Real-jr oldmonk (@tejomayan) header
Real-jr oldmonk (@tejomayan) profile picture

விரும்பியதெல்லாம் எழுதிட.. எனது இந்த இன்னொரு தனிப்பக்கம் - @jroldmonk

Joined December 2012
Photo by Real-jr oldmonk (@tejomayan)Photo by Real-jr oldmonk (@tejomayan)Photo by Real-jr oldmonk (@tejomayan)Photo by Real-jr oldmonk (@tejomayan)Photo by Real-jr oldmonk (@tejomayan)Photo by Real-jr oldmonk (@tejomayan)Photo by Real-jr oldmonk (@tejomayan)
மூங்கில் குழலானது காற்று இசையானது, இசைத்தவனும் ரசித்தவனும் மட்டும் அப்படியே இருப்பது சரியோ ?
1
1,132
மிகவு‌ம் தொந்தரவாக இருக்கிறது நீ என்னை தொந்தரவு செய்யாமல் இருப்பது.
1
1
225
தனிமையே தனிமையை ஆற்றுப்படுத்தும்.
1
156
யானையின் கால் அசைவுகள் போன்றதே இந்த மனம் என்று எண்ணத் தோன்றுகிறது நிலை கொள்ளாமல்.
1
173
இரவு ஒரு பூதக்கண்ணாடி.
165
இத்தனைக்கு இடையிலும் ஏதோ ஒரு தருணத்தில் நம்மை மறந்து சிரித்து தான் விடுகிறோம். அடுத்த நொடி சட்டென ஒரு மின்னல் வெட்டும் எப்படி இது நம்மால் முடிந்தது என. வாழ்வெனப்படுவது இப்படி தான் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது பலருக்கு.
197
உனக்கு தெரியாது.... எனக்குள் இருக்கும் நீ எத்தனை ஆறுதலாய் எனக்கு இருக்கிறாய் என்பது உனக்கே தெரியாது !
1
231
Real-jr oldmonk retweeted
இன்னுமொரு பாடல்.. இன்னுமொரு பாடல்.. என ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் இவ் இரவை.
3
19
7
எனக்கு பிடித்த பாடலை நீயும் ரசித்து விட்டால் அது தரும் மகிழ்ச்சி இருக்கிறதே அது அந்த பாடலும் தராதது 🎵
1
228
எத்தனை தூரம் பயணித்திருக்கிறீர்கள் என்பதே இங்கு கணக்கு, எவ்வளவு காலம் என்பதல்ல. நெடுங் காலம் பயணித்தும் தூரம் அதிகம் கடக்க முடியாதவர்களின் இளைப்பை அவர்களை தவிர வேறெவரும் கணக்கிலெடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
1
188
எனக்கே தெரியாமல் என்னை புகைப்படம் எடுத்தாற் போல் இருக்கும் சில கவிதைகளை வாசிக்கும் பொழுது அவருக்கே தெரியாமல் அவர் என் வாழ்வை வாழ்வதாய் எண்ணிக்கொள்வேன், அதுமுதல் அவருக்கே தெரியாமல் அவருக்காகவும் சிந்திக்கும் என் மனம் இப்போது அவர் என்னைப் போல் என்ன செய்து கொண்டிருப்பார் என்று.
1
227
தடங்கள் மறைந்து பாதை அழிந்து முட்செடிகள் முளைத்தன கைவிடப்பட்ட குலசாமியின் காவலும் முடிந்தது எங்கோ சிதறிய குடும்பத்தில் யாரோ ஒருவர் கடைசியாய் கண் மூடுகையில் பிரம்மையில் கண்டிருக்கலாம் குலசாமியின் கடைசி பூசையை.
1
2
259
என் உள்மனம் உன் குரல் உரையாடி மகிழ்கிறது. அங்ஙனம், உன் மனம் என் குரல் கேட்கிறதா..? எங்ஙனம் நான் உரைத்திட மெய்யற்ற குரல்கள் பேசிடும் சொற்கள் யாவும் உண்மைகள் தானென்று.
1
212
வருடம் முழுவதும் இலையுதிர் காலம் தான் தினசரி நாட்காட்டிக்கு.
1
195
வெறுமையை சொற்களில் சொல்ல வேண்டுமென்றால்.. மனதினை ஓர் ஈரத் துண்டினால் போர்த்தி மூடியது போலிருக்கும் என்று சொல்லலாம்.
1
211
பொழிந்திட முடியாத நேசமென்பது கூட்டிலிருந்து தவறி விழுந்த ஒரு சிறு பறவை.. அதன் திறந்த வாயும் ஓயாத கூக்குரலும் என் செய்வதென அறியாததை உள்ளங்கையில் ஏந்தி நிற்கும் தவிப்பும்.. அது ஒரு சுமக்கவே முடியாத சிறு பாரம்.
2
208
எப்பிரதிபலனும் எதிர்பாரா உன் பச்சிளம் நேசத்தை மறுதலித்த போது அறிந்திருக்கவில்லை நான்.. என் வாழ்வில் வேறெங்கும் மீண்டும் இதை பெறேனென்று.
1
223
என் பெயர் இதுவரை எத்தனை முறை மற்றவர்களால் அழைக்கப்பட்டு இருக்குமோ அதை காட்டிலும் ஒருமுறையேனும் கூடுதலாய் உன் குரலால் அழைக்கப்பட வேண்டுமென ஆவல் கொள்கிறேன்.
1
3
314
என்னைப் போன்ற மனிதர்களை சந்திக்கும் பொழுதெல்லாம் அவர்கள் என்னிடம் என்னைப் போல் பழகுவதில்லை. பரவாயில்லை என்னால் அவர்களை புரிந்துக் கொள்ள முடிகிறது. என்னை எனக்குத் தெரியாதா என்ன?
1
216
கையிலிருக்கும் ரூபாயை எண்ணி முடிக்கையில் எல்லாம் கடைசித் தாள்கள் படபடக்கின்றன பெரு மூச்சுகளால்..
191
Real-jr oldmonk retweeted
குறிப்புகள் ஏதும் நிரப்பபடாத இசைக் குறிப்பு தாள் போல் இருக்கிறது மின் கம்பிகள்.கடைசி பறவையும் பறந்த பிறகு.
2
45
1
25