. retweeted
அந்த அளவுக்கு கூட்டம் இல்லை.. பேருந்துல தாராளமா இடம் இருக்கு.. தற்காலிக பேருந்து நிலையங்களை அதிகரிச்சதால நல்லா இருக்கு.. தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் மக்கள்..! பேருந்து வசதி குறித்து கருத்து..
#Diwali | #Bus | #PolimerNews
. retweeted
Kilambakkam Bus Terminus – Diwali Crowd Management
Recorded this drone footage this evening.
This time, the Tamil Nadu government seems to have organised Diwali passenger movement quite well at Kilambakkam. 👏 👏
@TamilanParthib1 @MtcChennai @ChennaiTraffic @COPTBM @CMOTamilnadu @UpdatesChennai
#Chennai #Diwali #Traffic
. retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
. retweeted
My Biggest Motivator in town is back🥹❤️🩹🛐
#CMJosephVijay Thanks for this na, Much needed words😭❤️🩹
#Therapist #CMVijayWithStudents #tvk
. retweeted
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!
#CMJosephvijay
#தமிழ்நாடு_நாள்
. retweeted
"இதெல்லாம் நிக்காது... எல்லோருமே எம்.ஜி.ஆர்., விஜய் ஆகிவிட முடியாது" - தனுஷ், சிவகார்த்திகேயன் குறித்த கேள்விக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பதில்
#DuraiMurugan | #DMK | #TVK | #CMVIjay | #MGR | #Dhanush | #Sivakarthikeyan
. retweeted
Update | BSR Mall
The waterlogging near BSR Mall has been cleared and traffic is now moving smoothly. As a precaution ahead of further rains, a 100 HP pump has been stationed at the location for immediate response if required.
. retweeted
பச்சிலை மாலை, அன்பு ஒலிக்கும் அழகான இசை வரவேற்பு... கலாச்சாரம் ருசிக்கும் வனக்கிழங்கு...
காணி பழங்குடி மக்களின் வாழ்வியலை புரிந்து கொள்ள இரவும் பகலுமான ஒரு நாள் முற்றிலும் புதிய அனுபவம் நமக்கு.
முண்டந்துறை வனத்தில் சிறகடிக்கும் பறவைகள் போல் முன்னேற்றக் கனவுகளுடன் சிறகடிக்க துடிக்கும் மாணவச் செல்வங்கள்...
பழங்குடி மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு புதிய வாசல்களை திறந்து விட உறுதி அளித்தோம்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
. retweeted
One man, two faces, zero chill, he goes by the name #LeoDas ❤️🔥
3 years of the madness 🐺
Still bloody sweet 🧊🔥
#3YearsOfLeo
youtu.be/Qrh_J0wAHcE?si=5uDw…
#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss
. retweeted
சென்னையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி அனைத்து சுரங்க பாதைகளிலும், போக்குவரத்து சீராக உள்ளது - சென்னை மாநகராட்சி
#ChennaiRains #GCC #ChennaiTraffic #ChennaiWeather #News18TamilNadu
. retweeted
Extreme rain in Chennai with lightning and thunder⛈️🌩️ Looks scary😲
Seeing so many government employees and workers on the roads, clearing the waterlogging so quickly, is something I’ve never seen before. They’re doing their best despite the extreme weather conditions👏
Hats off to their efforts🙏
. retweeted
Had the most beautiful time with the dearest Thalapathy @actorvijay Sir.
Even after a long day he received us with so much love and shared such personal insights into life, work and the world.
One meeting and sir is already a favourite ❤️
Until next time,
My love and respect.
Vijay Deverakonda :)

























