
விரும்பியதெல்லாம் எழுதிட.. எனது இந்த இன்னொரு தனிப்பக்கம் - @jroldmonk
Joined December 2012
- Tweets807
- Following58
- Followers1.7K
- Likes18
Real-jr oldmonk retweeted
இன்னுமொரு பாடல்..
இன்னுமொரு பாடல்..
என
ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்
இவ் இரவை.
Real-jr oldmonk retweeted
குறிப்புகள் ஏதும்
நிரப்பபடாத இசைக் குறிப்பு
தாள் போல் இருக்கிறது மின் கம்பிகள்.கடைசி பறவையும் பறந்த
பிறகு.
Real-jr oldmonk retweeted
கடவுளை போல் எங்கிருந்தோ யாரோ உனை கவனித்துக் கொண்டிருப்பது போல் உணர்கிறாயா ? உன்னை பற்றிய இடைவிடாத என் எண்ணங்கள் தானது
Real-jr oldmonk retweeted
விழிப்பிலிருந்து உறக்கத்திற்குள் விழும் நொடியை போல் கண்டுபிடிக்கவே முடியவில்லை உன் அன்பில் விழுந்த அந்த நொடியையும்.
Real-jr oldmonk retweeted
பறந்து செல்வது போல்
நான் ஒரு கனவு கண்டேன். கவிதை எழுதுவது போல் எந்த
பறவையேனும் கனவு காணுமோ
தெரியவில்லை.
Real-jr oldmonk retweeted
இந்த உலகத்தை விட பெரிய
உலகம் ஒன்று என்னுள்
இருக்கிறது.அதை சுமந்தே
அலைகிறேன் நான்.
Real-jr oldmonk retweeted
எனக்கு நன்றாக பறக்க தெரியும் எனினும் அதை பார்ப்பதற்கு நீங்கள் என் கனவுக்குள் பிரவேசிக்க வேண்டும்.
Real-jr oldmonk retweeted
அன்பெனப்படுவது யாதெனில் தன்னையே ஒருவர் ஒரு கண்ணாடி கோப்பையாக்கி நம் கையில் தருவது.. தவறவிடும் ஒரு நொடி போதும் அவரை உடைக்க
Real-jr oldmonk retweeted
யாருமற்ற சாலையில் நான் மட்டும் தனித்திருந்தேன் அழகாய் இருந்தது.நானும் இல்லாத போது இன்னும் அழகாய் இருந்திருக்கும்.
Real-jr oldmonk retweeted
படிய வாரிய கேசம் போல் இருக்கும் மனம், சிறு காற்றில் மறு நொடியே கலைந்தலைவதும் அதன் இயல்பே..
Real-jr oldmonk retweeted
நீர்வட்டங்களாய் பகல்கள் வந்து மறைய.. சலனமற்ற குளம் போல் உறைகிறது உலகம் இரவுக்குள் தொடர்ந்து
Real-jr oldmonk retweeted
நாம் தனியாள் என்பது, நாம் துணையாய் நினைத்துக் கொண்டிருப்பவர் உணர்த்தும் வரை புரியாது நமக்கு.