gopaljames retweeted
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.
’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு.
திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு.
இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு.
அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர்.
முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை.
அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது.
இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்.
நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
gopaljames retweeted
தங்களுடைய அன்பான வாழ்த்திற்கு நன்றி மாரி சார்.
இன்று பிறந்தநாள் காணும் எனது பேரன்புமிக்க நண்பரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான திரு. @Udhaystalin சார் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளையும் பிரியங்களையும் தெரிவித்துகொள்கிறேன். 💐❤️💐
gopaljames retweeted
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் நீ போவாய்(கைது) என....
#WATCH | ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது
#SunNews | #TVK | #ArulVignesh | #KallakurichiMLA
gopaljames retweeted
உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு தலையில் பேரிடியை இறக்கி உள்ளது திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தலைமைச் செயலாளருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் நேரில் ஆஜராக வேண்டும் என தொடங்கி பல கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது
இந்த விஷயம் வை கோபால்சாமி அவர்களுக்கும் அவரது மகன் துரை வை கோபால்சாமி அவர்களுக்கும் தெரிந்தால் என்ன ஆகுமோ?
gopaljames retweeted
Real Turing point of the thiruparankundram contempt Case:
உச்ச நீதிமன்றம் அந்த குறிப்பிட்ட தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த விவகாரத்தில் மெரிட் அடிப்படையில் முடிவு எடுக்கவில்லை என்பதனால் மரபுகள் மற்றும் ஆகமி விதிகள் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளில் சில தளர்வுகளை அறங்காவலர் குழு தானாகவே எடுப்பதற்கான வழிவகை உருவாகி இருக்கிறது என அறநிலையத்துறை ஆணையர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனுஷிங்கி தெரிவித்த போது அதற்கு கடுமையாக மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் நாங்கள் அப்படியெல்லாம் எதுவுமே சொல்லவில்லை அந்த ஒரு குறிப்பிட்ட தூணில் தற்காலிக நடவடிக்கையாக தீபம் ஏற்ற வேண்டும் என்று தான் நாங்கள் சொன்னோம். இதில் நீங்களாக புரிந்து கொண்டு அதை மாற்ற முயற்சிக்காதீர்கள் என நீதிபதி அரவிந்த் குமார் கண்டனம்
அபிஷேக் சிங்வி தெரிவித்த கருத்துகள் அடிப்படையிலேயே தெரிந்துவிட்டது இவர்கள் வேண்டுமென்றேதான் இந்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தாமல் போயிருக்கிறார்கள் என்று எனவே எந்த விதமான தாமதமும் இல்லாமல் இவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதம்
gopaljames retweeted
படித்து முடித்தும் சரியான வேலையின்றித் தவிக்குறீர்களா.. உங்கள் கனவுகளை நனவாக்க, மார்டின் அறக்கட்டளை சார்பில் ‘மெகா வேலைவாய்ப்பு முகாம் 2026’
வரும் நவம்பர் 28 (சனிக்கிழமை), காலை 9 முதல் மாலை 4 மணி வரை காமராஜர் மணிமண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
40-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள, திரையில் தெரியும் QR Code-ஐ ஸ்கேன் செய்து முன்பதிவு செய்யுங்கள். அனுமதி முற்றிலும் இலவசம்!
#MartinFoundation #jcm #Puducherry #jobopportunity #CareerOpportunities
gopaljames retweeted
இன்று பிறந்தநாள் காணும் எனது பேரன்புமிக்க நண்பரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான திரு. @Udhaystalin சார் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளையும் பிரியங்களையும் தெரிவித்துகொள்கிறேன். 💐❤️💐
gopaljames retweeted
ஆக்டோபஸ் – இணையத்தொடர் விமர்சனம்
cinemavalai.com/octopus-webs… #Octopus
@Hashmi_JH, @ashwin_kkumar, @Archana_ravi_ @vinoth_kishan @zee5south
gopaljames retweeted
என் பிரியத்திற்குரிய இளைய சகோதரர், திராவிட முன்னோடிகளின் கருத்தியல் தொடர்ச்சி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் திறன்மிக்க எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் நீடு காலம் வாழ்கவென்றும், வெற்றி பல காண்கவென்றும் அவருடைய பிறந்தநாளான இன்று வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.
gopaljames retweeted
இவர் பண்ண மொத்த சம்பவத்துல இந்த ஒத்த சம்பவம் காலத்துக்கும் நின்னு பேசும் 🤯🔥 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @Udhaystalin அண்ணா 🙏❤️
#HBDUdhay
gopaljames retweeted
இளைய தலைமுறையின் நம்பிக்கையாகவும், மக்கள் பணியில் இன்னும் பல உயரங்களைத் தொடும் பயணமாகவும் உங்கள் பொதுவாழ்வு சிறக்கட்டும் @Udhaystalin அண்ணா
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா!
#HBDUdhay
gopaljames retweeted
திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு கால வரலாற்றை, இளையோர் சக்தியால் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் கழகத்தின் இளந்தலைவர், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர், இளைஞரணி செயலாளர் திரு. @Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
#HBDUdhay
gopaljames retweeted
கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் @Udhaystalin அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு, இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் @Joel_Dmk அவர்களின் வரிகளில், ‘உதயா அண்ணன் வாராரு’ என்ற பாடலை விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் @TThenarasu அவர்கள் வெளியிட, மாநில துணைச் செயலாளர்கள் பெற்றுக்கொண்டனர்.
@Inba_AN_Ragu, @ilaiyadmk, @keprakashdmk, @AbdulmalikDmk, @Prabhugajendran, @pssrinivasandmk, @GprMadurai, @C_ANAND_KUMAR
#HBDUdhay #UdhayanidhiStalin
gopaljames retweeted
நூலக விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுப்பது முக்கியமான ஒன்று.
எப்படிங்க என்னால சும்மா இருக்க முடியும்ன்னு? கேட்கும் இந்த முதலமைச்சர் தான், கள்ளக்குறிச்சி பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜூலை 31 ஆம் தேதியே புகார் அளித்து, 116 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காமல் சும்மா இருந்தவர்..
gopaljames retweeted
Rajini-யும் Rajini Fans-um பண்ண முடியாததையும், Ajith-um Ajith Fans-um பண்ண முடியாததையும், இந்த ஒருத்தன் அசால்ட்டா பண்ணிட்டான்! 😂
ஒரு Brand-ஐ எப்படி Total Damage பண்ணணும்னு சொல்லிக் கொடுத்தது மட்டுமில்ல… சொன்னபடியே செஞ்சும் காட்டிட்டான்! 🤣
இப்படியொரு அரிய பொக்கிஷத்தைப் பத்திரமா பாதுகாத்து வையுங்கப்பா! 🙏
இந்தப் பொக்கிஷம் தமிழ்நாட்டுக்குத் தேவை! 😂🔥 @Saattaidurai 🔥
gopaljames retweeted
🔺கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம்:
நீதிமன்றத்தில் அரசு தரப்பு பொய் சொன்னதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டாமா?
🔺கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வை உடனடியாகக் கைது செய்க!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அம்மையாருக்கு கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள்விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாகவும், அத்துமீறி அவரது இருப்பிடத்திற்குள் நுழைய முயன்றது தொடர்பாகவும் இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என்று இத்தனை நாட்களாகத் தமிழ்நாடு அரசும், அமைச்சர்களும் சொன்னது பொய் என்பது இன்று (24.11.2026) நீதிமன்றத்தில் வெளிப்பட்டுள்ளது.
ஜூலை மாதமே இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளார் என்பதை இன்று தான் சென்னை உயர்நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
🔺கண்டிக்கத்தக்கதும், தண்டிக்கத்தக்கதுமாகும்!
இத்தனை நாள் பொதுவெளியிலும், பொது மக்களிடமும் மட்டுமல்ல, உயர்நீதிமன்றத்திலேயே ஓர் அரசு மறைத்திருக்கிறது, ‘புகார் எதுவும் இல்லை’ என்று பொய் சொல்லியிருக்கிறது என்பது வெட்கப்படத்தக்கது மட்டுமல்ல; கண்டிக்கத்தக்கதும், தண்டிக்கத்தக்கதும் ஆகும்.
அய்ந்து மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் அளித்திருக்கிறார்; அது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. பொதுவெளிக்கு இந்தப் பிரச்சினை வந்த பிறகும் அமைச்சர்களும், சில கூட்டணிக் கட்சித் தலைவர்களும் ‘அப்படியெல்லாம் புகார் இல்லை’ என்று மறுத்தார்களே... இப்போது அவர்களெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
🔺நீதிமன்றத்தில் அரசு தரப்பு பொய் சொன்னதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டாமா?
இந்த அரசும், அமைச்சர்களும் மக்களை என்னவென்று கருதுகிறார்கள்? மாவட்ட ஆட்சியர்கள், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் குறித்த நிர்வாகத்துக்குப் பொறுப்புடையவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தானே? அவர் எடுத்த நடவடிக்கைகள் என்ன? நீதிமன்றத்தில் அரசு தரப்பு பொய் சொன்னதற்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டாமா?
விலைவாசி பற்றிப் பேசினார் என்பதற்காகப் பொருளாதாரப் பேராசிரியர் மீது, வேறு ஒரு பொய் வழக்குத் தொடுத்து அதிகாலையில் கைது செய்த அரசு, தன்னுடைய கட்சி எம்.எல்.ஏ.வின் முறைகெட்ட நடத்தைக்கும், குற்றத்துக்கும் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மீது வழக்குத் தொடுத்து, என்னென்ன சட்டப் பிரிவுகள் என்று சொன்னால் மட்டும் போதாது! அவர் இழைத்த குற்றத்துக்கு உடனடியாகக் கைது செய்ய வேண்டாமா?
தமிழ்நாடு அரசுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பெயருக்கே அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் பிரச்சினையில் அய்ந்து மாதம் கடத்திய அரசு, இனியும் துளியும் தாமதிப்பதை ஏற்க முடியாது.
மகளிர் உரிமை என்பதும், பாதுகாப்பு என்பதும் வாய்ப் பேச்சு வீரம் அல்ல! செயல், செயல், செயல் - அதுவே அவசியம்!
- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
gopaljames retweeted
தவெக தற்குறிகளை பொளந்து எடுத்து இருக்கிறார் பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன்
//வெட்கப்படுங்க விஜய்! தமிழ்நாட்டுக்கே அசிங்கம்! தெருவுல நிப்பாட்டிட்டாங்க! மூடிமறைத்த உண்மைகள்! சாய்குமாரை தூக்குங்க! உச்சக்கட்ட கோபத்தில் SPL//
























