திசை புத்தக நிலையம் retweeted
திசை நூல் நிலையம் ஐந்தாம் ஆண்டை வெற்றிகரமாக தொடங்குகிறது. அனைத்து மே17 தோழர்களின் கூட்டுழைப்பில் எழுந்த புத்தகக் கடை. எவ்வித சம்பளமும், உதவித்தொகையும் வாங்கிக்கொள்ளாமல் பல தோழர்கள் அன்றாடம் உழைத்து 'திசை' நூல் நிலையத்தை வளர்த்தெடுக்கிறார்கள். எந்த தோழரும் லாபநோக்கில் தனது உழைப்பை பங்களிக்கவில்லை. அரசியல் புத்தகங்களையும் சமூக இலக்கிய நூல்களையும் திரட்டி வைத்திருக்கிறது நூல்நிலையம். கிழக்கு பதிப்பகம், துக்ளக், தி இந்து, காலசுவடு போன்ற வலதுசாரி பதிப்பாளர்களின் நூல்களை வாங்குவதில்லை எனும் இலட்சியத்தோடு இயங்குகிறது. முற்போக்கு நூல்களை விற்பனை செய்து லாபமீட்ட இயலாதென தெரிந்திருந்தும், இன்றய இளைய சமூகத்திற்கு நல்ல நூல்களை அறிமுகம் செய்ய வேண்டுமெனும் நோக்கத்தோடு இயங்கி வருகிறது. உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் இருந்தால் எங்களது நீண்டகால திட்டமான இளையோர்கள், குழந்தைகளுக்கான சிறப்பு நூல்களை கொண்டுவர இயலும். பெரும் பொருட்செலவின் காரணமாக விரிவாக்கம் செய்ய இயலாமல் தடுமாறினாலும், மாதந்தோறும் ஏற்படும் செலவினங்கள் பெருஞ்சுமையாக இருந்தாலும் 'அறிவாயுதம்' எந்த வேண்டுமென முத்துக்குமார் சொன்னதை நடைமுறைப்படுத்த தோழர்கள் தமது மாதாந்திர வருமானத்தில் ஒருபகுதியை செலவு செய்து கடையின் செலவினங்களை ஈடுகட்டுகிறார்கள்.
திசையை மேலதிகமாக விரிவாக்கம் செய்ய இலக்கு வைத்துள்ளோம். மேலதிகமாக நூல்களை விற்பனைக்கு கொண்டு வர தலைப்புகளை தேர்ந்தெடுத்துள்ளோம். தமிழ் மொழிக்கென தனித்த பகுதியினை உருவாக்க விரும்புகிறோம். இவற்றை சாதிக்க, புரவலர்களாய் நீங்களும் கைகோர்த்தால் எளிதில் சாத்தியமாக்க இயலும். இதுவே ஐந்தாம் ஆண்டின் இலக்காக வைத்து தனது பயணத்தை தொடர்கிறது.
வாருங்கள். வாழ்த்துங்கள்.
@ThisaiBookStore
திசை புத்தக நிலையம் retweeted
அவையம் வாசிப்பு வட்டம் ஒருங்கிணைப்பில் "ஹீரோயிசமும் அரசியலும்" என்ற தலைப்பில் கதாநாயகர்களின் கட்சி அரசியல் குறித்த உரையாடல் நடைபெறவிருக்கிறது.
திரைப்பட இயக்குநர் தோழர் லெனின் பாரதி @leninbharathi1 , திரைப்பட இயக்குநர் தோழர் கௌதம்ராஜ் @sy_gowthamraj ,
திசை புத்தக நிலையம் retweeted
கருப்பின மக்களின் விடுதலை போராட்டத்திலிருந்து, அவர்களது இசையை பிரிக்க இயலாது. தங்களது உணர்வுகளை, அரசியலை இசையாக வெளிப்படுத்தி மக்களை அணிதிரட்டிய மரபுக்கு சொந்தக்காரர்கள். இந்த மரபு நீண்டது, நெடியது.
Amandla எனும் தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்ட பாடல்களின் வீச்சு வரலாற்று சிறப்பு மிக்கது. 'வலிமை' எனும் பொருளை அழுத்தமாக பதிவு செய்து போராட்ட உணர்வை நிலைநிறுத்தும் பாடல்களின் தொகுப்பாக அமெண்டலா அடையாளப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் நிறவெறி எதிர்ப்புப் போரில் இசை-பாடல்களின் முக்கியத்துவம் குறித்து Amandla எனும் பெயரிலேயே ஆவணப்பட தொகுப்பையும் நீண்ட நாட்களுக்கு முன் காண நேர்ந்தது. இசையில்லாமல் ஆப்ரிக்க போராட்டங்கள் நடந்ததில்லை எனலாம்.
ஜெனீவாவில் மனித உரிமை அவையத்திற்கு சென்ற ஒரு தினத்தில், ஐ.நா முற்றத்தில் நவீன பாடல் நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. 2-3 மணி நேரத்திற்கு பின்பாக இறுதியில் ஒருவர் சில நிமிடங்கள் பேசியதும் கூட்டம் கலைந்தது. அந்த இசை நிகழ்ச்சி எனது எரித்ரியா நாட்டில் நடக்கும் அழிப்பை குறித்த போராட்ட நிகழ்வு என போராட்டத்திலிருந்த ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் கருப்பின படைப்பாளிகளின் இசை வெகுசன பரப்பை ஆக்கிரமித்து, நிறவெறி எதிர்ப்பு போராட்டத்தின் நியாயத்தை பரவலாக்கியது. உலகளாவிய புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் தம் மக்களின் வலியை, குரலை பதிவு செய்துகொண்டே இருந்தனர். அப்படியான கலைஞர்களின் பட்டியல் நீண்டநெடியது. நம் தலைமுறையினை ஆக்கிரமித்த இசையும், நடனமும் மைக்கல் ஜாக்சனுடையது. வெகுசன ரசிகத்தன்மைக்கு அப்பாற்பட்ட அவரது சில படைப்புகளில் மேற்குலகின் இரட்டைத்தன்மையை வெளிப்படுத்தியவிதமான பாடல்களை நாம் மறக்க இயலாது. They don't care abt us, Black or White என சிலவற்றை நம்மில் பலர் மறக்க இயலாது. இதில் Black or White பாடல்-நடனம் குறித்த அவரது பதிவுகளில் ' Michael said, “I want to do a dance number where I can let out my frustration about injustice and prejudice and racism and bigotry..."....
தற்போது நடந்துவரும் பாலstine ஜெனோcide குறித்த விவாதங்களில் ஒரு பதிவை காண நேரிட்டது. பாலstine குறித்து அவர் பாட இருக்கிறார் என அறிந்தவுடன் ziயோனிஸ்டுகள் மைக்கல் மீது பாலினக்குற்றச்சாட்டை பரப்பினார்கள் என Epஸ்டைன் எனும் தரகரை முன்வைத்து எழுதிவருவதை சிலர் கவனித்திருக்கக் கூடும். மைக்கல் ஜாக்சனை குறித்த ஆவணக்காணொளி மேற்குலக இசை தளத்தில் வெளிப்படும் நிறவெறி குறித்து சுட்டுகிறது. Black or White பாடல்காட்சியில் கருப்பு வேங்கையாக மாறி மைக்கெல் எடுக்கும் அவதாரம் அமெரிக்காவின் கருப்பின போராட்ட அமைப்பான 'ப்ளாக்-பேந்தர்' இயக்கத்திற்கு தொடர்பற்றது என சொல்லிவிட இயலுமா?
இசையின் அரசியலையும்,
அரசியலின் இசையையும்
விவாதிப்போம் வாருங்கள்.
இடம் : @ThisaiBookStore
நாள் : 31- ஆக-2025 மாலை
திசை புத்தக நிலையம் retweeted
கஷ்மீரின் அரசியல் வரலாற்றைப் புரிந்துக்கொள்ள சில புத்தகங்கள்
1. கஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள் - ரூ 500
2. தீவிர இந்து தேசியமும் காஷ்மீரிகளின் தீராத் துயரமும் -ரூ 300
3. கலவரப் பல்லத்தாக்கு காஷ்மீர் -ரூ 230
4. கைவிடப்பட்ட காஷ்மீரும் பறிக்கப்பட்ட பாலஸ்தீனமும் -ரூ399
5. தொடரும் காஷ்மீர் யுத்தமும் இந்துத்துவ அரசியலும் -ரூ 140
மற்றும் ஆங்கில நூல்கள்..
To Buy Contact :
@ThisaiBookStore
THISAI book store
098840 82823
திசை புத்தக நிலையம் retweeted
நிமிர் பதிப்பகத்தின் புதிய நூல்கள் வெளியீடு
எழுத்தாளர் அமரந்த்தா அவர்களின், 'காலமும் கலையும்', 'சே கெவாராவும் மார்க்சியத்தின் தொடர்ச்சியும்', 'இது வேறு செப்டம்பர் 11' ஆகிய 3 நூல்கள் நிமிர் பதிப்பகம் பதிப்பித்து வெளியிடுகிறது.
#Amarantha #cbf2024 @NimirBooks @Rajasangeethan
திசை புத்தக நிலையம் retweeted
நிச்சயமாக நீங்கள் எதிர்பார்க்கும் மொழியின் பிரத்யேக மூக்குத்தியின் வெளிச்சம் இச்சொற்களில் இருக்காது. ஏனெனில், இவை இருளின் வரிகள். எரிகிற குடிசைகளின் வெளிச்சத்தில் தெரிகிற ஆகாசத்தை மட்டுமே ரசித்துப் பறக்கிற மொழியெனும் பச்சைக்கிளியல்ல நான்.
- மாரி செல்வராஜ்
திசை புத்தக நிலையம் retweeted
Here are some of Dr B R Ambedkar, the tallest personality of modern India's works.
1. Annihilation of caste- Rs 50
2. Philosophy of Hinduism- Rs 60
3. Gandhi and Gandhism - Rs 40
4. What the Buddha taught - Rs 40
5. Swaraj and the Depressed class - Rs 25
திசை புத்தக நிலையம் retweeted
சோழர்கள் பற்றிய பல்வேறு தகவல்களுடன் ஒரு உரையாடல். மத்தியகாலகட்ட வர்லாறையும், தற்போது பொ.செல்வன் படங்களால் பரப்பப்படும் பொய்களையும் அம்பலப்படுத்தும் வரலாற்று ஆய்வாளருடனான உரையாடலுக்கு அழைக்கிறோம். சோழர்கள் குறித்து உரையாடுவோம் வாருங்கள்.
@ThisaiBookStore
திசை புத்தக நிலையம் retweeted
இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு மோசடி
-வே ஆனைமுத்து
இந்திய அரசமைப்பு சட்டம் பெருமக்களுக்கு எதிரானது. ஒருசேர பாட்டாளிகளாகவும் கீழ் சாதி மக்களாகவும் உள்ள வெகு மக்களுக்கு 90 விழுக்காடு மக்களின் விடுதலைக்கு எதிரானது என்பதை இதன் மூலம் ஒவ்வொருவரும் இந்நூலின் மூலம் உணர முடியும்.
திசை புத்தக நிலையம் retweeted
விலை : ரூ 500
புத்தகங்களை வாங்க
THISAI book store,
Parthasarathy Pettai,
(Opp to Kamarajar Hall, close to Aavin Booth)
Teynampet, Chennai.
098840 82823
#THISAI #thisaibookstore #politicalbooksstore #politics #bookrecommendationsons #bookstoreinchennai #mulkrajanand
திசை புத்தக நிலையம் retweeted
எருமை தேசியம்
-காஞ்ச அய்லய்யா
இந்தியாவின் திராவிடர்கள் நிறத்தை வைத்தான இந்த மேல் கீழ் என்கிற பாகுபாடுகளை எதிர்த்ததால், வெள்ளை நிறத்து ஆரியர்கள் திராவிட புரட்சியாளர்களை ஒடுக்க வன்முறையை பயன்படுத்தினர்.
திசை புத்தக நிலையம் retweeted
Guess what I got?
@ThisaiBookStore
Thank you for the book store and recommendation 🙂🙂
I wouldn't have got it without you 🙏
திசை புத்தக நிலையம் retweeted
Brahminists Bombed, Muslims Hanged
-S.M. Mushrif (Former I.G. of police, Maharashtra and author of " who killed Karkare?")
Price : Rs 375
திசை புத்தக நிலையம் retweeted
காதலர் தினத்தையொட்டி
இன்று மாலை 'திசை' புத்தக நிலையத்தில் எழுத்தாளர் லட்சுமி சரவணக்குமார் உடனான உரையாடல்.
'காதலும், கலைஞனும்'
திசை புத்தக நிலையம் retweeted
திசை @ThisaiBookStore திறப்பு விழாவில் அண்ணன் @thirumaofficial !
@May17Movement @pk_comrade_03 @Comrade_Pugazh @ComradeSendhil
திசை புத்தக நிலையம் retweeted
வாசிப்பின் நேசம் தாள்களோடு மட்டும் தேங்கிடாமல் மக்களோடு சேர்ந்து பல்வேறு தளங்களில் பரவட்டும்.
சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இயக்கங்கள் உதவிட களத்திலே தயாராக உள்ளது..உங்களை அதன் அங்கமாக்குங்கள் அது சரியான #திசை காட்டிடும்.
@ThisaiBookStore
@May17Movement
திசை புத்தக நிலையம் retweeted
வேண்டும். மூத்த ஆளுமைகளின் வாழ்த்துகள் தோழர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இளைஞர்களை நெறிப்படுத்தும் நூல்களை கொண்டு சேர்க்கும் ஆற்றலை உங்கள் அனைவரின் ஆதரவும் அளித்திருக்கிறது. தத்துவம், அரசியல் முதற்கொண்டு கலை இலக்கியப்படைப்புகள் எனஅனைத்தையும் மக்கள் மயமாக்குவோம்
திசை புத்தக நிலையம் retweeted
'திசை’ புத்தகக் கடை திறப்பு விழாவை சிறப்பித்த ஆளுமைகள் ஐயா.ஆசிரியர் வீரமணி @AsiriyarKV , ஐயா வைகோ @MDMKVaiko தோழர்.திருமா @thirumaofficial தோழர் என்.ஆர்.இளங்கோ @nrelango_dmk தோழர்.நெல்லை முபாரக் @nellai_mubarak ஐயா.குனங்குடிஅனீபா, தோழர் @Dr_Ezhilan ஆகியோர் மற்றும் +
திசை புத்தக நிலையம் retweeted
சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்து பெருமை சேர்த்த அனைவருக்கும் தோழர்களின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பல்லாயிரக்கணக்கான நூல்களை தொகுத்திருக்கும் ‘திசை’ மேலதிகமாக தம்மை வளப்படுத்திக்கொள்ளும் வகையில் மக்களுக்கு பயனுறும் வகையிலான நூல்களை அறிமுகப்படுத்திட +







































