வாரிக்கையன் retweeted
நெருக்க பூ கட்டி
நல் சுகந்தமாய் நடையிட்டு;
தீகாய்ச்சி செந்தழல் பொட்டிட்டு
உதட்டுக்கு உயிர் பூசி;
காதலாய் கண் சிமிட்டி
தரை நெருடும் புடவையை;
வலக்கையில் வாரி சுருட்டி
வதைக்க வரும் யுவதிக்கு;
வாள் தீட்டி கொடுங்கள்
கொல்லட்டும் கொல்லட்டும்..!
#வாரிக்கையன்
#சிருஷ்டி
வாரிக்கையன் retweeted
சூரசம்ஹாரம் செய்ய சூரிய விழிகளுக்கு கூர்தீட்டி கொண்டாள்.வேறென்ன வதைபடுவோம்...
#வாரிக்கையன்
வாரிக்கையன் retweeted
வனம் நகரும்போது
வானமாய் இருங்கள்;
வானம் நகரும்போது
வனமாய் இருங்கள்;
ஆனால் இருங்கள்..!
வாரிக்கையன் retweeted
நீயென்..
பெருவன பேரிருள்
தீ உண்ணும் செம்புலரி;
கயல் தேடும் கடல்வெள்ளம்
நடுநிசி பேய்சங்கு;
தூவான வெண்தூறல்
காவல் தெய்வம்புணர் கடவுள்
சொரூபம்;
ஆதிபறையின் அலறல் சத்தம்
குருதி குளித்த குருவி சீழ்கை;
நதி தொலைத்த நங்கை மஞ்சள்
நானே விழுங்கிகொண்ட நஞ்சமிர்தம்..!
#வாரிக்கையன்
வாரிக்கையன் retweeted
யாரோ ஒருத்தி அனல்மூட்டி கொண்டிருக்கிறாள் என் சாவின் பறைக்கு..!
நீங்களும் முயற்சிக்காதீர்கள்
வரங்கள்
ஒருத்திக்குத்தான்..!
வாரிக்கையன் retweeted
சர்ச் என்ஜின் பழுதாகி..
ஆண்ட்ரோஜென்களின் ஆதித காதலால்,டெஸ்ட்ரோசோனின் தேடிப்போ எனும் தீராத வேட்க்கையால் அனிச்சையாய் ஐன்ஸ்டீனாய் மாறி கண்டுபிடித்தேன்.உன் ப்ளூ கலர் சல்வார் காய்ந்த கூடைவைத்த குட்டிசைக்கிளை முப்பத்துமூன்றாவது முயற்சியில் முகமது பிலால் நகரில்..
#வாரிக்கையன்
வாரிக்கையன் retweeted
சார்...
சிவப்பு கலர் நைட்டி
உச்சில தூக்கி கட்டுன கொண்டை
ஒரு மார மறைச்சி துண்டு
சின்னதா பொட்டு
முகம் பூரா சிரிப்பு
யார் சார் அவ..!😍
(சரியாவே பாக்கல சார்)


