தேசிய பால் தினம் ~ ஜி.கே.மணி
நவம்பர் 26 - தேசிய பால் தினம்
இந்தியாவில் வெண்மைப் புரட்சியை உருவாக்கிய 'இந்திய பால் பண்ணையின் தந்தை' டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பிறந்தநாளையே தேசிய பால் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. கிராமப்புறப் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும், மக்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதிலும் பால் உற்பத்தி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
இன்றைய தினத்தில் பால் உற்பத்தித் துறையின் வளர்ச்சியைப் பற்றிப் பெருமைப்படும் நாம், அந்தப் பாலை உற்பத்தி செய்து கொடுக்கும் பால் விவசாயிகளின் கஷ்டத்தையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அதிகாலை எழுந்து, கால்நடைகளைப் பராமரித்து, தீவனம் வைத்து, பால் கறந்து ஊற்றும் விவசாயிகளுக்கு, அதற்கேற்ற நியாயமான பால் கொள்முதல் விலை இன்றளவும் கிடைப்பதில்லை.
கால்நடைத் தீவனங்களின் விலை, மருத்துவச் செலவுகள், பராமரிப்புச் செலவுகள் என அனைத்தும் பல மடங்கு உயர்ந்துவிட்டன. ஆனால், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான விலை மட்டும் கட்டுபடியாகாத நிலையிலேயே உள்ளது.
லாபம் இல்லாமல், நஷ்டத்தில்தான் பல விவசாயிகள் மாடுகளை வளர்த்து வருகின்றனர். பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைக்காததால், பலர் கால்நடை வளர்ப்பையே கைவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்காக உழைக்கும் பால் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும். உற்பத்திச் செலவுக்கு ஏற்ப பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8
நவம்பர் 26 - இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் -~ ஜி.கே.மணி
1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள், நமது நாட்டின் அரசியல் நிர்ணய சபையால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு, நடைமுறைக்குக் கொண்டு வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும்.
"சட்டத்தின் முன் அனைவரும் சமம்"
இதன் அடிப்படையில் இந்தியா ஒரு இறையாண்மை கொண்ட, சுதந்திரமான, சமுதாய நலம் நாடும், சமயச்சார்பற்ற, சம உரிமைக் குடியரசு நாடாகும். எல்லோருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நியாயம் கிடைக்கவும்; கருத்து வெளிப்பாடு, நம்பிக்கை, மதம் மற்றும் வழிபாடுகளில் சுதந்திரம் கிடைக்கவும்; சமூக நிலையில் சமத்துவம், வேலை உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளிலும் சம உரிமை கிடைக்கவும்; ஒவ்வொரு மனிதனின் கண்ணியத்தையும், நாட்டின் ஒற்றுமையையும் காக்கும் வண்ணம் அனைவரும் சகோதரர்கள் என்ற உடன்பிறப்பு உணர்வை ஊக்குவிக்கும் வகையிலும் நமது அரசியலமைப்புச் சட்டம் 1949 நவம்பர் 26-ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்திய அரசியலமைப்பில் 22 பாகங்கள் (அத்தியாயங்கள்), 12 அட்டவணைகள், 395 பிரிவுகள் உள்ளன. இவற்றில் அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள், மத்திய அரசின் நிர்வாக அமைப்பு, மாநில அரசுகள், நீதித்துறை அமைப்பு போன்றவை தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.
மத்திய, மாநில அரசுகள் மக்களைப் பாதுகாத்து, நல்வழிப்படுத்தி, மேம்படுத்திடச் சட்டங்கள் இயற்றுதல்; எல்லோருக்கும் போதுமான வாழ்க்கை வசதிகள், வயதுக்கு ஏற்ற பொருத்தமான வேலைவாய்ப்பு, தொழில் செய்ய ஏற்ற சூழ்நிலை, இலவசக் கட்டாயக் கல்வி, பொதுச் சுகாதாரம், மதுவிலக்கு, வேளாண் வளர்ச்சி, தரமான குடிநீர், குடியிருக்க வீடு, சட்டம்-ஒழுங்குப் பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்தல் ஆகியவை அரசின் கடமைகளாகின்றன.
ஆனால், இன்று சட்ட நடைமுறையில் அடித்தட்டு மக்கள் வரை சம உரிமை முழுமையாகக் கிடைக்கவில்லை. அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுப் பல தசாப்தங்கள் கடந்த நிலையிலும், அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படவில்லை. வறுமை ஒழியவில்லை; வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகிவிட்டது.
நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன; அவற்றை விரைந்து முடிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பொய் வழக்குகள் புனைதல் போன்ற சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். உண்மையான நீதியும், சட்டத்தின் பயனும் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும்.
1
229
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் ~ ஜி.கே.மணி
இன்று (நவம்பர் 25) சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சியும், நாகரிகமும் அந்த நாட்டுப் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும் வாழ்கிறார்கள் என்பதில்தான் அடங்கியுள்ளது.
பெண்களைத் தெய்வமாகப் போற்றும் நம் நாட்டில் இன்றும் வன்முறை, பணியிடங்களில் பாகுபாடு, இணையவழித் துன்புறுத்தல்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பின்மை எனப் பெண்கள் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருவது வேதனையளிக்கிறது. வன்முறை என்பது உடலளவில் மட்டுமல்ல, ஒரு பெண்ணின் கனவுகளைச் சிதைப்பதும், உணர்வுகளைக் காயப்படுத்துவதும், வாய்ப்புகளை மறுப்பதும் கூட வன்முறைதான்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வேரறுக்கச் சட்டங்கள் மட்டும் போதாது; ஆண்களின் மனநிலையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஆழமான மாற்றம் ஏற்பட வேண்டும். குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும் மாற்றத்தை பெண் குழந்தைகளுக்குக் கல்வியையும், துணிச்சலையும் ஊட்டுவதோடு, ஆண் குழந்தைகளுக்குப் பெண்களை மதிக்கும் பண்பையும் சிறுவயதிலிருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும்.
வீடு, கல்வி நிலையங்கள், பணியிடங்கள் மற்றும் பொதுவெளிகள் என அனைத்து இடங்களிலும் பெண்கள் அச்சமின்றி நடமாடும் சூழலை உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் பெண்கள் தயக்கமின்றி குரல் கொடுக்க வேண்டும்; அவர்களுக்குத் துணையாகச் சமூகம் நிற்க வேண்டும்.
பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள்; பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, அவர்களே தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வல்லமை பெற்றவர்கள். சமத்துவமும், அன்பும், மரியாதையும் நிறைந்த வன்முறையற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்!
2
268
அகத்திலும் புறத்திலும் ஞான ஒளி ஏற்றும் திருக்கார்த்திகை தீபத் திருநாள்! நல்வாழ்த்துக்கள் ~ ஜி.கே.மணி
திருக்கார்த்திகை தீபத் திருநாளை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும், ஆன்மீக அன்பர்களும் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடி மகிழும் இந்த நாளில் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டதும், ஒவ்வொரு இல்லத்திலும் மண் அகல் விளக்குகள் வரிசையாக ஏற்றப்பட்டு வீடுகள் ஒளிவெள்ளத்தில் நிலைவாசல், முற்றம், பூஜை அறை என எங்கும் நிறைந்திருக்கும் தீபங்களின் ஒளி, இல்லங்களில் மங்கலத்தையும், அமைதியையும், செல்வச் செழிப்பையும் கொண்டு வரும் என்பார்கள்.
தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் எந்த மூலையில் தமிழர்கள் வாழ்ந்தாலும், இன்று தங்கள் இல்லங்களில் அகல் விளக்கேற்றி நம் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் போற்றி வருகின்றனர்.
இந்தத் திருக்கார்த்திகை நன்னாளில், நம் இல்லங்களில் ஏற்றப்படும் தீபங்களைப் போலவே, அனைவரது உள்ளத்திலும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வு எனும் ஒளி என்றும் பிரகாசிக்கட்டும்!
அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்!
#திருக்கார்த்திகை #திருக்கார்த்திகைதீபம் #திருவண்ணாமலை #மகாதீபம் #அண்ணாமலையானுக்குஅரோகரா #தமிழர்பண்பாடு #KarthigaiDeepam #Thiruvannamalai #MahaDeepam
6
246
கார்த்திகை மாதத்தின் மிகச் சிறப்பு வாய்ந்த நன்னாளான பரணி தீபத் திருநாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி எனும் ஒளி பிரகாசிக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! ~ ஜி.கே.மணி
நம் அகத்திலும் புறத்திலும் சூழ்ந்திருக்கும் அறியாமை எனும் இருளை அகற்றி, ஞானம் எனும் பேரொளியை ஏற்றி வைக்கும் இந்த கார்த்திகை பரணி தீபத் திருநாள்.
சிறிய அகல் விளக்கில் ஏற்றப்படும் ஒரு சிறு சுடர், எவ்வளவு பெரிய இருளையும் விரட்டியடிக்கும் வல்லமை கொண்டது. அதுபோலவே, நம் மனதில் எழும் சிறு நம்பிக்கையும் வாழ்வின் எத்தகைய கடினமான சூழலையும் கடந்து செல்லும் ஆற்றலைத் தரும்.
இன்று நம் இல்லங்களில் ஏற்றப்படும் தீபங்கள், நம் குடும்பத்தில் ஒற்றுமையையும், உறவுகளிடையே அன்பையும், தொழிலில் முன்னேற்றத்தையும் பெருக்கட்டும்.
உங்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையையும், ஆரோக்கியத்தையும், எல்லா வளங்களையும் கொண்டு வந்து சேர்க்கட்டும்! இனிய கார்த்திகை பரணி தீபத்திருநாள் வாழ்த்துக்கள்...
6
267
முந்தைய சென்னை மாகாணத்தில் (இன்றைய ஆந்திரா) 1926 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் நாள் அவதரித்து, 23.11.2026 இனறு நூறாண்டு கடந்து, செயற்கரிய சேவைகளை நிறைவேற்றி சாதனை படைத்த, சென்னை மாநகரின் குடிநீருக்கு ரூபாய் 276 கோடி நிதி உதவி செய்து ஆந்திர மாநிலத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து தமிழ்நாடு எல்லை ஊத்துக்கோட்டை வரை 154 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய் கரைகள் பலப்படுத்தி,காங்கிரீட் தளம் அமைத்து நிறைவேற்றிய ஆன்மீக குரு புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களின் பிறந்த நாள்.
"அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய்" எவருக்கும் தீங்கிழைக்காதே என்ற உன்னத மந்திரத்தை உலகிற்கு வழங்கிய ஆன்மீக குரு பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களின் பிறந்த தினமான இன்று, அவரைப் போற்றி வணங்குகிறேன்-ஜி.கே.மணி
பகவான் சாய்பாபா அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, புட்டபர்த்திக்கும், பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதிக்கும் பலமுறை நேரில் சென்று அவரைச் சந்தித்து உரையாடி, அவரது நல்லாசியைப் பெற்றது என் வாழ்வின் மறக்க முடியாத பாக்கியமாகும். அவரது மறைவிற்குப் பிறகும் கூட, அவரது சேவைகளையும் நினைவுகளையும் போற்றும் வகையில் பலமுறை புட்டபர்த்திக்குச் சென்று தரிசித்து வந்துள்ளேன்.
ஆண்டுக்கு சராசரியாக 1200க்கு மேற்பட்ட இலவச இருதய அறுவை சிகிச்சை, மகப்பேறு, குழந்தைகள் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ சேவைகளும்,ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை கட்டணம் இல்லாமல் கல்வி கற்கும் கல்வி சேவையும், வறண்ட கிராம பகுதிகளுக்கும், சென்னை மாநகரக்கும் குடிநீர் திட்டம் என எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக அவர் ஆற்றிய தன்னலமற்ற தொண்டுகள் என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். அவரது செயற்கரிய சேவைகள் மனித குலத்திற்கு வழிகாட்டியாகவும் அமையும்.
மனிதராக அவதரித்து,அரிய சேவைகளை ஆற்றிய பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களின் பிறந்தநாள் இன்று அவரைப் போற்றுவோம்...வணங்குவோம்...மரியாதை செய்வோம்...
8
324
முசிறி அருகே நடைபெற்ற கோர சாலை விபத்தில் 8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. நண்பர் வீட்டுக் குழந்தைகளின் காதணி விழாவிற்கு வாழ்த்துச் சொல்லச் சென்றவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களான மாணிக்கம், சங்கிலி, வேல்முருகன், ராஜேஷ், சக்திவேல், பாவாடை, சீதாராமன் மற்றும் சுப்பிரமணி ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை இழந்து மீளாத் துயரில் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு உரிய நிவாரண நிதியுதவி வழங்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். ~ ஜி.கே. மணி
792
உலக அளவில் அதிக இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா. இளைஞர்களுக்கு தரமான கல்வி, உரிய வேலை வாய்ப்பு, சுகாதாரம், சமமான வளர்ச்சி வாய்ப்பு என இளைஞர் சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொண்டால் நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடையும்.
~ ஜி.கே.மணி
இந்தியா உலக அளவில் அதிக இளைஞர்களை கொண்ட நாடு. படித்த இளைஞர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலை நீடித்துக் கொண்டே வருகிறது. உலக அளவில் தற்போது 147 கோடியே 66 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது இந்தியா. இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 30% இளைஞர்கள். இளைஞர்கள் தான் வீட்டிற்கும் நாட்டிற்கும் அளவிடற்கரிய சொத்து ஆகும். இளைஞர்களுக்கு தரமான கல்வி, உரிய வேலை வாய்ப்பு, உற்பத்தியில் பங்களிப்பு, தரமான மருத்துவ வசதி, சமமான வசதியில் பங்களிப்பு என இளைஞர் சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொண்டால் மிகப்பெரிய பலமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இன்றைய இளைஞர்கள் படித்து வேலை வாய்ப்பு இல்லாமல், கைப்பேசியிலும் கணினியிலும் தேவையற்ற நிகழ்வுகளை பார்த்தும், மது மற்றும் போதை பழக்கங்களுக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளும் நிலை மிகுந்த கவலை அளிக்கிறது.
மனித வளம் தான் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம். அதிலும் இளைஞர் சக்தி அபரிவிதமான வாய்ப்பு. இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் புதிய திட்டங்கள், தொழில் வளர்ச்சி, பொருளாதார உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி போன்ற எல்லா துறைகளிலும் இளைஞர் சக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயம்.
318
தேசிய மாணவர் படை (NCC) தின வாழ்த்துகள்! - ஜி.கே.மணி
இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் தேசபக்தி, ஒழுக்கம், தலைமைப் பண்பு மற்றும் தன்னலமற்ற சமூக சேவை மனப்பான்மையை விதைப்பதில் தேசிய மாணவர் படையின் (NCC) பங்களிப்பு மகத்தானது.
"ஒற்றுமையும் ஒழுக்கமும்" என்ற தாரக மந்திரத்துடன் நாட்டின் பாதுகாப்புக்கும், பேரிடர் காலங்களில் மக்களின் நலனுக்கும் துணை நிற்கும் அனைத்து NCC மாணவ, மாணவிகளுக்கும், அவர்களை வழிநடத்தும் அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த தேசிய மாணவர் படை தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
3
325
கோவை கங்கா மருத்துவமனையின் நிறுவனர் அமரர் சண்முகநாதன் அவர்களின் மனைவியும், மருத்துவமனையின் வளர்ச்சிக்கு அரும் பாடுபட்டவரும் மற்றும் கங்கா மருத்துவமனையின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைப் பிரிவு சேர்மேன் மருத்துவ நிபுணர் இராஜசபாபதி, மருத்துவமனையின் எலும்பு முறிவு பிரிவு சேர்மன் மருத்துவ நிபுணர் இராஜசேகர் ஆகியோரின் தாயாருமான திருமதி கனகவள்ளி அம்மையார் இறப்புச் செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. கங்கா மருத்துவமனையின் வளர்ச்சிக்கு நீண்ட காலமாக அரும்பாடுபட்டு வந்த திருமதி கனகவள்ளி அம்மையார்
மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரைப் பிரிந்து மீளாத் துயரில் வாடும் அவரது மகன்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் இராஜசபாபதி, எலும்பு முறிவு மருத்துவ நிபுணர் மருத்துவர் இராஜசேகர், பேரன்கள் மருத்துவர் இராஜா சண்முக கிருஷ்ணன், மருத்துவர் இராஜா கனகேஸ்வர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல், திருமதி கனகவள்ளிஅம்மையார் வாழ்த்துகளோடு கங்கா மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து துறை மருத்துவமனைப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். ~ஜி.கே.மணி
541
பெரம்பலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட வங்காரம் கிராமத்தைச் சேர்ந்த பா.ம.க ராஜா தந்தையார் கொளஞ்சிநாதன் படையாட்சி அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரை இழந்து துயரில் வாடும் அவரது மகன் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
~ ஜி.கே.மணி
திருவாரூர் மாவட்ட பா.ம.க செயலாளர் எஸ்.வேணுகோபால் 22.11.2026 இன்று இறந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. ஆரம்ப காலம் முதல் இயக்கத்திற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு உழைத்து வந்தவர்; எல்லோரிடத்திலும் அன்பாகப் பேசி பழகும் இயல்புடையவர். எஸ்.வேணுகோபால் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரை இழந்து மீளாத் துயரில் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பா.ம.கவினர் அனைவருக்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். ~ ஜி.கே.மணி
2
5
2,570
தமிழர்களின் தொன்மையான தற்காப்புக் கலையும், வீரத்தின் அடையாளமுமான சிலம்பாட்டத்தை போற்றும் வகையில் நவம்பர் -22 கடைப்பிடிக்கப்படும் ‘உலக சிலம்பம் தினத்தில்’, உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்கும், சிலம்பக் கலைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ~ ஜி.கே.மணி
சங்க காலம் தொட்டே தமிழர்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த ஒரு உன்னதக் கலை சிலம்பம். வெறும் தற்காப்புக் கலையாக மட்டுமல்லாமல், உடல் வலிமையையும், மன ஒருமைப்பாட்டையும், சுய ஒழுக்கத்தையும் வளர்த்தெடுக்கும் அற்புதமான உடற்பயிற்சிக் கலையாகவும் சிலம்பம் திகழ்கிறது. பண்டையத் தமிழ் மன்னர்களின் படைகளில் முதன்மைப் போர்க்கலையாக விளங்கிய சிலம்பம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தடை செய்யப்பட்டபோதும், நமது முன்னோர்களின் விடாமுயற்சியால் அழியாமல் பாதுகாக்கப்பட்டு இன்று உலக அரங்கில் கம்பீரமாக வலம் வருகிறது.
இன்றைய நவீன காலக்கட்டத்தில், இளைய தலைமுறையினர் கைபேசி மற்றும் கணினித் திரைகளில் மூழ்கியிருக்கும் சூழலில், அவர்களின் உடல் மற்றும் மன நலனைப் பாதுகாக்க சிலம்பம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளைக் கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியமானதாகும். சிலம்பக் கலையைப் பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களில் இணைக்கவும், சிலம்பப் பயிற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நமது மண்ணின் பெருமைமிகு அடையாளமான சிலம்பக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசான்களுக்கும், அமைப்புகளுக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்...
233


















