடன் நாம் தமிழர் கட்சி உறவுகள்.
இன்று (4/11/2025) கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தெருவுக்கடை மற்றும் கீழ்குளம் பகுதி மக்களுடன் சந்திப்பு.
Himlar retweeted
அண்ணன் சீமானின் அன்புக்கட்டளை!
அன்பு உறவுகளுக்கு..!
வணக்கம். நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடாக ‘புதியதொரு தேசம் செய்வோம்’ இதழ் மாதமொரு முறை வெளியாவதை அறிவீர்கள்! அச்சு ஊடகங்கள் தனது செல்வாக்கினை இழந்து கொண்டிருக்கிற தற்காலச்சூழலில் விகடன் போன்ற நூற்றாண்டு பாரம்பரியம் மிகுந்த பத்திரிக்கைகளே திணறி வருகின்றன.
இச்சமயத்தில், புதியதொரு தேசம் செய்வோம் இதழ் இலாபம் ஏதுமின்றிதான் முழுமையாக இயங்கி வருகிறது. இன்னும் சொல்லப் போனால், ஒவ்வொரு மாதமும் நஷ்டத்தோடுதான் இதழ் வெளிவருகிறது. இதில் இலாபமெனக் கருதுவது, அண்ணனின் பேச்சுக்களும், கட்சி செய்திகளும் இதழ் வடிவத்தில் ஆவணப்படுத்தப்படுவதும், அது கொஞ்சமேனும் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுவதும்தான்.
இத்தகைய நிலையில், இதழுக்கான அச்சுச்செலவுக்கு நாம் செலுத்த வேண்டிய பெருந்தொகை அச்சகத்தில் நிலுவையில் இருப்பதாலும், பெரும் பொருளாதார நெருக்கடி நிலவுவதாலும் இதழ் தொடர்ந்து வெளி வருவதில் பெரும் தேக்க நிலையிருக்கிறது. ஒரு இதழ் என்றால், அதற்கென தனி அலுவலகம், தனி வடிவமைப்பாளர், ஊழியர்கள், அச்சகம் என ஒரு நிர்வாகக்கட்டமைப்பு இருக்கும். அதற்கென ஒரு பெருந்தொகை எப்போதும் கையிருப்பு இருக்கும். அதனைக்கொண்டே இதழ்கள் வெளி வரும். அப்படி ஏதுமில்லாதே புதியதொரு தேசம் செய்வோம் இதழ் இப்போதுவரை வெளி வருகிறது.
தற்போது ஏற்பட்டிருக்கிற பொருளாதார நெருக்கடியால் இதழ் தொடர்ந்து வெளி வருவதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. ஆகவே, பொருளாதார வலிமை படைத்த உறவுகள் இதழுக்குப் புரவலராக மாறி, உதவ வேண்டுமென உரிமையோடு கோருகிறோம். சிறு துளி பெருவெள்ளம் என்பதுபோல, எல்லோரும் சேர்ந்து தங்களால் இயன்றப் பொருளாதாரப் பங்களிப்பை அளித்தாலே, இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து நம்மால் மீண்டுவந்து, இதழை வெற்றிகரமாகக் கொண்டு வந்துவிட முடியும்.
(இதழ் வெளியாவதில் ஏற்பட்ட தாமதத்துக்கும், சிறு இடைநிற்றலுக்கும் சந்தாதாரர்களிடம் வருத்தத்தைத் தெரிவிக்கிறோம்)
நம்மைப் பற்றி ஊடகங்கள் பேசுவதில்லை என வருத்தப்படுகிற நாம், நம் கையிலிருக்கும் ஊடகத்தை வலிமைப்படுத்த கரம்கோர்ப்போம். அண்ணன் சீமான் அவர்களை ஆசிரியராகக் கொண்டு இயங்கி வரும் புதியதொரு தேசம் செய்வோம் இதழ் என்பது அண்ணனின் பெருங்கனவு!
இதழுக்குத் தங்களால் இயன்ற பொருளாதாரப் பங்களிப்பை அளிக்க,
கூகுள் பே/ போன் பே: 9092529250
வங்கிக் கணக்கு விபரங்கள்:
A/c name: PUTHIYATHORU THESAM SEIVOM
Account number : 923020022488349
Bank: AxisBank
IFSC: UTIB0000423
Account type : Current
தொடர்புக்கு:
9095859921
கிள்ளியூர் தொகுதியில் இளைஞர்களின் எழுச்சி ✊
நாம் தமிழர் 🔥🔥🔥
@Sunandha_TS
@PackiaSe @Saattaidurai @idumbaikarthi @vennilaVT @Kaarthikaichelv @Adv_Abubacker @SuthanNayagam @jennifer_ntk @AncyShoba
நாம் தமிழர் கட்சியின் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்வு நேற்று (19/10/2025) மாலை புதுக்கடை பகுதியில் உள்ள அன்னை தெரசாள் திருமண மண்டபத்தில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
கிள்ளியூரில் புது வரலாறு படைப்போம் ✊








