2021-26 தமிழ்நாட்டில் நடந்தது 'திராவிட மாடல்' ஆட்சி கிடையாது.
ஸ்டாலின் தலைமையிலான ஊழல் சைகோ கும்பல் நடத்திய '420 மாடல்' ஆட்சி.
இவர்கள் கட்டிடடங்கள் கட்டியதே கமிஷன் வாங்கத்தான்.
சாலைகள் அறிவித்ததே ஊழல் செய்யத்தான்.
நூலகம் திறந்ததே அச்சகங்கள் மூலமாக அறிவுமோசடி செய்யத்தான்.
பெரியார் அறிவுலகத்தில், போலி அச்சகம் மூலம் டம்மி புத்தகங்களை அடுக்கும் அளவுக்கு இந்த ஊழல் சைகோக்களின் பணவெறி தாண்டவமாடியுள்ளது தமிழ்நாட்டில்.
அறிவில் ஊழல். அச்சு அசலான விஞ்ஞான ஊழல்.
பல லட்சம் சாமானியர்களால் 100 ஆண்டுகளாக கட்டி எழுப்பப்பட்ட 'திராவிடம்', 'பெரியார் - அண்ணா' என்ற அறிவு அடையாளங்களை
ஒரு விளம்பர முகமூடியாக பயன்படுத்தி, அந்த அறிவு அடையாளங்களுக்கு எந்தப்பொருத்தமும் இல்லாத ஸ்டாலின் தலைமையிலான மூடத்திருடர் கும்பல் எப்படி தமிழ்நாட்டை சுரண்டியது என்பதற்கு இதைவிட ஒரு சான்றை காட்ட முடியாது.
#420Model #CorruptionPsychoDMK
Happy lunch after meeting Annan @CMOTamilnadu ❤️
Breaking News | முதல்வர் விஜயுடன் MIDS பேராசிரியர் கலையரசன் சந்திப்பு
#BreakingNews #News18TamilNadu #TamilNews
MIDS இணைப்பேராசிரியர் கலையரசன் அவர்களின் புகைப்படத்தை போலி வலைதள கணக்கின் மூலம் பயன்படுத்தி ஆபாசமான கமெண்ட்கள் போடப்பட்டிருக்கும் செயல் மிகுந்த கண்டனத்திற்குரியது.
இந்த போலிக்கணக்கு மூலமான ஆபாச கமெண்ட் தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு வந்திருக்கிறார்கள் என்று
28.10.2026 அன்று காலை 5.56க்கு கலையரசன் அவர்கள் எனக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக, அவரை அழைத்துச் செல்ல வந்திருந்த காவலர்களிடம் முனைவர் கலையரசன் அவர்களை 10 ஆண்டுகாலமாக நன்கு அறிவேன் என்றும், சர்வதேச பல்கலைக்கழகங்களில் அவர் ஆற்றியிருக்கும் பங்களிப்புகள் குறித்தும், தமிழ்நாட்டுக்கான அறிவார்ந்த தளத்தில் அவர் ஆற்றிவரும் பங்களிப்புகள் குறித்தும் முழுமையாக எடுத்துக்கூறி நிச்சயமாக அது போலிக்கணக்காகத்தான் இருக்கும் என்றும், தேவைப்பட்டால் உடனடியாக நான் கிளம்பி வருவதாகவும் தெரிவித்தேன். உடனே அவரை காவல்நிலையம் அழைத்துச் செல்லும் நடவடிக்கையை காவலர்கள் நிறுத்திவிட்டார்கள். ஆனால், காவலர்கள் இறுதி முடிவெடுக்கும் இடத்தில் இல்லாததால் காவல் ஆய்வாளர் அவர்களிடம் இதுதொடர்பாக கூடுதல் தகவல் தெரிவிக்க அழைத்தபோது அவர் அழைப்புகளை எடுக்கவில்லை. இதனால், முனைவர் கலையரசன் சாலையில் காத்திருக்கும் தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுவிட்டது.
உடனடியாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அண்ணன் @imrajmohan அவர்களுக்கு அழைத்து தகவலை பரிமாறி, அவரும் முனைவர் கலையரசன் அவர்களிடம் மிகவும் சங்கடமான இச்சூழ்நிலைக்கு வருத்தம் தெரிவித்தார்.
எனவே, விலைவாசி உயர்வை குறித்து கலையரசன் அவர்கள் பேசியதற்காக கைது என்பதிலோ, அரசு அச்சுறுத்தல் என்பதிலோ, பொருளாதார அறிஞர் பழிவாங்கல் என்பதிலோ துளியும் உண்மை கிடையாது.
உண்மையில், கலையரசன் அவர்கள் திமுக ஆட்சியில் சந்தித்த நெருக்கடிகளும், கொடுமைகளும் அதிகம்.
அவர் 'திராவிட மாடல்' புத்தகத்தை எழுதுவதற்கான ஆய்வுப்பணியில் இருந்த காலத்திலிருந்து நான் அவரை நன்றிவேன். அதேகாலகட்டத்தில் தமிழ் ஊடக உலகில் முதன்முதலாக 'திராவிட மாதிரி வளர்ச்சி' என்ற ஆவணப்படத்தொடர் நிகழ்ச்சி தயாரிப்பில் நான் ஈடுபட்டிருந்ததால், அப்புத்தகம் வெளிவரும் முன்பிருந்தே, தமிழ்நாட்டின் சமூகப்பொருளாதார வளர்ச்சியின் உண்மையான வரலாற்றை அறிந்துகொள்ளும் ஒத்தக்கருத்துச் சிந்தனை பகிர்வு எனக்கு அவருடன் இருந்துள்ளது.
எந்த குடும்பப்பின்புலமும் இல்லாத, தன் அறிவுத்திறனால் மட்டுமே உயர்ந்த முனைவர்.கலையரசனின் அபாரமான ஆய்வுத்திறமையால், விஜயபாஸ்கர் அவர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட 'திராவிட மாடல்' என்கிற புத்தகம் - கருத்தாக்கமும் திமுக ஆட்சியில் கலையரசன் கண்ணுக்கு முன்னால் அப்பட்டமாக திருடப்பட்டது. அவருடைய அறிவும், உழைப்பும் சுரண்டப்பட்டது.
இதுதொடர்பாக திமுக ஆட்சிக்காலத்தில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த கலையரசன் அவர்கள் 'திராவிட மாடல்' புத்தகத்தை பொதுச்சாலையில் வைத்து கொளுத்தப்போகிறேன் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு, எனக்கு உட்பட பலருக்கும் குறுந்தகவல் அனுப்பியிருந்தார். ஊடக உலகம் இதை நன்கறியும்.
தவெக ஆட்சி அமைந்த பிறகும் அவரை நான் 3 முறை சந்தித்து விரிவாக பேசியுள்ளேன். தேர்ந்த பொருளியல் கல்வியாளரான முனைவர் கலையரசனுக்கு 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் நடந்தது உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் Gen Z கிளர்ச்சியின் தமிழ் ஜனநாயக உள்வாங்கல் என்பதில் ஆழமான சமூக பொருளியல் அரசியல் புரிதலும், நுட்பமும் உண்டு.
எனவே, அவர் தவெக ஆட்சிக்கு எதிரான மனநிலையில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் என்பதிலோ, தவெக ஆட்சிக்கு எதிரான மனநிலையில் அரசை விமர்சித்தார் என்பதிலேயே முதலில் எந்த அடிப்படையும் கிடையாது.
விலைவாசி ஏற்றம் குறித்து அவரது அக்கறை, அறிவார்ந்த பங்களிப்புகளால் தமிழ்நாட்டை வளப்படுத்த வேண்டும் என்கிற அவரது உத்வேகத்தின் ஒருபகுதி. அவ்வளவே. அதை வெற்றிக்கழக அரசு நன்கு உணர்ந்துள்ளது.
என்றாலும் காவல்துறை அவரிடம் நடந்துகொண்ட விதத்தால் சான்றோண்மைமிக்க ஒரு முனைவருக்கு ஏற்பட்ட வருத்தம் நிச்சயம் புரிந்துகொள்ளத்தக்கது. அதற்காக மீண்டும் ஒருமுறை அவரிடம் அனைவரின் சார்பாகவும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். கலையரசன் அவர்கள் டிஜிபி அவர்களுக்கு எழுதியிருக்கும் கடிதம் முழுக்க முழுக்க அவருடைய தனிமனித உரிமை சார்ந்தது.
அது அரசுக்கு எதிரானது அல்ல.
வெற்றிக்கழக அரசு அவரது புகாருக்கு ஆதரவாக உள்ளது. அவருடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அந்தப்புகாரின் மீது தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் அரசும், கட்சியும் பொறுப்புகொண்டிருக்கிறது.
1/2
பெரியார் அறிவுலகம் - தமிழ் ஜனநாயகனின் சாதனை!
கோவை பெரியார் அறிவுலகத்தை மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்கள் இன்று திறந்து வைத்திருக்கிறார்.
20ம் நூற்றாண்டின் மாபெரும் கலகக்காரரின் பெயரில் அமைந்துள்ள இவ்வளாகம் 2026ம் ஆண்டு தேர்தல் முடிவுகளை வென்றெடுத்த சாமானிய இளைஞர் பட்டாள அணிதிரட்சியின் முதல் வெற்றிச்சின்னம். சாதி, மத எல்லைகளுக்கு அப்பால் இளைஞர்களும், பெண்களும் அணிதிரண்டு வென்றுகாட்டிய சமத்துவ கிளர்ச்சியின் அறிவுச்சின்னம்.
ஏன்?
பெரியார் பெயரில் அறிவுலகம் அமைக்க வேண்டும் என்பதோ, பெரியார் பெயரில் நூலகம் அமைக்க வேண்டும் என்பதோ ஸ்டாலினுக்கோ - ஸ்டாலின் குடும்பத்துக்கோ துளியும் எண்ணம் கிடையாது.
கலைஞர் நூற்றாண்டை ஒட்டி திமுக அரசு அமைந்ததும் அறிவிக்கப்பட்ட கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் அறிவிப்புகளின் அடிப்படையில் 2024 ஜூலை 15ம் தேதி கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையில் திறக்கப்பட்டது.
இந்த நூலகம் திறப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கியிருந்த நேரத்தில், ஜூன் 27, 2024 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் திருச்சி, கோவையிலும் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார் ஸ்டாலின்.
ஆனால், நவம்பர் 6, 2024 அன்று கோவையில் கலைஞர் நூலகத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நடக்கிறபோது, மேடையில் அதனுடைய பெயரை மாற்றி 'சென்னையில் அண்ணா நூலகம், மதுரையில் கலைஞர் நூலகம் ஏற்கனவே இருக்கிறது. எனவே, கோவையில் பெரியார் பெயரில் இந்த நூலகம் அமையும்' என்று மாற்றி அறிவித்துவிட்டார் ஸ்டாலின். அப்போதும் பெரியார் அறிவுலகம் என அறிவிக்கவில்லை!
நவம்பர் 6 அந்த மேடையில் அறிவிப்பு செய்கிற வரை, பெரியார் பெயரில் நூலகம் அல்லது அறிவுலகம் அமைக்கும் எந்தத்தகவலும் வெளியில் சொல்லப்படவில்லை.
இன்னும் சொல்லப்போனால், நவம்பர் 6 அடிக்கல் நாட்டுவதற்கு முதல்நாள், நவம்பர் 5, 2024 அன்று அன்றைய திமுக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட முதலமைச்சரின் கோவை பயணத்திட்டம் குறித்த அறிவிப்பில் கூட 'கலைஞர் நூலகம்' அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொள்கிறார் என்று தான் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால், அடிக்கல் நாட்டும் மேடையில் திடீரென்று எப்படி இந்த பெரியார் பாசம் பொத்துக்கொண்டு வந்தது?
உண்மையில் ஸ்டாலின் அரசுக்கு பெரியார் மீது பற்று இருந்திருந்தால், 2022 செப்டம்பர் மாதம் திராவிடர் கழகத்தின் சார்பில் மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்கள், திருச்சியில் பெரியார் உலகம் அடிக்கல் நாட்டுவிழா நடந்தபோது அதில் கலந்துகொண்டு அடிக்கல் திறந்த ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் சார்பிலும் 'பெரியார் அறிவுலகம்' திறக்கப்படும் என அறிவித்திருக்க வேண்டும். ஏன் அறிவிக்கவில்லை?
2024 ஜூன் மாதம் 27ம் தேதி 110 விதியின் கீழ் 'கலைஞர் நூலகம்' அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்தபோது பெரியார் மீது வராத பாசம், நவம்பர் 6 விழா மேடையில் எப்படி வந்தது?
செப்டம்பர் 29, 2024 அன்று ஜோசியக்காரர்கள் குறித்து கொடுத்த தேதியில் தன் மகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்து அழகுபார்ப்பதற்கு 10 நாள் முன்பு பெரியார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டபோது வராத பெரியார் பாசம் நவம்பர் 6 விழா மேடையில் எப்படி வந்தது?
எப்படி வந்தது என்றால் அக்டோபர் 27, 2024 விக்கிரவாண்டி மாநாட்டில் அண்ணன் விஜய் அவர்கள் அடித்த அடிக்குப் பிறகு வந்தது.
விக்கிரவாண்டி மாநாட்டில் 'பெரியார் - அண்ணா பெயரை பயன்படுத்தி ஒரு குடும்பம் அடிக்கும் கொள்ளை' என்று நங்கு நங்கு என்று மண்டையில் கொட்டிய பிறகு வந்தது!
'தவெக ஆட்சி அமைத்தால் அனைத்துத் தலைவர்களின் பெயரிலும் திட்டங்களுக்கு பெயர் சூட்டப்படும்' என அந்த மாநாட்டுப்பேருரையில் அண்ணன் விஜய் வாளைச்சுழற்றிய பிறகு வந்தது!
விக்கிரவாண்டி மாநாடு நிகழ்த்திய தாக்கமும், அதில் கிளர்ந்தெழுந்த இளைஞர்களின் 'குடும்பச் சுரண்டலுக்கு எதிரான' ஆவேச உத்வேகமும் தந்த அச்சத்தால் வந்தது!
அக்டோபர் 27 விக்கிரவாண்டி மாநாடு நடந்து முடிந்த ஒருவார காலத்தில் நவம்பர் 6 அன்று தான் கோவையில் அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
நவம்பர் 6 கோவை நூலக அடிக்கல் நாட்டுவிழாவிற்கு பிறகும் கூட, திருச்சியில் அமைவதாக அறிவிக்கப்பட்டிருந்த நூலகத்திற்கு அரசாணை வெளியிட்டபோதும், டெண்டர் கோரப்பட்ட போதும், மார்ச் 21,2025 அன்று அடிக்கல் நாட்டியபோதும் 'கலைஞர் நூலகம்' என்றுதான் பெயரிட்டிருந்தது ஸ்டாலின் அரசு.
அதன்பிறகு, ஏப்ரல் 2, 2025 அன்று திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என பெயரை மாற்றினார் ஸ்டாலின். நெல்லையில் காயிதே மில்லத் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்று டிசம்பர், 2025ல் அறிவிக்கப்பட்டது.
இந்த பெயர் மாற்றங்கள் மற்ற தலைவர்களின் மீதுள்ள மதிப்பால் செய்யப்பட்ட மாற்றங்கள் கிடையாது!
கழக அரசின் அறிவுத் திருக்கோயில்கள்!
பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடத்தைத் தொடர்ந்து நமது திராவிட மாடல் அரசின் மற்றுமொரு மாபெரும் திட்டம் இன்று மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. சுயமரியாதையையும் பகுத்தறிவையும் பரப்புவதையே தம் வாழ்நாள் கடமையாகக் கருதிக்கொண்டு, தமிழினத்தின் மேன்மைக்காகத் தம் இறுதிமூச்சு வரை உழைத்து ஒளிவீசிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பெயரிலான அறிவுலகம் இன்று கோவையில் திறக்கப்படுகிறது. மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது!
2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், கோவை வாழ் பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரின் அறிவுத்தாகத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என அறிவித்தோம். அதனையடுத்து, 6-11-2024 அன்று அடிக்கல் நாட்டி, கோவை மத்தியச் சிறைச்சாலைக்குச் சொந்தமான இடத்தில், 1.98 இலட்சம் சதுர அடிப் பரப்பளவில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதனைக் கட்டி முடித்தோம். இப்படி நாம் விரைந்து செயல்பட்டு, அக்கறையோடு உருவாக்கியுள்ள அறிவுக் கோயில்தான் பெரியார் அறிவுலகம்.
தரைத்தளத்தில் கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம் மற்றும் விண்வெளிப் பயணத் தூக்கி, முதல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் மையம், இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் சொந்தப் புத்தகம் படிக்கும் பிரிவு, மூன்றாம் தளத்தில் போட்டித் தேர்வுகளுக்கான நூலகம் மற்றும் தலைமை நூலகர் அலுவலகம், நான்காம் தளத்தில் தமிழ்ப் புத்தகப் பிரிவு மற்றும் பருவ இதழ்கள் பிரிவு, ஐந்து, ஆறாவது தளங்களில் ஆங்கில புத்தகப்பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர், ஏழாம் தளத்தில் அறிவியல் மையம் மற்றும் டிஜிட்டல் நூலகம் எனக் காண்போரின் கண்களைக் கவரும் விதத்திலும் சிந்தையைத் தூண்டும் விதத்திலும் உலகத்தரத்தில் இதனை அமைத்துள்ளோம். ஒரு இலட்சத்து 25 ஆயிரம் நூல்களைக் கொண்ட, மேற்கு மண்டலத்துக்கான மாபெரும் அறிவுச்சுரங்கமாக இது திகழவுள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நான் கோவைக்குச் சென்றிருந்தபோதே, பெரும்பாலான பணிகள் முடிவுற்று இருந்தன. அப்போதே இதனைத் திறந்து வைத்திடலாம் எனப் பலரும் சொன்னபோது, “அவசரம் வேண்டாம், முழுமையாகப் பணிகள் நிறைவடைந்த பின்னர் திறந்தால் போதுமானது” என்று சொன்னேன். யார் திறந்தால் என்ன! திறந்து வைப்பதா பெருமை? எதையும் திட்டமிட்டு உருவாக்குவதுதானே உண்மையான பெருமை! தமிழ்நாட்டில் அந்தப் பெருமை ஆக்கசக்தியான திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே உரியது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவரது அன்புத்தம்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சென்னை கோட்டூர்புரத்தில் ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமான, அழகிய நூலகத்தை உருவாக்கினார். கலைஞரின் ஆட்சிக்காலத்துக்குப் பின்னர், அதனை அங்கிருந்து மாற்றிடவும் சீரழித்திடவும் பல முயற்சிகள் நடைபெற்றன. அனைத்தையும் தடுத்து நிறுத்தி, திராவிட மாடல் அரசு 2021-ஆம் ஆண்டு அமைந்ததும் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்துயிரூட்டினோம். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குச் சரணாலயமாக இன்றளவும் அது திகழ்ந்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பூங்காக்கள், நூலகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ஐ.டி. பூங்காக்கள், மேம்பாலங்கள், தமிழர் பண்பாட்டுச் சின்னங்கள் என உருவாக்கிய நவீன தமிழ்நாட்டின் சிற்பியாம் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அமைத்துத் திறந்து வைத்தேன். சென்னை முழுவதும் முதல்வர் படைப்பகங்கள் மற்றும் நூலகங்களையும் அமைத்துத் திறந்து வைத்தேன்.
தமிழ்நாட்டின் முதல் பொதுநூலகமான எழும்பூர் கன்னிமாரா நூலகத்தை மிகச் சிறப்பான முறையில் புதுப்பித்து, நவீன சிறுவர் நூலகம், அறிவியல் மையம், சொந்த நூல் படிக்கும் பிரிவு, நவீன மாநாட்டுக் கூடம் போன்ற புதிய வசதிகளையும் ஏற்படுத்தித் திறந்து வைத்தோம். மேலும், சிந்தாதிரிப்பேட்டையில் சிதிலமடைந்து இருந்த கோஷன் நூலகத்தையும் அதன் நூற்றாண்டையொட்டிப் பழமை மாறாமல் புதுப்பித்தோம். இரண்டையும், அப்போதைய துணை முதலமைச்சர் திரு. உதயநிதி அவர்கள் திறந்து வைத்தார்கள்.
சென்னை, மதுரையைத் தொடர்ந்து பிற பகுதிகளிலும் மாபெரும் நூலகங்களை அமைக்க நமது திராவிட மாடல் அரசில் முடிவு செய்தோம். அப்படி, மேற்கு மண்டல மக்களுக்காகக் கோவையில் நாம் அமைத்துள்ளதுதான் இன்று திறப்பு விழா காணுகின்ற பெரியார் அறிவுலகம்.
கோவை மட்டுமல்ல, திருச்சியில் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் பிரம்மாண்ட நூலகம், நெல்லையில் 100 கோடியில் கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் பெயரிலான மாபெரும் நூலகம், சேலத்தில் 104 கோடி ரூபாயில் பாரதிதாசன் அறிவுலகம், கடலூரில் 98.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள அஞ்சலை அம்மாள் அறிவுலகம் எனத் தமிழ்நாட்டில் திசைதோறும் பிரம்மாண்ட நூலகங்களைத் திராவிட மாடல் அரசில் அமைத்து வந்தோம். இவையனைத்தும் வெகு விரைவில் அடுத்தடுத்து திறப்பு விழா காணவிருக்கின்றன.
அந்த வகையில், ஆட்சியில் இருந்தபோது மட்டுமல்ல, ஆட்சியில் இல்லாத நிலையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகள்தான் ஒவ்வொரு நாளும் மிளிர்கின்றன. திராவிட முன்னேற்றக் கழக அரசைத் தவிர வேறு எந்த அரசும் இப்படி நூலகங்களை அமைத்ததில்லை என்று கழக உடன்பிறப்புகள் தம் காலரைத் தூக்கிவிட்டுப் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் எழுந்து நிற்கும் இந்த அறிவுச் சின்னங்கள் கழக அரசின் சிந்தனையில் உதித்தவை. கழகத்தால் கட்டியெழுப்பப்பட்டவை. வேறு எந்த அரசும் செய்யாதவை.
நூலகங்கள் மட்டுமில்லாமல், சென்னையில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரையிலான மேம்பாலம், சென்னை மெட்ரோ இரயில் திட்ட இரண்டாம் கட்டத்தின் எஞ்சிய வழித்தடங்கள், முட்டுக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கம் எனத் திராவிட மாடல் அரசு அமைத்த திட்டங்களை மட்டுமே இந்தப் புதிய அரசு இன்னும் பல ஆண்டுகளுக்குத் திறந்துகொண்டே இருக்கலாம். அந்த அளவுக்கு வலுவான அடித்தளத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைத்துவிட்டுச் சென்றிருக்கிறோம்.
அறிவு, அறிவு, அறிவு என அறிவை மையப்படுத்தியே இயங்கி வரும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அதனால்தான், கழகத்தின் முதல் தலைமையகத்துக்கு அறிவகம் எனப் பெயர் வைத்தார் நம் ஆருயிர் அண்ணா. அவரை ‘அறிஞர்’ என்றும், கலைஞரை முத்தமிழ் ’அறிஞர்’ என்றும்தான் அடைமொழி தந்து அழைக்கிறோம். தலைவர் கலைஞரால் அமைக்கப்பட்டு இன்றளவும் கழகத்தின் தலைமையகமாகத் திகழும் அலுவலகக் கட்டடத்துக்கும் அண்ணா ‘அறிவாலயம்’ என்றுதான் கலைஞர் பெயரிட்டார். இந்த அறிவுமரபின் தொடர்ச்சியாகத்தான், கடந்த ஆண்டு கழக இளைஞரணியின் சார்பில் அறிவுத்திருவிழா நடத்தப்பட்டது.
அறிவுத்தீ எங்கும் பரவ வேண்டும், அறிவு ஜனநாயகமயமாக வேண்டும், வாசிப்புப் பழக்கம் வளர்ந்து பண்பட்ட சமூகமாகத் தமிழ்ச் சமூகம் திகழ வேண்டும் என்றுதான் தமிழ்நாடு முழுவதும் நூலகங்களை உருவாக்கினோம்.புத்தகத் திருவிழாக்களை நடத்தினோம். கீழடி, பொருநை என அருங்காட்சியகங்களை உருவாக்கினோம். மாபெரும் தமிழ்க்கனவு சொற்பொழிவுகளை நடத்தினோம்.
இவையாவும் பசுமரத்தாணி போல, தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் பதிந்திருக்கிறது. ஆனால், உள்ளங்கையால் உதயசூரியனை மறைத்துவிட முயல்வதைப் போல சில முட்டாள்தனமான செயல்களில் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபடுவதைக் கண்டேன். பெரியார் அறிவுலகத்தின் அறிவியல் தொழில்நுட்ப அரங்கில் பிரமிட் வடிவிலான கணினி மேசையில் பொறிக்கப்பட்டுள்ள நான் முதல்வன் பெயரை மறைத்து வைத்துள்ளார்களாம். தான் முதலமைச்சராக ஆகிவிட்ட பின்பும் கூட, ‘முதல்வன்’ என்ற சொல்லைக் கண்டால் மக்களுக்கு இந்த ஸ்டாலின் நினைவுதான் வரும் என நம் எதிரிகளே அஞ்சுகிறார்கள் என்றால், அதுதான் நமது வெற்றி! நமது நான் முதல்வன் திட்டத்தின் வெற்றி!
அறிவுச் செயல்பாடுகளுக்கு எந்தத் தொடர்புமற்ற, அறிவார்ந்த சமூகத்தின் மேல் ஒவ்வாமை கொண்ட இந்த மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும்! அதை நிறைவேற்றுவதில், நாம் அமைத்த நூலகங்களும், வெளியிட்ட நூல்களும் நிச்சயம் பங்களிக்கும்! இன்று திறக்கப்படவுள்ள பெரியார் அறிவுலகம் இனி கோவையின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும்!
என் அன்புக்குரிய கோவை மக்களே, திராவிட மாடல் அரசில் நாம் திறந்து வைத்த செம்மொழிப் பூங்காவுக்குத் திரளாகச் செல்வதைப் போல, பெரியார் அறிவுலகத்தையும் அனைவரும் சென்று காணுங்கள். தினம்தினம் செல்லுங்கள். கோவைக்கு உங்கள் உறவினர், நண்பர் வந்தாலும், பாருங்கள் எங்கள் அறிவுலகத்தை எனப் பெருமையோடு அழைத்துச் சென்று காட்டுங்கள். பெரியார் அறிவுலகக் கதவு திறக்கட்டும்! அறியாமை ஒழியட்டும்! வாழ்க பெரியார்!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் 'காக்கிநாடா உன்து, பாவாடைநாடா என்து' கணக்காக பகையாளிகள் செய்துகொண்ட பேக்கரி டீலிங் மண்ணைக்கவ்வியுள்ளது.
தாராபுரத்தில், பொதுத்தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட சுமார் 50% கூடுதல் வாக்குகளை தமிழக வெற்றிக்கழகம் பெற்றுள்ளது. மதுராந்தகத்தில் இம்முறை திமுக பெற்ற வாக்குகளைவிட 40% கூடுதல் வாக்குகளை வெற்றிக்கழகம் பெற்றுள்ளது.
பாஜகவின் அமுல்பேபிகளாக மாறியிருக்கும் திமுக - அதிமுக நெருங்கினாலும், விலகினாலும் இந்த வாக்கு வித்யாசங்கள் உயர்ந்துகொண்டே இருக்கும் இனி!
அண்ணன் விஜய் அவர்கள் தேர்தலுக்கு முன்பே வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில், இந்த இடைத்தேர்தல் வாய்ப்பின் மூலம் கிராமங்களை நோக்கிய அரசியல் செயலூக்கத்தைத் தொடங்கியதை தாங்கிக்கொள்ள முடியாத ஆபாச வக்கிர வாரிசு 'நாய் மாதிரி அலைகிறார்' என கக்கிய வன்மத்துக்கு 'அரண்மணை நாயே, அடக்கடா உன் வாயை' என வாக்குகளால் திருப்பி அடித்திருக்கிறார்கள் தமிழர்கள்.
பாஜகவுடன் சேர்ந்து போட்ட தேர்தல் ஊழல் கணக்குகள் அனைத்துக்கும் பரிசாய் 'மூணு தோல்வி மு.க.ஸ்டாலின்'
'13 தோல்வி பழனிசாமி' என்ற பட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன!
எகத்தாள பேச்சுகளின் இடுப்பெலும்பு முறிக்கப்பட்டுள்ளது. வன்ம வாரிசுகளின் 'தொலைநோக்கு' நேக்குகளுக்கு பால்டாயில் வார்த்துள்ளது வெற்றிக்கழக வாக்குகள்.
ஊழல் அதிகாரத்துக்கு சம்மட்டி அடி!
சுரண்டல் திமிருக்கு செருப்படி!
சாதிய புகைச்சல் கணக்குகள் மீண்டும் சாய்க்கப்பட்டுள்ளன.
21ம் நூற்றாண்டிற்கான தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற - சமூகநீதித்தலைமை அண்ணன் விஜய் மட்டும்தான் என உரக்க நிரூபித்துள்ளது தாராபுரமும், மதுராந்தகமும்!
மக்களுக்கு நன்றி 🙏🏻
என்ன உதவா - மிதுன் பாய்ஸ்,
பயமா இருக்கா?
இனிமே பயங்கரமா இருக்கும்!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்கள் திமுக - அதிமுக - பாஜக கூட்டுச்சதியாலும், மக்களின் தீர்ப்பை திருட முயற்சித்த அயோக்கியத்தனத்தாலும் உருவாக்கப்பட்ட இடைத்தேர்தல்கள்.
தேர்தல் களத்தில் முழுக்க முழுக்க திமுக - அதிமுக - பாஜக கூட்டியக்கம் ஒருங்கிணைந்து வேலைசெய்துள்ளது.
தமிழ்நாட்டின் சமூக நீதி அரசியல் களத்தை, சாதிய உள்புகைச்சலை வளர்த்தெடுப்பதன் மூலம் மத அபாயத்தின் காலடியில் சமர்ப்பிக்க திமுக - அதிமுக அடிமைத்தலைமைகள் முழுக்கத்தயாராகிவிட்டார்கள்.
சட்டமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பை பிரதானப்படுத்திய திமுகவும், அதன் கோமாளித்தலைவர் ஸ்டாலினும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு இடத்திலும் பாஜகவை பற்றி மூச்சுவிடவில்லை.
இடைத்தேர்தலுக்கு நடுவே முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற குழுக்களில் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமைப்பதவியை பெற்றுள்ளார்கள். மற்ற எதிர்க்கட்சிகள் இல்லாமல் பாஜகவுடன் தனிபேரம் பேசி இந்த குழுத்தலைமை பதவிகளை திமுக பெற்றுக்கொண்டுள்ளது. பாஜக அமைச்சரவையில் இணைவதற்கான அதிகாரப்பூர்வ ஒத்திகை இது!
SIR-ஆல் தோற்றுவிட்டோம் என அக்மார்க் கஞ்சா கசக்கி போல கையை தேய்த்துக்காட்டும் ஒப்பாரித்திலகம் மு.க.ஸ்டாலின், SIR ஐ பாஜகவுக்கு எதிரான அரசியலாக்காமல் தவெகவுக்கு எதிரான அரசியலாக மாற்றும் கண்ணீர் ட்ராமாவின் பின்னணி இதுதான்!
இந்தக் கள்ளக்கூட்டணியை மறைக்கவே மொத்த பிரச்சாரத்தையும் ஆபாச, வக்கிரத்தாக்குதல் முகாமாக திமுக கட்டமைத்துள்ளது.
அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் 2024ல் தமிழர்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு அளித்த வாக்குகளை, அரசியலமைப்பை படுகொலை செய்து தமிழ்நாட்டு இளைஞர்களின் ஆட்சியை - சாமானிய மக்களின் ஆட்சியை கலைப்பதற்காக திமுக உள்வாடகைக்கு விற்றுப்பிழைக்க தயாராகிக்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் குடும்பத்தலைவர், ஆருயிர் அண்ணன் விஜய் அவர்கள் ஆட்சி அமைத்த 4 மாதங்களில் சுமார் 75,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 25 லட்சம் குடும்பங்களை பலனடையச் செய்யும் தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம், 5 ஆண்டுகளில் சுமார் 400 கோடி எண்ணிக்கையிலான கட்டணமில்லா பயணங்களை உறுதிசெய்யும் மகளிர் வெற்றிப்பயணம் திட்டம், நாள்தோறும் கூடுதலாக 15 லட்சம் மாணவர்களை பலனடையச்செய்யும் காலை உணவுத்திட்ட விரிவாக்கம், 3.1 லட்சம் பால் உற்பத்தியாளர்களை பலனடைச்செய்யும் வகையில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டும், லட்சக்கணக்கான நுகர்வோர் பால் விலை உயர்த்தப்படவில்லை! 14 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் 6300 கோடி விவசாயக்கடன் தள்ளுபடி என ஊழல் சாக்கடையில் தேங்கியிருந்த மக்கள் வரிப்பணம் நலத்திட்டங்களாக திருப்பிவிடப்பட்டுள்ளது.
இந்த சாமானியருக்கான நல்லாட்சியை ஒழிக்க நினைக்கும் திமுக - அதிமுகவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை படுகொலை செய்வதற்கான துருப்புச்சீட்டாக மாறிவிடும்.
எனவே, தாராபுரம், மதுராந்தகம் பொது மக்கள் இந்த இடைத்தேர்தலில் அளிக்கும் வாக்குகள் இந்த அதிகார வெறிபிடித்த பாசிச பண்ணையார் கூட்டணிக்கு சம்மட்டி அடியாகவும், ஆபாச வக்கிர வாரிசுகளுக்கு செருப்படியாகவும் அமைய வேண்டும்.
சாமானியரின் அரசியல் அதிகாரத்துக்கும், பாசிச பண்ணையார் கூட்டத்துக்கும் நடக்கும் இந்த ஜனநாயக யுத்தத்தில் தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவரான அண்ணன் விஜய்யின் பக்கம் மக்கள் நிற்க வேண்டும் என அண்ணன் விஜய்யின் உறவாய், நட்பாய் இந்த அரசியல் களத்தில் நிற்கும் சாமானிய வீட்டுப்பிள்ளைகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
போடுங்கம்மா ஓட்டு!
நம்ம விசில் சின்னத்த பாத்து!
தஞ்சையில் பேசிய ஆபாச மொழி எதார்த்தமானதோ, வாய்த்தவறி வந்ததோ அல்ல. அது ஒரு முன்திட்டமிட்டபட்ட அரங்கேற்றம்.
அடித்தள சமூகங்களின் எழுச்சி, பெண்களின் அரசியல் பங்கேற்பு, சாமானியர்கள் அதிகாரமயப்படுதல்
என்ற லட்சியங்களை வென்றெடுத்துள்ள தவெகவின் மதசார்பற்ற வெகுஜன அரசியல் உதயநிதி திமுகவை தமிழ்நாட்டு அரசியலில் அந்நியப்படுத்தியுள்ளது.
இந்த அந்நியப்படுதலை ஈடுகட்ட, திமுகவின் கீழ்நிலை மற்றும் இரண்டாம் கட்ட வாரிசுகளின் சாதிய வக்கிர ஆணாதிக்க ஆபாச உளவியலை (Castiest Toxic Male Masculinity)
ஆ ராசா முதல் உதயநிதி வரையிலான வக்கிர மொழியாடல் மூலம் திமுக தொடர்ந்து வளர்த்தெடுக்கிறது.
இந்த இழிவைச் செய்யாவிட்டால், கையாலாகாத உதயநிதியின் கீழ் உதிர்ந்த நெல்லிக்காய்மூட்டை போல திமுகவின் அடிமட்டக்கட்டமைப்பு சிதறிப்போகும்.
கட்சி அதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு தலைமுறையை சீரழிக்கிறது ஸ்டாலின் குடும்பம்.
இதே சாதிய வக்கிர ஆணாதிக்க உளவியல் தான், 1972-1996 வரை ஒரு தலைமுறையையே திமுகவை வெறுக்க வைத்தது. 1989 திமுக வெற்றி, அதிமுக உடைந்ததால் நடந்த விதிவிலக்கு.
இன்னொரு 25 ஆண்டுகால கூப்புக்கு திமுகவை வெற்றிகரமாக தயார்செய்துவரும் தோற்றுப்போன வாரிசுத்தலைமை, மாண்பு இல்லாத எதிர்க்கட்சித்தலைவருக்கு வாழ்த்துகள்.
ஆபாசம் வீழும்.
வெகுமக்கள் தலைமை ஆளும்!
#ஆபாசநிதி












