S Valarmathi retweeted
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், யாருக்கும் வழங்கிடாத பேரன்பையும், பெருவாரியான வாக்குகளையும் நமக்கு வாரி வழங்கி, வாகை சூடும் வரலாற்றைத் திரும்ப வைத்து, உங்களின் முதல் சேவகனாக என்னை அமர்த்திய உங்களுக்கு என் நன்றிக் கடனைத் திருப்பி அளிக்கும் நேரமிது. உண்மையான மனசாட்சியுள்ள மக்களாட்சியை அமர்த்திய தமிழக மக்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, தமிழக மக்களாகிய உங்கள் தலைமையிலான ஆட்சி! இந்த ஆட்சி தொடர்ந்திட, மென்மேலும் வலுப்பெற உங்கள் ஆதரவு எப்போதும் தேவை.
கடந்த 25ஆம் தேதி (25.09.2026) மதுராந்தகம் தொகுதியிலும், 30ஆம் தேதி (30.09.2026) தாராபுரம் தொகுதியிலும் இடைத்தேர்தலுக்காக நாம் பரப்புரை மேற்கொண்டோம்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி (02.10.2026) மதுராந்தகம் தொகுதியிலும், இன்று (04.10.2026) தாராபுரம் தொகுதியில் வாகனப் பிரசாரம் மேற்கொண்டோம்.
இந்த இடைத்தேர்தல் பரப்புரைக்காக நாம் வந்த போது, செங்கல்பட்டு மாவட்ட மக்களும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களும் நமக்களித்த வரவேற்பும், நம்மிடம் காட்டிய அன்பும் பாசமும் எதற்கும் நிகரில்லாதது. எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நிலைத்திருக்கக் கூடியது. இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. இதற்காக உங்களுக்கு வாழ்நாள் கடமைப்பட்டுள்ளோம்.
நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இவ்வளவு காலமாக நம்மை ஏமாற்றி வந்த, தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுவீர்கள்; மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரிப்பீர்கள்; மதுராந்தகம் தொகுதி திருமதி மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி திருமதி சத்தியபாமா ஆகியோருக்கு வெற்றிச் சின்னமாம் நமது விசில் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிப்பீர்கள் என்பதை இந்த நாடறியும். அதற்காக நான் முன்கூட்டியே உங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.
மேலும், இந்தத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முழு ஒத்துழைப்பு நல்கிய தன்னார்வலர்கள் குழு, காவல் துறையினர், மருத்துவக் குழுவினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், மக்கள் நலன்களைக் காப்பதற்காக, எதிலும், எப்போதும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம். லஞ்சம், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்துடன் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இப்போது போலவே எப்போதும் தொடர்வோம்!
மீண்டும் நினைவூட்டுகிறோம்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்களே, நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டிய ஒரே சின்னம் உங்கள் வெற்றிச் சின்னமான விசில் சின்னம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
S Valarmathi retweeted
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
S Valarmathi retweeted
சித்திரை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு புலருகின்ற இந்த இனிய நன்னாளில், உலகெங்கும் வாழுகின்ற அன்புக்குரிய தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த 'தமிழ்ப் புத்தாண்டு' நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
'புதிய சாதனைகள் பலவற்றைப் படைத்து; புதிய வெற்றிகளைப் பெற்று; வழி மறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, அமைதியான வாழ்வைப் பெறுவோம்; வளமான தமிழ் நாட்டைப் படைத்திடுவோம்' என, இப்புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதியேற்போம்.
தமிழ்ப் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் புதிய சிந்தனைகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகளோடு கூடிய புதிய உத்வேகம் பிறக்கட்டும்!
#TamilNewYear
@AIADMKOfficial
S Valarmathi retweeted
தமிழ்நாடு ஜெய்க்கணும்னா #எடப்பாடியார் ஆளணும்!
2026 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரப் பாடல் காணொளி !
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK 🌱
S Valarmathi retweeted
Warm greetings on the Foundation Day of the Bharatiya Janata Party.
The party’s journey has been shaped by visionary leaders like Bharat Ratna #AtalBihariVajpayee, whose statesmanship, inclusive governance, and steadfast commitment to democratic values continue to inspire generations.
Under the leadership of Hon’ble Prime Minister Thiru. @narendramodi Avl, and the guidance of Hon’ble Home Minister Thiru. @AmitShah Avl, the BJP continues to play a pivotal role in strengthening India’s development, unity, and global standing.
On this special occasion, we extend our best wishes to @BJP4India President Thiru. @NitinNabin Avl, @BJP4TamilNadu State President Thiru. @NainarBJP Avl, and all BJP members and supporters for their continued public service.
@AIADMKOfficial
S Valarmathi retweeted
இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த ஈஸ்டர் திருநாளில், கர்த்தர் அருளிய சமத்துவம், சகோதரத்துவம், மற்றும் அமைதி போன்ற உயரிய விழுமியங்கள் தொடர்ந்து தழைத்திட அனைவருக்கும் எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இறைவனின் அருளால்,
தமிழகமும் ஒரு வளமான எதிர்காலத்திற்காக விரைவில் உயிர்த்தெழப் போகிறது.
இனிவரும் காலம்,
அனைவருக்கும் வசந்த காலமாக அமையட்டும்!
#HappyEaster
@AIADMKOfficial
S Valarmathi retweeted
உலக மக்கள் அனைவரையும் இரட்சிக்கும் இயேசு பிரான், அனைத்து மனிதர்களின் பாவங்களையும்,
துயரங்களையும் தூக்கிச் சுமந்து
சிலுவை மரத்தில் அருள் மலராய் பூத்த,
தியாக திருநாளான #புனிதவெள்ளி தினத்தில் இயேசு பிரானின் தியாகங்களையும், துணிவையும் நினைவு கூர்கிறேன்.
@AIADMKOfficial
S Valarmathi retweeted
Warm greetings to the Jain community on Mahavir Jayanti.
Lord Mahavir’s teachings of non-violence, truth, and discipline continue to guide humanity toward peace and harmony.
On this auspicious day, let us reaffirm our commitment to these timeless values and work together to build a compassionate and united society.
#MahavirJayanti
S Valarmathi retweeted
தமிழகத்தின் விவசாய வரலாற்றில் அழியாத பெயராகத் திகழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் நினைவு நாள் இன்று.
முல்லைப்பெரியாறு அணை மூலம் தென் தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு உயிர்நாடியாக அமைந்த அவரது அர்ப்பணிப்பைப் போற்றும் வகையில், கர்னல் பென்னிகுயிக் அவர்களின் வெண்கலச் சிலையும், மணிமண்டபமும் மாண்புமிகு அம்மா அவர்களின் @AIADMKOfficial அரசு நிறுவியதையும்,
சமீபத்தில் கர்னல் பென்னிகுயிக் அவர்களின் உறவினர்கள் என்னை நேரில் சந்தித்து, இங்கிலாந்து நாட்டில் உள்ள அவர்தம் நினைவிடப் புனரமைப்பு குறித்து கோரிக்கை விடுத்த போது, விரைவில் அமையவுள்ள @AIADMKOfficial ஆட்சியில் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என்பதை நான் தெரிவித்தமையையும் இத்தருணத்தில் நினைவுகூர்கிறேன்.
தன்னலமற்ற சேவையின் சின்னமாக அவரது பெயர் தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கும்.
S Valarmathi retweeted
Congratulations to #TeamIndia on a majestic victory over New Zealand in the final of the @ICC #T20WorldCup, reclaiming the crown and once again standing tall as world champions. 🇮🇳🏆
A triumph built on composure, skill, and collective belief-. #India delivered when it mattered the most on the biggest stage.
Special appreciation to @IamSanjuSamson for a scintillating performance with the bat, a knock marked by authority, timing, and fearless stroke play.
@Jaspritbumrah93 was equally exceptional, producing a breathtaking spell with the ball that shifted momentum decisively and showcased why he remains one of the finest bowlers in world cricket.
A proud moment for Indian cricket and millions of fans across the nation!
@T20WorldCup ,
உலகக் கோப்பையை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள நமது கிரிக்கெட் அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Congrats CHAMPS!
#INDvNZ @BCCI
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL
S Valarmathi retweeted
இன்று பொதுத்தேர்வுக் களம் காண உள்ள 12-ஆம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு #AllTheBest.
உங்களின் உழைப்பை சரியாக அறுவடை செய்யவேண்டிய நேரம் இது.
எந்த பதற்றமும் இல்லாமல், தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு, வென்று வாருங்கள்!
Wish you all , nothing but success!
@AIADMKOfficial
S Valarmathi retweeted
ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதட்டமான சூழலை கருத்திற்கொண்டு, அங்கு வசிக்கும் மற்றும் பணிபுரியும் நம் இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
@PMOIndia @MEAIndia
@AIADMKOfficial
S Valarmathi retweeted
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், தலைசிறந்த தொழிற்சங்கவாதியுமான
திரு. இரா. நல்லக்கண்ணு அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பேரன்பைப் பெற்றவரும், அனைவரிடத்திலும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடியவருமான திரு. இரா. நல்லக்கண்ணு அவர்கள், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைளை நிறைவேற்றித் தருவதற்காக பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வெற்றி கண்டவர்.
'தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த' சிறந்த பண்பாளர் திரு. நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
@AIADMKOfficial
S Valarmathi retweeted
இதயதெய்வம் புரட்சித் தலைவி “அம்மா” அவர்களின் 78வது பிறந்த நாளில்,
அம்மாவின் நெடும் புகழை போற்றுகிறோம்,
“அம்மா” எங்களின் அடையாளம் … ஏழைகளின் நம்பிக்கை,
பெண்களின் தைரியம்,
தாய்மையின் உருவம்.
அதிகாரம் அவரை உயர்த்தவில்லை;
மக்கள் மீது கொண்ட அன்பே அவரை உயர்த்தியது.
புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு தீர்மானமும், “Poverty Alleviation” -க்கான Global standards -சை நிறுவி ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது.
சோதனைகள் சூழ்ந்த தருணங்களிலும் அசைக்க முடியாத மனவலிமையுடன் தமிழகம் காக்க போராடிய தலைவர்.
We Take a leaf out of your book in all
of our actions for the people Amma 🙏
'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சொன்னதைப் போல, @AIADMKOfficial என்றென்றும் மக்கள் இயக்கமாகவே திகழ்கிறது.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்தார்கள்.
அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள்.
அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளையெல்லாம், தி.மு.க. அரசு தங்களது சாதனைகளாக பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க-வினரின் பிரச்சாரங்களை முறியடித்து,
கழகத்தின் தலைமையிலான பொற்கால ஆட்சியில் செய்திட்ட சாதனைகளையெல்லாம் எடுத்துக் கூறி,
தேர்தல் களத்திலே மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று அம்மா அவர்களின் பிறந்த நாளில் வீரசபதம் ஏற்போம்.
"நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்”
வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்!
வளர்க புரட்சித் தலைவி அம்மாவின் பெரும் புகழ்!
வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்!
#என்றென்றும்_அம்மா
S Valarmathi retweeted
தமிழ் மக்களின் அன்பான கவனத்திற்கு...
ஒரு முக்கிய அறிவிப்பு!
2021-2026 நடந்து முடிந்த
#மாபெரும்_காதுகுத்தும்_விழா
வைபவங்களை முன்னிட்டு,
படாத பாடு படும்
தமிழக மக்களின் காது குறித்த
ஒரு பாடல் வெளியீடு …
S Valarmathi retweeted
கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
நாள்: பிப்ரவரி 17, 2026
இடம்: தமிழக சட்டமன்றம்
நேரம்: காலை 10 மணி முதல்
இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின்
மாண்புமிகு நிதியமைச்சர்
திரு. தங்கம் தென்னரசு அவர்கள்
முன்னின்று காது குத்துவார்.
#மாபெரும்_காதுகுத்தும்_விழா
S Valarmathi retweeted
Champions again! 🏆
Heartiest congratulations to #TeamIndia on winning the @ICC Under-19 Cricket World Cup.
Special applause to #VaibhavSooryavanshi for a sensational match-winning knock,
Captain #AyushMhatre for calm leadership and a crucial contribution, and the bowling unit for a disciplined, dominant effort.
A proud moment for the nation. The future of Indian cricket looks bright!
#U19WorldCup @BCCI
@AIADMKOfficial
S Valarmathi retweeted
திருச்சி: தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் மு. பரஞ்ஜோதி மற்றும் முன்னாள் எம்.பி.ப.குமார் தலைமையில் நடைப்பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் S.வளர்மதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
#Thiruchi | #ADMK | #AIADMK | #NDA4TN | #NDAalliance | #Paranjothi | #pkumar | #SValarmathi | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN |
@Paranjothioffl @PaKumartrichy @SValarmathiofl @AIADMKOfficial
S Valarmathi retweeted
சென்னை: அதிமுக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் S.வளர்மதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
#ADMK | #AIADMK | #EdappadiPalanisamy | #Epsfor2026TNCM | #SValarmathi | #admkheadoffice | #naalainamadhe | #naalainamadheTN |
@SValarmathiofl @AIADMKOfficial @EPSTamilNadu
S Valarmathi retweeted
இந்திய நாட்டின் 2025-2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அறிக்கை கடந்த 29.1.2026 அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2026-2027-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசால் இன்று (1.2.2026 - ஞாயிற்றுக் கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள
மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர்
திருமதி. @nsitharaman அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
2025-2026-ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கை, உலக அளவில் போர் போன்ற பதற்றத்தால் உள்ள உறுதியற்ற சூழ்நிலையிலும், இந்திய பொருளாதார வளர்ச்சி 2025-2026-க்கு 6.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயரும் என்றும், 2026-2027-ல் 6.8 முதல் 7.2 சதவீதமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொருளாதார நிலையில் இந்தியா வலுவான நிலையில் உள்ளதைக் காட்டுகிறது.
இந்த சூழ்நிலையில் 2026-2027-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை, நிதிநிலை மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில் நிதிப் பற்றாக்குறையையும், பொருளாதார உற்பத்தி மதிப்பில் கடன் அளவைக் குறைக்க எடுத்துள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கது. இது வருங்கால பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும்.
இறக்குமதியை குறைக்க, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, ஆராய்ச்சி, உற்பத்தி, உயர் தொழில்நுட்பம் சார்ந்த கட்டமைப்புகள் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு. மின்னணுசார் உற்பத்தி, மருந்துகள், ஜவுளி, கண்டெய்னர் உற்பத்தி போன்ற துறைகளில் உற்பத்தியை ஊக்குவிக்க பூங்காக்கள், உயிரி மருத்துவ பூங்கா, உற்பத்தி மண்டலங்கள் போன்ற பல முயற்சிகளை இந்த நிதிநிலை அறிக்கையில் முன்மொழிந்துள்ளதை பாராட்டுகிறேன். இதற்கான நிதி ஆதாரங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜவுளி மேம்பாடு திட்டம் திருப்பூர், கரூர் போன்ற பகுதிகளுக்கு பயனளிக்கும்.
சரக்கு வேக வழித்தடப் பாதைகள், வேக ரயில் பாதைகள், நீர் வழிப் பாதைகள் மேம்பாடு போன்றவை, போக்குவரத்துத் துறையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆயுர்வேதம், கால்நடை துறை முதலியவற்றுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளதைப் பாராட்டுகிறேன்.
சிறு, குறு தொழில் மேம்பாட்டுக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக. நிதி ஆதாரம் பெறுவதை உறுதி செய்ய ரூபாய் 2000 கோடி, மற்றும் சிறு, குறு தொழில் வளர்ச்சி நிதியாக ரூபாய் 10,000 கோடி ஒதுக்கீடு போன்றவை மிக உதவியாக இருக்கும். சிறு, குறு தொழில் அதிக அளவில் உள்ள தமிழ் நாடு இதனால் பயன்பெறும்.
இந்த நிதிநிலை அறிக்கை இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுப்பதோடு, உலக அளவில் இந்தியா பொருளாதார நிலையில் வலுவான நாடாக உயர்வதற்கு வழிவகுக்கும் என்பதால், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கும், நிதி அமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
@PMOIndia @FinMinIndia
#Budget2026
@AIADMKOfficial
























