S Valarmathi (@SValarmathiofl) header
S Valarmathi (@SValarmathiofl) profile picture

தமிழக வெற்றிக் கழகம், துணைப் பொதுச் செயலாளர், Former Minister for Backward Classes & Minorities Welfare, TamilNadu.

Joined August 2018
Photo by S Valarmathi (@SValarmathiofl)Photo by S Valarmathi (@SValarmathiofl)Photo by S Valarmathi (@SValarmathiofl)Photo by S Valarmathi (@SValarmathiofl)Photo by S Valarmathi (@SValarmathiofl)Photo by S Valarmathi (@SValarmathiofl)Photo by S Valarmathi (@SValarmathiofl)Photo by S Valarmathi (@SValarmathiofl)Photo by S Valarmathi (@SValarmathiofl)
பணநாயகத்தை வென்ற ஜனநாயகர்.. மக்களின் மனதில் குடியிருக்கும் வெற்றித் தளபதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @TVKVijayHQ அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற இனிமையான தருணம். என்றென்றும் வெற்றித் தளபதி அவர்களின் பாதையில். #தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay #NSV #Trichy
23
169
3
910
18,606
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகைத் துறையில், உண்மையையும் நடுநிலையையும் நிலைநாட்டிட அயராது உழைக்கும் அனைத்து பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களின் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது. சமூக விழிப்புணர்வையும் ஜனநாயக விழுமியங்களையும் காத்திடும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தேசிய பத்திரிகையாளர் தின நல்வாழ்த்துகள்! #NationalPressDay #NationalPressDay2026
4
8
333
2026 தீபாவளி திருநாளை முன்னிட்டு, மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளருமான அண்ணன் @Vijayabaskarofl அவர்களை நேரில் சந்தித்து தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்த தருணம். #TVK #TVKVijay‌
3
11
575
இன்று (01.11.2026) திருச்சி விமான நிலையத்தில், தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளரும், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு.@BussyAnand அவர்களை அன்புடன் வரவேற்ற மகிழ்ச்சியான தருணம். #தமிழகவெற்றிக்கழகம் #TVK
6
47
958
இந்திய விடுதலைக்காக வீரத்துடன் போராடி, நேதாஜியின் உற்ற துணையாகத் திகழ்ந்து, எளிய மக்களின் முன்னேற்றத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் வாழ்வை அர்ப்பணித்த தியாகத் தலைவர்! பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெருமகனாரின் புகழைப் போற்றி வணங்குவோம்! #பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் #தேவர்ஜெயந்தி
11
60
635
அந்நிய ஆதிக்கத்தைத் தகர்த்து, அடக்குமுறைக்கு அடிபணியாத வீரத்தின் அடையாளங்கள்! ⚔️ சிவகங்கைச் சீமையின் சிங்கங்கள், மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 225-வது குருபூஜை நாளில் வீர வணக்கம் செலுத்துவோம்! #மருது_சகோதரர்கள் #வீரவணக்கம்
6
26
495
தானத்தில் சிறந்தது அன்னதானம்! பசியாற்றுவதே பேரறம்; உணவளிப்பதே உயர்ந்த மனிதநேயம்! இன்று (22.10.2026), உய்யகொண்டான் திருமலை, தளபதி விலையில்லா உணவகத்தில் 109 நபர்களுக்குக் காலை உணவு வழங்கி, பசியாற்றும் பணியில் மகிழ்வுடன் பங்கேற்றோம். பசியில்லா சமுதாயம் படைப்போம்! மனிதநேயத்தைக் காப்போம்! #அன்னதானம் #மனிதநேயம் #சேவை #TVK #TVKVijay‌
2
6
405
செய்யும் தொழில்கள் சிறக்கட்டும்; எண்ணிய எண்ணங்கள் ஈடேறட்டும்! அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்! #ஆயுதபூஜை #சரஸ்வதிபூஜை #வாழ்த்துகள்
4
10
529
வீரத்தின் விளைநிலம், விடுதலைப் போரின் வீர முழக்கம்! வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு தினத்தில், அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்! #வீரபாண்டியகட்டபொம்மன் #நினைவுதினம் #வீரவணக்கம் #TVK #TVKVijay‌
4
17
326
இந்தியாவின் ஏவுகணை நாயகன் – டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் மக்கள் ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில், அவரது கனவுகளையும் சாதனைகளையும் போற்றி வணங்குவோம். இளைஞர்களே, கனவு காணுங்கள்; அறிவால் வளருங்கள், உழைப்பால் உயருங்கள், நாட்டின் முன்னேற்றத்திற்காகத் திறமையையும் ஆற்றலையும் அர்ப்பணித்து, வலிமையான வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க இன்றே உறுதியேற்போம். கலாம் கண்ட கனவை நனவாக்குவோம். இளைஞர் சக்தியால் இந்தியாவை உயர்த்துவோம்.! 🇮🇳 #RememberingAPJAbdulKalam #TVK #TVKVijay‌
6
17
427
தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான மதிப்பிற்குரிய அண்ணன் திரு. @BussyAnand அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வாழ்த்துப் பெற்றேன். #TVKVijay‌ #தமிழகவெற்றிக்கழகம் #TVK
24
262
4,465
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு ! வெற்றிப் பயணம் தொடரட்டும்.! மாண்புமிகு தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான திரு. @TVKVijayHQ அவர்களின் தலைமையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில், திருச்சி மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் தில்லைநகரில் வெற்றிக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. வெற்றி முழக்கம் ஓங்கி ஒலிக்கட்டும், மக்கள் பணி என்றும் தொடரட்டும்.! #தமிழகவெற்றிக்கழகம் #முதலமைச்சர்விஜய் #வெற்றிக்கொண்டாட்டம் #TVK #TVKVijay‌
137
630
7,821
S Valarmathi retweeted
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த சட்டமன்றத் தேர்தலில், யாருக்கும் வழங்கிடாத பேரன்பையும், பெருவாரியான வாக்குகளையும் நமக்கு வாரி வழங்கி, வாகை சூடும் வரலாற்றைத் திரும்ப வைத்து, உங்களின் முதல் சேவகனாக என்னை அமர்த்திய உங்களுக்கு என் நன்றிக் கடனைத் திருப்பி அளிக்கும் நேரமிது. உண்மையான மனசாட்சியுள்ள மக்களாட்சியை அமர்த்திய தமிழக மக்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, தமிழக மக்களாகிய உங்கள் தலைமையிலான ஆட்சி! இந்த ஆட்சி தொடர்ந்திட, மென்மேலும் வலுப்பெற உங்கள் ஆதரவு எப்போதும் தேவை. கடந்த 25ஆம் தேதி (25.09.2026) மதுராந்தகம் தொகுதியிலும், 30ஆம் தேதி (30.09.2026) தாராபுரம் தொகுதியிலும் இடைத்தேர்தலுக்காக நாம் பரப்புரை மேற்கொண்டோம். இதனைத் தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி (02.10.2026) மதுராந்தகம் தொகுதியிலும், இன்று (04.10.2026) தாராபுரம் தொகுதியில் வாகனப் பிரசாரம் மேற்கொண்டோம். இந்த இடைத்தேர்தல் பரப்புரைக்காக நாம் வந்த போது, செங்கல்பட்டு மாவட்ட மக்களும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களும் நமக்களித்த வரவேற்பும், நம்மிடம் காட்டிய அன்பும் பாசமும் எதற்கும் நிகரில்லாதது. எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நிலைத்திருக்கக் கூடியது. இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. இதற்காக உங்களுக்கு வாழ்நாள் கடமைப்பட்டுள்ளோம். நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இவ்வளவு காலமாக நம்மை ஏமாற்றி வந்த, தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுவீர்கள்; மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரிப்பீர்கள்; மதுராந்தகம் தொகுதி திருமதி மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி திருமதி சத்தியபாமா ஆகியோருக்கு வெற்றிச் சின்னமாம் நமது விசில் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிப்பீர்கள் என்பதை இந்த நாடறியும். அதற்காக நான் முன்கூட்டியே உங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகின்றேன். மேலும், இந்தத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முழு ஒத்துழைப்பு நல்கிய தன்னார்வலர்கள் குழு, காவல் துறையினர், மருத்துவக் குழுவினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், மக்கள் நலன்களைக் காப்பதற்காக, எதிலும், எப்போதும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம். லஞ்சம், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்துடன் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இப்போது போலவே எப்போதும் தொடர்வோம்! மீண்டும் நினைவூட்டுகிறோம். தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்களே, நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டிய ஒரே சின்னம் உங்கள் வெற்றிச் சின்னமான விசில் சின்னம் என்பதை மறந்துவிடாதீர்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
647
5,207
112
15,182
471,492
கழக நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்து, அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர், அவர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். #TVK #TVKVijay‌ 1/3
1
8
68
1,904
அரசியலுக்கு அரசியல் பதில் கொடுங்கள்! #தாராபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் திருமதி. சத்தியபாமா அவர்களின் தோற்றத்தை கேலி செய்யும் வகையில் திரு. @mkstalin அவர்கள் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஒரு பெண் வேட்பாளரின் தோற்றத்தை கேலி செய்வது அரசியல் விமர்சனம் அல்ல; அரசியல் நாகரிகத்தின் வீழ்ச்சி! பெண்களை மதிக்கும் தமிழ்நாட்டில் இத்தகைய பேச்சுகளுக்கு இடமில்லை. திருமதி. சத்தியபாமா அவர்களிடம் மட்டுமல்ல, தமிழ்நாட்டு பெண்கள் அனைவரிடமும் இதற்காக பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். பெண்களை இழிவுபடுத்தும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! #TVK #TVKVijay‌ @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand @Vijayabaskarofl
184
583
10,603
அகிம்சை வழியில் அன்பையும், சத்தியத்தின் வழியில் மனிதநேயத்தையும் விதைத்த மகாத்மாவை நினைவுகூர்வோம். தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளில் அவர்தம் உயரிய கொள்கைகளைப் போற்றுவோம். #GandhiJayanti #MahatmaGandhi #TVKVijay‌ #TVK
4
13
582
தாராபுரம், இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தரும் மாண்புமிகு முதல்வர் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம். #TVK #TVKVijay‌
14
129
1,609