Manasha Kumar (@ManashaK02) header
Manasha Kumar (@ManashaK02) profile picture

தமிழ் | தமிழ்த்தேசியம் State Coordinator of Student Wing | Naam Tamilar Katchi

Tamil Nadu, India
Joined January 2025
Photo by Manasha Kumar (@ManashaK02)Photo by Manasha Kumar (@ManashaK02)Photo by Manasha Kumar (@ManashaK02)Photo by Manasha Kumar (@ManashaK02)Photo by Manasha Kumar (@ManashaK02)Photo by Manasha Kumar (@ManashaK02)Photo by Manasha Kumar (@ManashaK02)Photo by Manasha Kumar (@ManashaK02)Photo by Manasha Kumar (@ManashaK02)Photo by Manasha Kumar (@ManashaK02)
Manasha Kumar retweeted
தொண்டி மணிமுத்தாறு தூய்மை பணியில் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தலைமையில் நாம் தமிழர் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள் ! .
1
113
266
1,645
புற்றுநோய் வரும்? #bisleri #water #Seeman #ntk
2
2
67
வெள்ளைய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சுதேசிக் கப்பல் விட்டுப் பொருளியல் போர் புரிந்த பெருந்தகை! தாய் மண்ணின் விடுதலைக்குப் போராடி சிறைசென்று மாடுகூட இழுக்கத் தயங்கும் செக்கினை இழுத்தச் செம்மல்! சேர்த்து வைத்த செல்வங்களையெல்லாம் விடுதலைப்போருக்கு ஈந்து வறுமையில் வாடிய வள்ளல்! தமிழ் இலக்கியங்களைப் பழுதற கற்றுணர்ந்த தமிழ்ப்பேரறிஞர்! நமது தியாகமிகு பாட்டனார் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் நினைவுநாளில் பெருமிதத்துடனும் அவர் பெரும் புகழ் போற்றுவோம்! வழிவழியே வரும் மானத்தமிழ்ப் பிள்ளைகளாகிய நாம்,நமது பாட்டனார் வ.உ.சி அவர்கள் காட்டிய வழியில் தாய் மண்ணிற்கும் மக்களுக்கும் உண்மையும், நேர்மையுமாகத் தொடர்ந்து அயராது பாடுபட உறுதியேற்போம்! கப்பலோட்டிய தமிழர் நமது பாட்டனார் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு புகழ் வணக்கம்!
18
408
10
882
10,188
ஏன் முதல்வர் விஜய் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? #tvkfails
2
17
44
466
இறுதி மூச்சு வரை உங்கள் கரத்தை இறுகப் பற்றி நடப்போம்! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பெரியப்பா @Seeman4TN‌ ❤️‍🔥🙌🏽
2
83
2
368
1,588
என்றும் தமிழ்த்தேசிய இனத்தின் காவலனாய் கருப்பனாய் காத்து நிற்கும் பெரியப்பா @Seeman4TN செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய அகவை தின வாழ்த்துகள் ❤️‍🔥✊🏽 #மாற்றத்தின்_பேருருவம் #Change_Personified
27
60
515
உலகெங்கும் பரவி வாழும் என் உயிருக்கினிய தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்..! உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும் இல்லாமல், தமிழர்கள் என்ற தனித்த தேசிய இனம் நிலைத்து வாழும் நிலப்பகுதியாகவும் இருந்து வருகிறது. தனக்கென தனித்த இலக்கண செறிவுமிக்க இலக்கியம், தொன்றுதொட்ட வரலாறு, கலை, பண்பாடு என வாழ்வியல் விழுமியங்கள் அத்தனையும் கொண்டு தமிழர் என்கின்ற தேசிய இனம் வரலாற்றுத் தொடர்ச்சியோடு இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து மற்ற தேசிய இனங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றது. இந்திய ஒன்றிய அரசு 1956 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான ஐப்பசி 16 (01.11.1956) ஆம் நாள்தான் தமிழ்நாடு என்கின்ற நமது தாயக நிலம் சட்டப்படி வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட திருநாளாகும். அதன்படி, சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் உருவாயின. இந்த உருவாக்கத்தின் போது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளும் பக்கத்து மாநிலங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டன. தொன்றுதொட்ட நம் வரலாறு நமக்கு வரையறுத்த தமிழக எல்லைகளை மீட்கும் போராட்டத்தில் எண்ணற்ற எல்லை மீட்புப் போராளிகள் உயிர்நீத்தனர். குமரித்தந்தை தாத்தா மார்சல் நேசமணி, வடவெல்லை காவலர் தாத்தா மா.பொ.சிவஞானம் தொடங்கி தெற்கெல்லை – வடக்கெல்லை காத்த போராளிகளின் தன்னலமற்ற ஈகம் காரணமாகப் பறிக்கப்பட்ட தமிழர் எல்லை பகுதிகளில் பெரும்பகுதி மீட்கப்பட்டது. தமிழ்நாடு என்ற சொல்லாடல் மூலம் முதுபெரும் காலத்திலேயே தமிழர் தாயகம் பெருமையோடு அழைக்கப்பட்டதை பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு அறியத் தருகின்றன. “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்” என்று சிலப்பதிகார காட்சிக் காதையில் பாடும் இளங்கோவடிகள் “‘தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர் செருவேட்டுப் புகன்று எழுந்து மின்தவழும் இமய நெற்றியில் விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள்” என்று வாழ்த்துக் காதையில் பாடுகிறார். “தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம் நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான் குன்றமுண் டாகு மளவு.” என்று பாடுகிறது பரிபாடல் தொல்காப்பியத்திற்கு பதினொராம் நூற்றாண்டில் உரை எழுதிய இளம்பூரணர் தெளிவான கேள்வி-பதிலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகப் பின்வருமாறு “நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்“ என ஆயிரமாண்டுகளுக்கு முன்னரே அறுதியிட்டு தெளிவாக வரையறுக்கிறார். “மண்குலவு தமிழ்நாடு காண்பதற்கு மனங்கொண்டார்” என்றும் “பூமியர் தமிழ்நாட் டுள்ள பொருவில்” என்றும் பெரிய புராணத்தில் பாடுகிறார் சேக்கிழார் பெருமான். உறக்கமுற்றா ரென்னுற்றர் எனுமுணர்வினொடும் ஒதுங்கி மணியாலோங்கல் பிறக்கமுற்ற மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ” என்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர். செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” “தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நாடே! என்று தமிழ்நாடு தமிழ்நாடு என்று கொண்டாடுகிறார் பெரும்பாவலர் பாரதியார். அப்பெருமை மிக்க வரலாற்றுப் பெயரை மீண்டும் சென்னை மாகாணத்திற்கு இடக்கோரி, தனி நபராக பெருந்தமிழர் ஈகி தாத்தா சங்கரலிங்கனார் அவர்கள் 79 நாட்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டு கோரிக்கை நிறைவேற்றப்படாமலே இறந்தார். அவருடைய ஈகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, அதன்பின் சென்னை மாகாண முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் கடந்த 1968 ஆம் ஆண்டு தமிழர்கள் வாழ்ந்த சென்னை மாகாணப்பகுதியின் பெயரை ‘தமிழ்நாடு’ எனப் பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ளபடி மீண்டும் மாற்றினார். ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்வாக வசதிக்காக மெட்ராஸ் மாகாணம் என மற்ற தேசிய இனங்கள் வாழும் நிலப்பரப்போடு சேர்த்து நிர்வகிக்கப்பட்ட நம் தாய் நிலம் அவற்றிலிருந்து விடுபட்டு தமிழ்நாடு எனத் தனித்த பெருநிலமாக உருவெடுத்த நாளினை ‘தமிழ்நாடு நாளாக’ நாம் தொடர்ச்சியாக கொண்டாடி வருகிறோம். ‘தமிழ்நாடு’ என்று பெருமிதத்தோடு அழைத்தாலும் தமிழர் நிலத்தில், தமிழர்களுக்கான முதன்மைத்துவம் இன்றளவும் கிடைக்கப்பெறவில்லை என்பதுதன் பெருங்கொடுமை. தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கன்னடர் ஒருவரை நியமித்துள்ள அநீதி தவெக அரசால் இழைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உச்ச பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அனைவரும் தமிழர் அல்லாத பிறமாநிலத்தை சேர்ந்தவர்களே உள்ளனர். தவெக அரசின் அதிகார மையங்களாக இருப்பவர்கள் அனைவரும் பிற மாநிலத்தவர்களாகவே உள்ளனர். அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் தமிழர்கள் அதிகாரம் ஏதுமற்ற கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தாய்மொழிக்காக தன் இன்னுயிரை இழந்த கூட்டம் உலக வரலாற்றில் தமிழர்களைப் போல எவரும் இல்லைதான். ஆனாலும், இந்நொடி வரை நம் உயிருக்கு நிகரான தமிழ் மொழி அரச மொழியாகவோ, அதிகார மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ, வழிபாட்டு மொழியாகவோ மாறுவதற்கு இன்னும் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். ‘தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இல்லை. ஆவின் பால் முதல் அரசின் ஆணைகள் வரை தமிங்கல விளம்பரங்கள். குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்டுவது குறைந்துவிட்டது. ஆங்கிலம் கலந்து பேசுவதையும் எழுதுவதையும் தமிழ்நாடு அரசே ஊக்குவிக்கும் அவல நிலையுள்ளது. இடையிடையே ஆங்கிலம் கலந்து பேசுவதையே நல்லியல்பு, அதுவே நவீன நாகரீகம் என்று எண்ணுகிற மூடத்தனம் எங்கும் விரவிக் கிடக்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் சட்டசபையிலயே வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம் கலந்து பேசும் அவலத்தையும், அமைச்சர் பெருமக்கள் முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை தப்பும் தவறுமாக தமிழைப் பேசும் அவலத்தையும் தமிழ்நாடு காண்கிறது. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி புகுத்தப்பட்டு தாய்மொழிக் கல்வி முற்றாக சிதைந்துள்ளது. பெயருக்குத்தான் இது தமிழ்நாடு! ஆனால், தமிழுக்கும், தமிழருக்கும் இது சுடுகாடு என்கின்ற நிலைக்கேற்ப தமிழ்நாட்டு வீதிகளில் எங்கும் தமிழ் இல்லை என்றாகிவிட்டது. தமிழர் நாவினில், தமிழர் வாழ்வினில் தமிழுக்குப் பஞ்சம். தூய தமிழ் பெயர்ப்பலகைகளை தமிழ்நாட்டில் காண்பது அரிது. நம்முடைய தாத்தா புரட்சிப்பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், மணக்க வரும் தென்றலிலே, குளிரா இல்லை? தோப்பில் நிழலா இல்லை! தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை’ என்று வருந்திப்பாடி 70 ஆண்டுகளை கடந்துவிட்ட பிறகும், அதைவிட மோசமானநிலை இன்றும் நீடிப்பதுதான் வரலாற்றுப் பெருந்துயரம். அத்தகு பிறமொழி கலக்கும் அவலநிலை நீங்கி தாய்த் தமிழ்மொழி ஆட்சி அதிகார மொழியாக உண்மையான மாட்சிமை பெற்றிட தமிழ்நாடு நாளில் உளமாற உறுதியேற்போம். உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பு நிறைந்த ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகள்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
32
614
23
1,215
21,006
தமிழ்நாடு நாள் வாழ்த்துகள்✊🏽 #TamilNaduDay2026
1
28
102
680
உண்மையைப் பேசு! உரக்கப் பேசு! உறுதியாக பேசு! இறுதிவரை பேசு! ஆங்கிலேய காலனிய அரசின் அடக்குமுறையான ‘குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு’ எதிராக மக்கள் சக்தியைத் திரட்டி, பெரும் போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி கண்ட வீரத் திருமகன்! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயப் பிரவேசப் போராட்டத்தில் களமிறங்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமைக்கு அரணாக நின்று பாதுகாப்பளித்த சமூகநீதி காவலர்! ஆலைத் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, தொழிற்சங்கங்களை அமைத்து, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகத் தன் குரலை உயர்த்தியப் புரட்சியாளர்! இந்திய தேசிய ராணுவத்திற்கு (INA) தமிழகத்தில் இருந்து ஏராளமான இளைஞர்களைத் திரட்டி அனுப்பி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உற்ற தோழராகத் திகழ்ந்த போராளி! அரசியல் அதிகாரங்களையும் பதவிகளையும் துறந்து, எளிய வாழ்க்கை வாழ்ந்து மக்களின் நலனுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த செம்மல்! தேவர் ஜெயந்தி நாளாம் இன்று தேசியம், தெய்வீகம் இரண்டையும் தன் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த தமிழினத்தின் மதிப்புமிக்க தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அய்யா அவர்களின் புகழைப் போற்றி வணங்குவோம்!
1
110
1
447
2,460
தமிழ்ச் சமூகத்திற்காகவும் ஒட்டு மொத்த தேசத்திற்காகவும் போராடிய புரட்சியாளர் தெய்வத்திருமகனார் தாத்தா முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருப்புகழ் போற்றுவோம்! 🙏🏽
4
108
Manasha Kumar retweeted
தெய்வத்திருமகன் தாத்தா முத்துராமலிங்கத் தேவர் திருப்புகழ் போற்றுவோம்!
3
98
1
207
2,110
“முழு இந்தியாவிலும் வாழ்க தமிழ்" என்று முழங்கி, தாய்த்தமிழையே தான் வாழும் தேசமென கொண்டாடிய தன்மானத்தமிழர்..! "பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கின்ற சாதியப் பாகுபாடு கூடவே கூடாது” என்று போதித்த சமத்துவ நாயகர் தாத்தா முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் தோன்றிய திருநாள் இன்று! அடிமை வாழ்வினைவிட விடுதலைச்சாவு மேலானது; விடுதலை அல்லது வீரமரணம் என முடிவெடுத்து, தம் இளம் வயதிலேயே போராட்டக் களம் கண்ட விடுதலைப்போராளி..! கைரேகை வைக்க வேண்டும் என்ற இழிநிலையைச் சுமப்பதற்குப் பதிலாகக் கட்டைவிரலை வெட்டி எறியலாம் என்று கிளர்ச்சி செய்த புரட்சியாளர்..! "தவறுகள் நடப்பது தீயவர்களால் அல்ல; அதை அமைதியாக வேடிக்கைப் பார்க்கும் நல்லவர்களால்தான்!" என்றும், "நான் யாரையும் எதிரியாகக் கருதுவபவனில்லை; தவறுகள் நடப்பதைக் கண்டிக்கும் என்னை எதிரியாகப் பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல!" என்றும், "தான் வாழ, பதவி தேவை என்று எண்ணுபவர்களிடம் உண்மைக்குப் புறம்பானவற்றைத்தான் எதிர்பார்க்க முடியும்!" என்றும், "பதவியை ஒரு சேவையாகக் கருதுபவர்களிடம் ஆட்சி இல்லாமல் போனால், மக்களுக்கு நலன் என்பது வெறும் பகல் கனவுதான்" என்றும், எக்காலத்திற்கும் பொருந்தும் அரசியல் மொழிகளை அருள்மொழிகளாக அள்ளித்தந்த கால ஞானி..! “தமிழர்கள் எங்களை வீழ்த்தியது, தமிழருக்குள்ளே இருக்கிற வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம், பதவிவெறி, பணத்தாசைதானே ஒழிய, வீரமோ - ஆயுதமோ இல்லை!” என்று அன்றே உணர்ந்து, உணர்த்திய பெருந்தமிழர்..! “எனக்கு பாய்தான் தெரியும், பஞ்சு மெத்தை தெரியாது; பதுங்கத் தெரியும், பயம் கொள்ளத் தெரியாது; விவசாயம் தெரியும், வியாபாரம் தெரியாது!” என்று வாழ்ந்த எளிய மகன்..! "பணத்திற்கு மயங்கி வியாபார அரசியலுக்கு இடம் கொடுத்துவிடாது; விவசாய அரசியலை அமைத்து, நாட்டின் பண்பாட்டையும், ஏழை மக்களின் நல்வாழ்வையும் பாதுகாக்க வேண்டும்!" என்று முழங்கிய மக்கள் தலைவர்..! "உண்மையைப் பேசு! உரக்கப் பேசு! உறுதியாகப் பேசு! இறுதிவரைப் பேசு! நீயே உண்மையான வீரன்..!" என்று கற்பித்த பெருந்தகை..! "மலர்மாலைக்கு ஒருவன் கழுத்தை நீட்டுவதைப்போல, மரணக் கயிற்றுக்கு எவன் கழுத்தை நீட்டுகிறானோ, அவன்தான் வீரன்!" என்று எங்களைப் போன்ற தமிழிளம் தலைமுறையினருக்கு உணர்வூட்டிய வீரத்தமிழ்மகன்..! "தேசமே எனது உடல், தெய்வீகமே எனது உயிரென" வாழ்ந்து, தீரமிக்க விடுதலைப் போராளிகளைத் தாயக விடுதலைக்குத் தந்த தன்னிகரற்ற தலைவன்..! தெய்வத்திருமகன் நம்முடைய தாத்தா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களினுடைய திருப்புகழைப் போற்றுகின்ற இந்நாளில், அவர் காட்டிய வழியைப்பற்றி நடக்கும் தமிழிளம் தலைமுறையினராகிய நாம், அடிமை தமிழ்ச்சமூகத்தின் உரிமை மீட்சிக்கும், அதன் எதிர்காலப் பாதுகாப்பான நல்வாழ்விற்கும் இறுதிவரை உறுதியாகப் போராடுவோம் என்கிற உறுதியை ஏற்போம்! மதிப்புமிக்க நம்முடைய தாத்தா தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! நாம் தமிழர்!
9
378
5
956
12,171
Manasha Kumar retweeted
“சீமானின் வெற்றி தமிழ்நாட்டின் வெற்றி“ #சட்டமன்றத்தில்_நாம்தமிழர்
147
460
15
1,191
36,948
Manasha Kumar retweeted
மக்கள் தலைவன் எப்போதும் மக்களோடு! #ntk #seeman
12
136
1
262
3,943
தரங்கெட்ட ஆட்சி இந்த தவெக ஆட்சி! #TVKFails #ntk #Seeman
14
68
551
வயதில் எவ்வளவு முதிர்ந்தவராக இருந்தாலும், எடுத்த எடுப்பிலேயே 'அவன்', 'இவன்' எனப் பேசி எளிய மக்கள் மீது அதிகாரத்திமிரைக் காட்டுகிற காவல்துறை அதிகாரிகள், சேகர் பாபுவிடம் பம்முவது ஏன்? 'யோவ்' என ஒரு சாதாரண மகன் இதேபோல் காவல்துறையை நோக்கி ஒருமையில் பேசினால் சும்மா விட்டுவிடுவார்களா? அடித்தட்டு மக்களென்றால், சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்துக் கைதுசெய்யும் வீரம் (!) எல்லாம் எங்கே போனது? எளிய மக்களுக்கு ஒரு நீதி! சேகர் பாபுவுக்கு ஒரு நீதியா?
போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சேகர்பாபு.. #Chennai | #Hospital | #DMK | #AnbilMaheshPoyyamozhi | #SekarBabu | #PolimerNews
104
349
19
1,154
101,992
Manasha Kumar retweeted
நாதக சார்பில் தூய்மைப் பணி தொடக்கம் #NTK #Manimutharu #Seeman #DinakaranNews
56
157
1,760
தவெக கட்சியின் நிலைமை! #tvkfails #TVKFailsTN #ntk
10
31
402
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளில் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை ஏற்படுத்தும் விதமாக கொட்டப்பட்டுள்ள நெகிழி மற்றும் திடக்கழிவுகளை அகற்றுவதற்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் அனுமதி பெற்று, இன்று ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2026 தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்தபோது,
19
433
4
998
15,988