Pinned Tweet
Spot the odd one out , where are we heading ? @CMOTamilnadu
அண்ணே நீங்க தான் அரசாங்கமே @VanniTamizhVCK @thirumaofficial
திருப்பரங்குன்றம் வழக்கு:
உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கிறது!
மதவாத சக்திகள் குழப்பம் ஏற்படுத்துவதற்கு இது வழிவகுக்கும்!
தமிழ்நாடு அரசு விழிப்போடிருக்க வேண்டும்!
தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அறிக்கை!
திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இடைக்காலத் தீர்ப்பு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடக்காலத் தடை விதித்திருக்கும் அதே வேளையில், கார்த்திகை தீபம் (நவ-24)அன்று சர்ச்சைக்குரிய 'கல் தூணின்' உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், தேவைப்பட்டால் துணை இராணுவப் படையினரின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் வழிகாட்டியுள்ளது. இது மாநில அரசை மறைமுகமாக அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கல்தூணில் கட்டாயம் தீபநாளன்று தீபத்தை ஏற்றியே ஆகவேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாகவுள்ளது என்பதைக் காட்டுகிறது.
எந்த ஆய்வும் செய்யப்படாமலேயே ஆதாரம் ஏதும் இல்லாமலேயே அந்த இடத்தை அல்லது அந்த கல்தூணை தீபம் ஏற்றுவதற்கான இடம்தான் என்கிற தோற்றத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதாக இது அமைந்துள்ளது.
அதே வேளையில், பின்வருமாறும் உச்சநீதிமன்றம் கூறியிருப்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
அதாவது, “ இந்தக் கல் தூண், வழக்கமான சமய வழிபாட்டு இடமாக இருந்ததோ அல்லது வரலாற்று ரீதியாக அத்தகைய இடமாக இருந்து வந்ததோ என்ற எந்தவொரு கண்டறிதலின் அடிப்படையிலும் தற்போதைய உத்தரவு அமையவில்லை. மேலும், குறிப்பிட்ட அந்த இடத்தில் விளக்கேற்றுவது ஒரு இன்றியமையாத சமயச் சடங்கா என்பதையோ, அல்லது அவ்வாறு செய்வதற்கான சட்டப்பூர்வமாக அமல்படுத்தக்கூடிய உரிமை ஏதேனும் தனிநபருக்கோ, நிறுவனத்திற்கோ அல்லது சமயப் பிரிவினருக்கோ உள்ளதா என்பதையோ இந்த உத்தரவு தீர்மானிக்கவில்லை" என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
“ நவம்பர் 24 அன்று, 'தீபத்தூண்' என்று அடையாளப்படுத்தப்படும் கல் தூணில், தேவஸ்தானத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட குழுவினரைக் கொண்டு, சடங்கு ரீதியான தீபத்தை ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும். அந்தக் குழுவில் யார் இடம்பெற வேண்டும் மற்றும் எத்தனை பேர் இருக்க வேண்டும் என்பதை, கோயில் நிர்வாக அதிகாரி, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (Archaeological Survey of India) மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோருடன் கலந்தாலோசித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் இதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக (Nodal officer) செயல்படுவார். பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு, தீபம் ஏற்றும் நேரத்தையும் அதற்கான பாதையையும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்; சடங்கு முடிந்தவுடன், அந்தக் குழுவினர் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். அங்கு எந்தவொரு புதிய அமைப்பையும் உருவாக்குவதற்கோ, கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்கோ, அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கோ அல்லது நிரந்தர கட்டுமானங்களை அமைப்பதற்கோ அனுமதி இல்லை. அதேபோல், தர்கா மற்றும் மசூதியின் செயல்பாடுகளில் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது. திருவிழா முடிந்த மூன்று நாட்களுக்குள், இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்த அறிக்கையைச் மாவட்ட ஆட்சியர் சமர்ப்பிக்கவேண்டும்"- என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
'தீபம் ஏற்றுவதற்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் அனுமதியென்பது தற்காலிகமானதுதான்; அதனை நிரந்தரமாகக் கருதக்கூடாது'என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும், இது போன்று இரு வேறு மதங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இதற்கு முன்பு உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகளை வைத்துப் பார்க்கும் போது, இத்தகைய இடைக்கால உத்தரவுகளின்படியே வழக்கின் இறுதிமுடிவுகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த வழக்கிலும் அப்படியான ஒரு முடிவு தான் வருமோ என்கிற அச்சம் எழுகிறது.
தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்தும்போது, விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மதவாத சக்திகளின் தூண்டுதலின் பேரில், வெவ்வேறு இடங்களில் விளக்கேற்றும் நடைமுறையை ஒரு முன்னுதாரணமாக உருவாக்குவதால் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கவனமாக ஆராய வேண்டும். இதேபோன்ற ஆணைகள் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் பிறப்பிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், பாரம்பரியமான இடத்தில் விளக்கேற்றும் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்ற அடிப்படையில் முதன்மை வழக்கின் தீர்ப்பைப் பெற வேண்டும். அதற்கு மேலும் திறமைவாய்ந்த வழக்கறிஞர்களை வாதாடுவதற்கு அமர்த்திட வேண்டும்.
(1/2)
52
பகுத்தறிவுக்கு பேர் போன தமிழ் நாட்டில் டிக்கெட்டுக்கு க்யூவில் நின்று பில்லி சூனியத்துக்கு பேர் போனதுக்கு மாற்றினது தான் மாற்றம். நெம்ப கஷ்டம் ஆமினி. இனி இந்த தமிழ்நாடு பாவம் தான்.
64
"Heroes are forgiven. Governments have to answer". Sad state of democracy
Sharing my latest article for @TheSouthfirst, expanding on the #WALIAIT series.
This examines the mechanisms of how routine administrative work & baseline social etiquette are systematically transformed into personal miracles by #TVK sympathisers on social media. More importantly, it explores what this manufactured devotion ultimately costs democratic scrutiny & public accountability.
"Heroes are forgiven. Governments have to answer".
Article 🔗: thesouthfirst.com/opinion/ho…
#WALIAIT #TNPolitics #Governance #Agnotology #TVK #TamilNadu
62
எடுக்கறது யானையும் இல்ல அடிக்கிறது ராஜாவும் இல்ல ஆனா அந்தக் தற்குறித்தனமா @TVKVijayHQ confidence தா உங்கள வாழ்வச்சிட்டு இருக்கு.நம்ப ஒரு கும்பல் இருக்கற வர உங்க காட்டுல மழை. இதுவும் தமிழ்நாடு பாக்கணும். எல்லாம் பட்டதானே புரியும்.உயிர் போற நிலையில இளிச்சவாயன் @arivalayam வருவான்
ஊழல் நடந்துள்ளது என்று அமைச்சர் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார் அடுத்த கட்டம் என்ன ?
யார் மீது எல்லாம் வழக்கு பதியப்படும் ?
யார் எல்லாம் கைது செய்யப்படுவார்கள் ?
இதுவரை இது குறித்து என்ன விசாரனை நடந்துள்ளது ?
இதற்கு எல்லாம் பதில் வேண்டும் வெறுமனே A4 பேப்பரை காட்டி ஊழல் நடந்துள்ளது என்று குற்றச்சாட்டு சொல்லி விட்டு கடந்து செல்லாமல் அடுத்து என்ன ? என்பதையும் முழுமையான விசாரனை அறிக்கையையும் வெளியிட வேண்டும்.
@imrajmohan
1
58
யோக்கிய சிகாமணி @Vaikooffl "போர்வாள்" இப்போ அதிகாரத்தில் இருக்கும் அரசை நடவடிக்கை எடுக்க சொல்லி கேட்கலாமே
புது யுகத்தின் தீர்க்கதரிசி, தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயம், இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி” என்று யுனெஸ்கோவின் சிறப்புமிகு விருதைப் பெற்ற அறிவு ஆசான் தந்தை பெரியார் பெயரில் கோவையில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் நடந்துள்ள இமாலய ஊழல் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களால் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
சமூகச் சீர்திருத்த இயக்கம் கண்ட தலைவர் பெயரால் அமைந்துள்ள நூலகத்தில் குப்பையில் வீசி எறியப்பட வேண்டிய நூல்களை கொள்முதல் செய்து பகல் கொள்ளை அடித்து இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது ஆகும்.
இது போன்ற வெட்க கேடான நிகழ்வு உலக வரலாற்றில் இது வரை நடைபெற்றது இல்லை.
அகல்விளக்கு பதிப்பகம்’ என்ற பெயரில் வெளியிட்ட 1,800 நூல்கள் வாங்கப்பட்டுள்ளன.
அகல்விளக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ’நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ (ஆசிரியர்: சூர்யா பாலு) என்னும் 300 பக்க நூலின் விலை ரூ. 1,445. அந்த பதிப்பகத்தின் ஒவ்வொரு நூலும் பலமடங்கு அதிக விலையில்தான் இருக்கின்றன. பிற பதிப்பகங்கள் இதே பக்கங்களை கொண்ட நூல்களை ரூ. 350-க்குதான் விற்கிறார்கள்.
தனலட்சுமி அர்ஜுன் என்பவர் எழுதிய ’தமிழ்நாடு ஒரு பார்வை’ நூலில், தமிழ்நாட்டின் முதன்மை முதலமைச்சராக முத்துவேலு சுப்பையா அய்யர் (1947) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அகல்விளக்கு பதிப்பகத்தின் எல்லா நூல்களும் இப்படிதான் இருக்கின்றன.
அகல்விளக்கு பதிப்பகம் போலவே பீனிக்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்களும் தவறான தகவல்களுடன் நூற்றுக்கும் மேல் இடம்பெற்றுள்ளன.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட நூலகங்களுக்கு நூல்களை ரூ. 50 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்ய பரிந்துரை குழு அமைத்து கடந்த நவ. 5, 2025 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
அதன்படி, இணையவழியில் கூட்டத்தில் நூல் பரிந்துரைக் குழுவில் இடம்பெற்ற 112 உறுப்பினர்கள் கலந்துகொண்டு கொள்முதல் செய்வதற்கான நூல்களை பரிந்துரை செய்யதுள்ளனர்.
இதன் பின்னர், ஜன. 9, 2026 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நூல் தேர்வுக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில், 112 நூல் பரிந்துரைக்குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை ஆய்வு செய்யப்பட்டு, கொள்முதல் செய்வதற்கான இறுதிப் பட்டியல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
பின்னர், பதிப்பகங்களுடன் பேச்சுவார்த்தை, விலை நிர்ணயம் உள்ளிட்ட அடுத்தடுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு பிப். 2, 2026 அன்று நூல்களுக்கான கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பெரியார் அறிவுலகத்திற்கு 60,266 நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட பரிந்துரைக் குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள் என்னென்ன? அதிலிருந்து அரசு இறுதி செய்த புத்தகங்கள் என்னென்ன?
எத்தனை கொள்முதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன? ஒவ்வொரு கொள்முதல் ஆணையிலும் எந்தெந்த புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன?
தவறான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் புத்தகங்கள் எவை? அவை என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது?
அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் எந்தக் கொள்முதல் ஆணையில் இடம் பெற்றன? எந்த தேதியில் கொள்முதல் செய்ய ஆணை வெளியிடப்பட்டது?
சர்ச்சைக்குரிய பதிப்பகங்களின் புத்தகங்களுக்கு விலை நிர்ணயம் செய்தது யார்?
அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களுக்கான தொகை எந்தெந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது?
இந்தப் பதிப்பகங்களின் உரிமையாளர்கள் யார், யார்? எந்த முகவரியிலிருந்து இயங்குகின்றன?
இவை ஒவ்வொன்றும் எந்தெந்தத் தேதிகளில் நடைபெற்றது?
விஸ்வரூபம் எடுக்கும் இந்த வினாக்களுக்கு கடந்த கால திமுக ஆட்சியில் பொறுப்பில் இருந்து இயக்கிய
யோக்கிய சிகாமணிகள் பதில் அளிக்க வேண்டும்.
அறிவுசார் சமூகத்தை உருவாக்க அச்சாணியாக விளங்கும் நூலகத்திற்கு நூல்கள் வாங்கியதில் கொள்ளையடித்தக் கும்பலை கூண்டில் ஏற்றி தண்டிக்க வேண்டும்.
பெரியார் அறிவுலகத்தில் இடம் பெற்றுள்ள குப்பை நூல்களை துடைத்து எறிந்து , பகுத்தறிவு பகலவன் பெரியார் பெயரை காப்பாற்ற வேண்டும்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
தாயகம்
சென்னை
7-11-26
32
நீ எங்க நின்னு யாருக்கு சாதி பெற சொல்லி மாலை போட்டாலும் சாதியின் பெயரில் அடையாள படுத்தி மாலை போட்டாலும் ஒரு சாரரின் ஒட்டு அரசியல் லாபங்களுக்கு கொடி பிடிக்கும் அனைவரும் சமுக நீதி பேச தகுதியற்றவர்களே. @arivalayam
Replying to @TANGEDCO_Offcl
@TANGEDCO_Offcl why is no one picking the call at annanagar east when complaint has to be raised? Does it exist
1
73
A Visionary @mkstalin can enVision a future, and a cult clown can only pose to cut open.
நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது
யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை?
எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது!
#Kovai #Coimbatore #PeriyarArivulagam
எவ்ளோ ஈசி வேலை எதாவது பிரச்னை மக்கள் கேள்வி கேட்க அலர்ட் ஆனா, ஜஸ்ட் ரோடு ல இறங்கி கைய ஆட்டிட்டு ஒரு வாக் . Just enough for the jokers
State is infatuated with a cute @CMOTamilnadu why should it bother about inflation. Have fun
🚨 State-wise inflation in September 2026.
Tamil Nadu - 6.81%
Odisha - 6.70%
Madhya Pradesh - 6.68%
Telangana - 6.64%
Andhra Pradesh - 6.29%
Uttar Pradesh - 6.08%
Ladakh - 5.90%
Karnataka - 5.86%
Rajasthan - 5.71%
Bihar - 5.48%
Uttarakhand - 5.47%
Punjab - 5.27%
Kerala - 5.26%
Maharashtra - 5.18%
Gujarat - 5.11%
Manipur - 5.10%
Chhattisgarh - 5.00%
Sikkim - 4.83%
Assam - 4.62%
Chandigarh - 4.39%
Haryana - 4.37%
Jammu and Kashmir - 4.27%
West Bengal - 4.04%
Himachal Pradesh - 4.02%
Tripura - 3.96%
Lakshadweep - 3.95%
Goa - 3.92%
Arunachal Pradesh - 3.70%
Meghalaya - 3.59%
NCT of Delhi - 3.40%
Nagaland - 3.22%
Mizoram - 2.85%
1
46
தமிழ்நாட்டில் திமுகவால் 1967 மொத்தமாக தொங்கலில் வைக்கப்பட்ட காங்கிரஸ், இந்தியா முழுமைக்கும் திமுகவால் தொங்கலில் வைக்கப்படும் நாள் வெகு தூரமில்லை
உதயநிதி தி.மு.க.வின் தரம் தாழ்ந்த அரசியலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பதில்!
SIR குறித்த கேள்விகளுக்கு உண்மைகளால் பதிலளிக்க முடியாதபோது, எங்கள் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்துவதும், “வாயை அடக்க வேண்டும்; இல்லையென்றால் அடக்கப்படும்” என்று வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசுவது ஏன்? இந்தப் பேச்சுக்கெல்லாம் அஞ்சுபவர்களா காங்கிரஸ்காரர்கள்?
அரசியல் விவாதத்தை இவ்வளவு தரம் தாழ்ந்த நிலைக்குக் கொண்டுசெல்ல வேண்டிய அவசியம் என்ன?
முதலில், SIR குறித்த காங்கிரஸின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ளுங்கள்!
எங்கெல்லாம் தேர்தல் முறைகேடுகள் குறித்த உறுதியான, தீர்மானகரமான ஆதாரங்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் அவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; தேவைப்பட்டால் மறுதேர்தலும் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் சூழல்களையும், பீகார், மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் எழுந்துள்ள குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளையும் ஆதாரங்களை ஆராயாமல் ஒன்றாகச் சேர்த்துப் பேசுவது சரியான அணுகுமுறை அல்ல. ஆதாரங்கள் எங்கே இருக்கின்றனவோ, நடவடிக்கையும் அங்கே இருக்க வேண்டும். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை உண்மையாகச் சித்தரிக்கக் கூடாது.
அப்படியானால், தி.மு.க.வுக்கு ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?
SIR நடவடிக்கையின்போது தி.மு.க. தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு உதவியதையும், வாக்குகளைப் பாதுகாக்கக் களத்தில் பணியாற்றியதையும் திமுக தலைவர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் பாராட்டினார்.
அந்தப் பணியை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. தொண்டர்களின் உழைப்பு பாராட்டப்பட வேண்டியதே!
ஆனால், அதே நேரத்தில், அந்தப் பணியைச் சுட்டிக்காட்டி SIR தொடர்பான மோசடிகள் எதுவும் தமிழ்நாட்டில் நடைபெறாமல் திமுக தடுத்துவிட்டதாகக் கூறினார்.
அன்று தொண்டர்களின் உழைப்பைப் பாராட்டியபோது SIR குறித்து ஒரு நிலைப்பாடு; இன்று கேள்வி எழுப்பப்படும்போது வேறொரு நிலைப்பாடா? இதைத் தெளிவுபடுத்த வேண்டியது தி.மு.க.வின் பொறுப்பு.
இந்தக் கேள்வியைக் கேட்டதற்காக ஏன் இவ்வளவு கோபம்?
ஏன் இவ்வளவு ஆபாசமான தனிநபர் தாக்குதல்கள்? ஏன் வன்முறைப் பேச்சு?
இந்த மிரட்டல்களுக்கு பயந்தவர் அல்ல எங்கள் தலைவர் மாணிக்கம் தாகூர் அவர்கள்.
திருப்பி அடிக்க தெரிந்தவர்.
கருத்துக்குக் கருத்தால் பதிலளியுங்கள்; உண்மைக்குப் பொய்யால் பதிலளிக்காதீர்கள்!
காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகளுடன் உடன்படவில்லை என்றால், ஆதாரங்களை முன்வைத்து விவாதியுங்கள். ஆனால், அரசியல் விமர்சனத்தைத் தனிப்பட்ட அவதூறாக மாற்றுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசியல் விவாதத்தைத் தொடர்ந்து இத்தகைய தரம் தாழ்ந்த மொழிக்குக் கொண்டுசெல்வது தமிழ்நாட்டின் அரசியல் பண்பாட்டுக்கு நல்லதல்ல.
தமிழக காங்கிரஸ் யாருக்கும் அடிமையல்ல.
எங்கள் தலைவர் மாணிக்கம் தாகூர் எழுப்பும் கேள்விகளுக்குபதில் சொல்ல வேண்டுமே தவிர, அவரை மிரட்டலாம் என்று கற்பனை செய்வது மூலமாகவோ, இழிவுபடுத்துவதன் மூலமாகவோ உண்மையின் குரலை அடக்கிவிட முடியாது.
ஜனநாயகத்தைக் காப்பது எங்கள் கடமை. ஒவ்வொரு தகுதியான குடிமகனின் வாக்குரிமையைப் பாதுகாப்பது எங்கள் உறுதியான நிலைப்பாடு. உண்மைகளைப் பேசுவதற்கும் கேள்வி கேட்பதற்கும் காங்கிரஸ் ஒருபோதும் அஞ்சாது.
தி.மு.க.வுக்கு மீண்டும் கேட்கிறோம்: உண்மைகளை எதிர்கொள்ளத் தயாரா? அல்லது கேள்வி கேட்பவர்களை தனிநபர் தாக்குதல் மற்றும் ஆபாசப் பேச்சின் மூலமாக மௌனமாக்க முடியும் என்று நினைப்பது தான் உங்கள் அரசியலா?
#TamilNaduCongress #SaveDemocracy #ProtectVotingRights #SIR #IndianNationalCongress
64
No jumping Barricades this time to buy sweetbox to your new brother @RahulGandhi.
முதல்வர் விஜய் இல்லத்தில் ராகுல் காந்தி உடன் சந்திப்பு
#Vijay #RahulGandhi #TVK #Congress #TamilNadu
4
147
அண்ணணே கொஞ்சம் அந்த board கழட்டி வைங்க எங்க போனாலும் அதையே சொல்லிட்டு. உங்களுக்கே தெரியும் உண்மை என்னன்னு..
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் 'மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி'யின் சார்பில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும்சத்யபாமா ஆகிய இருவரும் வெற்றி பெற்றிருப்பது இக்கூட்டணிக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாகும்.
கடந்த பொதுத் தேர்தலில் இவ்விருதொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த தவெக, தற்போது கணிசமான வாக்குகளின் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது எமது கூட்டணியை மட்டுமின்றி, 'கூட்டணி அரசு' என்கிற தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் மகத்தான நிலைபாட்டையும் மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்பதையே உணர்த்துகிறது.
'விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் அணியேவெற்றி பெறும்' என்பதை உறுதிப்படுத்தும் வகையில், முழுமையான ஈடுபாட்டுடன் களப்பணி ஆற்றிடவேண்டுமென நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தவெக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சார்ந்த தோழர்களுடன் இணைந்து திறம்பட செயலாற்றிய என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் வாக்காளப் பொதுமக்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கூட்டணியின் நல்லாதரவோடு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் கூட்டணியின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் எமது வாழ்த்துகள்!
@actorvijay
@CMOTamilnadu
#ByElectionsResults
Best takeaway in byelection for @arivalayam. We are not here to be done and dusted. We rise back as the way we fall.
இன்னும் தமிழ்நாடு FDFS MODE ல தான் இருக்கு அவ்வளவு சீக்கரம் இடைத்தேர்தல் ல எல்லாம் திருந்திருப்பாங்கனு நம்பறது மடத்தனம் போயி வேலைய பாருங்க #byelection
3
205



















