
கரைந்தொழுகும் காலத்தில் கனவென்பது கானல்நீரே #weknowth_meme #குறள்_வெண்பா #weknowth_துளிப்பா #weknowth_clicks #weknowth_art
Joined October 2024
- Tweets9.6K
- Following100
- Followers652
- Likes864
Pinned Tweet
விழாவைத் தேடுகிறது
சலிப்புற்ற மனம்
இயல்போ திணிப்போ
கொண்டாட ஒருவழி
எல்லோருக்கும் தேவைப்படுகிறது
பொன்னில் பதித்தநல் முத்துக்கள் போலநல்
பெய்யல் நனைத்த மலர்.
#குறள்_வெண்பா
தமிழாளன் retweeted
சில நேரங்களில்
நாம தெளிவாக இருப்பதாக நினைச்சு
முட்டாள்தனமாக இருந்துருக்கோம்'ங்கிறது பிறகுதான் தெரியவருது...
Hey @grok
who is my twitter twin; a mutual who is similar to me and someone who matches my vibe? Based on the tweets & reposts.
1
73
கடலுக்கு மட்டுமே
பழக்கப்பட்ட கப்பல்
அதன் அலைகளாலேயே
உடைக்கப்பட்டு மூழ்கடிக்கப்படுகிறது
உரியவரிடத்தில் உடைபடுதல்
மனிதர்களுக்கு மட்டுமே
சொந்தமானது அல்ல
எந்த திசையில்
பறப்பதென மனம்
தடுமாறி நிற்கிறது
தொலைதலில் இல்லை
இலக்கு தவறுவதுதான்
எனக்கிருக்கும் பெருங்கவலை
புரியாதவைகள் நாளுக்குநாள்
அதிகமாகிக் கொண்டிருக்கின்றன
புரிந்து கொண்டதென
நினைத்த எல்லாமும்
இப்போது மாறியிருக்கின்றன
இனி நான் புதிதாகத்தான்
வாழவேண்டும் போல
தான் ஏற்காத
ஒரு மனதிடமிருந்து வரும்
ஒரு பார்வையோ
ஒரு சிரிப்போ
ஒரு சொல்லோ
எப்போதுமே நெருடல்தானே
2
3
210









