Pinned Tweet
நிறம் இனம் அழகு மதம் சாதினு எல்லாமே நம்ம தேடி வாங்கிட்டதா? இல்லைதானே ? குணம் மட்டும் தானே நமக்கான அடையாளம்.. அதான் நீ எனக்கு. அவ்வளவு தான் நீ எனக்கு..!
பழிசொல்லியே பழகிய உதடுகளில்
பலிவாங்கவே ஒத்தியெடுத்த முத்தம்;😘
#வாரிக்கையன்
பீர் பொத்தலின்
கண்ணாடி சில்லுகள்
உடைந்து தெறிக்கின்றன;
வழியும் மதுரசத்தில் முகம் வைத்தப்படி கீர்த்தனைகளை
பாடிக்கொண்டிருக்கிறார் பரமபிதா;
பக்கத்து மேசையில் ஆதாமும் ஏவாளும் பின்னிக்கொண்டிருக்கிறார்கள்;
சிலுவையில் சூட ஒரு ஆப்பிள் மாலையை ஆமென்.
#வாரிக்கையன்
சுடரை
சுடரென்றுதான்
சொல்லவேண்டுமென்ற
நிர்பந்தமில்லை;
நீயே சாட்சி நகுனா.
#வாரிக்கையன்
மரணச் சுடரை
தொட்டு கண்ணில் ஒத்த;
சதையில் பாவும் குறுஞ்சூடு
உன் கன்னி முத்தம்.
#வாரிக்கையன்
மூடும் இருளின்
பெருநிலத்தில்;
உக்கிர சதங்கை கட்டி
உடுக்கை ஒலிக்கு ஆடுகிறது;
உன் வலவை கண்கள்.
#வாரிக்கையன்
வனம்
பார்க்க;
கோட்டம் தாண்டும்
ஆனை கண்ணில் அசைகிறது
மெய்யான துடிதெய்வம்.
#வாரிக்கையன்
அணுக்கமாய் எப்படி இன்னும்
உனதருகில் வரவேண்டும் என தெரியவில்லை;
இந்த உரையாடலை நீட்டிக்கும் சூத்திரம் பிடிபடவில்லை;
பொன்னுருகி ததும்பும் இந்த கண்களை பார்த்து கொண்டேயிருக்க என்ன காரணங்கள் சொல்வேன் நான்;
எல்லாவற்றுக்கும் இந்த முத்தத்தை
பிராயச்சித்தமாய் பெற்றுக்கொள்.
#வாரிக்கையன்
உன்னை
வேண்டித் தவிக்கத்தான்;
வந்து பெய்கிறது
இந்த பெருமழை.
#வாரிக்கையன்
மலர்
கொய்ய நடுங்கும்;
விரல்களைத் தான்
இந்த மழையில் கைவிட்டபடி
நீ பிரிந்து நடந்தாய்.
#வாரிக்கையன்
என்
மீதான உன்
பெருங்கருணைக்குத்தான்
காதலென பெயரிட்டு கொண்டேன்
போலும் மன்னித்தருள் நல்லினி.
#வாரிக்கையன்
உயிரின் துளைகளில் நீண்டு பாவுகிறது
உன் குரல்;
சொட்டி வடியும் குருதியில் பிசுபிசுக்கிறது
உன் முத்த சொற்கள்.
#வாரிக்கையன்
உன்னை அரிந்து
நீயே எனக்கு ஊட்டும்;
ஓர் மழையிரவின் பெரும்பசிக்கு
யுகயுகமாய் நானே என்னை பழக்கினேன் செல்லி.
#வாரிக்கையன்
சொரூபங்கள் அழிந்த உன் பீடத்தை நீள்யுகம் தேடி அடைந்தேன்;
ஒளி நிமிர்ந்த மெழுகில் திருமணிகள் மினுங்க உன்னை கிடத்தி கூடிய நிலத்தை உயிரின் விரல்களால் தடவினேன்;
நீ முனக மலர்ந்த குரலை நீரென அருந்தி
மழையென வழிந்து உன் வீதியில் நிறைந்தேன்;
இரத்த பசைகள் தெறித்து விரிந்த பவள மலர்களை அள்ளி
உன் காலடி வைத்து முத்தமிடுகிறேன் மன்னித்தருள்;
உன்னை வேண்ட என் ஆயுள் மீச்சிறு
மலர்மொட்டு பெருந்தேவி.
#வாரிக்கையன்
வலிகூடும்
பொழுதில்
காற்றில் வந்து;
காதில் முத்தமிடுகிறது
உன் குரல் மயிலி.
#வாரிக்கையன்
முகிழ்ந்து
சுடரும்;
ஒளியின் நடனத்தை
இருளின் கண்களால்
பார்க்க வேண்டும்;
எங்கிருக்கிறாய் நீ.
#வாரிக்கையன்




