நன்றி என்பது புராதனம்தான் ஆனாலும் அது புதிதும்தான்! ஆகவே என் 'வட்டாரம்' படத்தினை நினைவில் கொண்டு கவனப்படுத்தியமைக்கு நன்றி!
" பர்மா ! நீ குருபாதம் மாதிரி ஆகப்போறியா?"
" இல்ல , குருபாதமாவே ஆகப் போறேன் !"
2006 தீபாவளி ரொம்பவே வித்தியாசமான ஒரு தீபாவளி! கேப்டன் விஜயகாந்தின் தர்மபுரி, அஜித்தின் வரலாறு, சிம்புவின் வல்லவன், ஜீவாவின் ஈ, ஆர்யாவின் வட்டாரம், சரத்குமாரின் தலைமகன் என மொத்தம் 6 படங்கள் இந்தத் தீபாவளிக்கு வெளியாகின. இந்தத் தீபாவளி கொஞ்சம் ஸ்பெஷலான தீபாவளி என்பதற்கு இதுவே சாட்சி!
கேப்டன் தர்மபுரி
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் DMDK கட்சியை ஆரம்பித்து, முழுநேர அரசியல்வாதியாக மாறிய பிறகு வெளியான படம் என்பதால், தர்மபுரி மீது அப்போதே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இயக்கிய பேரரசு, அந்தக் காலகட்டத்தில் Full ஃபார்மில் இருந்தார். அவரது நான்காவது இயக்கத்தில், ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் வெளியான இந்தப் படம், வழக்கமான பேரரசு பாணியிலான ஒரு மசாலா படம்தான். அவரது படங்களில் என்னென்ன அம்சங்கள் இருக்குமோ, அத்தனையும் இதிலும் இருந்தன. இறுதியில் ஒரு டீசன்டான வெற்றியையும் பெற்றது.
அஜித்தின் வரலாறு — ஒரு லேண்ட்மார்க்!
மூன்று வருடங்களாகத் தொடர்ந்த சறுக்கல்களுக்குப் பிறகு, அஜித் அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி தேவைப்பட்ட காலகட்டம் அது. மிகவும் உடல் இளைத்து, பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான வரலாறு, அஜித்தின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது.
அதற்கு முன்பு வெளியான பரமசிவன், திருப்பதி ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. கண்டிப்பாக ஒரு ஹிட் தேவைப்பட்ட அந்தச் சூழலில், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார்.
ஏ.ஆர். ரஹ்மானின் இசையும் படத்திற்குப் பெரும் பலமாக அமைந்தது. அஜித்தின் வித்தியாசமான நடிப்பு, திரைக்கதை, பாடல்கள் என அனைத்தும் சேர்ந்து வரலாறு படத்தை ஒரு லேண்ட்மார்க் பிளாக்பஸ்டராக மாற்றின. இன்றுவரை அஜித் நடித்த படங்களில், அவர் ஏற்ற நடனக் கலைஞர் கதாபாத்திரம் பலருக்கும் ஃபேவரைட்!
ஈ & வட்டாரம் — உண்மையான சர்ப்ரைஸ் படங்கள்!
இந்தத் தீபாவளியின் உண்மையான சர்ப்ரைஸ் படங்கள் என்றால், ஈ மற்றும் வட்டாரம் ஆகிய இரண்டையும் தாராளமாகச் சொல்லலாம்.
ஈ — காலத்தைக் கடந்த சினிமா!
ஈ படத்தில் அப்போதே மருத்துவ மாஃபியா, அதில் நடக்கும் சர்வதேசக் குற்றங்கள் எனப் பல விஷயங்களை ஜனநாதன் அவர்கள் மிகத் துணிச்சலாகக் காட்டியிருந்தார்.
ஜீவா மற்றும் பசுபதி ஆகியோருக்குப் பெரிய பெயரைப் பெற்றுத் தந்திருக்க வேண்டிய அட்டகாசமான சினிமா இது. இன்றைய காலகட்டத்திலும் பேசப்பட வேண்டிய கதைக்களத்தைக் கொண்டிருந்தும், இந்தப் படம் ஒரு டீசன்டான வெற்றியுடன் தனது ஓட்டத்தைச் சுருக்கிக்கொண்டது என்பதுதான் வருத்தம்!
வட்டாரம் — ஒரு அண்டர்ரேட்டட் கல்ட் கிளாசிக்!
மற்ற தீபாவளிப் படங்களையெல்லாம் தாண்டி நின்ற ஒரு அட்டகாசமான சினிமா வட்டாரம். சரண் இயக்கிய படங்களிலேயே மிகச் சிறந்த படங்களில் ஒன்று என்று இதைத் தாராளமாகச் சொல்லலாம்.
பிரெஷ்ஷான நடிகர் தேர்வு, கதைக்களம், திரைக்கதை, அந்த உலகத்தை உருவாக்கிய விதம் என அனைத்திலும் அப்போதே மிகச் சிறப்பாக எழுதப்பட்ட படம் இது.
இத்தனை சிறப்புகள் இருந்தும், பெரிய அளவில் வெற்றி பெறாத படமாகவே வட்டாரம் அமைந்தது. ஆனால், இன்றுவரை இந்தப் படத்திற்கென ஒரு மிகப்பெரிய கல்ட் ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பதுதான் இதன் தனிச்சிறப்பு!
வல்லவன் — எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாக
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான சிம்புவின் வல்லவன், பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
ஆனால், யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களை எடுத்துக்கொண்டால், அது வேற லெவல்! இன்றுவரை அந்தப் பாடல்களுக்கெனத் தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
தலை மகன் — சரத்குமாரின் முயற்சி!
சரத்குமார் இயக்கி நடித்த தலைமகன் படத்தைப் பொறுத்தவரை, அந்தப் படம் அவருக்குப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது, இந்தப் படத்தை எத்தனை பேர் திரையரங்குகளில் பார்த்திருப்பார்கள் என்பதே கேள்விக்குறிதான்!
இந்தத் தீபாவளியின் இன்னொரு சுவாரஸ்யமான ட்ரிவியா!
ஈ, வல்லவன், தலைமகன் ஆகிய மூன்று படங்களிலுமே நயன்தாராதான் கதாநாயகி என்பது பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான விஷயம்!
அந்தக் காலகட்டத்தில் தொடர்ந்து பல படங்களில் நடித்த நயன்தாரா, பின்னாளில் சிம்புவுடன் ஏற்பட்ட காதல் சர்ச்சைக்குப் பிறகும் மீண்டும் தமிழ் சினிமாவில் தனது இடத்தை வலுவாகப் பிடித்தார்.
இறுதியாக...
ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் ஒரே தீபாவளிக்கு வெளியான காலகட்டங்களில், 2006 தீபாவளியும் மறக்க முடியாத ஒன்று. ஆறு படங்கள், ஆறு விதமான கதைக்களங்கள், வெவ்வேறு எதிர்பார்ப்புகள், சில வெற்றிகள், சில ஏமாற்றங்கள், சில காலம் கடந்தும் கொண்டாடப்படும் படங்கள்!
அதற்குப் பிறகு, ஒரே தீபாவளிக்கு இத்தனை படங்கள் வெளியாகும் சூழல் படிப்படியாகக் குறைந்தது.
SARAN retweeted
இது போன்ற முதலுதவி மற்றும் உயிர்காக்கும் தகவல்களை பள்ளி மற்றும் கல்லூரி கல்வி பாடத்திட்டத்தில் ஆடியோ விஷுவல் தகவல் தொடர்பு பயன்படுத்தி சுவாரஸ்யமான முறையில் எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி சேர்க்க வேண்டும்.
முதலுதவி பயிற்சி ஒவ்வொரு தமிழக மாணவருக்கும் கட்டாயமாக தரப்பட வேண்டும்.
@imrajmohan @CMOTamilnadu
தேனிசைத் தென்றல் தேவா என்றதுமே அண்ணாமலை படப்பிடிப்பின் முதல்நாள் நான் கவிதாலயா சார்பாக ஏவிஎம் அறையொன்றில் அவரைச் சந்தித்து வீடியோ பதிவு செய்தது ஞாபகத்தில் வருகிறது . கவிதாலயாவின் அனைத்து படங்களுக்கும் விளம்பர நிர்வாகப் பொறுப்பில் இருந்ததால் எனக்கு இந்த சந்தர்ப்பம் வாய்த்தது .
ஆர்மோனியம் திறந்து 'அண்ணாமல அண்ணாமல ஆச வச்சேன் உண்ணாமல' என்று பாடியபடியே டியூனை வாசித்தார்.அதுதான் முதல் விளம்பரமாக வெளியானது.
அதன் பின் ' கல்கி ' யில் கேபி சார் அவருடன் முதன்முறையாக இணைகிறார். அதில்
' எழுதுகிறேன் ஒரு கடிதம் ' என்ற பாடலைப் பாடும் போது சித்ரா அவர்களால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்கு உருக்கமான டியூன் அது...
பிறகு என் முதல் படம்
' காதல் மன்னன் ' ல் ' மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா ' பாடலை பரத்வாஜ் இசையில் பாடினார். இதில் சுவாரஸ்யம் என்னவெனில் என் முன்னிலையில் பதிவான அந்தப் பாடலை அன்று இரவு மிக்சிங் செய்த போது தேவா அவர்களின் குரல் டிராக் மட்டும் தவறுதலாக அழிந்து விட்டது. பரத்வாஜ் பதைபதைத்து போய் எனக்கே தெரியாமல் தேவா அவர்களைத் தொடர்பு கொண்டு பேச, இரவு இரண்டு மணிக்கு வந்து மீண்டும் அதே உற்சாகத்துடன் பாடிக் கொடுத்திருக்கிறார்.
அன்றைக்கு தேவா அவர்கள் படு பிசியான பெரிய இசையமைப்பாளர் ! இருந்தும் இன்னொரு புதுமுக இசையமைப்பாளருக்கு தேவா அவர்கள் தந்த மரியாதை அது.
ஹரிகரன் லெஸ்லி இசையமைப்பாளர்களாக அறிமுகமான என் ' மோதி விளையாடு ' படம் !
அதில் வரும் எழுச்சியூட்டும்
' மோதி விளையாடு நீ ' பாடலை தேவா அவர்கள் பாடியது மட்டுமில்லாமல் அந்தப்பாடலில் நடித்தும் கொடுத்தார் அதுவும் இரவு படப்பிடிப்புகளில் !
திறமையோடு இழைந்த எளிமை, பணிவு, உழைப்பு,கண்ணியம் அவரை உச்சத்துக்கு கொண்டு போய் வைத்திருக்கிறது!
அவர் வடிவமைத்த சூப்பர் ஸ்டார் முகப்பு இசைதான் இந்தியாவில் முதல்முறையாக ஒரு ஹீரோவுக்காகவே உருவாக்கப்பட்டு இன்று வரை பிரபலமாக இருக்கிற டியூன் !
அந்த ஆர்ப்பரிப்பான இசை அலை எழுந்தது இந்த தேவா என்கிற ஆழ்கடலில்தான் !
தேவா அவர்கள் மீளா உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாலும் அவரது இசை விழித்துக் கொண்டேதான் இருக்கும்! ஓம் சாந்தி .
youtu.be/7T4IVdKj2u0?si=lh-u…
youtu.be/7ip9-ayGX4c?si=JxdT…
youtu.be/ZP6y3F3GyFA?si=var1…
youtu.be/f9-A2T2xNpU?si=1Y0O…
'வட்டாரம்' இந்த அக்டோபரில் 20 வயதை பூர்த்தி செய்கிறது!
இது உருவான காலம் என் கசங்கிய கசந்த நினைவுகளைக் கிளறுகிறது.'அறிந்தும் அறியாமலும்' படம் பார்த்துக் கவரப்பட்ட நான் பலத்த போட்டிக்கிடையில் ஆர்யா அவர்களை ஒப்பந்தம் செய்தேன். ஆகஸ்ட் ரிலீஸ் என்று சொல்லி ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கும் முயற்சியில் இருந்த போது திடீரென இயக்குநர் பாலாவிடமிருந்து 'நான் கடவுள்' படத்தில் நடிக்க ஆர்யாவுக்கு அழைப்பு வர அவர் சபலப்பட்டு அதை முடித்துவிட்டு வருவதாக கூற நான் அவ்வளவு காலம் காத்திருக்க முடியாது என தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட, திரு.ஏ.எல்.அழகப்பன் நேர்மையாகச் செயல்பட்டு ஒப்பந்தப்படி வட்டாரம் படத்தை முடித்து விட்டுதான் 'நான் கடவுள்' படத்தில் ஆர்யா நடிக்க வேண்டும் என விவகாரத்தை முடித்து வைத்தார். இதற்குள் இரண்டு மாதம் ஓடி படப்பிடிப்பு தாமதமாகத் தொடங்க யத்தனிக்க ஏற்கெனவே பேசி வைத்திருந்த ரகுவரன் அவர்களோ தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார். ஆபத்பாந்தவனாக திரு.நெப்போலியன் அவர்கள் கை கொடுத்தார். 'குருபாதம்' உயிரும் உடலும் பெற்றார். பிரச்னைகளுக்குப் பிறகு நடிக்க வந்த ஆர்யா 'பர்மா' வாகவே உருமாறி எந்த கல்மிஷமும் இல்லாமல் கலகலப்பாக என்னுடன் இணைந்தது எந்த ஹீரோவிடமும் இல்லாத தனித்தன்மை! ஆகஸ்டுக்கு வரவேண்டிய வட்டாரம் தீபாவளி போட்டியில் எதிர்பாராமல் வந்த இரண்டு பெரிய படங்களால் தியேட்டர்கள் ஒப்பந்தப்படி காலைக்காட்சியாக சுருக்கப்பட்டு அல்லாடியது.தயாரிப்பாளராக எனக்கு அது பணத்தை வெல்லவில்லை ஆனால் இயக்குநராக இன்றுவரை ரசிக மனங்களை வென்று வருகிறது ! விக்கிபீடியாவில் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டதை இப்போது கவனிக்கும் போது என் வடுக்கள் வருடிக்கொடுக்கப் படுகிற உணர்வு !
சிஃபி (Sify) இதழ், "சரணின் வட்டாரம் திரைப்படம் விறுவிறுப்பாக நகரும் ஒரு சுவாரசியமான, அதிரடி நிறைந்த மசாலா பொழுதுபோக்குத் திரைப்படமாகும். இயக்குநர் சரண், தமிழ் சினிமாவுக்குப் புதிதான துப்பாக்கிக் கடத்தல் பின்னணியைக் கொண்டு, இப்படத்தை நேர்த்தியாகப் படமாக்கி ஸ்டைலாக உருவாக்கியுள்ளார்" என்று எழுதியது.
கல்கி இதழில் லஜ்ஜாவதி எழுதுகையில், "அரிவாள்களுடன் ரௌடிகளைப் பார்த்துப் பழகிய மக்களுக்கு, சரண் ஒரு வித்தியாசமான உலகத்தை ஸ்டைலாகக் காட்டியுள்ளார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
சினிசவுத் (Cinesouth), "முதல் பாதி சற்று மெதுவாகச் சென்றாலும், இரண்டாம் பாதி முழுவதும் அதிரடியும் வேகமும் நிறைந்து, சரணின் 'வட்டாரம்' படத்தை ஒரு நல்ல பொழுதுபோக்குத் திரைப்படமாக மாற்றுகிறது" என்று எழுதியது.
சென்னை ஆன்லைன் (Chennai Online), "தமிழ் சினிமாவுக்கு இந்தக் கதைக்களம் மிகவும் புதுமையானது. தேவையற்ற நகைச்சுவைக் காட்சிகளோ, கவனத்தைத் திசைதிருப்பும் காட்சிகளோ இல்லாமல் திரைக்கதை நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. திரைக்கதை எழுத்தாளராகவும் இயக்குநராகவும் சரணின் சிறந்த படைப்புகளில் 'வட்டாரம்' ஒன்றாகத் திகழ்கிறது. அவரது முந்தைய படங்களை விட இதில் அதிக முதிர்ச்சியையும் சீரான தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளார்" என்று குறிப்பிட்டது.
SARAN retweeted
Ayya coded film @dirsaran epdiyadhu thala ah nadikka vechurkalam sir
Rewind to 2006 ⏪
வட்டாரம் 🎯
Arya-வோட early mass avatar! 💥 One of his most underrated movies!
KTV-ல அப்பப்போ போடுவாங்க… ஆனா இந்தப் படத்துக்கு இன்னும் கொஞ்சம் recognition கிடைச்சிருக்கணும்! ❤️🔥
ஒரு driver-ஓட மகன்… தன்னோட அப்பாவை frame பண்ணி தற்கொலைக்குத் தள்ளிய gangster-ஓட வீட்டுக்குள்ளேயே புகுந்து revenge எடுக்கிறான்!
Napoleon as Gurupadam – vera level powerful! 🔥
Bharadwaj-ஓட music, Saran-ஓட stylish direction, gun running background, unexpected twists, raw action, mass fights…
Saran-ல இருந்து வந்த ஒரு unexpected gangster action entertainer! 💥
இப்போ பார்த்தாலும் Arya-வோட raw energy வேற லெவல்! இந்த மாதிரி படங்கள் இன்னும் அதிகமா பேசப்பட்டிருக்கணும்! 👏
நம்ம சீயான் விக்ரம் , ஜேசன் ஸ்டேத்தம் இந்த இருவரின் நடிப்பையும் நான் வெகுவாக ரசித்தும் கவனித்தும் வருகிறேன் . இருவரது உடலமைப்பும், உடல்மொழியும் , குரலும் ஒன்று போலவே இருப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன் ! உலகில் ஒரே போல ஏழு பேர் உண்டு என்பது உண்மையானால் அந்த மீதி ஐந்து பேரும் எங்கிருந்தாலும் வாழ்க !
நடிகர் ஜாவா சுந்தரேசன் ( முன்னாளில் சாம்ஸ்) என் காதல் மன்னன் படப்பிடிப்பின் போது கல்லூரி பியூன் வேடத்திற்காக என் முன் நிறுத்தப்பட்டார். பத்தோடு பதினொன்று என்று தோன்ற முடியாத அளவுக்கு நகைச்சுவை ததும்பிய முகம்!
எடுத்தவுடனே அஜித் அவர்களுடைய காம்பினேஷன் ! அவர் கிரேசி மோகன் ட்ரூப் என்பதும் காதல் மன்னன்தான் அவரது முதல் படம் என்பதும் பின்னாளில் அவர் பிரபலமானதும் தெரியவந்தது . இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்,அறை எண் 305 ல் கடவுள், பயணம்,நான் தயாரித்த 'ஆறு' , நான் இயக்கிய மார்க்கெட் ராஜா mbbs என பல படங்கள்...இதெல்லாம் அவர் எப்படி புலி ஆனார் என்பதற்கான சான்று ,ஆனால் புலிக்குப் பிறந்ததும் புலிகள்தான் என்பதற்கான நிரூபணம் அவரது மகன் யோஹன் நடிக்கும் FALL வெப் சீரிஸில் காணவும் மகள் அக்ஷயா பாடிய 'கால வெளியினில்' பாடலைக் கேட்கவும் கிடைக்கிறது ! தந்தையைத் தாண்டும் வளர்ச்சியின் அறிகுறி இப்போதே தெரிகிறது ! வாழ்க...
youtu.be/Z8w12vWKzQA?si=RqEM…
youtu.be/VUlkfQgQzP4?si=O294…
காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் - நான் கருவான இடம் !
இங்கே படித்த அன்றைய 5 ஆண்டுகள்... சூரியன் தரை தொடத் தயங்கும் அடர்ந்த மரங்களின் நிழல் ஒரு கடும் புயலில் காணாமல் போய் கால் சுட்டதும், ஈசல் போர்டுகள் எதிரே மாடல்களை முன் வைத்து சார்க்கோல் கோடுகள் கிழித்து அவர்களை பேப்பரில் இடம் மாற்றியதும், பழமையான லைப்ரரியும், ஆண்டு தோறும் ஓபன் ஹவுஸ் எக்ஸிபிஷனில் நாம் வரைந்தவற்றை காட்சிப்படுத்தி யாராவது ரசிக்கிறார்களா என வேவு பார்த்ததும், பின்பக்க ரயில் சத்தத்துடன் லஞ்ச் முடித்து கிளாஸ்மேட் நாராயணன் பாடிய எம்ஜியார் பாடல்களும், பெரியமேடு டீகடைகளும்...
முத்தாய்ப்பாக டிப்ளமோவை டிகிரியாக மாற்றக்கோரி நான் உட்பட அறுவர் அணி இணைந்து நடத்திய இந்தியாவின் முதல் உள்ளிருப்பு போராட்டம் 15 நாட்களும் , ஏழு மாதம் தொடர்ந்த கல்லூரி கதவடைப்பும், செலவுகளுக்காக 20 மாணவர்களுடன் காந்தி பீச்சில் வருவோர் போவோரை அமர வைத்து 10 ரூபாய்க்கு போர்ட்ரெய்ட் வரைந்து சம்பாதித்ததும், போராட்டம் வெற்றி பெற்று டிகிரி படிப்பாக முற்றிலும் மாற்றி 5 ஆண்டு 4 ஆண்டாக குறைத்ததும் இன்னும் பலவும் நெஞ்சில் நிழலாடுகின்றன !
அந்த உள்ளிருப்பு போராட்டம் ஒரு உள்ளீடாக கேபி சாரின் 'ரயில் சிநேகம்' தொலைக்காட்சி தொடரிலும், என்
' காதல் மன்னன் ' படத்திலும் இடம் பெற்றது.
கல்லூரி கால நினைவுகள் பொதுவானவைதான் ஆனால் 175 ஆண்டு கால வரலாற்றுச் சான்றாக நிற்கும் கவின்கலை கல்லூரி கால நினைவுகள் சற்றே ஸ்பெஷல்தானே?!
நன்றி ஆர்ட் டைரக்டர் மணிராஜ் - நினைவுகளை கிளறியதற்கு !
தமிழ் சினிமாவின் சமீப பெருமைகளில் ஒன்று இந்த 'மொத ராத்திரி' ! சினிமா வெகு ஜனங்களுக்கானது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிற படம் ! இயக்குநர் ராஜா கருப்பசாமியின் வரவு ஒரு நல்வரவு ! 'கேரக்டர் ஸ்டடி ' என்றால் என்ன என்பதை இந்தப் படம் பார்த்து என்னை அப்டேட் செய்து கொண்டேன்.அற்புதமான படம் ,
100% உத்தரவாதம் !
வேற என்ன வேணும் நமக்கு?
சட்ட கிழிய கிழிய தியேட்டருக்குள்ள முண்டியடிக்க ,
பேரு காட்டும்போது கத்தி கத்தி ரகள செய்ய,
ஏகே ஒரு Glimpse ஆ ஸ்கிரீன்ல தெரியும் போது Goosebumps ஆகற Mass Moment தவிர,
வேற என்ன வேணும் நமக்கு ?
இதாம்லே நம்ம DARE ரேசு... இங்க நாமதாம்லே DEVIL டிரைவரு...!
வாழ்த்துகள், 'நல்லா' எடுக்கப் போற டைரக்டருக்கும் 'கல்லா' கட்டப்போற தயாரிப்பாளருக்கும் !
சமீப குயில்கள் !
இந்த முகங்களும் குரல்களும் ஏனோ என் மனதில் என்னையறியாமல் அமைதியை விதைத்துப் போகும்...
ஸ்வேதா மோகன் , ராஜா சாரின் முத்துமணி பாடலில் இழைந்து பொருந்திப் போயிருப்பார்!
முக்கியமாக அந்த ' தங்கத்துக்கு...' என்ற வார்த்தைப் பிரயோகம்...!
ஸ்ரேயா கோஷல் , கொல்கத்தாவில் பிறந்து பாரதமெங்கும் பறந்து திரியும் கான பறவையின் மலையாள ஆல்பம் பாடல் ' கல்யாணி ' !சான்சே இல்லை...!
இந்த குரல் ராணிகளின் ஆட்சி தொடரட்டும் !
youtu.be/rs0gQ-3hbPQ?si=ZTMA…
நேபாள துயரத்தில் தோய்ந்திருந்த மனதுக்கு அருமருந்தாக ராகதேவன் இளையராஜாவின் இந்த இசை !
இரைச்சலை சலித்து சலித்து இசையை மட்டும் பிரித்தெடுத்திருக்கிறார் !
படாரென ஆர்ப்பரித்து ஆரம்பிக்கும் அந்த தாளலய இரயிலில் நிலவு தூங்கும் இரவில் நெடுந்தூரம் பயணிக்கும் உணர்வு ! கூடவே ஓடி வரும் ஸ்வேதா மோகனின் தேன் குரலை லாவகமாக கடந்து மேலேறி வரும் இசைராஜாவின் காந்தர்வக் குரல் என் காதுகளைக் கௌரவப் படுத்தி விட்டது !
நன்றி கார்த்திக் சுப்புராஜ் !
'டோரதி'மேல் பார்க்காமலே காதல் வரவழைத்து விட்டது இந்தப் பாடல் ! பார்த்து விட்டால் ஊரறிய மேளதாளம்தான் !
உங்கள் தாள் பணிகிறேன் இசைஞானி அவர்களே !
youtu.be/DC8b26dO2yQ?si=TZFP…
ஜேசன் சஞ்சய் அவர்களின் இந்தப் பேட்டி வெகு சுவாரஸ்யம் ! சில முக பாவனைகளில் சாயல் தெரிவதை ரசித்தேன் . 90 காலகட்டத்தில் நான் 'சிகரம்' படத்தின் உதவி இயக்குநராக பணிபுரிந்த போது திரு.எஸ்ஏசி அவர்களது இல்லம்தான் படப்பிடிப்புத் தளம் . பிளஸ் டூ முடித்திருந்த திரு . விஜய் இருக்கும் அறையில் லைட் வைக்க அவரிடம் இடம் கேட்பேன். அவர்அடுத்த அறைக்குச் செல்வார் , அரை மணியில் அங்கும் போய் காமெரா வைக்க வேண்டும் எனக் கேட்பேன் . தொந்தரவாக இருந்தாலும் இயக்குநரின் மகன் அல்லவா? புரிந்து கொண்டு விட்டுக் கொடுப்பார் . இது முப்பது நாட்களும் தொடர்கதைதான் . அவர் ஹீரோவான பிறகு திரையுலக பார்ட்டிகளில் சந்திப்பேன் ! என் 'ஓ போடு ' படமாக்கப்பட்ட போது அவரது பட ஷாட் இடைவெளிகளில் வந்து இந்தப் படப்பிடிப்பை ரசிப்பார் . 'ஜெமினி' ரிலீஸான போது பெருந்தன்மையோடு நேரில் வந்து பாராட்டினார் .'தலைவா' ஷூட்டிங் மும்பையில் நடந்த போது அவர் தங்கிய ஓட்டலில் நானும் ஒரு வேலையாக தங்கியிருந்தேன் . மாலைகளில் சில நேரம் அவரோடு அரட்டைக் கச்சேரி இருக்கும் . 26 ல் அதே இயல்பான மேனரிஸங்களை ஜேசன் சஞ்சயிடத்திலும் காண்கிறேன் !நிச்சயம் நடிக்க வந்து உயரங்களை எட்டிப் பிடிப்பார் ! ' காதல் மன்னன் ' சமயத்தில் நான் பழகிய திரு.அஜித் அவர்களின் பிராக்டிகல் மனோபாவமும் இவரின் மனோபாவமும் ஒரே மாதிரி எனக்குத் தோன்றுகிறது .
இந்த அழகிய தமிழ் மகன் தேர்ந்த இயக்குநராகவும் ,உச்சத்தில் மின்னும் நட்சத்திரமாகவும் மிளிர வாழ்த்துகள் கோடி !
இன்று ' ராஜ கோபுரங்கள் ' பிரமாண்டமான நிகழ்ச்சி !
திரைப்பட ராஜாங்கம் நடத்திய இரு ராஜாக்களை நெஞ்சில் ஏந்தி கௌரவிக்கும் விழா ! மாண்புமிகு தமிழக முதல்வர் , சூப்பர் ஸ்டார் , உலகநாயகன் என ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே கூடுகிறது !
FLASHBACK 1
இயக்குநர் இமயம் நான் அவருக்காக 'அல்லி அர்ஜுனா ' இயக்கிக் கொண்டிருந்த போது அவரது அறையில் வைத்து ஒரு நாள் 'முதல் மரியாதை' படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தன்னிடம் எப்படி பேசினார் என அவர் நடித்துக் காட்டிய போது ஒரு வினாடிக்குள் என் எதிரே சிம்மக்குரலோனே நேரில் ! உடல்மொழி,பாவனை, குரல் எல்லாம் தத்ரூபமாக ! என்னையே கிள்ளிக் கொண்டு அந்த மாயையில் இருந்து விடுபட்டேன்.
அதுதான் உண்மைக் கலைஞன்...
அதுதான் பாரதிராஜா ...
FLASHBACK 2
இரண்டு வருடம் இருக்கும் , ஒருநாள் திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது
" சார் ! நீங்கள் முன்னெப்போதோ ஒரு பேட்டியில் ஒரு டைரக்டர்னா படப்பிடிப்பில் பலபேர் பார்க்கிறார்களே என்று டைரக்ட் பண்ற மாதிரி நடிக்கக்கூடாது. உண்மையாவே ஈடுபடணும்னு சொன்னீங்க...அது ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன் சார் " என்று அவர் கையைப் பற்றிக்கொண்டேன் ! வாஞ்சையுடன் தட்டிக்கொடுத்தார்... 'காதல் மன்னன்' ரிலீஸ் ஆனபோது என்னை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தி பேசிய கன்டென்ட்டை வாக்கியம் பிசகாமல் மீண்டும் சொன்னார்.என்ன ஒரு ஞாபகசக்தி!
அதுதான் உண்மைக்கலைஞன்...
அதுதான் கே.பாக்யராஜ் ...
எண்ணமெல்லாம் சென்னையில் வைத்துக் கொண்டு இங்கே மும்பையில் என் திரைப்பட பணி தொடர்பாக இருக்க வேண்டியதாகி விட்டது.
விழாவை சிறப்பற நடத்தும் திரையுலக சங்கங்கள் இதில் நிச்சயம் முத்திரை பதிக்கும் !
வாழ்க எங்கள் ராஜாக்களின் புகழ் ! – at Mumbai, India
🤖 Made with AI
youtu.be/HPoqHfth4Eo?si=Eb8C…
தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் - செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!
மனதிற்கினிய சுதந்திரதிருநாள் வாழ்த்துகள் !






























