SEEMANISM (@Seemanism) header
SEEMANISM (@Seemanism) profile picture

நாம் தமிழர் கட்சி 🐯 தமிழ் தேசியம் 🔥 Here you can see real SeeMANism. 💛❤️ Belongs To Tamilian Stock. 💪

Chennai, India
Joined June 2018
Photo by SEEMANISM (@Seemanism)Photo by SEEMANISM (@Seemanism)Photo by SEEMANISM (@Seemanism)Photo by SEEMANISM (@Seemanism)Photo by SEEMANISM (@Seemanism)Photo by SEEMANISM (@Seemanism)Photo by SEEMANISM (@Seemanism)Photo by SEEMANISM (@Seemanism)Photo by SEEMANISM (@Seemanism)Photo by SEEMANISM (@Seemanism)
Zero Tolerance ❌ Zero Safety for Women & Children under TVK Govt. ✔️@TVKVijayHQ மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லாத சூழலில், 3 மாதங்களாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழக மக்களே, உங்கள் வீட்டுப் பெண்களையும் குழந்தைகளையும் நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள். #TVKVijayFails
மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை! #SunNews | #ArulVignesh | #KallakurichiTVKMLA
8
35
624
SEEMANISM retweeted
மோசமான நிலைக்கான சான்று - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவு #Seeman #NTK #NaamTamilarKatchi #TVK #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
16
193
2
492
6,629
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! @CMOTamilnadu @TVKVijayHQ கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அவர்கள் புகார் தெரிவித்திருப்பது தறிகெட்டு நிற்கும் தவெக ஆட்சியின் மோசமான நிலைக்கான சான்றாகும். ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கே தவெகவின் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை; அதுவும் தவெகவின் சட்டமன்ற உறுப்பினரே அத்துமீறி நடந்துகொள்ள முனைகிறார் என்றால், எளிய மக்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கும்? பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறிதும் பொறுத்துக்கொள்ளாத (Zero Tolerance) கொள்கையைக் கடைப்பிடிப்போம் என்று மேடைகளில் வீராவேசமாக முழங்கிய முதல்வர் விஜய் அவர்கள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காது காப்பாற்றிவிட முனைந்தது எதற்காக? அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அமைச்சர்களைக் கொண்டு பேச வைத்தது ஏன்? அதிமுக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் இப்போதுவரை முதல்வர் விஜய் ஏன் வாய்திறக்கவில்லை? அமைதியாக இருந்து எதை சாதிக்க நினைக்கிறார்? கடந்த சூலை 31 அன்றே இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு புகார் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 115 நாட்களாக முதல்வர் விஜய் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? புகார் தெரிவிக்கப்பட்டப் பிறகும், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அரசுத்தரப்பு எதற்காக சப்பைக்கட்டு கட்டியது? இது மோசடித்தனம் இல்லையா? குற்றவாளியைக் காப்பாற்றும் விதத்திலான முதல்வர் விஜய்யின் நிர்வாக அணுகுமுறை இழிவானது இல்லையா? கடும் கண்டனங்கள்! பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி, மரியாதையுடன் வாழும் சூழலை உருவாக்குவதே அரசின் முதன்மை நோக்கம் என்று கூறினீர்களே முதல்வரே! ஒரு மாவட்ட ஆட்சியரே, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் தெரிவித்து, நடவடிக்கை கோரி, நீதிமன்றத்தில் புகார்கூற வேண்டிய நிலை என்றால், எளிய பெண்கள் எந்த நம்பிக்கையில் காவல்துறையை அணுகுவார்கள்? பெண்களுக்கு அண்ணனாகத் துணை நிற்பேன் என்றும், இரு பெண்களைக் கொள்கைத் தலைவர்களாக ஏற்றிருக்கிறோம் என்றும் மேடைதோறும் பேசிய முதல்வர் விஜய், இந்தப் புகார் அரசின் கவனத்துக்கு வந்தபோது ஏன் மௌனம் காத்தார்? நடவடிக்கை எடுக்க மறுத்தார்? தனிக்கட்சிப் பெரும்பான்மை இல்லாத தனது ஆட்சியைத் தக்க வைக்க எந்த எல்லைக்கும் முதல்வர் விஜய் செல்வாரேன்றால், இது மாற்றமா? கொடும் துர்நாற்றமா? தாராபுரம் இடைத்தேர்தல் வழக்கில், என்னுடைய தங்கை கார்த்திகாவைக் கைது செய்ததில் காட்டிய அவசரமும், பயணத்தின் இடையே தம்பி இசை மதிவாணனைக் கைது செய்ததில் காட்டிய முனைப்பும், அரசை விமர்சித்துப் பேசிய தம்பி சாட்டை துரைமுருகன் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவுசெய்ததில் காட்டிய வேகமும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான இந்தப் புகாரில் எங்கே போனது? தாராபுரம் இடைத்தேர்தலில் சத்தியபாமா உருவக்கேலிக்கு ஆளானபோது கண்டனம் தெரிவித்த முதல்வர், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் புகார் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை? மாண்புமிகு நீதிபதி விக்டோரியா கௌரி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் இவ்விவகாரம் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து, அவர் மீது தவெகவினர் பொழிந்த ஆபாச வசைகளையும், கீழ்த்தரமான விமர்சனங்களையும் முதல்வர் கண்டிக்காதது ஏன்? பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தமது கட்சியினரிடம் சொல்லக்கூட முதல்வருக்குத் தயக்கமா? ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட சம்பவமே நடைபெறவில்லை என்று ஊடகச் சந்திப்பில் மறுத்த அமைச்சர் நிர்மல்குமார், எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினார்? புகாரை மூடி மறைக்கத் துணைபோன அமைச்சர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேசிய மகளிர் ஆணையம் உள்நுழைந்து, உயர் நீதிமன்றம் தலையிட்டு, மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கும் வரை அரசு காத்திருந்தது ஏன்? தேசிய மகளிர் ஆணையமும், சென்னை உயர் நீதிமன்றமும் தலையிடும் நிலை வரும்வரை அரசின் நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது? பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது? பெண்கள் துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்று சொல்லும் அரசே, ஒரு பெண் மாவட்ட ஆட்சியரின் புகாருக்குப் பதிலளிக்க இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது பேரவலம் இல்லையா? ஆகவே, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
246
1,101
37
2,763
71,644
SEEMANISM retweeted
ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? - நீதிபதிகள் #HighCourt | #Madurai | #Chekkanurani | #PoliceStation
4
138
5
353
7,663
SEEMANISM retweeted
ஜூலை 31 அளித்த புகார்! என்னங்க சார் உங்க சட்டம்! என்னங்க சார் உங்க திட்டம்! கேள்வி கேட்க ஆளில்லாமல் போடுறீங்க கொட்டம்! @CMOTamilnadu @TVKVijayHQ நன்றி: @News18TamilNadu
5
271
4
466
5,477
ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால், நம் தமிழ்நாட்டுப் பெண்களின் நிலை என்னவாகுமோ? Seriously worst politics bro @TVKVijayHQ 🤦‍♂️ இப்போதாவது நடவடிக்கை எடுங்கள்.
ஜூலை 31! கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியர் பத்மஜா புகார் கொடுத்த தேதி! இன்றோடு 116 நாட்கள் ஆகிறது. உயர் நீதிமன்றம் தலையிட்டப் பிறகுதான், வழக்குப் போடப்பட்டிருக்கிறது. இவ்வளவு நாட்களாக நம்ம வீட்டுப் புள்ள விஜி என்ன பண்ணிக்கிட்டு இருந்துச்சு?
1
56
172
1,434
கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மீது ஜூலை மாதமே மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தும், ஏறக்குறைய 4 மாதங்களுக்கு மேலாக நடவடிக்கை எடுக்காது இருந்துள்ளார் முதல்வர் விஜய். அதே நான்கு மாதக் காலத்திற்குள்தான், அக்டோபர் மாதத்தில் தாராபுரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தல் களத்தில், சத்தியபாமாவை உருவக்கேலி செய்ததற்கு எதிராகப் பொங்கினார் விஜய். பெண்களுக்கு ஒன்று என்றால், சும்மாவிட மாட்டேன் எனச் சீறினார். அத்தனையும் நடிப்பு என்பது இப்போது அம்பலமாகி இருக்கிறது. தேசிய மகளிர் ஆணையும் உள்ளே நுழைந்து, சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டுத்தான் கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றால், முட்டைக்கு மயிர் புடுங்கவா முதல்வர் பதவி? வெட்கமா இல்லையா? @TVKVijayHQ
31
360
9
920
19,868
நேப்பியர் பாலத்துக்குக் கீழ கட்டித் தொங்க விடுவீங்கன்னு எல்லாம் எதிர்பாக்கல Bro! வழக்குப் போட்டு நடவடிக்கை எடுங்கன்னுதான் சொல்றோம்! @TVKVijayHQ
6
115
2
214
6,897
பெண்களுக்கு அண்ணனாக இருப்பேன் என மேடையில் உதார்விட்டுவிட்டு, மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பி, கள்ளக்குறிச்சி MLA செய்த பொறுக்கித்தனம் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காது அந்த ஆளைக் காப்பாற்றிவிட்ட முதல்வர் விஜய்யின் செயலுக்குப் பெயரென்ன? மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் கொடுத்து, மூடி மறைக்க முயற்சித்ததற்குப் பெயரென்ன? அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என அமைச்சர்களைவிட்டுச் செய்தியாளர் சந்திப்பில் பேச வைத்தற்குப் பெயரென்ன? பச்சையான எச்சத்தனம்!
50
277
4
691
6,682
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பாவம் என சொன்னவன் எவனோ அவனே அயோக்கியன் !
The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியே புகார் அளித்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, எவ்வித தாமதமுமின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரியின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. அதிகாரம் படைத்தவர்கள் என்பதற்காக யாருக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படக் கூடாது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு நீதி கிடைக்க, அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். #KallakurichiMLA
85
1,360
17
5,135
50,525
கூத்தாடியைக் கூத்தாடின்னு சொல்றதுல என்ன தவறு என்று கொட்டு வைத்து அனுப்பிய உயர் நீதிமன்றம்! 😂🤣😂 பீல் பண்ணாதீங்க டா தற்குறிஸ் செருப்படி வாங்குவது உங்களுக்கு புதுசா என்ன..! ☺️@TVKPartyHQ
#JustNow || முதலமைச்சர் விஜயை கூத்தாடி என விமர்சித்து பேசியது குறித்து வழக்கு.. நாதக வழக்கறிஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவு #Court | #CMVijay | #NTK | #PolimerNews
9
77
295
2,269
IAS, IPS அதிகாரிகள் உங்களை மாதிரி தற்குறிகளா டா, வேலையை விட்டுட்டு வந்து மணிக்கணக்கா காத்திருக்க 🤦‍♂️ அப்புறம் வேற வேலை🌺 னா என்ன முதல்வரே!? @TVKVijayHQ கொஞ்சம் உங்க MLA விடம் கேட்டு சொல்லுங்க பிளீஸ் ☺️🔥
TVK MLA பேச பேச அதிர்ச்சி
29
63
983
தரங்கெட்ட தவெகவின் தற்குறி எம்.எல்.ஏ ! ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளை ஆபாசமாக பேசும் இவனுக்கெல்லாம் ஓட்டு போட்ட மக்கள் வெட்கப்டனும் !
57
942
23
2,531
58,103
Dummy CM பரிதாபங்கள்!
20
237
18
647
44,287
நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #JuniorVikatan | #Magazine
41
780
56
1,628
48,459
தவெக அரசை விமர்சித்து @BJP4TamilNadu பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியதோடு, Times Now போன்ற வடஇந்திய ஊடகங்களிலும் விவாதப்பொருள் ஆகியிருக்கிறது. அதற்கு எதிர்வினையாக, பாஜகவுக்குப் பதிலடி கொடுக்கும்விதத்தில் @TVKHQITWingOffl பக்கத்தில் மோடியையோ, அமித்ஷாவையோ விமர்சித்து இதேபோல ஒரு காணொளி வெளியிடுங்களேன்.. பார்ப்போம். அமைச்சர் ராஜ்மோகன் மொழியில் சொல்வதென்றால், ஆண்மை இருந்தால் முதல்வர் விஜய் செய்யச் சொல்லட்டும்.
நாளொரு ‘சர்ச்சை’, பொழுதொரு ‘குற்றம்’, இது @TVKVijayHQ அரசின் திருவிளையாடல்!
202
1,047
32
3,509
188,065
குற்றமிழைத்தத் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, சமூக ஊடகப் பதிவுகளுக்காக தம்பி சாட்டை துரைமுருகன் மீது வழக்குத் தொடுப்பதா? @CMOTamilnadu @TVKVijayHQ தவெகவைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விமர்சித்ததற்காக  நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி சாட்டை துரைமுருகன் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ள தவெக அரசின் செயல் அடக்குமுறையின் உச்சமாகும். அரசை விமர்சிக்கும் எளிய மக்களின் குரல்வளையை அரசதிகாரத்தின் மூலம் நெரிக்க முயலும் ஆளும் அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. தண்ணீர்ச் சிக்கலை எடுத்துரைக்க வந்தவரைத் தாக்கி அச்சுறுத்தி, மிரட்டிக் காணொளி வெளியிடச் செய்த துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயன்ற சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வக்கற்ற முதல்வர் விஜய் அவர்கள், ஆளும் அரசை விமர்சிப்போர் மீது வழக்கைப் பாய்ச்சுவது வெட்கக் கேடானது இல்லையா? வழக்குப் பதிவு செய்து சிறைப்படுத்த வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்றும் முதல்வர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சியினரின் சமூக ஊடகப் பதிவுகளுக்கும் காணொளிக்கும் மட்டும் இவ்வளவு முனைப்புக் காட்டுவது ஏன்? மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் காட்டப்படாத வேகம், யூடியூபில் பேசியதற்காக காட்டப்படுவதன் அரசியல் நோக்கம் என்ன? சமூக ஊடகங்களில் ஆபாசம், அவதூறு, வசைச்சொற்கள், உருவக்கேலி ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், தவெகவினர் மொத்தப் பேரும் சிறையில்தான் இருக்க வேண்டும். அந்தளவில்தான் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. கருத்தைக் கருத்தால் மோத வழியற்ற தவெகவினர், அவதூறையும், ஆபாசத்தையும், தனிமனித தாக்குதலையுமே இணையம் முழுமையாக முன்வைக்கிறார்கள். என்னையும், என்னுடைய தம்பி, தங்கைகளையும் குறிவைத்து, தவெகவைச் சேர்ந்தவர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளத்தில் நடத்தும் அந்தவகை ஆபாசத் தாக்குதல்களும், அவதூறுப் பரப்புரைகளும் காவல்துறையின் கண்களுக்குத் தெரிவதில்லையா? அதுவெல்லாம் குற்றமாகப் படவில்லையா? முதல்வர் விஜய் அவர்களுக்கு அதுவெல்லாம் உறுத்தலாக இல்லையா? எழுதாதப் பதிவுக்காக பேராசிரியர் கலையரசனைக் கைதுசெய்த காவல்துறை, அவதூறாக, ஆபாசமாக எழுதும் தவெகவினர் யாரையாவது கைதுசெய்து இருக்கிறதா? காரைக்குடியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வெளியான காணொளியில் இடம்பெற்றவரை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி எனக் குறிப்பிட்டு தவெகவினர் சமூக ஊடகங்களில் அவதூறுப் பரப்பினர். அதனைக் காவல்துறை தரப்பே மறுத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் அவரைத் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? அந்தப் பதிவுகளை நீக்கவும், தவறான தகவலுக்கு மறுப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வரே? தம்பி துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்வதில் காட்டும் அதே வேகத்தை, இந்த விவகாரத்திலும் காட்டுவீர்களா? நாம் தமிழர் கட்சி குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். நீதிமன்றம் அறிவுறுத்திய விவகாரங்களில் தவெக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தொடர்புடைய புகார்களின் தற்போதைய நிலை என்ன? காவல்துறை வெளிப்படையாகப் பதிலளிக்குமா? எங்கள் புகார்களில் நீடிக்கும் தாமதமும், எங்கள் மீதான புகார்களில் காட்டப்படும் அவசரமும் ஆளுங்கட்சியினரைக் காப்பாற்றும் அணுகுமுறையைத்தானே வெளிப்படுத்துகின்றன. ஆளுங்கட்சியினர் அவதூறுப் பரப்பினால் கண்டுகொள்ளாது அமைதி காப்பது; எதிர்க்கட்சியினர் பதிவிட்டால் உடனடியாகப் வழக்குப் பதிவு என்பதுதான் இந்த ஆட்சியின் நீதியா? சட்டம் அனைவருக்கும் பொதுவானது. கட்சிக் கொடியைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதற்காகக் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஓர் அரசு என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டுமே ஒழிய, தனது கட்சியினரின் செயல்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடாது. இதனை வலியுறுத்தி, தம்பி கலையரசன் கைதுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த கண்டனக்குரல் முதல்வர் விஜய்யின் செவிகளில் விழவில்லையா? வழக்குகளைக் காட்டி ஒருநாளும் எங்கள் குரலை ஒடுக்க முடியாது! அதிகாரத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து எங்கள் குரல் இன்னும் இன்னும் வீரியமாய் ஒலிக்கும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
658
1,052
132
2,724
243,225
மாவட்ட ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு, மனு கொடுக்க வந்த கார்த்திக்குமார் என்பவரை அடித்த துணை சபாநாயகர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு, தவெகவின் அடக்குமுறையை, அதிகாரத்திமிரை, தவெக பொறுப்பாளர்களின் சமூக விரோத செயல்களை பேசுகிற என் மீது தொடர்ச்சியாக வழக்கு போடுகிறது. தவெகவின் இரண்டாவது பொய் வழக்கு.
595
1,318
112
4,515
222,804
SEEMANISM retweeted
மக்களை அதிகாலையிலேயே திரையரங்குகளுக்கு அழைப்பதை சாதனையாக கருதுவது வெட்கக்கேடானது - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் #Seeman | #NTK | #Theatre | #PuthiyaThalaimurai
73
223
12
723
36,851
SEEMANISM retweeted
மணமக்கள் நீடுழி வாழ்க !
205
637
42
3,455
126,358