THUG 1 retweeted
If you had received any links in your DMs from my profile last week, DO NOT CLICK IT. I was hacked. I just got my account back. Enable 2FA in your acc and protect it 😭 RT for reach
தெர்மல்::
ஆமா நான் பாஜகல இருந்தப்ப கூட்டெழுத்து படிச்சுருக்கேன்லயா அத வச்சு 436 என்ன 4036 திட்டம் கூட 1 மணி நேரத்தில ஆலோசிக்க முடியும்...
#BREAKING | 1.15 மணிநேரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 436 திட்டங்கள் குறித்து ‘விரைவாக’ ஆலோசனை
#SunNews | #TVKVijay | #TNCabinet
இராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட தமிழி கல்வெட்டு!
இராமநாதபுரம் மாவட்டம், ஆப்பனூர் கிராமத்தில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான தமிழி எழுத்துப் பொறிப்புடனான நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் திரு. முனியசாமி அவர்களால் கண்டறியப்பட்ட இக்கல்வெட்டினைப் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளரும், தொல்லியல் அறிஞருமான திரு. சாந்தலிங்கம் அவர்களும் அவரது உதவி ஆய்வாளர் திரு. உதயகுமார் அவர்களும் நேரில் பார்வையிட்டுக் கல்வெட்டுச் செய்தியினைப் படித்தறிந்துள்ளனர்.
"ஆபன்னூர் ஏறி ய் மாண்டு விழுந்த அத்தியன் கீரன் கல்" என்ற வரலாற்றுத் தகவல் இன்று காலத்தால் அழியா ஆவணமாகியுள்ளது. பாண்டிய மண்டலத்தின் மையப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ள பொ.யு.மு முதலாம் நூற்றாண்டினைச் சார்ந்ததாகக் கருதப்படும் இந்த நடுகல் கல்வெட்டு , தமிழர்களின் இரண்டாயிரம் ஆண்டு கால எழுத்து மரபை மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றுகிறது.
இந்த அரிய கண்டுபிடிப்பினை வெளிக்கொணர்ந்து, தமிழ் நாட்டின் வரலாற்றுப் பெருமைக்குப் புகழ் சேர்த்துப் பங்களித்துள்ள அனைவருக்கும் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

































