புதிய தலைமுறை தொலைக்காட்சியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட படத்தொகுப்பாளருக்கு மீண்டும் பணி வழங்க தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்திற்கு மற்றுமொரு வெற்றி
facebook.com/share/p/19mFEZb…
பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக்கு இழப்பீடு வழங்க தினத்தந்தி நிறுவனத்திற்கு கோவை தொழிலாளர் நல நீதிமன்றம் உத்தரவு!*
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தின் மற்றுமொரு வெற்றி!
facebook.com/share/p/19oG7u5…
வின் டிவி, எம் நாடு உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த திரு. சுபாஷ் சங்கர் (52) அவர்கள் மாரடைப்பால் நேற்று (21.08.2026) காலமானார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் சக பத்திரிகையாளர்களுக்கு மாற்றத்திற்கான பத்திரிகையாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
சோளிங்கர் உதவி காவல் ஆய்வாளர் முனீர் பாஷா முன்னிலையிலேயே இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. எனினும் செய்தியாளர்களுக்கு உடனடி பாதுகாப்பு வழங்க அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையும் நமது கண்டிக்கிறது. 3/3
தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில் மற்றும் அவருடன் வந்த நபர்கள் அந்த தாக்குதலில் ஈடுபட்டனர். உடன் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களை காட்டு மிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். 2/3
தமிழக வெற்றிக் கழத்தின் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபிலை கண்டிக்கிறோம்!!!
ராணிப்பேட்டை தினமலர் செய்தியளார்கல்யாணசுந்தரம் மற்றும் தினகரன் செய்தியாளர் அரங்கநாதன்
சோளிங்கரில் ஒரு கடைக்குள் சில நபர்கள் புகுந்து தாக்கியதை படம் பிடித்துள்ளனர். 1/3
தொடர்ந்து இதுபோன்ற அடாவடியான செயல்களில் காவல்துறை ஈடுபடாமல் இருக்க போதுமான அறிவுறுத்தல்களை வழங்கிடுமாறும் முதலமைச்சர் திரு.விஜய்க்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது. 10/10
பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் அராஜகத்தினை, காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் உடனடியாக தடுக்க வேண்டும். சட்டப்படியான விசாரணைக்கு தயாராகவே இருக்கும் ஊடகவியலாளர் திரு.விஜயனை உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும். 9/10
யாராக இருந்தாலும் உரிய சட்டவிதிகளை பின்பற்றியே காவல் துறை தனது விசாரணையை நடத்த வேண்டும். அதிலும், ஊரறிந்த ஒரு ஊடகவியலாளரை குற்றவாளி போல் காவல்துறையினர் நடத்தும் விதமானது, கருத்து மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது. 8/10
16.07.2026 அன்று விசாரணைக்காக அவரை மீண்டும் அழைத்த காவல்துறையினர், திரு.விஜயன் வீடு திரும்ப இதுவரை அனுமதிக்கவில்லை.காவல்துறையின் இந்த முறையற்ற, அத்துமீறிய நடவடிக்கைகளை ஊடகவியலாளர்களாகிய நாம் ஒரு போதும் ஏற்க முடியாது. 7/10
இந்நிலையில், சட்டவிதிகளுக்கு புறம்பாக மீண்டும் நள்ளிரவு 2 மணிக்கு திரு.விஜயனை அழைத்த போலீசார், அவரது செல்போனை பிடுங்கி வைத்து, அவரை மட்டும் திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். 6/10
சட்டத்தை மதிக்கும் ஊடகவியலாளர்
திரு.விஜயனும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் இரவு பத்து மணிக்கு ஆஜராகி, நள்ளிரவு 12.30 வரை விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளார். 5/10
இந்தச் சூழலில், இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகுமாறு திரு.விஜயன் அவர்களை, 15.07.2026 அன்று சிறப்பு புலனாய்வுக்குழு அவர் பணிபுரியும் புதிய தலைமுறை அலுவலகத்திற்கே நேரில் சென்று நேரடியாக சம்மன் வழங்கியுள்ளனர். அன்றைய இரவே விசாரணைக்கு வர வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளனர். 4/10
நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை ஆதரிக்க பேரம் பேசப்பட்டதாக தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா
காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் 8 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. 3/10
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளராக பணிபுரியும் ஊடகவியலாளர் திரு.விஜயனை, விசாரணை என அழைத்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்துள்ள காவல்துறையின் செயல் ஏற்கவே முடியாத எதேச்சதிகார நடவடிக்கை ஆகும். 2/10
விசாரணை என்ற பெயரில் ஊடகவியலாளர் திரு.
விஜயனிடம் அத்துமீறி நடந்துவரும் தமிழ்நாடு காவல்துறையின் அராஜக போக்கை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. 1/10
தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு. முகமது பர்வேஸ் அவர்கள் நியூஸ் 18 தமிழ்நாடு மற்றும் ஜீ தமிழ் நிறுவனத்தின் பணிநீக்க விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பணியாளர்களை பாதுகாக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியிலிருந்து சட்டதிற்குப் புறம்பாக நீக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக பணி வழங்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
மனிதவளத்துறை மேலாளரிடம் தங்கள் கடவுச்சொல்லை வழங்க வேண்டாம் என்று பணியாளர்களிடம் கேட்டுக்கொள்ளும் அதேவேளையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் துணைநிற்கும் என்று உறுதியளிக்கிறோம்.

