சர்க்காரியா கமிஷன் ஊழலைப் பற்றி எல்லாம் பேசும் தவெக அரசு.
ஊழல் செய்தவர்களை என்ன செய்தது?
நீங்கள் செய்ததெல்லாம் ஊழல்வாதிகளை இன்ஸ்பெக்டரை மிரட்டவிட்டு வேடிக்கை பார்த்தது மட்டும்தான்.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷைக் கைது செய்ததை நீங்கள் கொண்டாடலாம். ஆனால், அவர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்துக் கைது செய்தது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை. இது மகிழ்ச்சிதான்.
ஊழலை விசாரிப்பதற்கென்று இருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை உறங்குகிறதா?
ஒரு நாளுக்கு ஐந்து முறை செய்தியாளர் சந்திப்பை நடத்திப் பேசும் அந்தத் துறையின் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் பேசினாரா?
ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகியும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி ஒருவரைக்கூட கைது செய்யாதது ஏன்?
அதிலும் வியப்பு, முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது மணல் அள்ளுவதில் 4,700 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக ஆதாரத்துடன் வழக்குப் பதிவு செய்ய, தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இன்றுவரை FIR பதிவு செய்யப்படவில்லை.
இதுதானா முதல்வர் விஜய் அவர்கள் சொன்ன, “தொடவும் விடமாட்டோம், தொட்டவனையும் விடமாட்டோம்”?
முதல்வர் விஜய் அவர்கள் மேடைகளில் ஒன்று பேசுகிறார். ஆனால், அதற்கு நேர் எதிராக அமைச்சர்களின் செயல்பாடுகள் இருக்கிறது.
என்னதான் நடக்கிறது தவெக ஆட்சியில்?
@CTR_Nirmalkumar @CMOTamilnadu
சகிக்கவே இயலாத ஊழல்களால் சந்தி சிரிக்கும் ஓர் இயக்கம்தான் தி.மு.க. என்பதை ஊர் அறியும். உலகறியும். பாரம்பரியமான லஞ்ச லாவண்யத்தின் மூலம் ஊரை அடித்து உலையில் போட்டதால் ஆணிவேர் வரை அழுகிக் கொண்டிருக்கும் அட்டகாசமான அரசியல் கட்சிதான் தி.மு.க.
தி.மு.க.வின் முக்கிய மற்றும் உயரிய அடிப்படை குணங்களில் ஒன்றுதான் மக்கள் பணத்தை வாரிச்சுருட்டுதல். இதை தி.மு.க. ஆட்சியில் நடந்தேறிய ஊழல் கொள்ளைகள் வாயிலாக மக்களே நன்கு அறிவர். இதை மெய்ப்பிக்கும் விதமாகத்தான் முன்னாள் கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் மீதான ஊழல் முறைகேடு வழக்கும் அதுசார்ந்த கைது நடவடிக்கையும் உள்ளது.
தி.மு.க.வின் பாரம்பரியப் பெருமை மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் திரு.அன்பில் மகேஷ் அவர்கள். அவருடைய தந்தைவழி தாத்தாதான் திரு. அன்பில் தருமலிங்கம். கலைஞர் அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர். அந்தக் காலத்திலேயே தி.மு.க. அமைச்சரவையிலும் இடம்பெற்றவர்.
சர்க்காரியா கமிஷன் விசாரணையின் இறுதி அறிக்கையில் ஊழல் செய்ததற்காகப் புகழப்பட்டவர்களில் அன்பில் மகேஷின் தந்தைவழி தாத்தாவும் ஒருவர் என்பது மிகவும் போற்றுதலுக்கு உரியது.
சர்க்காரியா கமிஷனின் இறுதி அறிக்கையில் அன்பில் மகேஷின் தாத்தா குறித்து சொல்லப்பட்டது என்ன தெரியுமா?.
நம்பத் தகுந்த அதிகாரப்பூர்வ வருமானவரிப் பதிவேடுகள்(authentic income-tax records), பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள்(registered documents), வருமானவரித் துறை அதிகாரிகள், பதிவுத்துறை அதிகாரிகள், கிராமத் தலைவரின் வாக்குமூலம் மற்றும் இன்ன பிறவற்றின் (statements of Income-tax officials , officials of Registration Department, Village Headman etc.,) மூலம் மிகவும் தெளிவாகத் தெரியவருவது என்னவென்றால், திரு.அன்பில் தருமலிங்கமும் அவரது குடும்ப உறுப்பினர்களும் 1967க்கு முன் வசதி படைத்தவர்களாக இருக்கவில்லை(not affluent prior to 1967). 1967ல் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னரே அவர்கள் திடீர் வசதி படைத்தவர்களாகவும் செல்வச் செழிப்பு மிக்கவர்களாகவும் மாறி உள்ளனர்(a spurt in their affluence and prosperity after the D.M.K came into power in 1967).
திரு,ஸ்டாலின் சார் குடும்பத்திற்கும் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் குடும்பத்திற்கும் இடையே மூன்று,நான்கு தலைமுறைகளாகத் தொட்டுத் தொடரும் தூய நட்பு பாரம்பரியம் உள்ளது என்பதை தி.மு.க. தலைவரே மேடைகள் தோறும் பெருமையுடன் குறிப்பிட்டு மகிழ்வார். ஊழலிலும் அதே பாரம்பரியம்தான் தொட்டுத் தொடருகிறதா என்ற கேள்வி இயல்பாக மக்கள் மனதில் எழுந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல.
இப்படி எல்லாம் குறிப்பிட்டால், ஊழல் நிரூபிக்கப்பட்டதா?; ஊழலுக்காகத் தண்டிக்கப்பட்டோமா? என்று உச்சஸ்தாயில் திமுகவினர் உளறிக் கொட்டுவார்கள். ஆனால், பரம்பரையில் ஒருமுறை வேண்டுமானால் தவறு செய்துவிட்டுக் கைதாகாமல் தப்பிக்கலாம். ஒவ்வொரு முறையும் தப்பிக்க இயலாது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பது நெருப்புநீதிதானே?.
இப்போது புரிகிறதா திமுகவின் உயர்ந்த உன்னதமான ஊழல் பாரம்பரியம்?. மக்கள் பணத்தை, அதுவும் குழந்தைச் செல்வங்கள் சம்பந்தப்பட்ட கல்விச் செல்வம் சம்பந்தமான துறையில் கை வைத்தவர்களை கைது செய்வது எப்படி அரசியல் காழ்ப்பாகும்?. உரிய விளக்கத்தை அளிப்பீர்களா துப்பில்லாத திரு.ஸ்டாலின் சார் அவர்களே?.
இந்த கல்வித்துறை ஊழல் வழக்கின் ஆணிவேர், ஏற்கனவே அழுகிக்கிடக்கும் தி.மு.க.வின் ஆணிவேரை மேலும் மேலும் அழுக வைக்கும் என்பதாலும் இவ்வழக்கின் விசாரணை தி.மு.க.வின் ஊழலின் ஊற்றுக்கண் வரை சென்றால் ஒட்டுமொத்த திமுகவும் ஒப்பாரி வைத்து அழ நேரிடும் என்பதாலும்தான் ஸ்டாலின் சார் சகட்டுமேனிக்கு கோபப்படுகிறாரா என்று மக்கள் கேட்கத் தொடங்கி உள்ளனர்.
சட்டம் ஒழுங்கு முதல் அனைத்தையும் சரி செய்வதை எங்கள் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனித்துக் கொள்வார். ஏற்கனவே அதற்கான தொடர் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார். ஆனால், உங்கள் வெற்று விளம்பர மாடல் திமுக ஆட்சி, பல்வேறு துறைகளிலும் திருட்டு மாடலாக இருந்ததற்கும் தில்லுமுல்லு மாடலாக இருந்ததற்கும் எப்போது ஒப்புதல் வாக்குமூலம் தரப் போகிறீர்கள்?. அதைச் செய்யாமல் எங்களைத் திசைத் திருப்ப எதையாவது இட்டுக்கட்டாதீர்கள் என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரலும் ஓங்கி ஒலிக்கத் தொடங்க உள்ளது.
அன்பில் மகேஷ் அவர்கள் தன்மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்திப்பார் என்று சொல்லும் ஸ்டாலின் சார், அவர் ஊழலே செய்யவில்லை என்று உரக்கக் கூறவில்லையே ஏன்?.
துப்பில்லாத ஸ்டாலின் சார், உங்களுக்கு வாயைத் திறக்க வகை இருக்கிறதா?. தெம்பு இருக்கிறதா?. திராணி இருக்கிறதா?. பதில் சொல்லுமா பவள விழாப் பாப்பாவின் தலைமை?.
Do you remember ?
@mkstalin
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
25 நாட்கள் உறங்கினீர்களா ?
@mkstalin
சிறுமிகளுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற இழிவான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எவராயினும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்கள் ஆயினும் தப்பிக்க கூடாது. அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. இந்த வழக்கின் முடிவு, இனி இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணமே எவருக்கும் வராத வகையில் அமைய வேண்டும் என்பதுதான் ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவனாகவும், ஒரு குடும்பத்தலைவனாகவும், மனசாட்சி உள்ள மனிதனாகவும் எனது விருப்பம்.
ஆனால், இந்த வழக்கில் தேவையே இல்லாமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் தி.மு.கழகத்தின் மீது பொய்யாக அவதூறுகளைப் பரப்பி, ஒரு கூட்டம் குளிர்காய்ந்து வருவது மிகவும் அருவெறுப்பான செயலாகும். வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் கழக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை.
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்பட்டது. இவை அனைத்தும் பொதுவெளியில் இருக்கும், மறுக்க முடியாத உண்மைகள் ஆகும். எவரையும் காப்பாற்ற வேண்டிய தேவை கழக ஆட்சிக்கு இல்லை.
தற்போதைய த.வெ.க. ஆட்சியில் நடப்பதுபோல, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது அனைத்துப் பத்திரிகைகளின் முன்பும் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னரும், நடவடிக்கை எடுக்காமல், சமரசம் பேசி வழக்கை முடித்து வைக்கும் இழிசெயல்கள் கழக ஆட்சியில் நடைபெறவில்லை.
எனவே, சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் இழிவான செயலையும், முற்றிலும் பொய்யான அவதூறுகளை ஊடகங்கள் மூலமாக பரப்புவதையும் ஆளும்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி பெற்றுத் தருவது மட்டுமே நம் அனைவரின் நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் பேச்சு உங்களுக்கே முரணாக இருக்கிறது .
உங்கள் கூற்றுப்படி சினிமா நடிகன் நாட்டை ஆளக்கூடாது அப்படி என்றால் நீங்கள் யார் ?
அரசியல்வாதியா ? சினிமா நடிகரா ?
@Seeman4TN
"சித்தாந்தம் வேண்டாம், சினிமா போதும்" என்ற சூழல் நிலவுகிறது
தாராபுரத்தில் நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
#Seeman #NTK #NaamTamilarKatchi #Dharapuram #TamilNaduPolitics #PoliticalStatement #TNPolitics #ByElection #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
வீரமணி வழக்கில் திமுக ஆட்சி காலகட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டால் அமைச்சர் நிர்மல் குமார் வீரமணியிடம் பணம் பெற்று விட்டார் என்று சொல்வது அசிங்கமாக இல்லையா ?
தவெக ஆட்சியில் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மேலும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது ஆனால் கடந்த ஆட்சியில் நீங்கள் செய்தது என்ன ?
ஆர் எஸ் பாரதி அவர்களே உங்கள் தலைவர் மு க ஸ்டாலினை பார்த்து கேளுங்கள்" பணத்தைப் பெற்றுக் கொண்டுதான் நீங்கள் வீரமணி மீது நடவடிக்கை எடுக்கவில்லையா என்று "
இதுபோன்று அவதூறும், ஆணவமும் உங்களிடம் இருக்கும் வரை உங்களை அழிக்க யாரும் தேவையில்லை நீங்களே உங்களை அழித்துக் கொள்வீர்கள்..
@arivalayam
@RSBharathiDMK
8 மாதம் ஆகியும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேட்கிறது சென்னை பத்திரிகையாளர் மன்றம் . அவர்களைப் பார்த்து கேட்கிறேன் கடந்த 8 மாதம் தவெக தான் ஆட்சியில் இருக்கிறதா ?
திமுக ஆட்சியில் தேனாறும் பாலாறும் ஓடுகிறது என்று துதி பாடினீர்களே அவர்களைப் பார்த்து கேளுங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இருக்கும் குடும்பத்தில் இருக்கும் பெண்களைப் பற்றி HIV இருக்கிறது என்று தவறாக பேசினால் இப்படித்தான் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்குமா ?
நீங்கள் முக்தாரீன் கைதுக்கும், நக்கீரன் பிரகாஷின் கைதுக்கும் கண்டனம் தெரிவிக்கும் போதே நீங்கள் யார் என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள்..
@MadrasJournos
மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் கைது।
புகாருக்கும் நடவடிக்கைக்கும் 8 மாத இடைவெளி ஏன்?
அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று எண்ணத் தோன்றுகிறது.
பத்திரிகைத்துறையில் கால் நூற்றாண்டிற்கு மேல் பயணித்து வரும் தாமோதரன் பிரகாஷ், நக்கீரன் புலனாய்வு இதழில் மூத்த செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.
நக்கீரன் இதழ் வெளியிட்ட பல புலனாய்வு செய்திகளில் தாமோதரன் பிரகாஷ் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. சங்கரராமன் கொலை வழக்கு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் யாருக்கும் அஞ்சாமல் தாமோதரன் பிரகாஷ் அவர்கள் மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கைகள் பல உண்மையை வெளிக்கொண்டு வந்தது.
இன்று காலை சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தாமோதரன் பிரகாஷ் அவர்களின் இல்லத்திற்கு வந்த காவல்துறையினர் அவரை கைது செய்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
கைது தொடர்பாக காவல்துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் ஒரு யூடியூப் சேனலில் பெண் யூட்யூபர் ஒருவர் குறித்து தாமோதரன் பிரகாஷ் தெரிவித்த அவதூறான கருத்துக்களுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகார வர்க்கத்தின் தவறுகளை யாருக்கும் அஞ்சாமல் தைரியமாக சுட்டிக்காட்டி விமர்சித்து வரும் தாமோதரன் பிரகாஷ், சுமார் 8 மாதங்களுக்கு முன் யூட்யூபில் பேசியதற்காக எந்த வித முன் விசாணையுமின்றி தற்போது கைது செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
தவறுகளை சுட்டிக்காட்டும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் எண்ணத் தோன்றுகிறது.
தாமோதரன் பிரகாஷ் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டில் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், தொடர்புடைய நபரிடம் சட்டப்பூர்வமாக விளக்கம் கேட்காமல், எந்தவித விசாரணையும் நடத்தாமல் நேரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள கைது நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
கைது செய்யப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.
Thank You, The People’s Beloved! ❤️🩹🫠
@SilambarasanTR_
பாலன் இல்லத்தில் CJP க்கு ஆதரவாக போராடுகிறோம் என்று கூறும் போலி கூட்டத்திடம் கேட்கிறேன் .
உங்களின் நோக்கம் நீட் தேர்விற்கு எதிராக போராடுவதா ? அல்லது முதல்வர் விஜய்க்கு எதிராக போராடுவதா ?
டெல்லியில் CJP சார்பில் நீட் தேர்வில் நடக்கும் குளறுபடிகளுக்கு எதிராகவும் இந்த குளறுபடிக்கு காரணமான அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் நியாயமான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால் தமிழகத்தில் பாலன் இல்லத்தில் CJP -க்கு ஆதரவாகவும் நீட் தேர்வுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி வருவதாக அவர்களே சொல்லிக் கொள்கின்றனர் .ஆனால் அந்த போராட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராகவும் பாஜக அரசை கண்டித்தும் பேசியதை விட அவர்கள் முதல்வர் விஜய் அவர்களை கண்டித்தும் ஜனநாயகன் படம் பார்த்தவர்களை கண்டித்தும் மட்டுமே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டம் மாணவர்களின் போராட்டம் அல்ல மாறாக திமுக உடன் பிறப்புகளின் போராட்டம்...
தெரிஞ்சுக்கோ... புரிஞ்சுக்கோ...
"போராட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஷனம் ஷெட்டி வருகை தந்துள்ளார்.."
நடிகை ஷனம் ஷெட்டி பிரச்சனை குறித்து கரப்பான் பூச்சி கட்சியினர் விளக்கம்
#Chennai | #CJP | #ActressSanamShetty | #Protest | #PolimerNews
கடந்த திமுக ஆட்சியில் ரிப்பன் மாளிகை முன்பு அமர்ந்து பல நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள் அப்போது கூலி படம் பார்க்க வழக்கம்போல் செல்லும் பாதையில் சென்றால் தூய்மை பணியாளர்கள் தன்னை மறித்து கேள்வி கேட்பார்கள் அவர்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும் என்று பயந்து மாற்று வழியில் சென்று கூலி படம் பார்த்த நீங்கள் எல்லாம் எப்படி மற்றவர்கள் சினிமா பார்ப்பதை விமர்சிக்கிறீர்கள் ?
தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் அடித்து நாயைப் போல் வண்டியில் ஏற்றி சென்றார்களே அப்போது உங்கள் அப்பா கூலி படம் பார்த்துக் கொண்டிருந்தாரே அவரிடம் இப்படி கேட்டதுண்டா ?
இன்று காவல் மரணங்கள் நடந்தால் துடிதுடித்துப் போய் அவர்கள் வீட்டிற்கு செல்வதும் ,அறிக்கை வெளியிடுவதும் விந்தையாக இருக்கிறது .
கடந்த ஆட்சியில் இருபதுக்கு மேற்பட்ட காவல் மரணங்கள் நடந்தது எத்தனை பேர் வீட்டிற்கு நீங்கள் சென்றீர்கள் ? இதற்கு உடந்தையாக இருந்த எத்தனை அதிகாரிகளை நீங்கள் கைது செய்தீர்கள் ?
இந்த ஆட்சியில் நடக்கும் காவல் மரணங்களை நான் நியாயப்படுத்த வில்லை ஆனால் திமுகவில் இருக்கக்கூடிய ஒருவருக்கும் இதை பற்றி பேசவா கேள்வி கேட்கவோ தகுதியே இல்லை.. @Udhaystalin @arivalayam
சினிமா பார்க்கும் ஆட்சியாளர்களிடம் என்ன பதில்?: உதயநிதி
#UdhayanidhiStalin | #DMK | #Thoothukudi | #TNPolice
2021 தேர்தலில் நீட் தேர்வை ரத்து செய்வோம் அதற்கான ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு அதை கடைசி வரை ரகசியமாகவே வைத்து மாணவர்களை ஏமாற்றி விட்டு இப்போது இதைப்பற்றி பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா ?
நீங்கள் என்ன உருட்டினாலும் அது மக்களிடம் எடுபடாது நீங்கள் யார் என்பதை தெரிந்து கொண்டுதான் உங்களை மக்கள் MLA -வாக கூட தேர்ந்தெடுக்கவில்லை.
புதுசா யோசிங்க.... @mkstalin
NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards.
On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres.
The problem with NEET has always been structural, not merely procedural. Recent events have vindicated that concern.
The ongoing student protests must serve as a wake-up call for the Union Government. It's time to trust the states. It's time to abolish NEET.
Read my op-ed in today's @The_Hindu: thehindu.com/opinion/op-ed/m…
இந்த கைதை கண்டிக்கவோ, காவல்துறையை எப்படி கையாள்வது பற்றியோ பேசுவதற்கு உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது.
உங்களை விமர்சனம் செய்ததற்கு எல்லாம் நீங்கள் கைது செய்தீர்கள் கடந்த ஆட்சியில். அப்போது பொம்மை முதல்வர் போல் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு இப்போது மட்டும் துடிப்பது ஏன் ? @mkstalin
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு.
"அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்?
கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?
மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்?
ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.
கடந்த தி.மு.க ஆட்சியில் 28 காவல் மரணம் அரங்கேறியதே அப்போது எங்கு சென்றீர்கள் ? @KanimozhiDMK
நாகர்கோவிலில் காவல் மரணம் அடைந்த சபரி வர்மன் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல சென்ற திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியிடம் கண்ணீர் மல்க முறையிட்ட உறவினர்கள்
#Nagercoil | #DMK | #Kanimozhi | #Lockupdeath
Eat Arun ice cream do nothing 😋
It was very tasty, thank you for giving @arunicecream
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்....🥳
#JUSTIN || லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் மாற்றம் | #IPS | #IPSArunkumar | #DirectorateofVigilance | #AntiCorruption | #PoliceAcademy | #PolimerNews




























